1/29/2009

நல்லவர்களுடன் பேரம் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

மகாத்மா காந்தி மிகவும் நல்லவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இருந்திருக்க முடியாது. ஆனால் அவருடன் நெகோசியேஷன் செய்தவர்கள் அவர் நல்லவராக இருப்பதால் அவரை நம்பி, மோசம் போனது எனக்குத் தெரிந்து ஒருமுறை நடந்துள்ளது. நான் இங்கு குறிப்பது தலித்துகளுக்கான தனி வோட்டர் லிஸ்டைத்தான்.

வட்டமேஜை மகாநாட்டுக்கு சென்ற அம்பேத்கர் தலித்துகளுக்காக போராடி இதை வெள்ளை அரசிடமிருந்து பெற்றார். அதை திரும்பப் பெற வேண்டும் என அழிச்சாட்டியமாக காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ள எல்லோரும் அம்பேத்கரை நெருக்க, அவரும் விட்டு கொடுத்தார். என்ன ஆயிற்று? தலித்துகளுக்குத்தான் நஷ்டம். காந்திக்கென்ன அவர் பாட்டுக்கு போய் சேர்ந்து விட்டார்.

மன்னர்கள் மான்யம் விஷயத்தில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் தனிப்பட்ட உறுதி தந்ததினாலேயே பல சுதேச மன்னர்கள் இந்தியாவுடன் இணைப்புக்கு ஒத்து கொண்டனர். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்திரா அந்த ஒப்பந்த அடிப்படையையே மீறி ஆட்டம் போட்டார். அப்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தபோது, வாக்களித்தவர் எவ்வளவு பெரிய மனிதரானாலும் அதற்கெல்லாம் தான் கட்டுப்பட வேண்டியதில்லை என இந்திய அரசு வெளிப்படையாகவே அறிக்கை விட்டது. ஆக பட்டேலின் வார்த்தைகளுக்கு அவ்வளவுதான் மதிப்பு.

இப்படித்தான் நான் தில்லியில் இருந்தபோது ஒரு நிறுவனத்தில் துபாஷியாக கூப்பிட்டனர். நிர்வாக அதிகாரி என்னிடம் பேரம் பேசி ஒரு தொகைக்கு ஒப்புக் கொண்டோம். பிறகு அந்த நிறுவனத்தின் முதலாளி என்னிடம் இது சம்பந்தமாக மேலும் பேச முனைந்தார். அவரிடம் நான் நடந்ததை கூற, அவர் நிர்வாக அதிகாரிக்கு இது சம்பந்தமாக பேரம் பேச அவர்கள் கம்பெனி விதிப்படி அதிகாரம் கிடையாது என்றாரே பார்க்கலாம்!

டோண்டு ராகவனிடமா இதெல்லாம் நடக்கும்? முதலாளியை ஒரே ஒரு கேள்வி கேட்டேன், அதாவது நான் நிர்வாக அதிகாரியுடன் பேரம் பேசியது இப்போதைக்கு செல்லாது என்பதுதானே என. அவரும் யதார்த்தமாக ஆமாம் எனக் கூறிவிட, சரி புதிதாகவே பேரம் பேசலாம் என கூறிவிட்டு, நான் முதலில் கேட்டதை விட ஆயிரம் ரூபாய் அதிகமாகவே கோட் செய்தேன். முதலாளி திகைப்புடன் நான் ஏற்கனவே குறைவாகக் கேட்டதை நினைவுபடுத்த, அதுதான் செல்லாது என நாம் ஒப்பு கொண்டு விட்டோமே என அவர் கூறியதை புறங்கையால் தள்ளினேன். இதில் என்ன விசேஷம் என்னவென்றால், நிர்வாக அதிகாரியுடன் பேசிய அடுத்த நாளே இன்னொரு வாடிக்கையாளர் என்னை அணுகியிருந்தார். அப்போதைக்கு அவரை காத்திருக்க சொன்னது இந்த விஷயத்தில் நல்லதாகப் போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும். அவரது வேலை மொழிபெயர்ப்பு வேலைதான், ஓரிரு நாட்கள் கழித்து சென்றாலும் பாதகமில்லை. ஆகவே துபாஷி வேலை பேர விஷயத்தில் என்னால் கடுமையாக நடந்து கொள்ள முடிந்தது. இவரோ ஐயோ பாவம் என்னும் நிலையில்தான் இருந்தார். சட்டென்று வேறு ஆள், அதுவும் பொறியியல் பின்னணியுடன் துபாஷி அவர்களுக்கு அவ்வளவு குறுகிய காலத்தில் கிடைக்காது. இப்போது என்ன ஆயிற்றென்றால், நான் நிர்வாக அதிகாரியிடம் ஒத்து கொண்ட விலைக்கே என்னை வரச்சொல்ல அவர் என்னை மிகவும் வேண்டி கேட்டு கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், இதிலும் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். நான் அதிக விலைக்கே பிடிவாதமாக இருந்து அதை பெற்றிருக்கலாம். ஆனால் முதலாளிக்கு அது தாங்க முடியாத அவமானமாக இருந்திருக்கும். அது எங்களது பிற்கால ஒத்துழைப்புக்கும் விரோதமாக இருந்திருக்கும். அதையும் நான் பார்த்து செயல்பட்டது எனது அறிவார்ந்த சுயநலமே.

இதனால் என்ன ஆயிற்றென்றால், புது வாடிக்கையாளர்களின் சார்பில் அவர்களது அதிகாரிகள் யாரேனும் என்னுடன் பேரம் பேச முயன்றால், நான் முதலிலேயே தெளிவாக அவர்களிடம் இதற்கான அதிகாரம் உள்ளதா எனக் கேட்டு உறுதி செய்து கொள்வேன். சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரி நல்லவர்தான். இம்மாதிரி முதலாளி செய்ததால் அவர்தான் அதிகம் சங்கடப்பட்டார், என்னிடம் அதை கூறி வருத்தப்பட்டார் என்பதெல்லாம் நிஜமே. ஆனால் அவரது சங்கடத்தால் எனக்கு என்ன பயன்? நாக்கை வழிக்கக்கூட பயன்படாது. பின்னால் வருத்தப்படுவதை விட நம்பிக்கையில்லாமல் நடப்பது மேல்.

ஆகவேதான் கூறுவேன், பேரம் பேசும்போது ஜாக்கிரதை. அதுவும் நல்லவர்களுடன் பேரம் பேசும்போது ஜாக்கிரதையோ ஜாக்கிரதை!!!!

அன்புடன்,
டோண்டு ராகவ்ன்

14 comments:

Anonymous said...

//மகாத்மா காந்தி மிகவும் நல்லவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இருந்திருக்க முடியாது. ஆனால் அவருடன் நெகோஷியேஷன் செய்தவர்கள் அவர் நல்லவராக இருப்பதால் அவரை நம்பி, மோசம் போனது எனக்குத் தெரிந்து ஒருமுறை நடந்துள்ளது. நான் இங்கு குறிப்பது தலித்துகளுக்கான தனி வோட்டர் லிஸ்டைத்தான்.//

இது அமுல் படுத்தியிருந்தால் என்ன சலுகைகள் கூடுதலாக் கிடைத்திருக்கும் தலித்துகளுக்கு?

இட ஒதுக்கீட்டு சலுகையை இன்னும் 10 ஆண்டுக்கு நீட்டிக்க கோரிய மசோதாவை எதிர்த்து சோ ஒருவர் தான் ஓட்டு போட்டதாய் சொல்லப்படுகிறது.அவர் அரசியல் வாதி இல்லை

தலித்துகளுக்கு சலுகை என்றாலே அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஜே ஜே தான்.

பிற்பட்ட ஜாதிகளுக்கு வருமான வரம்பு பார்க்கப் படும்.

தலித்துகளுக்கு அரசின் சலுகை 100 %க்ருமி லேயர் எல்லாம் கிடையாது.

பார்ப்பனர் கட்சி பாஜக கூட ஜாடை மாடையாகத்தான் இது பற்றி பேசும்.

இப்படி எல்லாக் கட்சிகளும் தலித்துக்கு 200 % ஆதரவாய் இருக்கும் போது காந்தி மேல் குற்றம் நியாமா?

வால்பையன் said...

வாடிக்கையாளைகளை தக்க வைத்து கொள்ளும் உங்கள் திறமையை தான் உலகமறியுமே!
ஆனால் அதனுடம் அரசியலையும் இணைத்துள்ளீர்களே!

Anonymous said...

CONGRATS

ரிஷபன்Meena said...

இது போன்ற பதிவுகளை நீங்கள் அதிகப் படுத்தாலாம். கற்றுக் கொள்ள விஷயம் இருக்கிறது. பை தி வே சாமுவேல் ஜாக்‌ஷனின் தி நெகோஷியேட்டர் படம் பார்த்திருக்கிறீர்களா ?

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
வாடிக்கையாளரிடம் ஏமாறாமல் இருப்பதற்கு எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் போதாது என்பதுதான் நிஜம். நான் சொன்ன விஷயம் இப்பதிவுடன் பொருந்தியதாலேயே அதை நான் இங்கு குறிப்பிட வேண்டியிருந்தது.

நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே மொழிபெயர்ப்பில் சைட் பிசினஸ் செய்தபோது பலமுறை மொழிபெயர்ப்புக்கான வாடிக்கையாளர்கள் நான் எங்கு முழுநேர வேலை செய்கிறேன் என்பதை அறிய ஆவலுடன் இருந்தார்கள். அவர்களுக்கு தேவையில்லாத விஷயம் அது, இருந்தாலும் வம்புக்கான ஆசை யாரை விட்டது. அவர்களுக்கு இந்த விஷ்யம் துளியும் தெரியாது பார்த்து கொண்டேன். அதிலும் அவர்களிடமிருந்த நல்லவர்களிடம் மிக அதிக ஜாக்கிரதையாக இருந்தேன் என்பதை சொல்லவும் வேண்டுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//அதிலும் அவர்களிடமிருந்த நல்லவர்களிடம் மிக அதிக ஜாக்கிரதையாக இருந்தேன் என்பதை சொல்லவும் வேண்டுமா?//

இப்போ புரியுது, நீங்க சொல்ல வந்த நல்லவங்க யாருன்னு!

வாக்காளன் said...

அப்போ சோ ராமசாமி, சுப்புரமனியசாமி, ஜெயா , இந்து ராம் போன்ற நல்லவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையாதான் பேசனும் P

Anonymous said...

//பார்ப்பனர் கட்சி பாஜக கூட ஜாடை மாடையாகத்தான் இது பற்றி பேசும்.//


cpm,cpi கூட தலித் விசயத்தில் டபுள் ஜாக்கிரதையாய் இருப்பார்கள்.(அங்கும் பார்ப்பனத் தலைவர்கள் உண்டு).

Anonymous said...

தலித்பற்றிய தங்கள் ஆதரவு நிலை வெளிப்படையானது.

தலித் மக்களை தீண்டாமை எனும் கொடிய அரக்கனிடமிருந்து காப்பாற்ற அரசால் போடப்ப்படுள்ள u.t .act சில பகுதிகளில் தவறாய் பயன் படுத்தப் படுவதாய் கோவையில் ஒரு பிரிவு மக்கள் பெரும் பேராட்டம் நடத்தினர்.

u.t act பற்றிய ஒரு விரிவான பதிவு இது பற்றிய ஒரு தெளிவினை அனைவருக்கும் கொடுக்கும்.

Jay said...

//காந்திக்கென்ன அவர் பாட்டுக்கு போய் சேர்ந்து விட்டார்.......
....ஆக பட்டேலின் வார்த்தைகளுக்கு அவ்வளவுதான் மதிப்பு.///

வெறும் வார்த்தைகள் செல்லாமல் போய்விடும்....

//ஆகவேதான் கூறுவேன், பேரம் பேசும்போது ஜாக்கிரதை. அதுவும் நல்லவர்களுடன் பேரம் பேசும்போது ஜாக்கிரதையோ ஜாக்கிரதை!!!!//

அட்டகாசமான பதிவு. நன்றி !

Anonymous said...

valththukkal

Anonymous said...

ஆகவேதான் கூறுவேன், பேரம் பேசும்போது ஜாக்கிரதை. அதுவும் நல்லவர்களுடன் பேரம் பேசும்போது ஜாக்கிரதையோ ஜாக்கிரதை!!!!
-----------------------------------

பி கேர்புல் ........ நான் என்னிய சொன்னேன் (வடிவேலு போக்கிரி படத்தில், தன்னை அடித்தவர்களிடம் கூறுவார்). யூடுபில் தேடி பாருங்கள். ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

இதில் இவரின் கதாபாத்திரத்தின் பெயர் பாடிசோடா ........

Anonymous said...

கேள்விகள்.

எம்.கண்ணன்.

(இந்த முறை கேள்விகள் எல்லாம் ஐயங்கார் / பிராமண சம்பந்தப்பட்டது)

1. 'எங்கே பிராமணன்' - சோவின் கதை ஜெயா டிவியில் திங்கள் முதல் தொடராக (8pm) வருகிறதே. பார்க்கிறீர்களா ?

2. ஞாயிறன்று காட்டப்பட்ட முன்னோட்டம் பார்த்தீர்களா? யாராவது கேஸ் போட்டு தடை வாங்குவார்களா ? இல்லை இது பிராமணர்களை கிண்டல் செய்யும் சீரியல் என குளிர் காய்வார்களா ?

3. பிராமண அசோக் வேடத்தில் (கதாநாயகன்) நடிக்கும் நடிகர் ஒரு இஸ்லாமியர். தெரியுமா ?

4. ஸ்ரீரங்கம் ரங்கராஜ ஐயங்கார்களான சுஜாதாவும் வாலியும் ஏன் இன்னோர் ஐயங்காரான ஜெயலலிதாவைவிட கலைஞருக்கு அதிகம் கொடி பிடித்தார்கள் ? அதுவும் வாலியின் ஜால்ரா சத்தம் மிகவும் அதிகமாக இருக்கிறதே ?

5. 'எங்கே (செட்டியார் / பிள்ளைமார் / நாடார் / சைவ வேளாளர் / கவுண்டர் / தேவர்........)' என்றெல்லாம் சீரியல் எடுத்துவிடவோ தமிழ் தொலை காட்சிகளில் ஒளிபரப்பிட முடியுமா ?

6. மராட்டியரான ரஜினி தனது பெண் (ஐஸ்வர்யா) திருமணத்தின் போது மனைவியின் ஐயங்கார் முறைப்படி (மடியில் அமர்த்தி) கன்னிகாதானம் செய்து தனுஷுக்கு திருமணம் செய்து கொடுத்தார். பரமக்குடி சீனிவாசய்யங்காரின் இளைய புத்திரர் கமல்ஹாசன் அதுபோல் தனது மகள் திருமணத்தை நடத்துவாரா ?

7. சுஜாதாவின் 'சிங்கமய்யங்கார் பேரன்' நாடகம் பார்த்ததுண்டா / படித்ததுண்டா ? அதில் சுஜாதா எழுப்பிய பல ஆதங்கங்கள் 'எங்கே பிராமணன்' தொடரில் சோ எழுப்பப்போவது ஏதாவது பூகம்பத்தை ஏற்படுத்துமா ? (பிராமண சமூகத்தினரிடையே?)

8. சோவின் 'எங்கே பிராமணன்' தொடர் எழுப்பும் கேள்விகள் படி - உங்களையோ உங்களைச் சுற்றியுள்ள குடும்பத்தினர் அல்லது நங்கநல்லூர் வாசிகளில் பலரை 'பிராமணர்' என இன்றைக்கு குறிப்பிடமுடியுமா ?

9. ஜெயலலிதாவின் தந்தையார் ஜெயராம் - பற்றி செய்திகள் ஏதும் இல்லையே ? அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ?

10. தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்ஸ்வாமி ஐயங்காரை ஹிண்டு என்.ராம் ஐய்யங்கார் இப்படி இக்கட்டில் ஏன் மாட்டிவிட்டார் ? மற்ற எந்த தேசிய / பிராந்திய செய்தி ஏடுகளோ / தொலைக்காட்சியோ கவனிக்காத ஒரு விஷயத்தை என்.ராம் இப்போது கிளப்பியிருப்பதும் ஒரு உள்நோக்கத்தோடுதான் என்பது போல தெரிகிறதே ?

Anonymous said...

//கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மத வழக்கமோ அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே, இந்த வழக்கில் மதம் தொடர்பான சட்டத்தின்படி பொதுதீட்சிதர்கள் பாதுகாப்பு கோர முடியாது.//


இந்துக் கோவிலுக்கு மட்டுமா இந்த "சூப்பர்"தீர்ப்பு?சிதம்பர ரகசியம் இனி?மக்களை திசை திருப்பும் தந்திரமா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது