2/09/2005

M.G.R. - சடையப்ப வள்ளல்!

என்ன ஆச்சரியம்? இந்த 5 கேள்விகளுக்கும் ஒருவரும் முழு விடைகளைக் கூறவில்லை.

சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் ராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, கம்பர் இவ்வாறுக் கூறுவார். "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." ஆக எம்.ஜி.ஆர் சடையப்ப வள்ளலாக நடித்தப் படத்தில் வில்லன் நடிகர்கள் ராமதாஸ், மனோகர் மற்றும் நம்பியார் ஆவர். அடிக்காதீங்கப்பா!

யோசிப்பவர் பகவத் கீதையில் பேசும் முதல் இருவரைச் சரியாகக் கூறினார். அடுத்த இருவர்தான் தவறு. சரியான வரிசை: திருதராஷ்ட்ரன், சஞ்சயன், துரியோதனனன் மற்றும் துரோணர். திருதராஷ்ட்ரன் சஞ்சயனிடம் நடப்பதைக் கூறுமாறுக் கேட்பது முதலில். பிறகு சஞ்சயன் பதில் கூற ஆரம்பிக்கிறான். பாண்டவர் சேனையைக் கண்ட துரியோதனன் ஆச்சாரியர் அருகில் சென்றுப் பேச ஆரம்பிக்கிறான். அதற்கு துரோணர் விடை கூறுகிறார். ஆதாரம் பகவத் கீதை.

சரியான வரிசை: உத்திரன், சவ்யசாசி, கண்ணன், சாத்யகி. விராட பர்வத்தின் கடைசியில் உத்திரன் தேரோட்ட, அர்ஜுனன் (சவ்யசாசி) அம்பு மழை பொழிந்து கௌரவர் சேனையை விரட்டி அடிக்கிறான். பிறகு சவ்யசாசிக்குக் கண்ணன் மஹாபாரதப் போரில் தேரோட்டுகிறான். சாத்யகி? அவன் கண்ணனின் டிஃபால்ட் தேரோட்டி. வரிசை பூர்த்தியாகிறது அல்லவா? கடைசியாகக் கர்ணனைக் கூடக் கூறியிருந்தாலும் ஒத்துக் கொண்டிருக்கலாம். ஏனெனில் ஒரு சமயம் கண்ணன் கர்ணனிடம் தனியேப் பேச வேண்டும் என்றுக் கூற கர்ணன் தானே தேரைச் செலுத்தி கண்ணனை அழைத்துச் செல்கிறான். ஆனால் இது வியாச பாரதத்தில் வருகிறதா என்றுத் தெரியவில்லை. பி. ஆர். சோப்ராவின் மஹாபரதத்தில் வருகிறது.

ராமும் ஷ்யாமும் சயாமீஸ் இரட்டையர்கள். ராம் இடது பக்கத்தில் இருப்பவனாதலால் அவன் அமெரிக்காவில் கார் ஓட்ட வேண்டியது. ஷ்யாமுக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆகவே இங்கிலாந்தில் அவன் கார் ஓட்ட முடியாது. ராமாலும் முடியாது. வலது, இடது போக்குவரத்து விதியைப் பற்றிக் கூறிய பாலாவும் துளசியும் இன்னும் ஒரு அடி எடுத்திருந்தால் விடை வந்திருக்கும். முக்கால் கிணறுதான் தாண்டினர்.

மருத்துவ மனையில் இருந்த மனைவி இதயம் - நுரையீரல் இயந்திரத்தில் இணைக்கப் பட்டிருந்தாள். அதன் ஆதரவு பேட்டரியில் பழுது ஏற்பட்டதால் வேறொன்று ஏற்பாடு செய்யக் கணவன் வேகமாக கீழே வருகிறான். அப்போது ஹோட்டலில் டோட்டல் பவர் கட் ஏற்படுகிறது. மேலே கூற எனக்குக் கல்மனது இல்லை. நிஜமாகவே நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

dondu(#11168674346665545885) said...

மருத்துவ மனையில் என்றுக் கூற நினைத்தேன், ஹோட்டல் என்று வார்த்தை விழுந்து விட்டது. மன்னிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

மீனாக்ஸ் | Meenaks said...

கடைசிப் புதிர் ரொம்பவே யோசிக்க வைத்தது. அருமை.

SHIVAS said...

Vraiment j'ai comprend rien. Désolé. Votre style de l'expression est très haut. Merci et bientôt.

dondu(#11168674346665545885) said...

என்ன, ஒன்றுமே புரியவில்லையா காஞ்சி ஃபிலிம்ஸாரே. சுத்தம். எது எப்படியாயினும் நீங்கள் ஃபிரெஞ்சில் எழுத முயற்சித்ததில் மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்

யோசிப்பவர் said...

பகவத் கீதை எனக்கு கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது!!!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது