2/04/2005

இன்னும் சில கேள்விகள் - some more!

1. எகிப்தில் ஆஸ்ப்ரோ மாத்திரை வியாபாரத்துக்குக் கொண்டு வந்தப் புதிதில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அதை சந்தைப்படுத்த அமெரிக்காவிலிருந்து ஒரு பெரிய நிபுணர் வரவழைக்கப்பட்டர். அவரும் ஆர்டிஸ்ட்களும் சேர்ந்து பல மணி நேரங்கள் ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தனர். ஒரு பெரிய ஹோர்டிங்கில் 3 படங்கள் ஏ - பி - சி என்று வெளியிட்டனர். ஏ-யில் ஒருவன் தலைவலியால் அழுதுக் கொண்டிருப்பான். பி-யில் அவனுக்கு ஆஸ்ப்ரோ கொடுக்கப்படும். சி-யில் அவன் தலைவலி நீங்கிச் சிரித்துக் கொண்டிருப்பான். இம்மாதிரி ஹோர்டிங்குகள் தெருவுக்குத் தெரு கட் அவுட் ரேஞ்சில் நிறுத்தப்பட்டன. ஆனால் ஆஸ்ப்ரோவின் வியாபாரம் முழுதுமாக நொடித்துப் போயிற்று. ஏன்?

2. இப்போது கூறப்போவது என் நண்பனுக்கு நிஜமாகவே நடந்தது. அவன் ஒரு பஞ்சாபி. பெயர் மல்லிக். நாங்கள் இருவரும் ஐ.டி.பி.எல்லில் வேலை செய்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் மல்லிக் தன் மனைவியிடம் தன்னுடன் வேலை செய்யும் சௌத்ரி என்ற பெங்காலி ஒருவன் தன்னை அன்று இரவு சாப்பாட்டுக்கு அழைத்திருப்பதாகக் கூறிச் சென்றான். நல்ல மீன் வறுவல் கிடைக்கும் என்ற ஆவலுடன் சென்றான். சென்றவன் அடுத்த நாள் விடியற்காலையில் நொந்துப் போய் திரும்ப வந்தான். இரவு முழுவதும் சௌத்ரி வீட்டில் பக்திப் பாடல்கள் பாடிய பின் கடைசியில் சிறிது பொறி கடலைதான் கிடைத்தது. என் கேள்வி. பெங்காலி என்ன சொன்னான்? பஞ்சாபி என்னப் புரிந்துக் கொண்டான்?

3. 15 டிசம்பர் 1996-ல் மாரடைப்பால் இறந்த ஒருவன் 14 டிசம்பர் 1996-ல் புதைக்கப்பட்டான். என்ன நடந்தது? (புதைத்ததால் இறக்கவில்லை என்பதையும் கூறி விடுகிறேன்).

4. கோவிந்தனும் ராமனும் அவர்கள் தாய் பத்மாவுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் ஆனால் இரட்டையர் அல்ல. எங்கனம்?

5. இந்த வரிசையை பாருங்கள். 1, 1, 1, 2, 1 ... அடுத்தது என்ன எண்? ஏன்?

6. This question is addressed to Mathy Kandaswamy only. Did you locate the reference to my hyperlink. I have already posted it.

அன்புடன்,
டோண்டு ராகவன்

20 comments:

Aruna Srinivasan said...

முதல் கேள்விக்கு சரியான விடையை முதலில் போட்டுடலாம்; பாக்கி அப்புறம் யோசிக்கலாம்; ராகவன், எகிப்திலேயும் உருதா? இடமிருந்து வலம் படிக்க !! :-)

dondu(#11168674346665545885) said...

உருது இல்லை. அரபி மொழி. (reading from right to left!)
ஆனால் இது உங்கள் விடை சரியாக இருப்பதைத் தடை செய்யாது என்று உறுதியாகக் கூறுகிறேன். (அடேய் டோண்டு அடங்குடா). அன்புடன்,
டோண்டு

Kasi Arumugam said...

இறந்தவர் வியட்நாமில் இறந்த அமெரிகாரோ?

அதாவது பிரேதத்தை மேற்கிலிருந்து கிழக்காக சர்வதேச தேதிக்கோட்டைக் கடந்து கொண்டு சென்று புதைத்தார்களோ?

Kasi Arumugam said...

கோவிந்தன் அம்மா பத்மாவும் ராமன் அம்மா பத்மாவும் ஒரே ஆள்னு சொல்லலையே:P அதனால் அவங்க இரட்டையர் இல்லை.

dondu(#11168674346665545885) said...

"அதாவது பிரேதத்தை மேற்கிலிருந்து கிழக்காக சர்வதேச தேதிக்கோட்டைக் கடந்து கொண்டு சென்று புதைத்தார்களோ?
100% Right.
Regards,
Dondu Raghavan

dondu(#11168674346665545885) said...

தவறு காசிலிங்கம் அவர்களே. ஒரே பத்மாதான். ஒரே தாய்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Jsri said...

கோவிந்தனும் ராமனும் ஒரே ஆள்தான். ஒரே ஆளுக்கான இரண்டு பெயர்கள்.

[இதெல்லாம் ஹாங்காங்ல பகல் நேரத்துல கேக்கறதில்லையா ராகவன். நடுராத்திரி 2:18. மூளை freeze ஆகிக் கிடக்கு. விடியறதுக்குள்ள யாராவது சொல்லிடுவாங்க.]

Jsri said...

1,1,1,2,1, *3*

dondu(#11168674346665545885) said...

ஏன் என்று உங்களை நான் கேட்கப் போவதில்லை ஜயஸ்றீ அவர்களே. சரியான விடைதான். ஆனாலும் ஏன் என்பதை நீங்களே மற்றவர்களுக்காகக் கூறி விடுங்கள். உங்களுக்குத் தெரியும் என்பது எனக்குப் புரிந்து விட்டது.
"கோவிந்தனும் ராமனும் ஒரே ஆள்தான். ஒரே ஆளுக்கான இரண்டு பெயர்கள்." இல்லை இரண்டு பேர்தான். (விடை தெரிந்ததும் உதை வாங்கப் போகிறாய் டோண்டு!)

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jayaprakash Sampath said...

4).கோவிந்தன், ராமன் கூடவே ஒரு கிருஷ்ணனும் பிறந்திருப்பான். ஆகவே அவர்கள் ட்வின்ஸ் இல்லை. ட்ரிப்லெட்ஸ்.

5).1,1,1,1,2,1,1,3,1,1,4,1 என்பதுதான் அந்த சீரிஸ்

Jsri said...

1,1 அடுத்து 1,2 அடித்து 1,3 அடுத்து 1,4 என்று அந்த series.

அப்படி என்றால் கோவிந்தன் ராமன் மட்டும் இல்லை, எல்லோருமே அவர்கள் அம்மாவிற்கு ஒரே ஒரு பிரசவத்தில் பிறந்தவர்கள் தானே" என்று கடிக்கப் போகிறீர்கள் என்றால் [அதாவது கோவிந்தன் ஒரே ஒரு பிரசவம், ராமன் ஒரே ஒரு பிரசவம்] e-uthai நிச்சயம். :)

Jsri said...

பிரகாஷ் (Grrr..) இன்னும் தூங்கலையா? :( போனாப் போறது இரண்டாவது புதிர் உங்களுக்குதான்.

ராகவன் இரண்டாவது புதிர் அந்த பெங்காலி அல்லது பஞ்சாலி மொழியோடு சம்பந்தப்பட்டிருந்தா நான் காலி. இது அழுகுணி ஆட்டம். நான் மறத் தமிழச்சியாக்கும். :(

dondu(#11168674346665545885) said...

ஜயஸ்றீ, ட்ரிப்ளெட்ஸ் சரியான விடை. அதற்கே உதை வரும் என்று பயந்தேன்.
"1,1 அடுத்து 1,2 அடித்து 1,3 அடுத்து 1,4 என்று அந்த ஸீரீஸ்" சரி. ஆனால் ஏன் அந்த ஸீரீஸ் வந்தது என்று எழுதாதவரை உங்கள் விடை பாதிதான் சரி.
இகாரஸ் எழுதியதும் (1,1,1,1,2,1,1,3,1,1,4,1) சரியல்ல. நான் எழுதியது 1,1,1,2,1. இன்னும் ஒரு க்ளூ. இது நீங்கள் தினமும் எதிர்க்கொள்ளும் நிகழ்ச்சி. அது என்ன என்றுக் கூறினால்தான் சரியாக இருக்கும். நான் கேட்ட ஏன் என்றக் கேள்விக்கு விடை இன்னும் வரவில்லை.
(நீங்கள் திருவல்லிக்கேணி மெரினா கடற்கரைக்கு வந்திருக்கிறீர்களா?)

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜெயஸ்றீ, பெங்காலி பஞ்சாபி மொழிகள் உங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இதற்கான இன்னொரு க்ளூவைக் கூறி விடுகிறேன். பெங்காலி கூறியது: "இன்று இரவு எங்கள் வீட்டு போஜனுக்கு வரவும்." இது என்னிடம் அடுத்த நாள் மல்லிக் அழுதுக் கொண்டே ஹிந்தியில் சொன்னது. நான் அதை இங்குத் தமிழ்ப்படுத்தியுள்ளேன்
அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

பஜன் என்பதை பெங்காலி போஜன் என்று உச்சரித்திருப்பார். மல்லிக்கும் நம்ம போஜனம்ன்னு நினைச்சுக்கிட்டுப்
போயிருப்பார்!

dondu(#11168674346665545885) said...

Congrats Thulasi!
regards,
Dondu Raghavan

பினாத்தல் சுரேஷ் said...

. கோவிந்தனும் ராமனும் அவர்கள் தாய் பத்மாவுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள் ஆனால் இரட்டையர் அல்ல. எங்கனம்?

There was one more krishnan during that delivery.. they were triplets.

2 - LOL- i had a lot of problems interactinge with Bengalis and their thick accented Hindi!

dondu(#11168674346665545885) said...

Triplets' answer has already been given by Icarus.
Regards,
Dondu Raghavan

Kannan said...

> 1,1,1,2,1. இன்னும் ஒரு க்ளூ. இது நீங்கள் தினமும்
> எதிர்க்கொள்ளும் நிகழ்ச்சி. அது என்ன என்றுக்
> கூறினால்தான் சரியாக இருக்கும்.
விடை என்னவாக இருக்கும் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருதேன் அப்பொழுது "டங்", "டங்" என்று மணி இரண்டடித்தது. அட!

dondu(#11168674346665545885) said...

"என்னவாக இருக்கும் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருதேன் அப்பொழுது "டங்", "டங்" என்று மணி இரண்டடித்தது. அட!"
விடை சரிதான் kaNnan. ஆனால் நேற்றே அதை நான் இன்னொருப் பிந்தையப் பதிவில் எழுதி விட்டேன் என்பதைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். எது எப்படியாயினும் இதைத் தனிப்பட்ட முறையில் கண்டு பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது