பல மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாள்ர்கள் இல்லவே இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டங்கள் அவ்வாறு செய்யத் தயாராகின்றன. முன்பு கொத்தடிமைகள் சீசன், இப்போது குழந்தைத் தொழிலாளர்களின் முறை என்றுதான் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, சில பந்தாக்கள் காண்பிக்க வேண்டியது, பிறகு பிரச்சினை தீர்ந்ததென்று அறிவிக்க வேண்டியது. அறிவிப்பை அளித்து விட்டு பெருமையாக அலுவலகம் வந்து, டீக்கார சிறுவனை (வயது 13) “ஏண்டா லேட்டாக டீயைக் கொண்டு வந்தாய்” என அதட்டுவது. 20.11.2008 தேதியிட்டு வந்துள்ள குமுதம் ரிப்போர்டரின் இது பற்றிய கட்டுரையை பார்ப்போம். ஓவர் டொ குமுதம் ரிப்போர்டர்.
“ஓட்டல்கள், கல்யாண வீடுகள் போன்றவற்றில் விழும் எச்சில் இலைகளை நாயோடும் மாடுகளோடும் சண்டை போட்டு சேகரிக்கிறேன். அந்த எச்சில் இலைகளை டிரம்களில் திணித்து வைத்திருப்பேன். ஆடு, மாடு வளர்ப்பவங்க அதுகளின் தீவனத்துக்காக இதை வாங்கிட்டுப் போவாங்க.. ஒரு டிரம் விற்றால் பத்து ரூபாய் கிடைக்கும். ஆனால் தினமும் எச்சில் இலை கிடைக்கிறதில்லை..'' என்று ஆதங்கத்துடன் சொன்ன நபரின் வயது 13. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டமாக அறிவிக்கத் தயாராகவுள்ள மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் தான் நெஞ்சு வலிக்கும் இந்த நிலை.
நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம். குழந்தைகளை மிகவும் நேசித்த நேருவின் பிறந்தநாள்தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிக்கப்பட்டுவிட்டதா? மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறதா?
ஏதாவது ஒருவகையில் அரசிடம் பெயர் வாங்கவேண்டும் என்பதுதான் இன்றைக்கு மாவட்ட அதிகாரிகளின் மூளைகளில் செட்டாகிப் போன விஷயம். இந்த ஆண்டில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்க அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாம். கலெக்டர்களும் ரெடியாகி விட்டார்கள். ஆனால் நடைமுறை எப்படி இருக்கிறது என்பதைத்தான் நாம் சந்தித்த தொழிலாளர் சிறுவர்கள் நமக்கு உணர்த்தினர். மனம் பதைத்துப் போனதுதான் மிச்சம்.
பதினாறு வயதாகிறது முத்துப்பாண்டிக்கு.. பத்தாவது வயதிலேயே தொழிலுக்கு வந்துவிட்டான். ஒரு டிரம் செட் குழுவில் `தப்பு' அடிப்பதுதான் இவன் வேலை. `தப்பு' அடிப்பதோடு குழுவில் அனைவருக்கும் எடுபிடியும் இவன்தான். "வேலை இருந்தால் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்க வேண்டும். ஆனால், மாதத்தில் அதிகபட்சம் பத்துநாட்கள் தான் வேலை இருக்கும். எங்க அப்பாவும் என்னைப் போல சின்னவயசிலேயே வேலைக்கு (?) வந்துட்டார். படிக்கணும்னு ஆசையிருந்தாலும் குடும்பக் கஷ்டத்தை யார் சுமக்கிறது? அப்பா குடிகாரர். நானும் அண்ணனும்தான் சம்பாதிக்கிறோம். அண்ணனுக்கு என்னை விட ஒரு வயசு அதிகம். ஆஸ்பத்திரியில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார்...'' என பேசக்கூட நேரமில்லாமல் தப்பு அடிப்பதில் மூழ்கிவிட்டான்.
அருண்பாண்டியனுக்கு வயது 12. இவன் தப்பு அடிக்க வரும் போது வயது ஏழு. "ஒரு நாளைக்கு தப்படித்தால் எண்பது ரூபாய் தருவாங்க. ஆனால் வேலை தினமும் கிடைக்கிறதில்லை!'' என்கிறான்.
நாம் சந்தித்த 12 வயது கண்ணன், அவனை விட எடை அதிகமான சுத்தியலை பழுக்கக் காய்ச்சிய இரும்பு மேல் டொங்.. டொங்.. என அடித்துக் கொண்டிருந்தான். "அப்பா இறந்துட்டாரு. எனக்கு படிக்க ஆர்வம் இருந்தும் ஆசிரியர் இம்சித்தார். `டீ வாங்கிட்டு வா.. வடை சூடாக போட்டிருப்பான். இந்தக் கடையில் போய் அதை வாங்கு.. சிகரெட்டில் தூள் கொட்டாமல் வாங்கிட்டு வா..' என வேலை வாங்கினார்.
பிடிக்கலை, வந்துட்டேன். தினமும் பதினொரு மணி நேரம் வேலை. சரியாக சுத்தியலை அடிக்கலேன்னா முதலாளி என்னை அடிப்பார். பாட்டு கேட்டுட்டே வேலை பார்ப்பேன். ஒரு நாள் இரும்படித்தால் கிடைக்கிற கூலியே ஐம்பது ரூபாய்தான். என்னை நம்பி வீட்டில் நான்கு பேர்!'' என பெரிய மனிதன் போல கண்ணன் சொல்ல, காய்ச்சிய இரும்பை நெஞ்சில் அடித்தது போலிருந்தது நமக்கு.
13 வயதாகும் கார்த்திக்கை அவனது தமிழாசிரியர் ஜாதி பெயரைச் சொல்லித் திட்டினாராம். பொறுக்கமாட்டாத கார்த்திக் படிப்புக்கு ஃபுல்ஸ்டாப் வைத்துவிட்டான். இவனது அப்பா லோடுமேனாக இருக்கிறார். கட்டடத் தொழிலாளியாகிவிட்டான் இவன். எட்டு மணி நேரம் வேலை செய்தால் சம்பளம் அறுபது ரூபாய் கிடைக்குமாம்.
"நான் படிப்பில சுமார்தான். ஆனால் ஆசிரியர்கள் என்னை பாடாய்ப் படுத்தினாங்க. எனக்கு தண்டனை தர்றதே அவங்க வேலையாயிடுச்சு. இம்போசிஷன் எழுதச் சொன்னால் கூட எழுதிடலாம். ஆனால் ஓர் ஆசிரியர் கழிப்பறைக்குப் போயிட்டு வந்து `கக்கூஸ் அசுத்தமாக இருக்கு. போய்க் கழுவு' என்றார். படிப்புமாச்சு.. நீயுமாச்சுன்னு வந்துட்டேன். இப்போது மாட்டு இறைச்சிக்கடையில் வேலை. தினமும் பதினைந்து ரூபாய் எனக்குச் சம்பளம்..'' என்கிறான் 12 வயது காளிதாஸ்
"எனக்கு எப்போதுமே நைட் ஷிஃப்ட்தான். இரவு 9 மணியிலிருந்து இரண்டு மணிவரை..'' என ஏதோ கால்சென்டரில் வேலைபார்ப்பதைப் போலச் சொல்லும் குணசேகரனுக்கு வயது 12. இரவு நேர புரோட்டா கடையில் எச்சில் இலைகளை எடுத்து மேஜையை சுத்தம் செய்வது, அவற்றைக் குப்பையில் கொட்டுவது இவனது வேலை.
ஒரு சைக்கிள் கடையில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருப்பவன், 14 வயதான ராஜபாண்டி. கட்டட வேலை, தப்பு அடிப்பது தெரியும். நாள் ஒன்றுக்கு வருமானம் முப்பது ரூபாய்.
நாம் சந்தித்த குழந்தைத் தொழிலாளர்கள் பலரும் தாங்கள் வேலை பார்க்கும் `நிர்வாகத்துக்கு' பயந்து பேசவோ போட்டோ எடுக்கவோ மறுத்தார்கள். "நீங்க இன்னிக்கு படம் புடுச்சிட்டுப் போயிடுவீங்க. நாளைக்கு எங்களை ஆப்பு வைச்சிருவாங்க.. வேலையும் போய்விடும்'' என்ற பயம் அவர்களை ஆக்கிரமித்திருக்கிறது.
இப்படிப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி ஆய்வு செய்து அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் சில தினங்களுக்கு முன்னர் ரிப்போர்ட் அனுப்பியுள்ள எவிடன்ஸ் நிர்வாக இயக்குனர் கதிரைச் சந்தித்தோம்.
"குழந்தைத் தொழிலாளர்கள்இல்லாத மாவட்டங்களாக அரசு அறிவிக்கவுள்ள மதுரை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் எங்களின் ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். முதல்கட்டமாக கடந்த மாதம் மதுரை மாவட்டம் குறித்த ஆய்வைத் தொடங்கி இப்போதுதான் முடித்திருக்கிறோம். எங்கள் ஆய்வு அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கும் அரசுக்கும் இரு தினங்களுக்கு முன்னர் அனுப்பியுள்ளோம்.
மதுரை நகரின் முக்கிய பகுதிகளான கரும்பாலை, மேலவாசல், அவனியாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எங்களின் நான்கு குழுக்கள் சிறுவர்களிடம் ஆய்வு நடத்தியது.. ஐம்பத்தைந்து வினாக்கள் அடங்கிய படிவத்தில் ஒவ்வொருவரின் பதிலும் பதிவு செய்யப்பட்டது. விரிவான கள ஆய்வு என்பதோடு சிறுவர்களிடம் பதில் பெறுவது அவ்வளவு எளிதாய் இல்லை என்பதால் 94 சிறார்களை மட்டுமே விசாரிக்க முடிந்தது.
ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட 94 பேரில் 32 பேர் ஆறாவது வகுப்பு வரை படித்தவர்கள். 10 வது வகுப்பு வரை படித்தவர்கள் 55 பேர். ப்ளஸ் டூ படித்தவர்கள் 4 பேர். படிக்காதவர்கள் 3 பேர்.
நாங்கள் ஆய்வில் ஈடுபடுத்திய 94 குழந்தைத் தொழிலாளர்களிடமும் `உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் எத்தனை பேர். அதில் எத்தனை பேர் உங்களை ஒத்த வயதுடையவர்கள்?' என்றும் கேட்டோம். தங்களுடன் வேலைபார்ப்பவர்கள் மொத்தம் 874 பேர் என்றும் அதில் தங்களைப் போன்றவர்கள் (குழந்தைத் தொழிலாளர்கள்) 175 பேர் என்றும் சொன்னார்கள். அவர்கள் கணக்குப்படி பார்த்தால் மொத்தத் தொழிலாளர்களில் 20 சதவிகிதம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதை அறிய முடிகிறது.
குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணம் குறித்து நாங்கள் எழுப்பிய கேள்வியில் பெரும்பாலானோர் வறுமையின் காரணமாக வேலைக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். தந்தை குடிகாரன் என்பதால் வீட்டின் வருமானத்துக்காக வந்திருக்கிறார்கள் என்பதை உணரமுடிந்தாலும் கூட, கல்வி முறை அவர்களை வெகுவாக பாதித்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் சந்தித்த 94 சிறுவர்களில் 43 பேர் ஆசிரியருக்கு பயந்து தொழிலாளர் ஆகியிருக்கிறார்கள். 29 பேர் பாடம் புரியவில்லை என படிப்புக்கு பயந்து வெளியேறியிருக்கிறார்கள்.
வீட்டுவேலை மற்றும் உணவகங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையை அரசு 2006-ல் தடை செய்துவிட்டது. ஆனால், அது சட்டத்தில் மட்டுமே உள்ளது. மதுரை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை பகிரங்கப்படுத்த இந்த ஆய்வை நாங்கள் மேற்கொள்ளவில்லை. குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு என்ன? எந்த மாதிரியான செயல்திட்டங்களை உருவாக்கமுடியும்? இருக்கிற செயல்திட்டங்களில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்வது எப்படி? என்பது உள்ளிட்டவற்றை அறியவே இந்த ஆய்வை மேற்கொண்டோம்.
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான வயது 14 என்று உள்ளது. வெளிநாடுகளில் உள்ளது போல அதை 18 வயது என அறிவிக்க வேண்டும். மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கு நீடித்த, நிலைத்த தரமான மறுவாழ்வு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார் கதிர்.
குழந்தைத் தொழிலாளர் மீட்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டோம்..
``குழந்தைத் தொழிலாளர்களுக்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு ஒரு கோடியே இருபத்தைந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மற்றும் நல இயக்கத்தினை உருவாக்கியுள்ளது. குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டும் கடந்தாண்டு ரூ. 50 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மட்டும் 809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 231 வழக்குகளுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. அதன் மூலம் சுமார் இரண்டு கோடி ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது!'' என்றனர்.
மதுரை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் சட்டம் மற்றும் அது தொடர்புடைய சட்டத்தின் கீழ் 2006-ம் ஆண்டில் 67 வழக்குகள் வந்தன. இதில் மூன்று வழக்குகள் மட்டுமே குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன. 2007-ம் ஆண்டு 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், ஒன்று கூட குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. அது ஏன் என்ற வினாவுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தயாராக இல்லை. குழந்தைத் தொழிலாளர்கள் குறைந்து வருகிறார்கள் என்பதை அரசுக்குக் காண்பிக்கவே குறைவான வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருவதாகப் பேச்சு உள்ளது.
ஆக, பஞ்சைப் போட்டு நெருப்பை அணைக்க முடியுமா என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும்!
எழுதியது: ஸீ ப. திருமலை நன்றி: குமுதம் ரிப்போர்டர்
மீண்டும் டோண்டு ராகவன். நான் முதலிலேயே சொன்னது போல குழந்தைத் தொழிலாளர்கள் வீடுகளிலேயே உல்ளனர். வீட்டு வேலைக்காரி கூடவே அவள் பெண்ணும் வந்து முதலில் தாய்க்கு கூடமாட ஒத்தாசை செய்கிறாள். பெண்ணுக்கு 8 வயதளவிலேயே இது ஆரம்பித்து விடுகிறது. சில காலம் கழித்து அந்தத் தாய் மேலும் சில வீடுகளில் வேலை செய்வதாக ஏற்று கொண்டு தாயும் மகளுமாக மொத்தமாக பங்கு போட்டு செய்கின்றனர். குழந்தைத் தொழிலாளர்கள் முறையை ஒழித்து கட்ட பாடுபடும் சேவை அமைப்பினர் வீடுகளிலேயே குழந்தைகள் வேலை செய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
முக்கால்வாசி கேஸ்களில் தந்தை குடிகாரனாகப் போவதுதான் இதற்கு முக்கியக் காரணம். குடிபோதை என்னும் அரக்கனிடம் சிக்கியுள்ள அந்த மனிதன் தான் சம்பாதிப்பதையெல்லாம் குடித்து தீர்த்து மனைவி மற்றும் பிள்ளைகளின் சம்பாத்தியத்திலும் கைவைக்கிறான். சில இடங்களில் தாயும் குடிபோதைக்கு அடிமையாகிறாள். குழந்தைகள்? பிள்ளைக் குழந்தைகள் 90 சதவிகிதத்தினர் தந்தைவழி சென்று பிற்காலத்தில் தாங்களும் குடிமகன்களாகின்றனர். ஆக இந்த விஷச்சுற்று விடாது நடக்கிறது. அதே சமயம் திருமணம் ஆகிய விஷயங்களில் தேவையற்ற செலவுகளுக்காக கடன் வாங்கி பிறகு தன் மக்களையே பிணைத் தொழிலாள்ர்களாகவும் ஆக்குகின்றனர்.
ஆறுதல் அளிக்கும் செய்தி என்று பார்த்தால் சிலர் தத்தம் குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர். அவர்களாவது பெரியவர்களாகி தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாது இருத்தல் வேண்டும்.
ஏன் குழந்தைத் தொழிலாள்ர்கள் உருவாகுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். மேலே சொன்னபடி முக்கால்வாசி நேரம் குடும்பத் தலைவன் அதீதக் குடிப்பழக்கம். அவன் வீட்டுச் செலவுக்கு பணம் தராத நிலையில் மனைவி இம்மாதிரி வீட்டு வேலைக்கு போகிறாள். தன் குழந்தைகளுக்கும் இதில் பயிற்சி அளிக்கிறாள். இதுதான் யதார்த்தம். பிரச்சினையைத் தீர்க்க பல முனைகளிலிருந்தும் விடாது பாடுபட வேண்டும். குமுதம் ரிப்போர்டர் சொல்வதுபோல பஞ்சைப் போட்டு நெருப்பை அணைப்பதாக பாவ்லா காட்டி பீற்றிக் கொள்வதற்காக அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஷார்ஜா புத்தகவிழாவில்…
-
ஷார்ஜா புத்தகவிழாவில் மலையாள- ஆங்கில எழுத்தாளராக டி.சி.புக்ஸ் (மலையாளம்)
சார்பில் கலந்துகொள்கிறேன். எட்டாம்தேதி காலையில் ஷார்ஜா. பத்தாம்தேதி
மாலையில் ஒரு ச...
6 hours ago
21 comments:
மக்கள் தொகைப் பெருக்கம்,ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு, வியாபாரிகளின் கொள்ளை லாப இலக்கு,படிப்புஅறிவின்மை
எல்லாத்துக்குமேலே
அடுத்த தேர்தலை எண்ணாமல்
அடுத்த தலைமுறையை எண்ணி அரசியல் செய்ய எந்தக் கட்சியும் தயாராயில்லை.
கர்மவீரர் காமராஜ் போல் இனி எப்போது வருவாரா
இக் கொடுமை தீர
அரசியல் அமைப்பு மாறாதவரை இப்படித்தான் கொடுமைகள் நடந்துகொண்டிருக்கும் இந்தியாவில்!
ஒரு கேள்வி: Ass Kisser என்ற term-க்கு தமிழில் equivalent எது?
(ரவிஷாவின் கடைசி வரி நீக்கப்பட்டது, மன்னிக்கவும் ரவிஷா)
If you translate literally it would be soo... decent way, to tell a govt. servant would be SOAP.
Sir, How do you edit comments?
//Sir, How do you edit comments?//
Just copy paste the comment to be edited as your comment and edit it with suitable mention and publish it. By the way, you will have to delete the objectionable comment of course if admitted earlier.
Ideal course will be not to allow the objectionable comment at all and just publish the comment edited by you.
Regards,
Dondu N. Raghavan
Dear Sir,
I've heard lot about you through my friend. I'm a housewife looking for some freelance job.I'm very much interested in Tamil literature and wanted to do Translation job Tamil-English-Tamil.Please guide me in this regard.It would be grateful if you could help me in this regard.
Thanks.
Dear Anony,
This is not at all the way to ask. You have to send me a comment marked not for publication and therein you should indicate your email id. Then we will see.
Regards,
Dondu N. Raghavan
1.பொதுவாக தங்களது முன் பதிவுகளுக்கு( 2006-2007) வந்துள்ள பின்னூட்டங்களின் அதிக எண்ணிக்கை ,தற்போது இல்லையே என்ன காரனம்?
2.ஆனால் ஹிட் கவண்டர் மட்டும்
306627-( at 20.12 p.m of 17-11-2008) சராசரியாய் ஒரு நாளக்கு 700-750 ஹிட்ஸ்- பார்வையாளர்கள் அதிகமாய் இருக்கும் போது ஏன் இந்த வித்யாசம்?( அதர் ஆப்சன் மற்றும் அனானி ஆப்சனும் இருக்கிறதே?
3.தங்கள் பின்னூட்டங்களை தடை செய்து விடுகிறீர்களா ( ஆட்சேபகரமானவைகளை)? இல்லை ஏதும் தொழில் நுட்பக் கோளாரா?Comment moderation காரணமா?
4.சென்னை பதிவர் சந்திப்பில் அடிக்கடி சந்திக்கும் பல பதிவர்களின்( உங்கள் நண்பர்கள்) பின்னூட்டம் கூட வருவதில்லையே ஏன்?
5.சுமாரன மொக்கை பதிவுகளுக்கு சிலரது பதிவில் 200-300 வரை பின்னூட்டங்கள் குமியும் போது இங்கே மட்டும் ஏன் இப்படி?இங்கேயும் கூட்டணி வெற்றியா?
அன்பு வேண்டுகோள்:
ஒரு மணி முதல் இரண்டு மணி நேரம் வரை கவனமாய் கருத்துககளை ,தகவல்களை சேகரித்து
தட்டச்சு செய்து பதியப்படும் தகவல் பல பேருக்கு சென்றடைந்தால்தானே பலன்
இப்போ நடிகர் ரஜினி யின் புது கொள்கை
கடமையை செய்
பலனை எதிர்பார்.
இங்கு கவனிக்கத்தக்கது.
//ஒரு மணி முதல் இரண்டு மணி நேரம் வரை கவனமாய் கருத்துககளை ,தகவல்களை சேகரித்து
தட்டச்சு செய்து பதியப்படும் தகவல் பல பேருக்கு சென்றடைந்தால்தானே பலன்//
அதுதான் ஹிட் கவுண்டர் இருக்கிறதே. மேலும் நான் மட்டுறுத்தலில் நிராகரிக்கும் பின்னூட்டங்கள் அனேகம்.
எனது வலைப்பூ செயல்பாட்டின் முக்கிய நோக்கமே எனது ஆங்கிலம் < > தமிழ் மொழி பெயர்ப்புகளுக்கு அதிகம் பயிற்சி அளிப்பதே. அது நான் தமிழில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்துவதும் செய்கிறது.
மீதி எல்லாம் துணைப் பொருட்கள். வந்தால் சரி, வராவிட்டாலும் சரி. இங்கு என்ன பணமுதலீடா பாழாய் போகிறது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எனது வலைப்பூ செயல்பாட்டின் முக்கிய நோக்கமே எனது ஆங்கிலம் < > தமிழ் மொழி பெயர்ப்புகளுக்கு அதிகம் பயிற்சி அளிப்பதே. அது நான் தமிழில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்துவதும் செய்கிறது. //
உடனடி பதிலுக்கு நன்றி.
உங்கள் பதிவுலகப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நன்றாய் தெரிந்த ஜெர்மன்/பிரஞ்சு போன்ற அன்னிய மொழிகளின் எளிய வார்த்தைகளையுயும் ,வாக்கியங்களையும், மின்னியல்( electriciy related matters) மற்றும் தொழில் நுட்ப சார்ந்த செய்திகளையும்(latest trends) தொடர் பதிவுகளாய் கொடுத்தால் இன்னும் பலருக்கு உபயோகமாய் இருக்குமே.
ரமணா அவர்களே,
நேரம் கிடைக்கும்போது எனது மொழிபெயர்ப்பு, தன்னம்பிக்கை ஆகிய லேபல்களின் கீழ் வரும் பதிவுகளைப் பார்க்கவும்.
இன்னுமொரு விஷயம். தேவையின்றி நான் மொழி வகுப்பு எடுத்தால் அதற்கு மரியாதை இருக்காது. இலவசமாகக் கிடைக்கும் எதற்குமே மதிப்பில்லை.
எனது பதிவுகள் முக்கியமாக எனக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும். நீங்கள் சஜஸ்ட் செய்யும் பதிவு முயற்சிகள் எனக்கே போரடிக்கும். ஆளை விடுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
ரமணா அவர்களே,
நேரம் கிடைக்கும்போது எனது மொழிபெயர்ப்பு, தன்னம்பிக்கை ஆகிய லேபல்களின் கீழ் வரும் பதிவுகளைப் பார்க்கவும்.
இன்னுமொரு விஷயம். தேவையின்றி நான் மொழி வகுப்பு எடுத்தால் அதற்கு மரியாதை இருக்காது. இலவசமாகக் கிடைக்கும் எதற்குமே மதிப்பில்லை.
எனது பதிவுகள் முக்கியமாக எனக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும். நீங்கள் சஜஸ்ட் செய்யும் பதிவு முயற்சிகள் எனக்கே போரடிக்கும். ஆளை விடுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
நன்றி.டோண்டு ஐயா.
மனதில் பட்டதை தேங்காயை உடைத்துச் சொல்வது போல் பளிச்சென்று சொல்லும் உங்களது நேர்மைக்கு பாராட்டுக்கள்.
WHEN YOU WANT TO SAY NO
SAY NO
இந்த தைரியமும் தெளிவும் இல்லாமல்
அல்லல் படுவோர் ஆயிரம் இவ்வுலகில்.
மீண்டும் நன்றிகள்.
அ.காலையும் மாலையும் இணையும் சந்தியா காலத்தில் உணவருந்தக் கூடாது ஏன்?
ஆ.தாமரை இலையில் மட்டும் உனவை பின்பிறத்தில் வைத்து சாப்பிடலாம் ஏன்?
இ.சேர்ந்து சாப்பிடும் போது ஒருவருக்கொருவர் தொட்டுக்க்கொள்ளக்கூடாது ஏன்?
ஈ.பாயசம்,வடைகளை தெய்வங்களுக்கு படைத்துவிட்டு சாப்பிடவேண்டும் ஏன்?
அ.காலையும் மாலையும் இணையும் சந்தியா காலத்தில் உணவருந்தக் கூடாது ஏன்?
பூச்சிகள் தங்கள் கூட்டை நோக்கி போகும், உங்கள் உணவில் விழக்கூடாது!
ஆ.தாமரை இலையில் மட்டும் உனவை பின்பிறத்தில் வைத்து சாப்பிடலாம் ஏன்?
தாமரை இல்லை மேல்பகுதி ரொம்ப வழுக்கும். ஒரு துளி தண்ணீர் கூட நிற்காது. உணவு சாப்பிட இடைஞ்சல். அதனால் அதன் பின்புறம், நல்ல இடம்!
இ.சேர்ந்து சாப்பிடும் போது ஒருவருக்கொருவர் தொட்டுக்க்கொள்ளக்கூடாது ஏன்?
ஒருவர் சாப்பிடும் பொது மற்றவர் தொட்டால், ஷாக் ஆகி, சாப்பாடு வீண் ஆகும் அபாயம் அது தான்... நல்ல வெள்ளை வேஷ்டி சட்டை போட்டு உட்கார்ந்து சாப்பிடும் பொது, மஞ்சள் தூக்கலாக போட்ட மோர் கொளம்புவில் சாதம் பிரட்டி, உண்ணும் போது, விழுந்தால்?
ஈ.பாயசம்,வடைகளை தெய்வங்களுக்கு படைத்துவிட்டு சாப்பிடவேண்டும் ஏன்?
ஹி ஹி சுகர் பேசன்ட்ஸ்க்கு கொஞ்சம் கில்டி கான்ஷியச்நேஸ்... அது தான் தெய்வம் மீது பழி...
(அந்த காலத்தில் இனிப்பு சாப்பிட்டு மயங்கி விழுபவர்கள், தெய்வம் அடித்து விட்டது என்பார்கள்!)
----------
எப்படியோ, ராகவன் சார் மேல் உள்ள பதில்கள் கரக்டா?
கேள்விகள்
எம்.கண்ணன்
1. ஸ்டாலினுக்கு என்னதான் உபாதை ? எந்த பத்திரிக்கையிலும் இது பற்றிய அதிகவிபரங்கள் வெளிவருவதில்லையே ? ஏன் ? (அடிக்கடி வெளிநாடு சென்று மருத்துவம் செய்து கொள்வதால் இந்தக் கேள்வி)
2. ஸ்டாலினின் இளமைக்குக் காரணம் ? உணவு, உடற்பயிற்சி மட்டுமே காரணமா இல்லை அவரும் தந்தையைப் போன்று யோகா பயில்கிறாரா ?
3. சமீப வருடங்களில் பெண்கள் அதிகம் கலப்பு மணம் புரிவது / துணிவது எதனால் ? ரிபெல்லியன் காரணமா ? இல்லை அதிகம் பேர் தற்போது ஹாஸ்டலில் தங்கி படிப்பது/வேலை பார்ப்பது/ பெற்றவர்களிடமிருந்து வேறு ஊரில் வாழ்வது (வேலைக்காக) கொடுக்கும் சுதந்திரமா ? இல்லை இதற்கு ஏதேனும் உளவியல் ரீதியான காரணம் உண்டா ?
4. சென்னை பதிவர் சந்திப்புகள் ஏன் கடற்கரை காந்தி சிலைக்கருகே மட்டும் நடத்தப்படுகின்றன ? ஏன் நகரின் மற்ற மத்தியப் பகுதிகளான கோடம்பாக்கத்திலோ சைதாப்பேட்டையிலோ நடத்தப்படுவதில்லை ?
5. சென்னையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும், அரசியலில் அன்றாடங்காய்ச்சியாய் இருந்து பின்னர் ஏதோ ஒரு கட்சிப்பொறுப்பிலும் பின்னர் கல்வித்தந்தையாகி பல ஏக்கர்களை வளைத்தும் கட்டப்பட்டுள்ள கல்லூரிகளின் (நன்றி: குமுதம் - அன்று- இன்று) தரம் எப்படி ? எந்த கல்லூரி பெஸ்ட் ? எந்தக் கல்லூரி டுபாக்கூர் ?
6. விவேக் பல படங்களிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்தே வருகிறாரே ? என்ன காரணம் ?
7. சுஜாதாவுக்கே ஏற்பட்ட இந்த சந்தேகத்திற்கு உங்களுக்கு விடை தெரியுமா ? (காலையில் எழும் போது ஆண்களின் தொப்புளின் பஞ்சு ஏன் ?)
8. சுமார் 20 வருடங்களாக விகடன் கட்டுரைகளில் அவர்களது மாணவ/நிருபர்கள் எழுதும்போது - பன்மையில் எழுதி வந்தனர் - நாம் , சென்றோம், கவனித்தோம், கேட்டோம் - என. புது சைஸ் விகடனில் எல்லாம் ஒருமையில் -தான் - என தன்னை முன்னிலைப் படுத்தி எழுதப்படுகிறதே (நான், வந்தேன், சென்றேன்..) ? நான் எனவும் நிருபர் / புகைப்படக்காரரின் பெயர் மற்றும் செய்கைகளும் கட்டுரையில் இடம் பெறுகின்றன. என்ன காரணமாக இருக்கும் ?
என்ன இருந்தாலும் இப்படிக் கொட்டி இருக்ககூடாது. அப்படி என்ன தப்பாக் கேட்டுடாங்க தலவா!. (November 17, 2008 6:44 பம்- anony)வலைப்பூவுக்கு புதியவராக இருக்கலாம். ஏன் அதுக்கு பெருந்தன்மையா பதில் கொடுக்கக் கூடாது. பினூட்டங்க்களை எடிட் செய்கிரற வசதி இருக்கும் போது அந்த கமெண்ட்-ஐ வெளியிடாமல் ,என்னிடம் உதவி கேட்டவர் தனியாக மெயில் அனுப்பவும் என்று எழுதினால் போச்சு. டோண்டு சார் ! ஏன் சார் இப்ப்படி .........
Kuppukutty.
//ஏன் அதுக்கு பெருந்தன்மையா பதில் கொடுக்கக் கூடாது//.
இதில் என்ன பெருந்தன்மைக் குறைவை கண்டு கொண்டீர்கள்? ஒரு தொழில் சம்பந்தமான ஆலோசனை பெருவதற்கு சீரியசான அணுகுமுறை வேண்டும். ஏனோ தானோ என்றெல்லாம் கேட்கக்கூடாது. அதுவும் மொழி சம்பந்தமான தொழிலுக்கு இது முக்கியம். சம்பந்தப்பட்டவர் அதை புரிந்து கொள்ள இயலாதவர் என்றால் இதொழிலுக்கே அவர் லாயக்கில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear Sir,
Thanks for your reply. I know this is not the right link to ask you. But I tried to contact you through e-mail but couldn't find one.Hence I sent my request through this comment site. I'm very new to blog sites. I wanted to take this translation very seriously. One more point.
Note: Sorry for the ignorance. Could you please let me know how to contact you through e-mail? I couldn't see the option to send a comment marked not for presentation.
Thanks.
டோண்டு அண்ணா சொன்ன சரியாத் தான் இருக்கும். பெருந்தன்மை குறைவு இல்லன்னா, என் தவறாக சுட்டிக் காட்டியதை திரும்ப பெறுகிறான் இந்த குப்பு.
KUPPUKUTTY
// I couldn't see the option to send a comment marked not for presentation.//
There is no such option as such. All you have to do is to just say that the comment is not to be published in the body of your comment itself.
Therein you should mention your name and email id.
I will do the rest.
Regards,
Dondu N. Raghavan
//dondu(#11168674346665545885) said...
// I couldn't see the option to send a comment marked not for presentation.//
There is no such option as such. All you have to do is to just say that the comment is not to be published in the body of your comment itself.
Therein you should mention your name and email id.
I will do the rest.
Regards,
Dondu N. Raghavan//
Respected dondu sir,
Is there any specific reason for not disclosing your email id in your blog.
If so for communication purpose one emai id can be opened as dondus2004@gmail.com or dondus1975@gmail.com or dondus1978@gmail.com or dondus62@gmail.com 0r dondus1946@gmail.com enabling the raders/bloggers/others to clarify their doubts as cited above .
Thanking you .
Ever yours,
Ramakrishnahari.
rkhari1973@gmail.com
Post a Comment