5/24/2010

Blogpot திறப்பதில் பிரச்சினை

கடந்த சில நாட்களாக பிளாக்ஸ்பாட் பக்கங்களை திறப்பதில் பிரச்சினை அவ்வப்போது இருந்து வருகிறது. நான் பாவிப்பது கூகள் க்ரோம் உலாவி. ஆனால் இதே பிரச்சினை எக்ஸ்ப்ளோரரிலும் ஃபயர் ஃபாக்ஸிலும் கூட வந்தது. அவ்வப்போது சரியாகிறது. ஆனால் பல சமயங்களில் இணைப்பு உடைந்து விட்டது என மெசேஜ் வருகிறது.

உதாரணத்துக்கு இப்பதிவை பப்ளிஷ் செய்து விட்டு பிளாக்குக்குகு போக முயற்சித்தால் கீழ்கண்ட அறிவிப்பு வருகிறது.

Oops! Google Chrome could not find dondu.blogspot.com
Suggestions:
Access a cached copy of dondu. blogspot. com
Try reloading the page
Go to blogspot. com
Search on Google:

மற்றவர்களது அனுபவம் எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

26 comments:

எல் கே said...
This comment has been removed by the author.
dondu(#11168674346665545885) said...

பிளாக்கரில் பிரச்சினை என்பதை நான் சரியாக கூறவில்லை என நினைக்கிறேன். நான் சொல்ல வந்தது பிளாக்ஸ்பாட்டை, அதாவது view blog என்ற பட்டனை அழுத்தினால் நான் சொன்ன மெசேஜ் வருகிறது.

இப்போது கூட கமெண்டுகள் போடும் பக்கத்துக்கு வந்தால் பின்னூட்டம் போடவியலும். அதை செய்யவும் சுற்றிவளைத்து வரவேண்டியிருக்கிறது.

பிளாக்ஸ்பாட் திறக்காவிட்டாலும் cached copy பட்டனில் க்ளிக் செய்து பார்க்கவியலுகிறது. அங்கிருந்து கமெண்ட் பக்கத்துக்கு போக வேண்டியது.

இப்போது இப்பக்கத்தை நிரந்தரமாக திறந்து வைத்துக்கொள்ளும் தேவை இருக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அ. நம்பி said...

நான் ஃபயர் ஃபோக்ஸ் பயன்படுத்துகிறேன். இதுவரை உங்கள் வலைப்பக்கத்தையோ பிற வலைப்பக்கங்களையோ திறப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

எல் கே said...

இது தெரிய வில்லை. நான் நீங்கள் சொன்ன மூன்று உளவிகளும் உபயோகிக்கிறேன். எதிலும் நீங்கள் சொன்ன பிரச்சனை வரவில்லை.

துளசி கோபால் said...

ஒரு நாலைஞ்சு முறை, நம்ம பதிவுக்குப் போய் எடிட் செய்ய முடியாத நிலை இருந்தன. பப்ளிஷ் செய்தபிறகு தவறு இருந்தால் திருத்தமுடியாமல்.... கஷ்டமாப் போச்சு.


தற்போது எல்லாம் சரி (டச் வுட்!)

நெருப்பு நரி பயன்படுத்துகிறேன்.

dondu(#11168674346665545885) said...

என்ன விந்தை! கடைசி 3 பின்னூட்டங்களை அனுமதித்தவுடன் பிளாக்ஸ்பாட்டுக்கு வரமுடிந்தது.

நான் ஏற்கனவேயே சொன்னது போல அவ்வப்போது அந்தந்த ஏரியா செர்வர்களில் வரும் பிரச்சினை இது என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

யதிராஜ சம்பத் குமார் said...

நெருப்பு நரி்!!


ஏன் இவ்வளவு கொடூரம்?

எல் கே said...

irukkalam

K Gowri Shankar said...

Dear Sir,
The problem exist(s)(ed) in all browsers. Today morning I directly clicked on Unmai Thamizhan's link & this error occured; so I had to type the URL directly like dondu.blogspot.com & it opened the blog.
strange....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கும் இந்தப் பிரச்சனை சனிக்கிழமை மாலையிலிருந்து நேற்று இரவுவரை இருந்தது. எந்த blogspotஐயும் திறக்க முடியவில்லை. என்னுடைய நெட் கனெக்‌ஷனில் பிரச்சனை என நினைத்தேன். துபாயிலிருக்கும் நண்பர் ஒருவரும் நேற்று அரட்டையில் வந்து அங்கும் இதே போன்று பிரச்சனை இருப்பதைச் சொன்னார்.

இன்று காலையிலிருந்து (வேறு நெட் கனெக்‌ஷனில் இருக்கிறேன்) எல்லா தளங்களும் திறக்கின்றன.

கிருஷ்ண மூர்த்தி S said...

இருபதாம் தேதி எனக்கு வேறு விதமான பிரச்சினை வந்தது. பிழைச் செய்தி bX-6t5z2i என்று கிடைத்தது.

ஒரு பின்னூட்டத்தை மின்னஞ்சலில் இருந்து மட்டுறுத்தி அனுமதித்த பிறகு, பதிலைப் பதிவு செய்தாலோ, அடுத்த பின்னூட்டத்தை அனுமதித்ததாலோ முந்தையது காணாமல் போய்விடும்! பிழைச் செய்தி வரும்! ப்ளாகர் உதவிப்பக்கங்களில் ஏராளமாகச் சொல்லியிருப்பதையும், உடனடித் தீர்வு கிடைக்காததையும் பார்த்தேன்.

பிரச்சினை மறுநாள் சரியாகி விட்டது. அனுமதித்த பின்னூட்டங்கள், சாதுவாக அதனதன் இடத்தில் உட்கார்ந்துகொண்டதையும் பார்த்தேன்.

வேடிக்கை என்னவென்றால், யாரோ, என்னுடைய ஜிமெயில் கணக்கின் பாஸ்வர்டை ரீசெட் செய்ய முயன்றிருக்கிறார். ஹேக் செய்ய முடிந்ததா என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

இது மட்டுமா பிரச்னை? GOOGLE= ல் தேட் ஒரு வார்தயை டைப் செய்தால் முதலில் http://findgala.com/?&uid=0&q=dondu

என்று போகிறது. மேலும் சில சம்பந்தமில்லாத பல டைரக்டரிகள் வருகிறது

Dondu Mega Sale - www.shopcompareus.com
Mega Clearance! Today Only. Dondu at Great Prices. Shop Now

Dondu - www.slushfunds.info
SearchforDondu& Explorefreeresourcelinks.

Looking for dondu? Click Here! - www.online.com
All information about dondu here.

Find Dondu - www.toseeka.com
Helpful information on Dondu.

---- டில்லி பல்லி

வால்பையன் said...

உங்களுக்கு யாரோ சூனியம் வச்சிடாங்க!


பாட்டு பட்டைய கிளப்புது!

dondu(#11168674346665545885) said...

வால்பையன் has left a new comment on your post "Blogpot திறப்பதில் பிரச்சினை":

உங்களுக்கு யாரோ சூனியம் வச்சிடாங்க!


பாட்டு பட்டைய கிளப்புது!

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

பாட்டு நானா போட்டது. அதுக்கும் பிரச்சினைக்கும் சம்பந்தமில்லே.

உங்க பின்னூட்டம் வர மறுக்குது, ஆகவே என் தரப்பிலேலிருந்து போட்டுட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போதுதான் ஒன்றை கவனித்தேன். மடிக்கணினியில் ரிலையன்ஸ் டேட்டா கார்ட் போட்டிருக்கும்போது பிளாக்ஸ்பாட் ஓப்பன் ஆகவில்லை. ஆனால் இப்போது மேஜைக்கணினியில் டாட்டா இண்டிகாம் அகலப்பட்டையில் அது திறக்கிறது.

இதில் ஏதாவது விஷயம் இருக்குமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆமாம், எனக்கும் மடிக்கணினியில் ரிலையன்ஸ் டேடா கார்ட் கனெக்‌ஷன் பயன்படுத்தும்போதுதான் பிரச்சனை.

வஜ்ரா said...

முதலில் மச்சமச்சினியே ஸ்ட்ரீமை எப்போது அமைத்தீர்கள். அது அமைத்த பின் பிரச்சனை ஏற்பட்டதா ? இல்லை முன்னரே ஏற்பட்டுவிட்டதா ?

