7/21/2011

டோண்டு பதில்கள் - 21.07.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா : பேச்சில் மீண்டும் தோல்வி

பதில்:

பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய புரிதல்கள்பெண்கள் இட ஒதுக்கீடு என்னும் தேவையில்லாத கூத்து ஆகிய விஷயங்கள் பற்றிய எனது கருத்துகள் அப்படியே உள்ளன. மேலும் பெரும்பாலான கட்சிகளுக்கும் அதே கருத்துக்கள்தான். ஆனாலும் என்ன செய்வது, என்னை மாதிரியோ சோ அவர்கள் மாதிரியோ வெளிப்படையாக பேச முடியாத நிலையில்தானே அவை உள்ளன. ஏன் தேர்தலுக்கு சீட்டு தரும்போது தத்தம் கட்சிகளுக்குள்ளேயே 33% பெண்களுக்கு ஒதுக்குவதுதானே. ஆகவேதான் நான் சொல்லுவேன், இது விவாத நிலையிலேதான் இருக்கும்.  

உண்மை கூறப்போனால் இந்த விஷயத்தில் இட ஒதுக்கீடு திருநங்கைகளுக்குத்தான் உண்மையாகத் தேவை





கேள்வி-2. போன் வந்தாலே அலறும் தி.மு.க., அமைச்சர்கள்
பதில்: மடியில் பாவமூட்டைகள் இருந்தால் வேறு என்னதான் செய்ய முடியுமாம்?


கேள்வி-3. இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' 
பதில்: கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஈகோ பிரச்சினையில் அல்லாடும் விஷயங்களில் இதுவும் ஒன்றானது விசனத்துக்குரியதே.


கேள்வி-4. மும்பையை குறிவைத்து, பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், மத்திய, மாநில அரசுகள் மீது, அந்நகர மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்
பதில்: தீவிரவாதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுத்தாலே இசுலாமியருக்கு விரோதமாகக் கருதப்படும் என்ற ஆதாரமற்ற பயத்தால் பொட்டையாகக் கிடக்கும் அரசுகளிடம் மக்கள் கோபம் கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.


கேள்வி-5. சாதிக் மரணம் குறித்து சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி
பதில்: க்ளிமாக்சில் சண்டை காட்சிக்கு பிறகு வந்து அரெஸ்ட் செய்யும் போலீசாரின் காமெடி நிலையில் இருக்கும் சி.பி.ஐ. தன் பெயரைக் காப்பாற்ற கிடுக்கிப்பிடி போடுகிறது என நம்புகிறேன்.


கேள்வி-6. கறுப்புப் பணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பதில்: கறுப்புப் ப்ண ஊற்றுகள் பின்னே வேறு எவ்வாறு ரியேக்ட் செய்யுமாம்?


கேள்வி-7. கடலாடியில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிகாரியை டிராக்டர் ஏற்றிக் கொல்ல முயற்சி
பதில்: இது ஒன்றும் முதன்முறையாக நடக்கவில்லையே? ஒரு தாசில்தாரை இவ்வாறுதான் கொன்றார்கள். 


கேள்வி-8. 2ஜி விவகாரம்: ப. சிதம்பரத்திடம் விசாரியுங்கள்: சிபிஐ இயக்குநரிடம் பாஜக மனு
பதில்: மன்மோகன் மற்றும் சோனியா, அவரது சகோதரிகளையும் விசாரிக்க வேண்டியதுதான்.


கேள்வி-9. 2-ஜி ஊழலை சி.பி.ஐ. விசாரித்து முடிக்கும் வரை எனது வாதத்தைத் துவங்க விரும்பவில்லை: ராசா
பதில்: அவரே வக்கீல்தானே ஆகவே சக குற்றவாளிகளது வாக்குமூலங்களையும் அவதானிக்கிறார் போலும். 


கேள்வி-10. தெலுங்கானா விவகாரம்: பிரிவினைக்கு எதிராக ஆந்திரா, ராயலசீமா பகுதி தலைவர்கள் போர்க்கொடி
பதில்: இது ஒரு இடியாப்பச் சிக்கல். ஆந்திர மாநிலம் வரும் நிலையிலேயே தெலுங்கானாவை தனியான மாநிலமாக அமைக்கும் யோசனை இருந்திருக்கிறது. அதை அப்போது சரியாக அவதானிக்காது பொறுப்பற்ற முறையில் அலட்சியம் செய்த நேரு இதில் முக்கிய பொறுப்பேற்க வேண்டியவர்.  






periyar has left a new comment on your post "டோண்டு பதில்கள் - 14.07.2011":
கேள்வி-11. மஞச துண்டுக்கு ஜால்ரா போட்டே பிழைப்பை நகர்த்தி வந்த காக்கா கவிரசுகளான வைரமுத்து, வாலி போன்றவர்கள் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார்களே? இவர்கள் எதிர்காலம்?
பதில்:  வைரமுத்து எப்படியோ தெரியாது. ஆனால் வாலி ஏற்கனவேயே ஜெயை புகழ்ந்து கவிதை எழுதி விட்டதாக அறிகிறேன். வழக்கம்போல அதிலும் சோவை தாக்கியுள்ளதாகவும் தெரிகிறது.  




ரமணா
கேள்வி-12. சுவாமி நித்யானந்தா சொல்வது உண்மையா அல்லது ?
பதில்:  மார்ஃபிங்கோ அல்லது நிஜமான டேப்போ எதுவாக இருந்தாலும் நித்யானந்தா செய்தது சட்டப்படி தவறு இல்லை. அவரும் ரஞ்சிதாவும் மனமொப்பித்தான் அதில் ஈடுபட்டார்கள், மேலும் இருவரும் மேஜர். ஆகவே அதை வீடியோ மூலம் பரப்பிய கோபாலும் கலாநிதியும்தான் போர்னோகிராஃபி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவர்கள்.
நித்யானந்தா உபதேசித்தது ஒன்று ஆனால் தானே செய்தது அதற்கு மாறானது என்றால் அதை அவர் சீடர்கள் பார்த்துக் கொள்ளட்டும். 
இது சம்பந்தமாக நான் இட்ட பதிவுகள் நித்யானந்தரும் பெரியாரும் மற்றும் நித்யானந்தர் விவகாரம் - மேலும் சில எண்ணங்கள் ஆகிய இரண்டிலும் நான் தெரிவித்த கருத்துகள் அப்படியே உள்ளன 


கேள்வி-13. கலாநிதிக்கும் சிக்கலா?
பதில்: கலாநிதி போர்னாக்ரஃபி சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்படவேண்டியவர்.


கேள்வி-14. திமுகவில் மீண்டும் சகோதரர் கலகமா?
பதில்: கலகம் எப்போது நின்றது, இப்போது மீண்டும் ஆரம்பிக்க?


கேள்வி-15. அடிக்கடி தமிழகத்தில் அதிகாரிகளை இப்படி மாற்றுவது பற்றி?
பதில்: இதுவும் ஒன்றும் புதிது இல்லையே. அதற்குத்தான் நிர்வாகத் தேவை என்று ஒரு பல்லவியை வைத்திருக்கிறார்களே.


கேள்வி-16. முரசு டீவி வருகிறதாமே?
பதில்: போலி சீட்டுக் கம்பெனிகள் ஓரிடத்தில் வண்டவாளம் வெளியே வந்து அங்கிருந்து ஓடி இன்னொரு ஊரில் வேறு பெயரில் கம்பேனி ஆரம்பிப்பது நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.


கேள்வி-17. அநியாய கொள்ளை லாபம் பார்க்கும் உணவு விடுதிகள், கல்விச் சாலைகள், மருத்துவ மனைகள் - நாம் எங்கே போகிறோம்?
பதில்: இம்மாதிரி நிகழ்காலத்தை குறைவாக மதிப்பிட்டு, முன்னொரு காலத்திலே எல்லாமே சரியாக இருந்தது என நினைக்கும் மனப்பான்மை பல ஆயிரம் ஆண்டுகளாகவே இருந்து வந்துள்ளது என்பது குறித்து நான் இட்ட இப்பதிவில் கூறியிருக்கிறேனே.



கேள்வி-18. பெங்களுர் வழக்கு அதிமுக தலைவிக்கு தலைவலியா?
பதில்: ஆம், அதில் என்ன சந்தேகம்?



கேள்வி-19. ஒரு பகுதி நீதிபதிகளே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்படுவது பற்றி?
பதில்: நீதிபதிகளும் மனிதர்கள்தானே எனக் கூறினாலும், சம்பந்தப்பட்டவர்களது சரியற்ற இம்மாதிரிச் செயல்களால் நீதித்துறையின் நம்பகத்தன்மையே பணாலாவது சோகமானது.


கேள்வி-20. திமுக தலைவர் பதவி ஸ்டாலினுக்கு கிடைத்தால்?
பதில்: இப்போதைய நிச்சயமற்ற நிலையில் திமுக பல துண்டுகளாவதுதான் நிச்சயமாக நடக்கும்.



கேள்வி-21. இந்த வருடம் 10ம் வகுப்பு மாணவர்களின் எதிர் காலம்?
பதில்: சமீபத்தில் 1961-62 கல்வியாண்டில் நான் பல்ளியிறுதி வகுப்பில் படிக்கையில் இம்மாதிரி தமிழ் புத்தகம் கிடைக்காது போய், பிறகு அது கிடைத்தவுடன் எங்கள் ஆசிரியர் எங்களுக்கு நீக்கப்பட்ட பகுதிகளை கோடிட்டு அறிவித்தது நினைவுக்கு வருகிறது. அம்மாதிரி ஏதாவது செய்வார்களாக இருக்கும்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.சூரிய மின்சக்திக்கு முதலீடு தாருங்கள்: அமெரிக்காவுக்கு முதல்வர் அழைப்பு
2.அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதே நிலப் பறிப்பு புகார்
3.உலகுக்கே வழிகாட்டுகிறது இந்து தர்மம்: சுவாமி தயானந்த சரஸ்வதி
4.கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் விஸ்வநாதன் எம்.பி. ஆய்வு
5.சுயநிதி எம்.பி.பி.எஸ்.: 182 முதல் தலைமுறை மாணவர்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் சலுகை

ரமணா said...

1.அதிமுக அரசு அவசர அவசரமாய்அச்சடித்த பழைய முறை பாடப்பத்தகங்கள் இனி ?
2.அழ‌கிரி வரதா திமுக மாநாடு கோவையில்?
3.சமச்சீர் கல்வியை மெட்ரிக் பள்ளிகள் எப்படி ஏற்றுக் கொள்ளும்?
4.ஆங்கில பள்ளிகளெல்லாம் சிபிஎஸ்இ முறைக்கு மாறிவிட்டால்?
5.அதிமுகவின் தலைவி என்ன செய்வார் சமச்சீர்கல்வி அமுல்படுத்த உச்ச நீதி மன்றமும் சொல்லிவிட்டதே?
6.அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சியாமே?
7.2ஜி விவாகரத்தில் அடுத்து யார்?
8.சூரிய சக்தி மின்சாரம் சாத்யமா?
9.கேஸ் விலை ரூபாய் 800 ஆகப்போகிறதாமே?
10.தமிழக முதல்வரின் ஆட்சி இது வரை எப்படி?

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6. தி.மு.க.,வை அசைக்க முடியாது: கருணாநிதி
7.கலைமாமணி' கேட்கும் தவில் கலைஞர் கட்டைக்காலில் 61 கி.மீ., நடைபயணம்
8. அரசு கேபிளுக்கு கட்டுப்பாட்டு அறைகள்
9.வேலு நாச்சியார் போன்ற வீர பெண்மணிகள் தேவை: வைகோ பேச்சு
10.டெலிவரி செய்யாத தபால்கள் மூட்டை மூட்டையாக கண்டுபிடிப்பு : பொதுமக்கள் புகாரில் எம்.எல்.ஏ. அதிரடி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது