சில மாதங்களுக்கு முன்னால் பார்த்த ஒரு பதிவை இப்போது எதேச்சையாக மீண்டும் பார்க்க நேர்ந்தது. அது எந்தப் பதிவு, அதை எழுதியது யார் என்ற விஷயங்களெல்லாம் இப்பதிவுக்கு அனாவசியம். இந்தப் பதிவுக்கு அது தூண்டுதலாக இருக்கிறது என்பதைத் தவிர அதற்கு ஏதும் முக்கியத்துவம் இல்லை. அப்பதிவில் கூறப்பட்ட ஒரு விஷயத்தை மட்டும் கூறிவிடுகிறேன்.
அவர் படிக்கும் காலத்தில் வகுப்பில் முதல் ரேங்கில் வருபவர் வகுப்பு லீடராக பதவி ஏற்க வேண்டுமாம். இப்பதிவரும் இன்னொருவரும் போட்டி போட்டு படித்து மாறி மாறி முதல் ரேங்கில் வருவார்கள். இவர் முதல் ரேங்கில் வந்தால் இவர் லீடர். ஆனால் இரண்டாம் ரேங்கில் வந்து அந்த இன்னொருவர் முதல் ரேங்கில் வந்தால் அவரது பெற்றோர்கள் வந்து டீச்சரிடம் பேசி அந்த இன்னொருவருக்கு லீடர் பதவி தராது இருக்க வழி செய்து விடுவார்களாம். அவரும் ஹாய்யாக இருப்பாராம். ஆனால் இரண்டாம் ரேங்கில் வந்த இவர்தான் லீடராக இருந்து அவதிப்பட வேண்டுமாம்.
இந்த குறையை அப்பதிவர் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அவரை ஒரே ஒரு கேள்வி கேட்டேன், ஏன் நீங்களும் மறுத்திருப்பதுதானே என்று. அப்படியெல்லாம் டீச்சர் விட்டுவிட மாட்டார் என பதில் கூறினார். முக்கியமாக அவர் தரப்பிலிருந்து வீட்டு மனிதர்கள் யாரும் வந்து பேசவில்லை என நான் நினைக்கிறேன்.
இதைக்கூட நான் இங்கே ஏன் சொல்கிறேன் என்றால் அந்த விஷயம் அவர் மனதை இத்தனை ஆண்டுகளாக உறுத்தி வந்திருக்கிறது. அவர் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன் என யோசிக்கிறேன்.
முதற்கண் இம்மாதிரி முதல் ரேங்கில் வருபவர்கள் லீடராக இருக்க வேண்டும் என்பதே எனக்கு ஏற்பில்லாத விஷயம். பள்ளிகளில் முதல் ரேங்கில் வருபவர்கள் சாதாரணமாக புத்தகப் புழுக்களாக இருப்பார்கள், அல்லது தங்களுக்குள்ளேயே முடங்கிக் கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் லீடராக செயல்படுவது ரொம்பவே கஷ்டம்.
நானே அனுபவப்பட்டிருக்கிறேன். ஏழாம் வகுப்பில் நான் படிக்கையில் அதே காரணத்துக்காக என்னை லீடராக ஆசிரியர் நியமிக்க, ரொம்பவுமே லோல்பட்டேன். பசங்களை கண்டிப்பாக நடத்தி அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் திறமை எனக்கு சுத்தமாகவே லேது. யாரும் அடங்கவில்லை. ஆசிரியரிடம் ரிப்போர்ட் செய்தாலும் பிரயோசனமில்லை. அந்த நல்ல மனிதரும் என்னை பிறகு சப்போர்ட் செய்யவில்லை. வகுப்பில் சலசலப்பு அதிகமாகி ஹெட் மாஸ்டர் வந்து “யாரடா லீடர்” எனக் கேட்க, அப்போது மட்டும் எல்லோரும் என்னை ஒற்றுமையாக கையைக் காட்ட நான் அவரிடம் உதை வாங்குவதுதான் அதிகம். நான் இப்பதிவில் ஏற்கனவேயே சொன்ன நேற்று நடந்தது போன்ற அந்த விஷயமும் இதில் அடங்கும்.
இத்தனையும் ஏன் சொல்கிறேன் என்றால், முதல் ரேங்க் பெறுபவர்கள் எல்லோருமே தலைமைப் பண்புகளுடன் இருப்பார்கள் என முடிவு கட்டுவது படு முட்டாள்தனமான செயல். அதை பல பள்ளிகளில் செய்கிறார்கள்.
அதெல்லாம் சரி, இந்த விஷயங்கள் ஏற்கனவேயே நடந்து முடிந்து விட்டன. அவற்றை பின்னால் நோக்கிப் பார்க்கும்போது தமாஷாகவே இருக்கின்றன. ஆனால் மேலே நான் குறிப்பிட்ட பதிவரின் மனதை அது இன்னும் உறுத்தியவாறே இருந்திருக்கிறது. அவர் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன்?
