எபிசோட் - 89 (24.05.2010) சுட்டி - 2
அசோக்குக்கும் காதம்பரிக்கும் திருமணம் முடிந்து வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். வாசலில் ஆரத்தி எடுக்கின்றனர். அசோக்கின் கிருஹஸ்தாஸ்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே காதம்பரிக்கும் அசோக்குக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கிறது.
இதை கண்டு நாதனும் வசுமதியும் டென்ஷன் அடைய ஆரம்பிப்பதும் புரிகிறது. அசோக் தேடும் பெண் அவன் கூறியபடி ஒரு வைதீக குடும்பத்தில் கிடைத்தாலும் கிடைத்திருக்கலாம், ஆனால் வசுமதி ஸ்டேட்டஸ் என்ற விஷயத்தை புகுத்தியதில் காதம்பரி வந்து சேருகிறாள். அசோக்காவது தனது தெரிவில் தெளிவை காட்டியிருக்கலாம், ஆனால் என்னவோ தெரியவில்லை அவன் எல்லாமே பகவான் செயல் என விட்டுவிட்டான். மேலே கதை எப்படி செல்லப் போகிறது என்பது சோவுக்கும் வெங்கட்டுக்குமே வெளிச்சம். ஏதாவது பெரிய விஷயம் வந்தால்தான் உண்டு. பார்ப்போம், தேடுவோம்.
சாம்பு சாஸ்திரிகள் வீட்டு கல்யாண முகூர்த்தத்துக்கு போக நேரம் கிடைக்கவில்லை, ஆகவே ரிசப்ஷனுக்கு போக முடிவு செய்கின்றர். அவாத்துக்கு கிஃப்ட் வாங்கிப் போக வேண்டாமா என வசுமதி கேட்க, நாதன் தான் ஏற்கனவேயே அசோக்கிடம் 25000 ரூபாய்க்கான செக்கை கொடுத்து விட்டதைக் கூறுகிறார். இது ரொம்பவே டூ மச் என வசுமதி அபிப்பிராயப்படுகிறாள்.
அசோக் அன்று மாலை காதம்பரியை அழைத்து கொண்டு மயிலாப்பூரில் வாலி வதம் பற்றிய கதாகாலட்சேபத்துக்கு போகப் போவதாகவும் வாலிவதம் பற்றி பாகவதர் அழகாகக் கதை கூறுவார் எனவும் கூறுகிறான்.
வாலியை ராமர் ஒளிந்திருந்து தாக்கியது தவறுதானே என சோவின் நண்பர் கேட்க, “வாலியை மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று ராமர் அம்பு விட்டது மட்டும் சரியா” என கேட்க, சோ அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார், ராமர் அவ்வாறு ஒருபோதும் செய்யவேயில்லை என. இம்மாதிரி மரத்தின் பின்னாலிருந்து அம்பு விட்ட கதை கம்ப ராமாயணம் மற்றும் துளசி ராமாயணத்திலும்தான் வருகிறது, வால்மீகி ராமாயணத்தில் வரவேயில்லை. மேலும் வால்மீகி ராமாயணம்தான் அத்தாரிட்டி, மீதி ராமாயணங்கள் அல்ல என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். வாலியின் உடலை பார்க்க வந்த தாரையிடம் வானரங்களே கூறுகிறார்கள், “வாலி ஆக்ரோஷமாக ராமருடன் சண்டையிட்டான் மரங்கள் பாறைகள் ஆகியவற்றை அவர் மீது எறிந்தான், ஆயினும் ராமபாணத்தின் முன்னால் அவை எல்லாம் வியர்த்தமாகப் போயின” என்று. இதை தானாக சொல்லவில்லை. பிரதிவாத பயங்கர, ராமாயண பிரவசன சிரோன்மணி பிரும்மஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள் 1939-ல் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டதையே தானும் கூறுவதாக மேலும் சோ கூறுகிறார்.
என் அப்பன் ராமபிரான் குற்றம் செய்யவில்லை என அறிந்து டோண்டு ராகவனாகிய எனக்கும் மீண்டும் மனச்சமாதானம் ஏற்பட்டதை நான் இங்கே மறைக்கப் போவதில்லை. அதென்ன மீண்டும்? இந்த வாலிவதம் பற்றிய விஷயம் ஏற்கனவேயே எங்கே பிராமணன் பார்ட் -1-ல் 83-ஆம் எபிசோடில் வந்து விட்டது.
அசோக் மட்டும் தனியாக கதா காலட்சேபத்துக்கு போக காதம்பரியோ புதிதாக வெளியான கதா என்னும் ஹிந்தி படத்துக்கு போகிறாள். விஷயம் புரிந்து நாதனும் வசுமதியும் திகைக்கின்றனர்.
(தேடுவோம்)
எபிசோட் - 90 (25.05.2010) சுட்டி - 2
கைலாசநகர் வாக்காளர்களுக்கு தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான கோவில் புனருத்தாரணத்தை அரசியல்வாதி நல்லத்தம்பி நிறைவேற்றாதது குறித்து ஜட்ஜும் கைலாசநகர்வாசிகளின் அசோசியேஷன் செயலாளரும் பேசுகின்றனர். கிருஷ்ணர் குசேலர் கொடுத்த ஒருபிடி அவலை வாயில் போட்டுக் கொண்டதிலேயே குசேலர் பணக்காரர் ஆனது மாதிரி இந்த இடைதேர்தலில் அடைந்த வெற்றியை வைத்து நல்லத்தம்பி இன்னும் பணக்காரனானதுதான் நடந்தது என ஜட்ஜ் கூறுகிறார்.
அதென்ன குசேலருக்கு 27 குழந்தைகள் என கூறுகிறார்களே உண்மையாக இருக்குமா என சோவின் நண்பர் கேட்கிறார். அத்தனை குழந்தைகள் இருந்ததாக பாகவதத்தில் எங்குமே கூறவில்லை எனவும், இதுவும் பிற்சேர்க்கையாக கதைக்கு அதிக அழுத்தம் தருவதற்காக சேர்க்கப்பட்டது எனவும் சோ கூறுகிறார். குசேலரின் கதையையும், குருகுலவாசத்தில் கிருஷ்ணருக்கும் அவருக்கும் ஏற்பட்ட நட்பு பற்றியும் சோ விவரிக்கிறார். கடைசியில் எல்லாவற்றையும் கூறிவிட்டு, 27 குழந்தைகள் என்பது மிகைப்படுத்திக் கூறலில் வருகிறது என்று முத்தாய்ப்பாக மறுபடியும் சொல்கிறார்.
அசோக் சொல்லித்தான் தான் கைலாசநகர்வாசிகளுக்கு அந்த இடைதேர்தலில் நல்லத்தம்பிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆகவே அவன்தான் இதற்கு பதில் கூறவேண்டும் எனவும் ஜட்ஜ் கூறுகிறார்.
வேம்பு சாஸ்திரிகள் தனக்கு மாதாமாதம் ரேஷன் பொருட்களை அனுப்புவது யார் என்பதை கண்டுபிடித்து விடுகிறார். அவரது பழையவீட்டின் சொந்தக்காரர்தான் அது. அவரை விசாரித்ததில் தான் அவரை வீட்டைவிட்டு அடாவடியாக காலிசெய்வித்தது மகாபாவம் எனவும், அது நடந்த பத்தே நாட்களில் தனது மகன் ஒருவிபத்தில் கையை இழந்ததாகவும், தன்னிடம் இதுபற்றிப் பேசிய பலருமே இதற்கெல்லாம் காரணமே வேம்பு சாஸ்திரிகளை வீதியில் கொண்டுவந்து நிறுத்தியதுதான் என்று கூறியதாகவும் சொல்லி அவரது மன்னிப்பைக் கோருகிறார். வேம்பு அவரை தேற்றுகிறார். இனிமேல் இம்மாதிரி சாமான் எல்லாம் அனுப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொள்ள, வீட்டுக்காரரோ வேம்பு சாஸ்திரிகள் ஒரு ஸ்திர நிலைக்கு வரும்வரை இதை செய்யப்போவதாகக் கூறிவிடுகிறார்.
சாம்பு சாஸ்திரிகள் காதம்பரியை பார்த்து பேசுகிறார். அவள் தங்களாத்து கல்யாண ரிசப்ஷனுக்காவது வந்திருக்கலாம் எனக்கூற, அவளோ பிறகு ஒரு நாள் அவரது வீட்டுக்கு வருவதாகக் கூறுகிறாள்.
நாதன் ஆபீசில் நீலகண்டன் வந்திருக்கிறார். அசோக் காதம்பரி பற்றி பேச்சு செல்கிறது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என நாதனும் நீலகண்டனும் அபிப்பிராயப்படுகின்றனர். வழக்கம்போல, எல்லா விடுகளிலும் நடப்பது போல இங்கும் அசோக்தான் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும் என பாதி சீரியசாகவும் பாதி வேடிக்கையாகவும் கூறப்படுகிறது.
கைலாஸ்நகர் டைம்சில் அசோக் பற்றி தாறுமாறாக செய்திகள் வந்ததை நீலகண்டன் நாதனுக்கு காட்ட அவர் கோபப்படுகிறார். அப்பத்திரிகைக்கு போன் செய்து பேச முயல ஃபோன் கட் செய்யப்படுகிறது. அதை நிர்வகிப்பது பிரியாவின் தந்தை ஜட்ஜ் என்பதை அறிந்து நாதன் அவரை நேரில் சந்திக்க விரைகிறார்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
10 comments:
காதம்பரிக்கு கொடுக்கும் காஸ்ட்யூம்ஸ் எதுவும் நன்னாவே இல்லையே. அசோக் ஆச்சாரமானவன் அவன் தலையீடு காரணமாகவே இந்த மாதிரி உடுத்தியிருக்கிறாள் என்பதற்காக இப்படிக் காட்டுகிறார்களா ? இல்லை காஸ்ட்யூமர் ரசனை கெட்ட ஆளா ?
இந்த மாதிரி நிறைய சந்தேகங்களை அடுக்கி வைத்திருக்கிறேன். ஒன்று ஒண்றா கேட்கட்டுமா ?????
பை தி வே கனெக்ஷன் இப்ப ஒ.கே தானே
//அசோக் தேடும் பெண் அவன் கூறியபடி ஒரு வைதீக குடும்பத்தில் கிடைத்தாலும் கிடைத்திருக்கலாம்//அசோக் அவனுடைய குருவிடம் கோவிலில் கூட்டி போய் அனுமதி கேட்டானே,குருவும் பயங்கர பேக் ரவுன்ட் மழை பில்டப் உடன் வந்து ஆசி கொடுத்தாரே பார்க்கலியோன்ன்னோ?
@Arise
முதலில் ஒருவர் பலமுறை கேட்ட கேள்விக்கு பதில். மகாதேவ பாகவதர் ஏன் அசோக் திருமணத்துக்கு வரவில்லை?
ஏனெனில், கதையின் ஓட்டத்திற்கு அத்தருணத்தில் அந்த பாத்திரத்துக்கு வேலையில்லை என்றுதான் வைத்து கொள்ள வேண்டும்.
ஆப்படித்தான் சீதா கல்யாணத்துக்கு பின்னால் விஸ்வாமித்திரர் ராமாயணத்தில் வர மாட்டார். அனுமனுடைய வரவோ கிஷ்கிந்தா காண்டத்தில்தான்.
இது என்ன சாதாரண மெகாசீரியலா எல்லோரையும் வைத்து எல்லா நேரமும் குரூப் போட்டோ எடுத்து கும்மியடிக்க?
காதம்பரியின் செலக்ஷனுக்கு நாரதரே சன்னியாசி வடிவில் வந்து அங்கீகாரம் தந்தது வாஸ்தவம்தான். மயிர்கூச்செரியச் செய்த அக்காட்சி மறக்குமா?
இன்னும் சீரியலில் வரப்போகும் திருப்பங்களையும் பார்க்க வேண்டியிருக்கும். அசோக்காக பிறந்த வசிஷ்டர் எல்லா சோதனைகளிலும் வெற்றி பெறுவார் என்பது உறுதி. அவர் வெற்றி பெறாவிட்டால் வேறு யார் வெற்றிபெற இயலும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு வழியா பிரம்மகத்தி தோஷம் நீங்கிடுத்து உங்களுக்கு, இனி கனெக்ஷன் ஜோரா இருக்கும்.
இந்த மாதிரி விறுவிறுப்பே இல்லாத டிராமாவை தட்டச்சு செய்ய நிறைய பொறுமை வேனும்.
கம்பர் ஜெயராமன் ரொம்ப படுத்துறார் இல்லையா ?
@ அனானி (May 26, 2010 5:57 PM)
//கம்பர் ஜெயராமன் ரொம்ப படுத்துறார் இல்லையா ?//
இந்த மாதிரி விறுவிறுப்பே இல்லாத டிராமாவையும், குந்திக்கின்னு பாக்கறியே, உனக்கு வேல வெட்டி எதுவும் இல்லையா? வெட்டி பையனா நீயி?
கம்பர் ஜயராமனா போர் என்கிறீர்கள்? சாம்பு சாஸ்திரிகளை நம் கண் முன்னால் தத்ரூபமாகக் காட்டுகிறாரே.
நான் ஏற்கனவேயே பல முறை எழுதியபடி இது run of the mill மெகா சீரியல் இல்லவே இல்லை. முதல் பகுதிக்கு ஜெயா டிவி நீடிப்பு தரத் தயாராக இருந்தும் சோ அதை திட்டமிட்டப்படி முடித்தது சீரியல் வரலாற்றிலேயே நடக்காத ஒரு விஷயம்.
ஒவ்வொரு எபிசோடிலும் அவரும் அவர் நண்பரும் நடுநடுவே வந்து கமெண்ட் சொல்வதே முக்கிய நிகழ்வாகும்.
போர் அடிக்கிறது என்பவர்கள் பார்க்க வேண்டும் என யாரும் கைபிடித்து இழுக்கவில்லையே. அவர்கள் தங்கம், மகள் ஆகிய சீரியல்களுக்கு செல்லட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hi Dondu Sir,
Kambar Jayaraman is the doing an excellent acting.
Pichu utharrar.
In this serial KJ is the best actor. Next is Ashok and then Nathan (Delhi Kumar).
// தினவு said...
@ அனானி (May 26, 2010 5:57 PM)
//கம்பர் ஜெயராமன் ரொம்ப படுத்துறார் இல்லையா ?//
///
தினவு எப்பவுமே டோண்டுவுக்கு சப்போட்டா எழுதறீங்களே . நீங்க தான் டோண்டுவா
// “வாலி ஆக்ரோஷமாக ராமருடன் சண்டையிட்டான் மரங்கள் பாறைகள் ஆகியவற்றை அவர் மீது எறிந்தான், ஆயினும் ராமபாணத்தின் முன்னால் அவை எல்லாம் வியர்த்தமாகப் போயின” என்று. இதை தானாக சொல்லவில்லை. பிரதிவாத பயங்கர, ராமாயண பிரவசன சிரோன்மணி பிரும்மஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள் 1939-ல் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டதையே தானும் கூறுவதாக மேலும் சோ கூறுகிறார்.
//
துளசிதாசர்,கம்பர் இவர்கள் எல்லாம் ராமர் அருள் பெற்றுத்தான் எழுதினாங்க இல்லையா. அப்படின்னா ஏன் பொய்யா எழுதினாங்க
Post a Comment