2/08/2005

ஆரோகணத்திலேயே பாடுவது - music

சிந்து பைரவி திரைப்படத்தில் கடைசிப் பாடலை ஜே.கே.பி. அவர்கள் ஆரோகணத்திலேயே பாடியிருப்பார். "கலைவாணியே" என்று அரம்பிக்கும் பாடல் அது. என்னுடையக் கேள்வி இதுதான். இதைப் போல வேறு ஏதாவது பாடல்கள் உண்டா? வேறு யாராவது பாடியிருக்கிறார்களா? உதாரணமாக சங்கீத மும்மூர்த்திகளில் யாராவது?

அல்லது இது திரு பாலசந்தரின் ஒரிஜினல் ஐடியாவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

Jsri said...

பாலசந்தரின் ஐடியாவா என்று தெரியாது. யூனிட்டில் யாருடையதாகவும் இருக்கலாம், இளையராஜாவையும் சேர்த்து. அதுதான் முதல் முயற்சி என்று கேள்விப்பட்டேன்.

ஆனால் அவரோகணம் இல்லாததாலேயே அது ஒரு முழுமையான ராகம் இல்லை என்ற மாற்றுக்கருத்தும் இசைவல்லுனர்களால் சொல்லப்பட்டது.

எப்படி இருந்தாலும் எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் அதற்கும் இடமுண்டு.

ROSAVASANTH said...

சிந்துபைரவி வந்த காலத்திலேயெ அப்படிபட்ட பல பாடல்கள் முன்பு இசை நாடகங்களில் இருந்ததாக செய்திகள் சங்சிகைகளில் வந்தன. மேற்கொண்டு தகவல் எதுவும் நினைவிலில்லை.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது