11/02/2008

Coffee with Anu - Cho and Mauli

இன்று பிற்பகல் ஒரு அனானி பின்னூட்டம் வாயிலாக இன்று இரவு 09.30 மணிக்கு விஜய் டி.வி-யில் Coffee with Anu நிகழ்ச்சியில் சோ மற்றும் மௌலியின் நேர்க்காணல் வருவதை தெரியப்படுத்தினார். நான் சாதாரணமாக விஜய் டி.வி. பார்ப்பதில்லை. இருப்பினும் சோ மற்றும் மௌலி இருவரையுமே எனக்கு பிடிக்குமாதலால் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடிவு செய்தேன்.

வக்கீலாக, நடிகராக, எழுத்தாளராக, பத்திரிகை ஆசிரியராக என்று பல அவதாரங்கள் எடுத்துள்ள சோ அவர்களை அவர் தன்னை எவ்வாறு வகைபடுத்துவார் என்ற் கேள்வியுடன் அனு அவர்கள் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

சோ அவர்கள் தான் தனது அடையாளத்தைத் தேடுபவராக தன்னை வகைப்படுத்தினார். வக்கீல்கள் மத்தியில் இவரை நாடகக் காரராக பார்த்திருக்கிறார்கள். நாடகக்காரர்கள் இவரை பத்திரிகையாளராகப் பார்த்திருக்கிறார்கள், பத்திரிகைக்காரர்களோ இவரை நடிகராகப் பார்த்திருக்கிறார்கள். ஆக ஒரு குழப்பத்தை அவர் உருவாக்குகிறார் என்று அனு கூற அதுதான் தனது ஸ்டைல் என சோ கூறினார். சோ அவர்கள் மேலும் பேசுகையில் தனது தந்தை பெற்ற விவசாய விருதைப் பற்றி குறிப்பிட்டார். அந்த விருது இந்தியாவிலேயே இதுவரை இருவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது என்று சொன்னார். அவரை பேர் சொல்லி யாரும் அழைத்ததில்லை. சார் என்றுதான் அவரை குறிப்பிடுவார்கள் என கூறினார். அவருடைய நெருங்கிய நண்பர்கள்கூட வீட்டுக்கு வந்தால் “சார் இருக்கானா” என்றுதான் கேட்பார்கள் என்பதையும் தெரிவித்தார். மொத்தத்தில் ரொம்பவும் பன்முனை மனிதர் என்று முத்தாய்ப்பு வைத்தார்.

சோ அவர்கள் தான் முதலில் என்னவாக வர வேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார் என அனு வினவ, அவர் தனது வாழ்க்கையே ஒரு இலக்கில்லாத அலைச்சல் என்று கூறினார். அட்வகேட், நடிகர், பத்திரிகாசியர் என்று எல்லா அவதாரங்களும் தானாகவே வந்தன என்று குறிப்பிட்டார்.எல்லாவற்றையும் நகைச்சுவை கோணத்தில் பார்ப்பது பற்றி பேசும்போது பல தருணங்களில் நகைச்சுவை அவரை சங்கடமான தருணங்களிலிருந்து காப்பாற்றியுள்ளன என்று கூறினார்.

ஒரு டைம் காப்ஸ்யூல் செய்து வைத்திருப்பதாகவும் அது சில நூறாண்டுகள் கழித்து வெளியே வரும்போது பல சாதனைகள் அவர் பெயரில் இருக்குமென்றும் (இந்திய அரசியல் சட்டத்தை எழுதியது போன்ற உடான்ஸ்கள்) கூறினார். 300, 400 ஆண்டுகளுக்கு பிறகு யார் இதையெல்லாம் சரி பார்க்க இயலும் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். பிறகு தான் நாடக உலகுக்கு வந்தது பற்றியும் குறிப்பிட்டார். “பெற்றால்தான் பிள்ளையா” நாடகத்தில் அவர் ஏற்ற மெக்கானிக் ரோல் முதலில் ஸ்கோப் இல்லாத பாத்திரமாகக் கருதப்பட்டதாகவும் வேறு யாரும் அதை எடுக்கத் தயாராக இல்லாததால் தான் எடுத்ததாகவும் கூறினார். பின்னால் அது வெற்றி பெற்று அதே நாடகம் “பார் மகளே பார்” என்ற பெயரில் சிவாஜி நடித்த போது சோவுக்கும் அவர் செய்த அதே மெக்கானிக் ரோல் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டார்.

இப்போது மௌலியின் எண்ட்ரி வந்தது. சோ மாதிரியே அவரும் நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர் என்று பல அவதாரங்கள் எடுத்ததை அனு அவர்கள் குறிப்பிட்டார். மௌளி வந்ததும் முதலில் கூறியது தனக்கு சோ ஒரு தூண்டுகோலாக இருந்தார் என்பதை. டி.கே.எஸ். பிரதர்ஸ், சேவா ஸ்டேஜ் குழுவினர் என்றெல்லாம் தான் முதலில் பார்த்த நாடகங்கள் பிரமிப்பை ஏற்படுத்தி தன்னால் அந்த அளவுக்கெல்லாம் செய்ய இயலுமா என அவர் மலைத்திருக்கிறார். பிறகு சோ அவர்களது மனம் ஒரு குரங்கு நாடகத்தில் அவரது வசனங்கள் சாதாரணமான குடும்பத்தில் நடப்பதையே சுவைபடக் கூறியது என்று பார்த்த பின்னால் தனக்கும் தைரியம் வந்தது என்பதைக் கூறினார். உடனே சோ உள்ளே புகுந்து “அதாவது இந்த சோவே நாடகம் எழுதும்போது தான் ஏன் தயங்க வேண்டும்” என மௌலி நினைத்தார் என்பதை குறிப்பிட்டு பார்ப்பவர் முகத்தில் புன்னகையை வரவழைத்தார்.

சோ நாடகங்களில் நாடகம் ஆரம்பிக்கும் சில நிமிடங்கள் முன்னால் வரை அவரது முழுவினர் வெளியே நின்று கேஷுவலாக பேசிக்கொண்டிருப்பார்கள் என்றும் மணி அடித்ததும்தான் உள்ளே போவார்கள் என்றும் குறிப்பிட்டார். சோ குறுக்கிட்டு தங்கள் குழுவினரின் இந்த டிசிப்ளின் இல்லாத நிலையே பாலச்சந்தரை அவரது நாடகங்களை டைரக்ட் செய்யவிடாமல் தடுத்தது என குறிப்பிட்டார். ஒரு சோகமான சந்தர்ப்பத்தில் இவர் ஒரு ஜோக் எடுத்து விட்டு டயலாக் பேசியதை பாலசந்தர் ஏற்க இயலாது அவரது நாடகங்களிலிருந்து விலகியதயும் குறிப்பிட்டார்.

சோ மேலும் கூறியதாவது. மௌலி ஒரு சிருஷ்டிகர்த்தா. தான் வெறும் அங்கதம் எழுதுபவர். சினிமாவை மௌலி, விசு போன்றவர்கள் வெகு சீக்கிரம் புரிந்து கொண்டது போல தன்னால் இயலவில்லை எனவும் குறிப்பிட்டார். மௌலி அவர்கள் பேசும்போது தனது நாடகங்களை திரைக்கதைக்காக மாற்றி சிதைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவற்றை முதலில் தர மறுத்ததாக குறிப்பிட்டார். திடீரென அவர் எழுதிய ஒரு நாடகத்தை அவரையே டைரக்ட் செய்யும் வாய்ப்புவர, அதற்காக 40 நாட்கள் லீவில் செல்ல, கதாநாயகனுக்கு மஞ்சள்காமாலை, டைஃபாய்ட் எல்லாம் வர, இரு கதாநாயகிகள் ரொம்ப பிசியானதால் அவரவர் பிய்த்து கொண்டு ஓட, மொத்தத்தில் அந்த ஒரு படம் கிட்டத்தட்ட ஓராண்டு இழுக்கடித்தது. தனது வேலையையே விட வேண்டியிருந்தது. வேலையை விடுவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய அவர் தந்தையைக் கேட்டதாகவும் அவரோ அப்போதுதான் மௌளிக்கு திருமணம் ஆகியிருந்ததை சுட்டிக் காட்டி, இவர் பாண்ட்ஸ் உத்தியோகத்தில் இருந்ததை நம்பி, தன் பெண்ணை அவருக்கு கட்டிக் கொடுத்த அவர் மாமனாரின் ஒப்புதலைப் பெறும்படி கூற என்றெல்லாம் மௌலி சுவையாக வர்ணித்தார். நல்லவேளையாக அப்படம் ஹிட் ஆனதில் அவருக்கு ரொம்பவே ரிலீஃப்தான்.

சோ அவர்கள் தான் 25 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தது போல அப்படியே மாறாமல் இருக்கிறார் என்பதை மௌலி குறிப்பிட்டபோது, சோ அவர்கள் அதாவது தான் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாக மௌலி கூறுகிறார் என்று கூறி கலகலப்பை உருவாக்கினார். தான் ஒருபோதும் உடற்பயிற்சியே செய்ததில்லை என்றும் அவ்வாறு செய்பவர்களில் பலரை கலாட்டா செய்தே வெறுப்பேற்றியதாகவும் கூறினார்.

இப்போது அனு அவர்கள் சோ மற்றும் மௌலி ஒவ்வொருவருக்கும் மூன்று கார்டுகள் வரை தெரிவு செய்ய தந்து அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை பற்றிய தங்களது அனுபவத்தை கூறுமாறு கேட்டு கொண்டார்.

மௌலி முதலில் செலக்ட் செய்தது பாண்டியராஜன் படத்தை. கதாநாயகர்கள் எல்லோருமே உயரமாக இருக்க வேண்டும் என்ற புரிதலை உடைத்தவர் அவர் என்று மௌளி குறிப்பிட்டார். அவருடன் சேர்ந்து பணியாற்றிய புது வாரிசு என்ற படத்தையும் குறிப்பிட்டார். சோ அவர்கள் குறுக்கிட்டு டி.ஆர். ராமச்சந்திரனுக்கு பிறகு பல படங்களில் கதாநாயகனாகவே நடித்தவர் பாண்டியராஜனே என்று குறிப்பிட்டார்.

மௌலி அவர்கள் பிறகு எடுத்தது சுஹாசினியின் படத்தை. அவருடன் சேர்ந்து பணியார்றிய படமாக “நன்றி மீண்டும் வருக” வை அவர் குறிப்பிட்டார். சோ அவர்கள் குறுக்கிட்டு சுஹாசினி பல விஷயங்கள் தெரிந்தவர், இருந்தாலும் அவற்றையெல்லாம் வெளியே கூறாது அடக்கி வாசிக்கிறார் என்றார்.

