சமீபத்தில் 1967-ல் வந்த படம் பாமா விஜயம். அதில் வரவு எட்டணா செலவு பத்தணா எனத் துவங்கும் பாடலையும் மறக்கவியலுமோ? அதை முதலில் கேட்டுவிட்டு பதிவுக்குப் போகலாமா?
சற்றே இருங்கள், அதன் வீடியோவும் கிடைத்து விட்டது (மூணாவது வீடியோ). அவாவாளுக்கு பிடிச்சமாதிரி போட்டுப் பாத்துக்கோங்கோ.
அது சரி இப்போ அதுக்கென்ன எனக் கேட்கிறான் முரளி மனோஹர். காமன்வெல்த் விளையாட்டுகள் என வரப்போகும் கூத்துக்கான பூர்வாங்க சொதப்பல்கள் என்னை இப்பதிவைப் போட வைத்துவிட்டன.
சொதப்பல்கள்:
1. காமன்வெல்த் விளையாட்டு பளு தூக்கும் அரங்கின் கூரை தனது சொந்த எடையைக்கூட தாங்கமுடியாது இடிந்து விழுந்தது.
(இடிவதற்கு பூர்வாங்க நிலையின் படமாக இருக்குமோ)?
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்த மைதானத்தில் பளு தூக்கும் போட்டிக்கான உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த திறப்பு விழா முடிந்த சில மணி நேரங்களில் பளு தூக்கும் அரங்கின் மேற் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது போட்டி அமைப்பாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே நிதி முறைகேடு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள நிலையில் பளு தூக்கும் அரங்கின் கூரை இடிந்தது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து இடிந்த கூரையின் பகுதியை சரி செய்யும் பணி மத்தியப் பொதுத்துறை நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அரங்கில் மழை நீர் கசிவும் உள்ளது.
காமன்வெல்த் போட்டிக்கான அனைத்து மைதானங்களையும் கட்டி முடிப்பதற்கான “கெடு” நேற்றுடன் முடிந்தது. ஆனால் ஸ்டேடியம் பணி இன்னும் முழுமையாக தயாராக வில்லை. முக்கிய போடடிகள் நடைபெறும் நேரு ஸ்டேடியம் கட்ட ரூ.90 கோடி செலவிடப்பட்டது.
2. இதுவரை எங்குமே கேள்விப்பட்டிராத வகையில் பல பொருட்களை மிக மிக உயர்ந்த வாடகைக்கு எடுத்துள்ளனர் காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்கள்.
உதாரணமாக, உடற்பயிற்சி செய்ய உதவும் டிரெட்மில் கருவிகளை கிட்டத்தட்ட ரூ. 10 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனராம். அதாவது ஒரு டிரெட் மில்லின் வாடகை கட்டணம் இது. இப்படி பல டிரெட்மில்களை ஒன்றரை மாதத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அதேபோல ஒரு ரெப்ரிஜிரேட்டர் வாடகை ரூ. 42,000 என பல ரெப்ரிஜிரேட்டர்களை எடுத்துள்ளனர். இது 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபிரிட்ஜ் ஆகும்.
லண்டனில் உள்ள புகழ் பெற்ற ஹாரோட்ஸ் கடைக்குப் போனால் ஒரு டிரெட்மில் அதிகபட்சம் ரூ. 7 லட்சத்திற்கு வாங்க முடியும். இந்தியாவில் ரூ. 1 லட்சத்திற்கும் சற்று கூடுதலான விலைதான் இருக்கும். ஆனால் பல லட்சம ரூபாய் பணத்தை தேவையல்லாமல் வாடகைக்கு என்ற பெயரில் விரயமாக்கியுள்ளனர்.
அதேபோல இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் கல்மாடி உள்ளிட்டோருக்காக சேர்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு சேருக்கான வாடகைத் தொகை ரூ. 8 ஆயிரமாம். இவ்வளவு வாடகை கொடுத்து எடுக்கப்படும் சேரில்தான் கல்மாடி உள்ளிட்டோர் அமர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் இதெல்லாம் நிச்சயம் தேவை. அப்போதுதான் சர்வதேச தரம் இருக்கும் என்கிறார்கள் போட்டி அமைப்பாளர்கள்.
அதானே, இதைத்தான் “வாடகை சோஃபா இருபது ரூபா, விலைக்கு வாங்கினால் முப்பதே ரூபா” என பாமா விஜயத்தில் பாடியிருப்பார்களோ?
இன்னும் தோண்டத் தோண்ட ஊழல்கள். எல்லாம் நமது வரிப்பணமே. அதை வைத்துத்தான் தங்கள் ஊர்களிலுருந்து நகரத்துக்கு வர ரயில் டிக்கெட் கூட எடுக்கவியலாத வறுமையில் இருந்த சிலர் இப்போது பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாகியுள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
5 comments:
அரசியல் ல இதெல்லாம் சகஜமப்பா
Very nicely pointed out, the scam involved in this matter.
But, the bit question, What do we (common / general public) do?
ஆருயிர் அருள்,
ஸ்டேடியத்தைக் கட்டிய பொறியாளர்கள் அத்தனை பேரும் பார்ப்பான்கள் என்ற உண்மையை உலகுக்கு போட்டு உடைக்க வருக ! வருக !
//அதை வைத்துத்தான் தங்கள் ஊர்களிலுருந்து நகரத்துக்கு வர ரயில் டிக்கெட் கூட எடுக்கவியலாத வறுமையில் இருந்த சிலர் இப்போது பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாகியுள்ளனர்.//
Pun Intended :-)
மன்மோகன் சிங் தன வீட்டில் கவலையுடன் அமர்ந்திருக்கிறார்.சுற்றியும் மனைவி,மக்கள்.
மகள் கேட்கிறாள்:
அப்பா,BCCI 500 கோடி,Games 200 kodi,
spectrum 15000 கோடி,இப்படி வரலா று காணாத ஊழல் நடப்பதை பார்த்துகொண்டு நீங்க எப்படி சும்மா இருந்தீங்க?
MMS: கஷ்டமா தாம்மா இருந்திச்சு! ஆன்ன ஊழல பண்றவங்களில் ஒருத்தன்,இவர் ரொம்ப நல்லவர்டா ,நாம் எவ்வளவு அடித்தாலும் காட்டிகொடுக்க மாட்டார்டா ன்னு சொல்லி சொல்லியே கையை கட்டிட்டான் மா..(அழுகிறார்)
Post a Comment