9/01/2011

டோண்டு பதில்கள் - 01.09.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. கருணாநிதிக்கு சட்டம் தெரியாது: பேரவையில் ஜெயலலிதா

பதில்: அப்படி பார்த்தால் சட்டம் முழுமையாக யாருக்குமே தெரிந்திருக்கும் என்று கூறக்கூட முடியாது. சட்டம் தெரிந்த வக்கீல்களுடன் ஆலோசித்து அப்போதைக்கு தங்கள் கேசுக்கு தேவையான சட்டத்தை அறிந்து கொள்வதிலேயே தாவு தீர்ந்து விடுகிறது.

ஜெயலலிதா கருணாநிதி பற்றி சொல்வது அவருக்கும் (ஜெயலலிதாவுக்கும்) பொருந்தும் என்றுதான் கூற வேண்டும்.

கேள்வி-2. மு.க. அழகிரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை
பதில்: அவர் சொல்வது நியாயமாகத்தான் உள்ளது. அழகிரி அவ்வாறு செய்வதால் சாட்சிகள் அச்சப்படலாம் என்பதும் உண்மையே. ஆனால் கட்சித் தலைவர் என்னும் முறையில் அவர் கைதியை பார்ப்பது சட்டப்படி தவறா என்று தெரியவில்லை.

கேள்வி-3. தில்லியில் நடிகர் விஜய் இன்று உண்ணாவிரதம்
பதில்: இருக்கட்டுமே, உடம்பு ஸ்லிம் ஆக இருப்பது நல்லதுதானே!

கேள்வி-4. அரசை விமர்சிக்க 6 மாத காலம் தேவை: விஜயகாந்த்
பதில்: பொறுப்பான பதில். இன்னும் மூன்று மாதம் கழித்து அவர் என்னதான் சொல்கிறார் என்பதைப் பார்ப்போமே.

கேள்வி-5. சிறை நிரப்பும் போராட்டம்: ஹசாரே அழைப்பு
பதில்: அவரது இந்த அழைப்பு சின்சியராக இருப்பதாகத்தான் எனக்கு தோன்றுகிறது.

கேள்வி-6. தூக்கு தண்டனையை நிறுத்த அதிகாரம் இல்லை: முதல்வர் விளக்கம்
பதில்: அது எனக்கு சரியாகத்தானே படுகிறது.

கேள்வி-7. இந்தியரின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினர் பெறத் தடை: விரைவில் அமலுக்கு வருகிறது திருத்தச் சட்டம்
பதில்: என்.ஆர்.ஐகளுக்கும் இது பொருந்துமா?

கேள்வி-8. தூக்கு தண்டனயை ரத்து செய்து திருந்தி வாழ அனுமதிக்க வேண்டும்: கருணாநிதி
பதில்: தான் ஆளும்கட்சியாக இருக்கும்போது ஒன்றைக் கூறுவதும், எதிர்க்கட்சியானதும் அதற்கு முற்றிலும் மாறானதைக் கூறுவதும் அரசியல்வாதிகளிடையே - முக்கியமாக கருணாநிதி & ஜெயலலிதாவுக்கு - சகஜமே.

கேள்வி-9. சாயத்தொழில் முடக்கத்தால் ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிப்பு
பதில்: அவரவர் கவலை அவரவருக்கு.

கேள்வி-10. சென்னை அருகே உலகத் தரத்தில் புதிய நகரம்
பதில்: சோமாலியா தரத்தில் வைத்துவிட்டு அதுதான் உலகத் தரம் என சாதிக்காமல் இருந்தால் சரி.

ரமணா
கேள்வி-11. அதிமுக அரசின் 100 நாள் ஆட்சி பற்றி?
பதில்: கருணாநிதி அரசின் கோமாளித்தனமான ஆர்டரை சரி செய்தது முக்கிய சாதனை. திமுகவினரின் நில அபகரிப்புக்கு எதிரான வழக்குகளும் சாதனையே என அஞ்சாநெஞ்சன் என அழைக்கப்படும் அழகிரியே ஒத்துக் கொண்டுள்ளார்.

கேள்வி-12. இந்தியப் பிரதமரின் நிகழ் கால நிலை?
பதில்: வயல்களில் வைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மைகளை பார்த்தால் அவர் நினைவுதான் வருகிறது.

கேள்வி-13. அழகிரி ஸ்டாலின் யார் முந்துகிறார்கள்?
பதில்: இப்போதைக்கு ஸ்டாலின் கைதான் ஓங்கியுள்ளது என நினைக்கிறேன்.

கேள்வி-14. 2 ஜி வழக்கு எந்தத் திசையில்?
பதில்: அடுத்த திசைதிருப்பல் வராதவரை நல்ல திசையில்தான் செல்கிறது

கேள்வி-15. குஜராத் முதல்வர் மோடி பாரத பிரதமரானால்?
பதில்:இப்போதைக்கு அந்த சாத்தியக்கூறு தென்படாவிட்டாலும் அப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

கேள்வி-16. அஜித் நடிக்கும் மங்காத்தா சன் டீவியின் கைக்கு மாறியதன் மர்மம் என்ன‌ என்ன?
பதில்: இம்மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிக்க கேபிள் சங்கர் போன்ற விஷயமறிந்தவர்களால்தான் இயலும். இது பற்றி அவர் எழுதிய இப்பதிவைப் பார்க்கவும், அதற்கு மேல் நான் என்ன கூறிவிடப் போகிறேன்?

கேள்வி-17. தமிழக முதல்வரின் அதீத சலுகைகள் (இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச மடிக்கணினி, இலவச பை, இலவச உபகரண‌ங்கள், இலவச பஸ் பாஸ், சுத்தமான சூழல், ஆண்டுத்தேர்வு இல்லா நிலை உயர்த்தப்பட்ட கல்வி உதவித் தொகை மாணவர்களுக்கு‍: என்ன காரணம்?
பதில்: இந்தக் கிண்டல்தானே வாணாங்கறது. உங்களுக்கு நிஜமாவே தெரியாதா? அது சரி, எல்லோருமே மோதி மாதிரி அவரது ஊழலற்ற ஆட்சி அவருக்குக் கொடுக்கும் தன்னம்பிக்கையில் இருப்பார்களா என்ன?

கேள்வி-18. சட்ட சபையில் பன்ருட்டியாரின் ஜால்ரா கொஞ்சம் ஓவராயில்லை?
பதில்: யாருக்கு ஜால்ரான்னு தெரியல்லியே? விஜயகாந்துக்குன்னா புரிந்து கொள்ள முடியும். ஜெயலலிதாவுக்குன்னா விஜயகாந்த்துதான் புரிஞ்சுக்கோணும்.

கேள்வி-19. கலைஞரின் சோர்வுற்றிருக்கும் முகம் மலரும் வகையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமா?
பதில்: அது ஜெயலலிதாவின் சொதப்பல்களை பொருத்துள்ளது.

கேள்வி-20. முன்னாள் தமிழர் தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரின் சினிமா தயாரிப்பு இப்போது?
பதில்: 16-ஆம் கேள்விக்கான பதிலில் உள்ள இணைப்பை பாருங்கள்.

மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி
2."சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணம் ரூ.5 கோடி வீண்
3.அப்சல் குருவுக்கு வக்காலத்து: ஒமருக்கு பா.ஜ., கண்டனம்
4."மாஜி' பொன்முடி கம்பி எண்ணத் துவங்கினார் : அனிதாவுடன் கைதானவர் ஓட்டம்
5.பா.ஜ.,வில் ஐக்கியமாகிறார் ஆந்திரா ஜெகன் : காங்கிரசை காலி செய்ய "மாஸ்டர் பிளான்'

pt said...

6. DID YOU EVER WONDER WHY DIMES, QUARTERS AND HALF DOLLARS HAVE NOTCHES (MILLING), WHILE PENNIES AND NICKELS DO NOT?
7. WHY ARE MANY COIN BANKS SHAPED LIKE PIGS?
8.IN GOLF, WHERE DID THE TERM 'CADDIE' COME FROM?
9.WHY IS SOMEONE WHO IS FEELING GREAT 'ON CLOUD NINE'?
10.WHY ARE PEOPLE IN THE PUBLIC EYE SAID TO BE 'IN THE LIMELIGHT'?
11.WHY DO PEOPLE CLINK THEIR GLASSES BEFORE DRINKING A TOAST?
12.WHY IS SHIFTING RESPONSIBILITY TO SOMEONE ELSE CALLED 'PASSING THE BUCK'?
13.WHY DO X'S AT THE END OF A LETTER SIGNIFY KISSES?
14.WHY ARE ZERO SCORES IN TENNIS CALLED 'LOVE'?
15.WHY DO MEN'S CLOTHES HAVE BUTTONS ON THE RIGHT WHILE WOMEN'S CLOTHES HAVE BUTTONS ON THE LEFT?

ரமணா said...

1.தயாநிதி அப்பழுக்கற்றவர் என சிபிஐ சொல்லிவிட்டது பற்றி?
2.தூக்குத் தண்டனை விசயத்தில் முதல்வரின் திடீர் மன மாற்றம்?
3.கலைஞரின் பாராட்டு முதல்வருக்கு நல்ல மாற்ற‌மில்லையா?
4.அழகிரி விசயத்தில் அடுத்து என்ன நடக்கும்?
5.ஆந்திராவில் பாஜக வின் தாமரை பெரிய அளவில் மலரும் போலுள்ள‌தே?

BalHanuman said...

1.தமிழகத்தின் புதிய கவர்னர் ரோசய்யா பற்றி?

2.தி.மு.க. சமச்சீர் கல்வி வெற்றிவிழா கொண்டாடுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?

BalHanuman said...

மூவர் தூக்குத் தண்டனை பிரச்னையில் இந்தக் கருணாநிதி ஏன் தேவையே இல்லாமல் குட்டையைக் குழப்புகிறார் ?

aotspr said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்
சூப்பர்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது