2/24/2009

சோ அவர்களது நேர்காணல்

ஐயா நம்புங்க சாமியோவ். நான் பாட்டுக்கு கூகளண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவசரநிலை பிரகடனம் சம்பந்தமாக சில தகவல்கள் தேவைப்பட்டன. திடீரென இந்த நேர்க்காணல் சிக்கியது. படித்தேன். பிறகுதான் தோன்றியது, என்னடா இதுபத்தி நம்ம தமிழ்மணத் தோழர்கள் ஒண்ணும் சொல்லலியே என்று. தேதி பார்த்தால் அந்த நேர்க்காணல் 2005-ல் எடுக்கப்பட்டதாம். இதப் பார்றா, இன்னைய தேதிக்கும் அது அப்படியே பொருந்தறதேங்கற ஆச்சரியம்தான், வேறென்ன? இத வச்சு என்னுடைய ஆங்கில வலைப்பூவில் ஒரு பதிவு இட்டேன். இப்ப தமிழில். இப்ப அந்த நேர்க்காணலை முதலில் பார்ப்போமா?

சோ ராமசாமி, அரசியல் விமரிசகர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர். தமிழகத்திலேயே நெருக்கடி நிலையை வெளிப்படையாக எதிர்த்த பத்திரிகையாளர் அவர் ஒருவரே. இந்த நேர்க்காணலில் ஷோபா வாரியர் சோவுடன் பேசுகிறார். அந்த இருண்ட நாட்கள் பற்றிப் பேசும்போது அவர் முழு கிண்டலாகவே முக்கால்வாசி நேரத்தில் பேசுகிறார். அவருடைய மாறுபட்ட கண்ணோட்டங்களை காண்பது எப்போதுமே ஜாலியாகத்தான் உள்ளது என ஷோபா அபிப்பிராயப்படுகிறார்.

நெருக்கடி நிலை பிரகடன அறிவிப்பை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? அது வரும் என்பதை ஏற்கனவே உணர்ந்தீர்களா?
நெருக்கடி நிலை வரக்கூடும் என எழுதிய ஒரே இந்திய பத்திரிகை என்னுடையதுதான். ஒரு கற்பனை கார்ட்டூன் கூட போட்டோம். அதில் ஜே.பி., கிருபலானி மற்றும் மொரார்ஜி போன்ற தலைவர்கள் சிறைபடுத்தப்பட்டதாகவும் காட்டியிருந்தோம். அடிப்படை உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தோம். எல்லாம் அச்சமயத்துக்கு மிகைபடுத்தி கூறப்பட்டவையே. (உண்மையிலேயே நெருக்கடி நிலை வந்தபோது அதெல்லாம் நடந்தன நிஜமாகவே என்பதை இந்த நேர்க்காணலில் வெளிப்படையாக கூறாவிட்டாலும் அதுதான் உண்மை-டோண்டு ராகவன்).

நெருக்கடி நிலை வரும் என ஏன் உங்களுக்கு தோன்றியது? அது வரை இந்தியாவில் இந்த மாதிரி வந்ததேயில்லையே?
சந்திரசேகர் போன்றவர்களுடன் நான் அதிகம் இது பற்றி விவாதித்தேன். நிகழ்ச்சிகள் போகும் போக்கைப் பார்த்தால் இந்திரா காந்திக்கு தான் தோற்றுப் போகிறோம் என்னும் உணர்வு ஜேபியின் போராட்டத்தால் தோன்ற ஆரம்பித்ததாகத்தான் எனக்கு தோன்றியது. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு வேறு வந்தது.

நெருக்கடி நிலை வந்ததும் நீங்கள் சொன்னாப் போலவே வந்துவிட்டது என்ற உணர்வு உங்களுக்கு வந்ததா?
அப்படியெல்லாம் நினைத்து திருப்தி அடைய இதில் ஒன்றுமேயில்லை. வி.பி. சிங் பிரதமரானபோது கூட அவரை தூக்கி நிறுத்திய தேவிலாலே அவரை தூக்கி போட்டுவிடுவார் என்றும் கூறினேன். அப்படியே நடந்தது.

ஏதேனும் உள்ளுண்ர்வா?
இல்லை. நான் முன்கூட்டியே கணித்தவை பற்றிய பட்டியலையே என்னால் தரவியலும். ஒரு நேர்க்காணலில் இந்திரா காந்தியிடம் நான் கேட்டேன், எவ்வளவு நாளைக்குத்தான் பங்களாதேஷ்காரர்கள் நம்முடன் நட்பாக இருப்பார்கள் என்று. அவர்களால் தொல்லைதான் வரப்போகிறது என்றும் கூறினேன். நான் ஏன் அவ்வாறு கூறவேண்டும் என அவர் கேட்டார். அது எனது புரிதல் எனக்கூறினேன். அவர் அதை ஒத்து கொள்ளவில்லை. நான் மிகைப்டுத்துகிறேன் என அவர் அபிப்பிராயப்பட்டார்.

விடுதலைப் புலிகள் இந்தியாவில் காலடி வைத்ததுமே நான் கூறினேன், இவர்களால் தமிழகத்துக்குத்தான் தொல்லை, நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கூறினேன். அவர்களுக்கு எதிராக பிரசாரமும் ஆரம்பித்தேன். எல்லோரும் நான் ஒன்றுமேயில்லாததை மிகைபடுத்திக் கூறுவதாகக் சொன்னார்கள். கடைசியில் நான் சொன்னதுதான் நடந்தது.

ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் கூறினேன், சரண்சிங்கால் தொல்லை என. சஞ்சீவ ரெட்டி குடியரசுத்தலைவரானதும் அவரால் அரசுக்கு பிரச்சினை என்றும் கூறினேன்.

நெருக்கடி நிலை பிரகடனம் வந்தபோது நீங்கள் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர். அப்போது உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தனவா?
முதலில் நான் பதட்டமடைந்து தற்காலிகமாக துக்ளக்கை வெளியிடுவதை இரண்டு இதழ்களுக்கு நிறுத்தினேன். மறுபடியும் வெளியிட ஆரம்பித்தபோது கருப்பு அட்டையுடன் ஒரு இதழ் கொண்டு வந்தேன். சொல்லப்போனால் துக்ளக் சரித்திரத்திலேயே இருமுறைதான் கருப்பு அட்டை. இன்னொரு முறை பாப்ரி மசூதி இடிப்பின்போது.

இரண்டு இதழ்களுக்கு பிறகு ஏன் மீண்டும் ஆரம்பித்தீர்கள்?
நிலைமையை எப்படி சமாளிப்பது என்பதை முதலில் திட்டமிட வேண்டியதாயிற்று. தலைமறைவாக இயங்கிய பத்திரிகைகளில் எழுதுவது, கூட்டங்களில் பேசுவது என்றெல்லாம் செயல்பட்டேன். இது சம்பந்தமாக ஆர்.எஸ்.எஸ்.-உடன் தொடர்பு ஏற்பட்டது. இம்மாதிரி பத்திரிகைகளை மிகுந்த சிரமங்களுக்கிடையே அவர்களதான் நடத்தி வந்தார்கள். ரொம்ப சின்சியரானவர்கள் அவர்கள்.
பிறகு ராம்நாத் கோயங்காவுடன் பழக ஆரம்பித்தேன். என்னிடம் இழப்பதற்கு அப்போதே ஒன்றுமேயில்லை. தலையில் முடிகூட இல்லை என்றும் நான் கூறியதுண்டு. ஆனால் கோயங்காவை பற்றி அவ்வாறு கூற இயலாது. அவர் ஒரு பெரிய பத்திரிகை சாம்ராஜ்யத்தை நடத்த வேண்டிய நிலையில் இருந்தார். இரானி அவர்களது நிலைமையும் அவ்வாறே. இருந்தாலும் அவர்கள் நெருக்கடி நிலையை எதிர்த்து பேசினார்கள். அவர்களது தைரியம் என்னுடையதை விட பல மடங்கு பெரியதே. ஏனெனில் என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லைதானே.

(அக்காலக்கட்டத்தில்) உங்களுக்கு எப்போதாவது பயமாக இருந்ததா?
என்னவோ தெரியவில்லை, எனது பாதுகாப்பு குறித்து நான் ரொம்ப அலட்டிக் கொள்ளவில்லை. நான் விதியை நம்புபவன். நான் போக வேண்டிய நேரம் வந்தால் யாராலும் என்னை காப்பாற்ற இயலாது. அதேபோல நேரம் வராவிட்டாலும் எந்த கொம்பனாலும் என்னை போட்டுத்தள்ள இயலாது (சிரிக்கிறார்).

பத்திரிகையை மீண்டும் துவக்கியதும் மக்களுக்கு ஏதேனும் செய்தி சொல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஐம்பதுகளில் வெளிவந்தது சர்வாதிகாரி என்ற ஒரு பழைய தமிழ்ப்படம். நெருக்கடி காலக்கட்டத்தில் மறுபடியும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்தது. அதுதான் சாக்கு என அத்திரைப்படத்தின் விமரிசனம் போட்டேன். அதிலும் சர்வாதிகாரத்துக்கு பின்னால் ஒரு பெண்மணிதான் இருந்தார்! இம்மாதிரியாக நெருக்கடிகாலத்தை மறைமுகமாக பலமுறை தாக்கினேன்.

தணிக்கையால் ஏதேனும் பிரச்சினைகள்?
பிரச்சினைகள் இருந்தன. நான் செய்ததைக் கண்டுகொண்டவர்கள் விளம்பரங்களையும் சென்சார் செய்ய ஆரம்பித்தார்கள். அவற்றின் மூலமாகவும் செய்திகள் செல்ல ஆரம்பித்திருந்தேன். நாட்டிலேயே எங்கள் பத்திரிகையில்தான் விளம்பரங்களும் சென்சார் செய்யப்பட்டன.

என்னுடைய பத்திரிகையை எடுத்து கொண்டு சாஸ்திரி பவனுக்கு அடிக்கடி செல்வேன். என்னுடைய சம்பளத்தையும் எடுத்து சென்று எடிட்டர் வேலையை சென்சாரே பார்த்து கொள்வதால் அதுவும் அவருக்கே உரியது என கூறலானேன்.

அவர்கள் அதை தமாஷ் என ரசித்தார்களா?
அவர்கள் அதிகம் சங்கடம்தான் பட்டனர். அவர்களும் என்னதான் செய்வார்கள்? ஆளுநரின் ஆலோசகர்கள் என்னை எச்சரித்தனர். அவற்றை நான் கண்டுகொள்ளவில்லை என நான் கூறினேன்.

ஒவ்வொரு இதழும் ஒரு பிரச்சினை. மீட்டிங்குகள் தடை செய்யப்பட்டாலும் பலவற்றில் நான் பேசினேன். பழைய காங்கிரஸ் அவற்றை ஏற்பாடு செய்திருந்தது.

என்னவோ நான் மட்டும் போராடினேன் என நினைத்து கொள்ளாதீர்கள்> மற்றும் பலரும் போராடினர். ஹிம்மத் பத்திரிகை ஆசிரியர் ராஜ்மோகன் காந்தி, கோயங்கா, இரானி ஆகியோரும் போராடினர்.

அதே நேரத்தில் நெருக்கடி நிலை கூடிய சீக்கிரமே எடுக்கப்பட்டுவிடும் என்றும் எல்லா மீட்டிங்குகளிலும் பேசி வந்தேன். ஏனெனில் அரசால் அதை சமாளிக்க இயலவில்லை.

தமிழ்நாட்டில் அச்சமயம் என்ன நிலை? ஏதேனும் அத்துமீறல்கள்?
கருணாநிதி அவர்களால் சட்டென ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அவர் இந்திரா அவர்களை புகழ்ந்த வண்ணம் இருந்தார். அவர் பதவி நீக்கத்துக்கு முன்னால் அவர் இந்திராவின் 20-அம்சத் திட்டம், சஞ்சய் காந்தியின் 5-அம்சத் திட்டம் ஆகியவற்றையும் ஆதரித்தார். இதெல்லாம் செய்து தப்பிக்கலாம் என நினைத்தார். தான் இந்திராவின் விரோதி அல்ல எனக் கூறும் அளவுக்கு அவர் போனார். இந்திராவுக்கு எதிராக செயல்படுபவர்கள் பற்றிய தகவலும் தர முன்வந்தார்.

MGR கூடத்தான் இந்திராவை ஆதரித்தார்.
ஆம், இந்திராவை பொருத்தவரை அவர் எம்ஜிஆரையே தேர்ந்தெடுத்தார். ஆக, கருணாநிதி அவர்கள் எதிர் தரப்புக்கு செல்ல வேண்டியிருந்தது. விருப்பமின்றியே நெருக்கடி நிலையை எதிர்க்க வேண்டிய நிலை அவருக்கு. அதே சமயம் ஜனதா கட்சியின் மேலும் அவருக்கு அதிருப்தி, ஏனெனில் அக்கட்சி சர்க்காரியா கமிஷன் அறிக்கையை வாபஸ் வாங்க சம்மதிக்கவில்லை போன்ற காரணங்கள்.

MGR தனது பேச்சுக்களில் நான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எச்சரித்து வந்தார். ஆனால் நான் கைது செய்யப்படவில்லை.

நீங்கள் இவ்வாறெல்லாம் துக்ளக் பத்திரிகை மூலம் (மறைமுகமாகத்தான்) எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீங்கள் எப்படி தப்பித்தீர்கள்?
நான் காமராஜ் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம் எனது தந்தை மதிப்புக்குரிய காங்கிரஸ்காரர். மூன்றாவதாக இப்படியும் நினைப்பு இருந்திருக்கலாம். சோ ஒரு satirist மட்டுமே, மறைமுகமாகச் சொல்லும் வரையில் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்!" என்றும் விட்டிருக்கலாம்.

ராஜ்மோகன் காந்தி, கோயங்கா, இரானி ஆகியோர் கூட கைது செய்யப்படவில்லை. எல்லோருமே நெருக்கடி நிலைக்கு எதிராகவே வேலை செய்து வந்தனர்.

உங்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயமுறுத்தல்கள் வந்தனவா?
ஆம், வந்தன. சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்த பலர் என்னைப் பற்றி அவரிடம் சொல்லி ஏதேனும் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டிருந்தனர். பல தொழிலதிபர்கள் என்னை எச்சரித்தனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. ஆகவே நான் நான் ரொம்ப அவதிப்பட்டேன் என்றெல்லாம் சொல்லிக் கொள்ள இயலாது.

இவ்வாறெல்லாம் நெருக்கடி நிலைக்கெதிராக காரியங்கள் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் த்ரில் இருந்ததா?
அப்படித்தான் இருக்க வேண்டும். அச்சமயம் எனது பத்திரிகை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்தன. இப்போது யோசித்து பார்க்கையில் ஒரு பலமான அரசை எதிர்த்து போராடுகிறோம் என்ற எண்ணமே உற்சாகம் அளித்திருந்திருக்க வேண்டும்.

நெருக்கடி நிலை எடுக்கப்பட்ட போது நீங்கள் அதை ஆதரித்ததாகக் கூறினீர்கள். அது கடைசியாக எடுத்தபோது நிம்மதியாக உணர்ந்தீர்களா?
அப்படியெல்லாம் நிம்மதியாகவோ வலியாகவோ எடுத்து கொள்ளவில்லை. அதை நான் எனது போக்கிலேயே எடுத்து கொண்டேன், அவ்வளவுதான். அதே சமயம் ஜனதா கட்சிக்காக இந்தியா முழுவதும் எங்கெல்லாம் தமிழர்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்தேன்.

பொது மக்களின் கருத்து நெருக்கடி நிலை நீக்கப்பட்டபோது எவ்வாறு இருந்தது?
தமிழகத்தில் நெருக்கடி நிலை அவ்வளவாக எதிர்க்கப்படவில்லை. மக்கள் அதை வரவேற்றார்கள் என்றுகூட சொல்லலாம். இங்கு அதிகார துஷ்பிரயோகம் அவ்வளவாக இல்லை. ஒருவேளை எம்ஜிஆர் அவர்கள் நெருக்கடி நிலையை எதிர்க்காமல் இருந்ததும் காரணமாக இருக்கலாம். நாட்டின் நடுத்தரவர்க்கம் அதை வரவேற்றது என்றே நான் நினைக்கிறேன்.

உண்மை கூறவேண்டுமானால் சில நாட்கள் முன்னால் (2005-ல்) நான் ஒரு பிஜேபி கூட்டத்திற்கு சென்றிருந்தேன். நெருக்கடி நிலை (1975) ஒரு தவறான நபரால், தவறான நேரத்தில், தவறான காரணங்களுக்காக கொண்டுவரப்பட்டத்து. தவறான முறையிலும் நிர்வாகம் செய்யப்பட்டது. அச்சமயம் போர் அபாயம் ஏதும் இல்லை, உள்நாட்டு கலவரங்களும் இல்லை. லஞ்ச ஊழலுக்கு எதிரான ஜேபியின் போராட்டம் இருந்தது, அலகாபாத் தீர்ப்பு இந்திராவை பதவியிலிருந்து நீக்கியது.

ஆனால் இப்போதைய நிலையைப் (2005) பாருங்கள். நக்ஸலைட் குழுவினர் நாட்டின் பல பகுதிகளில் தலையெடுத்துள்ளனர். அவர்கள் மேலும் வளர்கின்றனர். விடுதலைப் புலிகள் தமது இந்திய எதிர்ப்பு செயல்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. காலிஸ்தான் இயக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. பங்களாதேஷ் அகதிகளின் ஊடுருவலால் நாட்டுக்கு பெரும் பிரச்சினை வரப்போகிறது. நாட்டின் வடகிழக்கு பகுதிகள். காஷ்மீர் ஆகிய இடங்களின் நிலைமையையும் பாருங்கள்.

ஆ ஊ என்றால் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். நெருக்கடி நிலை சமயத்தில் வேலை நிறுத்தம் பற்றி பேச்சு கூட இல்லை. எல்லா சீரமைப்பு நடவடிக்கைகளும் தடுக்கப்படுகின்றன. ஆக, இதுதான் நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு சரியான தருணம்.

இந்தத் தமாஷ்தானே வேண்டாம் என்கிறது!
இல்லை நான் தமாஷ் செய்யவில்லை. இப்போது யாருக்குமே தமது கடமைகள் பற்றிய புரிதல்கள் இல்லை. சட்டங்கள் உடைக்கப்படவுமே, விதிகள் மீறப்படவுமே, விதிமுறைகள் அலட்சியப்படுத்தப்படவுமே உள்ளன என்றே ஆகிவிட்டன. தேசத்தின் தற்போதைய மனநிலை இப்படித்தான் இருக்கிறது.

நம்மைவிட அதிக வேகமாக சீனா எப்படி முன்னேறுகிறது? அதற்கு காரணமே அவர்களது டிஸிப்ளினே. உலகிலேயே மிகக்குறைந்த அளவு டிசிப்ளினுடன் இருக்கும் ஜனநாயகம்தான் இந்தியாவில் உள்ளது.

ஜேபி காலத்தில் லஞ்சத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் இப்போது லஞ்சத்தின் திருவுருவமாக உள்ளனர். உதாரணம் லாலு பிரசாத் யாதவ்.

ஆக, இப்போது நேரம் சரியாகத்தான் உள்ளது ஆனால் இப்போது அதிகாரத்தில் இருக்கும் மனிதர் சரியில்லை. நான் குறிப்பிடுவது சோனியா காந்தியைத்தான். அவரிடம்தான் உண்மையான அதிகாரம் உள்ளது. அவர் இருக்கும்போது நெருக்கடி நிலை வந்தால் அது நிச்சயமாக துஷ்பிரயோகம் செய்யப்படும் என்பதை கூறிட இயலும். இந்த மத்திய அரசு நெருக்கடி நிலை பிரகடனம்செய்தால் அதை நான் வரவேற்க மாட்டேன். ஆனால் வாஜ்பேயி அல்லது போன்ற யாரேனும் - அவர்களேதான் வேண்டும் என்று கூறவில்லை - ஒரு காலக்கட்டத்தில் செய்தால் அதை நான் வரவேற்பேன். அதுதான் எனது இப்போதைய மனநிலை. எனது கருத்தை கூறும்போது நான் உண்மையான கருத்தையே கூறவிரும்புவேன்.

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சோ அவர்கள் கூறுவதை அலட்சியம் செய்ய இயலாது. சமீபத்தில் 1975-ல் என்ற ரேஞ்சில் பேசும் அளவுக்கு ஞாபகசக்தி உள்ள நான் கூறவிரும்புவது இதுதான். சரித்திர சம்பவங்களை சோ கூறியதில் எந்த தகவல் பிழையுமே இல்லை. முக்கியமாக நெருக்கடி நிலை காலக்கட்டம்.

அதே சமயம் இன்னொன்றையும் கூறுவேன். நெருக்கடி நிலை மீண்டும் வரவேண்டும் என்ற அவரது நிலைப்பட்டை நான் முழுமையாக எதிர்க்கிறேன். அவர் சொல்லும் காரணங்களை நான் அறிவேன்.ஆனாலும் கூறுவேன் நெருக்கடி நிலை இப்போதும் சரி எப்போதும் சரி கூடாது, கூடாது, அம்புடுத்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

வால்பையன் said...

பகுத்தறிவுவாதிகள் பார்ப்பன எதிர்ப்பை காட்டியே காலத்தை ஓட்டுவது போல்,
”சோ” நெருக்கடி நிலை காலத்தை காட்டியே ஓட்டிருவாரோ!

வால்பையன் said...

//என்னிடம் இழப்பதற்கு அப்போதே ஒன்றுமேயில்லை. தலையில் முடிகூட இல்லை என்றும் நான் கூறியதுண்டு. //

தலையில ஒன்னுமே... இல்லைன்னு அவரே சொல்லியிருக்காரே!
ரொம்பா நல்லாவரா இருப்பாரோ!

M Arunachalam said...

I beg to differ with your views on imposing emergency In India. I feel we Indians (at least a visible majority) like to mis-use our civil liberties & the scape-goat is our country's productivity and economic prosperity.

Economic emergency will make us to WORK (not just come to office or workplace for marking attendance), particularly those in the organised sector like Govt. Staff, Public Sector employees, unionised workers/officers/professionals (like TN liers i.e. lawyers), etc.

Unless there is fear of retribution or loss of job & earning, nothing really works in India. When even the courts are shown to be at the helpless & are at the mercy of such unionised professionals and their whims & fancies, I don't care about such people losing some of their basic civilian rights & are made to follow orders. Once in a while, DHANDAM is required to be used to instill fear & discipline.

venki (a) baba said...

இல்ல சார் சோ சொன்னது கரெக்ட் தான்.

போன வாரம் துக்ளக்கில் ' மாணவர்களே வீதிக்கு வாருங்கள், கிளர்ச்சி பரவட்டும்' என்ற வைகோவின் பேச்சுத் தொகுப்பை பார்த்தேன். நெஞ்சு கொதித்து.

தமிழக அளவிலாவது நெருக்கடி நிலையை கொண்டுவந்து வைகோ, திருமா போன்ற தேச விரோதிகளை கைது செய்ய வேண்டும். எவருக்கும் இனி அப்படி பேச தைரியம் வரக்குடாது.

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்:

1. ஒவ்வொரு விருது வழங்கும் விழாவிலும் (கோல்டன் க்ளோப், பாப்தா, ஆஸ்கர்) ஸ்ரீதேவி மைத்துனர் அனில் கபூரின் மன நிலை எப்படி இருந்திருக்கும் ? எப்படி அவரால் சிரித்துக் கொண்டு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க முடிகிறது ? (ஸ்லம்டாக் மில்லியனரில் அவருடைய பங்களிப்பைப் பற்றி யாருமே எங்குமே பாராட்டாத நிலையில்)

2. தமிழ் பதிவுலக, பத்திரிக்கை, சினிமா மற்றும் இளைஞர்கள் சூழலில் - கவுண்டமணி, வடிவேல், விவேக் பேசிய சில வசனங்களே பெரும்பாலும் உபயோகப்படுத்தப் படுகிறதே ? இந்த அளவிற்கு அந்த வசனங்கள் தாக்கம் ஏற்படுத்தும் என வசனகர்த்தா யோசித்திருப்பாரா ? இல்லை இதில் தொலைக் காட்சியின் பங்கு அதிகமா ? ரிபீட்டட் டெலிகாஸ்ட் ? (பின்னிப் பெடெலெடுப்பது, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, யாருமே இல்லாத டீக்கடையிலே சின்சியரா டீ ஆத்துறது.., பேஸ்மென்ட் வீக்..)

3. கலைஞர் டிவி சரத் - தற்போது நலம் அடைந்துவிட்டாரா ? இல்லை மலேசியாவில் செட்டில் ஆகிவிட்டாரா ? யாரை நம்பி 'சிரிப்பொலி' போன்ற அலைவரிசையை துவக்கியுள்ளார்கள் ? ஜூ.வி, ரிப்போர்டரில் செய்தி உண்டா ?

4. தற்போதெல்லாம் ரயில், பஸ் பயணங்களில் - பல இளஞ்சோடிகள், காதலர்கள் - சுற்றி இருப்பவர்கள் பற்றி கவலையில்லாமல் கை போடுவதும், முத்தமிடுவதும் - பார்க்க பலருக்கும் ஒரு மாதிரி யாக இருக்கிறதே ? பொது இடங்களில் இவ்வாறு செய்வதற்கு தடை கொண்டு வருவது நல்லதல்லவா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் பயணம் முழுவதும் இது மாதிரி ஒரு ஜோடி செய்து கொண்டிருந்தால் என்ன தோன்றும் ?

5. குமுதத்தில் படிக்க ஒன்றுமே இல்லையே ? 2 பக்கத்திற்கு ஒரு முறை ஏதோ சிகிச்சை பற்றிய விளம்பரங்களும், தமிழர், தமிழ்நாடு மக்களுக்குச் சம்பந்தமில்லாத ஏதோ சில படங்களையும் கட்டுரைகளையும் எங்கிருந்தோ எடுத்துப் போட்டு ஒப்பேற்றுகின்றனரே ? என் இந்த வறட்சி ?

6. உங்கள் கேள்வி-பதில் பதிவுகளை புத்தகமாக வெளியிட உத்தேசமுண்டா ?

7. தினமலர் அந்துமணி ரமேஷ் விவகாரம் என்ன ஆனது ? தாத்தாவும் பேரனும் சேர்ந்த பிறகும் தினமலர் இன்னும் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் ஆதரவு தோற்றத்தையே தருகிறதே ?

8. இன்றைய வலைப்பதிவுகளுக்கெல்லாம் முன்னோடி சுஜாதாவின் கணையாழி கடைசி பக்கமும், தினமலர் வாரமலரில் அந்துமணியின் பா.கே.ப.வும் தான் என்கிறான் எனது நண்பன் ? எவ்வளவு தூரம் உண்மை ?

9. கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் இன்னும் கதைகள் எழுதுகிறாரா ? எந்தப் பத்திரிக்கைகளில் ?

10. சோவுக்குப் பிறகு துக்ளக்கை இதே மாதிரி கிண்டலுடன் நடத்த யாருக்கு துணிவு இருக்கும் ? வழக்குகளையோ ஆட்டோக்களையோ சந்திக்கும் தைரியமும் ?

வால்பையன் said...

//உங்கள் கேள்வி-பதில் பதிவுகளை புத்தகமாக வெளியிட உத்தேசமுண்டா ?//

இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல!

Anonymous said...

டோண்டு அவர்களே..
சோவின் பேட்டியில் என்ன உள்ளது என்று பூரித்துப் போகிறீர்கள்...
தொழிலாளர்கள் போராட்டம், இன உணர்வு போன்றவைகளை சோவிடம்
கேட்டு என்ன பயன்?.. இடது சாரிகளிடமும் கேட்டுப் பாருங்கள்..
அதற்கு பின் ஒரு முடிவுக்கு வாருங்கள்.. சீனாவை இந்தியாவுடன் ஒப்பிட்டு
சோ சொல்வது வேடிக்கையின் உச்ச கட்டம்... சீனாவைப் பற்றி பேச வேண்டும்
என்றால் மாவேவைப் பற்றிப் படிக்க வேண்டும்.. இதெல்லாம் தேவையற்ற வேலை
சார்.. நீங்க ஏங்கே பிராமணன் பற்றி மட்டும் சொல்லுங்களேன்.. சற்று லைட்டாக
இருக்கும்...

கந்தசாமி

Anonymous said...

//சோவின் பேட்டியில் என்ன உள்ளது என்று பூரித்துப் போகிறீர்கள்//

Vidiya Vidiya ramayanam ketta piragu sonnaaraam oruvar......

komanasubban

Anonymous said...

dondu sir, where is your best friend komanakrishnan?

komanasubban

Anonymous said...

"where is your best friend komanakrishnan?" probably h(s)e might be in search of "GLOBALISAITION of KOMANAM" to bind India and the world!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது