6/27/2010

தண்டனைகள் பல ஆனால் அவற்றை அனுபவிப்பது ஏககாலத்தில்!!!

ஜூனியர் விகடன் 30.06.2010 தெதியிட்ட இதழில் 6-7-ஆம் பக்கங்களில் வந்த செய்தியே என்னை இப்பதிவுக்கு தூண்டியது. செய்தி பின்வருமாறு:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம் அருகே உள்ள மோரணஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த, நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரம் அருகேயுள்ள மொரங்கம் கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி ராமலிங்கத்தின் புதல்வரும் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றும் ராஜவேல் சேதுபதிக்கும் 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.

அதன் பிறகு மனைவியை சேலத்தில் தன் வீட்டிலேயே விட்டுவிட்டு, ராஜவேல் மட்டும் அமெரிக்கா சென்றார். அந்த சமயத்தில் இந்த “பல்கலைக்கழக துணைவேந்தர்” தன் மருமகளிடமே தவறாக நடந்து கொள்ள முயன்றார் என சங்கீதாவே குற்றம் சாட்டினார்.

அந்த வழக்கில், சேலம் ஜுடீஷியல் நான்காவது நீதிமன்ற நீதிபதியான மரியாதைக்குரிய ஸ்ரீவித்யா அவர்கள் “சேதுபதி ராமலிங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப் பட்டதால், அவருக்கு இ.பி.கோ. 498-A சட்டப் பிரிவின்படி பெண்ணைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறையும், 5000 ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். மேலும், நம்பிக்கை மோசடி செய்த குற்றத்துக்காக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன். அதோடு, பெண்ணை மானபங்கப்படுத்தி வந்த குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன். இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சங்கீதா அவர்கள் கூறிய விவரங்கள்:

1. மாப்பிள்ளை நல்ல வேலையில் இருக்கார், அவரது அப்பா துணைவேந்தர், அம்மாவும் வேலையில் இருக்காங்க, படிச்சக் குடும்பம் என்று கருதித்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க.

2. என் கணவர் ஏற்கனவே மணமாகி விவாகரத்து செய்து கொண்டவர் என்பதை மறைத்துத்தான் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்.

3. அதைக்கூட பெரிசாக நான் எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் புக்ககத்தௌக்கு சென்று வாழ் முற்பட்ட என்னை அப்பா ஸ்தானத்தில் இருந்த மாமனாரே கைஅயைப் பிடித்து இழுத்தார்.

4. என் கணவருக்கு இதை நான் தெரியப்படுத்தியும் அவர் என்னை நம்பவில்லை, மாமியார் நாத்தனார் யாருமே பொருட்படுத்தவும் இல்லை.

5. மாமனாரது செக்ஸ் டார்ச்சர் தொடரவே நான் போலீசுக்குப் போனேன்.

6. நீதிபதி கற்பகவினாயகம் என்னையும் என் கணவரையும் பேசவைத்து, எங்களுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணிவைத்தார். மாப்பிள்ளைக்கு அறிவுரையும் கூறினார்.

7. எனக்கு விசா ஏற்பாடு செய்வதாகச் சொல்லி அமெரிக்கா சென்ற கணவர் பிறகு திரும்ப வரவே இல்லை, நான் செய்த போன்களையும் அட்டெண்ட் பண்ணவில்லை.

8. அவர் அங்கு வேறு திருமணம் செய்து கொண்டு வாழும் விஷயத்தை விசாரித்து அறிந்தேன்.

9. இனிமேலும் இந்தக் குடுமபத்தை நம்பலாகாது என்னும் முடிவில் மீண்டும் கோர்ட்டுக்கு சென்றேன்.

10. சேதுபதி ராமலிங்கத்துக்கு தண்டனை கிடைத்தாலும் அவருக்கு உடந்தையாக இருந்த எனது மாமியார், நாத்தனார் அவர் கணவர் மற்றும் என் கணவர் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளேன்.


இப்போது மீண்டும் டோண்டு ராகவன். முதலில் பொதுவாக ஒரு கருத்தைக் கூறிவிடுகிறேன். 3 + 3 + 2 = 8 ஆண்டுகள் என்பது பொது புத்தி. ஆனால் மூன்று தண்டனைகளையும் “ஏககாலத்தில் அனுபவிப்பது” என்று தீர்ப்பு கூறினால் 8 வெறுமனே மூன்றாகி விடுகிறதே. என்ன செய்ய? இம்மாதிரி ஏககாலத்தில் பல தண்டனைகளை அனுபவித்தல் எல்லாவற்றையுமே கேலிக்கூத்தாக்கி விடுகிறதே. ஏன் இவ்வாறாக தண்டனைகளை நீர்க்கச் செய்யும் விஷயங்கள் வருகின்றன என்பதை யோசிக்க வேண்டும்.

இதைக் காலையில் படித்ததிலிருந்தே எனக்கு ஒரே எரிச்சலாக இருக்கிறது. ஆகவே இப்பதிவு.

முதலில் பதிவர் வழக்குரைஞர் சுந்தரராஜனுக்கு போன் போட்டுக் கேட்டேன். அவர் கூறியதாவது நமது சட்டங்கள் அளிக்கும் தண்டனைகள் குற்றவாளையைத் திருத்தும் நோக்கத்தில்தான் தரப்படுகின்றன, தண்டிக்கும் நோக்கத்தில் அல்ல. இன்னொன்றும் கூறினார். செய்த ஒரே குற்றத்துக்கு பல சட்ட ஷரத்துகளை பிராசிக்யூஷன் உபயோகிக்கிறது. ஒன்றிலிருந்து தப்பித்தாலும் இன்னொன்றில் பிடிபடலாம் என்பதுதான் அதற்கு முக்கியக் காரணம். ஆனால் ஆதே சமயம் எல்லா ஷரத்துக்களும் ஏற்கப்படும் பட்சத்தில் ஒரே குற்றம் என்னும் விஷயத்தை கருத்தில் கொண்டு ஏககால விஷயத்தைச் செய்வது ஒருவித balancing act என்றும் இருக்கலாம் என்றார்.

இத்தருணத்தில் நான் இந்த உரலில் படித்த விஷயத்தைப் பாருங்கள்:

“Seven years or less is maximum term of imprisonment for a host of offences like attempt to commit culpable homicide (Sec 308), robbery (Sec 393), cheating (Sec 420), death caused by negligence (Sec 304A), breaching the modesty of women, voluntarily causing grievous hurt (Sec 325), and the much talked about mental and/or physical torture of brides by any member(s) of in-laws family covered under sec 498A of Indian Penal Code (IPC)”.

அதாகப்பட்டது சேதுபதி ராமலிங்கம் குற்றவாளி என அறியப்பட்ட மூன்று பிரிவுகள் ஒவ்வொன்றிலும் அதிகப்பட்ச தண்டனை ஏழாண்டுகள் என அறிகிறேன். அவ்வாறு ஒவ்வொன்றிலும் அதிகப்பட்ச தண்டனை வழங்கிவிட்டாவது ஏககாலம் என்று சொல்லியிருக்கலாம். அதன்றி ஒவ்வொன்றிலும் தண்டனையை குறைத்துக் கூறி, அதிலும் ஏககால தண்டனை எனக்கூறுவது எனக்கு நியாயமாகப் படவில்லை. ஆக 21 ஆண்டுகள் அதிகப்பட்ச தண்டனை இங்கு நடைமுறையிலே வெறுமனே 3 ஆண்டாகி விட்டது.

மேலும் அபராதம் 5000 ரூபாய்தானா? இதே ராமலிங்கத்துக்கு சிறையில் ஏ கிளாஸ் வகுப்புத்தானே பெரும்பாலும் தருவார்கள்? அதற்கு பலகாரணங்களில் ஒரு காரணமாக அவரது சமூக அந்தஸ்தும்தானே இருக்கும்? அபராதம் விதிக்கும்போது மட்டும் ஏன் அதை அடக்கி வாசிக்க வேண்டும்? அவரது செல்வநிலைக்கு ஏற்ப அபராதம் விதிப்பதுதானே சரியான தண்டனையாக இருக்கும்? குறைந்தபட்சம் 5 லட்சமாவது அபராதம் இருந்திருக்க வேண்டாமா?

ருசிகாவை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி அப்பெண்ணின் தற்கொலையைத் தூண்டிய முன்னாள் போலீஸ் அதிகாரி ராத்தோடுக்கு அளிக்கப்பட்ட தண்டனையைத்தான் எனக்கு சேதுபதி ராமலிங்கத்தின் கேஸ் நினைவுபடுத்துகிறது.

மேலே சொன்னவையெல்லாம் எனது கருத்துக்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

19 comments:

அருள் said...

உங்க நாடு, உங்க சட்டம், உங்க நீதிமன்றம் - இப்படித்தான் இருக்கும்.

இதுக்கு நீங்களே கவலைப்பட்டா எப்படி?

உமர் | Umar said...

ஹே! டோண்டு சார் போஸ்டுக்கு பிளஸ் வோட்டு (முதல் முறையா) போட்டுட்டேன்.

dondu(#11168674346665545885) said...

நன்றி கும்மி. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும்தான் நானே ஓட் போட மறந்து விட்டேன் என்பது நினைவுக்கு வந்தது. இப்போது போட்டுவிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Suresh Ram said...

//“சேதுபதி ராமலிங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப் பட்டதால், அவருக்கு இ.பி.கோ. 498-A சட்டப் பிரிவின்படி பெண்ணைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறையும், 5000 ரூபாய்
அபராதமும் விதிக்கிறேன்""//

பெரியார் கோயில் குருக்கள் என்று கொள்ளலாமா??

சென்னை:சேலம் பெரயார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கம் மீது அவரது மருமகள் சங்கீதா சுமத்தியுள்ளசெக்ஸ் கொடுமை.......

துளசி கோபால் said...

அதெப்படி ஏக காலத்தில்????/

எங்கூர்லே ஒரு வழக்கில் ரெண்டு ஏழாண்டு தண்டனை கொடுத்து ஒன்றின்பின்னால் ஒன்றாக அனுபவிக்கணுமுன்னு படிச்ச நினைவு.

Anonymous said...

//
உங்க நாடு, உங்க சட்டம், உங்க நீதிமன்றம் - இப்படித்தான் இருக்கும்.
//

ஒங்கொய்யா நாட்டுல ஒங்கொய்யா சட்டத்துல ஒங்கொய்யா கட்டப்பஞ்சாயத்துல எப்புடி இருக்கும் ? கொஞ்சம் வெளக்கவும்.

Anonymous said...

Theme of the post is welcome. Yet, it is not analysed. Just you gave expression to your frustration.

In our law, there is another base, namely, a person cannot be punished for a crime more than once.

If prosecution does not club all crimes in this case and presented before the court, it runs the risk of losing the case permanently.

Sangeetha can go to higher court on the one ground that the punishment was lenient. just as you have felt here. Lets us see the outcome.

For my own, I dont take such cases where women complain of sexual harassmentseriously. They in most cases abuse the fact of being a woman. It is easy to charge a man with that. Because the onus of disproving her is upon him also.

The case of Prashant is an example. Sexual harassment and torture for dowry was alleged; and finally it was proved all charges were false and foisted to frame and wreck his life.

Now he got divorce. His father is free to get him married again.

I dont know the argument in sangeetha's case. Clever lawyering can win case on either side.

I dont say she is a cheat. But prima facie there are many holes in her facts. Beware of women in a fight. They can resort to anything to defend themselves.

The case says her husband left her. Never looked back at her. Now he lives as a married man. Why did he do so? Why didnt her parents take her back and begin the case at once? Why did sthe bear with all for so many years?

From your blog, we take it they are criminals. Suppose they run a blog, what to take but that she had concocted everything to frame them?

So, unless we know both sides, we cant side with anyone, can we?

jarf

Anonymous said...

Dear Dondu Sir

Whatever you say, some people look at views as negative and it supports bramins.

The love to contradict your views. I knew a person, he claims to have experience on everything. Even if you talk about Aids, sure, he will say he had it once.

அருள் said...

// //
//உங்க நாடு, உங்க சட்டம், உங்க நீதிமன்றம் - இப்படித்தான் இருக்கும்.//

ஒங்கொய்யா நாட்டுல ஒங்கொய்யா சட்டத்துல ஒங்கொய்யா கட்டப்பஞ்சாயத்துல எப்புடி இருக்கும் ? கொஞ்சம் வெளக்கவும்.
// //

"வெளக்கம்" இதோ:

தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் ஆட்சி நடந்தபோது - அவர்கள் வைத்திருந்த நீதிமன்றங்கள் மாதிரி இருக்கும்.

kaliraj - Qatar said...

எனக்கு என்னவோ போபால் விஷவாயு தீர்ப்பை ஒப்பிடும் போது இது மிகப்பெரிய தண்டனையாகத்தான் தெரியுது.

15-நாள் சிறைவாசமே இந்த வழக்குக்கு போதுமானது

ராம்ஜி_யாஹூ said...

சிறையிலும் அவர் ஒரு கைதி போல நடத்த படுவாரா அல்லது ராஜ வாழ்க்கையா என்று தெரிய வில்லை.

முன்னால் (ex) அமைச்சர் அரங்கநாயகம் ஒரு முறை சொன்னாராம். அவர் ரயிலில் தூத்துக்குடி சென்னை பயணம் செய்யும் பொழுது, மதுரை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டியில் அவர் இருக்கை தேடி வந்த ஒரு துணை வேந்தரும், பதிவாளரும் (இருவருமே முனைவர் பட்டம் பெற்றவர்கள்) காலில் விழுந்து பதவி நீட்டிக்க சொன்னராம். இதுதான் நமது பல்கலை கழக துணை வேந்தர்கள் பேராசிரியர்கள் நிலை.

இப்போது உள்ள கட்சி தாவி பதிவாளர் (இரத்தின சபாபதி,) ex சிந்தியா பாண்டியன் பற்றி கேட்கவே வேண்டாம்.

அரங்கநாயகம் அம்மா காலில் விழுந்தது வேறு கதை.

manasu said...

தண்டனை அனுபவிக்க போறாரா என்ன? இதுக்கு அடுத்து இருக்கு மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ,தலைமை
நீதிமன்றம்

நம்ம கோர்ட்டும்......................

Anonymous said...

//

தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் ஆட்சி நடந்தபோது - அவர்கள் வைத்திருந்த நீதிமன்றங்கள் மாதிரி இருக்கும்.
//

அப்ப தனி நாடு கேக்குறீங்களா அருள் ?

கருப்பு said...

//தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் ஆட்சி நடந்தபோது - அவர்கள் வைத்திருந்த நீதிமன்றங்கள் மாதிரி இருக்கும்.//

எப்படி எவனையாவது பிடிக்கலைனா உடனே அவனை தமிழன்னுக்கூட பாக்காம துரோகி பட்டம் கட்டி தூக்கிவிடுவதுதானே அவர்கள் தண்டனை! துரோகி பட்டம் கட்டிதானே அமிர்தலிங்கம்,நீலன் திருச்செல்வம் என பல போட்டி தலைவர்களை தீர்த்துகட்டினார்கள்.

இதோ, துரோகி பட்டம் கட்டி எப்படி காட்டுமிராண்டிதனமாக புலிக்கள் தமிழர்களை கொன்றார்கள் என டிபிஎஸ்.ஜெயராஜ் எழுதுகிறார்...

LTTE old timers remember a particular incident illustrative of Pottu Ammaan’s monstrous cruelty. A cadre from Nelliaddy called “Chandran” was suspected of being a traitor.About to be executed ,Chandran managed to run away after injuring a few cadres.

Pottu was furious. The escapee was caught and brought to Pottu who trussed him up in a sack tied to a rope on a tree. The sack was dashed again and again by Pottu himself on the tree trunk.He then battered the sack with an iron rod. Chandran was reduced to pulp.

இப்படி மனிதனை சாக்கில் போட்டு கட்டி அடித்து கூழாக்கி கொல்லும் காட்டுமிராண்டிதனம் சிங்களவனுக்கூட நிகழக்கூடாது- தமிழனுக்கு ஏற்பட்டிருக்கிறது புலிகளால்!

இந்த நீதியையா இங்கு எதிர்பார்க்கிறார் அருள்?

(அதென்னமோ தெரியல டோண்டு பதிவு போட்ட உடனே அருள் வேட்டிய தூக்கிட்டு ஓடி வந்தர்றாரு -- ஆப்பு வாங்க :-) )

அருள் said...

manasu said...

// //தண்டனை அனுபவிக்க போறாரா என்ன? இதுக்கு அடுத்து இருக்கு மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ,தலைமை
நீதிமன்றம்

நம்ம கோர்ட்டும்......................// //

ஹா..ஹா.. அப்புறம் வேற என்ன நடக்கும்?

ஏற்கனவே இருக்கிற நீதிபதிங்கதான் அடுத்துவர நீதிபதிகளையும் தேர்ந்தெடுப்பாங்கன்னா - அத்திம்பேர்கள்தான் தொடர்ந்து பதவிக்கு வருவாங்க. அநியாயங்கள் தலைமுறை தலைமுறையா தொடரத்தான் செய்யும்.

நீதிபதிகள் நியமனம் நியாயமான முறையில் நடக்கும் வகையில் All – India Judicial Service (AIJS) அமைக்கப்பட்டு, அனைத்து நீதிமன்ற பதவிகளும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறாதவரை இந்தியாவில் 'நீதியை' எதிர்பார்ப்பது மூடத்தனம்.

http://lawmin.nic.in/ncrwc/finalreport/v2b1-15.htm

Anonymous said...

//நீதிபதிகள் நியமனம் நியாயமான முறையில் நடக்கும் வகையில் All – India Judicial Service (AIJS) அமைக்கப்பட்டு, அனைத்து நீதிமன்ற பதவிகளும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறாதவரை இந்தியாவில் 'நீதியை' எதிர்பார்ப்பது மூடத்தனம்.//

Hope, Arul would not expect punishment too in quota system.

Anonymous said...

I think - the subject is being deviated by Arul - Just to say 'Athimbers' are only there in Judgements!

PROBLEM IS: The provisions in the 'LAW' is not enough to 'PUNISH'. Its NOT about the JUDGES or their CASTES!!

ARUL can sharpen/enhance his thoughts - just to see atleast 0.1% away from CASTE SYSTEM. Or else - he will find that his purpose of writing will go useless in due course.

-Anony1

அருள் said...

Anonymous said...
// //
//நீதிபதிகள் நியமனம் நியாயமான முறையில் நடக்கும் வகையில் All – India Judicial Service (AIJS) அமைக்கப்பட்டு, அனைத்து நீதிமன்ற பதவிகளும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறாதவரை இந்தியாவில் 'நீதியை' எதிர்பார்ப்பது மூடத்தனம்.//

Hope, Arul would not expect punishment too in quota system.
// //

இது ஒரு வெட்கம் கெட்டத்தனமான கருத்து. ஏனெனில், ஏற்கனவே சாதி மதம் பார்த்துதான் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன் என்பதை சச்சார் குழு அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.

இந்தியாவில் மக்கள்தொகை அளவை விட சிறையில் வாடும் இஸ்லாமியர்கள் அளவு அதிகம்:

குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் இஸ்லாமியர் மக்கள்தொகை 10.6%. ஆனால் சிறையில் வாடும் இஸ்லாமியர் அளவு 32.4%.

குஜ்ராத் மாநிலத்தில் இஸ்லாமியர் மக்கள்தொகை 9 %. ஆனால் சிறையில் வாடும் இஸ்லாமியர் அளவு 25 %.

கருநாடக மாநிலத்தில் இஸ்லாமியர் மக்கள்தொகை 12.23 %. ஆனால் சிறையில் வாடும் இஸ்லாமியர் அளவு 17.5 %.

இதற்கெல்லாம் காரணம் - இஸ்லாமியர்கள் அதிகமாக குற்றம் செய்கிறார்கள் என்பது அல்ல: மாறாக, அதிகமாக தண்டிக்கப்படுகிறார்கள் என்பதே காரணம்.

Anonymous said...

அருளு,

வட தமிழகத்தில் சிறையில் வாடும் வன்னியர்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லையா சச்சார் கமிட்டி ?
--
//
இது ஒரு வெட்கம் கெட்டத்தனமான கருத்து.
//

வெறும் 2% இருக்கும் பார்ப்பானர்கள் 100% பேரையும் சிறையில் அடைக்கவேண்டும், நாடு கடத்தவேண்டும், நாட்டைவிட்டு விரட்டவேண்டும் என்று சொல்லும் ஆள் நீர்...9-10% இருக்கும் முசுலீம்கள் 20-25% சிறையில் அடைக்கப்படுவது பற்றி நீங்கள் பேசுவது வெட்கங்கெட்ட செயல் தான்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது