இது ஒரு மீள்பதிவு. இது வருவதற்கான காரணம் தமாஷானது.
முதலிலெல்லாம் பிளாக்கரில் ஒரு புது பதிவை இடும்போது தலைப்பின் கீழே லிங்க் என்று ஒரு கட்டம் வரும். அதில் நாம் ஏதாவது குறிப்பிட்டால் அது பின்னால் அக்குறிப்பிட்ட பதிவுக்கு சுட்டியாக செயல்படும். ஆனால் பிறகு அந்த லிங்கை போடுவதற்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. ஆகவே நான் யதார்த்தமாக போட்ட பல பழைய லிங்குகள் காரணமாக குறிப்பிட்டப் பதிவை ஹோம் பக்கத்திலிருந்து அதன் மேல் க்ளிக் செய்து வரவழைக்க இயலாது போயிற்று.
இதை எனக்கு மா. சிவகுமார்தான் கண்டுபிடித்து கூறினார். அதன் பிறகு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பழைய பதிவுகளிலிருந்து அந்த லிங்குகளை காலி செய்வது நடந்தது. அதற்குள் பல நூறு பதிவுகள் வந்ததில் எல்லாவற்றுக்கும் போக சோம்பேறித்தனம். ஆகவே இக்காரியம் மெதுவாகவே நடந்தது.
இதன் நடுவில் இன்னொரு கூத்தும் நடந்தது. டிஃபால்டாக டிராஃப்ட் பிளாக்கரில்தான் பதிவுகள் திறந்ததில், பதிவு போடும்போது டைட்டிலுக்கு கீழே இருந்த லிங்க் கட்டம் பதிவு போடும் சமயத்தில் காணக்கிடைக்கவில்லை.
இப்பதிவுக்கு வேறு ஏதோ காரணத்துக்காக வந்ததில், ஹோம் பக்கத்திலிருந்து அப்பதிவின் மேல் க்ளிக் செய்து வர இயலவில்லை. சரி எடிட் செய்யலாம் என்றால் லிங்க் கட்டம் தெரியவில்லை. ஆகவே டிராஃப்ட் பக்கத்தின் டிஃபால்டை விலக்கி எடிட் செய்ய முற்பட்டால் ஆது தெரிந்தது. பிறகென்ன, அதை நீக்கியாயிற்று.
இப்போது பதிவுக்கு போவோமா.
நான் டில்லியில் ஜூலை 2001 வரை சுமார் 20 வருடங்கள் வசித்தேன். கடைசி மூன்று வருடங்கள் அகில இந்திய வானொலியின் வெளிநாட்டுப் பிரிவின் கீழ் இயங்கும் பிரெஞ்சு ஒலிபரப்புச் சேவையில் அறிவிப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பவராக வேலை செய்தேன்.
விடியற்காலை 1.15 முதல் 2.00 வரை நேரடி ஒலிபரப்பு. நடுவில் 1.20 முதல் 1.30 வரை பிரெஞ்சில் செய்திகள். இரவு சுமார் 10.30க்கு ஏ.ஐ.ஆர். வண்டி வீட்டுக்கு வந்து அழைத்துப் போகும். போன உடனே கையில் ஆங்கிலச் செய்தியைக் கொடுத்து விடுவார்கள். அதை நாங்கள் பிரெஞ்சில் மொழி பெயர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒலிபரப்பு முழுவதும் பிரெஞ்சு மொழியில்தான். முதல் ஒரு நிமிடம் சுய அறிமுகம் மற்றும் அன்றைய ஒலிபரப்பு பற்றிய அறிவிப்பு. பிறகு ஒரு சினிமாப் பாடல். 1.20க்கு செய்திகள் என்று நிகழ்ச்சிகள் ஒரு இறுக்கமான கட்டுக்கோப்பில் செல்லும்.
ஒரு நாள் இரவு வண்டி வர வெகு நேரம் ஆகி விட்டது. வானொலி நிலையம் செல்லும்போது மணி 12.55. ஆங்கிலச் செய்தி தயார். மொழி பெயர்க்க ஏது நேரம்? புலம்பக்கூட நேரம் இல்லை. நான் மட்டும் அன்று ஒலி பரப்பில் இருந்தேன். செய்தி விமரிசனம் தனி. நல்ல வேளையாக அது டேப் செய்யபட்டு விட்டது. டேப்பை மெஷினில் பொறுத்தியாகி விட்டது. வேக வேகமாக தலைப்புச் செய்திகள் மட்டும் பிரெஞ்சில் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டேன்.
அதற்குள் நேரம் 1.14 ஆகி விட்டது.
மற்ற செய்தித் தாள்களை வரிசைப் படுத்தி அடுக்கிக் கொண்டேன். இப்பொழுது நேரம் 1.15.
அறிவிப்பு செய்தேன், பிறகு முதல் பாட்டைப் போட்டேன். 1.20 வரை மனதைத் தயார் செய்துக் கொண்டேன்.
1.20. தலைப்புச் செய்திகள் வாசிக்கப்பட்டன. முதல் தாளை கையில் எடுத்துக் கொண்டேன். கண்கள் பார்த்தன ஆங்கில வாக்கியங்களை, ஆனால் வாய் வாசித்தது பிரெஞ்சு மொழியில். ஒன்றன் பின் ஒன்றாய் எல்லா தாள்களையும் படித்தப் பிறகு மறுபடியும் எழுதி வைத்து கொண்டிருந்தத் தலைப்புச் செய்திகள். மணி 1.30. பிறகு ஒரு பிரச்சினையும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கொடுக்கப்பட்ட அத்தனை தாள்களையும் படிக்க முடிந்தது. சாதாரணமாக எழுதி வைத்து கொள்ளும்போது ஒன்றிரண்டு தாள்கள் விட்டு போய்விடும். செய்திகள் முடிந்த பிறகு ஒரே குஷிதான்.
எல்லாம் முடிந்து கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பொறுப்பை ஒப்படைத்த போது அவ்வறை அதிகாரி மிகவும் பாராட்டினார். எல்லாம் முடிந்து வெளியே வந்தப் பிறகுதான் லேட் ரியேக்ஷனாக வியர்த்துக் கொட்டியது.
பயம் பறக்கும் சக்தியையும் கொடுக்கும் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அது உண்மை என்பதை உணர்ந்து கொண்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்.
அள்ளிப்பற்றும் சுடர்
-
அன்புள்ள ஜெ, நான் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது
நீங்கள் கோவிட் தொற்று காலகட்டத்தில் எழுதிய 136 கதைகளைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தேன். ...
20 minutes ago
8 comments:
செய்தி தயாரிப்பாளர் தயாரித்து அதை எடிட் செய்து வாசிப்பது இல்லையா?
என்னார்
"செய்தி தயாரிப்பாளர் தயாரித்து அதை எடிட் செய்து வாசிப்பது இல்லையா?"
இல்லை. செய்தி தயாரிப்பது ஒருவர். வாசிப்பது இன்னொருவர். செய்திகள் முதலில் ஆங்கிலத்தில்தான் தயாரிக்கப்படும். பிறகு அவை தேவைக்கேற்ப மற்ற மொழிகளில் மாற்றப்படும். சம்பந்தப்பட்ட வாசிப்பாளரே மொழி பெயர்ப்பாளர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் வாட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரம் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
அழுவதை கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
தாயின் மடியும் நிலைத்திட வில்லை
தந்தையின் நிழலும் காத்திட வில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
இந்த பாடல் சொல்லும் புதிய செய்தி என்ன....என்ன...என்ன... டோண்டுவின் அனுபவப் பார்வையில்?
கருணாநிதி தயாரித்த படத்திலிருந்தே பாடல் வரிகளை எடுத்து அவர் சிச்சுவேஷனுக்கே ஏற்ற பாடலாக்குவது ரசிக்கத் தக்கதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் கல்லூரியில் இருந்த பொழுது படித்தேன். கிரியா யோகம் பற்றி வியந்தேன். உங்கள் ப்ளாகில் வரும் நிறைய அனுபவங்களை போல அவருக்கும் இருந்துள்ளது! ட்ரென்ஷிடென்டல் மெடிடேசன் கோர்ஸ் விரும்பியவர்களுக்கு கல்லூரியில் சில ப்ரொபசர்கள் எடுத்தார்கள். அதனால் நன்மையோ தீமையோ கிடைத்ததாக தெரியலே. வாழ்க்கை எப்போதும் போல நிறைந்த டென்சன்களோடு போகிறது. நீங்கள் ஏன் மற்ற யோகங்களை பற்றி கம்பேர் செய்து எழுதவில்லை?
@Savitha
யோகானந்தரின் அனுபவங்கள் போலவே எனது சில அனுபவங்களும் இருந்தனவா? சுவாரசியமாக இருக்கிறதே. உதாரணத்துடன் மேலே கூற இயலுமா?
யோகம் போன்ற விஷயங்கள் எனது அறிவுக்கு அப்பாற்பட்டவை என்றுதான் நான் கருதுகிறேன். ஆகவே ஒப்பீடுகள் எல்லாம் செய்யும் நிலையில் நான் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
oru prabalamaanavar.thalainagar delliyil thamizh seythi vasippavar.anru seythi vasippavar varavillai.marroruvar thondaiyai kanaiththukkaatti thaan vaasikkamudiyaathu enru jaadaiyaaka solla, ivar vaasikkavendiya kattaayam.erichchal.melottamaaka kooda padikka neramillai."delliyil irunthu oliparappaaki sennai,triuchi,kovai aakiya nilayangal anjal(!)seyyum akhila baratha seythi arikkai".ithu varai solliyaakivittathu.aduththathu peyarai sollavendum.namma maatti vuttnaanungale enra erichchalil peyar maranthe vittathu.sound engineer oliparappu karuviyai off seythuvittu"viswanathan, ennaayirru?" enru kettapiraku,peyar ninaivu vanthu,seythiyai peyarai sollivittu aarambiththaram.avare oru paththirikai pettiyil sonnathu.Yaaru? POORNAM VISWANATHAN
டோண்டு ஸார்,
ஒரு சிறிய சந்தேகம்..
>>காகித ஓடம் கடலலை மீது
>>போவது போலே மூவரும் போவோம்
யார் அந்த மூவர் ?
கருணாநிதி - தயாளு - ராஜாத்தி
கருணாநிதி - அஞ்சாநெஞ்சன் - தளபதி
கருணாநிதி - கனிமொழி - ஆ.ராசா
கருணாநிதி - தயாநிதி - கலாநிதி
கனிமொழி - ஆ.ராசா - சரத்குமார் ரெட்டி
Post a Comment