இன்று ஒரு ஃபோன்கால் வந்தது. எம்.எஸ்.சி படித்த ஒருவர் பேசினார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு தேவை என்றார். நான் விஷயம் என்ன எனக்கேட்டதற்கு அவரது பிறப்புச் சான்றிதழாம், அதை ஸ்பானிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டுமாம். அதற்கு முன்னோடியாக அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்தால் பிறகு ஸ்பானிய மொழிபெயர்ப்புக்காகும் என்பது அவரது கூற்று.
எனக்கு ஒரே ஆச்சரியம். பிறப்புச் சான்றிதழ் என்பது சில வரிகளே உள்ள ஒரு ஆவணம். அதை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க இந்த எம்.எஸ்.சி. படித்தவருக்கு தெரியாதாம். இந்த அழகுக்கு ஸ்கூலில் தமிழில்தான் படித்திருக்கிறார். காலேஜில் பாடங்கள் ஆங்கிலத்தில். இவரால் இது முடியாது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
மேலே ஸ்பெயினில் எப்படி படிக்கப் போகிறார் எனக் கேட்டதற்கு அவர் போகுமிடத்தில் ஆங்கிலத்திலேயே சொல்லித் தருவார்களாம். இருக்கட்டும் ஸ்வாமி. ஆனால் இந்த சிறு காகிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துப்பில்லாதவர் என்னத்த படிச்சு, கிழிச்சுன்னுதான் சொல்லத் தோன்றுகிறது.
பலர் என்னிடம் இம்மாதிரி பிறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்ப்பை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்தான். ஆனால் அவை தமிழிலிருந்து நேரடியாக ஜெர்மன் அல்லது ஃபிரெஞ்சுக்கு மாற்றப்பட்டவை. அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அதே சமயம் தமிழிலிருந்து ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புக்காக என்னைக் கேட்பது பெரும்பாலும் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்துதான். அங்கு இருக்கும் ஸ்ரீலங்கா அகதிகளுக்காக அந்தந்த நாட்டின் படிவங்கள் தமிழுக்கு மார்றப்பட வேண்டியுள்ளன. ஃபிரான்ஸ் ஜெர்மனியிலிருந்து வருபவை தனி.
வேறு சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கு தொழில்முறை பெயர்ப்பாளர் தேவை என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்பதிவை நான் இட்டதன் நோக்கமே தமிழகத்தின் இதயத்தில் ஒரு புது தலைமுறை தமிழும் காலி ஆங்கிலமும் காலி என்ற நிலைக்கு வந்துள்ளது. அவர்கள் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் பெற எடுத்துக் கொண்ட ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு பற்றி கேட்கவே வேண்டாம்.ஒரேயடியாக வாஷ் அவுட்தான்.
நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் சமீபத்தில் 1954-லிருந்து 1962 வரை படித்த காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் தலா 48 மாணாக்கர்களை கொண்ட மொத்தம் 10 செக்ஷன்களில் ஒன்றில் மட்டும் ஆங்கில மீடியம், மீதி எல்லாவற்றிலும் தமிழ் மீடியம். இப்போது அதே ஹிந்து உயர்நிலை பள்ளீயில் நிலைமை கிட்டத்தட்ட தலைகீழ் என கேள்விப்படுகிறேன்.
என்னைப் போன்றவர்களுக்கு இதனால் நல்ல மொழிபெயர்ப்பு வாய்ப்புகள் கிட்டும் என்றாலும் தமிழக இளைஞர்கள் தற்கால நிலை என் மனதை உறுத்துகிறது.
இத்தருணத்தில் தமிழகப் பள்ளிகளில் தமிழின் நிலை என்னும் எனது பதிவிலிருந்து சிலவரிகளை இங்கு தருவேன்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது ஒரு கசப்பான ஆனால் ஒத்துக் கொள்ளவேண்டிய உண்மையே. இந்த நிலை ஏன் என்பதை பார்ப்போம்.
முதல் காரணம் தமிழில் நல்ல பாடநூல்கள் வெளிவராததே. நான் 1962-ல் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது இருந்த நிலையைக் கூறுவேன். ஒன்பதாம் வகுப்புவரை தமிழிலேயே படித்து வந்த நான் பத்தாம் வகுப்பில் பொறியியலை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டபோது ஆங்கில மீடியத்துக்கே செல்ல வேண்டியிருந்தது. பொறியியல் பாடங்களுக்கேற்ற தமிழ் பாட நூல்கள் இல்லை என்பதுதான் காரணம். பொறியியல் எடுத்துக் கொள்ளாதவர்கள் கூட காம்போசிட் கணிதத்தை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டியிருந்தது. இதற்கும் அதுவே காரணம்.
இன்னுமொரு காரணம் மதிப்பெண்கள் அளிக்கும் முறை. என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழில் 60 மதிப்பெண்கள் போட்டாலே விசேஷம் என்ற நிலை. ஆனால் வடமொழி எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் சுலபம். பிற்காலத்தில் இந்த சாதகமான தன்மை ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு பாடங்களுக்கும் வந்தது. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிகளில் கண்ராவியான முறையில் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் கற்பவர்கள் அவற்றை பிற்காலத்தில் சுலபமாக மறந்து விட்டனர். அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. அவர்களுக்கு வேண்டியது நல்ல மதிப்பெண்கள். அவற்றின் மூலம் நல்ல கோர்ஸுகளில் இடம் கிடைத்தால் போதும். இது பற்றி பிறகு. ஆனால் தமிழில் இம்மாதிரி ஆகாது, ஏனெனில் அது நமது தாய்மொழி.
இப்போது நாம் தமிழைப் பார்ப்போம். யுத்தகால அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாயமாக சாய்சில் இருக்க வேண்டும். தமிழில் மதிப்பெண்கள் வழங்குவதில் தாராளம் காட்டப்பட வேண்டும். தமிழாசிரியர்கள் தங்களை நக்கீரன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வது நிற்க வேண்டும்.
தமிழாசிரியர்களும் சீனியாரிட்டி அடிப்படையில் தலைமை ஆசிரியர்களாக வரவேண்டும். இது முக்கியம். பதவி வந்தாலே மரியாதையும் வரும்.
மற்றப்படி தமிழ் மீடியத்தை கட்டாயமாக்கவேண்டும் என்பது இப்போதுள்ள நிலையில் ப்ராக்டிகல் இல்லைதான். படிப்பதற்கு தேவையான அளவில் மாணாக்கர்கள் வர வேண்டும், பாட நூல்கள் பல தமிழில் வேண்டும், இத்யாதி, இத்யாதி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
27 comments:
தற்போது தமிழாசிரியர்கள் ஜோக்கர்கள் போல. அவர்கள் பீரியட் ஃப்ரீ பீரியட். டமில் வால்க குரூப் தான் ஜாஸ்த்தி இப்போது..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
மாணவர்கள் தமிழில் இருந்து விலக காரணமாக இருப்பவைகளாக நான் நினைப்பது
மனப்பாடங்களின் தொல்லை ஒருபுறம், இலக்கணங்கள் ஒருபுறம், வரலாறு, சுய சரிதை சமாச்சாரங்களை எல்லாம் தமிழில் வைத்து இந்தத் தொல்லை போதாதென்று ஆசிரியர் என்ன நினைக்கிறார், ஆசிரியரின் பார்வையில் இதை விளக்குக, ஆசிரியர் ஏன் இதை இப்படிச் செய்தார்? ஐயோ! யாரவது மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எப்போதாவது கேட்டதுண்டா?
படைப்புகளையே படிக்கும் கட்டாயத்தில் வைக்கப்படும் மாணவர்களை படைக்கச் சொல்லி ஊக்குவிக்கும் முறையற்ற பாடங்கள். கூடவே உர்ரென்று சீரியசாக இருக்கும் தமிழ் ஆசிரியை.
இப்போது நடத்தப் படங்களில் பல பாடங்களைத் தூக்கி விட்டு, சிறுவர் இலக்கியங்கள்(அப்படி கொஞ்சமேனும் இருக்குமே) கொடுத்து தேர்வு முறை எல்லாம் இல்லாமல் சுதந்திரமாக படிக்க விட்டு விமர்சிக்க அனுமதித்து, அது போல நீங்களும் எழுதிபாருங்கள் என்று ஊக்கம் கொடுத்தல் ஒழிய தமிழுக்கு சங்கு தான். ஆங்கிலத்துக்கும் இதே பாணியை பின்பற்றல்லாம்.தப்பில்லை.
விருட்சம் அவர்களின் கருத்தை முழுதும் வழி மொழிகிறேன்.
எனக்கு எல்லாம் தமிழ் மீது அலர்ஜி, வெறுப்பு ஏற்படக் காரணம் எனக்கு அமைந்த தமிழ் ஆசிரியர்களே. இத்தனைக்கும் எனது தமிழ் ஆசிரியர்கள் MA MEd, PHD
புரியாமல் மனப்பாடமாய் மதிப்பெனுக்காக படிக்க வைத்தனர் , திருக்குறள், ஏழாம் உருபும் பயனும் உடன் டோக்க தொகை, ஈறு கேட்ட எதிர்மறை பெயர் எச்சம் போன்றவை. நானும் தேர்வில் தமிழில் 90 kku மேலே. ஆனால் எல்லாம் மனப்பாடம்.
வேலைக்கு வந்த பிறகு தான் தமிழ் மீது ஆர்வம் வந்தது- காரணம் சுஜாதா, பாலகுமாரன்.
இங்கு வலை உலகில் கூட சில தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்களின் வலைப்பதிவு உள்ளது. அவர்களின் பதிவு படிக்க சுவாரஸ்யம் இருப்பதே இல்லை, அதிக பின்னூட்டங்களும் இல்லை.
I also endorse Virutcham's 2nd para-
எனது கல்லூரி காலத்தில், எங்கள் ஆங்கில வகுப்பு அப்படிதான்- ஆங்கில பீரியடு முழுதும் நாங்கள் நூலகம் சென்று விட வேண்டும், பேராசிரியர் ஆங்கில ஆசிரியர்கள், இலக்கியவாதிகள் இருபது பெயர்/ அறுபது புத்தக பட்டியல் கொடுப்பர், முதல் மூன்று நாட்கள் அறிமிகம் கொடுத்தார் ஒவ்வொரு ஆசிரியர், புத்தகம் பற்றி.
அதில் இருந்து நாம் (ஒவ்வொரு மாணவரும் அவர் விருப்பம் போல) புத்தகதி தேர்வு செய்து ஆசிரியரிடம் அறிவித்து விட்டு , வாசிக்க படிக்க வேண்டும்.(student has to inform the professor, not to seek approval/permission)
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இன்டெர்னல் தேர்வு, பின்னர் செமஸ்டர். He took so much pain to prepare 40 question papers, each student will have different
question paper.
இறுதியில் ஒரு மாணவர் கூட ஆங்கிலத்தில் பெயில் ஆகா வில்லை, இத்தனைக்கும் பெரும்பான்மை மாணவர்கள் பள்ளியில் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள்.
We (I) owe to that Englsih professor for lifetime. In that library class he wont come and supervise. He gave us full freedom. By this method, he not only taught us English but taught Delegation, non-micro managing....
தமிழை சாக அடிப்பது / அல்லது சாவை நோக்கி எடுத்து செல்வது பள்ளி, கல்லூரி தமிழ் ஆசிரியர்களே.
தொலைக்காட்சி அறிவிப்பாளர்களோ , மும்பை/கேரளா திரைப்பட பாடகர்களோ அல்ல.
ஈரோடு, கோவை, திருப்பூர் பதிவர்கள் கல்லூரிகளில் வலைப்பதிவு பட்டறை/அறிமுகம் நடத்துவதில் எழுத்து திறமை வளர்கிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வம் கண்டிப்பாக வளரும் மாணவர்களிடத்தில். அதற்காக அந்த பதிவர்களுக்கு (ஈரோடு கதிர், பரிசல், வெயிலான்...) என் நன்றிகள்..
இரண்டு கழகங்களும் கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்ப் பாடத் திட்டத்திற்காக உருப்படியாக
ஏதும் செய்யவில்லை. ஆட்சியில் இருப்போர் தங்கள் குடும்ப வாரிசுகளை ஆங்கிலக் கல்வியில்
படிக்க வைத்துவிட்டு, பாடத் திட்டத்தில் கையை விரித்து விட்டார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், பா ம க நடத்திய 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்று ஆரம்பித்தார்கள்.
ஆனால், அன்புமணி ராமதாஸ் தனது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்ததைக் கண்டு
நாடே சிரித்தது.
தேன் மழை (1967 ) திரைப்படத்தில் சோ கூறும் வசனம் : இந்தக்காலத்தில் யார் B .A ? தமிழும் சரியாகத் தெரியாது,
ஆங்கிலமும் வராது வேறு எந்த மொழியும் பிடிக்காது - அவன்தான் B A
///எனக்கு ஒரே ஆச்சரியம். பிறப்புச் சான்றிதழ் என்பது சில வரிகளே உள்ள ஒரு ஆவணம். அதை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க இந்த எம்.எஸ்.சி. படித்தவருக்கு தெரியாதாம். இந்த அழகுக்கு ஸ்கூலில் தமிழில்தான் படித்திருக்கிறார். காலேஜில் பாடங்கள் ஆங்கிலத்தில். இவரால் இது முடியாது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
மேலே ஸ்பெயினில் எப்படி படிக்கப் போகிறார் எனக் கேட்டதற்கு அவர் போகுமிடத்தில் ஆங்கிலத்திலேயே சொல்லித் தருவார்களாம். இருக்கட்டும் ஸ்வாமி. ஆனால் இந்த சிறு காகிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துப்பில்லாதவர் என்னத்த படிச்சு, கிழிச்சுன்னுதான் சொல்லத் தோன்றுகிறது.//
திரு டோண்டு நீங்கள் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளித தெளித்து விட்டீர்கள். இங்கு தமிழ் ஆங்கிலம் தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் மொழி பெயர்க்க முடியும். அந்த அறிவு இருக்கிரது...
ஆனால், இது மாதிரி birth Certificate, மற்றும் வேறு மொழியில் இருக்கும் ஆவனங்களை அரசாங்கம் குறிப்பிட்ட இடத்தில தான் (Certified and accredited by the Government)நாங்கள் கொடுக்க வேண்டும். அது தான் செல்லும். நீங்கள் மொழி பெயர்த்தலும் இந்த அரசாங்கம் ஒத்துக்க கொள்ளாது... unless you are certified and accredited by the U.S. Government...
எனது நண்பரின் குழந்தை பிறந்தது தில்லியில். அதை மொழி பெயர்க்க 51 dollars அவர் கட்டணமாக கொடுத்தார். ஏனென்றால் அந்த Agency is fully accredited and approved by the U.S. Government.
அது தான் செல்லும். மீதி மொழி பெயர்ப்புகள் சூXது துடைக்க கூட லாயக்கு இல்லை... இங்கு அமெரிக்காவில்...
@ஆட்டையாம்பட்டி
உங்களுக்கு தெரியாத ஒரு செய்தி. அக்க்ரெடிட்டெட் மொழிபெயர்ப்பு என்பார்கள். கிட்டப் போய் பார்த்தால் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்பின் கீழே ஒரு பிரமாணம் செய்திருப்பார்.
அதில் தான் பலான மொழியிலிருந்து பலான மொழிக்கு இத்தனை ஆண்டுகளாக செய்து வருகிறேன். எனது திறமைகள் இன்னின்ன. இந்த மொழிபெயர்ப்பு சரியானது என நான் உண்மையாகவே நம்புகிறேன் என்றெல்லாம் வாசகங்கள் இருக்கும். அதன் கீழே அவர் ஒரு நோட்டரி பப்ளிக் முன்னால் கையெழுத்திடுவார். நோட்டரி பப்ளிக்கும் அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த மொழிபெயர்ப்பாளர் தன்னெதிரேதான் இக்கையொப்பமிட்டார் எனக் கூறுவார். அதாவது இந்த மொழிபெயர்ப்பு சரியானதுதானா என யாரும் பார்ப்பதில்லை.
மொழிபெயர்ப்பாளரது ரப்பர் ஸ்டாம்ப், நோட்டரி பப்ளிக்கின் ரப்பர் ஸ்டாம்ப் என்றெல்லாம் பேப்பரில் அமர்க்களமாக இருக்கும். ஆனால் கிட்டிமுட்டி பார்த்தால் அர்த்தம் ஏதும் இல்லைதான்.
ஆனால் இப்பதிவில் நான் சொல்ல வந்ததே வேறு. வாடிக்கையாளருக்கு தேவை தமிழிலிருந்து ஸ்பானிஷ் மொழிமார்றம். அதற்கு முதல் படியாக தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க வேண்டும். அதை ஆங்கிலம்-ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளரிடம் கொடுப்பார். ஆக கடைசியில் நிற்பது ஸ்பானிஷ் மொழிபெயர்ப்புதான். ஆங்கில மொழிபெயர்ப்பை யாருமே பார்க்கப் போவதில்லை. ஆகவே எனது பதிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said....
// //தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க இந்த எம்.எஸ்.சி. படித்தவருக்கு தெரியாதாம். இந்த அழகுக்கு ஸ்கூலில் தமிழில்தான் படித்திருக்கிறார். காலேஜில் பாடங்கள் ஆங்கிலத்தில். இவரால் இது முடியாது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.// //
இந்தப்பதிவில் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள செய்தி - தமிழ்நாட்டு மாணவர்களுக்கு "ஆங்கிலம் சரியாகக் கற்பிக்கப் படுவதில்லை" என்பதுதான்.
இது முற்றிலும் உண்மை.
மற்றபடி தமிழ்வழிக்கல்வி, தமிழ் மீடியம், தமிழ் வாழ்க - என்பதெல்லாம் இதற்கு காரணம் அல்ல.
Tamil is a very pretentious language. It has two almost water-tight compartments: Spoken and Literary.
The spoken variety hardly cares for the literary one. Literary variety has Grammar as its major component. The Grammar is not used in spoken variety mostly. Who will care for ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்?
But students have to learn it in order to get marks.
Robert Caldwell said that the two separate entitities in Tamil is not new. It is as ancient as the birth of grammar itself. தமிழர்கள் எப்போதுமே இலக்கியத்தமிழ், பொதுத்தமிழ் (பேச்சுத்தமிழ்) எனப்பிரித்தே தம் மொழியை வளர்த்தனர் என்றார்.
He further observed that Tamils resorted to poetic form in all their written works - even in medicines, receipes etc. - because it helped memorisation. All things had got to be memorised as there was no printing at the time. However, they had no need for poetic form in speech.
Teach only the relevant grammar and leave the rest to those who study the language for their profession like pulavar pattam.
The grammar of English is highly practicable. It is used. The beauty or utility of Enlgish is due to its bigger use of idioms and phrases rather than textual grammar. Idioms and Phrases are not part of Grammar proper there, although grammar books publish them as appendices.
Idioms and phrases in Tamil are used but mostly in spoken vareity of Tamil. It is not given importance in Tamil grammar books.
The best way to promote Tamil is to curb the tendency of being pretentious and to lay stress on its utilatarian parts - such as how it is used or can be better used in daily life and in professions.
The dominance of literary fellows - as if they are the only guardians of the language - should go.
English has no pretension. The English have vibrant literature past and present. Yet, literature is not oppressive there. The men of letters do not attempt to hog the limelight there.
பதிவாளர்களே கொஞ்சம் நல்லா தமிழ் எழுதத்தெரிந்தவுடனே மண்டக்கனத்தோட அலையறாங்க இங்கே இல்லையா?
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு உங்களால் மொழிபெயர்க்க முடியாதா என்று நீங்கள் அவரிடமே கேட்டீர்களா இல்லையா ?
அவருக்கு முத்திரை இடப்பட்ட மொழிபெயர்ப்பு தேவை என்பதற்காக மட்டுமே வந்ததாகச் சொன்னாரா ? அப்படி இல்லாத பட்சத்தில் திராவிட ஆட்சி இன்னும் வாழ வாழ்த்திவிட்டுப் போகவேண்டியது தான். ஏதோ நம்மால ஆனது.
அது தானே, எங்கடா காணோமேன்னு பாத்தேன். வந்துட்டான்யா ஜோமலக்கத்தோலிக்கப்பாதிரி.
தமிழ் ஏன் இன்னும் வாழ்கிறதுன்னு இங்கிலீஸ்ல சொல்லிட்டாருய்யா. கொடுங்கய்யா தூக்கி. அவர்டு நோபல் பரிசு.
திரு.ஜோ,
தமிழ் மட்டுமல்ல, அனைத்து தெற்காசிய மொழிகளுக்கும் இந்த diglossia உள்ளது.
ஏன், கிரேக்கம், இலத்தீன், அரபு, சீன, நோர்வே மொழி, ஜெர்மன் மொழியில் கூட diglossia உள்ளது. இங்கிலீஸில் diglossia இல்லையாக்கும்?
எழுத்து மொழி, பேச்சு மொழி என்று இருப்பது ஒன்றும் புதிதல்ல. அது ஒரு குறையுமல்ல.
கால்டுவெல்லின் காலணா பிரயோசனமில்லாத கட்டுக்கதையெல்லாம் நம்பினதுனாலத் தான் இன்னிக்கு தமிழ் செத்துகிட்டு இருக்கு. நீரும் ஒம்ம சிலுவை தூக்கி கத்தோலிக்கப் பன்னாடை குரூப்பும் மட்டும் கால்டுவெல்லின் கல்லறையை நோண்டவும்.
Sir,
You are are 500% correct.
BTW, How much did you charge :)for the "translation" ? :)
I am also one of the ill-educated person. But I can see very few students among this herds of people, who have correctly approached school education and reaping the benefits today.
Thanks for your post. Hopefully,it will make many parents to guide their children better.
Respectfully,
venkat
//Dondu :ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிகளில் கண்ராவியான முறையில் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் கற்பவர்கள் அவற்றை பிற்காலத்தில் சுலபமாக மறந்து விட்டனர். அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. அவர்களுக்கு வேண்டியது நல்ல மதிப்பெண்கள். //
முற்றிலும் உண்மை. என் சித்தியின் மகள் ஃப்ரெஞ்சில் 198 வாங்கியதை இன்னும் என் சித்தி "அவளுக்கு ஃப்ரெஞ்ச் ரொம்ப நல்லா வரும்" என்று (12 வருடங்கள் தாண்டியும்) சொல்வதை கேட்டு அழுவதா சிரிப்பதா என்று சிந்திப்பேன்.
//
சமீபத்தில் 1954-லிருந்து 1962 வரை படித்த காலத்தில்
//
அகக....
Please read.
http://idlyvadai.blogspot.com/2010/08/3082010.html
You may like it.
My friend, a Goan Catholic priest Fr Jerome Diaz once told me that Tamil lacks adequate number of alphabets to communicate different sounds. In Hindi, for e.g. you have five k sounds, similarly five each for v, t, etc. He is now no more. He said he served some time in Santhome Basilica at Chennai before ending his long Church career at Mumbai as head of St John's orphanage Mahim.
In English, the alphabets comined with other alphabets give the different sounds.
When I was serving in North in CBCI, Hindi speaking people used to wonder how Tamil manages without the different sound making letters! They did not have such wonder about Malayalam or Telugu, because these languages have liberally allowed Sanskrit to creat various sounds; and, today the Malayalam is 50 per cent Tamil and 50% Sanskrit.
I said Tamil makes use of கிரஹந்த எழுத்துகள் to communicate different sounds. Tamil is therefore not fully adequate.
Will Tamil zealots accept that? They wont. Blind love is fanaticism. It hampers the growth of the language.
So, only a foreigner has to come to say that. We are thankful to them.
The F sound is impossible to communicate in Tamil. Cho Ramasamy resorted to ஃ to communicate that sound, in his Thuglak. I read the magazine during the 70s. At the time, he started that. The magazine also began then. I was in Nagercoil attached to St Xavier's Church. We enjoyed reading his satires and cartoons. I remember the first cartoon was two donkeys speaking, which was printed on the front cover.
Is it (ஃ) still being used by him? Dondu Raghavan, the regular Thuglak reader may perhaps tell us here.
BTW, Tamil alphabets originally do not have ஃ. But we find in school primars the letter is printed as the last letter in Tamil alphabets. Who introduced that?
I think it is the Most Reverend Jesuist Father Constantine Besky, popularly known as Veeramaamunivar who found the lacuna and filled it by inventing ஃ He learnt Tamil in Gurukulam style from the brahmin teacher of Sinthupoondhurai (Tirunelveli) Supradeepak kaviraayer.
Still I am not sure. Can anyone confirm or deny it? If you deny, you should say who introduced that letter in Tamil: dont forget!
Anonymous said...
// //கால்டுவெல்லின் காலணா பிரயோசனமில்லாத கட்டுக்கதையெல்லாம் நம்பினதுனாலத் தான் இன்னிக்கு தமிழ் செத்துகிட்டு இருக்கு.// //
தமிழ் சாகிறது, சாகும் என்றெல்லாம் சொல்வது, சும்மா 'தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகத்தான். நடைமுறையில் தமிழ் சாகும் என்கிற பேச்சிற்கே இடமில்லை.
தமிழ்நாட்டில் மன்னராட்சி காலத்தில் சமற்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு கிடைத்த முன்னுரிமை ஒருபோதும் தமிழுக்கு கிடைத்தது இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் அரசில் ஆங்கிலம், இப்போது ஆங்கிலம், இந்தி - இசையில் தெலுங்கு, வழிபாட்டில் சமற்கிருதம் என்கிற அன்னிய ஆதிக்கம்தான் நீடிக்கிறது.
ஆனால், இதனாலெல்லாம் தமிழ் அழிந்துவிடாது. காரணம் - காலகாலமாக தமிழ் மொழி மக்களின் மொழியாகத்தான் இருந்துவருகிறது. ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற மொழியாகவோ ஆன்மீக ஆதிக்க மொழியாகவோ இருந்தது இல்லை.
மக்களின் மொழியாக இருப்பதால்தான் இன்று உலகில் பேசப்படும் 6909 மொழிகளில் தமிழ் 18 ஆவது இடத்தில் உள்ளது.
நீங்கல் சொலவது மிக சறி
Sir
It is nothing to do with teachers or grammer.
If I complete a course in Tamizh, who will give me a job?
Do we have enough reaserch papers in Tamizh / science journal in Tamizh? Simple to leave a comment to you I have to search for Tamizh unicode, type it with difficulty and post it. Will that be so easily possible?
If I am right Japanese continue to have their reaearch knowledge only in Japanese and not in English.
I agree that we were ruled by British but what stopped us promoting Tamizh in last 63 years.
//Jo - How Tamil manages without the different sound making letters//
Tamil grammar is different.
ka sound - is normally used at the starting of a word, if it is needed at the middle of a word it goes with "ik"
ha sound - can be only be used in the middle of a word.
ga sound - can be only be used in the middle of a word.
example :
Kanavu
kaaham
Thangam
Pakkam etc.
We live in tropical country, we do not need to worry about wasting energy in talking. So Tamil design is based on using, mainly tong for words.
But the colder climate people use less energy to conserve body heat, while talking. They voice sounds different from us. So the claim we speak loudly.
Few more things.
1. Tamil is one of the six classical languages apart from Sanskrit, Latin, Greek, Mandarin forgot the other one.
2. Tamil language uses less than 5 character per word.
3. It is mathematically designed.
4. More than 2000 years old, English and Hindi is less than 700 years old.
5. We have mainly 30 letters. The remainders are derived from those 30 letter. "Vuyir & Mei". That is soul and body. When soul and the body combines we get the life form. So beautifully coined words. But, I am sad to say that my children are not learning Tamil at least they can speak now (?). By brother always jokes, if my children come back to India they can easily get a TV presenter job due to their Tamil.
Sridhar
//I said Tamil makes use of கிரஹந்த எழுத்துகள் to communicate different sounds. Tamil is therefore not fully adequate.//
ஆகவே, இதனால் சொல்வது என்னவென்றால், உலகத்தில் உள்ள 1000 அல்லது அதற்கு மேற்ப்பட்ட மொழிகளுக்கும் உள்ள எல்லா "சத்தங்களுக்கு" ஏற்ப அந்த pseudo (போலி) அறிவு ஜீவி சொன்னா மாதிரி தமிழில் இன்னும் நிறைய எழுத்துக்கள் கொண்டு வரவேண்டும். அது தான் சரியும் கூட...
அதே மாதிரி சமஸ்க்ரிததிலும் உலகத்தில் உள்ள 1000 அல்லது அதற்கு மேற்ப்பட்ட மொழிகளுக்கும் உள்ள "சத்தங்களுக்கு" ஏற்ப இன்னும் நிறைய எழுத்துக்கள் கொண்டு சமஸ்க்ரிததிலும் வரவேண்டும். கொண்டு வருவீர்களா? அது தான் சரியும் கூட. இதற்க்கு அந்த pseudo (போலி) அறிவு ஜீவி இதற்க்கு ஒன்னும் சொல்ல மாட்டார்!!! அது தான் சம்ச்க்ரிததின் மீது உள்ள பாசம்!!!!
எல்லாத்துக்கும் ஆங்கிலம் ஆங்கிலம் என்று கூவும் அண்பர்களே! வெள்ளைக்காரன் என்னைகாவது 26 எழுத்துக்களை தமிழை மாதிர் மாற்றிநானா? இந்த மாதிர் அறிவு கெட்ட கூமுட்டைகளுக்காக மாற்றியிருக்கானா. அவன் அறிவாளி. தமிழன் ஒரு முட்டாள்.
தமிழர்களே சிந்தியுங்கள்.
வேற மொழியில் உள்ள சத்தத்திற்கு தமிழை மாற்ற வேண்டுமாம். அதவாது செருப்புக்கு (சமஸ்க்ரிததிர்க்கு) ஏற்ப காலை வெட்டிக் கொள்ள வேண்டுமாம்.
தமிழர்களே மறுபடியும் சிந்தியுங்கள்...
//Ambi - அதவாது செருப்புக்கு (சமஸ்க்ரிததிர்க்கு) ஏற்ப காலை வெட்டிக் கொள்ள வேண்டுமாம்.//
//ஆனால், இது மாதிரி birth Certificate, மற்றும் வேறு மொழியில் இருக்கும் ஆவனங்களை அரசாங்கம் குறிப்பிட்ட இடத்தில தான் (Certified and accredited by the Government)நாங்கள் கொடுக்க வேண்டும்.//
These comments shows the attitude of people.
1. Oppose any message comes from bramin. But the message came from Jo.
2. The second comment take it granted, that other people are ignorant of the accreditary business.
Good work.
//Jo said: BTW, Tamil alphabets originally do not have ஃ. But we find in school primars the letter is printed as the last letter in Tamil alphabets. Who introduced that?// If I remember correct, there has been info abt this letter in tholkaappiyam or agathiyam itself.. There are a series of poems that explain how to pronounce letters of Tamil. And the poet says, ஃ has to be pronounced with ur bottom of the toungue touching the Mel Annam and the impact has to be felt in ur head...
I stand by what I said.
Anyone can translate any document. No one bothers if it is some unimportant newspaper reports, clippings, etc
Yes, no questions asked but when it comes to translating documents of importance such as college degrees and transcripts it has to go through particular accredited agencies (I don't know about India) for translation approved by the respective bodies. Universities of repute would only accept those translations.
Similarly legal documents need to be translated from other languages (if they are presented as evidences) into English when the litigation is in this country (i.e., United States). Attorneys of both parties would also take a "second Opinion" from another accredited agency to ensure the authenticity of the documents.
I don't want to go any further as one can google with key words such as translator, accreditation., etc...
I am talking about the procedure in the United Sates. In India, it may be a different story altogether.
@ஆட்டையாம்பட்டி அம்பி
அதென்ன தச்வறாகவே புரிந்து கொள்வது என்றே கங்கணம் கட்டி வந்துள்ளீரா? அதுதான் எழுதியிருந்தேனே ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் ஸ்பானிஷ் மொழிபெய்ர்ப்பு என்னும் நோக்கத்துக்காகவே ஆங்கில மொழிபெயர்ப்பு கோரப்படுகிறது என.
பிறகு சொன்னதையே சொன்னால் என்ன அர்த்தம்? அந்த ஆளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
The last one is about translation and accreditation in the U.S ONLY, and the procedures adopted here.
The last one is with respect to the United States. Hope you would try to understand now.
Post a Comment