1. நானும் என் அப்பாவிடம் போய் சொல்லி எனக்காக டீச்சரிடம் பேசச் சொல்லியிருக்கலாம். ஆனால் இதில் என்ன பிரச்சினையென்றால், அவர் வந்திருக்க மாட்டார். ஏற்றுக் கொள்வதோ மறுப்பதோ நானே செய்து கொள்ள வேண்டும் எனக் கூறிவிடுவார். ஆக அந்த ஆப்ஷன் அவுட்.
2. இதை மட்டும் பிறகு செய்தேன். அதாவது ரேங்க் வாங்கினால்தானே வம்பு. வாங்காமல் பார்த்து கொள்ள வேண்டியதுதானே. நான்காம் ஐந்தாம் ரேங்க் வாங்கினால் என்ன குறைந்தா போய் விடுவோம்? அதைத்தான் சொல்கிறேன்
3. ஓக்கே இப்போது போய் அதையேலாம் செய்ய முடியுமா என்றால் முடியாதுதான், கடந்த காலத்துக்குள் நாம் போகவா முடியும்?
4. ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கையில் இன்னொன்றையும் இங்கே சொல்வேன். அந்த இன்னொருவரின் பெற்றோர் அவருக்கு தீங்கையே இழைத்துள்ளனர். சவால் நிறைந்த லீடர் பதவியை அவர் ஏற்று, முயன்று தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள அவருக்கு வாய்ப்பளிக்காமல் செய்து விட்டனர். ஆனால் நான் மேலே குறிப்பிட்ட பதிவரோ அதையெல்லாம் ஏற்று இப்போது ஒரு கம்பெனியில் நல்ல பொறுப்பில் வெற்றிகரமாக செயல்படுகிறார். ஆகவே அவரது வீட்டார் அவருக்கு நல்லதையே செய்தனர் என சந்தோஷப்பட்டால் அந்த உறுத்தல் தானே மறையும்.
ஆனால் அப்பதிவர் அந்த உறுத்தலை வெளியில் சொன்ன காரணமே அந்த இன்னொருவர் பார்ப்பனர் என்பதால்தான். ஆகவே இவருக்கு பார்ப்பனரை பிடிக்காமல் போனதுக்கு ஒரு ஆழ்மனதுக் காரணம் வந்து விட்டது.
இதுவரை நான் இங்கு குறிப்பிடாத வேறொரு பதிவரோ தனது பார்ப்பன வெறுப்புக்கு சொன்ன முக்கியக் காரணமே அவர் எல்.கே.ஜி. படிக்கையில் அவரது சக மாணவன், ஒரு பார்ப்பனன், அவர் மேல் எச்சில் உமிழ்ந்ததுதானாம். இவரும் உடனே அவன் மூக்கில் சரியாகவே குத்து விட்டிருக்கிறார். அவனும் இவர் மேல் எச்சில் உமிழ பின்னால் நிச்சயமாகவே பயந்திருக்க வேண்டும். இருவருக்கும் சுமார் ஐந்து வயது வயது இருக்கும்போது நடந்த அந்த நிகழ்ச்சி அவரை இன்னும் உறுத்தி வந்திருக்கிறது என்பது அவரது பதிவிலேயே தெரிய வந்தது. அப்பதிவு அவருக்கு ஏன் பார்ப்பனர்களை பிடிக்காது என்பதற்கு ஒரு விளக்கமாக அமைந்திருந்ததுதான் எனது கவனத்தை ஈர்த்தது.
அப்படியென்றால் எனக்கு மீனவர்களை பிடிக்கக் கூடாது. திருவல்லிக்கேணியில் கடற்கரையில் நாம் பட்டம் விட முடியாது. எங்கிருந்தோ குப்பத்திலிருந்து பல சிறுவர்கள் ஓடிவந்து நம் கையிலிருந்து பட்டத்தையே பிடுங்கி விடுவார்கள். ஓரிரு முறை அவ்வாறு பாதிக்கப்பட்ட பின் நான் அங்கு பட்டம் விடுவதை தவிர்த்து விட்டேன். ஆனால் அதை இப்போது எனது இளமைப் பருவத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியாகத்தான் பார்க்கிறேன். ஆகவே பிரச்சினை இல்லை.
தெரியாமலா சொன்னார்கள் “நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்” என்று?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
19 hours ago
24 comments:
Nallaa Karuthu Thiru Dondu Ragahavan Avargale...
இதெல்லாம் சும்மா, டோண்டு!
algorithm என்ன என்று நான் சொல்லட்டுமா?
1.01 உனக்கு ஒருவனை ஏதோ காரணத்திற்காக பிடிக்கவில்லை
1.02 அவன் என்ன ஜாதி எனக்கண்டுபிடி
1.03 அவன் பிராமணன் என்றால் முதலில் பார்ப்பன துவேஷத்தை வளர்த்துக்கொள்.பிறகு அவனுடன்
சமாதானமாகப் போகப்பார் அல்லது சண்டையிடு
1.04 பிராமணன் இல்லை என்றால் ஜாதியை மறந்து,அவனுடன்
சமாதானமாகப் போகப்பார் அல்லது சண்டையிடு
2.01 உனக்கு ஒருவனை ஏதோ காரணத்திற்காக பிடிக்கிறது
2.02 அவன் என்ன ஜாதி எனக்கண்டுபிடி
2.03 அவன் பிராமணன் என்றால் ஜாதியை மறந்து,நட்பை தொடரு
2.04 பிராமணன் இல்லை என்றால் அவன் ஜாதியை பற்றிய உயர் எண்ணத்தை வளர்த்துக்கொள்.நட்பை தொடரு
டோண்டு சார்,
சுவாரசியமான topic தான்...ஆனால், ஏன் ஒவ்வொரு தடவையும் 'பார்ப்பன' உதாரணம்...வேறு எதுவும் இல்லையா...would trigger தேவையில்லாத வாக்கு வாதங்கள்.....
நீங்கள் சொல்ல வந்த கருத்து முக்கியத்துவம் பெறாமல், அனாவசியமாக விவாத களம் வேறு எங்கோ அலை பாயும்...
அன்புடன்,
Essex சிவா
@Essex Siva
இந்தக் கேள்வியை என்னைக் கேட்பதை விட ஆ ஊ ந்னாக்க பாப்பான்னு ஒவ்வொரு பதிவரும் சீறுகிறார்களே அவர்களை கேட்டு பாருங்கள்.
அவர்களது பார்ப்பன வெறுப்புக்கு அடிநாதம் என தோண்டி பார்த்தால் இம்மாதிரி மகா அல்பமான காரணங்கள்தான் கிடைக்கின்றன.
இப்பதிவை தெரிந்தே போட்டேன். நான் சொன்ன நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட பதிவர்களாகவே சொன்னவை.
எல்லாமே வெங்காயம்தான், உரிக்க உரிக்க ஒண்ணுமே மிஞ்சாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
please just ignore them....... இந்த சின்ன வளையத்தில் சிக்கி don't waste your valuable time!
நான் உங்களிடமிருந்து வேறு நிறைய எதிர்பார்க்கிறேன், I think many of your readers would agree...
அன்புடன்,
Essex சிவா
//
இந்தக் கேள்வியை என்னைக் கேட்பதை விட ஆ ஊ ந்னாக்க பாப்பான்னு ஒவ்வொரு பதிவரும் சீறுகிறார்களே அவர்களை கேட்டு பாருங்கள்.
அவர்களது பார்ப்பன வெறுப்புக்கு அடிநாதம் என தோண்டி பார்த்தால் இம்மாதிரி மகா அல்பமான காரணங்கள்தான் கிடைக்கின்றன.
//
அதெல்லாம் ஒண்ணும் அப்படி இருப்பது போல் தெரியவில்லை.
இவர்களுக்கெல்லாம் தங்களிடம் உள்ள பார்ப்பான வெறுப்பைப் பற்றி யாராவது தர்மசங்கடமான கேள்வி எழுப்பக்கூடும் என்ற அச்சம் உள்ளது. ஆகவே, அதனை ஞாயப்படுத்த தன் வாழ்வில் இப்படியெல்லாம் நடந்தது என்று உதார் விட்டுத் திரிகிறார்கள். சினிமாவில் ஆன்களைக் குறிவைத்துக் கொல்லும் வில்லி தனக்கு சின்ன வயதில் ஊசி போட்ட டாக்டர் ஒரு ஆண், ஆகவே எனக்கு ஆண் என்றாலே பிடிக்காது என்று சொல்வது போல்.
அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.
எல்கேஜியில் எச்சி துப்பினவன் ஜாதியெல்லாம் இன்னிக்கு ஞாபகம் வைத்திருக்கிறார் என்பதே எனக்கு மாபெரும் விந்தையான விஷயமாகத் தோன்றுகிறது!
நல்ல பதிவு .. வழக்கமாக உங்களின் பதிவுகளில் ஒருவரை அல்லது அவரின் பதிவை மேற்கோள் காட்டும் போது லிங்க் சேர்த்து கொடுத்துவிடுவீர்கள்.. உங்களின் பழைய பதிவை மேற்கோள் காட்டினாலும்.. ஆனால் இங்க அப்படி தரவில்லை.. எனவே அந்த பதிவு பார்பனத்தை / சாதியை அடிப்படையாக எழுதியதா அல்லது பழைய சம்பவங்களை அசை போடும் நோக்கில் சாதரணமாக எழுதியதா என்று தெர்யவில்லை..
எப்படியும், உங்கள் கருத்துக்கள் அருமை.. (பார்பனர் என்ற டாபிக் தவிர) ..
//எப்படியும், உங்கள் கருத்துக்கள் அருமை.. (பார்பனர் என்ற டாபிக் தவிர) ..//
இப்படித்தான் யூத வெறுப்பும் இருந்து வந்திருக்கிறது. அதுவும் தானே சரியாகிவிடும் என “நல்லெண்ணம்” படைத்த பலர் எண்ணினர்.
அது ஹோலோகாஸ்டில் 60 லட்சம் மரணங்களுடன் முடிந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அது ஹோலோகாஸ்டில் 60 லட்சம் மரணங்களுடன் முடிந்தது.
//
என்னது ? யூத வெறுப்பு முடிந்துவிட்டதா ?
9/11, 7/11 எல்லாம் யூதர்கள் சதி என்பது உங்களுக்குத் தெரியாதா ?
அஹமதனிஜாத் என்ற ஒரு தேசத் தலைவர் ஹோலோகாஸ்டே நடக்கவில்ல என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
//அவர்களது பார்ப்பன வெறுப்புக்கு அடிநாதம் என தோண்டி பார்த்தால் இம்மாதிரி மகா அல்பமான காரணங்கள்தான் கிடைக்கின்றன.எல்லாமே வெங்காயம்தான், உரிக்க உரிக்க ஒண்ணுமே மிஞ்சாது.
அது ஹோலோகாஸ்டில் 60 லட்சம் மரணங்களுடன் முடிந்தது.//
பார்ப்பன வெறுப்புக்கு இது மாதிர் மகா அல்பமான காரனங்கள் தான்.என்ன பெரிய கண்டுபிடிப்பு.உங்களுடய கருத்திலேயே பேசுவோம். இந்த உலகம் புத்தர் மாதிரி ஒரு ஞானியை ,மேதையை இனிமேல் காணப்போவதில்லை.அவர் ஏன் பார்ப்பனியத்தை அறவே ஒதுக்க வேண்டும் என்று சொன்னார்.ஏன் நாடார் சாதியில் பிறந்ததாக கூறப்படும் அய்யா வைகுண்டர் பிராமணியத்தை அறவே வெறுத்தார் .டோண்டு அவர்களே இப்போது தான் தெரிகிறது நீங்கள் ஒரு வயதான குழந்தை என்றது.பெரியார் சொன்னார் யூதர்கள் அந்த ஊர் பார்ப்பான்கள் என்று .உங்களுக்கு இந்த ஊர் பார்பானர்களுடைய வரலாறே தெரியவில்லை.பிறகு எப்படி அந்த ஊர் பார்பானர்களுடைய கதை தெரியும்.நீர் ஒரு முட்டாள்.
உமா .கா. திருவனந்தபுறம்
//இந்த உலகம் புத்தர் மாதிரி ஒரு ஞானியை ,மேதையை இனிமேல் காணப்போவதில்லை..//
Why do Sinhala Budhists hate Tamils ?
உமா.கா,
பெரியார் எங்கு எப்போது யூதர்கள் அந்த ஊர் பார்ப்பானர்கள் என்று சொன்னார் என்பதை எடுத்துக்காட்டினால் நான் தன்யனாவேன்.
நான் ரொம்ப நாளாகத் தேடிக்கிட்டு இருக்குற விஷயம் அது.
@வஜ்ரா
நீங்கள் கேட்டதற்கான சுட்டி கீழே:
"இச்சமயத்தில் பார்ப்பன சமூதாயத்தாருக்கு நாம் உண்மையாகவே எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம். இப்பொழுது உலகம் மனித சுதந்திரத்துக்காகவும், உயிருக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது. இச்சமயத்தில் நீங்கள் மானயீனமின்றிச் சோற்றுக்காகப் போராடுவீர்களானால் அது மிகவும் வெறுக்கத்தகுந்த செய்கையாகும். இந்த நாட்டு மக்களுடன் ஒன்றாகக் கலந்து வாழ உங்களுக்கு விருப்பமில்லை என்பதையே உங்கள் செய்கை காட்டுகிறது. இது உங்களுக்கு நல்லதல்ல. ஜெர்மன் மக்களுடன் சமூக வாழ்வில் ஒத்துழைக்காமல் சுயநலவாழ்விலேயே கருத்துக் கொண்டு வாழ்ந்து வந்ததால் தான் யூதர்களை ஹிட்லர் ஜெர்மனியைவிட்டே வெளியேற்றினார். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டுக்குப் போதுமான அரசுரிமை கிடைக்குமானால் ஜெர்மனியில் யூதர்களுக்கு வந்த கதியே உங்களுக்கும் வரக்கூடும். இதற்குத்தான் இப்பொழுது நீங்கள் விதை போடுகிறீர்கள் என்று எச்சரிக்கிறோம். நாம் சொல்லுவது சரியா? அல்லவா என்று யோசனை செய்து பாருங்கள்."
* பெரியார் ´விடுதலை,´ 07-04-1941.
(பெரியார் களஞ்சியம் ஜாதி தீண்டாமை பாகம்-2, பக்கம்:130)
1941-ல் ஜெர்மனியின் ஹிட்லர் மேல் பல இந்தியர்களுக்கு மோகம் இருந்தது.
வெள்ளைக்காரனையெல்லாம் கடவுளாக வணங்கிய ஈ.வே.ராமசாமி நாயக்கர் மட்டும் எப்படி விதிவிலக்காவார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
May 01, 2010 3:48 PM
@உமா கா.
நீங்கள் சொன்ன புத்தர் 2000 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்தவர். அய்யா வைகுண்டரும் இறந்து 150 ஆண்டுகளாகின்றன. இவ்விருவரையும் விட மிக தாமதமாக சீனுக்கு வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் இறந்தே 36 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
1973-க்கு பிறகு எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டன. அதையெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளாது இன்னும் குண்டுசட்டியில் குதிரை ஓட்டுகிறீர்கள்.
அவர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு தொங்கும் நீங்கள் நிஜமாகவே ஒரு காமெடி பீஸ். சுய அறிவோடு பேசுங்கள். மற்றவர்கள் கூறியதையெல்லாம் வாந்தி எடுக்காதீர்கள்.
ஆனால் தவறு உங்களுடையதல்ல. பகுத்தறிவு பகலவனாக அவதூறாக அழைக்கப்பட்ட ஈவேராவே தன்னை பின்பற்றுவோருக்கு மட்டும் பகுத்தறிவு இருக்கக்கூடாது என விரும்புவர்தானே. பார்க்க: http://dondu.blogspot.com/2008/12/blog-post_21.html
அவரை பின்பற்றும் உங்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்.
ஆனால் ஒன்று. இப்போது வன்கொடுமை செய்பவன்கள் எல்லோருமே பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்தான். ஆனாலும் அவர்கள் செய்வதும் பார்ப்பனீயமே என உங்களை சொல்லச் செய்வது அந்த ஈவேராவின் தந்திர மூளையின் செயல்பாட்டால்தான்.
கீழ்வெண்மணி விஷயத்தில் அவர் காட்டிய இரட்டை நிலை ஒன்றே போதுமே அவரது போலித்தனத்தை உரித்துக் காட்ட.
டோண்டு ராகவன்
எல்லா பிராமணர்களும் திருந்தி விட்டார்கள். இப்போதைய இந்தியா பிரமணர்களை நம்பித்தான் நடக்குது. போதுமா. நிம்மதியா தூங்குங்க
யூத வெறுப்பு (anti-semitism) ஹிட்லர் காலத்திலிருந்து, ஹிட்லரால் தொடக்கப்பட்டதல்ல. ஏசுவுக்கு முன்னரே இருந்து, ஏசுவுக்குப்பின்னர் தீவிரமானது. காரணம். ஏசுவைச் சதிசெய்து கொன்றவர்கள் யூதர்களே என்று பைபிளே சொன்னதால்தான். இத்தனக்கும் ஏசுவும் ஒரு யூதரே.
யூதவெறுப்பு ஐரோப்பாக்கண்டமுழுவதும் விரவிக்கிடக்கிறது. ஏனெனில், குருசேடு காலங்களிலும் யூதர்கள் பல நாடுகளுக்கும் தஞசமெனச் சென்றார்கள்.
எங்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் தங்கள் புராதன மதத்தைக்கொண்டு சென்று விடாப்பிடியாக வாழ்ந்தார்கள். GHETTO எனவழைக்கப்படும் தங்கள் குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து, வட்டிக்குக் கொடுத்து (வங்கியைக்கண்டு பிடித்தவர்களே அவர்கள்தான்) கந்துவட்டியும் கறார் வ்ட்டியும் வாங்கி, ஈவு இரக்கமில்லாமல் பிறமக்களைச் சுரண்டி வாழ்ந்தார்கள். பண்மே பிரதானம் என்பதால்.
அவர்க்ளில் இக்குணத்தை சேக்ஸ்பியர் ஷைலக் கதாபாத்திரத்தில் பகடி செய்கிறார். என்வே அவருக்கும் anti-semitist எனப்பெயருண்டு.
என்வே யூதவெறுப்பு என்பது ஒரு logical corollary. காரணத்தோடு வந்த ஒன்று.
பார்ப்பன்ர்களை பெரியார் ஒப்பிட்டது மிகச்சரி.
பார்ப்பன்ரகள் தங்கள் மத்த்தையும் அம்மதம் சார்ந்த வாழ்க்கையையுமே விடாப்பிடியாக பிடித்து அக்ரஹாரங்களில் வாழ்ந்து, மற்ற மக்களிடம் கல்வாமல் வாழ்ந்தார்கள். இந்து மதத்த்தில் தங்களுக்கென வாழ்க்கைமுறையை வகுத்து, அதைக்கடைபிடிக்க மற்ற மக்களிடம் சேர்ந்து வாழ்ந்தால் தீட்டு எனவும் எழுதிகொண்டார்கள். எனவே அக்ரஹார வாழ்க்கை மிக அவசியமானது. அம்மக்களிடம் ஆதாயம் மட்டும் பெற மன்னர், அரசு போன்றவற்றிற்கு அருகில் இருந்து தங்கள் காரியங்களைச்சாத்தித்துக் கொண்டார்கள்.
மற்ற மக்கள் இதற்காக அவர்களைத்தாக்கவில்லயென்றாலும், அவர்க்ளைப்புரிந்து கொண்டார்கள். அரசு அதிகாரம் பார்ப்ப்னர்கள் கைகளில் இருந்த்ததால், மக்கள் அவர்களிடன் நெருங்க முடியவில்லை. பார்ப்ப்னர்கள் பாதுகாப்போடு வாழ்ந்தார்கள்.
இன்றும் மதம்தான் அவர்களைக்காப்பாற்றும் என நினைக்கிறார்கள். என்வே ‘எங்கே பிராமணன்?’ ‘இந்து மகா சமுத்திரம்’ என்று தேடிக்கொண்டு ஆத்ம திருப்தியடைகிறார்கள். பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத இயக்கங்களுக்கு தமிழ்பார்ப்ப்னரின் ஆதரவு, இந்துமதம் நிலைத்து, தங்களின் பாரம்பரிய் வாழ்வு நிலைக்கட்டும் எனபதாலே.
மன்னராட்சி முடிந்து, மக்களாட்சிவந்தவுடந்தான் பிறமக்கள் பார்ப்பன் ஆதிக்கத்தை எதிர்க்க ஆரம்பித்தார்கள்.
இது பார்ப்பனத்துவேசத்தின் historic background.
தற்காலத்திலும் ஏன் என்று விளக்க ஒரு தனி பதிவுதான் போடவேண்டும்.
In English, excuse me.
Integration of Tamil paarppnarrs with fellow Tamils is still not complete.
The religious life they want prevents them from integrating.
For millenna, as I said, they lived isolated and insulated from the rest of Tamil society.
When they wanted to come to the main society, they came only with the powers of royalty or royal support. They were close to kings, and acted in many capacities, putting other people in awe of them. They wanted kings to build imposing temples to vedic gods and goddesses just to keep other people in awe of them, and their religion.
The religion was one cause; and the side effect of such religious life was another cause. In religion, they believed they were created by god to be superior to others. Further, they worshipped only Vedic gods, and never recognised the local deities of indigenous people of Tamilnadu. Even today, they dont worship the local deities, except Amman. Dondu Raagavan worships Amman.
The assimilation of local deites became inevitable in a few cases only, for e.g Kallazhagar, about which I wrote in Tamil oviya blog last month. Please read it. As I read a Phd thesis authored by a tamil teacher, and went to the temple many times to verify the claims made by the author, I came to know a lot about that temple. I also pored deep into those alvaars who sang about the temple. So, I could given a fitting reply there.
If at all the Tamil brahmins assimilated indigenous gods, except Kallazakar, they gave these deities very low status like bodyguards of Vedic Gods. If a local deity was very popular, they took the deity for themselves, and wrote vedic stories connecting the deity to Vedic period, as in the case of Velavan or Murugan.
When will Tamil paarppanars become like other Tamils?
The reply is complex. Because the
moderns among them want the cake and eat it too. They want to move with fellow Tamils on easier terms, at the same time, want their orthodox religion, at least in theory.
When they give up the pretension of being a brahmanan or falsely styling themselves as ones, and come to accept that the religion is common to all, and nothing in which is exclusive to them, the integration will be faster. And the,
பார்ப்ப்னத்துவேசம் காணாமல் போய்விடும்!
வைதீக இந்து மதமே the key. என்வேதான் பெரியார் அம்மதத்தை தாக்கினார். அப்போதாவது தன்னை இவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்களா? திருந்த மாட்டார்களா என நினைத்து.
திருந்த மாட்டார்கள் என அவர் நினத்தபடியால்,
இவர்கள் மத்ததில் இருக்காதீர்கள். இசுலாமுக்கோ கிருத்துவத்துக்கோ ஓடிப்போய் விடுங்கள் என்றார்.
இந்து என சொல்லும் போது, பார்ப்ப்னருக்கு அடிமை என பொருள் கொண்டார்.
His anti brahminis was fully justified. So also, that of others.
// GHETTO எனவழைக்கப்படும் தங்கள் குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து, வட்டிக்குக் கொடுத்து (வங்கியைக்கண்டு பிடித்தவர்களே அவர்கள்தான்) கந்துவட்டியும் கறார் வ்ட்டியும் வாங்கி, ஈவு இரக்கமில்லாமல் பிறமக்களைச் சுரண்டி வாழ்ந்தார்கள். பண்மே பிரதானம் என்பதால்.//
அவ்வாறான ghetto-க்களை தவிர அவர்கள் வேறு எங்கும் வசிக்க முடியாது என்பதும் அரசாணைதான்.
யூதர்கள் வேறு தொழில்களை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டனர். ஐரோப்பாவில் ஒவ்வொரு வேலைக்கும் குழுக்கள் உண்டு. அவை Guild என்று அழைக்கப்பட்டன. உதாரணத்துக்கு யாருமே தச்சராகவோ, கருமாராகவோ ஆக முடியது. அதற்கென நியமிக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்களதான் அதை செய்ய முடியும். அதற்கென முதலில் பயிற்சி பெற ஒரு மேஸ்திரியிடம் செல்ல வேண்டும். சிலகாலம் கழித்து அவர் பரீட்சை வைப்பார். அதில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலையான mate ஆக வேண்டும். பிறகுதான் அவனே மேஸ்திரியாக முடியும்.
ஆனால் யூதர்களை எந்த குழுக்களிலும் அரசாணைகளின் பிராகாரம் சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு வட்டிக்கு பணம் விடும் தொழில் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டது. தாம் தூம் என செலவு செய்து கடனை எல்லாம் வாங்கி அவதிப்படுபவர்களைடம் கறாராக வசூல் செய்தால்தான் அங்கு வேலையே நடக்கும், புதிதாக வருபவர்களுக்கும் கடன் தரவியலும். இதில் போய் கருப்பு வெள்ளை என பார்க்கவியலாது.
அரசர்கள் பிரபுக்கள் ஆகியோர் ஆடம்பர செலவுகளுக்காக கடன்களை வாங்கி சமாளிக்க முடியாத அளவுக்கு போகும்போது யூதர்களை கொல்ல ஆரம்பிப்பார்கள். அம்மாதிரி நடவடிக்கைகளை pogrom எனக்கூறுவார்கள்.
ஆனாலும் யூதர்கள் தங்கள் நம்பிக்கைகளில் உறுதியாகவே இருந்தனர். அதுதான் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த நாடு உருவாக்க துணை செய்தது. அந்த நிகழ்வும், செத்த மொழி எனக்கருதப்பட்ட ஹீப்ரு இஸ்ரேலில் இன்று சாதாரண டாக்சி டிரைவர்கள் கூட பேசும் அளவுக்கு உயிர் பெற்ற விஷயமும் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வந்த பல அற்புத நிகழ்ச்சிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//யூதர்கள் வேறு தொழில்களை செய்வதிலிருந்து தடுக்கப்பட்டனர். ஐரோப்பாவில் ஒவ்வொரு வேலைக்கும் குழுக்கள் உண்டு. அவை Guild என்று அழைக்கப்பட்டன. உதாரணத்துக்கு யாருமே தச்சராகவோ, கருமாராகவோ ஆக முடியது. அதற்கென நியமிக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்தவர்களதான் அதை செய்ய முடியும். அதற்கென முதலில் பயிற்சி பெற ஒரு மேஸ்திரியிடம் செல்ல வேண்டும். சிலகாலம் கழித்து அவர் பரீட்சை வைப்பார். அதில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலையான mate ஆக வேண்டும். பிறகுதான் அவனே மேஸ்திரியாக முடியும்.
கடனை எல்லாம் வாங்கி அவதிப்படுபவர்களைடம் கறாராக வசூல் செய்தால்தான் அங்கு வேலையே நடக்கும், இதில் போய் கருப்பு வெள்ளை என பார்க்கவியலாது.
ஆனாலும் யூதர்கள் தங்கள் நம்பிக்கைகளில் உறுதியாகவே இருந்தனர். அதுதான் கிட்டத்தட்ட 2000ஆண்டுகளுக்கு பிறகு சொந்த நாடு உருவாக்க துணை செய்தது. அந்த நிகழ்வும், செத்த மொழி எனக்கருதப்பட்ட ஹீப்ரு இஸ்ரேலில் இன்று சாதாரண டாக்சி டிரைவர்கள் கூட பேசும் அளவுக்கு உயிர் பெற்ற விஷயமும் ...நினைவில் கொள்ள வேண்டும்.
//
மிகச்சரி. இதுவேதான் என் வாதமும். இதுவேதான் யூத வெறுப்புக்கு ஆழ்வித்திட்டு, ஏசு மரணத்தால் தீபமாக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் முசுலீம்களோடு, ஜெருசேலமுக்காக போட்ட போட்டி, அவர்களை உலகமுழ்வதும் முசுலீம்களின் எதிரிகளாக்கியது.
இன்று இவருக்கு வெற்றி. நாளை அவருக்கு வெற்றி - எனவே ஒரு யுத்த்த்தின் நிரந்தர வெற்றியாள்ர் எவருமில்லை.
பிறமக்கள் சூழ வாழும் ஒரு மக்கள் தங்கள் தனித்தன்மைக்காக அதை நிலை நிறுத்த்ப்போராடும் வாழ்க்கைதான் யூத வாழ்க்கை.
வேறுமாதிரி சொல்லப்போனால், அவர்களின் வாழ்க்கை ஒரு war zone வாழ்க்கை. இவ்வாழ்க்கை தமிழ்பார்ப்ப்னருக்கும் வேண்டுமா?
இனி பார்ப்ப்னருக்கு வருவோம். பிற் மானில பார்ப்ப்னர்கள் பிற ம்க்களோடு கலந்து விட்டார்கள். அவர்கள் அங்கே தனித்தன்மைக்காக போராடவில்லை. இங்கே தமிழ்பார்ப்ப்னர்கள் தங்கள் தனித்தன்மைக்காக போராடுகிறார்கள்.
டோண்டு ராகவனின், பார்வதி அம்மாள் பற்றிய பதிவுக்கு சரன் என்பவர் போட்ட அசிங்கமான் பதிவில், ஒருவர் ‘தமிழ்ப்பார்ப்ப்னர்கள் தங்கள் வீட்டை பிறருக்கு வாடகைக்கு கொடுக்க்மாட்டார்கள்’ என பின்னூட்டம் போட, அதை ஒரு தமிழ்பார்ப்ப்னர், மிக அசிங்கமான மொழியில், துலுக்கனும் உன்னை மாதிரு மொள்ளைமாறிக்கும் விடமாட்டோம் என்று பதில் போட்டார்.
தமிழ்பார்ப்ப்னருக்கு மற்றவரிடம் இன்னும் பிரச்னை இருக்கிறது. இதை கழகங்கள் உருவாக்கியது, பெரியார் உருவாக்கினார் என்பது ஓரளவுக்குத்தான் உண்மை.
பார்ப்பனத் துவேசம் என்பதை ஒருசிலரின் pshychiatric problem என்று சொல்லி பூசிமெழுகும் வேலையை டோண்டு ராகவனும் அவர் ச்காக்களும் செய்து மகிழ்கிறார்கள்.
பார்ப்னத்துவேசம் பரந்து கிடக்கிறது. மக்களுக்கு ஆயிரம் வேலை. அவர்கள் மனதில்தான் வைத்துக்கொள்வார்கள். வெளியில் வாதிக்கமாட்டார்கள். சொல்வது தற்காலத்தில் politically incorrect. இரண்டாவதாக, பார்ப்ப்ன ஆதிக்கம் ஓய்ந்து, OBC ஆதிக்கம் வந்துவிட்டது. தமிழ்க மக்களின் பெரும்பகுதியினர் இவர்க்ளே. பார்ப்பன்ரிடமிருந்து தமக்கு ஆவதும ஆவாத்ததுமொன்றுமில்லை என்று நினைக்கின்றபடியால், tamil paarppnars are being ignored.
This gives you the false impression that antibrahminism is with only DKists and their kindred souls. It is undercurrent in Tamil society. People who read Tamil Oviyaa and other DKists blogs, are so many. It is safe to read them in blogs, because no one notices you when you read. It is safer not to write your reactions there, because your antibrahminsm wont get known.
The hatred for Cho, Subramaniam Swamy and persons like them are open, not only among Lankan Tamils, but among general Tamils also. So many social issues and the stand of Tamilpaarppnars there make them suspect in the eyest of others, suspect in the sense they are 'different' !
The tv series Engee Brahmanan in JV tv do not create any conducive atmosphere for the integration of Tamil paarppnars. It aggravates the festering wound. The koottani of Jeya, the iyengaar and Cho, the fanatical iyer, in reviving brahminism in TNadu, will alienate Tamil paarppanars more and more!
My whole argument can be dismissed in one singe statement that I am a paranoid with antibrahmism. and my views are of a psychopath.
How I wish the statement were true!
//பிற் மானில பார்ப்ப்னர்கள் பிற ம்க்களோடு கலந்து விட்டார்கள். அவர்கள் அங்கே தனித்தன்மைக்காக போராடவில்லை. இங்கே தமிழ்பார்ப்ப்னர்கள் தங்கள் தனித்தன்மைக்காக போராடுகிறார்க//
Jo,
You can't be more wrong.It is the other way about.Andhraites,keralites and kannadigas do not talk about Aryan Dravidian divisive theories propagating hatred like in TN.
This is because rest of South India understood the hatred and villainy in EVR and rejected his Nazi theories where as Tamils lapped up EVRs patently virulent anti India theories.
In that sense tamils are odd balls and mostly casteist.It is because of these evil characteristics in tamilians that Sinhala buddhists also kicked the ass of tamils in Srilanka.
//In that sense tamils are odd balls and mostly casteist.It is because of these evil characteristics in tamilians that Sinhala buddhists also kicked the ass of tamils in Srilanka.//
This is quite uncalled for and I refute this claim totally.
If you yourself are Tamil like myself, please do not cut the nose to spite the face.
Regards,
Dondu N. Raghavan
உலகத்தாரின் யூத வெருப்புக்கு யூதர்களே காரணம். தமிழர்களின் பார்ப்பான துவேசத்திற்கு பார்ப்பானர்களே காரணம்.
சரியா ஜோ.அ.ரே.ஃபெ ?
அப்ப, நான் உங்களை வெறுக்கிறேன் என்றால் அது என் பிரச்சனை அல்ல, உங்கள் பிரச்சனை. சரியா ?
//If you yourself are Tamil like myself, please do not cut the nose to spite the face.//
I did not mean any offence to Tamils except to find fault with their casteist and clannish tendencies.
In Srilanka, Tamils never integrated with the majority Sinhalese. Even though Tamils were a minority, for centuries Tamils dominated all businesses and education while keeping Sinhalese oppressed and depressed.At the same time they never learnt Sinhala and mingle with the majority thinking that as Tamils they are the greatest race on earth just like Nazi Germans did under Hitler thought.
It is ironical that Tamils in TN claim that they have been oppressed by Aryan Indians for centuries and yet consider themselves as a very superior race.
சபாஷ் வஜ்ரா,
சரியான பதில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment