முதலில் இணையத்தில் உலாவும் இச்செய்தியை பார்த்து விடுவோம். பிறகு எனது கருத்தைக் கூறுகிறேன்.
கீரிட வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு… “சார்… என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம் கழட்டி டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க. பிறகு, இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சியாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி அழுதுக்கிட்டிருக்கா சார். பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுற அறையில எதுக்கு சார் கேமரா? அதுவும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங்கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங்கன்னு தெரியல. இந்த கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் சார் அம்பலப்படுத்தி… அந்த வக்கிர மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்கணும்” -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.
அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின் அந்தரங்கங்களை ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்… அந்த மருத்துவமனையின் புகழைக் கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா? என்கிற சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக் கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.
சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்க… வெளியில் வந்து காத்திருந்தோம்.
மணி… மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி பெண்கள்… திருமணமாகாத இளம்பெண்கள்… அந்த அறைக்கு சென்று பரிசோதனை + சிகிச்சை பெற்றபடி வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த அறைக்குள் நுழைய… பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே நுழைந்து “பாட்டிக்கு எப்படிங்க இருக்கு?’ என்று நர்ஸிடம் பேச்சு கொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழல விட்டோம்.
அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில் படுத்திருக்க… அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள் “”சரிங்க… நீங்க வெளியில் போங்க சார்… பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்” என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே… எத்தனை எத்தனை இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்? இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார் பார்க்கிறார்களோ… என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற படபடப்புடனும்… பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க… அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம் கேமராவுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பாகிவிடும்… என்ன செய்வது? நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் போதே… ஒரு சின்ன “கேப்’ கிடைத்தது.
நர்ஸ் மருந்து எடுக்க… வேறு அறைக்குப் போக… பெண் நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம்… பட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து… கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே “க்ளிக் க்ளிக்’ என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக் கலைஞர்.
அடிவயிற்றில் ஜிலிருடன்… நாம் அந்த அறையிலிருந்து வெளியேற… நல்லவேளை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும், ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியேறிய நாம்… க்ரேஸ் மருத்துவ மனையின் எம்.டி.யும்… மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808 என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் -சிகிச்சைக்கு கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவனைப் போல்.
“”எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க” என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல… நாம் விடாப் பிடியாக கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்… நைஸாக.
“”ஹலோ வணக்கம்… டாக்டர் செல்லராணி மேடம்ங்களா?”
“”ம்…?”
“”ஆஹ்… நேத்து என் மனைவியை ட்ரீட்மெண்ட் டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன் மேடம்…”
“”சரி…”
“”அது… வந்து… இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து அழுறா மேடம்.”
“”அப்படியெல்லாம் எதுவும் கேமரா வைக்கலையே?”
“”கேமரா இருக்குங்களே மேடம்?”
“”ப்ச்… கேமரா வைக்கலேங்குறேன்ல” (டென்ஷனாகிறார்.)
“”அதில்ல மேடம்… நானும் வந்து பார்த்தேன் மேடம்… கேமரா இருக்குறதை. எனக்கென்னன்னா… நீங்க டாக்டர், பார்க்கலாம். ஆனா… வேற யாராவது பார்ப்பாங்களேன் னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு”.
“”இங்க பாருங்க… கேமரா கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன். வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல…”.
“”ஓ… அப்படிங்களா? ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையா மேடம்?”.
“”இதுல என்ன தப்பு இருக்கு? இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற அந்த அறையில் இருக்கிறது சின்ன கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்லராணி டேவிட்டின் “கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்’ என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே? அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.
கிரேS மருத்துவமனை ஊழியர் ஒருவரோ “”எல்லா ரூம்லேயும் சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால… நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம்… அந்தப் பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கிறதால… டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில் உட்கார்ந்திருப்பாரு. அவர் டாக்டருமில்ல… ஆனா… இப்படி எல்லா ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக் காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்ல… திருமணமாகாத இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து அந்த அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க” என்று வேதனையுடன் சொன்னவர் “”ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும் பரபரப்பானாங்க இந்த டாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற ஹாஸ் பிட்டலுக்குப் போயி பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க… அந்த இளம்பெண் இறந்துட்டாங்க…. இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள் கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனை ரசிக்க வைக்கிறாங்களே ச்சே” என்கிறார் நொந்தபடி.
“கூச்சம், பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க மறுத்துவிட்டால்… வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி குற்றம். அப்படியிருக்க… அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது… மிஸ் யூஸ் பண்ணுவது பெரும் குற்றம்” என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.
கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர கேமராவால் மகிமை இழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி: நக்கீரன்
நக்கீரனில் வந்ததாக நான் படித்த இச்செய்தி எந்த இஷ்யூவில் வந்தது என்பது குறித்து தகவல் இல்லை. வாரத்துக்கு இருமுறை வரும் அந்த இதழில் எந்த தேதியினுடையது இச்செய்தி என்பதைப் பார்க்க இயலவில்லை. நக்கீரன் வலைத்தளத்திலும் தேட இயலவில்லை. அதில் தேடுபொறிக்கான பெட்டியே என்னால் காண முடியவில்லை.
கூகளில் பார்த்தால் வந்திருக்கும் ரிசல்டுகளில் ஒன்றில் கூட நக்கீரனின் தளம் இல்லை.
இவ்வளவையும் நான் இங்கே எழுதுவதற்கு காரணமே வெளிப்படைத் தன்மை அதிகம் இச்செய்தியில் இல்லை என்பதாலேயே.
இதை கூறிய பிறகு, குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது என்றுதான் கூற வேண்டும். புனிதமான மருத்துவத் தொழில் இவ்வாறு மலிவாகப் போனது மனதுக்கு விசனத்தை அளிக்கிறது.
இதில் கூறிய விஷயங்கள் பொதுமக்கள் பெரும்பான்மையோர் காண வேண்டும் என்ற நோக்கிலேயே இங்கும் அதை வெளியிடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
4 comments:
Issue details.....
Vol.23, No. 56 2010
Oct 30 - Nov 02
Page no. 22,23,24
Principal Secretary to the Government
Thiru V K Subburaj IAS
Phone: 25671875 (O), 24470767 (R), 25671253 (Fax)
Email: hfsec@tn.gov.in
தவறான எண்ணத்தோடு காமெராக்கள் பொருத்தி இருந்தால் நாம் இந்த மருத்துவமனையை புறக்கணிக்க வேண்டும்.
மேலே உள்ள தொலைபேசி எண்ணில் திரு சுப்புராஜ் அவர்களிடம் பேசுவோம்.,
வரும் காலங்களில், படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவோம், போஸ்டர் அடிப்போம் என்ற பூச்சாண்டி வேலைகளுக்கு நாமும் பயப்படக் கூடாது. அந்த எண்ணம் வர தொடங்கினால் இந்த மாதிரி ஏமாற்று வேலைகள் குறையும்.
தகவலுக்கு நன்றி srisin02.
நக்கீரன் இணைய இதழில் இதை தேட முடியவில்லை. ஆகவே சந்தேகம் எழுந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஸார்,
நம்ம கீழ்கட்டளை பஸ் நிலையம் ஏரியாவிலேயே, இதுவும் கிரேஸ் ஹாஸ்பிடல் தான், காமெராக்கள் பொறுத்தியிருக்கிறார்கள் !!
Post a Comment