11/11/2008

இந்தத் திறமை என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்து இருந்து வந்திருக்கிறது

அறியாமல் ஒட்டிக் கொண்ட திறமை, மெதுவாக ஒட்டிக் கொண்ட திறமை ஆகியவற்றுக்கு வெகு நாட்களுக்கு முன்னாலேயே இப்போது நான் கூறப்போகும் திறமை என்னிடம் இருந்து வந்திருக்கிறது. அதுவும் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து. அதாவது சமீபத்தில் 1950-லிருந்து. அதற்கு முன்னாலும் எனக்கு அத்திறமை உண்டு என்று என் அன்னை கூறியுள்ளார். அதை நான் கணக்கில் எடுக்கவில்லை.

விஷயத்துக்கு வருமாறு சொல்லி முரளிமனோஹர் கத்துகிறான். ஆகவே அதை முதலில் செய்வேன்.

ஒன்றுமில்லை, தண்ணீரை மூச்சு விடாது குடிப்பதுதான். அதாவது நான் வாயை அண்ணாந்து வைத்து கொள்ள வேறு யாரேனும் வாயில் சொம்பிலிருந்து ஊற்றினால் அதை அப்படியே கடக் கடக் என நிறுத்தாமல் குடித்து விடுவேன். சாதாரணமாக தாங்களே எடுத்துக் குடிப்பவர்கள் கூட அவ்வாறு ஒரே வீச்சில் குடிக்க மாட்டார்கள். எங்கள் வீட்டில் இது ஒரு விளையாட்டாகவே போனது. நான் அவ்வாறு குடிப்பதை பார்ப்பதற்காகவே குடும்பத்தினர் சூழ்ந்து பார்ப்பார்கள். என் அப்பா மட்டும் அதைப் பார்த்து சத்தம் போடுவார். அவருக்கு பயம், எனக்கு எங்காவது மூச்சு திணறப்போகிறதே என்று.

அதெல்லாம் பழைய கதை. பல ஆண்டுகளாக அதை நான் செய்து பார்த்ததில்லை. சரி, ஆனால் அது இப்போது ஏன் நினைவுக்கு வரவேண்டும்? சொல்கிறேன்.

எனது சட்டம் ஒரு கழுதை பதிவில் அனானி ஒருவரின் கமெண்ட் ஒன்று வந்துள்ளது. அதில், “ஒரு சில பதிவுலக நண்பர்கள் தற்சமயம் கேள்வி பதில் சுவை குன்றியிருப்பதாகவும் கேள்விகள் வரத்து குறைவாய் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதை சுவை உடையதாய் மாற்ற ஒரு எளிய வழி. வெள்ளிக்கிழமை தொடங்கி-வியாழன் இரவு வரை நடக்கும் அரசியல், சமுக, கலையுலக நிகழ்வுகளை வைத்து தாங்களே ஒரு கேள்வி பதில் நிகழ்வினை நடத்தினால் அது நிச்சய்ம் அனைவரையும் விரும்பி படிக்க வைக்கும்”.

அவருக்கு பதில் கூறவே இப்பதிவு.

நன்றி அனானி. ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. நானே எனக்கு நானே கேள்வி கேட்பது எனக்கு நானே தண்ணீர் வாயில் ஊற்றிக் குடிப்பதற்கு சமம். அதுவே மற்றவர்கள் ஊற்றும்போது அந்த ஸ்பீட் என் கண்ட்ரோலில் இல்லை, இருப்பினும் அதை சமாளிப்பதுதான் சாதனை. மற்றவர்கள் எந்த கேள்வி கேட்டாலும் நான் பதிலளிக்க முயலுகிறேன்.

அனானிக்கு இன்னொரு தகவல். இந்த நிமிடம் வரை வரும் வெள்ளியன்று வர வேண்டிய பதில்கள் பதிவுக்கான கேள்வி ஒன்று கூட வரவில்லைதான். வந்தால் அப்பதிவு வரும், இல்லாவிட்டால் பதிவு இல்லை அவ்வளவுதான். இதில் என்ன பிரச்சினை?

எனது துபாஷி வேலையும் கிட்டத்தட்ட அம்மாதிரிதான். விசிட்டரோ உள்ளூர் வாடிக்கையாளரோ என்ன பேசுவார்கள் என்று அறிய இயலாது. ஒரு சமயம் டி.சி. மோட்டார் ஸ்பீட் கண்ட்ரோல் பேசலாம், அடுத்த நிமிடம் காபரே பற்றிப் பேசலாம். விருந்தாளி மனைவியை அழைத்து வராததாதால் வரும் பிரச்சினைக்கு அவர் அதை கையில் எடுத்து கொண்டால் சரியாகி விடும் என்று கூறியதை முன்னாலேவா ரிகர்ஸ் செய்து கொள்ள முடியும்?

“டோண்டு, இப்படித்தான் நூறாண்டுகளுக்கு முன்னால் சில தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் பலான தேதிக்கு பலான வீட்டில் கொள்ளையடிக்கப் போவதாக முன்கூட்டியே தகவல் அளித்து போலீஸ் காவல்களையும் மீறி கொள்ளை அடிப்பார்கள். அது ஒரு ஹைப்பர்லிங்காக எனக்கு தோன்றுகிறது” என்னும் முரளி மனோஹருக்கு ஒரு வார்த்தை. “ரொம்ப நன்றி ந்ண்பா, உன்னை மாதிரி போட்டு கொடுக்கும் தோழர் இருக்கும்போது எனிமிக்கு என்ன தேவை எனக்கு? நல்லா இருங்கடே”.

அன்புடன்,
டோண்டு ராகவன்

63 comments:

Anonymous said...

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

//அனானிக்கு இன்னொரு தகவல். இந்த நிமிடம் வரை வரும் வெள்ளியன்று வர வேண்டிய பதில்கள் பதிவுக்கான கேள்வி ஒன்று கூட வரவில்லைதான். வந்தால் அப்பதிவு வரும், இல்லாவிட்டால் பதிவு இல்லை அவ்வளவுதான். இதில் என்ன பிரச்சினை?//

//4. நேர்மை..ஒரு வெள்ளிக்கிழமை கேள்வி எதுவும் வரவில்லை, அதனால் பதிவு போடவில்லை என்று சொல்லும் நேர்மை எத்தனைபேரிடம் இருக்கிறது ?//-செந்தழல் ரவி


சமீபத்தில்( டோண்டு சாரின் ஸ்டெய்ல்) தங்களோடு ஒரு சில கருத்து வேறுபாடுகளுடன் விவாதம் நடத்தி பின்னர் உங்கள் உண்மை நற்பண்பு தெரியவந்து, உங்களது 3,00,000 ஹிட்டுகள் மற்றும் 5 வது ஆண்டு தொடக்கத்திற்கான சிறப்பு பதிவுக்கு
வாழ்த்து தெரிவித்து செந்தழல் ரவி அவர்கள் , மனம் திறந்து டோண்டு ராகவன் சாரைப் பாரட்டி ,தனிப் பதிவாய் போட்டது அனைவரும் அறிந்த ஒன்றே.

//டோண்டு ராகவன் : செந்தழலின் பார்வையில்.... //

http://tvpravi.blogspot.com/2008/11/blog-post_08.html


புதிய சிந்தனைகளுடன் மனதில் பயமின்றி புரட்சிக் கருத்துக்களுடனும்,பகுத்தறிவு கொள்கைகளுடனும், அநீதியை எதிர்த்து இறுதிவரை போராடும் போர்க்குணம் கொண்ட நல்ல பதிவாளர் செந்தழல் ரவியின் சொல் மீண்டும் பதிவுலகில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.


காலையில் உங்கள் நேர்மையான வெளிப்படையான பதிவுக்கு எனது நன்றிகள்.

எனது ஒரு சிறு வேண்டுகோளுக்கு தனிப் பதிவாக பதில் கூறியதற்கு அன்பு நன்றிகள்.

அனைவரது பாராட்டை பெற்ற வெள்ளிகிழமை கேள்வி பதில்
தொடர் வெற்றி பெறும்.

மீண்டும் நன்றிகள்.

பணிவான வணக்கம்.

Anonymous said...

வரும் வெள்ளிகிழமை(14-11-2008) வர இருக்கும் ( வர வேண்டும்)பதிவுக்கான முதல் கேள்வி.

பொதுவாக தண்ணிர் குடிக்கும் போது
அண்ணாந்து குடிக்காமல்(அடுத்த வீட்டிற்குப் போனால் கதை வேறு)
"ஸிப்" பன்னிக் குடிப்பதுதான நல்லது என மருத்துவ உலகம் சொல்கிறது.
யோகக் கலை குருமார்களும்,இயற்கை மருத்துவர்களும் இதே கருத்தைதான் சொல்கிறார்கள்.அவர்கள் சொல்லும் காரணம் அண்ணாந்து குடிக்கும் போது தண்ணிரோடு காற்றையும் விழுங்கிவிடுவதல் பின்னர் ஜீரண./வாயுக் கோளாறுகள் துன்பப்படுத்தும்.உங்கள் அனுபவம் எப்படி?

Sethu Raman said...

For your water drinking feat, we give you the title of "GULPADRI'

dondu(#11168674346665545885) said...

முதல் கேள்விக்கு நன்றி. பதிலும் எழுதி வைத்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சேதுராமன் ஐயா அவர்களே,

"GULPADRI' என்றால் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வெள்ளிக்கிழமைக்கான கேள்வி.

கருணாநிதியின் 'திட்டம்' பலித்து விட்டது தானே?

Anonymous said...

'பழம் நழுவிப் பாலில் விழுந்தது' என்ற பழமொழிக்கு சரியான விளக்கம் என்ன?

Anonymous said...

செய்து கொடுத்த வேலைக்கு காசு கொடுக்காமல் ஓடிய ஆட்களிடம் ஏமாந்த அனுபவம்?

Anonymous said...

'சிங்கம்' என்ற உடன் சமீப காலமாக உங்களுக்கு நினைவுக்கு வரும் கதை?

Anonymous said...

உங்கள் 'போலி' நண்பன் எப்படி இருக்கிறான், எங்கே இருக்கிறான்? சமீபத்தில் *(மீண்டும்) சந்தித்தீர்களா?

Anonymous said...

விரும்பிப் படிக்கும் நாளேடு, அரசியல் பத்திரிகை, வாரந்திரப் பத்திரிகை, வாரமிருமுறை பத்திரிகை, மாதப் பத்திரிகை, பெண்களுக்கான பத்திரிகை, காமிக்ஸ், பலான பத்திரிகை?

Anonymous said...

தம் அடிப்பீர்களா? என்ன பிராண்ட்? சுருட்டு?

Anonymous said...

தண்ணி அடிப்பீர்களா? என்ன பிராண்ட்? சுண்டக் கஞ்சி?

Anonymous said...

ஒபாமா வந்தால் அவுட்சோர்ஸிங் காலி என்கிறார்களே? உங்கள் மொழிப் பெயர்ப்பு பணிகளும் சேர்த்து தானே?

Anonymous said...

'ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்' என்று பார்த்து நொந்து போன தமிழ்த் திரைப்படம்?

Anonymous said...

தமிழ் பத்திரிகைகளில் யாருடைய கேள்வி பதில் பகுதி உங்களுக்கு பிடிக்கும் (துக்ளக்கை தவிர்த்து)?

Anonymous said...

'பரதேசி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? (தமிழ் வார்த்தை)

Anonymous said...

மொழி பெயர்ப்பில் அதிக பட்சமாக எவ்வளவு சம்பாதித்திருக்கிறீர்கள்? (ஒரே வேலையில் ஒரே தடவையில்)

Anonymous said...

எந்த நடிகையைப் பார்த்து அதிகமாக ஜொள்ளு விட்டிருக்கிறீர்கள்?

Anonymous said...

கால இயந்திரம் என்ற வஸ்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா?

Anonymous said...

அதென்ன அமெரிக்காவில் மட்டும் பறக்கும் தட்டுகள் அடிக்கடி தென்படுகின்றன?

Anonymous said...

இன்னும் பல ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அமாவாசை என்றைக்கு வரும், கிரகணம் எத்தனை மணி, விநாடிகளுக்கு வரும் என்று எல்லாம் பஞ்சாங்கம் மூலம் கண்டுபிடித்து விடுகிறோம். ஆனால் நாளைக்கு பெருநாள் உண்டா இல்லையா என்பதை கூட கடைசி விநாடி வரை தெரிந்து கொள்ளாமால் தவிக்கவிடும் சில மதங்களும் இருக்கின்றன. ஆனால் அறிவியலில் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பீலா விடுகிறார்களே. இதைப் பார்த்தால் உங்களுக்கு சிரிப்பாக இல்லை?

Anonymous said...

தமிழ் ஈழம் குறித்து துலுக்கப் பதிவர்கள் எதுவுமே எழுதக் காணோமே, கவனித்தீர்களா?

Anonymous said...

பிராமணர்களை வந்தேறிகள் என்று சொல்லி பிழைப்பை நடத்தும் அல்லக்கைகள் துலுக்கன்களை தமிழர்கள் என்று கூறுவது 'சில்லறை' தேத்த தானே?

Anonymous said...

'அல்லக்கை' - அருஞ்சொற்பொருள் விளக்கம் தருக.

Anonymous said...

திஉக்குவளை மு. கருணாநிதி (தி.மு.க) கட்சியில் தலைவர் தேர்தலின் மூலமாகத் தான் தேர்ந்தெடுக்கப் படுகிறாராமே?

Anonymous said...

Adsense வருமானம் வருகிறாதா?

Anonymous said...

வெளிப்படையாக சொல்லவும். திருநங்கைகளை கண்ட அடுத்த விநாடி உங்கள் மனதுக்கு தோன்றுவது என்ன? பரிதாபமா? அருவெறுப்பா? அவர்கள் (பெரும்பாலோர்) செய்யும் அடாவடித்தனத்தால் வரும் கோபமா?

Anonymous said...

திருநங்கைகளை 'அலி' என்றும் '9' என்றும் கூப்பிடுவது எதனால்?

Anonymous said...

உளுந்து அப்பளம் பிடிக்குமா, அரிசி அப்பளம் பிடிக்குமா? உ.அ. என்றால் சுட்டதா, பொறித்ததா?

Anonymous said...

நீங்கள் சுத்த சைவமா? அல்லது அசைவ பார்ட்டியா?

Anonymous said...

ராஜீவ் காந்தியை கொன்ற கொலைகார நாய்கள் யார் என்று திட்டவட்டமாக நிருபிக்கப் பட்ட பின்பும் கூட அதை திசை திருப்பும் விதமாக சிலர் சு.சுவாமி போன்றோரை குற்றம் சாட்டுவது குறித்து? இதையெல்லாம் contempt of court என்று கொண்டு போக முடியாதா?

Anonymous said...

முன்பு பழைய பாடல்கள் ரீமிக்ஸ். இப்போது படங்கள். அடுத்ததாக பழைய நடிகர்களின் பெயரில் புதிதாக வருவார்களோ?

Sethu Raman said...

'modak kudiyar' endrum sollalaam!
when friends have a drink, and if one gulps his drink we give him the title! any no offencemeant !!

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி சேதுராமன் அவர்களே. குல்பத்ரி என்னும் சொல் வடமொழியாக இருக்குமோ என நினைத்தேன். எழுத்தாளர் வெங்கட் சாமிநாதனுக்கு தொலை பேசிக் கேட்டதில் அவருக்கு தெரியாது எனக் கூறிவிட்டார்.

மற்றப்படி நீங்கள் ரெஃபர் செய்த “தண்ணியை” ஒரே கல்ப்பில் குடிப்பதை பாட்டம்ஸ் அப் எனக் கூறுவார்கள். ஃபிரெஞ்சில் cul sec
என்றும் ஜெர்மனில் Hoch die Tassen எனக் கூறுவார்கள்.

ஆனால் இப்பதிவில் கூறியது வேறு விஷயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Krishnan said...

Dear Dondu Sir,

I am sending you a mixed bag of questions and would like your answer.

1) What made you support Shri Narendra Modi and countries like Israel ? Any incident or influence ?

2) Can you tell me your most favorite (top 10) Tamil and English works (can be fiction, short story, nonfiction, essays, poems, etc) ?

3) What is your take on Saravana Bhavan's partner's arrest in recent US visa fraud case ?

4) Do you think Congress-I has chances of coming back to power in next Lok Sabha elections ?

5) Have you read Indira Parthasarathy's novels ? If so, your comments please.

Anonymous said...

டாக்டர் டோண்டுபூதம் அவர்களே

ஒரு சொட்டு விந்து என்பது நூறு சொட்டு ரத்தத்துக்கு சமமாமே? உண்மையா?விளக்கவும்.

Anonymous said...

¦ÅÌ ¿¡ð¸Ç¡¸ ¯í¸û À¾¢×¸¨Çô ÀÊò¾¡Öõ þýÚ ¾¡ý À¢ýëð¼õ þ¼ Å¢¨Ç¸¢§Èý. Really nice. I am waiting for UR friday Q&A, Somebody has given you wonderful questions. All the best.
Kuppukutty

dondu(#11168674346665545885) said...

//¦ÅÌ ¿¡ð¸Ç¡¸ ¯í¸û À¾¢×¸¨Çô ÀÊò¾¡Öõ þýÚ ¾¡ý À¢ýëð¼õ þ¼ Å¢¨Ç¸¢§Èý.//
-->
//வெகு நாட்களாக உங்கள் பதிவுகளைப் படித்தாலும் இன்று தான் பின்னூட்டம் இட விளைகிறேன்//.

யூனி கோடில் எழுதவும். தஸ்கியில் வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"GULPADRI' --> கல்ப் அட்றீ அல்லது கல்ப்பிலே அடி, சரியா சேதுராமன் அவர்களே?
கல்ப்பை ஜெர்மானிய உச்சரிப்பு விதிப்படி குல்ப் என படித்ததால் குழம்பி விட்டேன்.

இப்போதுதான் பழைய முறைப்படி அண்ணாந்து கடக் கடக் என ஒரு தடவை தண்ணீர் குடித்ததும் போதி மரத்து புத்தர் ரேஞ்சில் ஞானம் பிறந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1.அமெரிக்கவின் புதிய அதிபர் ஒபாமா
அமெரிக்காவின் பொருளாதாரச் சீர்கேட்டினை சரி செய்துவிடுவேன் என்ற அவரது தேர்தல் வாக்குறுதியை நம்புகிறிர்களா? நடைமுறை சாத்யமா?

2.உடல் உழைப்பு சார்ந்த bpo பணிகளை இனி அமெரிக்காவிலே செய்து கொள்ல முயலுவார்கள் போலுள்ளதே.இதனால் நமது பிபிஒ வருமானங்கள் பாதிக்கப் படுமா?

3.மென்பொருள் நிறுவனக்களுக்கான வரியை அதிகாமாய் உயர்த்தப் போவதகவும்(யு.எஸ்,ஏ புதிய அரசு)
அதனால் வருமான இழப்பை சந்திக்கப் போகும் கம்பெனியில் பணிபுரியும் உழியர்களின் சம்பளவிகிதங்கள் வெகுவாய் குறையும் என்பதையும் அதனால் இந்தியாவிலும் வீட்டு விலைகள் 40-50 % குறையும் என்ற தகவல் நம்பலாமா?

4.பலரின் அமெரிக்க கனவுகளை கானல் நீர் ஆக்கிய பெருமை யாருக்கு
அ.கடன் அட்டை
ஆ.வீட்டுக் கடன்
இ.பங்குச் சந்தை
ஈ.அதிபர் புஸ்
உ.தனியார்மயம்

5.இந்தியப் பிரதமரிடம் புதிய அதிபர் தொலைபேசியில் பேசாதது பற்றிய சர்ச்சை தொடங்கிவிட்டதே,அணு ஒப்பந்தம் தொடருமா?

6.குடியரசுக் கட்சியின் அனுதாபிகள் இந்த ஒபாமாவின் வெற்றியை எப்படி
கருதுகிறார்கள்.போட்டியாளரின் தோல்விக்கு முக்கிய காரணம் யார்?

7.உங்கள் சீடர் வால்பையன் அயல் நாட்டோரை ஒட ஒட விரட்டவேண்டும் எனக் கருத்து தெரிவிதுள்ளாரே.இதற்கு உங்கள் பதில் என்ன?

8.உங்கள் நண்பர் பதிவர் அதியமான் அவர்கள் உலகமயத்தை பற்றி மிக உயர்வாய் எழுதுவாரே.இப்போதைய அமெரிக்காவின் பரிதாபமான் நிலை(வீடுகளை துறந்தும்,தொலைத்தும் சாலை களிலும்,கார்களிலும் குடுபத்தோடு வாழ்வோர்)ரூபாய்2.75 லட்சம் கோடி ,மக்களின் சேமிப்பு பணத்தை வெளிவிட்டும் தள்ளாடும் இந்திய பங்குச் சந்தையின் நிலை-இவைகளை பார்த்தபிறகும்-புலி வால் பிடித்த நாயர் போல -உங்கள் கருத்து?

9.மதிப்புக்குரிய நிதி அமைச்சர் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள உபரி நிதியை( 60 % வரை) பொதுத்துறை வங்கிகளில் சேமிக்க வேண்டும் என்று சொல்லும் போது மற்ற நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களையும்( அரசு ஆதரவு இருந்திருக்குமேயானால் இது நடந்திருக்காது) காப்பாற்றி கரைசேர்க்க நினக்காமல் பங்குகளை விற்க நினைப்பது ஒரு கண்ணில் வெண்னெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போலில்லையா? ( வங்கிகள் அமைச்சரின் செல்லக் குழந்தையா?)

10.செல்பேசி அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு இல்லை என்ற தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராஜா அவர்களின் விளக்கத்தை நிதி அமைச்சரும் பிரதம அமைச்சரும் ஏற்றுக் கொண்ட பிறகும் இடது சாரிக் கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயமா?உன்மையில் நடந்தது என்ன?இனி என்ன நடக்கும்?

Anonymous said...

from
November 12, 2008 7:43 AM
to
November 12, 2008 8:20 AM

AnonyT said...
AnonyI said...
AnonyM said...
ProxyM said...
AnonyG said...
Trichy Velusamy said...
AnonyI said...

இக் கேள்விகளெல்லாம் other option போல தெரிகிறதே?

கேள்வி பதிலுக்கு புதிய வரவு.

உங்களை விமர்சிக்கும் கேள்வியையும் அனுமதிக்கும் உங்கள் பண்பு பாராட்டத்தக்கது
//Anonymous said...
டாக்டர் டோண்டுபூதம் அவர்களே//


டோண்டு சார்

வெள்ளிகிழமை கேள்வி பதில் இப்போதே ஒரு பெரிய எதிர் பார்ப்பை தொடங்கிவிட்டதோ!

Anonymous said...

// நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக்கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக்கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை " உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா" என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் " உத்தம தேசபக்தர்களை" வணக்கத்துடன் கேட்கிறோம். //


ippadi patta thakavalkalai solpavarkalukku ungkal pathil enna?

Anonymous said...

1.BJP LEADER ADVANI TODAY MET ACTOR RAJNI AND DISCUSSED FOR 30 MINUTES ABOUT FUTURE COURSE OF ACTION.WILL BJP,RAJINI AND J.LALITHA FORM AN ALLIANCE IN TAMIL NADU?

2.WHAT WILL HAPPEN TO TAMIL NADU GOVT IF SRILANKA REFUSES TO END THE WAR IN SRILANKA( EVEN AFTER THE REQUEST OF CENTRAL GOVT)?

3.IT IS TOLD DMK LEADER IS VERY MUCH WORRIED ABOUT THE ACTION OF SOME OF HIS CLOSE ASSOCIATES IN CONNECTION WITH LIBERATION TIGERS SUPPORT
IS IT TRUE?

4. IT IS LEARNT THAT SOME OF THE CONGRESS LEADRS AND MLAS ARE TRYING FOR AN ALLIANCE WITH ADMK? WILL IT BE POSSIBLE?

5.WHICH IS BETTER ALLAINCE HAVING BRIGHT CHANCE OF WINNING AND FOR THE WELFARE OF TAMIL NADU AT PRESENT

SET1
ADMK+MDMK+PMK
ADMK+BJP+MDMK+RAJINI
ADMK+PMK+CONGRESS
ADMK+CPI+CPIM+MDMK

SET 2
DMK+PMK+CONGRESS
DMK+CONGRESS+VIJAYKANTH
DMK+BJP+RAJIN
DMK+CPI+CPM+BMK+CONGRESS

SET 3
VIJAY KANTH+RAJINI+S.KUMAR+CPI+CPM

SET 4
MDMK+CPI+CPM+PMK+OTHERS

RAMAKRISHANAHARI

ரமணா said...

1.உங்கள் பதிவாளர் நண்பர்களில் உங்களை அதிகமாய் விமர்சன்ம் செய்யும் பதிவாளார் யார்?உங்கள் கருத்து அவரது செயல் பாடு சார்ந்து?
2.பதிவுலக்த்தில் உங்களை போற்றுபவர்களில் (followers-36)
உங்களுக்கு நெருக்கமானவ்ர் யார்?தங்கள்
கருத்து அவரது செயல் பாடு சார்ந்து?
3.தி,மு.க தலவர் புகழ்பாடும் பதிவுகளில் உங்களுக்கு பிடித்த பதிவாளர் யார்?( லக்கிலுக் தவிர்த்து)
அவரது பதிவுகளில் எது சிறந்தது?
4.அதி.முக கொள்கைகள் பரப்பும் பதிவுகளில் தாங்கள் விரும்பிப் பார்த்து பாராட்டும் பதிவாளர் யார்?( மாயவரத்தான் நீங்கலாக)
5.இன்றய பதிவுலகில் தினம் 10,000 ஹிட்டுகளுடன் இருப்பதாய் சொல்லபடும் சாருநிவேதாவின் பதிவை தினம் பார்ப்பதுண்டா? அவர் தன்னை நோக்கிய விமர்சகர்களை கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுக்கிறார் போலுள்ளதே?அவருக்கு உங்கள் ஆலோசனை?

pt said...

1.நேற்று நடந்த சட்டக்கல்லூரி மணவர்களிடையே மோதலுக்கு காரண ஜாதிய ரீதியான இட ஒதுக்கீட்டுக் ( மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இல்லாமாலிருப்பது)கொள்கையும் ஒரு காரனமா?
2. கல்லுரிகளில் முற்படுத்தப்பட்ட மாணவர்களின் விகிதாச் சாரம் மிகவும் குறைந்து( less than 10 %) விட்ட நிலயில் ,இரு பிரிவினருக்குள் மோதல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்திவிடுமே?இது ஏன் புரியவில்லை இவர்களுக்கு?
3. இது மாதிரி மோதல்கள் முற்படுத்த மக்களிடம் ஏற்பட்டதாய் தகவல்கள் உண்டா?இல்லை என்றால் அவ்ர்கள் கற்ற கல்விதானே அவர்களை கட்டுப் படுத்துகிறது?
4.இது உண்மையென்றால் கல்லுரியில் பட்டம் பெற்று, பின்னர் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்களுக்கு இந்த நிதர்சனம் ஏன் புரியவில்லை?
5.இங்கே அடித்து கொள்ளும்(கொல்லும்)சகோதரர்களை நல்வழிப்படுத்துவோர் யார்?

Anonymous said...

1.எல்.ஐ.சி 14 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து
2.ஸ்பென்சர் கட்டிடத்தில் தீ விபத்து
3.இந்தியன் வங்கி கட்டிடத்தில் நேற்றைய தீ விபத்து(2008)


மேலே சொல்லப்பட்டுள்ள இந்த நூற்றாண்டின் பெரும் தீ விபத்துகளால் ஏற்பட்ட உயிர்ப் பலி மற்றும் பொருளாதார இழப்பு இவைகளை பார்த்த பிறகும் தற்காப்பு நடவடிக்கைகளில் மேலும் கட்டிட உரிமையாளர்கள் ( அரசின் கட்டுப்பாடுகளில் முழுமையான கவனம் செலுத்தாச் செயல்)அதிக அக்கறை செலுத்த வில்லை என்பது கண்டிக்கத் தக்கது என்ற சான்றோர்கள் , நடுநிலை கருத்து கொண்ட பெருமக்களின் கருத்து பற்றி உங்கள் பதில் என்ன சார்?

Anonymous said...

தனது லேட்டஸ்ட் பதிவில் அல்லேலுயா ரவி அடுத்தவரின் உயிரை எடுக்க உனக்கு எவன்டா அனுமதி கொடுத்தது என்று இலங்கை ராணுவத்தை கேள்வி கேட்டிருக்கிறார். அதே கேள்வியை வி.புலிகளை நோக்கி என் கேட்கவில்லை? அவனுங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அதுவும் நம்ம நாட்டு ராஜீவ் காந்தியை! (ரவியின் பாணியிலேயே) வெட்டி நியாயம் பேசுவது யாரு? (ரவியின் பாணியிலேயே) செருப்பாலடிக்க வேண்டாமா?

Anonymous said...

ஏன் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் அதிகம் விவாகரத்து நடைபெறுகிறது ?

60 வயதுக்கு மேல் மனைவியை பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் பெண்கள் பெரும்பாலும் உறவினர் மற்றும் நன்பர்களாலேயே இந்நிலைக்கு ஆளாகின்றனர். ஏன்?

சுவர்ணலதா விஜய்

Anonymous said...

செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிக்கிறார்களா ?

Anonymous said...

ஆண்களுக்கு சிறந்த உள்ளாடை கட் ஜட்டியா அல்லது டவுசர் ஜட்டியா அல்லது பட்டாப்பட்டி அண்டர்வியரா

Sethu Raman said...

What is your view about the cops' (who were keeping a watch at the Law College)statement that they could not intervene in the fight between two factions, as there were no complaints from the College authorities? Is there such a law?
And the cops were happily looking at the fight! And what an ironic coincidence that this happened just when you posted 'Sattam oru Kazhuthai'?

Anonymous said...

தமிழ்ஷ் அளவுக்கு தமிழ்வெளி வரளாமைக்கு காரணம் என்ன?

Anonymous said...

"சோ" அவர்களின் தலைமுடி கொட்டிப்போனதன் காரணம் என்ன?

Anonymous said...

சட்டக் கல்லூரி மோதலை பார்த்தீர்கள் அல்லவா? நீங்கள் படித்த காலத்தில் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறாதா? கல்வியிலும் இட ஒதுக்கீடெல்லாம் கொண்டு வந்த பிறகு தான் இப்படி என்று கூறலாமா? துள்ளிக் குதித்து வந்து ஜாதியை பிடித்திழுக்கும் பதிவர்கள் இதற்கு ஏன் இப்படி வாயுடன் சகலத்தையும் மூடி உட்கார்ந்திருக்கிறார்கள்?

Anonymous said...

//இந்த நிமிடம் வரை வரும் வெள்ளியன்று வர வேண்டிய பதில்கள் பதிவுக்கான கேள்வி ஒன்று கூட வரவில்லைதான்//

ஆமா.. இவுரு பெரிய‌ அரிச்டாட்டில் மேதாவி. எல்லாரும் போட்டி போடுராங்க‌ இவுருகிட்ட‌ கேள்விகேட்க‌.. த‌ன‌க்கு தானே கேள்வி போட்டுகிட்டு க‌லைஞ‌ரை திட்ட‌ வேண்டிய‌து, சோவுக்கு ஒதது ஊத‌ வேண்டிய‌து. எங்க‌ளுக்கு எல்லாம் தெரியும‌ய்யா

கோம‌ண‌காந்து

Muhammad Ismail .H, PHD., said...

13 Nov 2008
07:07 PM IST


வணக்கம் ராகவன் ஐயா,

நாம் முன்னர் தொலைபேசியில் பேசிய படி இக்கேள்விகளை பதிகின்றேன். நான் இன்னும் தமிழ் 99 தட்டச்சு பழகிக்கொண்டிருக்கிறேன். அதனால்

கால தாமதமாக பதிந்தாலும் இந்த கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதில் தரவும்.முடிந்தால் இதை தனிப்பதிவாக இட்டால் மிக்க மகிழ்ச்சி.

மேலும் இது ஒரு புது வித விளையாட்டு,அதாவது இதன் மூலம் கற்றல் மற்றும் கற்பித்தல் இரண்டுமே நிகழும். 60+ வயது வாலிபரான உங்களுக்கு

இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். இதற்கான விதிமுறைகள்.

1. அனைத்து கேள்விகளுக்கும் ஒரிரு வரிகளில் பதில் கூறக்கூடாது, முடிந்த அளவு விரிவாக பதில் தரவும். கேள்விகளைப் பற்றி மற்றவரிடம்

விவாதித்து பதில் தரக்கூடாது.நீங்கள் மட்டுமே படித்து பதில் தரவும். கேள்விகளை திருத்த கூடாது. இதை நான் எனது வலைப்பதிவிலும்

www.gnuismail.blogspot.com -ம் பதிவேன். இது உங்க ஐடியா தான் !!!.

2. நீங்கள் வரிசையாகத்தான் பதில் தர வேண்டும், அதாவது ஒவ்வொரு கேள்வியையும் படித்த உடனே பதில் எழுதி விட்டுதான் அடுத்த கேள்வியை

படித்து பதில் தர வேண்டும். மேலும் முன்னர் எழுதிய பதிலை திருத்த கூடாது.அதற்கு பதில் எழுதியதை மாற்ற கூடாது. இதற்கான நீதிபதி

உங்களின் மனசாட்சி தான்.

3. தெரியாத மற்றும் புரியாத கேள்விகளை விட்டு தள்ளி பதில் அளிக்கலாம். ஆனால் பிறகு அதற்கு பதில் தர முயலக்கூடாது. வேண்டுமானால்

தகவல்களை கூட்டி கழித்து திருத்திய பதில்களை வேறோரு பதிவாக இடலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சீஸன1, சீஸன்2 போல. இந்த

விளையாட்டு உண்மையில் உங்களுக்கு வேறோருவர் தண்ணீரை வேகமாக வாயில் ஊற்ற, நீங்கள் அதை விட வேகமாக குடிப்பதால்

அனைவருக்கும் ஏற்படும் த்ரில்லை மிஞ்சும் என நம்புகிறேன்.



இக்கேள்விகள் முன்னர் இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்தில் நாங்கள் உரையாடிய போது எழுப்ப பட்டு பல விதமான பதில்களும்

கிடைத்தது. ஆதலால் அப்பதில்களை இறைவன் நாடினால் வரும் சனிக்கிழமை (15 நவம்பர் 2008) மாலை 6.00 மணிக்கு நம் பதிவர்கள்

அனைவரிடமும் காந்தி சிலை அருகே பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் அதற்கு முன்னமே நீங்கள் பதிவு இட்டு பதில் கூறிவிடுவீர்கள் என

நம்புகிறேன். முன்னர் நான் இதை கிழக்கு பதிப்பக மொட்டை மாடியில் நிகழ்த்த பத்ரியிடம் அனுமதி கேட்டேன்.ஆனால் இந்த நிமிடம் வரை

மின்னஞ்சல் வரவில்லை. மேலும் உங்களின் பதிவைப் பார்த்து விட்டு உங்களுடன் பேசியபின் கிடைத்த பதிவர் சந்திப்பு தகவலுக்கேற்ப இதை மாற்றி

விட்டேன். அவ்வளவுதான். இறைவன் நாடினால் வரும் சனிக்கிழமை நேரில் சந்திப்போம். நன்றி.








1. உயிர் என்றால் என்ன ?




2. உயிருக்கென்று தனிப்பட்ட எடை (weight) எதுவும் உண்டா?




3. நமது சூரியக்குடும்பத்தில் உள்ள வியாழன் கோளினால் பூமியிலுள்ள நமக்கு என்ன பயன் ?




4. குருஷேத்ரத்தில் நடந்த போரில், குந்தி தேவியின் மைந்தர்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் (அஸ்திரங்கள்/astras) எந்த மைந்தனின் ஆயுதம்

மிகவும் ஆற்றல் வாய்ந்தது ?




5. தற்கால "கலியுக பெண்ணொருத்தி" தற்பொழுது உள்ள சமூக நிலையில் "துவாபர யுக திரெளபதியைப்" போல் பஞ்ச பாண்டவர்களுடன் வாழ

இயலுமா ?




6. குருஷேத்ரப்போருக்கு பின் கெளரவர்களின் படையில் உயிர் பிழைத்தவர்கள் யார் யார்?




7. யூத குலத்தில் பிறந்த இயேசு (ஈஸா அலை) அவர்கள் யூத குருமார்களை எதற்க்காக எதிர்த்தார்கள் எனத் தெரியுமா ?




8. இயேசு (ஈஸா அலை)அவர்களின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா ?




9. யுக முடிவு அல்லது ஊழிப்பிரளயத்திற்க்கு முன்னால் இயேசு (ஈஸா அலை) அவர்கள் பூமிக்கு இரண்டாம் வருகை புரிவதை எந்த அளவு

நம்புகிறீர்கள்?




10. முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பிற்க்கு முன் அரேபிய தேச மக்கள் எதை முதன்மை கடவுளாக வணங்கி கொண்டிருந்தனர் ?




11. தற்போது அரபுதேசத்திலுள்ள அரபுக்களால் கடைப்பிடிக்கப்படும் யூதர்களின் மீதான இனவெறியானது முஹம்மது (ஸல்) அவர்களின்

நடைமுறையா?




12. முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்கள் உணவுக்காகக் கடன் வாங்கிய கோதுமைக்காக அவர்களின் இரும்புக் கவசம் யாரிடம்

அடமானம் வைக்கப்பட்டிருந்தது ?



13. இயற்கை பேரழிவுகளின் போது ஒற்றுமையடையும் மனித இனம் (உ.ம் - 2004 சுனாமி) சில மாதங்களுக்கு பிறகு மறுபடியும் தன் இன இரத்தத்தையே ஏன் மண்ணில் சிந்த வைக்கின்றது?




14. தற்போது ஏற்ப்பட்ட பொருளாதார மந்தநிலைக்கு காரணம் முதலாளித்துவமா? அல்லது அதை நிர்வாகித்த மனிதர்களா?




15. நீங்கள் கணினியை முதலில் எங்கே பார்த்தீர்கள் ? கணினியை எப்போது இயக்கினீர்கள் ? சொந்தமாக கணினியை எப்போது வாங்கினீர்கள் ?




16. உங்களின் தமிழ் தட்டச்சு முறை என்ன? ஏன் அதை உபயோகப்படுத்துகிறீர்கள் ?




17. பிராமணர்கள் (or) பார்ப்பான், கிறிஸ்துவர்கள் (or) மிஷநரி , முஸ்லிம்கள் (or) துலுக்கன் ஆகியோர்க்கிடையான ஒற்றுமை,

வேற்றுமை என்ன?




18. நீங்கள் ஒரு பிராமணரா (or) பார்ப்பானா?




கேள்விகள் அவ்வளவுதான். தங்களின் பதிலை எதிர்பார்க்கும்,


பொறுப்பு மற்றும் அன்புள்ள,

முஹம்மது இஸ்மாயீல் . ஹ

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Muhammad_and_the_Jews

Banu Qurayza
After the Battle of the Trench in 627, the Jews of Banu Qurayza were accused of conspiring with the Meccans. Though Qurayza does not appear to have committed any overt hostile act[16] and been overtly correct in their behaviour,[17] they had most likely[17][16] been involved in negotiations with the enemy [16]. [18]" Marco Scholler believes the Banu Qurayza were "openly, probably actively," supporting Meccans and their allies.[19] Nasr writes that it was discovered that Qurayzah had been complicit with the enemy during the Battle. [20] Finally, Welch states that Muslims "discovered, or perhaps became suspected" that the Jews were conspiring with the enemy.[21]"
The Qurayza were fought and then defeated in battle, and then were allowed an arbitrator to decide their punishment. Muhammad suggested Sa'd ibn Mua'dh, a leading man among Aws, whom they believed would judge in their favour, hence agreed to. However, he passed an execution sentence against the Qurayza and 600-900 Qurayza men were beheaded (except for the few who chose to convert to Islam), all women and children enslaved, and their properties confiscated.[22] Watt writes that some of the Arab tribe of Aws wanted to honour their old alliance with Qurayza, are said to asked Muhammad to forgive the Qurayza for their sake as Muhammad had previously forgiven the Nadir for the sake of Abd-Allah ibn Ubayy.
A minority of Muslim and academic scholars reject the incident holding that Ibn Ishaq, the first biographer of Muhammad, supposedly gathered many details of the incident from descendants of the Qurayza Jews themselves. These descendants allegedly embellished or manufactured details of the incident by borrowing from histories of Jewish persecutions during Roman times.[23] Watt, however, finds this argument "not entirely convincing."[24]

-----------------------------------------------------------------------------------

http://www.youtube.com/watch?v=ZjbJnZUJTYU

-----------------------------------------------------------------------------------

http://www.jewishvirtuallibrary.org/jsource/anti-semitism/koranjews.html

http://www.jewishvirtuallibrary.org/jsource/anti-semitism/Jews_in_Arab_lands_(gen).html

http://www.flex.com/~jai/satyamevajayate/hell.html

Anonymous said...

இப்போது November 13, 2008 9:34 PM

நாளய கேள்வி பதில் பதிவை தயாரிப்பில் மும்முரமாய் இருப்பீர்கள் என கருதுகிறேன்.

அதுவும் முஹம்மது இஸ்மாயீல் . ஹ அவர்களின் மிகவும் சிக்கலான 18 கேள்விகள்.


இந்த வாரத்திற்கான கடைசிக் கேள்வி

வருங்காலப் பிரதமர் என பத்திரிக்கைகளாலும் அரசியல் பார்வையாளர்களாலும்
வர்ணிக்கப்படும் உங்களுக்கு பிடித்த
அதவானியின் "என் நாடும் என் வாழ்வும்" புத்தக வெளியீட்டுக்கு சென்று இருந்தீர்களா?புத்தகம் வாங்கினீர்களா? அதை பற்றிய பதிவு வருமா?

dondu(#11168674346665545885) said...

முகம்மது இஸ்மாயில் அவர்களே,

உங்கள் 18 கேள்விகளுக்கும் பதில் போட்டு தனிபதிவு இட்டுவிட்டேன். நாளை இரவு சரியாக 08.43--க்கு ஆட்டமேட்டிக்காக அச்சுக்கு வரும்படி செட்டிங் செய்யப்பட்டுள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//வருங்காலப் பிரதமர் என பத்திரிக்கைகளாலும் அரசியல் பார்வையாளர்களாலும்
வர்ணிக்கப்படும் உங்களுக்கு பிடித்த
அதவானியின் "என் நாடும் என் வாழ்வும்" புத்தக வெளியீட்டுக்கு சென்று இருந்தீர்களா?புத்தகம் வாங்கினீர்களா? அதை பற்றிய பதிவு வருமா?//
இந்த வாரத்துக்கான கேள்விபதில் பதிவை முடித்து விட்டேன். நாளைக் காலை வரும். உங்களது இக்கேள்விக்கு இப்போதே பதில் கூறிவிடுகிறேன்.

அத்வானி அவர்களது புத்தக வெளியீட்டு விழா நடக்கும் விஷயமே எனக்குத் தெரியாது. ஆகவே செல்லவில்லை, புத்தகம் வாங்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வாங்குவேன். படித்தவுடன் பதிவு நிச்சயம். வரும் புத்தக கண்காட்சியில் வாங்க முயற்சிப்பேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இவுரு பெரிய‌ அரிச்டாட்டில் மேதாவி. எல்லாரும் போட்டி போடுராங்க‌ இவுருகிட்ட‌ கேள்விகேட்க‌//

கருணாநிதி ஏன் தனகு தானே கேள்வி பதில் எழுதிக்கிறாருன்னு இப்போதான் புரியுது. என்னதான் இருந்தாலும் கருணாநிதி மேட்டருன்னா 'அல்லக்கை' சொன்னா சரியா தான் இருக்கும். (ஒரு சிலதை தவிர. உ.ம். கருணாநிதி புத்திசாலி, நிர்வாகத் திறமை அதிகம்)

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/History_of_the_Jews_in_Saudi_Arabia

History of the Jews in Saudi Arabia

After the rise of Islam in the 7th century, the Jewish population of Yemen was treated in a progressively harsher fashion despite the Quranic verse "There is no compulsion in religion" (verse 2:256).
Unfortunately, this Quranic verse, or Sura, is not as permitting as one might think given the Islamic concept of Dhimmi which states that "Jews, Christians, and Sabeans" are to be treated not as Infidels but as a separate, third classification, "al Dhimmi." Dhimmi are , among other things, not allowed to vote, testify in court, use the same conveyances as Muslimsalthough this is not always adhered to (in earlier eras it was taken to stipulate that a Jew must ride a donkey, if anything, while Muslims alone were permitted to use horses or camels ), to build an edifice higher than the lowest Muslim edifice in any city boundary, and so on.
Although Jewish religion and culture survived under some Islamic civilisations, Jews suffered more and more restrictions and even indignities as time passed. Aside from their status as al Dhimmi, Jews were also stipulated to wear particular clothing denoting their specific religious faith and ethnicity. Sometimes this meant only wearing a coloured patch or special headgear aside from traditional Jewish headcovering that was adopted in much of the world in later eras. At other times, it meant stipulations that were designed to emasculate Jewish men, as in Yemen, et al where Jewish men were prohibited from wearing the customary scimitar worn by all adult male Muslims in that region of the Arabian peninsula.
Jews continued to endure these and other indignities, up to and including violence and death, but in the region now known as Saudi Arabia, Jews gradually disappeared via assimilation or the more frequent attrition. While Jewish populations seem to have increased in that region even after the Islamic Advent, by the middle of the 16th Century A.D. all Jews had disappeared from al Hejaz Region. This was unfortunately made so in the rest of Saudi Arabia by royal edict after than nation's independence.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது