பாரா மற்றும் என்றென்றும் அன்புடன் பாலா ஆகியோர் எழுதிய பதிவுகளை படிக்கும்போது ஏதோ ஏற்கனவே நடந்ததை திரும்பப் பார்க்கும் உணர்வுதான் ஏற்பட்டது. சமீபத்தில் 1968-ல் பஸ் கண்டக்டர் ஒருவருக்கும் சில கல்லூரி மாணவர்களுக்கும் நடந்த மோதலில் கண்டக்டர் கொல்லப்பட்டார். அப்போதைய போக்குவரத்து அமைச்சர் கண்டக்டர்கள் மத்தியில் பேசும்போது அவர்களுக்கு ஆதரவாகப் பேசியதோடு நிற்காது ஆதரவு போக்குவரத்து ஊழியர்களுக்கு, குண்டுகள் மாணவர்களுக்கு என பொருள்பட வேறு பேசித் தொலைத்து விட்டார்.
அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பல பஸ்களை தாறுமாறாக ஓட்டி மாணவர்கள் என நினைத்தவட்ர்களையெல்லாம் சகட்டு மேனிக்கு தாக்கினர் போக்குவரத்து ஊழியர்கள். முக்கியமாக சட்டக் கல்லூரி மாணவர்களும் மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மோசமாக தாக்கப்பட்டனர். ஜெனெரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மேம்பாலத்தில் நடந்து கொண்டிருந்த நான் என் கண்ணாலேயே பல மாணவர்களைத் தாக்கியதைப் பார்த்தேன். நல்ல வேளையாக நான் அவர்கள் கண்ணில் படவில்லை.
அச்சமயம் ஹிந்துவில் ஒரு ஃபோட்டோ வந்தது. ஒரு கல்லூரி ஹாஸ்டலுக்கு முன்னால் ரௌடிகள் அணிவகுத்து நிற்க அவர்களைக் கலைந்து போகுமாறு அப்போதைய போலீஸ் கமிஷனர் கூனிக் குறுகி மன்றாடியதை காட்டிய போட்டோ அது. அதைப் பார்த்து தமிழகமே கொதித்தது. போக்குவரத்து மந்திரி சொதப்பியதற்கு பேரறிஞர் அண்ணா பதில் கூற வேண்டியிருந்தது. அவரை ஒரு ஸ்டூல் மேல் நிற்க வைத்து மூன்று மணி நேரம் வறுத்தெடுத்து விட்டனர். அதை நேரில் பார்த்து ரிப்போர்ட் செய்த இந்து நிருபர் என் தந்தை ஆர். நரசிம்மன் அவர்கள். குப்புசாமி ஃபோட்டோ விஷயம் பற்றி கேட்ட போது அண்ணா வெளிப்படையாகக் கூறியது, "I agree that it is very damaging". வேறு என்னதான் கூற இயலும். அவரைப் பார்க்க தனக்கே பாவமாக இருந்ததாக என் தந்தை என்னிடம் கூறினார்.
முக்கியமாக ஒன்றைக் கூற மறந்து விட்டேனே. அந்தப் போக்குவரத்து மந்திரியின் பெயர் மு. கருணாநிதி.
மதுரை தினகரன் ஆஃபீசில் நடந்த தாக்குதல்களை கைகட்டி வேடிக்கை பார்த்தது போல நேற்று சட்டக் கல்லூரியிலும் செய்துள்ளனர். இரு சமயங்களிலும் முதல்வர் கருணாநிதி அவர்களே. அதுவும் போலீஸ் துறை அவர் வசம்தான் உள்ளது. அவர் ராஜினாமா செய்வது நல்லது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
17 comments:
டோண்டு சார், அவர் பொதுப்பணித்துரை அமைச்சரால்ல இருந்தாரு?
அவர் போக்குவரத்து துறைக்கும் அச்சமயம் மந்திரிதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி சார்.நீங்க சொன்னா கரெக்டடா தான் இருக்கும்.
டோண்டு சார் கலைஞரின் ஆதரவாளர்கள் உங்கள் ராஜினமா கோரிக்கை பார்த்து உங்கள் மேல் பாயப் போகிறார்கள்.
ரஜினி அத்வானி சந்திப்பு .சோவின் ஜெயலலிதா ஆதரவுப் பேச்சு.
தமிழக அரசியலில் ராஜினமாக் கோரிக்கை மீண்டும் புயலையைக் கிளப்புமா?
சாதி ஓட்டுகளை கணக்கு எடுத்து வேட்பாளரை நிறுத்தும் போக்கு அனைத்து கட்சியிலும் காணப்படுகிறது..
சாதி பிரச்சனை கட்சிகளை கடந்தது. கட்சிகளால் வளர்க்கபடுகிறது
//இரு சமயங்களிலும் முதல்வர் கருணாநிதி அவர்களே. //
டோண்டு சார்,
கோத்ரா தொடர்வண்டி(ரயில்) எரிப்பின் போதும், மலேக்கான் தொடர் குண்டு வெடிப்பின் போதும் மோடியே குஜராத் முதல்வராக இருந்திருக்கிறார்.
பின்னூட்டத்தை நல்லா படியுங்கள், நான் மோடிதான் காரணம் என்று சொல்லவில்லை.
:)
மலேக்கான் மகாராஷ்டிரத்தில் இருக்கு. அதுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்?
//கோத்ரா தொடர்வண்டி(ரயில்) எரிப்பின் போதும், மலேக்கான் தொடர் குண்டு வெடிப்பின் போதும் மோடியே குஜராத் முதல்வராக இருந்திருக்கிறார்.//
அப்போதும் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவியாக இருந்தார். கருணாநிதி திமுக தலைவராக இருந்தார்.
நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...
தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....
யாரவது எதாவது சாதித்தால்.. தமிழுக்கே.. தமிழருக்கே பெருமை என்று சொல்லி கொள்கின்றோமே...
இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது...
மேம்போக்காக பார்த்தால், எதோ மாணவர்கள் வெறிபிடித்து சண்டை போட்டதாக தோன்றுகின்றது..
இதற்கு யார் காரணம்...?
ஜாதி யா?
தமிழ் நாட்டில் யாரும் ஜாதி பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..
பெயரில் இல்லை ... ஆனால்..
ஜாதி தமிழனின் குருதியில் கலந்து விட்டது..
வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்..
வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி வெறி அதிகம்...
என்ன செய்வது...
௧.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..
௨.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..
௩. ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ...
௪ . வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்...
௫ . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, "ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் " ... "அடங்க மறு " என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..
௬ . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் ...
--
இதெல்ல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும்...
ஆனால்...கண்டிப்பாக இவை எதுவும் நடக்க போவதில்லை ....
மூன்று வருடங்களுக்கு முன், ஒரு சமூகத்தின் தலைவரின் ஜெயந்தி விழாவை ஒட்டி, என் கல்லூரி மாணவர்கள் திடீர் என்று இரண்டு பட்டதை என் கண்களால் பார்த்தேன்..
பொறியியியல் படிக்கும் வசதி படைத்த நகரத்து மாணவர்களே உருட்டு கட்டைகளுடன் திரிந்தனர்..
அன்று நடந்தது பெரிதாக வில்லை / பெரிதாக வெளியில் தெரியவில்லை...
இன்று ஊடகங்களின் கண் முன் நடந்து விட்டது..
நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...
தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....
இந்தியாவின் பல மாநிலங்களிருந்தும் தமிழ்மண அலுவலக்த்துக்கு தொலைபேசி அழைப்புகளும்,தொலை அச்சுச் செய்திகளும் வந்த வண்ணமாய் உள்ளன.
இன்னும் டோண்டு ராகவன் சாரின் கேள்விப் பதில் இன்னும் வலை ஏற்றப் படவில்லையே.ஏன் என்ற வினாவுடன்.
அவர் கேள்வி பதில் பதிவை நேற்று இரவு 11.38 க்கே முடுத்துவிட்டதாய் சொல்லியுள்ளாரே. பொதுவாக காலை 5 மணி சுமாருக்கு சமிபகலாமாய் பதிவு வந்துவிடும்.
அதிலும் இந்த கேள்வி பதிலில்
பல , இந்திய ,உலக அரசியலை புரட்டிப் போடும் கேள்விகள் இருப்பதால் டோண்டு ஐயா என்ன சொல்லப் போகிறார் என பத்திரிக்கை உலகமே காத்துக் கிடக்கிறது.
ஒரு சில பத்திரிக்ககள் அதை காப்புரிமை வாங்கி வெளியிட இருப்பதாகவும் ஒரு தகவல்.இந்த பர பரபரப்பையெல்லாம் நேரடி தொலைக் காட்சியாய் ஒளிபரப்ப சன்,கலைஞர்,ஜெயா,ராஜ்,ஜிதமிழ்,தமிழன்,மக்கள்,வசந்த்,இதயம்,மெகா மற்றும் லோக்கல் தொலைக் காட்சிகளின் நிருபர்கள் தங்களது ஒளிபரப்பு வேனுடன் காத்துக் கிடக்கின்றனர் நிருபர்கள்.
கோ.காந் கையில் பெரிய மாலை யுடன் டோண்டு சரின் நங்கநல்லூர் விட்டின் முன்னால் காலை 4 மணிக்கே வந்து காத்திருக்கிறார் .வேறு எதற்கு அவர்களது கேள்விபதிலை கிண்டலடித்து குதற்கமாய் எழுதியதற்கு வருத்தம் தெரிவிக்க.( இதை மறுத்து ஏடாகூடமாய் அவர் மறுப்பு அறிக்கை எழுதப் போகிறார்)
எப்போதையும் விட இப்போது பரபரப்பு கூடியிருப்பதற்கு ஒரு காரணம் எல்லாக் கட்சித் தலைவர்களும் கலைஞரின் ராஜினமா கோரிக்கை வைக்கும் சம்யத்தில் 1968 மற்றும் 2007,2008 களில் நடந்த நிகழ்ச்சிகளை ( மக்கள் மறந்து விட்ட செய்திகளை)
கோடிட்டு காட்டி அந்த வாதத்துக்கு வலு சேர்க்க ஒரு பதிவே போட்டுள்ள காரணத்தால் என்று கூடியிருக்கும் மக்கள் பேசிக் கொள்வதாக தகவல்
################################
உங்கள் நண்பர் லக்கிலுக்கின் ,கலைஞர் அவரைப் பாரட்டி எழுதியுள்ள பதிவை படித்தவுடன், எனக்கு மனதில் ஒரு கற்பனை ஓடியது.
தவறாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
#################################
வெள்ளிகிழமை கேள்வி பதில் மேலும் மேலும் பெருவாரியான ஹிட்களை கொடுத்து அடுத்த இலக்கை (4,00,000)
31-03-2009 அடைய பெருமாளின் அருள் கிடைக்க பிரார்த்தனையுடன்
உங்கள் கேள்வி பதில் பதிவுக்கு உண்மையாய் காத்திருக்கிறேன்
கோவி. கண்ணன்னுக்கெல்லாம் மூளை என்கிறா வஸ்து கொஞ்சமாவது இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது. அப்படியென்றால் என்னவென்றே தெரியாத ஆசாமிகளை என்ன செய்ய? இங்கே உள்ள பிரச்னையைப் பத்தி பேசுடா என்றால் அதை பேச துப்பில்லை. தூக்கிக்கிட்டு வந்திட்டானுங்க.
\\தூக்கிக்கிட்டு வந்திட்டானுங்க//
You mean சொம்பு?
முதலிலேயே போலிஸுக்கு இத்தகைய வன்முறை நடக்கும் என்று தெரிந்திருந்தும் காலேஜ் காம்பௌண்டுக்குள் நுழையாமல் சட்டசபை போல் முதல்வர் அனுமதி இல்லாமல் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று வேடிஇக்கை பார்த்து கொண்டிருந்ததை பார்க்கும் போது ஜெயலலிதா மாதிரியான (சில தவறுகள் இருந்தாலும் ) (நான் எந்தக்கட்சி சார்ந்தவனும் அல்ல) ஒரு முதல்வர் தேவைபடுகிறார். (மாணவர்களுக்குள் கோஷ்டி இருப்பது சகஜம்தான் .அது ஆரோக்கியமாக இருக்கவேண்டும் . முதலில் ஜாதியை ஒழிக்க ஒழிக்க வேண்டும் .ஜாதியை வைத்து அரசியல் செய்து ஒட்டு வாங்கும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை ஜாதி ஒழியாது . மக்களுக்குத்தான் விழிப்புணர்ச்சி வேண்டும் . விழிப்புணர்ச்சியை யார் வூட்டுவது.இருபது வயதிலேயே சக மாணவர்களை கொலை வெறியோடு தாக்குவதை பார்க்கும்போது அவர்கள் எப்படி வளர்க்க பட்டிருக்கிறார்கள் .இதற்க்கு சினிமாவும் ஒரு காரணம்..... உயிர்க்கு ஆபத்தான வன்முறை யார் பார்த்தாலும் அப்போதே தடுக்க வேண்டும் . இதற்க்கு அடுத்து சம்பிரதயபடி நடவடிக்கை எடுத்து என்ன பிரயோஜனம் .உயிர் திரும்ப கிடைக்குமா. (தமிழ் டைப்பிங் தெரியாது தவறு இருக்கும் மன்னிக்கவும)-எழில் மாறன்
'சொம்பு' அருஞ்சொற்பொருள் விளக்கத்துக்கு திருச்சி, கடலூர், தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் யாராவது இருந்தால் கேட்கவும்.
டோண்டு சார்,
கரக்ட். இந்த விஷயமெல்லாம் புதுசு இல்ல. நான் "தெலுங்கு டப்பிங் படம்" ஒரு கவிதை
போட்டிருக்கேன்.படிங்க.
நன்றி
மயக்கமடைந்து விழுந்த ஒருவனை இப்படி ஈவு இரக்கமின்றி
அடிக்கின்ற மிருகங்களை என்ன செய்தால் தேவலை. கண்றுக்-
குட்டியைக் கொன்றதற்காக தேர்காலில் தன் மகனைக் கட்டி
இழுக்கச் செய்தானே நம் தமிழ் மன்னன் அதைப் போல இந்தக்
கல்லுளி மங்கன்களை ஒரு வண்டியில் கட்டி தமிழகம் முழுதும் வர
வைக்க வேண்டும். அப்படி அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்த-
வர்களோ அந்தச் ஜாதி மக்களே கூட வந்து இவர்களைப்
பார்த்து காரி உமிழ்வார்கள். அத்தணை கொடூரம் இது.
எல்லாம் வல்ல இறைவன் இந்த மாதிரி வன்முறை செய்ய
அவர்களுக்கு தைரியும் தந்தவர்களுக்கும்,அதை நதத்தியவர்க-
ளுக்கும் இது போன்ற ஈவிரக்க மற்ற அடி கிடைப்பத்ற்கான
சந்தர்ப்பத்தை வழங்கடும். தெய்வத்தை தான் நம்ப வேண்டும்.-
அரச்ன் இப்போதெல்லாம் தவறுகளைத் தட்டிக் கேட்பதே இல்ல
ஓஹோ , அண்ணா வழி ,அண்ணா வழி என்று சொல்கிறார்களே அது இது தானோ ?
Post a Comment