நரேந்திர மோதியை கொல்ல சதி திட்டம் பற்றி விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்தது. அது பற்றிய கீழே உள்ள வரிகள் நக்கீரனில் வந்துள்ளன. நன்றி: நக்கீரன்
குஜராத் முதல்வர் நரேந்திர மோதியை படுகொலை செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் என்ற இணைய தளம், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது. அதில் இந்தியா தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
கடந்த 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 19ந் தேதி அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட ரகசிய தகவல் ஒன்றில் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் லஸ்கர் இ தொய்பா இயக்கம், தமிழகம் மற்றும் கேரளாவில் தளம் அமைக்க முயன்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.
அதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய இந்தியாவின் தென்மாநிலங்களில் முகாம்கள் அமைத்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட அந்த அமைப்பு முயற்சி மேற்கொண்டதும் அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் லஷ்கர் இ தொய்பாவின் செயல்பாடுகள் பரந்துவிரிந்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது என்னவோ தெரியவில்லை, மோதி என்றாலே ஒன்றுக்கு இரண்டாக கருப்புக் கண்ணாடிகளை போட்டுக் கொண்டுதான் பார்க்கின்றனர். அது போதாது என்று கூடவே காதுகளுக்கு அடைப்பு பிளக்குகள் வேறு.
உதாரணத்துக்கு மோடிக்கும் கோத்ரா படுகொலைகளுக்கு பின்னால் நிகழ்ந்த கலவரங்களும் தொடர்பு இல்லை என சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப் பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டே கூறியது சம்பந்தமாக நான் இட்ட இடுகைக்கு மோதி வெறுப்பாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே இடிபோன்ற மௌனம் சாதித்தனர்.
எனக்கு தெரிந்து இன்னமும் ஹிந்து பத்திரிகை மிகவும் அமுக்கமாகவே மோடியை SIT க்ளியர் செய்யும் செய்திகளை அடக்கி வைத்துள்ளது.
துபாய் சரவணன் என்னும் பதிவர் சில வெறுப்பு வரிகளை உளறினார். (பை தி வே, அவர் இதுவரை ஒரே ஒரு பதிவைக் கூட இடாதவர்)
இந்த நாட்டின் மதச்சார்பின்மையின் மீதும் நீதி நெறிகளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்ற மக்களுக்கு பின்வரும் இந்த செய்தி ஆச்சரியமளிக்கலாம். ஏன் ஆவேசத்தைக் கூட தரலாம். ஆம்.
குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளில் இரத்தம் குடிக்கும் ஓநாய் நரேந்திர மோடிக்கு சம்பந்தமில்லையாம்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனெனில் கண்ணுக்கு தெரிந்து 1992 வரை மசூதியாக இருந்த பாபர் மசூதியையே மசூதி இல்லை என்று ஒரு காவி வெறியன் நீதிபதி பதவியில் அமர்ந்து கொண்டு தீர்ப்பளிக்கிறான். அதுவும் உயர்நீதிமன்றத்தில் நீதியை காப்பாற்ற போவதாய் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு நீதிபதியாய் இருந்து கொண்டு நீதியை சாகடிக்கும் போது சிறப்பு விசாரணைக் குழுவில் இருக்கின்ற விசாரணை அதிகாரிகள் மட்டும் நீதியை காப்பாற்றி விடவா போகிறார்கள்? ஆகவே ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் பார்ப்பனீய ஓநாய்களும் இதை வைத்துக் கொண்டு மோடி குற்றமற்றவர் என்று ஊளையிடட்டும்.
http://athikkadayan.blogspot.com/2010/12/blog-post.html
ஒரு நீதிபதியை ஒருமையில் குறிக்கும் சரவணன் துபாயிலேயே இருப்பது நலம். இந்தியாவெல்லாம் அவருக்கு சரிபடாதுதான். அவர் சவுதிக்கு போவதுதான் சரி.
அது மட்டுமின்றி பொய்சாட்சி புகழ் டீஸ்டா டெசல்வாட் பற்றிய செய்திக்கு நான் இட்ட ட்விட்டுகளுக்கு சக ட்விட்டராளர்கள் எதிர்வினை தரவேயில்லை. அது சம்பந்தமாக நான் இட்ட ட்விட்டுகள் கீழே chronologically reverse order-ல் தரப்பட்டுள்ளன.
dondu1946 dondu1946
How come The Hindu that was powerfully eloquent on Modi getting questioned by SIT in March 2010 is now maintaining a thunderous silence?
15 hours ago
dondu1946 dondu1946
SC refuses to entertain her plea challenging trial court order on Rais who said that Teesta-tutored witnesses and filed false affidavits
16 hours ago
dondu1946 dondu1946
Teesta Setalvad faced the ire of the Supreme Court for taking her grievances in the Godhra riot cases to an international h.rights agency
16 hours ago
dondu1946 dondu1946
Teesta Setalvadடுக்கு நிஜமாகவே தலைவலி ஆரம்பம் போலிருக்கே. பார்க்க: http://www.dailypioneer.com/300970/Teesta-in-real-trouble.html
16 hours ago
அது மட்டுமல்ல, இப்போது அமெரிக்காவில் இருக்கும் கொலைகார தீவிரவாதி ஹெட்லீயின் வாக்குமூலம் குஜராத்தில் செயல்பட்டு, போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதி பற்றிய உண்மையைக் கூறுகிறது. அது பற்றி தினமலரில் வந்த செய்தி இதோ:
ஹெட்லி மூலம் மோடி மீதான களங்கம் குறைகிறது
புதுடில்லி: மும்பை தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்த அமெரிக்காவில் வசித்து வரும் ஹெட்லி சில முக்கிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இதில் குஜராத்தில் நடந்த ஒரு என் கவுன்டர் விவகாரம் தொடர்பாக அவர் கூறியிருப்பது குஜராத் மாநில பா.ஜ., அரசு மீதான களங்கம் குறைகிறது. அமெரிக்க போலீஸ் வசம் இருக்கும் ஹெட்லியிடம் அந்நாட்டு அரசு அனுமதி கேட்டு விசாரணை இந்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவர்களிடம் ஹெட்லி குஜராத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பெண் இஸ்ரத் ஜகான் லஷ்கர் இ.தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். இஸ்ரத் ஜகான் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 2 பேருடன் கடந்த 2004 ம் ஆண்டில் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டவர். இவர்கள் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் தரப்பு தெரிவித்திருந்தனர்.
இது போலி என் கவுன்டர் என இவரது தாயார் ஷகீமா கவுசர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு .சி.பி.ஐ போலீசாரால் விசாரிக்கப்பட்டது.இந்நிலையில் ஹெட்லி , தனது வாக்குமூலத்தில் இஸ்ரத் லஷ்கர் இ. தொய்பாவை சேர்ந்தவர் என்று ஹெட்லி கூறியுள்ளதாக புலனாய்வு வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த விஷயம் குஜராத் மாநிலத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்.
பை தி வே, மோடி சரியான உச்சரிப்பு அல்ல, மோதிதான் சரி. நீச்சல்காரனுக்கு நான் இது சம்பந்தமாக கொடுத்த எதிர் ட்வீட்:
dondu1946 dondu1946
@
@Neechalkaran சரியான உச்சரிப்பு மோதிதான். தேவநாகரியில் அவர் பெயர் नरेन्द्र दामोदरदास मोदी. காந்தியை ஆங்கிலேயர்கள்தான் Gandy என்பார்கள்.
4 Dec
இதுக்குத்தான் கிரந்த எழுத்துக்கள் அதிகம் தமிழுக்கு தேவை என்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
9 hours ago
14 comments:
யாரும் இதை பத்தி எழுத மாட்டாங்க
வாழ்க நரேந்திர மோதி, ஒழிக டீஸ்டா - வேறு என்ன சொல்வது?
பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்.
விட்டுத்தள்ளுங்கள் சார், இவனுங்க போலித்தனம் தெரிந்தது தான்.
@அருள்:
\\பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்.\\
நீங்கள் சொல்வது சரி தான். இப்போது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் அது தான் நடந்து கொண்டிருக்கிறது
//
பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்/
அருள் இன்னும் பா ம க ஆட்சிக்கு வரலையே ??
Dear Ragavan,
i'm abroad. appreciate if you can give pointers about online sanskrit courses(esp. if free)
@அருள் said...
பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்.
அருள் அப்படிப்பட்ட மத்திய பேய்களோட ஆட்சில எதுக்கு உங்க சின்னய்யா மத்திய அமைச்சரா இருந்தாரு; அப்புறம் ஏன்
மாநில பேயோட கூட்டணி வைக்கனுமுன்னு காவடி எடுக்குறாரு.
அப்புறம் இன்னைக்கு தான் கேள்விபட்டேன் உங்க மாலடிமை அய்யாவோட பேத்திங்க பேரு 'ஸம்யுக்தா', 'ஸங்கமித்ரா' - ன்னு செந்தமிழ் பேராம்லோ. உண்மையா ?
not only that. TOI has used the words sources say that SIT gave a clean chit on modi.
in the past TOI used to coin the words as if someone of them were in the spot when incidents happened.
poor TOI
// நான் இட்ட இடுகைக்கு மோதி வெறுப்பாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே இடிபோன்ற மௌனம் சாதித்தனர்.//
If you enable the Anonymous comment option, all scoundrels will start pouring their racial hatred in your blog. Do you really want it? At least people like me don't want to read comments from your so-called "blogger friends" who can't grow beyond their narrow thinking.
//இதுக்குத்தான் கிரந்த எழுத்துக்கள் அதிகம் தமிழுக்கு தேவை என்கிறேன்.//
கிரந்த எழுத்துக்களினால் கிடைக்கும் பலன் தமிழர்களுக்கு எனில், நிச்சயமாக நாம் ஆதரிக்கவேண்டும், ஸ்ரிமான் டோண்டு அவர்கள் ஒரு மேல் விளக்கம் தரலாமே !!
@எம்.வி.சீதாராமன்
கிரந்த எழுத்துக்கள் பற்றி 02.12.2010 தேதியிட்ட டோண்டு பதில்களில் வந்த கேள்விகள் மர்றும் பதில்களில் விளக்கமாகவே கூறியுள்ளேனே.
கேள்வி-1: யுனிகோட் பிரச்சனை பற்றி உங்கள் கருத்து?
பதில்: கிரந்த எழுத்துக்கள் சேர்ப்பதைத்தானே கூறுகிறீர்கள்? கூடுதலாக எழுத்துக்கள் வந்தால் என்ன பிரச்சினை? தேவையானவர்கள் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் விடப்போகிறார்கள்.
விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்திரி மந்திரங்கள் ஆகியவை சரியான உச்சரிப்புடன் சொல்லப்பட வேண்டியவை. அவற்றை சொல்லும் ரிதம் முதற்கொண்டு சரியாக இருத்தல் அவசியம். அப்போதுதான் அவற்றின் பலன் கிடைக்கும். அது மட்டுமல்ல, தவறான உச்சரிப்பால் விபரீதங்கள் ஏற்படும். ஆகவே, வடமொழி தெரியாதவர்கள் அதைத் தமிழில் வைத்துப் படிக்க அந்த கிரந்த எழுத்துக்கள் தேவை.
அதனால்தானோ என்னவோ இதை பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதவர் சண்டையாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இது வருந்தத் தக்கது.
கேள்வி-3: தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஸ, ஷ, ஹ போன்றவற்றை ஏன் சிலர் எதிர்க்கிறார்கள்.. இந்த எழுத்துக்கள் இல்லாமல் போவது ஆங்கில கலப்புக்கு வழி வகுக்கும் என நினைக்கிறேன்..
உதாரணமாக..பசு(s) மோதி பசு சாவு.., (j)சார்(j)ச் புச்(sh) மீது சூ(sh) வீச்சு
என எழுத ஆரம்பித்து விடுவார்கள் என அஞ்சுகிறேன்.. இது பற்றி உங்கள் கருத்து என்ன ?
பதில்: அவ்வாறும் சிலர் எழுதலாம். நமக்கென்ன, நாம் நன்றாக எழுதுவோமே.
அதே சமயம், ஸ்பெயின் என்பதை இசுபானியா என எழுதுபவர்கள் ஸ்டாலினை மட்டும் ஏன் இசுடாலின் என எழுதத் துணிவதில்லை என நீங்கள் யோசித்ததுண்டா?
மேலே கிரந்த எழுத்துக்கள் பற்றி இன்னொரு கேள்வியில் நான் கொடுத்த பதிலையும் பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி-5: டோண்டு "கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களா?" என்பதற்கு ஒரு சிரிய விளக்க பதில் போட்டால் நன்றாக இருக்கும்.
பதில்: கிரந்தம் ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும் (லிபி). இந்திய மொழியான மலையாளத்தின் எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியவையே ஆகும். மேலும் கிரந்த எழுத்துமுறை பர்மிய மொழி, தாய் மொழி, சிங்களம் முதலிய தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது[1]. பல்லவர்கள் பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை பல்லவ கிரந்தம் என அழைக்கப்படுகிறது. இதை பல்லவ எழுத்துமுறை எனவும் குறிப்பிடுவர். இந்த பல்லவ கிரந்த எழுத்துமுறையைச் சார்ந்தே தென்கிழக்காசிய மொழிகள் எழுத்துமுறையை பெற்றன.
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், விசேடமாகத் தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம். (நன்றி விக்கிபீடியா)
சமீபத்தில் 1959-60 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, எங்கள் தமிழாசிரியர் பத்மநாப ஐயங்கார் அவர்கள் எங்களுக்கு கிரந்த எழுத்துக்களை அறிமுகப்படுத்தினார். வடமொழியை தேவநாகரி, தெலுங்கு ஆகிய மொழிகளுடன் கூடவே கிரந்தத்திலும் எழுதலாம் என எடுத்துரைத்தார்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டப்படி வடமொழி ஸ்லோகங்களுக்கு உச்சரிப்பு ரொம்ப முக்கியம். அதில் தவறு நேர்ந்தால் விளைவு விபரீதமாக இருக்கும் என்பதை அவர் அழுத்தமாய் சொல்லி எங்களுக்கு புரிய வைத்தார்.
கிரந்தத்துக்கு தமிழகத்தில் நீண்ட சரித்திரம் உண்டு. அதை நான் முழுமையாக கற்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே. அடுத்த ஆண்டே பொறியியல் பிரிவில் சேர்ந்ததால் பலியானது தமிழ் படிப்பே (சிறப்புத் தமிழ்).
அன்புடன்,
டோண்டு ராகவன்
You can look here for Grantha lessons
http://www.virtualvinodh.com/grantha-lipitva/164-grantha-5-ta-pa
http://groups.google.com/group/grantha-lipi/web/grantha-resources
You can also download Tamil Extended Unicode file, use it with NHM Writer and get few more letters like sa for Sarma
Hopefully , in a few months time, Grantha will have Unicode and you will have more writers and editors in Grantha
Vijayaraghavan
//
பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்.
//
பேயுடன் கூட்டணி வைத்தால் மட்டும் சாத்திரங்கள் பிரியாணி திங்குமோ என்னவோ.
//பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்//
இது சோ அடிக்கடி துக்ளக்கில் பயன்படுத்தும் சொற்றொடர் குறிப்பாக தலையங்கத்தில்...
விடுதலை, குடியரசு தாண்டி துக்ளக்கையும் கட் அண்ட் பேஸ்ட்டுக்கு பயன் படுத்துவது நல்ல முன்னேற்றம் தான்...
1 அமெரிக்க பாணி ஜனாதிபதி நேரடி தேர்வு நம் நாட்டுக்கு உதவுமா ? பிளஸ் மைனஸ் என்ன ?
2 ஒரு விஷயம் ஆதாயம் தருகிறது என்றால் அதை செய்ய பிராமணர்கள் தயங்கமாட்டார்கள் என்பது பெரியார் கருத்து. என் கருத்து அல்ல . பிராமண எதிர்ப்பு என்பது ஆதாயம் தரும் விஷயம் என்பதால் பிராமணர்கள் சிலரே இதில் இறங்கிவிட்டனர் என்ற கருத்து பற்றி ? உதாரணம் பாலசந்தர் , கமல் . சுஜாதா ஞானி சின்னகுத்தூசி
Post a Comment