மூன்றாவதாக மௌலி எடுத்தது கே. பாலசந்தர் படத்தை. அவரைப் பற்றி காலை முதல் மாலை வரை விடாது பேசலாம் என்று மௌளி குறிப்பிட்டார். அவரை துரோணராக பாவித்து பல ஏகலைவர்கள் உருவாகியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

சோ அவர்கள் முதலில் எடுத்த படம் ஜெயசங்கர் அவர்களுடையது. பரோபகாரி அவர் என்று முதலில் குறிப்பிட்டார். பல படங்களில் தனது பாணியில் நடித்து, சிவாஜி எம்ஜிஆர், ஜெமினி என்ற மும்மூர்த்திகள் இருந்த அக்காலக்கட்டத்திலேயே தனக்கென இடம் செய்து கொண்டவர் என்பதையும் குறிப்பிட்டார். அவரது மகன் கண் மருத்துவர் என்றும் குறிப்பிட்டார்.

சோவின் அடுத்த படம் ஜெயலலிதாவுடையது. அவரது போர்குணத்தை தான் விதந்தோதுவதாக அவர் குறிப்பிட்டார். அ.இ.அ.தி.மு.க.வில் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரால்தான் ஓட்டுகள் வந்தாலும் தனது செயல்திறனால் தனக்காகவே பலரை தன் கட்சிக்கு ஓட்டு போடவைத்தார் அவர் என்பதையும் குறிப்பிட்டார். தோல்வியடைதாலும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள பெண் அரசியல்வாதிகளிலேயே மிகவும் சிறந்தவர் அவர் என்பதையும் சோ கூறினார்.

அடுத்து சோ அவர்கள் எடுத்த படம் மனோரமாவுடையது. பொம்பள சிவாஜி அவர் என்பதை குறிப்பிட்டார். ஸ்க்ரிப்ட் எதிர்ப்பார்ப்பதற்கு மேல் பெர்ஃபார்மன்ஸ் தர அவரையோ நாகேஷையோ அடித்து கொள்ள யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இப்போது அனு அவர்கள் Coffee Award என்பதை பற்றி கூறினார். அதை யாருக்காவது வழங்க வேண்டுமென்றால் அவர்கள் யாருக்கு தருவார்கள் என கேட்க, சோ அவர்கள் அழுத்தம்திருத்தமாக தனது பேத்திக்கே தருவேன் எனக் கூறினார். இந்த விஷயத்தில் குடும்பத்தினருக்கே எல்லாவற்றையும் தருவது என்ற தமிழக கலாச்சாரத்தைத்தான் பின்பற்றி, ஊரோடு ஒத்து வாழ் என்ற கோட்பாட்டின்படி அவ்வாறு செய்வதாகக் கூறினார். பேத்தி இப்போது நான்காம் வகுப்பில் படிப்பதாகவும் தன்னைப் போலன்றி எல்லா பரீட்சைகளிலும் நூற்றுக்கு நூறு மார்க்குகள் வாங்குவதாகவும் பெருமிதமாக குறிப்பிட்டார்.

மௌலி இது பர்றி பேசும்போது முதலில் தனது மாட்டுப்பெண்ணிற்கு தர யோசித்ததாகவும் பிறகு சோ அவர்கள் ஏற்கனவேயே தனது உறவினரை தேர்ந்தெடுத்ததால் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டதாகவும் கூறினார். “பொய் சொல்லப் போறோம்” படத்தின் இயக்குனர் விஜி அவர்களை தெரிவு செய்து அவரை சிலாகித்து பேசினார்.

இப்போது ராபிட் ஃபையர் சுற்று வந்தது. அதாவது மாறி மாறி கேள்விகள். டாபிக்கை அனு தெரிவு செய்ய, சுருக்கமாக அது பற்றி பேச வேண்டும் என்றார்.

சோ: (நாட்டின் சுதந்திரம்) நாட்டுக்கு ரொம்பவும் முக்கியமானது. அதை கேள்வி கேட்கக் கூடாது
மௌலி: (திரைப்படங்களில் இயக்கும்போது சுதந்திரம்) அது மிகவும் அவசியம்
சோ: (கருணாநிதி) உழைப்பாளி. சில உதாரணங்கள் குறிப்பிட்டார்.
மௌலி: (கிரேசி மோகன்) மிக திறமையான நகைச்சுவை நடிகர்
சோ: (ரஜனி): இவ்வளவு சாதனைகளுக்கு பின்னும் அடக்கத்துடன் இருப்பவர். எல்லாமே கடவுள் தந்தது என்றிருப்பவர். பல விஷயங்களை பற்றி கருத்து கூறாவிட்டாலும் அவற்றை பற்றி உறுதியான கருத்துகள் கொண்டுள்ளார்.
மௌளி: (ஒய்.ஜி. மகேந்திரன்) நாடக உலகமே அவரது வாழ்க்கை
சோ: (கமல் அல்லது ரஜனி யார் வேண்டும்): இருவருமே வேண்டும்.
மௌலி: (நாடகம் அல்லது சினிமா): நாடகத்தில் உடனுக்குடன் ரிசல்ட் தெரியும். அதே சமயம் சினிமாவில் ஆழ்ந்து செயல்பட்டு நல்ல பலன்களை பெற இயலும்
சோ (தற்காலத்தில் எதை மாற்ற நினைக்கிறீர்கள்): லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்

இப்போது காஃபி அவார்ட் தரும் நேரம் வந்தது. இருவருக்குமே அதைத் தருவதாக அனு கூறிவிட, அதாவது கமலும் வேண்டும் ரஜனியும் வேண்டும் என தான் குறிப்பிட்டதை போல என்று கலகலப்பை உருவாக்க நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

இது பற்றி எனக்கு முன்கூட்டியே தகவல் அளித்த அனானிக்கு (ஏம்பா, பேர் போட்டுக்க மாட்டீங்களா இங்கே கூட என்பது முரளி மனோஹர்). நிகழ்ச்சியின் நடுவில் என்றென்றும் அன்புடன் பாலாவிடமிருந்து ஃபோன். அவரும் என்னை இந்த நிகழ்ச்சியை பார்க்கச் சொல்வதற்காக போன் செய்துள்ளார், அவரிடம் நான் ஏற்கனவே அதைத்தான் செய்கிறேன் என்று கூறினேன். அவரும் இது பற்றி பதிவு போடப்போவதாகச் சொன்னார்.

வீடியோவில் பார்க்க:
முதல் பாகம்
இரண்டாம் பாகம்
மூன்றாம் பாகம்
நான்காம் பாகம்
ஐந்தாம் பாகம்
ஆறாம் பாகம்

அன்புடன்,
டோண்டு ராகவன்

39 comments:

Anonymous said...

டோண்டு சார்,

விரிவான பதிவிற்கு நன்றி. வலைப்பதிவர்களில் சிலர் சோ மற்றும் மோடி பெயர்களைக் கேட்டவுடன் காண்டு கஜேந்திரன்க‌ளாக உரு மாறுவதும் எங்கோ "தீ" வைத்தது போல பதறுவதும் ஏன்? சோ மற்றும் மோடிகளால் இவர்கள் நேரடியாக பாதிக்கப் பட்டதுபோலவும் தெரியவில்லை.

Udhayakumar said...

//சோ அவர்கள் அதாவது தான் ஒரு முன்னேற்றமும் இருப்பதாக மௌளி கூறுகிறார் என்று கூறி கலகலப்பை உருவாக்கினார்.//

????

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மௌளி இல்லைங்க, மௌலி.

சரவணகுமரன் said...

நானும் இந்நிகழ்ச்சியை பார்த்தேன். ஆனாலும், உங்கள் பதிவு இன்னொரு முறை பார்த்த உணர்வை தந்தது. அந்தளவுக்கு, எழுத்தில் அதை பதிவு செய்து இருக்கீர்கள். வாழ்த்துக்கள்.

விஜி => விஜய்
ஜயசங்கர் => ஜெயசங்கர்
ஜயலலிதாவுடையது => ஜெயலலிதாவுடையது

Venkat said...

You have mentioned "Cho Muzhuvinar" instead of "Cho Kuzhuvinar". Thanks for capturing the program and coming up with the blog so quickly.

Venkat

Anonymous said...

please clarify the truth

unmaiyethu poi yethunnu onnum puriyallae.

Are we lossing the freedom of speech /expression
in the name of free economy
( dinamani reported that some banks have shown a huge amount as unforeseen expenditure in their balansheet)
1.are we heading towards " usa fall""

2.are medias and oppsite parties playing politics in this case also.
please clarify
whether we are safe or not?

1. staff cuts are under consideration
2.real estate is becomming tight
3.share market is suffocating
4.it/bpo sector are finding ways to maitain their position
5.staff intake is in question


//

சமீபத்தில் Assocham அப்படிங்கிற நிறுவனம் இந்தியாவில் 30% வரை வேலை இழப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது அப்படின்னு நேத்து சொல்லி இருந்தது. ஆனா இன்னிக்கு பார்த்தால் அந்த அறிக்கைக்கு கடும் நிதி அமைச்சரும் மத்த சிலரும் எப்படி இப்படி பொறுப்பில்லாம ஒரு அறிக்கையை விடலாமுன்னு எகிறி இருக்காங்க.

அதே மாதிரி இந்தியாவில் IT மற்றும் வங்கி துறையை தவிர மற்ற எல்லா நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளிலும் பெரிய அளவிலான லாபமோ இல்ல வளர்ச்சியையோ பெற்று இருப்பதாக தெரியவில்லை. அதுவும் auto, reality துறை நிறுவனங்கள் நஷ்டம அடைந்ததாக கூறியுள்ளன. அதுவும் இன்று IOC சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது. நிலைமை இப்படி இருக்க நிதியமைச்சரும், பிரதமரும் தினமும் இந்தியாவில் எவ்விதமான பொருளாதார பாதிப்பு இல்ல, வளர்ச்சி விகிதம் அப்படியே இருக்கிறதுன்னு யாரையோ திருப்தி படுத்த மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர். Recession of the decade என்று சொல்லப்படும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மக்களை தயார் படுத்தாமல் இன்னமும் எவ்வுளவு நாட்களுக்கு தான் வடிவேலு மாதிரி basement strong body weak அப்படின்னு சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க போகிறார்களோ//


http://santhoshpakkangal.blogspot.com/2008/11/finance-minster-fruad-minister.html

ரவி said...

///விரிவான பதிவிற்கு நன்றி. வலைப்பதிவர்களில் சிலர் சோ மற்றும் மோடி பெயர்களைக் கேட்டவுடன் காண்டு கஜேந்திரன்க‌ளாக உரு மாறுவதும் எங்கோ "தீ" வைத்தது போல பதறுவதும் ஏன்? சோ மற்றும் மோடிகளால் இவர்கள் நேரடியாக பாதிக்கப் பட்டதுபோலவும் தெரியவில்லை.////

மாயாண்டி அவர்களே...

சோ.
சு.சுவாமி.
ஜெ.

இவர்கள் எல்லோரும் தமிழர்கள் நலனுக்காகவே சிந்திக்க கூடியவர்கள்.

Anonymous said...

நன்றி டோண்டு சார். (உங்களை இந்தப் பதிவு போடச்சொன்ன அதே அநானி :-)

உங்களைக் கேள்வி பதில் பகுதியை ஆரம்பிக்கச்சொன்னதும் நானே. சில வாரங்களுக்கு முன் கேள்வியே இல்லாததால் நிறுத்த நேர்ந்தது குறித்து வருத்தமே. தற்போது மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி. உங்களின் கேள்வி பதில் பகுதி பிரபலமானதில் மகிழ்ச்சியே.

நன்றி.

வடுவூர் குமார் said...

இந்த விஷயத்தில் குடும்பத்தினருக்கே எல்லாவற்றையும் தருவது என்ற தமிழக கலாச்சாரத்தைத்தான் பின்பற்றி, ஊரோடு ஒத்து வாழ் என்ற கோட்பாட்டின்படி அவ்வாறு செய்வதாகக் கூறினார். பேத்தி இப்போது நான்காம் வகுப்பில் படிப்பதாகவும் தன்னைப் போலன்றி எல்லா பரீட்சைகளிலும் நூற்றுக்கு நூறு மார்க்குகள் வாங்குவதாகவும் பெருமிதமாக குறிப்பிட்டார்.

நல்ல நகைச்சுவையுடன் கூடிய உள்குத்து!!

குறிப்பு எடுத்து எழுதுவதில் கல்க்குகிறீர்கள்.நானாக இருந்தால் வீடியோ எடுத்து போட்டுவிடுவேன்.:-)

Ramesh said...

//சோ அவர்கள் அதாவது தான் ஒரு முன்னேற்றமும் இருப்பதாக மௌளி கூறுகிறார் என்று கூறி கலகலப்பை உருவாக்கினார்.//

இல்லாமல்?

Anonymous said...

டோண்டு சார்,

சொல்லி முடிக்கல அதுக்குள்ள "தீ" பட்டது மாதிரி வந்து கருத்து சொல்லிட்டார் கந்தசாமி. சதா சர்வ காலமும் மோடி, சோ, ஜெ, சு. சாமின்னு நினைச்சுக்கிட்டே இருப்பாங்களோ? மேலே சொன்னவர்களின் அபிமானிகளே இந்த அளவுக்கு இவங்கள நினைப்பாங்களான்னு சந்தேகம்தான்.

செ.ரவி,

உங்க பார்வையில வேற யாரு தமிழர்கள் நலன்ல அக்கறையா இருக்காங்க? குடும்பத்துக்கு சொத்து சேர்க்குறவரா? கள்ளத்தோணில போயி இப்போ சமீபத்துல ள்ள போனவரா? உண்மையாவே மக்கள் மேல அக்கறை இருக்குறவங்க எதுக்காக மக்கள் கிட்ட கொள்ளை அடிச்ச பணத்த ஸ்விஸ் பேங்க்ல போடணும்? நீங்க தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது பண்றதா சொல்றவங்களுக்கு ஸ்விஸ் பேங்க்ல பணம் இல்லைன்னு சொல்ல முடியுமா உங்களால? மொத்தத்துல நீங்க சொன்ன லிஸ்ட்டும் சரி நான் சொன்ன லிஸ்டும் சரி மக்களுக்கு எத்வுமே செய்யப் போறதில்லை. இதுல வீணா உங்களுக்கும் எனக்கும் எதுக்கு வாய்(க்கால்) தகறாரு?

dondu(#11168674346665545885) said...

//இவர்கள் எல்லோரும் தமிழர்கள் நலனுக்காகவே சிந்திக்க கூடியவர்கள்.//
உண்மை.
//மௌளி இல்லைங்க, மௌலி.//
//விஜி => விஜய்
ஜயசங்கர் => ஜெயசங்கர்
ஜயலலிதாவுடையது => ஜெயலலிதாவுடையது//

பிழை திருத்தி விட்டேன், ந்ன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//மாயாண்டி அவர்களே...

சோ.
சு.சுவாமி.
ஜெ.

இவர்கள் எல்லோரும் தமிழர்கள் நலனுக்காகவே சிந்திக்க கூடியவர்கள்.//

நன்றி ரவி அவர்களே,நீங்கள் இவர்களை விட அதிகமாக தமிழர்கள் நலனுக்காக சிந்திப்பவர். அது உங்களின் செய்கைகள் மூலம் தெளிவாக தெரிகிறது. வெறுப்புணர்ச்சி என்பது உங்கள் சிந்தனையில் அனு அனுவாய் கலந்து இருக்கிறது. உங்களின் சிலுவைபாசம் கண்ணை மறைக்கிறது. அல்லேலூயா

சின்னப் பையன் said...

இப்போதான் ய்ட்யூப்லே இந்த ப்ரோக்ராமை பார்த்தேன். ஆறு பகுதிகளா கிடக்குது...

அதைப் பார்த்த பிறகு உங்க பதிவைப் படிச்சா - அப்படியே, வார்த்தைக்கு வார்த்தை இங்கே...

தமிழ்லே shorthandலே எழுதி பதிவிட்டீங்களா??????????

dondu(#11168674346665545885) said...

//தமிழ்லே shorthandலே எழுதி பதிவிட்டீங்களா?????????//
இந்து நிருபரின் மகன் இதைக்கூடச் செய்யாவிட்டால் எப்படி?

யூ ட்யூப்பில் ஆறு பகுதிகள் பற்றி சொன்னதற்கு நன்றி ச்சின்னப்பையன். அவற்றைத் தேடி எடுத்து, ஆறுக்கும் சுட்டிகள் தந்து பதிவில் சேர்த்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

///உங்க பார்வையில வேற யாரு தமிழர்கள் நலன்ல அக்கறையா இருக்காங்க? குடும்பத்துக்கு சொத்து சேர்க்குறவரா? கள்ளத்தோணில போயி இப்போ சமீபத்துல ள்ள போனவரா? உண்மையாவே மக்கள் மேல அக்கறை இருக்குறவங்க எதுக்காக மக்கள் கிட்ட கொள்ளை அடிச்ச பணத்த ஸ்விஸ் பேங்க்ல போடணும்? நீங்க தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது பண்றதா சொல்றவங்களுக்கு ஸ்விஸ் பேங்க்ல பணம் இல்லைன்னு சொல்ல முடியுமா உங்களால? மொத்தத்துல நீங்க சொன்ன லிஸ்ட்டும் சரி நான் சொன்ன லிஸ்டும் சரி மக்களுக்கு எத்வுமே செய்யப் போறதில்லை. இதுல வீணா உங்களுக்கும் எனக்கும் எதுக்கு வாய்(க்கால்) தகறாரு?////

தமிழர்களின் நலனை சிந்திக்கக்கூடியவர்கள் எவரும் "இப்போது" என் ""பார்வையில்" இல்லை என்பது தான் உண்மை மாயாண்டி...

புரியுமா புரியாதான்னு தெரியல...இருந்தாலும் இது தான் உண்மை...

ரவி said...

///நன்றி ரவி அவர்களே,நீங்கள் இவர்களை விட அதிகமாக தமிழர்கள் நலனுக்காக சிந்திப்பவர். அது உங்களின் செய்கைகள் மூலம் தெளிவாக தெரிகிறது. வெறுப்புணர்ச்சி என்பது உங்கள் சிந்தனையில் அனு அனுவாய் கலந்து இருக்கிறது. உங்களின் சிலுவைபாசம் கண்ணை மறைக்கிறது. அல்லேலூயா////

ஆமேன் அல்லேலூயா !!!
அல்லேலூயா அல்லேலூயா !!!

எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல்...

கேட்டிருக்கீங்களா ?

ராபின் ஹூட் said...

//சோ.
சு.சுவாமி.
ஜெ.

இவர்கள் எல்லோரும் தமிழர்கள் நலனுக்காகவே சிந்திக்க கூடியவர்கள்//
இந்த வரிசையில் டோண்டுவயும் சேர்த்துக் கொள்ளலாமே!.

ரவி said...

வாங்க ராபின்.

லிஸ்ட் இப்போ சரியா பாருங்க...

சோ.
சூ.சுவாமி
ஜெ.
இந்து ராம்.
டோண்டு ராகவன்...

டோண்டு சாரை இந்து ராமுக்கு அடுத்ததா போட்டிருக்கேன்...லங்கா ரத்னா விருது அனுப்பிடப்போறான் ராஜபக்ஸே.

Anonymous said...

தமிழர்களின் நலனை சிந்திக்கக்கூடியவர்கள் எவரும் "இப்போது" என் ""பார்வையில்" இல்லை என்பது தான் உண்மை மாயாண்டி...//

யோவ் தழலு, நீ உண்மையிலேயே தமிழின் நலனையும் தமிழர் நலனையும் சிந்திக்கக்கூடியவனா இருந்த முதல்ல நீ எழுதுறத நிறுத்து! உன் இம்சை தாங்க முடியல!

Anonymous said...

//வாங்க ராபின்.//

யோவ் இது டோண்டுவோட வேலையா, அடுத்துவன் வூட்டாண்டை போய் நீ வரவேற்ப்பு கொடுக்கற?

ஓகை said...

டோண்டு ஐயா, இந்தப் பதிவுக்கு நன்றி. தொலைக்கட்சியில் பார்க்கத் தவறவிட்ட நிகழ்ச்சியைக் காண சுட்டிகளைத் தந்ததற்கு மிக மிக நன்றி.

நடராஜன்.

Anonymous said...

\\தமிழர்களின் நலனை சிந்திக்கக்கூடியவர்கள் எவரும் "இப்போது" என் ""பார்வையில்" இல்லை என்பது தான் உண்மை மாயாண்டி...

புரியுமா புரியாதான்னு தெரியல...இருந்தாலும் இது தான் உண்மை...//

ரவி,

புரிதலுக்கு நன்றி. ஏற்கனவே சொன்னபடி உங்களுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. உங்கள் பதிவுகளை விரும்பிப்படிக்கும் வலைத்தள வாசகன் நான். கடினமான உழைப்பால் பெற்ற காசில் 5 லட்சம் கொடுத்த நமீதா பெரியவரா இல்லை எந்நேரமும் தமிழ் தமிழ் தமிழன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் குடும்பங்களின் மொத்தத் தொகையான 10 லட்சம் + 5 லட்சம் + 50 ஆயிரம் + 25 ஆயிரம் பெரியதா? காசு என்று வந்தவுடன் தமிழர் நலன் மறந்து கையைச் சுருக்குவது எந்த விதத்தில் நியாயம்? மாதம் 10 ஆயிரம் வாங்கும் அரசு ஊழியனின் ஒரு நாள் சம்பளத்தை (சுமார் ரூ 350) வலுக்காட்டாயமாக வாங்கும் இவர்கள் ஏன் தாங்கள் கஷ்டப்பட்டு(?) உழைத்த காசில் சில கோடிகளைக் கொடுக்கவில்லை? வெறும் பேச்சு தமிழர்களைக் கரை சேர்க்காது ரவி.

ஒரு சோ ஒரு ஜெ ஒரு ராம் இவர்களால் தமிழர் நலன் கெடுகிறது என்று வாதிடும் இவர்கள் ஓராயிரம் தமிழர்களை ஏன் ஒருங்கிணைக்கவில்லை? நெடுமாறனின் பயணத்தை தந்திரமாக தடுத்தவர் யார்? பெயர் அடுத்தவருக்குப் போய் விடக்கூடாது என்ற பொறாமைதானே அதற்குக் காரணம்? அப்போது வராத கண்ணீர் இப்போது சி டி யைப் பார்த்ததும் வந்தது ஏன்? ஆண்டாண்டு காலமாக கஷ்டப்படும் தமிழனின் நிலைமையை நன்கு அறிந்தவர்தானே நமீதாவின் குத்தாட்டங்களைக் கண் கொள்ளாமல்/கொட்டாமல் ரசித்தார்? எத்தனையெத்தனை விழக்கள்? எத்தனையெத்தனை பிறந்த நாள் கொண்டாட்டங்கள்? மகனின் பிறந்தநாளுக்கு தமிழர் பண்பாடு படி ஆசையோடு கேக் ஊட்டி விட்டபோது எங்கே போனது தமிழ்ப்பாசம்? உண்மையைச் சொன்னால், உங்களுக்கும் என்னைப் போன்றோருக்கும் இருக்கும் பாசமே உண்மையான பாசம், அது தமிழன் என்பதையும் கடந்து மனிதன் என்பதால் வந்தது.

இனிமேல் இந்த விவாதம் வேண்டாம். இவர்களின் தமிழர் பாசம் என்ற முகமூடி கிழிந்து காற்றில் பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதுடன் முடிக்கிறேன்.

ரவி, நான் எழுதியதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். எல்லாம் ஒரு ஆற்றாமைதான்.

ILA (a) இளா said...

//சோ.
சூ.சுவாமி
ஜெ.
இந்து ராம்.
டோண்டு ராகவன்...//
இவ்வளவு சின்ன லிஸ்ட் குடுத்த செந்தழல் ரவியைக் கண்டிக்கிறேன்

Anonymous said...

/ செந்தழல் ரவி said...
வாங்க ராபின்.

லிஸ்ட் இப்போ சரியா பாருங்க...

சோ.
சூ.சுவாமி
ஜெ.
இந்து ராம்.
டோண்டு ராகவன்...

டோண்டு சாரை இந்து ராமுக்கு அடுத்ததா போட்டிருக்கேன்...லங்கா ரத்னா விருது அனுப்பிடப்போறான்


இந்த லிச்ட்லே ஒரு சில பதிவாளர்கள் பேர் விட்டுப் போனது மாதிரி தெரியிது?


--------------
--------------
--------------
--------------

Madhu Ramanujam said...

வீடியோவின் சுட்டிக்கு நன்றி. படிக்கும்போதே அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

வால்பையன் said...

//நான் சாதாரணமாக விஜய் டி.வி. பார்ப்பதில்லை.//

அசாதரணமா எப்படி இருப்பிங்க

வால்பையன் said...

//சோ மற்றும் மௌலி இருவரையுமே எனக்கு பிடிக்குமாதலால்//

மோடிய விட்டுடிங்களே

dondu(#11168674346665545885) said...

//மோடிய விட்டுடிங்களே//
ஆனால் இங்கு மோடி வரவில்லையே.

எனக்கு வால்பையனையும்தான் பிடிக்கும், என்ன சொன்னாலும் விடாது குடிப்பதற்காக உரிமையுடன் அவ்வப்போது நாலு சாத்து சாத்து சாத்தவேண்டும் என்ற ரேஞ்சுக்கு அவரை பிடிக்கும். அதற்காக எல்லா இடத்திலும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா. அதே போலத்தான் மோடி விஷயமும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

உங்களுக்கில்லாத உரிமையா!

Anonymous said...

// dondu(#11168674346665545885) said...
//மோடிய விட்டுடிங்களே//
ஆனால் இங்கு மோடி வரவில்லையே.

எனக்கு வால்பையனையும்தான் பிடிக்கும், என்ன சொன்னாலும் விடாது குடிப்பதற்காக உரிமையுடன் அவ்வப்போது நாலு சாத்து சாத்து சாத்தவேண்டும் என்ற ரேஞ்சுக்கு அவரை பிடிக்கும். அதற்காக எல்லா இடத்திலும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா. அதே போலத்தான் மோடி விஷயமும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
வால்பையன் said...
உங்களுக்கில்லாத உரிமையா//

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு

வால்பையன் சாரை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே!

ஏற்கன்வே வாங்கிக் கட்டுவதில் ..
சிக்கலான பின்னுட்டம்.
தொடர் கதையா?

( just for fun. mr.tailboy please don't think otherwise)

Unknown said...

1.நடிகர் ரஜினியின் பேட்டி பார்த்தீர்களா( சன் டீவி)?

2.அவரை அரசியலிக்கு இழுக்காமல் அவரது ரசிகர்கள் விடமாடார்கள் போலிருக்கே?

3.விஜய் ராஜேந்தரை மட்டும் உண்ணாவிரதத்தில் காணோம் என்பது ?

4.இலங்கை நிதிக்கு மிகச் சொற்ப அள்வில் நன்கொடை கொடுத்துள்ள நடிக /நடிகர் ?

5.அஜித்க்கு என்னாஆச்சு?சபை அறிந்து பேசும் ஆற்றல் சுட்டு போட்டாலும் வராது போலுள்ளதே?

6.ரஜினியின் பாராட்டு சத்யராஜின் பேச்சு பற்றி?

7.நக்கலா,பாராட்டா?பயமா?

8.ச.குமார் அரசியல் வியாபாரம் எடுபட்டது மாதிரி தெரியவில்லையெ?

9.அரசு டீவி-சன் டீவி விவகாரம் எந்த நிலையில் உள்ளது?

10.அரசுப் போக்குவரத்துத்துறை களை கட்டுவது போலுள்ளதே?

வால்பையன் said...

//( just for fun. mr.tailboy please don't think otherwise)//

சிறு சிறு கிண்டலுக்கேல்லாம் மன வருத்தப்பட்டால் எப்படி?

நானெல்லாம் கைபுள்ள டைப்பாக்கும்,
எவ்ளோ அடிச்சாலும் வாங்கிகிவேன்

Anonymous said...

//வால்பையன் said...
//( just for fun. mr.tailboy please don't think otherwise)//

சிறு சிறு கிண்டலுக்கேல்லாம் மன வருத்தப்பட்டால் எப்படி?

நானெல்லாம் கைபுள்ள டைப்பாக்கும்,
எவ்ளோ அடிச்சாலும் வாங்கிகிவேன்//


உங்கள் பேரில் ஒருவர் போலியாய் குறும்பு பண்னுவதாய் வந்துள்ள பின்னூட்டம் பற்றிய செய்தியும் ( உண்மையாய் இருந்தால்) அதன் படி உங்கள் தற்காப்பு நடவடிக்கைகளை டோண்டு சாரின் முரட்டு வைத்தியம் துணை கொண்டு எதிர் கொள்ளவும்.


தர்மம் வெல்லும்.

வால்பையன் said...

தற்போது தான் னண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து விசயத்தை கூறினார்.

இது பற்றி இன்று ஒரு பதிவிட வேண்டும்.

உங்கள் ஆலோசனைக்கு நன்றி

Anonymous said...

//இந்த விஷயத்தில் குடும்பத்தினருக்கே எல்லாவற்றையும் தருவது என்ற தமிழக கலாச்சாரத்தைத்தான் பின்பற்றி, ஊரோடு ஒத்து வாழ் என்ற கோட்பாட்டின்படி அவ்வாறு செய்வதாகக் கூறினார். பேத்தி இப்போது நான்காம் வகுப்பில் படிப்பதாகவும் தன்னைப் போலன்றி எல்லா பரீட்சைகளிலும் நூற்றுக்கு நூறு மார்க்குகள் வாங்குவதாகவும் பெருமிதமாக குறிப்பிட்டார்.

நல்ல நகைச்சுவையுடன் கூடிய உள்குத்து!!//

அவர் பேத்தி நல்லா கவிதை எழுதுவதையும் சோ அவர்கள் கூறிப்பிட்டார்...

D. Chandramouli said...

Dear Mr. Raghavan

In the title of this blog, the spelling of 'Mauli' should read 'Mouli'.

That's how I have spelt my name from my childhood. Mouli is usually the short name for Chandramouli.

If I'm wrong, please correct me, though I wouldn't change my name at this stage!

dondu(#11168674346665545885) said...

@Chandramouli
There are many ways of spelling Indian names. Mauli is one spelling for சந்திரமௌளி.

In Unicode phonetic typing, it is au only and ou. By practice I selected au.

Regards,
Dondu N. Raghavan

D. Chandramouli said...

Thanks Mr. Raghavan.

By the way, I entered my comment on one of your blogs about Rajaji.

I'm a new entrant to your site, so I just picked topics at random like on Rajaji which interested me, although your writings are of previous years.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது