நடக்கும் என்பது நிச்சயமாகத் தெரிந்திருந்தாலும், எப்போது என்பது நிச்சயமில்லாமல் இருந்தது.
ராசா அதை ஆரம்பித்து வைத்து விட்டார் எனப்படுகிறது. பிரதமருக்கும் அப்போதைய நிதி மந்திரிக்கும் தான் செய்வது முதலிலிருந்தே தெரிய வந்தது என ராசா பூசனிக்காயை உடைத்து நல்ல துவக்கம் தந்திருக்கிறார்.
தில்லி அமர்க்களப்படுகிறது. இது சம்பந்தமாக சுப்பிரமணியம் சுவாமி சொன்ன சதவீதக் கணக்குகளும் முன்னால் வரும் என நம்புகிறேன். (ராசா, கருணாநிதி, சோனியா பங்குகள்).
ராசாவை முதலில் தோலுரித்துக் காட்டிய கோபி கிருஷ்ணா ஒரு செவ்வியில் கூறியதை நான் இங்கு கோட் செய்கிறேன்.
கேள்வி: 2-ஜி ஊழலை எப்போது கண்டுகொண்டீர்கள்?
விடை: Swan மற்றும் Unitech நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அமோக விலைகளுக்கு விற்றதுமே (4,500 கோடி மற்றும் `6,200 கோடி, செப்டம்பர் 2008-ல்). எங்கள் மூக்கு ஊழலை முகர ஆரம்பித்து விட்டது. அலுவலக தலைவர் நவீன் உபாத்யாயா என்னிடம் மேலும் தகவல்களை தேடி எடுக்குமாறு கூறினார். நல்லவேளையாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உள்ளும் புறமும் நன்றி அறிந்த ஒரு நம்பிக்கையான எட்டப்பர் கிடைத்தார். பிரதமர் ராஜாவின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்து ராஜாவிடமே என்ன நடக்கிறது எனக் கேட்டதாகவும் ஒருமுறை அந்த எட்டப்பர் கூறினார்.
மெதுவாக எட்டப்பர்மூலம் அமைச்சகத்தின் ஊழல்களின் பரிமாணங்கள் புலப்படத் துவங்கின. அன்னாட்களில் தான் தனக்கு முன்னால் இருந்தவர்கள் செய்ததையே தானும் செய்ததாக ராஜா பொய்யுரைத்து வந்தார். அந்த எட்டப்பரோ ராஜாவும் அவரது உறவினர்களும் பினாமி கம்பெனிகளில் செய்த முதலீடுகளை விளக்கினார். இந்த ஊழலின் பலன்கள் பல பெரிய நிறுவனங்கள், அரசியல்வாதிகள் லயசன் முதலைகள் ஆகியவருக்குத்தான் சென்றது என அவர் என்னிடம் சொன்னார்.
எனது எடிட்டருடன் பேசி அவரது ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே தான் மற்றத் தகவல்கலை தரவியலும் எனவும் இந்த எட்டப்பர் கூறினார். எடிட்டரும் அவ்வாறே ஒப்புதலைத் தர, தகவல்கள் சரிபார்ப்பு எட்டப்பரது அலுவலகத்திலும் வேறு பல இடங்களிலும் ரகசியமாக நடந்தது.
கேள்வி: எது உங்களது முதல் ஸ்டோரி, அதன் எதிர்வினைகள் என்ன?
பதில்: ஊழலின் அளவைப் பார்த்ததுமே ராஜாவின் ரியல் எஸ்டேட் பினாமிக் கம்பெனிகளின் விவரங்களை எடுத்தோம். ராஜாவின் தகுதிக்கு மீறிய சொத்து சேர்ப்பை வெளிக்கொணர முடிவு செய்தோம். சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் சந்தன் மித்ராவும் நவீன் உபாத்யாயாவும் சரிபார்த்தனர். 11 திசம்பர் 2008-ல் வெளியான முதல் ஸ்டோரியில் ராஜாவின் பிரதான ரியல் எஸ்டேட் கம்பெனியான Green House Promoters பற்றிய விவரங்களை கூறியிருந்தோம். மற்ற பினாமி கம்பெனியின் விவரங்கள் அடுத்துவரும் நாட்களில் வர ஆரம்பித்தன.
கே: எல்லாவற்றையும் நிறுத்துமாறு உங்கள் மேல் அழுத்தம் வந்ததா? எப்படி சமாளித்தீர்கள்?
ப: முதல் ரிப்போர்ட் வந்ததுமே எடிட்டர் சொன்னபடி நான் ராஜாவை சந்தித்தேன். அவரது கட்சியில் உள்ள அவரது விரோதிகள்தான் இதற்கு பின்னால் உள்ளனரா எனக்கேட்டு சில பெயர்களையும் கூறினார். அவரது தனிப்பட்ட சொத்து விவரங்கள் எனக்கு எப்படிக் கிடைத்தன என்று அவர் என்னை கேட்டார். அப்படியே ஆடிப்போயிருந்தார் அவர். எல்லாவற்றையும் நிறுத்துமாறு அவர் கேட்டார். நான் எடிட்டர் சொன்னதாலேயே அவரது வெர்ஷனைப் பெறவே அவரைப் பார்க்க வந்தேன், வேறு எதற்கும் இல்லை என்று அவரிடம் கூறிவிட்டேன். ராஜா என்னுடன் பேச ஒப்புக்கொண்டாலும் திரும்பத் திரும்ப நான் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். பல பெரிய நிறுவனங்களும் என்னிடம் அதையே கேட்டன. அதே நேரம் யாரும் என்னிடம் தவறாக நடந்ததாகவோ என்னை பயமுறுத்தியதாகவோ கூற மாட்டேன்.
அச்சமயம் ராஜா 3G ஏலத்தை கேபினட்டின் ஒப்புதல் இன்றி மலிவான விலைக்கு நடத்தத் திட்டமிட்டிருந்தார். பெரிய நிறுவனங்களின் ஏஜெண்டுகள் நான் நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டன. இல்லாவிட்டால் மத்திய அரசு 3G ஏலத்தை ஒரு EGoM-விடம் ரெஃபர் செய்யும் என அவர்கள் பயந்தனர். அதைத்தானே நாங்களும் விரும்புகிறோம் என நாங்கள் பதிலளித்தோம். அதே சமயம் என்னைக் குறி வைப்பார்கள் என்றும் பலர் எச்சரித்தனர். அதை நான் அலட்சியம் செய்தேன். 3G விஷயத்தை எப்படியாவது EGoM-க்கு கொண்டு போகக்கூடாது என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காக எனக்கு என்னவெல்லாம் ஆசை காட்டினார்கள் என்பதை நான் இங்கே கூறுவது சரியாக இருக்காது. ஆனால் கடைசியில் EGoM வந்தது, ராஜா பிக்சரில் இருந்து விலகினார், நாட்டுக்கு 1.06 லட்சம் கோடிகள் கிடைத்தன.
Q: நீங்கள் இதையெல்லாம் நிறுத்த உங்களுக்கு யாரேனும் பணம் கொடுப்பதாகச் சொன்னார்களா?
A: ஆகா செய்தார்களே. ஆஃபர் செய்த தொகைகள் மிக பெரியன. நிறுவன மற்றும் ராஜாவின் ஏஜெண்டுகளும் நான் எடிட்டரிடம் ஒன்றுமே கூறாது கட்டுரைகளை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள். நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் சிலர் டபுள் கேம் எல்லாம் ஆடினார்கள். ஒருவர் ராஜாவைப் பற்றி பல தகவல்கள் தந்து அதே சமயம் ராஜாவுக்கும் பல தகவல்கள் தந்தார். ஆனால் முதல் எட்டப்பர் ஸ்டெடியாக நின்றார் பயமின்றி. பல அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்களும் உதவி செய்தனர்.
கே: ராஜாவின் ராஜினாமாவோடு விஷயம் நிற்குமா அல்லாது மேலும் தலைகள் உருளுமா?
ப: நான் என்ன நினைக்கிறேன் என்றால் சுப்பிரமணியன் ஸ்வாமி மற்றும் சாந்தி பூஷன் தொடுத்த வழக்குகள் அவற்றின் கோர்சை முடித்து, சட்டவிரோதம் என சியேஜியால் அடையாளம் காணப்பட்ட லைசன்சுகள் எல்லாமே கேன்சலாகும். பெட்ரோல் பம்ப் ஊழல் வழக்கில் நடந்தது போல அரசு ஏலம் நடத்தச் சொல்லும். ராஜா போன்ற சிலர் சட்டத்தின் சீற்றத்துக்கு ஆளாகலாம். அதே சமயம் நிறுவனங்களுக்கு ரொம்ப பாதிப்பு இராது. ஏலம் நடந்து அரசுக்கு சுமார் 2-3 லட்சம் கோடி ரூபாய்கள் கிடைக்கலாம்.
கே: Howஸ்பெக்ட்ரம் கொள்கையில் வெளிப்படை தன்மையைக் கொணர்ந்து தில்லுமுல்லு நடக்கதிருக்க அரசு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
ப: ஸ்பெக்ட்ரம் மேலாண்மை ISROவிடம் தரவேண்டும், ஆனால் எந்த அரசியல்வாதியும் இதை விரும்ப மாட்டான், காரணம் தெரிந்ததே. ஸ்பெக்ட்ரம் ஆடிட் இன்னும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்த நிலை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது எளிதாக பணம் பண்ணும் பொருட்டு. இஸ்ரோ மாதிரி ஒரு நிறுவனம் ஆடிட் செய்தால்தான் வெளிப்படைத் தன்மை வரும்.
கே: ஸ்பெக்ட்ரமுக்கு பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?
ப: தெரியவில்லை. ராஜாவின் ராஜினாமா பற்றி தெரிந்ததும் ஒரு களைப்பு வந்துள்ளது. இப்போதைக்கு ஏதும் ஐடியா இல்லை.
ராசா அப்ரூவராக மாறினால் பலருக்கு சங்குதான். ஆகவே அவரது உயிருக்கு மிக்க ஆபத்து. இப்போதைக்கு சுயபாதுகாப்புக்காகவாவது அவர் திகாரில் இருப்பதே அவருக்கு நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
7 hours ago
11 comments:
// ஆகவே அவரது உயிருக்கு மிக்க ஆபத்து// still we donno about sadhik basha murder. hope the next getting ready.
இவங்க கூடாரம் அடியோட காலியானா நாட்டுக்கு நல்லது தான். எப்போ நடக்குமோ!?
கொங்கு மண்டலத்தில் மிக அருமையாய் அமைந்த திமுகழகத்தின் பொதுக்குழு தன்னில் தமிழினக் காவலர் டாகடர் கலைஞர்
அவர்கள் ஆற்றிய எழுச்சிப் பேருரை கண்டு ஆளுங்கட்சி வட்டாரம் கலங்கி நிற்பதை மறைக்க முயலும் ஆதிக்க சக்திகள் என்ன மாய் மாலம் செய்தாலும் இனி தமிழன் ஏமாறத் தயாராயில்லை.காங்கிரசுக்கும் கழகத்துக்கும் சிண்டு முடியும் வேலைகள் இனி செல்லாது.பிற்போக்கு சக்திகள் முப்புரிநூல் வல்லுணர்களின் துணை கொண்டு கழகத்தை வீழ்த்திவிடலாம், சாய்த்து விடலாம் என கனவு மட்டுமே காணலாம்.கழகத்தின் தலைவர் வாரீசுக்களுக்குள் போட்டி என் ஊடகங்களில் பொய் செய்தி பரப்பியோர் நாணுகின்ற வகையில் மதுரை மாவீரன் அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்கள் பொதுக்குழுவில் கலந்து பெருமை செய்தார்.கழகத்தின் தலைவராய் கலைஞரே நீடிப்பர் எனும் தேனினும் இனிய செய்தி கேட்டு கழக கோடான கோடி தொண்டர்கள் ஆனந்த்தக் கூத்தாடினர்.தளபதியும்,மாவீரனும் இணைந்து பணியாற்றி வரும் 2016 தேர்தலில் தலைவரை 6 வ்து முறையாய் முதல்வராய் ஆக்கி அழகு பார்க்க சபதம் செய்துள்ளது கண்டு தமிழன்னை பேருவகை கொள்கிறாள்.பொய் புனைந்து உருவாக்கப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கழக சட்ட பாது காப்புக் குழு கவனிக்கும் என தலைவர் உறுதியாய் சொல்லியுள்ளது வரலாற்று சிறப்பு மிக்கது.மொத்தத்தில் கோவையில் கூடிய கழகத்தின் சீர்மிகு பொதுக்குழுவின் வெற்றி மிகு,வீர மிகு,எழுச்சி மிகு,உணர்ச்சி மிகு, மான மிகு தீர்மானங்கள் தமிழர் நெஞ்சமெல்லம் பூரிக்கும் விதமாய் அமைந்தது எனச் சொன்னால் அது மிகை ஆகாது
என்னடா, காமெடி பீஸ் எழிலரசு இன்னிக்கு லீவான்னு ந்கல்ங்கிட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள சகோதர்/சகோதரி,
மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!
பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.
தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்நேரம்.காம் செய்திதளமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
நன்றி.
அன்புடன்,
அதிரைக்காரன்
adiraiwala@gmail.com
ராசா அப்ரூவராக மாறினால் பலருக்கு சங்குதான். ஆகவே அவரது உயிருக்கு மிக்க ஆபத்து//////ithaiththaan subramanianswamy munnadiye sonnaaru.avar sollaraarunnaale ellaam jokka eduththukkiraanga.Intha case avarthaan pottaar enpathe niraiya perukku theriyaathu!!!!
செவ்வியில் கூறியதை // What does this word "Sevvi" mean?
Raja has taken an aggressive posture - seems determined not to go down alone.
Justice should prevail, and quickly. Ill-gotten wealth should be recovered - it's all people's money.
Judiciary should send a strong message to politicians that enough is enough. Case should not drag on for ever (like Kasab's).
Let's pray that these will happen in our beloved country.
செவ்வி --> Interview
Regards,
Dondu N. Raghavan
வெளியில் வராத செயற்குழுத் தீர்மானங்கள்
http://idlyvadai.blogspot.com/2011/07/blog-post_24.html
ஊழல் அது மாநிலத்தின் மிக பெரிய விளைவுகளை வேண்டும் உடனடியாக அல்லது வேறு நிறுத்தி கொள்ள வேண்டும். ரஜினி தான் காட்சிகள் மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR
நல்ல பதிவு.ராஜா லேசுப்பட்டவரல்ல
போலிருக்கிறதே.perverted inteligence.
மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது
நன்கு புலனாகின்றது.இல்லையானால்
இவர்களையெல்லாம் பிடிக்க முடியுமா?கோபி ஒரு அருமையான கருவி.
தெய்வம் நின்று கொல்லும்.
Post a Comment