3/27/2007

விடாது கருப்புவுக்கு நன்றி

விடாது கருப்பு செய்த ஒரு நல்ல காரியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது பெரியார் பேச்சு பற்றிய இப்பதிவைத்தான் குறிப்பிடுகிறேன்.
தனது ஆருயிர் மனைவி நாகம்மாள் மறைந்த சமயத்தில் பெரியார் அவர்கள் மனம் விட்டு எழுதியதை இங்கே கீழே அப்படியே தருகிறேன்.

உண்மையிலேயே கூறுகிறேன் தனது இப்பேச்சால் பெரியார் அவர்கள் என் மதிப்பில் மிகவும் உயர்ந்தார். அவர் பொதுக்கூட்டங்களிலோ, தனது கட்டுரைகளிலோ என்னதான் கடுமையான சொற்களை உபயோகித்தாலும் நேரில் பழக இனிமையானவர் என்றும் தனக்கு மிகவும் இளையவர்களையும் வாங்க என்று மரியாதையாக விளிப்பார் என்றும் படித்துள்ளேன். ஹிந்து நிருபராக பணி புரிந்த எனது தந்தையார் நரசிம்மன் அவர்களே என்னிடம் கூறியிருக்கிறார் என்பதை நான் பெரியார் அவர்களது திருமணம் பற்றிய பதிவில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

இப்போது வி.க.தனது பதிவில் இட்ட பெரியார் அவர்களது பேச்சை அப்படியே கீழே போடுகிறேன். நன்றி விடாது கருப்பு மற்றும் குடிஅரசு இதழ் 14.5.1933. தடித்த சாய்வெழுத்துகளில் சில வரிகளை குறித்திருப்பது நான். என்னைக் கவர்ந்த வரிகள் அவை.

"நாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக!

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படியிருந்தாலும், நாகம்மாளை ‘மணந்து' வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.

நான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.

பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.

ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

2, 3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு.

ஆனால், அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும், நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!

'குடிஅரசு' 14.5.1933"

இப்போது மறுபடியும் டோண்டு ராகவன்.

மகாத்மா காந்தி அவர்கள் தனது சத்திய சோதனையில் தன்னைப் பற்றி பல குறைகளை வெளிப்படையாக எழுதியதற்கு எவ்வகையிலும் பெரியார் அவர்கள் மேலே எழுதியது நேர்மையில் சிறிதும் குறைந்ததல்ல. உண்மையிலேயே அவர் பெரியார்தான். அவரை அப்படிப்பட்ட வரிகளை எழுத வைத்த உத்தமப் பெண்மணியான அமரர் நாகம்மாள் பற்றி கூறவே வேண்டாம்.

மறுபடியும் கூறுகிறேன், ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான். அவர் ஏற்கனவே சிலப்பதிகாரத்தை பற்றி கூறியதுடன் நான் ஒத்துப் போனதை எழுதியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

70 comments:

கருப்பு said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் உங்களையும் தாக்கியிருப்பதாக தெரிகிறது.

வேறெதும் சொல்வதற்கு இல்லை.

தீயவை தீய பயத்தலால தீயவை
தீயினும் அஞ்சப்படும்

துஷ்டரைக்கண்டால் தூர விலகு.

இவற்றை எல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்பதில்லை.

மிகுந்த ஏமாற்றமளிக்கும் பதிவு.

முத்துகுமரன் said...

நாகம்மை மறைவு குறித்த பெரியாரின் எண்ணங்களை முன்பே
இங்கே பதிவிட்டிருக்கிறேன். தொடர்புடைய பதிவென்பதால் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்

dondu(#11168674346665545885) said...

//ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் உங்களையும் தாக்கியிருப்பதாக தெரிகிறது.//
உங்களுக்கு என்னைப் பற்றி தெரிந்தது அவ்வளவுதானா.

பதிவு பெரியாரைப் பற்றியது. உண்மையிலேயே பெரியாரை அவர் இம்மாதிரி எழுதியதற்காகப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றியதாலேயே பாராட்டினேன்.

அதே சமயம் இன்னொருவர் பதிவை அப்படியே எடுத்து போடும்போது சம்பந்தப்பட்ட பதிவருக்கு நன்றி தெரிவிப்பதுதான் முறை. விடாது கருப்பு மேல் எனக்கு இருக்கும் விமரினத்தை நான் அப்படியே வைத்துள்ளேன். அவரும் அப்படியே என்பதையும் அறிவேன்.

ஆயினும் இப்பதிவுக்கு நன்றி கூறும் தருணத்தில் அவற்றை மறுபடியும் கூறுவது நாகரிகமாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அடேடே ஆமாம். நீங்கள் ஏற்கனவே போட்டுள்ள பதிவுதான் கோபமுள்ள இளைஞன் முத்துக்குமரன் அவர்களே. நான் அப்போது பார்க்காது விட்டிருக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Karuppu,

Dont Be Kiddish. Do Understand things. Just Learn from your Mistakes.

Suresh.

மிதக்கும்வெளி said...

உரையாடலுக்குத் தயாராயிருக்கும் உங்கள் நெகிழ்வான மனநிலையைப் பாராட்டுகிறேன். நன்றி.

பிரியங்களுடன்
சுகுணாதிவாகர்.

லக்கிலுக் said...

இது குறித்த கருப்பு மற்றும் முத்துக்குமரனின் பதிவுகளை தவற விட்டு விட்டேன். தங்கள் பதிவு வாயிலாக தந்தை பெரியாரின் இந்த இரங்கல் செய்தியினை படிக்க நேர்ந்தது. மிக்க நன்றி டோண்டு சார்!

ஜோ/Joe said...

//இது குறித்த கருப்பு மற்றும் முத்துக்குமரனின் பதிவுகளை தவற விட்டு விட்டேன். தங்கள் பதிவு வாயிலாக தந்தை பெரியாரின் இந்த இரங்கல் செய்தியினை படிக்க நேர்ந்தது. மிக்க நன்றி டோண்டு சார்!

//
ரிப்பீட்டே

dondu(#11168674346665545885) said...

விடாது கருப்புவுக்கு ஒரு வார்த்தை. புதியவன் என்ற பெயரில் எழுதியது நான் அல்ல. நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் முதல் பாராவுடன் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இருப்பினும் அதை அனுமதித்தேன், காரணம் உங்களுக்கு நன்றி கூறி போட்ட பதிவில் உங்கள் முதல் பின்னூட்டத்தை மட்டுறுத்த விருப்பமில்லாததால். மற்றப்படி புதியவனின் அப்பின்னூட்டம் உங்கள் பின்னூட்டத்திற்கு எதிர்வினையாக அமைந்ததால் அதையும் அனுமதித்தேன்.

இருப்பினும், பெரியாருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக நான் போட்ட இப்பதிவில் வேறு திசை திருப்பல் வேண்டாம் என்பதால் புதியவனது அப்பின்னூட்டத்தையும் எடுத்து விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

ஹிட்லர் கூட தன் சுயசரிதையில் நிறையவே தன்னைப்பற்றிய சுய விமர்சனம் செய்துகொண்டார். அந்தப் புத்தகங்களையும் படித்து அதற்காக ஹிட்லருக்கும் ஒரு பதிவைப் பாராட்டிப் போடுங்கள் உங்களுக்குப் புன்னியமாகப் போகும்.

Anonymous said...

இத படிச்சா என்ன தெரியுது?

பெரியார் ஒரு பெரிய பைத்தியம்.

Anonymous said...

//ஹிட்லர் கூட தன் சுயசரிதையில் நிறையவே தன்னைப்பற்றிய சுய விமர்சனம் செய்துகொண்டார். அந்தப் புத்தகங்களையும் படித்து அதற்காக ஹிட்லருக்கும் ஒரு பதிவைப் பாராட்டிப் போடுங்கள் உங்களுக்குப் புன்னியமாகப் போகும்.//

ரீப்பீட்டே

Anonymous said...

"வாழை இலைல பேண்டு போடும் நம்ம காஞ்சி காமகேடி சுப்பரமணியையும் சுயசரிதை ஒன்னு எழுத சொல்லுங்க நோண்டு ஐயா."

காமகேடியாவது இலைல பேண்டான். திராவிட அரசியல்வாதிங்க மக்களொட சாப்பாட்டு இலைல பேண்டுடானுங்க! அவனுங்க சுயசரிதை எழுத யவனும் கேக்காதிங்கடா.

வஜ்ரா said...

யாரு இந்த புது புதியவன்...

அப்ப அந்தப் புதியவன் ஒரு பழையவனா ?

Anonymous said...

நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எல்லாவற்றையும் வெறும் "லாபம்", "நஷ்டம்" என்கின்ற வியாபர கணக்கில்மட்டும் பார்த்திருக்கிறார் போலிருக்கிறது. இவர் எந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்?

....... (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல பண வசூலுக்காக அல்ல)........

என்று எழுதிர்யிருக்கிறாரே. அப்படியானால், அவர் தன் மனைவி மறைந்தவுடன் பண வசூல் செய்வதை எல்லாம் விட்டு விட்டாரா? தனது சமூக சேவைகளை ஃப்ரீயாக செய்துவந்தாரா? அப்படியானால் உண்மையிலேயே மதர் தெரசாவைவிட மிகப் பெரிய தியாகியாய் இருக்கும் இவருக்கு ஏன் நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை? ஒருவேளை இவர் செய்துவந்த தொண்டுகள் நோபல் பரிசு கொடுக்கத் தகுந்த துறைகளில் இல்லையா?

மற்ற எந்த விஷயம் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் புரிகிறது. சாகும் வரையில் தன் மனைவிக்கு எந்த நல்ல காரியமும் செய்யாமல் இருந்துவிட்டு செத்த பின்னால் கண்ணீர் வடிப்பவரை பெரிய ஆளாக நினைக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்பது. இதெல்லாம் தனது தவறுகள் என்று தெரிந்தும் திருத்திக்கொள்ளாமல், தன் மனைவி சாகும்வரை காத்திருந்து கண்ணீர் வடிப்பதற்கு சரியான தமிழ் வார்த்தை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். இந்த மொழியை நான் நன்றாகக் கற்றுக்கொண்டுவிட்டாலும், கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன போலும்.

யார் இந்த ஈ.வே.ரா?

எதற்காக இவர் மனைவி செத்ததற்கான இரங்கல் கடிதத்தை எல்லாரும் படிக்கும் பத்திரிக்கையில் போட வேண்டும் என்று யோசித்துப் பார்த்தால் இவர் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான ஆளாய் இருந்திருக்கவேண்டும் என்பது மட்டும் புரிகிறது.

தன் மனைவி சாகும்வரையில் திருந்தாமல் செத்த பின்னால் கண்ணீர் வடிக்கும் இவர் ஏதேனும் சமூகத்தை சீர்திருத்தவந்தவர் என்றெல்லாம் சொல்லி ஜோக்கெதுவும் அடிக்காமல் சீரியஸாகப் பதில் சொல்லவும்.

பெங்களூர் American

Anonymous said...

என்ன டோண்டு சார்,

ரொம்பத்தான் பயந்துட்டீங்க போலிருக்கு!

விடாது கருப்புவின் அந்தப் பதிவை மீள் பிரசுரம் செய்திருக்கிறீர்களே, அது பழைய இடுகையாக்கும் என்று நீங்கள் கொடுத்துள்ள லிங்க் மூலம் சென்று பார்த்தால், அதில் இன்றைய தேதியே போட்டிருக்கிறது (27.03.2007). ஆனால் தமிழ்மணம் தளத்தில் காணோம். பல வழிகளில் தேடினேன் கிட்டவில்லை. அந்த இடுகையில் தமிழ்மண விசைப் பலகையும் காணவில்லை. நீங்கள் அவருடைய பதிவை bookmark செய்து அடிக்கடி சென்று பார்ப்பீர்கள் போலிருக்கிறது. ஒரு வேளை அவருடைய இடுகை தமிழ்மணத்தில் வரவில்லை என்பதால் நீங்கள் அதனைப் பிரசுரம் செய்தீர்களா என்பது புரியவில்லை.

அப்படி பெரியாரின் கருத்துக்களைப் பற்றி எழுதுவதுதான் முக்கியமானால் அதன் மூலத்திலிருந்தே எடுத்து எழுதியிருக்கலாமே. உங்கள் இடுகையின் தலைப்பில் பெரியாரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விடாது கருப்புவுக்கு நன்றி என்று இட்டிருக்கிறீர்கள். விடாது கருப்பு யாரென்பது உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். கொஞ்ச நஞ்சம் சந்தேகமிருந்தாலும் அதனைப் போக்கும் வண்ணம் அவரே தன் தனிப்பட்ட முத்திரையுடன் உடனே பின்னூட்டம் இட்டுவிட்டார்!

நன்றி வேறு; பின்னூட்டத்தில் தன்னிலை விளக்கம் வேறு; புதியவனின் பின்னூட்டம் கருப்புவை சாடுவதால் அதனை நீக்கல் வேறு....ம்ம்

ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் என்னதான் முயற்சித்தாலும் உங்களை விடாது கருப்பு!!

உங்களிடம் மதிப்பு வைத்திருக்கும்,

எஸ்.கே

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் எஸ்.கே. அவர்களே. பயமா எனக்கா? :))

நிஜமாகவே பெரியார் பற்றிய அச்செய்தி எனக்கு புதிதாகவும் உள்ளத்தைக் கவர்வதாகவும் இருந்தது. அதனாலேயே போட்டேன்.

அதுவும் அதை நான் விகவின் பதிவில்தான் பார்த்தேன் என்பதும் நிஜம். நான் காப்பி பேஸ்ட் செய்தது பெரியாரின் எழுத்து என்றாலும் அதுவே 100% விடாது கருப்புவின் அப்பதிவுமாகும். ஆகவே எனக்கு வேறு வழியில்லை.

மற்றப்படி நாங்கள் இருவரும் ஒருவரை பற்றி இன்னொருவர் வைத்திருக்கும் கருத்தும் தெரிந்ததுதான்.

எனது இப்பதிவு எந்த வித எதிர்ப்பார்ப்புடனும் நான் போடவில்லை. எனது வாசகர்களுடன் எனக்கு தோன்றியதை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//அந்தப் புத்தகங்களையும் படித்து அதற்காக ஹிட்லருக்கும் ஒரு பதிவைப் பாராட்டிப் போடுங்கள் உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்.//

//எதற்காக இவர் மனைவி செத்ததற்கான இரங்கல் கடிதத்தை எல்லாரும் படிக்கும் பத்திரிக்கையில் போட வேண்டும் என்று யோசித்துப் பார்த்தால் இவர் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான ஆளாய் இருந்திருக்கவேண்டும் என்பது மட்டும் புரிகிறது.//

மனைவி இறந்த மூன்று நாட்களுக்குள் ஒரு வித கையறு நிலையில் போடப்பட்ட அப்பதிவு என் மனதைக் கவர்ந்தது. அதை போடுவதற்கும் நேர்மை இருக்க வேண்டும்தானே. அது இவரிடம் இருந்திருக்கிறது என்பதை அவர் கருத்தை பல இடங்களில் எதிர்த்து வரும் இந்த டோண்டு ராகவன வலியுறுத்த விரும்புகிறான் அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சிறப்பானதொரு பதிவு டோண்டு ராகவன்.

பெங்களூர் அ.மு.க தலைமை கழகம்.

உண்மைத்தமிழன் said...

திருஷ்டி படப் போகுது கருப்பே..

ஆஹா யாருங்க அங்க சும்மா நிக்குறது? இருக்கிறதுலேயே பெரிசா ரெண்டு மாலையைக் கொண்டாங்கப்பா.. ஒண்ணை நம்ம டோண்டு ஸாருக்கும், இன்னொண்ணை நம்ம போராளி, சுயமரியாதை சிங்கம் விடாது கருப்புவுக்கும் போடுங்கப்பா. இது யார் கண்லேயும் படாம இருக்கணுமே? இப்பத்தான்யா இந்த வலைத்தளம் தளம் மாதிரியிருக்குது. எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு.. அவனே, இவனேன்னு கத்திக் கூச்சல் போட்டுக்கிட்டு. இப்ப பாருங்க.. எவ்ளோ நாகரீகமா கருத்துக்களைப் பகிர்ந்துக்குறாங்க.. இதான்னே ஒரிஜினல் பகுத்தறிவு.. அண்ணே விடாது கருப்பண்ணேன்.. நான் நிசமாவே சீரியஸாத்தான் எழுதுறேன். கிண்டல் பண்றன்னு நினைச்சுக்காதீங்க.. மெதுவா.. அமைதியா.. நாகரிகமா நாம பேசுவோம்ணேன்.. பழகுவோம்ணேன்.. வாழ்க வளர்க..

அன்புடன்
தமிழ்சரண்

Anonymous said...

மூன்று நாட்களுக்குள் ஒரு வித கையறு நிலையில் போடப்பட்ட அப்பதிவு

கையறு நிலையிலதான் நிறைய உண்மை வெளிய வரும் போலிருக்கு.

dondu(#11168674346665545885) said...

//கையறு நிலையிலதான் நிறைய உண்மை வெளிய வரும் போலிருக்கு.//
100% நிஜம். 35 ஆண்டு காலம் தனக்கு உறுதுணையாக இருந்தவரை பிரியும்போது, ஒரு கணம் இது என்ன வாழ்க்கை என்ற சலிப்பு ஏற்படுவது உண்மையே.

நண்பன் மரணமடைய மயானத்துக்கு சென்று அவனை எரியூட்டி, அடுத்த நாள் எலும்புகள் பொறுக்கப் போகும்போது ஒரு விரக்தி தோன்றும். இத்தனை அமர்க்களமும் ஒரு பிடி சாம்பல் ஆவதற்காகத்தானா என்று. வாழ்க்கையிலேயே சலிப்பு தட்டும். அதை மயான வைராக்கியம் என்பார்கள்.

சாதாரண நண்பனுக்காகவே அத்தனை துயரம் என்றால் உயிர்க் காதலி மறைந்தது எவ்வளவு சோகம் தரும்? அந்த நேரத்தில் பொய்யுரைக்கத் தோன்றாது.

அவ்வாறேதான் பெரியார் அவர்களும் இவ்விடத்தில் முழுக்க முழுக்க ஒளிவு மறைவின்றி இந்த உண்மையைப் பேசினார். அதைத்தான் நான் பாராட்டினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு, விடாது கருப்பு தமிழமணத்தால் தூக்கபட்ட இந்த நேரத்தில் நீர் அவனுக்கு விளம்பரம் தருவது பல சந்தேகங்களை தூண்டுகிறது.

dondu(#11168674346665545885) said...

//டோண்டு, விடாது கருப்பு தமிழமணத்தால் தூக்கபட்ட இந்த நேரத்தில் நீர் அவனுக்கு விளம்பரம் தருவது பல சந்தேகங்களை தூண்டுகிறது.//
சந்தேகங்கள் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சந்தேகங்கள் என்ன?

1.விடாது கருப்பு யார் என்பது உமக்கு உண்மையில் தெரியாதா?
2.உம்ம வீட்டு போட்டோ திருடி வலைபூவில் போட்ட பரதேசி யார் என உமக்கு தெரியாதா?
3.தமிழ் வலைபூவில் இருக்கும் நிரந்தர சைக்கோ யார் என உமக்கு தெரியாதா?

நீர் என்னவோ வெள்ளை கொடிகாட்டி இணைய காந்தி மகான் பட்டம் பெற ஆசைபடுகிறீர்கள் என்று அனைவரும் கருத இடம் தந்து விட்டீர்கள்.

துஷ்டரைக்கண்டால் தூர விலகு.

நீர் என்னவோ வடை பாயசம் போட்டு வா வந்து தொந்தரவு செய் என்பது போல இருக்கு

அரவிந்தன் நீலகண்டன் said...

விடாது கருப்பு தூக்கப்பட்டால் என்ன கெட்டுவிட்டது. ஏறக்குறைய அதே மொழியில் பேச பூங்கா ஆரம்பித்துவிட்டதே. சிறியான் ஈவெரா தன் பொண்டாட்டியை தன் நண்பர்களுக்கு கூட்டிக்கொடுக்க முயற்சித்ததற்கு வருத்தமாவது தெரிவித்திருக்கிறாரா?

அரவிந்தன் நீலகண்டன் said...

அடுத்தது கன்னட பிரசாத் ஏதாவது கையறு நிலை காவியம் உரைத்தால் அதையும் போடுங்கள்.

dondu(#11168674346665545885) said...

//நீர் என்னவோ வெள்ளை கொடிகாட்டி இணைய காந்தி மகான் பட்டம் பெற ஆசைபடுகிறீர்கள் என்று அனைவரும் கருத இடம் தந்து விட்டீர்கள்.//
நிச்சயமாக இல்லை. காந்தி மகான் எங்கே நான் எங்கே?

இன்று பெரியார் எழுதியதை படித்தது எனக்குள் ஒரு எதிரொலியை எழுப்பிய்து. ஆகவே பாராட்ட நினைத்தேன், பாராட்டியாகி விட்டது. எல்லாமே ஒரு அரை மணி நேரத்தில் நடந்தது. எங்கிருந்து அதை எடுத்தேனோ அப்பதிவை போட்டவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என் கடமை. அதையும் செய்தாகி விட்டது.

மற்றப்படி நிலையில் வேறு மாற்றம் எதுவும் இல்லை. எனது போராட்டம் வேறு தளத்தில் நடக்கிறது, நடக்கும். அதில் தொய்வில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நேர்மையாக போட்ட பதிவுக்கு எங்களின் பாராட்டுக்கள்.

டோண்டு ரசிகர் மன்றம்
நங்கநல்லுர் - தலைமை கிளை

பொன் வானவில் said...

டோண்டு அவர்கள் தனது நெஞ்சத்தை பாதித்த ஒரு விஷயத்தைப் பற்றி எழுத நினைத்தார், எழுதி விட்டார். அவ்வாறு எழுதுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவருக்கு நன்றி கூற நினைத்தார், அதையும் செய்திருக்கிறார். அவ்வளவு தானே விஷயம். ஒருவர் யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நன்றி கூறலாம் அல்லது கூறாமலும் இருக்கலாம். இந்த விஷயத்திற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் என்று தான் எனக்கு புரியவில்லை. கூற வந்த செய்தியை மட்டும் எடுத்துக்கொண்டு, நாகரீகமாக, படித்தவர்கள் போல பேச கற்றுக்கொள்வோம்.

வழக்கம் போல நல்லதொரு பதிவை போட்டிருக்கிறீர்கள் டோண்டு அவர்களே. ஆனால் உங்களது நன்றி காணிக்கையை கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாக போடாமல், முதல் பத்தியில் மட்டும் குறிப்பிட்டிருந்தால் போதாதா என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
இருப்பினும் அவ்வாறு போடுவது உங்கள் விருப்பமே என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

உங்களிடமிருந்து மேலும் பல நல்ல பதிவுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
ராஜாமணி

ஆதி said...

நட்பு என்றால் என்ன என்று தெரியுமா திம்மிகளுக்கு? உண்மைத் தமிழன் என்று ஒருவர் நன்றாக அறிவுரை சொல்லி இருக்கிறார். அதைப் பார்த்தபிறகாவது திம்மிகள் திருந்த வேண்டாமா?

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ராஜாமணி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அரவிந்த அவர்களே,

பெரியார் மேல் எனக்கு பல விமரிசனங்கள் இன்னும் உண்டு. இருப்பினும் அவர் மனைவி நாகம்மாளை பற்றி அவர் எழுதியதை படித்தவுடன் நீங்கள் சொன்னதை நம்ப எனக்கு மனம் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

டோண்டு சார்!

அரைவிந்தன் நீலகண்டனின் அறிவுகெட்ட பின்னூட்டத்தை பிரசுரித்ததன் மூலம் உங்கள் எண்ணம் என்னவென்று புரிந்து விட்டது. எப்படியோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு விடுகிறீர்கள்.

ஜயராமன் said...

ராமநவமியில் ராகவனால் ராமசாமிக்கு படையல்!!!!

மலத்தில் கிடைத்த வெள்ளிக்காசு என்று கை நீட்டும் மனிதர்கள்!!!!

அடுத்து டோண்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது

"போலி டோண்டுவிடம் என்னை கவர்ந்தவைகள்".

விரைவில் பதியப்படும்.

Anonymous said...

////பெரியார் மேல் எனக்கு பல விமரிசனங்கள் இன்னும் உண்டு. இருப்பினும் அவர் மனைவி நாகம்மாளை பற்றி அவர் எழுதியதை படித்தவுடன் நீங்கள் சொன்னதை நம்ப எனக்கு மனம் இல்லை ////

அப்படிப்போடு தலீவா.

ஆதாரம் இல்லாம அரைவிந்தன் விசம் கக்கினாக்க நம்புறதுக்கு நாங்க என்ன பார்ப்பனீய பன்னிங்களா?

dondu(#11168674346665545885) said...

அன்புள்ள லக்கிலுக்,

மனதில் பட்டதை தைரியமாக உரைக்கிறீர்கள். ஆகவே நானும் உங்களைப் பற்றி எனது மனதில் பட்டதை வெளிப்படையாகவே கூறுகிறேன்.

நீங்கள் ஒரு பிளாக்மெயிலரின் பயமுறுத்தலுக்கு பயந்து எழுதுகிறீர்கள்.

பெரியார் பற்றி அரவிந்தன் எழுதியதை நான் மறுத்த நிலையிலும் நீங்கள் இவ்வாறு எழுதினீர்கள் என்றால் நான் மேலே சொன்னதைத் தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது.

பரவாயில்லை இப்போது நீங்கள் எழுதியதன் மூலம் உங்களுக்கு அந்த பிளாக்மெயிலரிடமிருந்து தற்காலிகமாகவாவது சில Browney புள்ளிகள் கிடைத்தால் சந்தோஷமே.

என்ன, நான் பதிலை போடுவதற்கு முன்னரே அதை இட்டிருந்தால் இன்னும் அதிக Browney புள்ளிகள் கிடைத்திருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஜயராமன் அவர்களுக்கு,

பெரியார் எழுதியதை படித்ததும் எனக்குள் எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடே இப்பதிவு.

Nothing more nothing less.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன் வானவில் said...

Exactly, nothing more nothing less. Do not be side-tracked by some of the negative comments you get. Go on and write more. Of course the negative comments by certain people will persist, but why worry.

Tamil is such a beautiful language. I am surprised that certain "individuals" have chosen the most horrifying, degrading manner to express themselves.

Let's show more professionalism in our comments and writing. Let there be criticisms about each other's work, but it is not hard at all to add a pinch of courtesy and manners to that.

Anonymous said...

அடுத்தது கன்னட பிரசாத் ஏதாவது கையறு நிலை காவியம் உரைத்தால் அதையும் போடுங்கள்.


பொண்டாட்டி உயிரோடு இருக்கும்போது தான் ஊருக்கு சொன்ன உபதேசத்தை நடைமுறையில் செய்யாதவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நிறைய இருக்கும் போலிருக்கிறதே.

யார் இந்த கன்னட ப்ரசாத்? அவருடைய முதல் பொண்டாட்டியும் செத்துவிட்டாரா?

இங்கே பெங்களூரில்தான் இருக்கிறாரா? பெண்டாட்டி செத்ததற்குத் துக்கம் கேட்பது உங்கள் ஊர் பழக்கம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் ஒரு அமெரிக்கனான என்னை துக்கம் கேட்க அனுமதிப்பார்களா?

பெங்களூர் American

Anonymous said...

சார், என்ன லக்கிய அவளவு சாதரனமா நென்சிடிங்க. லக்கிய யாராவது மிரட்டினா போடா தெ..பை.. சொல்லிட்டு பொயிடுவாரு, இல்ல?

Anonymous said...

{"போலி டோண்டுவிடம் என்னை கவர்ந்தவைகள்".

விரைவில் பதியப்படும்.}

அரசியல் இதெல்லாம் சகஜமப்பா.

Anonymous said...

" பெண்டாட்டி செத்ததற்குத் துக்கம் கேட்பது உங்கள் ஊர் பழக்கம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் ஒரு அமெரிக்கனான என்னை துக்கம் கேட்க அனுமதிப்பார்களா?"

அனுமதி இலவசம்

அ.மு.க - பெங்கலூரு

மிதக்கும்வெளி said...

நண்பர் டோண்டு அவர்களுக்கு

உங்கள் மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் இந்தப் பதிவைப் போட்டதில் ஒரு விளம்பரமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தோழர்.விடாதுகருப்புவின் பின்னூட்டம் நிச்சயமாக ஜனநாயகத்தன்மை அற்றதுதான். தோழர்.லக்கிலுக்கின் விமர்சனமும் முன் தீர்மானத்துடன் கூடிய அவசர முடிவாகவே தெரிகிறது.

பெரியாருடைய நாகம்மை இரங்கல் அறிக்கையில் உள்ள இரு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்.

1. எல்லா ஆண்களும் ஆணாதிக்கவாதிகளே, ஆணாதிக்கத்திற்கான விகிதாச்சாரங்கள் வேண்டுமானால் மாறியிருக்கலாம் என்பதும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் நேர்மையும்.
2. அந்த பெரியாரின் கலங்கவைக்கும் நெகிழ்வான நடை நிச்சயமாக இலக்கியத்தன்மை வாய்ந்ததுதான்.

ஆனால் அதுபற்றிய உரையாடல்களைத் விட்டுவிட்டு விவாதங்கள் உங்களைப் பற்றியதாகவும் விடாதுகருப்புவைப் பற்றியதாகவும் மாறியிருப்பது என்பது ஆரோக்கியமற்ற தன்மையைத்தான் காட்டுகிறது. அதிலும் அரவிந்தன் நீலகண்டனின் பின்னூட்டங்களும் பெரியாரைக் கன்னடபிரசாத்தோடு ஒப்பிடும் பின்னூட்டங்களும் அருவெறுப்பாக இருக்கிறது. ஆனால் என்ன செய்வது சமூகத்திற்கு வெளியே இருப்பதுதான் இணையச்சூழலின் உள்ளேயும் ஒலிக்கிறது.
எனவே இதுபற்றிக் கவனம் குவிக்காமலும் கவலைப்படாமலும் தோன்றியதை எழுதுவதுதான் சரியென்று படுகிறது. பெரியாரைப் பார்ப்பன எதிர்ப்பிற்காக தூக்கிப்பிடிக்கும் பலர் பெண்களின் தனித்துவத்தை அங்கீகரிக்காத ஆணாதிக்கப் பாசிஸ்ட்களாகவும் இருக்கின்றனர். (ஏனெனில் அவர்கள் ஆண்களாகவும் இருக்கின்றனர்). எனவே அந்த வகையில் அந்த 'சோ கால்ட் பெரியாரிஸ்ட்' களுக்கும் இந்த இரங்கல் அறிக்கை தேவையானதுதான். நன்றி.

dondu(#11168674346665545885) said...

நல்ல, சமநிலையுடன் கூடிய பின்னூட்டம் மிதக்கும் வெளி அவர்களே. நன்றி.

என்னை பெரியாரின் அந்த வரிகள் பாதித்தன என்பது நிஜம். அந்த பாதிப்பின் வேகத்தில் இப்பதிவை சில நிமிடங்களில் தட்டச்சு செய்து போட்டதற்காக நான் வருந்தவில்லை.

இதே மாதிரி அனுபவம் பெரியாரின் உயிர்த்தோழர் மூதறிஞர் ராஜாஜிக்கும் நிகழ்ந்திருக்கிறது. இது பற்றி நான் போட்ட பதிவு இதோ: http://dondu.blogspot.com/2005/10/blog-post_24.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Gopalakrishnudu(#07148244463938149692) said...

Take care Mr.Dondu. There is one Adiseshan, who praises you too much. and his writing is deliberately misleading. There are suggestions galore that you yourself are this Adiseshan through innumerable hints.

Beware of the Greeks carrying gifts.

This is what I commented in one of Adiseshan's posts at http://adhiseshan.blogspot.com/2007/03/blog-post_5356.html

"There is a significant time gap of 17 minutes between Jayaraman's comment as blogger in Dondu's blog post and the anony comment here as ஏமாறாதவன். Unless and until this too comes as a blogger comment, there is no way of telling that these two persons are the same and even then it has to be taken with a pinch of salt.

Same goes for Rajamani's comment. Here, an anony has commented as Rajamani, whereas in Dondu's blog, Rajamani has commented as blogger.

It all seems to be an exercise in mud slinging on Jayaraman, Rajamani and on Dondu himself".

GK

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜீ.கே. அவர்களே. நானும் நிலைமையை அவதானித்து வருகிறேன். இந்த மாத முதலிலேயே எனது நண்பர் ஒருவர் இது பற்றி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதற்கு பிறகு பலரும் சேட் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் எனது கவனத்தை இந்த விஷயத்தில் ஈர்த்துள்ளனர்.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

adhi sheshan is non other than moorthi.
i request all the fellow bloggers to avoid his blogs.

Anonymous said...

Dondu

See this

http://arvindneela.blogspot.com/2007/03/blog-post_22.html

அரவிந்தன் நீலகண்டன் said...
//தங்கள் எழுத்துக்களைப் படித்தேன். ரொம்பவும் பிடித்து இருக்கிறது. தங்களைப் பற்றி சொல்லுங்களேன். வளர்ந்து வரும் எனக்கு ஆலோசனைகள் சொல்லவும்.//

ஆதிசேஷன் தங்கள் மடலை தற்போதே பார்த்தேன். நான் 2002 முதல் திண்ணையில் எழுதி வருகிறேன். என் பெயருடனேயே எழுதி வருகிறேன். இதில் தங்களுக்கு கூற அதிக விவரம் என்ன தேவையோ அது கிடைக்கும். தவிர தனிமடல்கள் தேவையில்லை. குறிப்பாக தங்களைக் குறித்து தாங்கள் எதுவுமே தெரிவித்திடாத நிலையில்.

7:23 AM
Anonymous said...
அரவிந்தன், நான் உங்கள் எதிரணியைச் சேர்ந்தவன். உங்கள் இந்துத்வா அடிப்படைவாதம் என்னைப் பொறுத்தவரை ஒரு செல்லாக்காசு. இருந்தாலும் ஒரு எச்சரிக்கை. ஆதிசேடனார் வேறு யாருமில்லை. நம் ஆப்புபுகழ் போலியார்தான்.
வடிவேல் சிண்டை மட்டும் அப்படியே விட்டுவிட்டு வேடம் கட்டுவதுபோல அவர்
விட்டுச்செல்லும் அடையாளங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். :-))
அவர் அப்பாவி அய்யங்கார்களுக்காக எடுத்திருக்கும் அவதாரம் இது. சந்தேகம் இருந்தால் எந்த நாட்டு ஐபி என்று செக் செய்து பாருங்கள். இந்த
வலையில் நீங்கள் மாட்டிக் கொண்டு விடாதீர்கள். வேறு எந்தத் தனிப்பட்ட தகவல்களையோ புகைப்படங்களையோ அனுப்பி வைக்காதீர்கள். அடுத்தவாரம் ஆப்பில் வெளியாகி உலகப்புகழ் பெற்று விடுவீர்கள். :-))

நண்பர் தங்கவேல் பதிவில் உங்களைப்
பற்றிப் படித்தேன். நீங்கள் உண்மையானவர் என்பதால் இதை எழுதி இருக்கிறேன். உங்கள் தந்தை தமிழாசிரியர் என்று தெரியவந்ததும் இன்னொரு காரணம்.

பொன் வானவில் said...

இந்த கட்டுரைக்கு வந்துள்ள பின்னூட்டங்கள் பெரும்பாலானவை பேசப்பட்டுள்ள பொருளை ஆராயாமால் வேறு விஷயங்களுக்கு செல்வது மனதுக்கு வருத்தம் அளிக்கிறது.

சீக்கிரமாக வேறு நல்லதொரு கட்டுரைக்கு சென்று விடுங்கள், டோண்டு அவர்களே. தலைப்பை கொடுப்பதில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

Anonymous said...

தங்கமணி மற்றும் பெயரிலி போன்ற முக்கியஸ்தர்கள் சொல்லியும் இன்னும் திரட்டியை விட்டு ஓடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் இழிபிறப்புகளுக்கு மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே இல்லை.

உப்பு போட்டு சோறு தின்று இருந்தால்தானே ஓடுவதற்கு?

ஹரி, ஜடாயு, அரவிந்தன், ஹரி, ஓகை, திருமலை போன்ற அறிவுஜீவி மிருகங்கள் தங்களின் வலைப்பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இருந்து மீட்டுக்கொண்டு அதன்பிறகு பூங்காவைப் பற்றியோ அதன் ஆசிரியர்களைப் பற்றியோ குறை சொல்லி இருந்தால் நான் மனம் மகிழ்ந்து இருப்பேன்.

பார்ப்பன ஏகாதிபத்தியத்தையும் அதன் அழுக்கு கோர முகத்தினையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னால் உடனே இந்துவை குற்றம் சொல்கிறார்கள் என்பார்கள். அப்போ தலித்துகள் இந்துக்கள் இல்லையா? பிழைக்க வந்த ஒண்டு குடித்தன மிருகங்கள் மொத்தமாக இந்து என்ற மதத்தினையே தங்களுக்கு சொந்தம் என்கின்றன. எங்கே போய் முட்டிக் கொள்வது?

இப்போது எஸ்கே என்கிற சைபர் பிராமணா பார்ப்பனக் கழுகு ஒன்று எரியும் திரியில் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவர் மதம் மாற்றுகிறார்களாம், ஆனால் பார்ப்பனர் ரொம்ப கஷ்ட ஜீவனம் செய்கின்றனராம்.

தேறாக்குடி மிருகங்கள்.

Anonymous said...

எல்லாமே விளக்கத்தின் அடிப்படையில் மாற்றக்கூடியதாய் இருப்பதாகத் தோன்றுகிறது.

உதாரணமாக, இந்து நூல்களிலுள்ள நல்ல அழகான கருத்துக்களைக்கூட தன் விருப்பத்திற்குத் தவறான பார்வையில் குதர்க்கமாய் குதறித் தீர்க்க்கும் மிதக்கும் வெளி என்கின்ற அம்மணி ஈவேரா தான் அடுத்தவர்களுக்குப் போதிப்பதை நடைமுறையில் செய்யாதவன் என்கின்ற ஒப்புதல் வாக்குமூலம்போல் இருக்கின்ற ஒன்றில் இலக்கிய ரசம் பொங்கி வழிவதாக வழிகிறார்.

கேட்கிறவன் கேனையனாக இருந்தால், ஈவேரா நல்லவன் என்பீர்கள் போலிருக்கிறது.

ஈவேரா எப்போதும் சுத்தமான தமிழில் பேசியதாகவோ, எழுதியதாகவோ யாரும் சொன்னதில்லை. ஈவேரா அவர்களுடைய பேச்சு கொச்சையான நடைமுறை பேச்சு.

அவருடைய பேச்சையும், எழுத்தையும் "சுத்தம்" செய்தபின்னால்தான், பத்திரிக்கையில் போடுவார்கள்.

அம்மணி, "மிதக்கும் வெளி" தன் அருமைக் காதலர் ஈவேரா பற்றி ஜல்லி அடிப்பதாக இருந்தால், அவருடைய பேச்சுக்களையும், எழுத்துக்களையும் "சரி செய்து" எழுதிய ஆசிரியர்களின் தமிழ் புலமையைப் பாராட்ட வேண்டும்.

ஈவேராவைச் சுற்றி இருந்த தமிழ் புலவர்கள், வாயில் விரல் விட்டு வாந்தி எடுத்திருக்க நேர்ந்திருக்கிறது. "எனக்குத் தேவையானவன் புத்திசாலி இல்லை. மடையன்தான்" என்று ஈவேராவே சொல்லியிருக்கிறது. அந்த தேவையானவர்கள் தங்களின் சுய தேவைக்காக தொடர்ந்து அவர் விரும்பிய வண்ணம் இப்போதும் இருக்கலாம்.


(தமிழ் புலவரான என் தாத்தா இந்த இயக்கத்தில் ஈடுபட்டு பட்ட அவமானங்களைக் கதை கதையாய் சொல்லுவார். நல்லவேளையாக என் தந்தை அமெரிக்காவில் செட்டிலாகி, அங்கே ஒரு அருமையான அமெரிக்க மாதினை மணம் செய்துகொண்டாலும், ஈவேரா வழியில் செல்லாமல் எங்களுக்கு நல்ல தமிழ் சொல்லிக்கொடுத்தார்.)

தன்னுடைய கருத்திற்கு மாற்று கருத்துச் சொல்லுபவர்களை பெரும்பாலும் இயக்கத்திலிருந்து துரத்தி அடிக்கிற ஈவேரா தனி மனித சுதந்திரம் தேவை என்று சொல்லிக்கொண்டே, அந்த சுதந்திரத்தைத் தன் இயக்கத்தினருக்குத் தராததாகத்தான் ஆனைமுத்து முதல் அத்தனைபேரும் சொல்லுகிறார்கள்.

அண்ணா ஈவேராவின் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தபோது, பத்திரிக்கைக்கு பணம் அனுப்பவேண்டிய முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்து பணம் வராததால், அந்தப் பிரமுகரை திட்டி எழுதச் சொல்லிவிட்டு, அது பிரசுரம் ஆகும் சமயத்தில் பணம் வந்தவுடன், அண்ணாவின் கட்டுரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அந்தப் பிரமுகரைப் பாராட்டி எழுதியது இந்த ஈவேரா.

இதுதான் ஈவெரா. இந்தப் பொய்மைக்கு ஜால்ரா அடிக்கும் மிதக்கும்வெளிகள் விட்டால் ஈவெரா தமிழறிஞர்களுக்கு இலக்கியப் பாடம் எடுத்தார் என்றெல்லாம் கதைவிடுவார்கள்.

த்த்த்தூ !

பெங்களூர் American

dondu(#11168674346665545885) said...

ஐயா பெங்களூர் அமெரிக்கன்,

மிதக்கும் வெளி என்னும் சுகுணா திவாகர் பக்கா ஆண்.

அது இருக்கட்டும், பெரியார் அவர்கள் நேரடியாக அந்த கவிதை நிறைந்த கையறு நிலையை எழுதியிருக்க முடியாது என்று சொன்னீர்கள். வாஸ்தவமே. ஆனால் அவர் சொல்லி டிக்டேட் செய்து எழுதப்பட்டவை அந்த வரிகள். அந்த வகையில் அதன் முழு கிரெடிட் பெரியாருக்குத்தான். அவர் உண்மையாக உணர்ந்தவற்றைத்தான் எழுதுவித்துள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஆனால் அவர் சொல்லி டிக்டேட் செய்து எழுதப்பட்டவை அந்த வரிகள்.

ஈவேரா சுருக்கமாக எழுதவேண்டியது என்ன என்று சொல்லிவிடுவதும். அதே கருத்தை (முடிந்தால்) நல்ல நடையில் எழுதித்தருவதும்தான் மற்றவர்கள் வேலை.

உங்கள் நாட்டின் வில்லன் நடிகர் நம்பியார் கையைப் பிசைந்துகொண்டே "அந்த குடும்பத்தையே அழிச்சிரு" என்று சொல்லுவது நிஜமான ஒரு விஷயம் என்று நீங்கள் நம்பினால், ஈவேராவின் நல்ல மனதும் நம்பத்தகுந்ததுதான்.

பெங்களூர் American

மிதக்கும்வெளி said...

நல்ல காமெடிதான். திருமாவளவன் மதமாற்றத் தடுப்புச்சட்டத்திற்கு எதிராக 10000 பேர்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டினார். அப்போது நான் அதை விமர்சித்து 'பெயர்மாற்றமும் மதமாற்றமும் எங்கேபோகிறது தலித் அரசியல்?' என்ற கட்டுரையை எழுதினேன். அப்போது நான், அ.மார்க்ஸ் போன்றோர் இணைந்து சுயமரியாதை இயக்கம் என்னும் அமைப்பை நடத்திக்கொண்டிருந்தோம். அதன்சார்பில் அக்கட்டுரை ஒரு சிறுவெளியீடாக வெளியிடப்பட்டது. அப்போது அந்நூலைக் கடுமையாகக் கண்டித்து ஒருகூட்டத்தில் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் தோழர் ஒருவர் என்னை 'அ.மார்க்சின் வப்பாட்டி' என்றே குறிப்பிட்டார். இப்போது பெங்களூர் அமெரிக்கன் (பெங்களூர் அமெரிக்காவிலா இருக்கிறது?) என்னை ஈ.வெ.ராவின் காவலர் என்கிறார். இந்த இரங்கல் அறிக்கை குறித்து நீங்கள் கூறும் கருத்தும் தவறு டோண்டு. அது பெரியாரே எழுதியதுதான். இலக்கியநடைக்கும் 'சுத்த' தமிழுக்கும் ஒருதொடர்புமில்லை. உண்மையைச் சொல்லப்போனால் 'சுத்த' தமிழில்தான் ஒரு நல்ல இலக்கியப்படைப்பைத் தரமுடியாது.

dondu(#11168674346665545885) said...

//இந்த இரங்கல் அறிக்கை குறித்து நீங்கள் கூறும் கருத்தும் தவறு டோண்டு. அது பெரியாரே எழுதியதுதான்.//
அப்படியா? நான் தவறாக நிரூபணம் ஆவதில் மகிழ்ச்சியே. அவரே எழுதிய வரிகள்தானா அவை. மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//தங்கமணி மற்றும் பெயரிலி போன்ற முக்கியஸ்தர்கள் சொல்லியும் இன்னும் திரட்டியை விட்டு ஓடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் இழிபிறப்புகளுக்கு மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே இல்லை.//
நீங்கள் குறிப்பிடும் அப்பின்னூட்டங்கள் போலியாருடையது என்பது வெளிப்பட்ட இந்த நிலையில் நீங்கள் கூறுவது நகைப்பைத்தான் வரவழைக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கொட்டோ கொட்டு என்று கொட்டுது பார் ஜல்லி !!!

மிதக்கும் வெளி அம்மையாரின் அடுத்த ஜல்லி. ஈவேராவின் இந்த இரங்கல் அறிக்கை நல்ல தமிழில் இல்லை என்பது.

அட அல்லாவே, நல்ல தமிழ் எது, கொச்சையான பேச்சுத் தமிழ் எது, ஈவேராவின் இந்தக் கட்டுரை பேச்சுத் தமிழில் இருக்கிறதா, இல்லை நல்ல தமிழில் இருக்கிறதா என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் இணையத்திற்கு வருகிறார்கள் என்பது இந்த அம்மையாரின் எண்ணம் போலும்.

ஜல்லி காண்ட்ராக்டில் அம்மணிக்கு நல்ல சம்பாத்தியம் கிடைக்கிறது போல !! வாழ்க வளமுடன் !!

பெங்களூர் American

Anonymous said...

/// நீங்கள் குறிப்பிடும் அப்பின்னூட்டங்கள் போலியாருடையது என்பது வெளிப்பட்ட இந்த நிலையில் நீங்கள் கூறுவது நகைப்பைத்தான் வரவழைக்கிறது.///

நீங்க சிரிச்சிக்கினே இருங்க நைனா. ஆனா, சம்பந்தப்பட்ட ஆளுங்க இதுவரைக்கும் எந்த ரியாக்சனும் காட்டிக்காம கமுக்கமா குந்திக்கிட்ருக்காங்கோ.

கமுக்கமா இருக்ரது சம்மதுத்துக்கு அடையாளம்னு எங்க ஊட்டு கெளவி ஸொல்றது.

ஆனா, இவங்களையெல்லாம் ஆதரிக்கலன்னாக்காண்டி தமில்மண்த்லருந்து தூக்கிருவாங்கன்னு கிலியாக்கீது போல்ருக்கு. எல்லாத்துக்கும் ஆமா போட்ரீங்க.

விட்டது சிகப்புக்கு ஏற்பட்டது நமக்கும் நடந்திர கூடாது இல்ல.

Anonymous said...

மிதக்கும் வெளி,

என்னை ஈ.வெ.ராவின் காவலர் என்கிறார்.

"வ" இல்லை "த".

சரியாக படிக்கத் தெரிந்திருந்தால் ஏன் இந்த நிலைமை உங்களுக்கு அம்மணி?

பெங்களூர் American

Muse (# 01429798200730556938) said...

சொல்லப்போனால் 'சுத்த' தமிழில்தான் ஒரு நல்ல இலக்கியப்படைப்பைத் தரமுடியாது.

வன்மையாகக் கண்டிக்கிறேன். எட்டுத் திக்கும் சென்று அதை தமிழருக்குத் தமிழில் தரவேண்டுமென்று எங்கள் தமிழ் புலவன் சொல்லியிருக்கும்போது, சுத்தத் தமிழில் இலக்கியம் படைக்கமுடியாது என்று கூறுகின்ற, தமிழை வெறுக்கின்ற, சுகுணாதிவார்கர் அவர்களைக் கண்டிக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

//நீங்க சிரிச்சிக்கினே இருங்க நைனா. ஆனா, சம்பந்தப்பட்ட ஆளுங்க இதுவரைக்கும் எந்த ரியாக்சனும் காட்டிக்காம கமுக்கமா குந்திக்கிட்ருக்காங்கோ.//
இதற்காகவே கோபமுள்ள இளைஞன் முத்துக்குமரன் அவர்கள் ஒரு பதிவே போட்டாரே [ஆர்க்கவில்லையா? அதில் தங்கமணி மற்றும் பெயரிலி சம்பந்தப்பட்ட பின்னூட்டங்கள் போலியாருடையது என்றும் கூறியுள்ளனரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//மிதக்கும் வெளி அம்மையாரின் அடுத்த ஜல்லி. ஈவேராவின் இந்த இரங்கல் அறிக்கை நல்ல தமிழில் இல்லை என்பது.//
முற்றிலும் சரி. இரங்கல் செய்தி நல்ல தமிழ்நடையில்தான் உள்ளது. சாதாரணமாக பெரியார் அவர்கள் எழுதுவதை திருத்தித்தான் வெளியிடுவார்கள் என நானும் படித்திருக்கிறேன். ஆனால் இந்த இரங்கல் செய்தி விஷயத்தில் அது பெரியாரின் உண்மை மனநிலையையே எடுத்து காட்டுகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். அது போதும் அவரை இந்த விஷயத்தில் பாராட்டுவதற்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Thamizhan said...

பெரியார் ஒரு திறந்த புத்தகம்.ஒளிவு மறைவின்றி அனைத்தையும் எழுதி,பேசியுள்ளார்.அவருடைய குணங்களையும் குறைகளையும் அவரே கூறியுள்ளார்.அவர் கருத்துக்களுடன் ஒத்துக்கொள்ளாத எத்துனையோ பெரியவர்கள் அவ்ருடைய துணிவு,நேர்மை,நாணயம் போன்றவற்றைப் பாராட்டியே உள்ளனர்.
அவர் எதற்கும் தகுந்த ஆதாரங்களையும் விளக்கங்களையுங் காட்டித்தான் பேசியுள்ளார்,எழுதியுள்ளார்.வாழ்க்கை
யின் பெரும் பகுதியை மிகவும் சிரமப்
பட்டு பெரிய பூதக்கண்ணாடியை வைத்துப் படித்தும்,தன்கையாலேயே
சிலரே புரிந்துகொள்ள முடியும்படியும்
எழுதியுந்தான் கழித்தார்.அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இயற்றிய போது பெரியாரிடம் காண்பித்துவிட்டு வாருங்கள் என்று சொன்னார்.சில படித்த அதிகாரிகள் அவர்களுக்கும் அண்ணாவுக்கும் தெரியாததைப் பெரியார் என்ன சொல்லிவிடப்போகிறார்,நேரமில்லை என்ற போதும் அண்ணா காண்பித்தபின் தான் சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்று விட்டார்.
பெரியார் பார்த்துவிட்டு ஒரே ஒரு வார்த்தையை மாற்றினால் நல்லது என்று சொன்னாராம்.அது தான் tying the thaali and exchanging garlands
என்பதற்குப் பதிலாக tying the thali and/or exchanging the garlands என்பது.அறிஞர் அண்ணாவே ஆச்சரியப் பட்டாராம்.பார் பெரியார் பெரியார்தான் என்றாராம்.
பெரியார் தோழர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் இலண்டன் வட்ட மேஜை மாநாட்டிற்குத்
திராவிட இனத்தலைவராகச் செல்லும்போது விமானவிபத்திலே இறந்ததற்கு எழுதிய துக்கச் செய்தியை படிப்பவர்கட்குத் தெரியும் அவர் உணர்ச்சியின் ஆழம்,எழுத்தின் சிறப்பு.
பெரியாரைப் பலர் மிகவும் கீழ்த்தரமாக எழுதுகிறார்கள்.பெரியார் அவற்றை ரசித்து அவர்கள்தான் என் விளம்பரதாரிகள் என்பாராம்.தொடரட்டும் அந்த விளம்பரம்.

மிதக்கும்வெளி said...

நான் த வை வ வாகத் தவறாகப் போட்டது இருக்கட்டும், இன்னும் நீங்கள் என்னை அம்மணி என்று அழைப்பதை நிறுத்தவில்லை ((-

dondu(#11168674346665545885) said...

என்ன செய்வது சுகுணதிவாகர். உங்களை பெண் என இன்னொரு பெண்ணான ஜெசீலா உங்களுக்கு பெண்வலைப்பதிவாளர் சந்திப்புக்கு அழைத்ததை நினைத்து நாம் நடேசன் பூங்கா சந்திப்பில் கூறி சிரித்ததுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

இந்த தருணத்தில் எங்கள் பொறியியல் வகுப்பில் புது வருகையாக லீலா கிருஷ்ணன் என்பவர் சேரப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்த தருணத்தில் முன் தலை வழுக்கையுடன் லீலா கிருஷ்ணன் என்னும் தடிமாடு வந்து எங்கள் ஆசையில் மண்ணை வாரிப்போட்டது நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இன்னும் நீங்கள் என்னை அம்மணி என்று அழைப்பதை நிறுத்தவில்லை ((-

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்

பெங்களூர் American

dondu(#11168674346665545885) said...

தமிழச்சி அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்டது இப்பின்னூட்டம். பார்க்க: http://thamilachi.blogspot.com/2007/07/blog-post_9664.html

மிக்க நன்றி தமிழச்சி அவர்களே. இத்தனை நாள் பெரியார் இவ்வாறு சொல்லவே இல்லை என கும்மி அடித்த திராவிடக்குஞ்சுகளுக்கு சரியான பதிவு.

Merci beaucoup. Il va sans dire que je pose la copie de ce commentaire dans mon blog.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: தமிழச்சி அவர்களது அப்பதிவில் எனது இப்பின்னூட்டம் வந்ததுமே இங்கிருந்து இதை நீக்கி விடுவேன். ஏனெனில் இப்பின்னூட்டம் இப்பதிவுக்கு ஏற்றதில்லை என்பதை நான் அறிவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

எனது இந்தப் பின்னூட்டம் இப்பதிவில் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது.

Your comment is awaiting moderation.
ஆண் பெண் கற்பு நிலை பற்றிய எனது பதிவுகளைப் பார்க்கவும்:
http://dondu.blogspot.com/search/label/ஆண்%20பெண்%20கற்புநிலை
அதே சமயம் பெண் விடுதலைக்காக பேசிய பெரியாரே தனது முதல் மனைவி நாகம்மையை சரியாக நடத்தவில்லை என அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார், பார்க்க:
http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html

பார்க்க: http://mvnandhini.wordpress.com/2009/04/27/ஆண்வயப்பட்ட-சமூகம்-பெண்/#comment-115

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது