முதற்கண் கலையகம் என்னும் வலைப்பூவில் மே 9: நாஸிஸம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிவிழா என்னும் தலைப்பில் வந்த இடுகைக்கு நான் இட்ட இப்பின்னூட்டத்தைப் பாருங்கள். (அது அங்கே அனுமதிக்கப்படும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாத நிலை. ஆகவே எதற்கும் இருக்கட்டும் என எனது அப்பின்னூட்டத்தை இங்கும் வெளியிடுகிறேன்).
(இந்த நிமிடம்வரை அதுவரவில்லை மணி 10.36, 11.05.2010. அவங்களுக்கு டோண்டு ராகவன் பற்றி சரியாகத் தெரியவில்லை என நினைக்கிறேன். பின்னூட்டத்தை மறைப்பது சீப்பை ஒளித்து கல்யாணத்தை நிறுத்த நினைப்பதற்கு சமம்).
(அப்பின்னூட்டம் கடைசியாக வெளியில் வந்தே விட்டது. ஆனால் பதில்கள்தான் காதுல பூ சுற்றல். வேறு என்னதான் செய்ய முடியும் அவர்களால், பாவம்)?
1939 முதல் 1941 வரை சோவியத் யூனியனும் ஜெர்மனியும் சேர்ந்தே செயல்பட்டன. அவர்களது நட்பு ஒப்பந்தத்தின் பேரில் போலந்து இரண்டாகத் துண்டாடப்பட்டு, கிழக்குப் பகுதியை சோவியத் யூனியனும் மேற்குப் பகுதியை ஜெர்மனியும் கபளீகரம் செய்தன.
பிறகு ஜெர்மனி எடுத்துக் கொண்ட பகுதிகள் முழுக்கவும் திரும்ப போலந்துக்கு கிடைத்தன, ஆனால் சோவியத் யூனியன் முழுங்கியது முழுங்கியதுதான்.
போலந்தின் வீழ்ச்சியே இரண்டாம் உலக மகா யுத்தத்தின் ஆரம்பம் என்பது மறுக்க முடியாத சரித்திரம். ஆக, அதில் பெரிதும் சம்பந்தப்பட்ட ஹிட்லர்-ஸ்டாலின் ஒப்பந்தத்தை எப்படி நியாயப்படுத்த முடியும்?
1941-ன் வீடியோவை இங்கு காட்டுவது மூலம் என்ன நிறுவ எண்ணுகிறீர்கள்? அது ஒரு பிரச்சார வீடியோ அவ்வளவே. சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர் வேறெதையும் பேச இயலாது.
கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் ஸ்டாலின் - ஹிட்லர் ஒப்பந்தம் பற்றி கள்ள மௌனம் சாதிப்பார்கள், அல்லது அது சோவியத் யூனியனின் போர் யுக்தி என்பார்கள். அதை திடீரென 1941-ல் ஜெர்மனி மீறியபோது சோவியத் யூனியன் நிஜமாகவே மிகவும் பாதிக்கப்பட்டது. அது பற்றி நகைச்சுவை எழுத்தாள்ர் ரிச்சர்ட் ஆர்மர் குறிப்பிடுகையில், ஹிட்லர் ஒப்பந்தத்தை மீறியது ஸ்டாலினுக்கு மிகுந்த கோபத்தை வரவழைத்தது, ஏனெனில் அவரே தனக்கு சௌகரியமான தருணத்தில் அதை மீறத்தான் எண்ணியிருக்கிறார். ஹிட்லர் முந்திக் கொண்டதில் அவருக்கு மகாகோபம் என எழுதியுள்ளார்.
இது கற்பனையில்லை என்பது ஸ்டாலின் ஜப்பான் விஷயத்தில் நடந்து கொண்டதிலிருந்து தெரியும். இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த முக்கால்வாசி காலத்தில் சோவியத் யூனியன் ஜப்பானுடன் செய்து கொண்டிருந்த நட்பு உடன்படிக்கையின்படித்தான் நடந்தது. 1945, ஆகஸ்ட் - 6-ஆம் தேதி ஹிரோஷிமா மேல் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்கு பிறகு, ஆகஸ்ட் - 8 ஆம்தேதி சோவியத் யூனியன் ஜப்பான் மேல் யுத்தப் பிரகடனம் செய்தது. அடாடா என்ன டைமிங்? ஆகஸ்ட் 9 நாகசாகி மேல் அணுகுண்டு. ஆக சோவியத் யூனியன் சைக்கிள் கேப்பில் ஆட்டோ விட்டது. அது பற்றியும் கம்யூனிஸ்டு தோழர்கள் கள்ள மௌனம் சாதித்தார்கள்/இன்னும் சாதிக்கிறார்கள். இதன் மூலம் ஜப்பானின் குரில் தீவுகள் சோவியத் யூனியனோடு நிரந்தரமாக சேர்த்துக் கொள்ளப்பட்டன.
அது மட்டுமல்ல இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னால் தனது block-ல் சேர்க்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளை கொள்ளையடித்து தனது நாட்டின் செல்வத்தைப் பெருக்கியது சோவியத் யூனியன். ஆகவேதான் 1989-ல் உலக சரித்திரம் பெரிய அளவில் மாற்றப்பட்ட போது கிழக்கு ஐரோப்பியரின் முதல் மகிழ்ச்சியே சனியன் பிடித்த சோவியத் யூனியனிடமிருந்து பெற்ற விடுதலைதான்.
எனது மேலே சுட்டப்பட்ட பதிவிலிருந்து சில வரிகள்:
1989 அக்டோபரில் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் 40-ஆம் ஆண்டு விழா அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது. "40 Jahre Bestehen der DDR" (40 வருடங்களாக ஜெ.ஜ.கு.) என்றெல்லாம் வெற்றிகரமாக பேனர்கள் கிழக்கு ஜெர்மனியில் பறந்தன. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே புகைச்சல் ஆரம்பித்தது.
ஹங்கேரி தனது எல்லைத் தடைகளை நீக்கியது. அதன் வழியாக ஆஸ்திரியா பிறகு அங்கிருந்து மேற்கு ஜெர்மனி என்ற கணக்கில் பல கிழக்கு ஜெர்மானியர்கள் ஓடத் துவங்கினர். தூர்தர்ஷனில் அக்காலக் கட்டத்தில் இவையெல்லாம் பரபரப்பாகப் பார்க்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனியின் அதிபர் ஹோனேக்கர் படு டென்ஷனானார். கர்பசியவ் உதவி ஒன்றும் செய்ய இயலாது என கைவிரித்து விட்டார். அடுத்த சில நாட்களிலேயே விழவே விழாது என்று கருதப்பட்ட பெர்லின் சுவர் விழுந்தது. அடுத்த ஓராண்டுக்குள் கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியில் இணைந்தது.
Cold war என்ற பெயரில் கிழக்குக்கும் மேற்கிற்கும் நடுவில் நடந்து வந்த யுத்தம் அமெரிக்கர்களின் வெற்றியுடன் முடிவடைய ஆரம்பித்தது.சோவியத் யூனியனின் ஆதரவு இல்லை என்றானதால் சீட்டுகட்டு மாளிகைகள் போல செக்கொஸ்லாவிக்கியா, ருமேனியா, போலந்த், ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்த கம்யூனிஸ்டு அரசுகள் கவிழ ஆரம்பித்தன. அப்போதிலிருந்து 1991 திசம்பர் வரை இழுபறியாகக் கிடந்த சோவியத் ஒன்றியமும் இறுதி மூச்சை விட்டது. Cold war-ம் முடிவுற்றது.
இதையெல்லாம் அன்றைய ஊடகங்களின் வாயிலாக நேரடியாகப் பார்த்த எனக்கு உணர்வுகள் கலந்து இருந்தன. ஒரு பக்கம் தீவிர அமெரிக்க ஆதரவாளனான நான் அமெரிக்காவின் இந்த வெற்றிக்கு சந்தோஷப்பட்டேன். அதே சமயம் 42 ஆண்டுகளாக அதனுடன் போராடிய சோவியத் யூனியனின் வீழ்ச்சி எனக்குள் பரிதாபத்தையும் ஏற்படுத்தின. அதுவும் அதன் கடைசி இரண்டு ஆண்டுகளில் பல விஷயங்கள் வெளியில் வந்தன. சூப்பர் பவராகக் கருதப்பட்ட சோவியத் யூனியன் உண்மையிலேயே எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை விளவித்தது. செண்ட்ரலைஸ்ட் பிளான்னிங் என்ற பெயரில் என்னவெல்லாம் கம்யூனிஸ்டுகள் கூத்தடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இப்படியெல்லாம் அறிவுகெட்டத்தனமாகவெலாம் நாட்டை ஆள முடிய்மா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. மனித இயற்கைக்கு விரோதமான பல கோட்பாடுகளை மார்க்ஸ் சொன்னார், லெனின் சொன்னார் என்பதற்காக மட்டுமே அவற்றை கடைபிடித்தவர்களின் அறியாமை புலப்பட்டது. எதுவும் இவ்வுலகில் இலவசம் இல்லை என்ற உண்மையை கவனியாது வேலை செய்தால் இப்படித்தான் நடக்கும் எனக் கூறிவிடலாம்.
எதற்கெடுத்தாலும் மான்யம் என்று கூறி மக்களை சோம்பேறிகளாக்கினால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும். பல ஆண்டுகளுக்கு முன்னமேயே ஏய்ன் ரேண்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய "அட்லாஸ் தோள்களைக் குலுக்கினான்" என்ற நாவல் கூறியபடியே சோவியத் யூனியனில் நடந்தது. அந்த நாடே உலக வரைபடத்திலிருந்து மறைந்தது.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து பல தொழிற்சாலைகள் வேரோடு பெயர்க்கப்பட்டு பல வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அது சம்பந்தமான பேப்பர்களை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு நான் மொழி பெயர்க்கும் வேலை தொண்ணூறுகளில் பெற்றேன். அப்போது நினைத்துக் கொண்டேன், அடாடா இந்த தொழிற்சாலைகளை எவ்வளவு நம்பிக்கையுடன் ஆரம்பித்தனர், இப்போது இவ்வாறு இடம் மாறுகின்றனவே என்ற கிலேசம் என் மனதில் ஏற்பட்டது.
என் மனதில் எழுந்த பரிதாபங்கள் சோவியத் யூனியன் என்னும் தீமையின் தீவிரத்தை அணுவளவுகூட குறைக்க இயலாது என்பது வேறு விஷயம்.
அதற்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகள் பரிசுத்த ஆவியால் உருவானவையா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் கூறுவேன். அவற்றின் வன்மம் நிறைந்த செயல்களுக்கும் சரித்திரத்தில் பஞ்சம் இல்லை. ஆனால் அவற்றுக்கும் சோவியத் யூனியனுக்கும் உள்ள பெரிய வித்தியாசமே ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுதான். மற்ற நாடுகள் பல இடங்களில் வரம்பு மீறியதை அந்தந்த நாட்டின் பத்திரிகைகளே வெளியில் கொணர்ந்து அரசை கிழிகிழியென. கிழித்தன. சோவியத் யூனியனில் இந்த பத்திரிகை சுதந்திரம் சுத்தமாக லேது, அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
13 hours ago
20 comments:
இப்படி அறிவு கேட்ட தனமாக நாட்டை ஆளமுடியும் என்பதற்கு நமது நாட்டு அரசும் ஒரு உதாரணம் தான்.
Dondu,
Would you consider Stalin to be a more evil and third rate leader than our wonderful dravidian leaders like Anna,Yellow Towel,lion hearted azhagiri,poetess kanimozhi et etc.The truth is that our leaders are more incompetent and more evil than the erstwhile Soviet leaders.
//ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுதான். மற்ற நாடுகள் பல இடங்களில் வரம்பு மீறியதை அந்தந்த நாட்டின் பத்திரிகைகளே வெளியில் கொணர்ந்து அரசை கிழிகிழியென. கிழித்தன. சோவியத் யூனியனில் இந்த பத்திரிகை சுதந்திரம் சுத்தமாக லேது///
இங்க மட்டும் என்ன வாழர்ரதாம் இந்திய இறையாண்மை காரணம் காட்டி வயசான பார்வதி அம்மா வரக்கூடாதுன்னு நரசிம்க அவரதாரம் எடுதேள்.... கர்னாடகவில எல்லையில தண்ணி எடுக்கக்கூடாதுன்னு சண்ட மாருதம் பண்ரார் ஒரு CM... அதுகு ஒரு வாமன அவதராம் கூட எடுக்கல அட போங்கன்ன......
//Would you consider Stalin to be a more evil and third rate leader..//
Stalin, Hitler, Mao, Pol Pot, Ceausesku are all evil incarnated.
Don't compare them with our politicians. Here democracy is very much there.
Regards,
Dondu N. Raghavan
//இங்க மட்டும் என்ன வாழர்ரதாம் இந்திய இறையாண்மை காரணம் காட்டி வயசான பார்வதி அம்மா வரக்கூடாதுன்னு நரசிம்க அவரதாரம் எடுதேள்....//
இப்பதிவுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத பின்னூட்டம்.
டோண்டு ராகவன்
ஆனால் நடந்ததோ:
1 ஹிட்லரால் ஆபத்து என்று சொன்ன சில தளபதிகள் கைது செய்யப்பட்டார்கள்!
2 ஹிட்லர் எப்பொழுது வேண்டுமானாலும் படை எடுக்கலாம் என்று சொன்ன உளவாளிகள் "பயம் கிளப்பிகள்" "துரோகிகள்" என்று கூறி சிறையில் அடைக்கபட்டார்கள்"
3 அப்படியும் இதை பற்றி பேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர், " war mongering" செய்கிறார்கள் என்று கூறி ஒழிகப்படார்கள்!
4 ஹிட்லரின் படைகள் சில நம் நாடு எல்லைகளில் உடுருவி ஆழம் பார்க்கிறார்கள், நாம் வேற்று படையினரை உள்ளே விடுவது நல்லதல்ல என்று சாட்சியுடன் சொன்ன தளபதியை "தேச துரோகி" சண்டையை உண்டாக்கி சோவியத்தை அழிக்க நினைக்கும் பொய்யர் என்று கூறி ஒழித்தார்!
5 ஜெர்மானிய விமானங்கள் திடீரென்று தாக்கினால் நம் விமானங்கள் கிளம்புவதற்கு முன்னரே ஒழித்து விடுவார்கள், ஏனென்றால் அவ்வளவு பக்கத்தில்
அதுவும் முழு alert இல் அவர்கள் இருக்கிறார்கள், ஆதாலால் நாமும் நம் விமானங்களை கொண்டு sorties செய்யவேண்டும், நாமும் முழு கவனாமாக
இருக்கிறோம் என்று காட்டவேண்டும் என்று சொன்ன ஒரு தளபதியை கைதி செய்து, அமைதியை குலைக்க பார்க்கிறார் என்று பட்டம் கட்டி அவரை குலாகுக்கு அனுப்பி சின்ன பின்னமாக்கினார்!!
6 ஒரு கட்டத்தில் ஜெர்மனி ரஷ்யாவின் மேல் படை எடுக்கும் என்று யாரும் வாயை திறப்பதே பாவம், அராஜகம், செச துரோக செயல் என்று நிலைக்கு ஸ்டாலின் எல்லோரையும் கொண்டு வந்தார்!
இன்னும் பல பல!
இது எதானால் நடந்தது! ஸ்டாலினுக்கு எல்லாம் தெரிந்தும் ஏன் ஒன்றும் செய்யவில்லை! ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை????
இதை கேட்டால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்!
மேலும் எழுதிகிறேன்...... நேரமிருந்தால் படியுங்கள், மிக மிக interesting ஆக இருக்கும்!
நன்றி
அன்பான நண்பர் திரு டோண்டு,
இன்னும் பல பல விடயங்கள் இருக்கிறது! நம்ம ஊரு புரட்சி கொழுந்துகள் மற்றும் அங்கங்கே ஒட்டிக்கொண்டிருக்கும், உண்மைகளை மூடி மறைத்து கொண்டிருக்கும் இடது சாரி அபிமானிகள் தவிர்த்து எல்லோராலும் அறியப்பட்ட உண்மைகள்தான் இந்த சோவியத் அரசின் பித்தலாட்டம்!! முக்கியமாக ஸ்டாலினின் பித்தலாட்டம்! அவரின் கண்மூடி தனத்தால் அழிந்த பல லட்சம் உயிர்கள்!
மிக மிக சுவாரசியமான ஒன்றை நான் விவரிக்கிறேன். இது கற்பனை அல்ல, நடந்தது! இதில் சம்மந்தப்பட்ட பலரால் விவரிக்கப்பட்டது, எழுதப்பட்டது!
மாஸ்கோவ் நகரில் ஜோசெப் ஸ்டாலினின் வீடு! அந்த நாள் ஜூன் 22, கிட்டத்தட்ட விடியல் நேரம் சுமார் நான்கு இருக்கும்! தொலைபேசி ஒலிக்கிறது! அடிப்பொடி ஒருவர் அதை எடுத்து யார் அந்த பக்கம் என்று கேட்க்கிறார்!
தொலைபேசியின் மறுமுனையில்: "நான் ஜெனரல் ஜுகோவ் பேசுகிறேன், காம்ரேடு ஸ்டாலினுடன் பேசவேண்டும், மிக அவசரமான ஒரு விடயம் !"
காவலர்: "உங்களுக்கு யார் சொன்னது காமரடு ஸ்டாலின் இங்கே உள்ளாரென்று! சரியான அலைவரிசை (proper channels) மூலமாக வாங்க"! என்று கூறி தொலைபேசியை துண்டிக்கிறார்!
மறுபடியும் தொலைபேசி அடிக்கிறது, காவலர் அதை எடுக்கிறார். மறுமுனையில் அதே குரல், ஜெனரல் ஜுகோவ் : உடனே காம்ரடு ஸ்டாலினை கூப்பிடுங்கள்
இது ஒரு அவசர நிலை!
காவலாளி: அதான் சொல்லிவிட்டேனே சரியான அலை வரிசையில் வாருங்கள் என்று சொல்லி மறுபடியும் தொலைபேசியை துண்டிக்கப்போகும் தருவாயில், ஜுகோவ் கத்துகிறார்: "நம் நாட்டில் மேல் ஜெர்மானிய விமானங்கள் குண்டு மழை பொழிகிறது, கூப்பிடுங்கள் ஸ்டாலினை" என்று!
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தொலைபேசியை ஒருவர் எடுத்து கர்ஜிக்கிறார், அது ஸ்டாலின்: "யார் அது? என்ன நடக்கிறது?.......
ஜுகோவ்: " காம்ரடு, ஜெர்மானிய விமானங்கள் நம் படைகளை தாக்குகின்றன, ஜெர்மனி நம் மேல் போர் தொடுக்கிறது....."
இப்படி ஜுகோவ் சொல்லி முடித்ததும், மறுபக்கம் நிசப்தம்! சுமார் ஒரு நிமிடம் சத்தமே இல்லை!
ஜுகோவ்: காம்ரடு, நான் சொல்லுவது புரிகிறதா??
ஸ்டாலின் மெளனமாக இருக்கிறார்.
ஜுகோவ்: பொறுமை இழந்து, கோபமாக, காம்ரடு ஸ்டாலின், ஜெர்மானியர்கள் நம் படைகளை நாசமாக்க ஆரம்பித்து விட்டார்கள். நாம் மேல் போர் தொடுத்து விட்டார்கள்! நாம் ஏதாவது செய்யவேண்டும்!
சில நொடி மௌனத்திற்கு பிறகு ஸ்டாலின்: "பொலிட்பீயுரோவை கூட்டுங்கள்! எல்லோரையும் வரச்சொல்லுங்கள்" என்று ஒரு உடைந்து போன மனிதரின் குரல் கடைசியாக வந்தது!
அதாவது
1 கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்து லட்சம் எதிரி போர் வீரர்கள் ஒரு நாட்டின் எல்லையில் முகாம் கொண்டிருக்கிறார்கள்!
2 கிட்டத்தட்ட ஆயிரம் எதிரி போர் விமானங்கள் தயார் நிலையில் எல்லையில் (குண்டுகள் ஏற்றப்பட்டு) இருக்கின்றனா!
3 ஐரோப்பா முழுவதும் ஆட்டு இறைச்சியின் விலை மிகவும் விழந்து போனது, காரணம் ஆடுகளெல்லாம் அதன் ரோமம்களுக்காக வெட்டப்பட்டன. எதற்க்காக என்றால், ஜெர்மானிய ராணுவும், ரஷ்ய போருக்காக ஐம்பது லட்சம் ராணுவ வீரர்களுக்கு ஸ்பெஷல் குளிர் தடுப்பு உடை தைக்க நல்ல விலை கொடுத்ததால், பதி ஆடு மேய்ப்பாளர்கள் ஆட்டை வெட்டிக்கொன்று, உரோமத்தை மற்றும் மாமிசத்தை சேர்த்து விற்றதால்! இது ரஷ்ய உளவுத்துறையால் கண்டுகொள்ளப்பட்டு, இதன் சாராம்சம் புரிந்து கொள்ளப்பட்டு, ஸ்டாலினுக்கும் தெரியபடுத்தப்பட்டது!
4 ஜப்பானில் உள்ள ரஷ்ய உளவுத்தரையால், இந்த மாதிரி ஜெர்மணி படை எடுக்க போகிறது என்ற செய்தி இங்கிலாந்து உளவுத்துறையினரால்
தெரிவிக்கப்பட்டது! ஸ்டாலினுக்கு இதுவும் சொல்லப்பட்டது!
5 நாசிகளை பிடிக்காத ஜெர்மானிய கீழ்நிலை ராணுவ அதிகாரி ஒருவர் operation Barbarossa வின்(அதாவது ரஷ்ய படை எடுப்பு திட்டத்திற்கு ஹிட்லர் கொடுத்த
பேர்) பற்றிய முழு விபரத்தையும் ரஷ்ய உளவு படைக்கு சில வாரங்களுக்கு முன்னரே கொடுத்து விட்டார்!
6 வின்ஸ்டன் சர்ச்சில் ரஷ்யவில் உள்ள இங்கிலாந்து தூதர் மூலமாக ஜெர்மானியரின் திட்டங்களை (இங்கிலாந்து உளவுத்துறையான MI 6 எல்லா
திட்டங்களையும் கண்டுபிடித்து விட்டது, படை எடுப்பு சம்பந்தமான பல மடல்களையும் உளவாளிகள் மூலம் கையகப்ப்படித்தி இருந்தது)ஸ்டாலினுக்கே
தெருவித்து விட்டார்!
இன்னும் இருக்கும் வரலாற்று சான்றுகள் பல பல!
ஆனால் நடந்ததோ:
// NO said... //
நோ சீக்கிரம் எழுதுங்க . தனி பதிவே போடலாம் நீங்க
கம்யூனிஸ்டுகளுக்கு வோட்டு போடுபவர்கள் நாட்டைக் கூட்டிக்கொடுப்பவர்கள் என்பதை அடிக்கடி இது போன்ற கட்டுரைகள் நினைவு படுத்துகின்றன.
நல்லவேளை, நமது நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே சுத்தமாக செல்வாக்கு இல்லை. பத்திரிக்கை, டி.வி, சினிமா எல்லாம் வைத்தும், வெளிநாட்டுப் பணத்தைவைத்து எதேதோ செய்து பார்க்கிறார்கள். கொயபெல்ஸ் தனமாக பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், அந்தோ பரிதாபம், 1% மக்கள் தான் இதற்கெல்லாம் மயங்குகிறார்கள். நாடு தப்பித்தது.
ஆனால், என்று இந்த % அதிகரிக்கிறதோ அன்றே இந்தியாவின் கதை முடிந்துவிட்டது என்று பொருள். அதற்கு முன்னர், இந்த மாமாப் பயலுங்களை விதை நீக்கி விருத்த சேதனம் செய்து பொதுவில் கழுவேற்றவேண்டும்.
In capitalism man exploits man
In communism it is the other way!
கம்யூனிசம் என்பது படிப்பதற்கு மிக அருமையான ஆனால் எவராலும் செயல்படுத்தப்பட முடியாத ஒரு கொள்கையாகும்.ஏனெனில் இது இயற்கைக்கு மாறானது.
சோவித் யூனியன் ஏன்,நம் west bengal மற்றும் Kerala சீரழிந்தது கம்யுனிஸ்ட் ஆட்சியால்தான்
வரலாறு முக்கியம் அமைச்சரே!
ஸ்டாலினின் "தொலைநோக்கு பார்வை" மற்றும் ஆளும் திறன்" கீழே.
1941 ஜூன் 17 ஆம் தேதி, அதாவது ஹிட்லரின் படைகள் ரஷ்யாவை முற்றுகைக்கு இட்ட ஐந்து நாட்களுக்கு முன் நடந்தது.
On June 17, 1941, Stalin received a report signed by Pavel M. Fitin, chief of the NKGB Foreign Intelligence, asserting that “all preparations by Germany for an armed attack on the Soviet Union have been completed, and the blow can be expected at any time.” The source was an intelligence officer in Hermann Goring’s Air Ministry. In the margin of the report, Stalin scrawled this note to Fitin’s chief, the people’s commisar for state security, Vsevolod N. Merkulov: “Comrade Merkulov, you can send your ‘source’ from the headquarters of German aviation to his fucking mother. This is not a ‘source’ but a dezinformator.” Five days after Stalin expressed these sentiments, the German onslaught broke, bringing with it a war that would result in the deaths of twenty million Soviet citizens.
அதாவது, ஹிட்லரின் படைஎடுத்தலை துல்லியமாக தெரிந்தும், அதை கண்டு பிடித்து சொன்ன ரஷ்ய உளவுத்துறை அதிகாரியை மிக கேவலமாக திட்டி ஸ்டாலின் கைப்பட எழுதிய ஆவணம் உள்ளது!
மேலும் ரிச்சர்ட் சார்ஜே என்ற கம்யூனிச அபிமானி ஹிட்லர் கையப்பமிட்ட Directive 21 எனப்படும் ஆபரேஷன் பார்பரோசாவின் ஒரு நகலை ரஷ்ய உளவுத்துறைக்கு ஜப்பானிலிருந்து (ஜப்பானியர்கள் சிலர் கம்முனிச அபிமானியாக இருந்தார்கள், அதில் சிலர், ஜப்பான் ராணுவத்திற்கும் ஹிட்லரின் படைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பால் கிடைத்த ஆவணங்களை ரஷ்யாவிற்கு கொடுத்தார்கள்) அனுப்பினார். அதில் ஜெர்மனி இந்த இந்த தேதியில், இந்த இந்த இடங்கள், நகரங்கள் நோருக்கப்படவேண்டும், விமானங்கள் தாக்கும் என்ற எல்லா விடயங்களும் இருந்தன! என்ன ஜூன் 22 என்பதற்கு பதிலாக, மே 15 என்று முதலில் திட்டமிட்டிருந்தார்கள்! சில காரணங்களால் அது தள்ளிவைக்கப்பட்டு, ஜூன் மாதத்திற்கு வந்தது! இதுவும் ரஷ்ய உளவுத்துறைக்கு தெரியும்!
போதாததர்க்கு, முன்பே சொன்னது போல, சர்ச்சில் மட்டும் இல்லாமல், அமெரிக்க ஜனாதிபதி ரூசுவால்டும் அமெரிக்காவில் இருந்த ரஷ்ய அம்பாசடோருக்கு இந்த ஆவணங்களை தந்திருக்கிறார்!
இது எல்லாம் ஸ்டாலின்நிற்கும் போனது! விடயத்தை விட்டு அதை சொன்னவர்கள் மேல் கடும் கோபம் அடைந்து சொன்னவர்களை பந்தாடினார்! பயந்துபோய் அதன் பின் யாரும் அதை பற்றி வாயை திறக்கவேயில்லை!
இதைவிட இன்னொரு தமாஷு, ரஷ்யாவில் இருக்கும் ஜெர்மானிய தூதரகத்திலிருந்த முக்கியமான சிலரை தவிர, மற்ற எல்லோரும் குடும்பத்துடன், படை எடுப்புக்கு ஒரு வாரம் முன்னர் ஜெர்மனிக்கு மொத்தமாக கிளம்பிப்போகலானார்கள்! இதை பார்த்த மொலோடோவ் (Vaycheslav Molotov - one of the top five elite of Soviet ruling party, apart from Satlin), இவர் ரஷ்ய வெளி உறவுத்துறை அமைச்சர், ஜெர்மானிய தூதரை வரச்சொல்லி ஏன், என்ன கோபம் என்று கேட்டார். தூதரும் ஏனோ தானோ என்று பதில் சொல்லி விட்டு நகர்ந்தார்! அதாவது, தாக்கபோகிரார்கள் ஜெர்மானியர்கள் என்று மாஸ்கோ தெருவில் உள்ள நாய்கள் கூட தெரிகிற அளவுக்கு விடயங்கள் நடந்த பின்னர், அதை யார் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அவர் மட்டும் ஒன்றும் செய்யாமல், அப்படியே செய்யச்சொல்லி சொன்ன சிலரையும் ஒழித்தும் கட்டி, அவர் மட்டும் ஓர் கனவுலகில் மிதந்தார்!
இதுதான் ஸ்டாலினின் "அபார திறமை"!
மேலும் தொடரும்!
நன்றி
ஏன் என்னுடைய பின்னூட்டம் வெளியிடப் படவில்லை.
மியாவ்.
என்னது காந்தி செத்துட்டாரா.
கோட்சே சுட்ட்டுட்டானா
சோவியத்யுனியனில் இரண்டு அரசு நடத்திய பத்திரிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்ததாம். இப்போது வந்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒன்றின் பெயர் பிராவ்தா(உண்மை) மற்றொன்றின் பெயர் இஸ்வெஸ்தியா (செய்தி). அமெரிக்கர்கள் பிராவ்தாவில் இஸ்வெஸ்தியா இருக்காது. இஸ்வெஸ்தியாவில் பிராவ்தா இருக்காது என்று கேலி செய்தனர். பொய்யர்கள் ஆட்சி அதைத்தான் இங்கிருக்கும் இடதுசாரிகள் ஆதரிக்கின்றனர்.
ஒரு வேளை ஸ்டாலின் வரட்டும் நாஜிப்படைகள், ஒழித்துக் கட்டி நாஜி ஜெர்மனியையே கம்யூனிஸ சொர்க்கபுரி ஆக்கிவிடலாம்...என்று கணக்கு போட்டாரோ என்னவோ ?
இப்போ ஒரு quiz!
இவ்வளவு
"நல்லவரான"
"திறமைசாலியான"
மக்கள் "போற்றும்"
தலைவராக வாழ்ந்த
ஸ்டாலினின் பெயரை
ஒரு தமிழின தலைவர்
தன் செல்ல மகனுக்கு
பெயராக சூட்டி
மகிழ்ந்துள்ளார்.
அவர் யார்?
//
இப்போ ஒரு quiz!
இவ்வளவு
"நல்லவரான"
"திறமைசாலியான"
மக்கள் "போற்றும்"
தலைவராக வாழ்ந்த
ஸ்டாலினின் பெயரை
ஒரு தமிழின தலைவர்
தன் செல்ல மகனுக்கு
பெயராக சூட்டி
மகிழ்ந்துள்ளார்.
அவர் யார்?
//
அவரது பெயர், 'க' வில் ஆரம்பித்து 'ருணாநிதி' என்று முடியும்.
ஹிட்லர் மேல் ஸ்டாலின் ஒரு கண் வைத்து இருந்தார் என்பது தான் உண்மை. அதே சமயம் அதை அவர் மற்றவர்களிடம் வெளிக்காட்டி கொள்ளவில்லை என்பதும் உண்மை. தனது நாட்டில் ஹிட்லர்க்கு எதிராக பேசியவர்களை எல்லாம் ஒரு வழி பண்ணியதை ஹிட்லர்க்கு தெரியும் படியும் செய்து கொண்டார், இது ஒரு வகை ராஜதந்திரம் என்று கூட சொல்லலாம். இதனால் ஹிட்லர் கண்டிப்பாக ரஷ்ய நாட்டின் மேல் படை எடுக்கமாட்டார் என்று கூட நம்பினார். ஸ்டாலின் ஹிட்லரை மனமார நம்புவதாக செய்யும் ஒரு காரியமாக தான் அந்த அதிகாரிகளை ஜெயிலில் அடைத்தார்.
எனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது. நேரம் இருப்பின் வந்துசெல்லவும்.
http://romeowrites.blogspot.com/
இப்பொழுது தான் வினவு தளத்தில் ரஷிய விபச்சாரிகள் பரிசுத்தமானவர்கள் என்கிற சர்டிபிக்கேட்டைப் படிச்சுப் பார்த்துட்டு வர்ரேன்...
வக்காலத்து வாங்கவேண்டியது தான் அதுக்காக ஸ்டாலினின் சிறுநீரைத் திருநீருன்னு எடுத்து நெத்தியில வெச்சிக்கிற கூட்டத்த இப்பத்தான் பாக்குறேன்.
Post a Comment