ConverZ stupidity said...

things are fine for me :)

dondu(#11168674346665545885) said...

மச்சமச்சினியேவுக்கும் இப்பிரச்சினைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

பிரச்சினை ரிலையன்ஸ் டேட்டா கார்ட் இணைய இணைப்பில் மட்டும் வருகிறது என்பதை இப்போது ஒரு மாதிரி கண்டறிந்துள்ளேன்.

டாட்டா இண்டிகாம் மற்றும் ஏர்டெல் அகலப்பட்டைகளில் இப்பிரச்சினை இல்லை.

மச்ச மச்சினியே எனக்கு பிடித்தப் பாட்டு, அது பற்றி பதிவே போட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_16.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

யோசிப்பவர் said...

ரிலையன்ஸ் மற்றும் BSNL மூலம் இந்தியாவிலிருந்து இணையத்தை உபயோகிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை கடந்த சில நாட்களாக இருக்கிறது.

இதற்கு இப்போதைக்கு தீர்வு :
Control Panelல் Network Connectionsக்கு செல்லுங்கள். அதில் நீங்கள எந்த Connection மூலம் இணையத்தை கனெக்ட் செய்வீர்களோ, அதன் மேல் Right Click செய்து Propertiesஐ அழுத்துங்கள். இப்பொழுது Networking என்ற tabஇன் கீழ் Internet Protocol version என்று இருக்கும். அதில் Double Click செய்யுங்கள். இப்பொழுது ஓப்பனாகும் புதிய விண்டோவில் Use the following DNS server addresses என்பதை தேர்வு செய்து, அதில் பின்வரும் இரு ஐபிக்களையும் பெட்டிக்கு ஒன்றாக கொடுங்கள். ஐபிக்கள் : 208.67.222.222
208.67.220.220

இப்பொழுது எல்லாவற்றையும் ஓகே கொடுத்து மூடிவிட்டு, கனெக்‌ஷனை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்யுங்கள். அவ்வளவுதான் Blogspotகள் பிரச்சினையில்லாமல் ஓப்பன் ஆகும்.

மேலும் உதவி தேவையென்றால் என்னை தொலைப்பேசியில் அழைக்கலாம்.

மாயவரத்தான் said...

நானும் ரிலையன்ஸ் டேட்டா கார்டுதான்! யோசிப்பவர் சொன்னதை செய்து பார்த்தாலும் வேலை செய்யவில்லை. பேசாமல் www.turbohide.com உபயோகித்து உள்ளே நுழைந்து விடுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

யோசிப்பவர் சொலவது போல செய்தேன் பலன் இல்லை. மாயவரத்தானின் வழியே நம் வழி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எல் கே said...

you can contact their customer support and ask solution. they need to give proper answer for this since its happening only with reliance

dondu(#11168674346665545885) said...

@LK
நீங்கள் சொல்வது சரியே. நான் ரிலையன்ஸ் கஸ்டமர் கேர்-க்கு கீழ்க்கண்ட மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

என்னைப்போலவே ரிலையன்ஸ் டேட்டா கார்ட் உபயோகிப்பவர்களும் இதே மாதிரி மின்னஞ்சலை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

To "Netconnect.Broadband@relianceada.com"
date Tue, May 25, 2010 at 7:52 PM
subject Problem viewing blogspot pages with Reliance data card Internet service provider
mailed-by gmail.com

hide details 7:52 PM (8 hours ago)

Dear Sir,

For the past few days I am not able to access blogspot.com. The link is always broken. This problem is there only in the case of reliance data card Internet connections. I have also got Tata Indicom/airtel wireline broadband connections and with them there is no problem viewing blogspot.com pages

Kindly do the needful. My blogspot postings come at http://dondu.blogspot.com/

Regards,
N. Raghavan

Anonymous said...

Sir
Yesterday I tried.It came as page not found. Jeyamohan's page is completely gone.
I was wondering whether all are some "vishamikalin velai"

வால்பையன் said...

//Jeyamohan's page is completely gone.//


அப்படியே சாரு தளமும் காணாமல் போனால் தமிழகம் சில காலம் நிம்மதியா இருக்கும்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது