8/28/2010

மனம்போன போக்கில் சிந்தனைகள்

விஜயநகர மன்னர் எதையோ பார்த்து எதையோ நினைத்து அப்பாஜியிடம் ஒருவார்த்தை கூற, அதை தானும் பார்த்து சரியானபடி முடிவு எடுத்த அப்பாஜியின் கதையை நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

இப்படித்தான் நம் மனம்போகும் போக்கை ஆராய்ந்தால் நாமே ஆச்சரியப்படுவோம். நாட்டிய பேர்வழி பற்றி ஜெயமோகன் எழுதிய பதிவின் சுட்டியை என் தளத்தில் பிடித்து மீண்டும் படித்து ரசித்தபோது என் மனம் என்னையறியாமலேயே எனக்குத் தெரிந்த மற்றும் நான் கேள்விப்பட்ட பத்மினிகள் பற்றி நினைக்க ஆரம்பித்தது. திடீரென சிதம்பரம் பத்மினியும் நினைவுக்கு வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் சிதம்பரம் அண்ணாமலை நகரில் பத்மினி என்னும் பெண்ணுக்கு நடந்த கொடுமை பற்றியும், அதன் விளைவாக சில போலீஸ்காரர்கள் தண்டிக்கப்பட்டது பற்றியும் படித்துள்ளேன். திடீரென நேற்று அது நினைவுக்கு வந்தது. அது ஏன் என்பதற்குள் போகும் முன்னால் பத்மினியின் கதையையும் பார்த்து விடுவோமே.

இது பற்றி தேடியபோது இந்த பழைய உரல் கிடைத்தது.

சிதம்பரம் பத்மினி கற்பழிப்பு வழக்கு : போலீசாருக்கு சிறைத்தண்டனை ஊர்ஜிதம்
சென்னை, நவ.29.

1992 - ம் ஆண்டு மே 29 - ம் தேதி திருட்டு வழக்கு குறித்து விசாரிப்பதற்காக நந்தகோபால் என்பவரை சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் அழைத்துச் சென்றனர். பலவந்தமாக அடித்து அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

மே 31 - ம் தேதி போலீஸ் காவலில் இருந்த அவருக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார் அவரது மனைவி பத்மினி. அப்போது சேலையைக் களைத்து அவரைப் போலீசார் அவமானப்படுத்தினர்.

அதையடுத்து விசாரணைக்காக மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பத்மினியை ஜூன் 2 - ம் தேதி அதிகாலை பல போலீஸ்காரர்கள் கற்பழித்தனர். நந்தகோபால் முன்பே இச்சம்பவம் நடந்தது. இதனால் மிகுந்த வேதனையில் இருந்த நந்தகோபால் போலீஸ் லாக்கப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜூன் 3 - ம் தேதி இறந்து கிடந்தார்.

இவ்வழக்கை மாற்றி எழுத போலீசார் முயற்சித்தனர். பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து பத்மினி கற்பழிப்புச் சம்பவம் தொடர்பாக 11 போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்.

இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்கள் உள்பட 6 போலீசாருக்கு கீழ்க்கோர்ட் வழங்கிய தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

பத்மினியின் மன்வுறுதி பாராட்டுக்குரியது. ஆனால் வேறு ஒரு விஷயமும் நடந்தது. கணவனை இழந்த இந்தப் பெண்மணி மறுமணமும் செய்து கொண்டார். அவர் அவ்வாறு செய்து கொண்டதும் அவருக்கு ஆதரவாக இருந்த ஒரு பெண்மணி தனது ஆதரவு நிலையை மாற்றிக் கொண்டதாகவும் படித்தேன். அதாவது இவர் விதவையாகவே இருந்தால் ஆதரவு தெரிவிக்கலாம், இனிமேல் தேவையில்லை என நினைத்து கொண்டார் போலும்.

அதென்னவோ தெரியவில்லை, பல தருணங்களில் கஷ்டப்படும் ஒருவருக்கு உதவி செய்பவர்கள் அந்த ஒருவர் கஷ்டம் நீங்கி நல்ல நிலைக்கு வரும்போது ஒருவித காழ்ப்புணர்ச்சியுடன் அவரை நோக்குகின்றனர். அந்த ஒருவர் கஷ்டம் அனுபவிப்பது அப்படியே தொடர வேண்டும், தாம் அவருக்கு உதவி செய்யும்போது தாம் எத்தனை பெரிய மாமனிதர்கள் என தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளலாம் என்றெல்லாம் கருதுகிறார்களோ?

வேறு ஒரு தருணத்தில் விஸ்வநாதன் ஆனந்த் பற்றி எண்ணும்போது அவர் இந்தியரா என கொக்கிபோட்டு நிறுத்திய அதிகாரியின் மோட்டிவ் என்னவாக இருக்கும்? தங்கள் அமைச்சகத்தை ஆனந்தும் அணுகி வேண்டிக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவராக அவர் இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவும் மனித இயல்புதான். ஆனால் என்ன ஆயிற்று, அவர் டாக்டர் பட்டமே தேவையில்லை என ஒரேயடியாக புறக்கணிப்பார் என அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போல. இப்போது கபில் சிபல் அசடு வழிவதைவிட வேறு மார்க்கமே இல்லை.

இன்றைய கல்கியில் (05.09.2010 தேதியிட்ட இதழ்) ஞாநி கருணாநிதிக்கு பதில் அளித்ததை படித்தபோது என் மனம் போன போக்கில் விட்டேன். கலைஞர் டோண்டு ராகவனின் பதிவுகளை படிக்கிறார் என்ற எண்ணம் வந்த கதையை இங்கு வர்ணிக்கிறேன்.

தன் வாரிசுகள் எல்லாம் திரையுலகுக்கு வருவதை எதிர்த்து தினமணியில் கார்ட்டூன் போட்ட மதி என்பவருக்கு பதிலளிக்கும்போது பிருத்விராஜ் கபூர் குடும்பத்தை இழுத்துள்ளார். கூடவே தன் குடும்பத்தினர் முன்னுக்கு வருவது பூணூல் போட்டவர்களுக்கு பிடிக்காது என்றும் பொரிந்துள்ளார்.

ஞாநி அவருக்கு இந்த பாயிண்டுகளை வைத்து பதில்ளித்துள்ளார்.

1. மதி பூணூல் போட்டவரல்ல.
2. பிருத்விராஜ் கபூர் குடும்பம் தன் சொந்த முயற்சியால்தான் முன்னுக்கு வந்தது. முதன் மந்திரியாகவெல்லாம் இருந்து அந்த பதவியின் துர் உபயோகத்தால்இதுவரை எந்த வசனகர்த்தாவும் வாங்கியறியாத 50 லட்சம் ரூபாய் லெவலுக்கெல்லாம் அக்குடும்பம் வாங்கவில்லை. அவர்கள் வாங்கியது முழுக்க முழுக்க அவரது திறமைக்குத்தான்.
3. திரையுலக சங்கத் தேர்வுகளில் தில்லுமுல்லு செய்ததில்லை கபூர் குடும்பத்தினர்.
4. குறுக்கே நூல் போட்ட சாவியைத்தான் தனது பத்திரிகையான குங்குமத்துக்கு கலைஞர் ஆசிரியராக நியமித்தார். முதல் அட்டைப்படத்தில் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் படத்தைத்தான் போட்டார்.
5. இன்னும் பல உதாரணங்கள் தந்துள்ளார், வேண்டியவர்கள் கல்கி வாங்கி படித்துக் கொள்ளட்டுமே.

அது சரி அதற்காக கலைஞர் உன் பதிவை படித்தார் என எப்படிச் சொல்லறே பெரிசு என கேட்கிறான் முரளி மனோகர். அதாவது நான் எந்தப் பதிவு போட்டாலும், அது எப்பொருளையுடையதாக இருந்தாலும் அருள் என்பவர் வந்து எல்லாவற்றுக்கும் பார்ப்பனரே - அதுவும் பூணூல் போட்டவர்களே- காரணம் எனக் கூறிவைப்பார். அவரது பின்னூட்டங்களைத்தான் கலைஞர் பார்த்திருக்கிறார் என நினைக்கிறேன், அதாவது என் மனம் அவ்வாறு எண்ணியதையும் கூறுவது இப்பதிவின் பொருளுட்குட்பட்டதே.

ஆக, கலைஞருக்கே ரோல்மாடலாகத் திகழும் அருள் என அழைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

20 comments:

அருள் said...

மிக்க நன்றி.

"கலைஞருக்கே ரோல்மாடலாகத் திகழும் அருள்" என்று போட்டுவிட்டீர். எனக்கு பயமா (!) இருக்கு...

(கலைஞரின் 'முரசொலி'க்கும் எனக்கும் 100 மீட்டர் தொலைவுதான் தூரம்.)

உங்க மனம் போகிற போக்குக்கு ஒரு அளவு இல்லையா?

சரி பூணூல் விஷயத்துக்கு வருவோம். சிதம்பரம் பத்மினி'க்கு கை கொடுத்து, பின் கை விட்ட மாதர் சங்கத்தின் உச்ச தலைவர்கள் - பூணூல் கூட்டத்து பெண்மணிகள் தான்.

பத்மினிக்காக போராடிய கூட்டத்தில் நானும் உண்டு. எனது பூர்வீகமும் சிதம்பரம் தான்.

virutcham said...

Got an error. so submitting again
திரு ராகவன் அவர்களுக்கு, இது பின்னூட்டமல்ல. இது ஒரு கோரிக்கை.

நாட்டார் தெய்வ வழிபாட்டை இந்துத்துவா அமைப்புகள், வைதீக முறைகள், அதை செய்யும் பிராமணர்கள், அழிப்பதாக அருள் வைத்த குற்றச்சாட்டுக்கு நீங்கள் ஒரு பதிவிட்டு பதில் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை.

எனக்கு எந்த இந்துத்துவா அமைப்புகள் பற்றியும் தெரியாது. வைதீக முறைகளோ பிராமணர்களோ இதில் என்ன பங்கை வகிக்கிறார்கள் என்றும் தெரியாது.

ஆனால் மேற்கூறியவற்றை எதிர்ப்பின் மைய்யப் புள்ளியாக வைத்து நாட்டார் வழிபாட்டு வழக்கங்களின் வேரில் வெந்நீர் ஊற்றுவது யார் என்பது மட்டும்புரிகிறது

அதை நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் தளத்தில் வெளியிடும் அளவு இந்தக் கருத்துக்களில் அர்த்தம் இருந்தால் வெளியிடவும் .

1 வைதீக முறைகளை எதிர்ப்பதாகச் சொல்லி நாட்டார் வழிபாடுகளையும் சத்தமில்லாமல் நிராகரித்து நாத்திகத்துக்கு இழுக்கும் கூட்டம் .
2 . தீமிதி போன்ற வழிபாட்டுச் சடங்குகளை காட்டுமிராண்டிச் செயல் என்று விவரிக்கும் தலைவர்கள்.
3 . ரமலான் காஞ்சி குடித்து மத சார்பற்ற தன்மையை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகள் யாரும் ஆடி மாசக் கூழ் குடிக்கச் சென்று இந்த வழக்கங்களை ஏற்றுக் கொண்டதாகக் காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
4 தமிழ் சினிமா - கிராமத்துக் கோவில் திருவிழாக்களை வன்முறைக் களமாக சித்தரிப்பது, கரகாட்டத்தை குத்துப் பாட்டு range க்கு காட்டுவது
5 தொ.கா - வைதீக முறைப்படி நடக்கும் கோவில்களைத் தேடித் தேடி நல்ல இசையோடு, அருமையான வர்ணனைகளோடு சொல்ல பிரபலங்களின் துணை கொண்டு அதன் சிறப்புக்களை ஒளிபரப்புவது ( தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ...)
அதே சமயம் நிஜம் டங் டங் டங்... நடந்தது என்ன ? டிங் டிங் டிங் என்று பல திகிலூட்டும் வர்ணனைகளோடு கிராமிய பழக்க வழக்கங்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்ற ரீதியில் உலகுக்கே காட்டுவது.
பத்திரிக்கைகள் - தொ.கா பாணியில் தான் இவையும்
6 சித்திரைத் திருநாளில் பஞ்சாங்கத்தை எதிர்ப்பதில் காட்டும் வீரத்தில் கொஞ்சமேனும் கிராமப்புறங்களுக்குச் சென்று தைத் திரு நாளில் அனைத்து தரப்பு மக்களை சாதி மத வித்தியாசமின்றி பொங்கல் வழிபாடு செய்ய வைப்பதில் காட்டியதாக தெரியவில்லை.
நாட்டார் வழிபாடுகளை கொச்சையாக விமர்சிக்கும் கிறித்தவ அமைப்புகள் புனைந்துள்ள தமிழனுக்குச் சிந்திக்கத் தெரியாது என்ற தோமாயக் கதைகளுக்கு உரை எழுதி ஏகபோக ஆதரவு தந்ததின் மூலம் நாட்டார் வழிபாட்டுக் கடவுளர்களையும், தமிழன் பெருமைப்பட்டு மகிழும் வள்ளுவனையும் தாரை வார்த்து இருப்பது.

சாதி வாரிக் கணக்கெடுப்பு மற்றும் அதனூடான அரசியல் மூலம் பரம்பரை பரம்பரையாக இந்த சாதியை அவர்கள் மேல்
ஒட்ட வைத்துக் கொண்டே இருப்பது. அதன் மூலம் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை விசிறி விசிறி அதை பிராமண சமூகத்தின் மேல் திருப்பிக் கொண்டே தான் பாதுகாப்பாக இருக்க கேடயாமாக பயன்படுத்துவது.

இது எல்லாம் போதாதென்று கிராமத்து திருவிழாக்களில் ரெக்கார்ட் டான்ஸ் வைத்து நடன வடிவங்களைக் கொச்சைப் படுத்தும் இந்த மக்களும் கூடக் காரணம்

இதைப் புரிந்து கொள்ளாமல் இவர்கள் போற்றும் இயக்கங்கள் இவர்களைக் இவர்களது வாழ்வாதாரத்தை மதிக்க வில்லை என்பதையே புரிந்து கொள்ளாமல் பிரச்சனையின் ஆணி வேரைப் புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பின் மைய்யப் புள்ளியில் தங்களது இன்றையப் பிரச்சனைக்கு சம்பந்தமில்லா விஷயங்களையே வைத்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பாரத்தால் எனக்கு இன்னும் இவர்கள் பல நூற்றாண்டுகள் இப்படியே இருக்கப் போகும் அறிகுறி தான்தெரிகிறது.

ஒசை said...

ஜனநாயகம் என்கிற பெயரில் மன்னராட்சி நடக்கிறது. நடந்து விட்டு போகட்டும். மன்னராட்சி எப்படி இருக்கும் என்று காண கிடைத்த ஒரு வாய்ப்பாக இதை எடுத்து கொள்ளலாமே.

Anonymous said...

It was President Secretariat which wanted HRD Ministry to proble Anand's nationality.

Bureaurcrats work by rule book. They cant work according to the importance of the applicants.

I mean, if the bureaucrat is true to his salt i.e true to his dharma of being a government officer.

As one person wrote in your earlier column, Anand cant claim exemption from government procedures.

You are seeking that. Then why cant Karunanidhi seek all kinds of exemption to his clan?

One rule there, one here!

hayyram said...

விருட்சம், பின்னூட்டத்தில் ஒரு பதிவே போட்டு விட்டீர்கள். சிறப்பான கருத்துக்கள். உண்மையும் கூட. நன்றி.

வஜ்ரா said...

இந்த அடுத்தவர்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் கூட்டத்தை என்றுமே நம்பக்கூடாது.

இப்படித்தான் தங்கள் போராட்டம் தொடரவேண்டும் (அதனால் வரும் வரும்படி தொடரவேண்டும்) என்பதற்காகவே அவர்கள் சங்கடத்தில் உள்ளவார்களை மேலும் சீரழிக்க பல வழிகளில் முயற்சிப்பார்கள்.

ஒரிஸாவில் என்.ஜி.ஓ க்கள் நிறைய பழங்குடிகளுக்காகப் போராடுவதாகச் சொல்லிவிட்டு எந்த ஒரு முன்னேற்றப்பாதைக்கும் முட்டுக்கட்டை போடுவது போல், நக்சலைட்டுகள் உட்பட. குஜராத்தில் டீஸ்டா செடல்வாத் என்ற "பாரத ரத்தினா" செய்வதும் அதுவே.

இஸ்ரேலை அழிக்கிறோம், ஊரைக்காலி செய்துவிட்டு படைகளுக்கு வழிவிடுங்கள் என்று சொல்லி பாலஸ்தீனர்களை சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கிய கூட்டமும் செய்வது அதுவே.

இவர்களை நம்பி யாருமே முன்னேறியதாக சரித்திரமே இல்லை.

வஜ்ரா said...

//
I mean, if the bureaucrat is true to his salt i.e true to his dharma of being a government officer.
//

Telling there is Indian bureaucrat that too in congress ruled government being true to his/her salt/dharma is itself an insult to our intelligence.

Anonymous said...

//பத்மினிக்கு போராடிய கூட்டத்தில் நானும் உண்டு?//

எது, அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலிலே கும்பலா பின்னால ஒளிஞ்சு நின்னு எட்டிப் பாத்தியே, அதைச் சொல்றியா ராசா?

உன் பில்டப்புக்கு ஒரு எல்லையே இல்லாம போய்டுச்சே. விட்டாக்க ஒபாமா பிரசிடெண்ட் ஆகுறதுக்க்காக போராடின ஆட்களில் நானும் உண்டுன்னு சொல்லுவ போலருக்கே!

Anonymous said...

திரு விருட்சம்,
//1 வைதீக முறைகளை எதிர்ப்பதாகச் சொல்லி நாட்டார் வழிபாடுகளையும் சத்தமில்லாமல் நிராகரித்து நாத்திகத்துக்கு இழுக்கும் கூட்டம் //
நீங்கள் சொன்னவற்றோடு கூட இதனையும் சேர்த்து கொள்ளவும் :
இந்த கிரீன் பீஸ், ப்ளூ கிராஸ் etc ., இவைகள் டார்கெட் செய்யும் பிரசினைகளை மற்றும் அபாயமாக சொல்லும் விஷயங்களை கவனிக்கவும்:
பொங்கலின் போது வைக்கப்படும் ஜல்லி கட்டு மற்றும் போகி இரண்டுக்கும் வேறு வேறு காரணம் சொல்லி தடை செய்யா போராட்டம்.....இதே அமைப்புகள் ஸ்பெயினில் நடக்கும் காளை சண்டை மற்றும் பல வேறு மதங்களை கொண்ட நாடுகளில் நடக்கும் கேக் த்ரோவிங், டொமாட்டோ ஸ்மாஷிங் etc ., போன்றவை ஏதும் தவறு இல்லை. முடிந்தால் அவைகளை சுற்றுலா முக்கியத்துவமாக கூறுவது.
தீபாவளி பட்டாசுகளால் சூழல் கேடு -
விநாயகர் சதுர்த்தி என்றால் சிலைகளை கடலில் கரைப்பதால் பிரச்சினை ( பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஒரு சாக்கு - கடலில் கொட்டப்படும் மற்ற கழிவுகளுக்கோ ஆயில் வேச்டுகளுக்கோ கணக்கு கிடையாது)

ஹிபோக்ரிட்ஸ்......

matravartai vazhi mozhigiraen...

ஆனால் மேற்கூறியவற்றை எதிர்ப்பின் மைய்யப் புள்ளியாக வைத்து நாட்டார் வழிபாட்டு வழக்கங்களின் வேரில் வெந்நீர் ஊற்றுவது யார் என்பது மட்டும்புரிகிறது

அதை நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் தளத்தில் வெளியிடும் அளவு இந்தக் கருத்துக்களில் அர்த்தம் இருந்தால் வெளியிடவும் .

1 வைதீக முறைகளை எதிர்ப்பதாகச் சொல்லி நாட்டார் வழிபாடுகளையும் சத்தமில்லாமல் நிராகரித்து நாத்திகத்துக்கு இழுக்கும் கூட்டம் .
2 . தீமிதி போன்ற வழிபாட்டுச் சடங்குகளை காட்டுமிராண்டிச் செயல் என்று விவரிக்கும் தலைவர்கள்.
3 . ரமலான் காஞ்சி குடித்து மத சார்பற்ற தன்மையை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகள் யாரும் ஆடி மாசக் கூழ் குடிக்கச் சென்று இந்த வழக்கங்களை ஏற்றுக் கொண்டதாகக் காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
4 தமிழ் சினிமா - கிராமத்துக் கோவில் திருவிழாக்களை வன்முறைக் களமாக சித்தரிப்பது, கரகாட்டத்தை குத்துப் பாட்டு range க்கு காட்டுவது
5 தொ.கா - வைதீக முறைப்படி நடக்கும் கோவில்களைத் தேடித் தேடி நல்ல இசையோடு, அருமையான வர்ணனைகளோடு சொல்ல பிரபலங்களின் துணை கொண்டு அதன் சிறப்புக்களை ஒளிபரப்புவது ( தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ...)
அதே சமயம் நிஜம் டங் டங் டங்... நடந்தது என்ன ? டிங் டிங் டிங் என்று பல திகிலூட்டும் வர்ணனைகளோடு கிராமிய பழக்க வழக்கங்கள் மற்றும் கடவுள் நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்ற ரீதியில் உலகுக்கே காட்டுவது.
பத்திரிக்கைகள் - தொ.கா பாணியில் தான் இவையும்
6 சித்திரைத் திருநாளில் பஞ்சாங்கத்தை எதிர்ப்பதில் காட்டும் வீரத்தில் கொஞ்சமேனும் கிராமப்புறங்களுக்குச் சென்று தைத் திரு நாளில் அனைத்து தரப்பு மக்களை சாதி மத வித்தியாசமின்றி பொங்கல் வழிபாடு செய்ய வைப்பதில் காட்டியதாக தெரியவில்லை.
நாட்டார் வழிபாடுகளை கொச்சையாக விமர்சிக்கும் கிறித்தவ அமைப்புகள் புனைந்துள்ள தமிழனுக்குச் சிந்திக்கத் தெரியாது என்ற தோமாயக் கதைகளுக்கு உரை எழுதி ஏகபோக ஆதரவு தந்ததின் மூலம் நாட்டார் வழிபாட்டுக் கடவுளர்களையும், தமிழன் பெருமைப்பட்டு மகிழும் வள்ளுவனையும் தாரை வார்த்து இருப்பது.

சாதி வாரிக் கணக்கெடுப்பு மற்றும் அதனூடான அரசியல் மூலம் பரம்பரை பரம்பரையாக இந்த சாதியை அவர்கள் மேல்
ஒட்ட வைத்துக் கொண்டே இருப்பது. அதன் மூலம் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை விசிறி விசிறி அதை பிராமண சமூகத்தின் மேல் திருப்பிக் கொண்டே தான் பாதுகாப்பாக இருக்க கேடயாமாக பயன்படுத்துவது.

இது எல்லாம் போதாதென்று கிராமத்து திருவிழாக்களில் ரெக்கார்ட் டான்ஸ் வைத்து நடன வடிவங்களைக் கொச்சைப் படுத்தும் இந்த மக்களும் கூடக் காரணம்

இதைப் புரிந்து கொள்ளாமல் இவர்கள் போற்றும் இயக்கங்கள் இவர்களைக் இவர்களது வாழ்வாதாரத்தை மதிக்க வில்லை என்பதையே புரிந்து கொள்ளாமல் பிரச்சனையின் ஆணி வேரைப் புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பின் மைய்யப் புள்ளியில் தங்களது இன்றையப் பிரச்சனைக்கு சம்பந்தமில்லா விஷயங்களையே வைத்துக் கொண்டிருக்கும் இவர்களைப் பாரத்தால் எனக்கு இன்னும் இவர்கள் பல நூற்றாண்டுகள் இப்படியே இருக்கப் போகும் அறிகுறி தான்தெரிகிறது.

Anonymous said...

திரு விருட்சம்,
//1 வைதீக முறைகளை எதிர்ப்பதாகச் சொல்லி நாட்டார் வழிபாடுகளையும் சத்தமில்லாமல் நிராகரித்து நாத்திகத்துக்கு இழுக்கும் கூட்டம் //
நீங்கள் சொன்னவற்றோடு கூட இதனையும் சேர்த்து கொள்ளவும் :
இந்த கிரீன் பீஸ், ப்ளூ கிராஸ் etc ., இவைகள் டார்கெட் செய்யும் பிரசினைகளை மற்றும் அபாயமாக சொல்லும் விஷயங்களை கவனிக்கவும்:
பொங்கலின் போது வைக்கப்படும் ஜல்லி கட்டு மற்றும் போகி இரண்டுக்கும் வேறு வேறு காரணம் சொல்லி தடை செய்யா போராட்டம்.....இதே அமைப்புகள் ஸ்பெயினில் நடக்கும் காளை சண்டை மற்றும் பல வேறு மதங்களை கொண்ட நாடுகளில் நடக்கும் கேக் த்ரோவிங், டொமாட்டோ ஸ்மாஷிங் etc ., போன்றவை ஏதும் தவறு இல்லை. முடிந்தால் அவைகளை சுற்றுலா முக்கியத்துவமாக கூறுவது.
தீபாவளி பட்டாசுகளால் சூழல் கேடு -
விநாயகர் சதுர்த்தி என்றால் சிலைகளை கடலில் கரைப்பதால் பிரச்சினை ( பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஒரு சாக்கு - கடலில் கொட்டப்படும் மற்ற கழிவுகளுக்கோ ஆயில் வேச்டுகளுக்கோ கணக்கு கிடையாது)

ஹிபோக்ரிட்ஸ்......

Matravartai vazhimozhigiraen.....

ஆனால் மேற்கூறியவற்றை எதிர்ப்பின் மைய்யப் புள்ளியாக வைத்து நாட்டார் வழிபாட்டு வழக்கங்களின் வேரில் வெந்நீர் ஊற்றுவது யார் என்பது மட்டும்புரிகிறது......//...

//இது எல்லாம் போதாதென்று கிராமத்து திருவிழாக்களில் ரெக்கார்ட் டான்ஸ் வைத்து நடன வடிவங்களைக் கொச்சைப் படுத்தும் இந்த மக்களும் கூடக் காரணம்

dondu(#11168674346665545885) said...

@அருள்
எதையும் அரைகுறையாக செய்யாதீர்கள். மெனக்கெட்டு மாதர் சங்கத்தினர் ஜாதியை கூறினீர்.

அப்படியே பத்மினியை கற்பழித்து தண்டனை பெற்ற போலீசாரின் ஜாதியையும் கூறிவிடுங்களேன். அதைக் கூறாது நீங்கள் பம்முவதைப் பார்த்தால் அவர்கள் வன்னியர்களாகத்தான் இருக்க வேண்டும்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு அவர்களே,
தவறுதலாக ஒருமுறைக்குமேல் ஒரே கமெண்டை சொல்லிவிடேன். முடிந்தால் ஒரு முறைக்கு மேல் உள்ளவற்றை நீக்கிவிடவும்

அருள் said...

Anonymous said...

// //உன் பில்டப்புக்கு ஒரு எல்லையே இல்லாம போய்டுச்சே.// //

பில்டப்புக்கு எந்த தேவையும் இல்லை.

பத்மினி விவகாரத்தின் போது, அப்போது பா.ம.க மாவட்ட செயலாளராக இருந்த திரு. கோவி. மணிவண்ணன் என்பவர்தான் இதற்காக முன்நின்று போராடினார். அவருக்கு உதவியாக நானும் வேலை செய்தேன். (உங்களுக்கு ஏதேனும் ஆதாரம் வேண்டுமென்றால் அவரிடம் கேளுங்கள்!)

சிதம்பரம் நகர் முழுவதும் காவல்துறை கற்பழிப்பைக் கண்டித்து நான் விளம்பரங்கள் எழுதினேன்.

'இராமருக்கு அணில் உதவியது' என்று காலகாலமாக நீங்கள் பேசவில்லையா? அதுபோல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

Anonymous said...

ஆனால் அணில் அப்பப்ப இலங்கைக்கு நான் தான் பாலம் போட்டேன்னு சொல்லிக்குதா ?

அருள் said...

virutcham said...

// //நாட்டார் தெய்வ வழிபாட்டை இந்துத்துவா அமைப்புகள், வைதீக முறைகள், அதை செய்யும் பிராமணர்கள், அழிப்பதாக அருள் வைத்த குற்றச்சாட்டுக்கு நீங்கள் ஒரு பதிவிட்டு பதில் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை.// //

""தமிழ்நாட்டு மக்கள் திரளில் மிகப்பெரும்பான்மையினர் ஆகமங்கள் வழி நிற்கும் சைவ வைணவப் பெருஞ்சமயங்களின் எல்லைகளுக்கு உட்படாதவர் என்பது வெளிப்படை. மிகப் பழமையான வழிபாட்டு நெறிகளே அவர்களின் சமயமாக அமைகின்றன. இந்த மக்கள்திரளின் வாழ்நெறிகள், நம்பிக்கைகள், சடங்குகள் பற்றிய மரபுகளே இங்கு 'நாட்டார் மரபுகள்' என்று சுட்டப்படுகின்றன. தவிர்க்க இயலாதவாறு இந்நாட்டார் மரபுகளில் சிலவற்றை நிறுவன சமயங்களான சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு அவை ஏற்றுக்கொண்ட முறைகள் சமய நிறுவனங்களான பெருங்கோயில்களிலும் அக்கோயில்கள் தொடர்பான சடங்குகளிலும் காணக்கிடக்கின்றன.""

தொ. பரமசிவன், 'மாற்று மரபுகளும் தமிழ் வைணவமும்' என்கிற கட்டுரை, 'பண்பாட்டு அசைவுகள்' நூல், பக்கம் 166.

virutcham said...

//தவிர்க்க இயலாதவாறு இந்நாட்டார் மரபுகளில் சிலவற்றை நிறுவன சமயங்களான சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு அவை ஏற்றுக்கொண்ட முறைகள் சமய நிறுவனங்களான பெருங்கோயில்களிலும் அக்கோயில்கள் தொடர்பான சடங்குகளிலும் காணக்கிடக்கின்றன.""//

ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்கள் . அப்புறம் அழிக்கிறார்கள் என்றும் சொல்லுகிறீர்கள். என்ன தான் பிரச்சனை ?

virutcham said...

ஏகப்பட்ட குற்றச்சாட்டை சுமத்தி விட்டு அதற்கு பதில் சொல்லும் போது கருத்து சொல்லாமல் போனால் எப்படி.
இங்கே திரும்பக் கொடுக்கிறேன். உங்கள் பதில் என்ன ?

@Arul
// தமிழர்கள் என்றுதான் அழைக்க வேண்டும்.//

பாராட்டுக்கள். இது அவங்களுக்குத் தெரியுமோ?

// அவர் நாடார், இவர் முதலியார், மற்றவர் வன்னியர்//

அப்போ இது எதுக்கு ?

இதை வைத்துக் கொள்ள இட ஒதுக்கீடு ரீதியான கரணங்கள் இருக்கு. சரி. வச்சுக்கோங்க.

மாதா கோவிலில் பொட்டு திருநீறுடன் ...
இதுக்கு காரணம் உங்கள் நிலையில் மத நல்லிணக்கமாக இருக்கலாம். ஆனா அவங்க அதை வைப்பதற்கு காரணம் அதாவது மேரியை மாரியாக்கி வைப்பதற்குக் காரணம் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.

உங்களுக்கு நாட்டார் வழிபாடு உசந்தது. சரி. அவங்களுக்கு அது சாத்தான் வழிபாடு என்பது உங்களுக்குத் தெரியும் தானே.

ஒன்னு புரியுது. அதாவது எதையும் இன்னார் சொன்னால் ok . அந்த இன்னார யார்?
வழங்குவது தமிழ் மறை என்றால் வழங்கியது சிவன் என்றாலும் ok .

சொல்லி வைத்தவன் யார் என்பது பற்றி அக்கறை இல்லை.

தமிழனுக்கு சிந்திக்க சொல்லித் தந்தது தாமஸ் என்றாலும் சொன்னது வெள்ளைக்காரன் என்றால் வள்ளுவனையும் தாரை வார்த்து விடுவது double ok

//மாறாக, நாங்கலெல்லாம் இந்து, அவர்கள் இசுலாமியர் - என்று நடைமுறையில் மக்கள் தங்களை வேறுபடுத்தி பார்ப்பது இல்லை.//

இங்கே நாங்க மட்டும் என்ன அக்கம் பக்கம் சண்டை போட்டுகிட்டா இருக்கோம். எல்லா சாதியும் எல்லா மதமும் சந்தோஷமாத் தான் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு இருக்கோம்.
August 27, 2010 9:12 PM
virutcham said...

@Arul
நாட்டார் வழிபாடு செய்யும் தமிழ் மக்கள்அவர்களின் சாதிகள் மற்றும் இதே சாதி அடுக்குகளில் உள்ள பிற மத தமிழர்களுக்கும் ஒரே அடையாளம் மதம் தாண்டி தமிழன் என்பது. சரி. அவங்க தமிழ் கிறித்தவர், தமிழ் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் போது நீங்க தமிழ் நாட்டார் என்றோ இல்லை எதோ ஓன்று தமிழ் pre -fixed வைத்து சொல்லிக் கொள்வீர்கள்.
சரி.
இந்து என்ற இந்திய அடையாளத்தில் இருந்து தமிழன் என்ற பிராந்திய அடையாளத்தை விரும்புகிறீர்கள்.
சரி.
இப்போ தமிழ் நாடு இந்தியாவில் இருக்கலாமா கூடாதா? அதை சொல்லிடுங்க.
அப்புறம் தமிழ் நாட்டில் இருக்கும் பிற மாநிலத்தவரை என்ன செய்யலாம்? ஒரு வேலை நாட்டார் வழிபாடை செய்யும் தெலுங்கர்கள் உங்களுக்கு ஓகே வாக இருக்கலாம். மத்தவங்க?
இப்போ இட ஒதுக்கீடு என்பது கல்வியில் மட்டும் இல்லை விளையாட்டுத் துறை கலை என்று எல்லா மட்டத்திலும் வைத்துக் கொள்ளலாம். அதான் ஒன்லி தமிழ்ஸ் .

Anonymous said...

இந்த மேல்நிலையாக்கத்தின் இழப்புகள் என்ன ,சரியா தவறா என்பதெல்லாம் ஒரு பக்க அறிவுத்தள விவாதங்கள் மட்டுமே. குறிப்பாக மேலைநாட்டு கோட்பாடுகளால் அவை முன்வைக்கப்படுகின்றன. கிறித்தவ அமைப்புகள் இந்து மதத்தை ஓர் அழிவுசக்தியாக காட்ட அவற்றை பயன்படுத்துகின்றன. ஒட்டுமொத்த நாட்டார் பழங்குடி நம்பிக்கைகளையே வேருடன் கெல்லி வீசிய பின்னரே கிறித்தவம் பரவியது- பரப்பப்படுகிறது என்பதை மறைத்து இந்து மதத்தின் உள்ளிழுக்கும் போக்கை மகாக்கொடுமை என அவர்கள் சித்தரிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் மேல்நிலையாக்கம் தவிர்க்க முடியாததாக நிகழ்கிறது. அதை எவரும் திணிக்கவில்லை. அது ஈராயிரம் வருடங்களாக நிகழ்ந்து வரும் ஒரு இடைவிடாத சமூகச் செயல்பாடு. அது ஏன் நிகழ்கிறதென ஆராயவே முடியும். நிகழக்கூடாதென சொல்வதற்கு ஆய்வாளர் சமூகத்திற்கு நீதிபதி அல்ல.

http://www.jeyamohan.in/?p=8074

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது