7/07/2011

டோண்டு பதில்கள் - 07.07.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார்.
பதில்: யோசித்து பார்க்கிறேன். நமக்கு வேண்டுமானால் கேலியாக இருக்கலாம். ஆனால் செல்வியின் பார்வை கோணத்திலிருந்து பார்ப்போமா? உறவினர்களை காப்பாற்ற என்ன வழி என அலைந்து கொண்டிருக்கும் நிலையில், எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என அலையும்போது பகுத்தறிவு எல்லாம் நினைவுக்கு வராதுதானே.

எனக்கு கலைஞர் மேல் உள்ள விமரிசனங்கள் அப்படியே இருந்தாலும், அவர் வீட்டு பெண்மக்களின் கவலைகள் நியாயமானதே. என்னதான் பகுத்தறிவு எல்லாம் பேசினாலும் பெண்கள் பிராக்டிகலானவர்கள். நோக்கம் என்ன? உறவினரது விடுதலை. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்தக் கடவுளிடம் போயும் வேண்டலாம்.

நான் அதை புரிந்து கொள்கிறேன்.

கேள்வி-2. லோக்பால் மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை நாளை சந்திக்க உள்ளதாக பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்தார்.
பதில்: யார் அந்த குவாட்ரோக்கியின் ரசிகையையா? அன்னா ஹசாரேக்கு என்ன ஆயிற்று?

கேள்வி-3. இலங்கை அதிபர் ராஜபக்ஷ போர்க் குற்றவாளி என உலக நாடுகள் அறிவித்த நிலையில், இனியும் இந்தியா மௌனம் காக்கக் கூடாது என்றார் திராவிடர் கழக மாநிலப் பேச்சாளர் அதிரடி அன்பழகன்.
பதில்: அவர் சொல்வதை வீரமணியே கேட்க மாட்டார் என நினைக்கிறேன்.

கேள்வி-4. உண்மையான ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை: ராமதாஸ்
பதில்: இரண்டு முறை என் வீட்டுக்கு சென்சஸ் எடுக்க வந்தார்கள். இரண்டு முறையுமே என்னை ஜாதி பற்றி எதுவும் கேட்கவில்லையே. நானாக கூற முன்வந்தபோதும் அதை ஏற்கவில்லை.

ராமதாசால் ஏதாவது செய்ய முடியுமா?

கேள்வி-5. உமாபாரதி கட்சி பாஜகவுடன் இணைந்தது
பதில்: தேவையற்ற தலைவலி பாஜகாவுக்கு. பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் கதை. கட்டுச்சோற்றில் பெருச்சாளி. வேறென்னவெல்லாம் கூறலாம்?

கேள்வி-6. கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்: ஜஸ்வந்த் சிங்
பதில்: அது அவரது தனிப்பட்ட கருத்து. எனக்கு அதனுடன் ஒப்புதல் இல்லை. குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்தாலும் செய்வார்கள் என்னும் நிலையில் இப்படியாவது கனிமொழி போன்றவர்கள் சிறையில் இருக்கட்டுமே. எவ்வளவு நாட்கள் இருக்கிறார்களோ அது வரை நீதிக்கு நல்லது.

கேள்வி-7. உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கூட்டணி மறுபரிசீலனை: பாமக பொதுக்குழுவில் ராமதாஸ்
பதில்: காமெடி பீஸ் ராமதாசர் அதை கூறாவிட்டால்தான் ஆச்சரியம்.

டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி கல்விக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த ஒன்றரை மாதகால அதிமுக அரசின் மோசமான செயல்பாட்டிற்கு கல்வி பிரச்சனையே உதாரணம். மற்றப்படி பாராட்டும்படி பெரிய அளவில் ஒன்றும் இல்லை.

பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே செயல்பட வேண்டும்
என்றார் அவர்.

ஆனால் முக்கியமான கண்டிஷனை கூறவில்லையே. அவர் சார்பில் நானே கூறி விடுகிறேன். அன்புமணிக்கு ராஜ்யசபை எம்.பி. பதவி, முடிந்தால் மந்திரி பதவி, ஹெல்த் மந்திரியாவது உத்தமம்.

கேள்வி-8. புதுவை அமைச்சரவை: முக்கியத் துறைகளை தன்வசமே வைத்துக் கொண்டார் ரங்கசாமி
பதில்: புதுவையில் நடக்கும் கழைக்கூத்தாடி ஆட்டத்தில் அவரால் வேறு என்ன செய்ய முடியும்? யாரைத்தான் நம்புவார் அவர்?

கேள்வி-9. கோயில் யானைகள் பராமரிப்பு குறித்து ஆலோசனை
பதில்: முதலில் அவற்றை வைத்து பிச்சை எடுக்கும் அவலத்தைக் கண்டிக்க வேண்டும்.

கேள்வி-10.சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்?: சிபிஐ சந்தேகம்
பதில்: அடாடா, யாருக்கும் தோன்றாததுதான் இவர்களுக்கு தோன்றி விட்டதா?


ரமணா
கேள்வி-11. சூரியப் பேரனின் மத்திய மந்திரி பதவி இன்னும் எத்தனை நாள் வரை?
பதில்: அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன.

கேள்வி-12. மருத்துவர் ஐயா உள்ளாட்சித் தேர்த‌லில் அணிமாறுவார் போலுள்ளதே?
பதில்: மாறாவிட்டால்தான் ஆச்சரியம். அவரும் என்ன செய்வார் பாவம். அன்புமணி மந்திரியாக வேண்டாமா?

கேள்வி-13. கேபடன் அடுத்து என்ன செய்வார்?
பதில்: புத்திசாலியாக இருந்தால் லூஸ்டாக் ஏதும் செய்யாது சிறப்பாக எதிர்க்கட்சித் தலைவரின் கடமைகளை ஆற்றுதல் நலம். அதிமுகாவுக்கு அக்கால எதிரிக்கட்சியான (1991-1996) காங்கிரஸ் ஜால்ரா அடித்ததுபோல இப்போது செய்யாமல் இருப்பதே இவரைப் பொருத்தவரை புத்திசாலித்த்னமான காரியம்.

கேள்வி-14. உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் எழுப்பப்படும் கோஷம் என்ன சொல்கிறது?
பதில்: அதிகாரத்தில் பங்கு, ஊழல் சம்பாத்தியத்தில் ஷேர்.

கேள்வி-15. மொபைலில் அதிகம் பேசினால் மூளை புற்றுநோய் வரும் என சொல்லப்படும் செய்தியால் அதிகம் பாதிக்கப்படப் போவது யார் யார்?
பதில்: மூளை இல்லாதவர்கள்.

கேள்வி-16. இது எப்படியிருக்கு? காளகஸ்திக்கு போன குடும்பம்
பதில்: நான் முதல் கேள்விக்கு சொன்ன பதில்தான் மறுபடியும்.

கேள்வி-17. மீண்டும் சமூகம் காத்த வீராங்கனையின் முயற்சியால் பொறியியல் கல்லுரி தகுதி மதிப்பெண் விவகாரம்?
பதில்: கேள்வியின் பின்புலன் புரியவில்லையே.

கேள்வி-18. அம்மையாரின் அடுத்த டெல்லி பயணம் யாருக்கு வேட்டு?
பதில்: தெரியவில்லையே. ஆனால் இலக்கு மட்டும் கருணாநிதிதான்.

கேள்வி-19. அன்னை ஹசாரேயின் முயற்சி?
பதில்: அன்னா ஹசாரேவா அன்னை ஹசாரேவா?

கேள்வி-20. தமிழகத்தில் நில மோசடி வழக்குகள் களை க‌ட்டுகின்றனவே?
பதில்: அப்படியாவது குற்றவாளிகள் சிக்கினால் நல்லதுதானே.


Surya
கேள்வி-21. நெத்தியடியாக கேள்வி கேட்பதில் வீரமணியை மிஞ்ச யாராலும் முடியாது. சமீபத்தில் அவர் ஒரு கேள்வி கேட்டார் விடுதலை பத்திரிக்கையில். "திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் பாதாள அறைகளில் கோடி கோடியாக தங்கமும் ரத்தினங்களும் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டுமாம்! பணவீக்கத்தை சரி செய்ய அரசு பயன்படுத்திக் கொள்ளுமா?" இவ்வளவு வக்கணையாகக் கேள்வி கேட்கும் இவர் பெரியார் டிரஸ்ட் பெயரால் அனுபவிக்கும் ஆயிரம் கோடி ரூபாய் சொத்திலிருந்து இது வரை ஒரு பைசா கொடுத்து இருக்கிறாரா அரசுக்குப் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த? நிறைய சாதாரண அமெரிக்க குடிமக்கள் அரசின் வெளி நாடு கடன் சுமை குறைக்க தாமாகவே நன்கொடை அளிக்கின்றனராமே?
பதில்: பத்மநாதசாமி கோவில் அறைகளில் அரசர்கள் அக்காலகட்டங்களில் பல நோக்கங்களுக்காக சேமித்திருக்கலாம். ஆனால் இப்போது அவை கோவில் சொத்துகள். அவற்றை முறையாக கணக்குபடுத்தி இந்து கோவிகளுக்காக (பல இந்து கோவில்களின் சொத்துகளை தீயவர்கள் கையகப்படுத்தியதால் பூஜைகள் கூட சரிவர நடப்பதில்லை) செலவழிப்பதுதான் முறை.

மற்றப்படி வீரமணி கனவிலும் செய்த்துணியாத காரியங்களையெல்லாம் அவரிடமிருந்து எதிர்பார்ப்பது வீண்.

கேள்வி-22. ரஜினியைத் திட்டி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள் விடுதலையில். அதில் ஒரு வரி "சங்கராச்சாரியார் போல நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே (தெய்வத்தின் குரல் 3ஆம் பகுதி பக்கம் 734) என்று சொல்லக் கூடியவர்களல்லர் பகுத்தறிவு வாதிகள்." வீரமணி வகையறாக்கள் பக்க reference எல்லாம் கொடுத்து அவர்கள் வாதம் உண்மை என நம்ப ஒரு casual ரீடர் நம்பும் போல் செப்படி வித்தை செய்வதில் கில்லாடிகள். என்னதான் அப்படி சொல்லி இருக்கிறார் சங்கராச்சாரியார் என்று தெய்வத்தின் குரல் 3ஆம் பகுதி பக்கம் 734 ஐ பார்த்தேன். ஆயுர்வேத சாஸ்த்ரங்களை எழுதிய ரிஷிகள் "நாத்திகனுக்கு வைத்யம் செய்யாதே" என்று எழுதி வைத்துள்ளதாக சங்கராச்சாரியார் கூறுகிறார். ஆனால் எப்படி அவரை வீரமணி வகையறாக்கள் misquote செய்கிறார் பாருங்கள்?
பதில்: நாய் வால் நிமிருமா? லூசில் விடுங்கள். காமெடி பீஸ்களின் உளறல்களை கேட்டு சிரிக்கலாம். அவ்வளவுதான்.

கேள்வி-23. இன்னும் ஒரு விடுதலை கட்டுரையில் வழக்கம் போல ஜெயலலிதாவையும் சோவையும் வீரமணி கிண்டல் "சரிதான். அதோடு, அ.தி.மு.க. பக்தர்கள் அம்மாவுக்காக மண்சோறு தின்கிறார்களே. அது பற்றி ஒன்றும் அம்மா சொல்லமாட்டாரா? துக்ளக் அய்யர்வாளும் அதனைக் கண்டு கொள்ளத்தான் மாட்டாரா?" செல்வி குடும்பம் காளஹச்திக்குச் சென்று கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி பெயரில் ராகு கேது பூஜை செய்த கூத்தைப் பற்றி இவர் ஒன்றும் கூற மாட்டாராம். ஆனால் சோ "மண்சோறு" தின்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டுமாம்! என்ன ஒரு பித்தலாட்டம்?
பதில்: அ.தி.மு.க. பக்தர்கள் ஆத்திகர்களாக இருக்கும் பட்சத்தில் அதை மறைத்ததில்லையே. இப்போது வீரமணி சொல்வது வெறும் கேலிக்கூத்தே.

கேள்வி-24. Dirk Nowitzki என்ற ஜெர்மானிய கூடைப் பந்து வீரர் அவர் சார்ந்த அணிக்கு அமெரிக்க கூடைப் பந்து championship டைட்டில் வாங்கிக் கொடுத்திருக்காரே! Dirk ஒரு gentleman என்று கூடைப் பந்து ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டார்! உங்களுக்கு ஆர்வம் உண்டா கூடைப் பந்து விளையாட்டில்?
பதில்: விளையாட்டுகளுக்கும் எனக்கும் காததூரம். நான் பார்த்து எஞ்சாய் செய்த கூடைப்பந்து மேட்ச் சமீபத்தில் 1961-ல் திரையான ஆப்சண்ட் மைண்டட் ப்ரொபசர் என்னும் படத்தில் வந்த கூடைப்பந்து மேட்ச்தான். அது இதோ.

முதல் பாதியில் உதை வாங்கும் குள்ளர்கள் டீம் அடுத்த பாதியில் ஃப்ரெட் மாக்முர்ரேயின் தயவாலும் ஃப்ளப்பரின் துணையாலும் தூள் கிளப்புவதை பார்க்கலாம். இதை காப்பி அடித்து “பட்டினத்தில் பூதம்” படத்திலும் சீன் வருகிறது. ஆனால் அங்கிருப்பது ஜீபூம்பா ஜாவர் சீத்தாராமன்.மேலே சொன்ன படத்தின் முழு வீடியோவுமே கிடைத்தது. அதையும் கீழே போடுகிறேன். எஞ்சாய்.சுழியம்
கேள்வி- 25. உங்களுடைய அருமையான கேள்வி பதில் தொடருக்கான கேள்வி ஒன்று:
ஒரு தலித்தை சங்கராச்சாரியார் ஆக்குங்கள் என்று அம்பேத்கர் சொன்னதாக இந்தக் கட்டுரை சொல்கிறதே. அது சாத்தியமா?

பதில்: உங்கள் முதல் வரி என்னைக் கூச்சப்படுத்துகிறது. எனது கேள்வி பதில் தொடர் அருமையானது என்பதை நான் உறுதியாகவே மறுக்கிறேன். அறுவை ஜோக்ஸ், மொக்கைகள் ஆகியவைதான் அதில் அதிகம். ஆனால் உங்களது இக்கேள்வி அருமையானது என்பதில் ஐயம் இல்லை.

நிற்க. அக்கட்டுரை கூறும் விஷயங்கள் அலட்சியம் செய்யத்தக்க்கது அல்ல. அதற்கான நேர்மையான பதில் “முடியாது” என்னும் ஒரு சொல் மட்டுமே. அதைக் கூற மனம் வருந்தினாலும், துரதிர்ஷ்டவசமாக அதுவே எதார்த்தம்.

சங்கர மடம் என்று மட்டும் இல்லை, நிறுவனப்பட்ட அமைப்புகளில் சாதி, மதம் ஆகியவை மறுக்க முடியாத காரணிகளாக உள்ளன. உதாரணத்துக்கு ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் கத்தோலிக்க கன்னியாஸ்த்ரீதான் முதல்வராக வர இயலும். லயோலா கல்லூரியிலும் கிறித்துவப் பாதிரியார்தான் (?) முதல்வராக இயலும். பேராசிரியர்களில் சீனியாரிட்டி மட்டும் அதற்கு உதவாது.

ஆதீனங்களில் பார்த்தாலும் குறிப்பிட்ட சாதியினரே வர இயலும். அதே போலத்தான் சங்கர மடமும். காஞ்சியில் ஐயர்தான் சங்கராச்சாரியாராக வர இயலும். ஐயங்காரால் கூட முடியாது. அதே போல ஐயர் ஜீயராக வர முடியாது.

இந்தக் கட்டுப்பாடு பெர்சனலாக என்னைப் பொருத்தவரை நியாயமற்றது என்பதையே உணர்கிறேன்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.தயாநிதி ராஜினாமா:காங்கிரஸ் மவுனம்
2.கோபாலபுரம் தான் முதலில் பிடிபடும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
3.சன் டி.விக்கு அனுமதியின்றி கேபிள் கனெக்க்ஷன்: விரைவில் நடவடிக்கை- ஜெயலலிதா
4.கருணாநிதியிடம் மன்மோகன், சோனியா தொலைபேசியில் பேச்சு
5.கலாநிதி மாறன், சக்சேனா மீது கமிஷனரிடம் நித்யானந்தா சீடர் புகார்

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.சிதம்பரத்துக்கு எதிராக சதி: கபில் சிபல்
7.வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்
8.கூட்டணி குறித்து தங்கபாலு பேச அதிகாரம் இல்லை: யுவராஜா
9.தயாநிதி மாறனுக்கு மாற்று கேட்க மாட்டோம்: டி.ஆர்.பாலு
10. சமச்சீர் கல்வி: நிபுணர் குழு அறிக்கை பாரபட்சமானது: கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் உயர் நீதிமன்றத்தில் மனு

ரமணா said...

1.அடுத்தது சி.தா னவா?
2. மத்திய அமைச்சர்களில் வாய் சாமர்த்தியசாலி யார்?
3.கடைசியில் காங்கிரஸ் திமுகவிடம் சரண்டரா?
4.டி.ஆர் பாலுவின் மேல் பிரதமருக்கு என்ன கோபம்?
5. திடீர் நில மோசடி வழக்குகள் பற்றி?

ezhil arasu said...

ஆதிக்க சக்திகள் கபட எண்ணத்துடன் ஒரு சில வட இந்திய ஊடகங்களின் துணை கொண்டு கழகத்துக்கு மாசு கற்பித்து கழகத்தை அரசியல் உலகில் சாய்த்துவிடலாம் என எண்ணியதற்கு, பெரியவர் நல்லவர் நாடு போற்றும் உத்தமர் பிரணாப்முகர்ஜி அவர்களின் சென்னை விஜயமும் தலைவருடன் சந்திப்ப்பும் ஒரு சரியான் பதிலடி.இன்னும் கலைஞரின் சுட்டு விரல் அசைவுக்கு இந்திய அரசியலே பெரும் மதிப்பும் மரியாதையும் தருவது கண்டு தமிழன்னை உவகை கொள்கிறாள்.தேர்தல் தோல்வி ஒரு சில பிற்போக்கு சக்திகளின் சதி என்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.பெருவாரியான மக்கள் தாங்கள் ஏமற்றப்பட்டது கண்டு மாறாத் துரத்தில் உள்ளதாய் செய்திகள் உலா வருகிறது.வரும் 2016ல் மீண்டும் ஆறாவது முறையாய் தலைவர் முதல்வராய் வந்து அவரால் கொண்டுவரப் பட்ட மக்கள் நலத்திடங்களுக்கு மறு வாழவு அளித்து மகிழ்வார்.ராஜ ராஜ சோழனின் புகழ் பாடி வாழ்ந்திடு தமிழினமே.வாழும் வள்ளுவர் காட்டும் வழியில் வாழ்ந்திடு தமிழ் மக்களே.

கலைஞரின் புகழை திக்கெட்டும் பரப்புவோம் அன்பு தமிழ் நெஞ்சங்களே.

dondu(#11168674346665545885) said...

@எழில் அரசு
அது எப்படி சார் சிரிக்காமல் ஜோக் எல்லாம் அடிக்கிறீங்க.

நல்ல காமெடி பீஸுங்க நீங்க.

அன்புடன்,
டோண்டு ராகவன்

hayyram said...

டோண்டு சார், சௌக்கியமா? சவுக்கு கூட வினவு போல மாறிவிட்டதே! பார்த்தீர்களா!

www.savukku.net/home1/997-2011-07-04-17-10-14.html

ரமணா said...

6.மத்திய மந்திரி சபை மாற்றம் என்ன செய்தி சொல்கிறது?
7.கர்நாட்காவில் முன்னாள் முதல்வரின் உண்ணாவிரதம்?
8. அர‌சு கேபிள் டீவி வரவு வரமா ?
9.சமச்சீர் கல்வி விவாதம் எப்போது முடிவுக்கு வரவும்?
10. அதி நவீன செல்போன்களினால் இளைஞர்களின் வாழ்வுமுறை திசை மாறுகிறதா?

வஜ்ரா said...

தமிழ்மணத்திற்கு என்ன ஆயிற்று ? வலைப்பக்கம் திறப்பதே இல்லையே!

Surya said...

டோண்டு சாரின் கேள்வி பதில் பகுதிக்கு:
1) சமச்சீர் கல்வி பற்றி "அருள்" அவர்கள் (அதாங்க நம்ம ராமதாசுக்கு அறிவிக்கப்படாத கொ.பா.செ. வாக செயல்படும் மகானுபாவன்) அவர் தளத்தில் கீழ்க் கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

"பள்ளிகள் போதவில்லை, கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றெல்லாம் கூறுவது ஓரளவுக்குதான் உண்மை. மாறாக, பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்கள், கற்பிக்கப்படும் முறை எல்லாமே 'மேல்தட்டு குழந்தைகளை' இலக்காகக் கொண்டவை. அந்த கல்வியால் ஏழைக் குழந்தைகளுக்கு பயனும் இல்லை, அது அவர்களுக்கு பழக்கமானதும் இல்லை.
(என்னுடைய மகள் ஒரு சென்னை தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறது. அதன் பொதுஅறிவு 'தனியார்' நூலில் அப்பாவின் உடை 'குர்த்த - பைசாமா' என்றும், அம்மாவின் உடை 'சல்வார் கமீசு' என்றும் கூறப்பட்டுள்ளது. நூலின் எந்த இடத்திலும் வேட்டி, புடவை இல்லை. அதைவிட - விளையாட்டையும் பந்தையும் ஒப்பிடு என்று கூறி 'ரக்பி' விளையாட்டை போட்டுள்ளார்கள்.)"

நியாயமான கேள்விதான். ஆனால் இவர் ஏன் தன் மகளைத் தனியார் பள்ளிக்கு அனுப்புகிறார்? சமச்சீர் கல்விக்காக வாதிடுபவர்கள் ஏன் எல்லாப் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் வேண்டும் என்று வாதிடுகிறார்கள் என்று புரியவில்லை. அரசாங்கப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே. எதற்காக தனியார் பள்ளிகளுக்கும் அரசாங்கமே பாடத் திட்டத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்? தனியார் பள்ளிகளை நன்றாகத் திட்டுவார்கள். ஆனால் இவர்கள் (அன்புமணி, கலைஞர் குடும்பம் உட்பட) மட்டும் தங்கள் வீட்டுக் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். இந்த லாஜிக் உங்களுக்குப் புரிகிறதா?

2) இன்னொரு அட்வைசும் அவர் கொடுக்கிறார் " தமிழ்நாட்டின் மிகப்பெரிய வளம் என்பது அதன் மனித வளம்தான். அதுவும் 'மக்கள்தொகை அனுகூலம்' (Demographic Dividend) எனப்படுகிற - மொத்த மக்களில் அதிகமானோர் இளையோராக இருக்கும் நிலையில் இப்போது தமிழ்நாடு உள்ளது. இது இனி முதியோர் அதிகம் என ஆகும் (இப்போது சப்பானில் அதுதான் நிலை). அதற்குள் - எல்லோரையும் ஆற்றல்மிக்கவர்களாக வளர்த்தால்தான் தமிழகம் வளரும். இல்லையென்றால் எதிர்காலம் இருண்ட காலம்தான். எல்லா சிறுவர்களையும் ஆற்றல் மிக்க இளைஞர்களாக வளர்த்தெடுக்க கல்வியில் சமத்துவம் ஒரு கட்டாயமான முன்தேவை. தமிழக அரசின் போக்கைப் பார்த்தால் - இருண்டகாலமே காட்சியளிக்கிறது."

இவர் கட்சியில் ஏன் அன்புமணிக்கு மட்டும் ராஜ்ய சபா வாய்ப்பு? கட்சியில் வேறு யாருக்குமே திறமை இல்லையா? இவர்கள் நடத்தும் டீ.வி.யிலோ அல்லது கலைஞர் குடும்பம் நடத்தும் டீ.வீ.யிலோ அரசாங்கப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஒதுக்கலாமே? தமிழன் என்றுதான் இந்தப் பச்சோந்திகளைப் புரிந்து கொள்ளப் போகின்றான்?

3) ராசாவும் ராசாத்தி அம்மாளும் "லட்டு" சாப்பிட்டு மாறன் ராஜினாமாவைக் கொண்டாடினார்களாமே?

Giridharan V said...

///////////////////////////////////

நிற்க. அக்கட்டுரை கூறும் விஷயங்கள் அலட்சியம் செய்யத்தக்க்கது அல்ல. அதற்கான நேர்மையான பதில் “முடியாது” என்னும் ஒரு சொல் மட்டுமே. அதைக் கூற மனம் வருந்தினாலும், துரதிர்ஷ்டவசமாக அதுவே எதார்த்தம்.

சங்கர மடம் என்று மட்டும் இல்லை, நிறுவனப்பட்ட அமைப்புகளில் சாதி, மதம் ஆகியவை மறுக்க முடியாத காரணிகளாக உள்ளன. உதாரணத்துக்கு ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் கத்தோலிக்க கன்னியாஸ்த்ரீதான் முதல்வராக வர இயலும். லயோலா கல்லூரியிலும் கிறித்துவப் பாதிரியார்தான் (?) முதல்வராக இயலும். பேராசிரியர்களில் சீனியாரிட்டி மட்டும் அதற்கு உதவாது.

ஆதீனங்களில் பார்த்தாலும் குறிப்பிட்ட சாதியினரே வர இயலும். அதே போலத்தான் சங்கர மடமும். காஞ்சியில் ஐயர்தான் சங்கராச்சாரியாராக வர இயலும். ஐயங்காரால் கூட முடியாது. அதே போல ஐயர் ஜீயராக வர முடியாது.

////////////////////////////////

கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களிளுள்ளது போல், இந்து மதத்தில் ஒரு மத தலைவராகும் வாய்ப்பு மற்ற இனத்தாருக்கு ஏனில்லை?

ezhil arasu said...

Blogger Giridharan V said...

/கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களிளுள்ளது போல், இந்து மதத்தில் ஒரு மத தலைவராகும் வாய்ப்பு மற்ற இனத்தாருக்கு ஏனில்லை?/

இந்தக் குற்றச்சாட்டுக்கு அறிவுசால் டோண்டுவின் பதிலென்ன?

dondu(#11168674346665545885) said...

@எழில் அரசு
ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு வித கட்டுப்பாடு. மற்ற மதங்களில் எது இல்லை எது இருக்கு என்பது அந்தந்த மதத்தினர் பார்க்க வேண்டிய விஷயங்கள்.

இந்து மதங்களில் பல வித மடங்கள் உள்ளன. ஒவ்வொரு மடத்துக்கும் ஏதேனும் ஒரு சாதியியைச் சார்ந்தவர்களே தலைவராக இருப்பார்கள்.

உதாரணமாக ஈவேரா மடத்துக்கு இப்போதைக்கு யாதவர் மற்றுமே மடாதிபதி. அச்சாதியினர் அந்த கண்ட்ரோலை மற்றவரிடம் விடுவார்களா?

வீரமணிக்கு பிறகு அவரது மகன், என்றுதானே இப்போதைக்கு இருக்கிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

புதுகை.அப்துல்லா said...

http://www.payanangal.in/2011/07/530.html

_________

will you come on saturday sir? i want to see your car :)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது