இந்த இடுகையை போன பதிவின் தொடர்ச்சியாகக் கூட பார்க்கலாம்.
நான் அதில் கூறியது போல நம் வாழ்க்கையில் வரும் பல மாறுதல்களை சீரியல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம். இதை உல்டாவாக நோக்கினால் பழைய படங்கள் பார்க்கும்போது அக்காலகட்டத்தில் மக்கள் வாழ்க்கை பற்றி குன்சாக அறிந்து கொள்ளலாம். அதுவும் அவுட்டோர் ஷூட்டிங்களில் இதை நன்றாகவே பார்க்கலாம். ஆனால் இக்கருத்து சமூகப் படங்களுக்கே பொருந்தும், சரித்திரப் படங்களுக்கல்ல.
(வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் (ராஜா ராணிக் கதை) சுப்பையா குதிரையில் விரைந்து செல்ல தூரத்தில் ரோடில் ஒரு கார் விரைந்து செல்வது சில நொடிகளுக்கு ஃபிரேமில் வரும். மகாபாரதம் சீரியலிலும் பீஷ்மர் தன் அன்னை கங்கையைக் காண நதிக்கரைக்கு வரும்போது தூரத்தில் கார் செல்லும். ஆனால் இதெல்லாம் ஷூட்டிங்கின் குறைபாடுகள். ஆகவே அக்காலத்திலேயே கார்கள் இருந்தன என்றெல்லாம் கூறிப் படுத்தக் கூடாது).
சமீபத்தில் 1969-ல் வெளியான சிவந்தமண் படத்தையே எடுத்து கொள்வோமே. ஸ்விட்சர்லாந்திலிருந்து கதாநாயகி இந்தியாவில் இருக்கும் தன் அப்பாவுக்கு டிரங்க் கால் போடுவாள். அப்பா மகள் இருவருமே தொண்டை கிழியும் அளவுக்குக் கத்துவார்கள். அதுதான் யதார்த்தம். ஆனால் இப்போது? அம்மாதிரி காட்சிகளே வராதல்லவா? ஐ.எஸ்.டி. கால்கள் அடுத்தடுத்து அமர்ந்திருக்கும் ரேஞ்சில் அல்லவா கேட்கின்றன?
பல படங்களில் அக்காலத்தில் ஒரு காட்சி கிட்டத்தட்ட எப்போதுமே இருக்கும். தொழிற்சாலைகளின் கதவில் “வேலை காலி இல்லை” என்ற போர்டு தொங்கும். கதாநாயகன் எப்போதுமே எம்.ஏ. ஃபர்ஸ்ட் கிளாஸ் ஃபர்ஸ்டாகத்தான் இருப்பான். ஆனால், சில சோகப்பாடல்கள் பாடும் வரைக்குமாவது வேலை லேது.
ஆனால் உலகமயமாக்கம் வந்த சில ஆண்டுகளிலேயே தில்லிக்கருகே இருந்த நோய்டா தொழில் நகரில் பல தொழிற்சாலைகளின் கேட்டில் எந்தெந்த வேலைகள் காலியாக இருக்கின்றன என்ற லிஸ்டுகள் தெரிய ஆரம்பித்தன. அவை அப்படியே திரைப்படங்களில் வந்ததா என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும் பழைய “வேலை காலி இல்லை” போர்டுகள் கிடையாது என்பது மட்டும் நிஜமே. அப்படியே காட்டப்பட்டாலும் அக்காட்சி கடந்த காலத்தைக் குறிப்பதாகவே இருக்கும்.
முன்பெல்லாம் கதாநாயகன் ஒன்று இஞ்சினியராக இருப்பான் அல்லது டாக்டராக இருப்பான். ஆனால் இப்போதோ பல தொழில்களை அவற்றின் சங்கடங்கள் அனுகூலங்களுடனேயே காட்டுகிறார்கள்.
நான் முதலில் சொன்ன அவுட்டோர் ஷூட்டிங்கில் சென்னை போன்ற நகரங்களின் பழைய தோற்றத்தைக் காணலாம். உதாரணத்துக்கு நெஞ்சிருக்கும் வரை என்னும் படம், அறுபதுகளில் வந்தது. ஆனால் அதில் ஒரு சங்கடமும் இருந்தது. அக்கதையில் உழைப்பவர் வெற்றி என்னும் சிலை சென்னை பல்கலைக் கழகத்துக்கு எதிரே காட்டப்பட்டது. அச்சிலையோ 1959-ல்தான் நிறுவப்பட்டது. ஆனால் கதையோ அதற்கு முன்னால் நடப்பதாகத்தான் காட்டுவார்கள். அதை எப்படிக் கூறுகிறேன் என முரளி மனோகர் என்னைக் கேட்கிறான். சொல்கிறேன்.
“பூ முடித்தாள் பூங்குழலி” என்னும் பாட்டைக் கேட்டிருப்பீர்கள்தானே. அதில் நடுவில் இந்த வரிகள் வரும்:
“நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்
தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்”.
அதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பார்த்திப ஆண்டு 1945 ஏப்ரலில் தொடங்கி 1946 ஏப்ரலில் முடிவடைந்தது. ஆக, அக்காலத்தில் உழைப்பவர் சிலை எப்படி வரலாம்? இந்தக் கேள்வியை அக்காலத்தில் பலரிடம் நான் எழுப்பினேன். எனக்கு எப்படித் தெரியும் என்கிறர்களா? நானே பார்த்திப ஆண்டு பங்குனித் திங்களில்தான் பிறந்தேன் (ஏப்ரல் 4, 1946). பதில் கூறத் தெரியாது பலரும் ஆளைவிடப்பா எனச்சொல்லி எஸ்ஸானது வேறு விஷயம்.
அதே மாதிரி சமீபத்தில் 1961-ல் வெளியான “பார்த்தால் பசிதீரும்” ப்டத்தில் கதை 1946-47-ல் நடக்க, அதில் புத்தம் புதிய ஸ்டாண்டார்ட் ஹெரால்ட் காரைக் காட்டுவார்கள். இவை எல்லாமே தவறுகள்தான். சுப்பிரமணியபுரம் படத்தில் 1980/களை காட்ட மெனக்கெட்டது போலெல்லாம் அக்காலத்தில் படவில்லைஎன்றே கொள்ள வேண்டும்.
ஆனால் இப்போதெல்லாம் மேலே கூறிய குறைகளையும் கண்டுகொள்ள என்னைப் போன்ற பெரிசுகள் தவிர வேறு யாரும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
சமீபத்தில் 1959-ல் தமிழ்நாடு போலீசாரின் நூறாம் ஆண்டுநிறைவுக்காக அப்போதைய போலீஸ் கம்கிஷனர் பொன் பரமகுரு இயக்கி வெளியிட்ட “உங்கள் நண்பன்” என்னும் படம் காட்டப்பட்டது. அண்ணா மேம்பாலம் இப்போது இருக்கும் இடத்தில் ஜெமினி ரவுண்ட்டாணாவை காட்டுவது கண்கொள்ளாக் காட்சி. சென்னை எக்மோர் ரயில் நிலையம், தி.நகர் பனகல் பூங்கா பஸ் ஸ்டாப், அக்காலத்து லேலேண்ட் பஸ் ராயல் டைகர் என படம் முழுக்க அமர்க்களப்படுமே.
இதில் ஒரே ஒரு லிமிட்டேஷன் உண்டு. அதாவது அக்காலகட்டத்தில் பல ஷூட்டிங்குகள் ஸ்டூடியோவுக்குள்ளேயே எடுக்கப்பட்டன. ஆகவே அந்த வகையில் சமூக நிலையைக் கண்டறிவதும் சற்றே கடினமே.
பல கிராமப்புறக் காட்சிகள் போரூரில் எடுக்கப்பட்டவையாம். உதாரணத்துக்கு சமீபத்தில் 1978-ல் வெளியான “மனிதரில் இத்தனை நிறங்களா” என்னும் படம். இப்போது அக்காட்சிகளை போரூரில் காணவியலுமா?
ஆனால் சிலகாட்சிகள் மட்டும் எப்போதும் மாறவே மாறாது. எழுபதுகளில் வந்த அண்ணன் ஒருகோவில் படத்தில் ஒரு காட்சி. சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமில் டாய்லட்டுக்கு அருகே உள்ள பெஞ்சில் படுத்திருப்பார், கர்சீப்பால் மூக்கை மூடிக் கொண்டு. இப்போது முப்பது ஆண்டுகள் கழித்து அதே காட்சியை எடுத்தாலும் அதே மாதிரி மூக்கை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆக, சில விஷயங்கள் என்னவோ மாறவே மாறாதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
13 comments:
ஜெயா தொலைக் காட்சியில் தற்போது ஆரம்பித்து உள்ள சௌந்தரவல்லி நெடும் தொடர் இரட்டை இல்லை வாக்குக்களை எல்லாம் விரட்டி விடும். கலைஞர் ஆட்சி நீடிக்க சௌந்தரவல்லி மட்டுமே போதும் என்கிறார்களே. இது பற்றி உங்கள் கருத்து என்ன.
போன தேர்தலுக்கு காஞ்சி சங்கரச்சரியர்கள் கைது, இந்த தேர்தலுக்கு சௌந்தரவல்லி - திமுக விற்கு கை கொடுக்கும் என்கிறார்கள்.
//அதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? பார்த்திப ஆண்டு 1945 ஏப்ரலில் தொடங்கி 1946 ஏப்ரலில் முடிவடைந்தது. //
Oh!.. rightly pointed out.
BTW. "அபூர்வ சகோதரர்கள் (1989)", படத்தில் 'நாசர்' இறந்துவிட்டதாக காட்டப்படும் காட்சியில், 'நாசர்' மூச்சு விடுவது கழுத்தருகே மின்னல் வேகத்தில் வந்து போகும். இதெல்லாம் 'கவனக் குறைவே' ஆகும்.
Your observation and memory is amazing.
// அதே மாதிரி மூக்கை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆக, சில விஷயங்கள் என்னவோ மாறவே மாறாதுதான்.//
rightly said.
ரயில்வே ஸ்டேஷன் ல் மட்டும் இல்லை எல்லா பொதுக் கழிப்பிடங்களிலும் கூட இதே நிலை என்றே சொல்லலாம். இது கூட பரவாயில்லை. இவ்வளவு fees கட்டி பள்ளிக்கு அனுப்பறோம். அங்கேயும் அதே நிலை தான்.
பசங்க schoolல வாயை மட்டும் இல்லை ஐம்புலன்களையும் அடக்கக் கற்றுக் கொள்கிறார்கள்
//
ஆனால் சிலகாட்சிகள் மட்டும் எப்போதும் மாறவே மாறாது. எழுபதுகளில் வந்த அண்ணன் ஒருகோவில் படத்தில் ஒரு காட்சி. சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமில் டாய்லட்டுக்கு அருகே உள்ள பெஞ்சில் படுத்திருப்பார், கர்சீப்பால் மூக்கை மூடிக் கொண்டு. இப்போது முப்பது ஆண்டுகள் கழித்து அதே காட்சியை எடுத்தாலும் அதே மாதிரி மூக்கை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஆக, சில விஷயங்கள் என்னவோ மாறவே மாறாதுதான்.
//
என்ன சொல்ல வருகிறீர்கள்.
70 களில் மூச்சா போனால் நாறும். 2000 ல் மூச்சா போனால் ஜவ்வாது வாசனை வரணும் என்கிறீகளா ? :D
சமுதாயத்தின் இந்த கண்ணாடியையும் கவனியுங்கள்.
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது
"க்ளிக்" செய்து படியுங்கள்.
கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?
....................
"க்ளிக்" செய்து படியுங்கள்.
மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
…………………………………..
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.
புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?
"க்ளிக்" செய்து படியுங்கள்.
வேசிகள் அடங்காத காமத்துடன்
....................................................
//சமீபத்தில் 1969-ல் வெளியான சிவந்தமண் //
????
//ஆனால் அதில் ஒரு சங்கடமும் இருந்தது. அக்கதையில் உழைப்பவர் வெற்றி என்னும் சிலை சென்னை பல்கலைக் கழகத்துக்கு எதிரே காட்டப்பட்டது. அச்சிலையோ 1959-ல்தான் நிறுவப்பட்டது. ஆனால் கதையோ அதற்கு முன்னால் நடப்பதாகத்தான் காட்டுவார்கள். அதை எப்படிக் கூறுகிறேன் என முரளி மனோகர் என்னைக் கேட்கிறான். சொல்கிறேன்.
//
Murali Manohar!
Type 'Anachronism' in google; you will know.
@ அப்பாடா அருளை காணவில்லை, ஒரு வழியாகலீவு விட்டு விட்டார் போலும் ஒரே கவலையாக உள்ளது சார் எனக்கு
@ராகவேந்திரன்
கீழே உள்ள "கலர் டிவி, செல்பேசி மற்றும் பல உபகரணங்கள்" பதிவின் பின்னூட்டங்களில் பாருங்க.
அருள் சௌந்தரவல்லி நெடும் தொடர் பார்க்கிறீர்களா.
சினிமாவே பிராடு. தமிழ் சினிமா பெரிய பிராடு. சினிமாவை சினிமாவாகப் பார்க்கணும். எருமை நாயக்கன் பட்டியில் பள்ளிக் கூடத்திர்க்கு எதிரே கோவில் (இல்லாத போது) காட்டினா அதுமாதிரி உண்மையில் இல்லை என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
அப்படி எடுத்துக் கொள்ளுங்கள் உழைப்பாளர் சிலை காட்சியை.
இல்லை அது மாதிரி உண்மையாக இல்லாமல் எடுத்த ஆங்கிலப் படங்களில் உள்ளதை உங்களால் கண்டு பிடிக்க முடியும்மா?
சினிமாவில் பாட்டு பாடுவதும், அதுவும் மரத்தை சுற்றி ஓடிக்கொண்டு (மூச்சு வாங்காதா?); நோஞ்சான் நடிகர் 129 பேரை ஒத்த ஆளா அடிக்கறது; அணுகுண்டு தலையில் போட்டாலும் அரை மணி நேரம் பேசறது. இப்படி
Bullit என்ற ஆங்கிலப் படத்தில் இருந்தது ஒரு ரிலையே ரசினி படத்தில் சுட்டார்கள். அதுவும் இடது பக்க காரை ஓட்டுவது மாதிரி..
இதெல்லாம் பாக்கும் போது உங்களுக்கு ஒண்ணுமே தோணலியா?
இப்பொழுதெல்லாம் இந்த அனக்ரோனிசம் கண்டுபிடிக்க கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு பலர் திரிகிறார்கள்.
அப்படி ஒன்றைக்கண்டு பிடித்துவிட்டால் பிலாகில் போட்டு கிழித்து எரிந்துவிடுகின்றனர்.
ஆகவே தமிழ் படங்களிலும் ரொம்பவே மெனக்கெட ஆரம்பித்துவிட்டனர்.
மதரசாபட்டினம் அப்படி ஒரு மெனக்கெடலுக்கான உதாரணமே. ஆனால், அதில் கதையைவிட பிண்ணணிச் சம்பவங்கள் சுவாரஸ்யமாகிப் போய்விட்டது ஒரு கொடூரமே.
டோண்டு,
நீர் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்!!
நெஞ்சிருக்கும் வரை ஒரு Science Fiction/Fantasy படம்
இங்கு சொல்லப்படும் பார்த்திப ஆண்டு 2005-06 ஐ குறிக்கும்..
ஹி ஹி ஹி
Post a Comment