எபிசோடு - 62 (05.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
இந்த எபிசோடில் நிகழ்வுகள் என்று பார்த்தால் ரொம்பவும் குறைவுதான். ஆரம்பத்திலேயே சோ அவர்கள் சாரியாரின் தென்கலை நாமம் சரியான முறையில் காட்டப்படவில்லை என்பதை ஒத்துக் கொண்டு வருத்தம் தெரிவிக்கிறார். பிறகுதான் எபிசோடே தொடங்குகிறது.
கைலாசநகர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார் வையாபுரியின் சகோதரர். அவருக்கு பிரச்சாரம் செய்யும்படி அசோக்கை கேட்டுக் கொள்ள அவர் சிங்காரத்துடன் கூட வருகிறார். சிங்காரம் அசோக் தங்கியிருக்கும் வேதபாடசாலைக்கு அவரை அழைத்து வந்திருக்கிறான். அசோக்குக்கு அவரை அறிமுகம் செய்து வைக்கிறேன். வையாபுரி தனது கோரிக்கையை வைக்கிறார். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது அசோக் ஏன் தமிழுடன் வடமொழிச் சொற்களை இவ்வாறு கலந்து பேசுகிறான் என கேட்கிறார்.
அதானே இது என்ன பிராப்ளம், டமிலோட சான்ஸ்கிரீட்டை ஏன் மிக்ஸ் செய்யணும்னு சோவின் நண்பர் கேட்கிறார். நண்பர் பேசிய வாக்கியத்தைல் அவர் ஆங்கிலத்தை மிக்ஸ் செய்ததை சோ கிண்டலுடன் சுட்டிக் காட்டி விட்டு மேலே பேசுகிறார். வடமொழி தமிழுடன் ஏற்கனவே ஒன்றி விட்டது என சோ சுட்டிக் காட்டுகிறார். ஆங்கிலம் போன்ற மொழியிலும் இலத்தீனம், ஜெர்மன், ஃபிரெஞ்சு சொற்கள் தாராளமாக புழலுவதையும் அவர் மேற்கோளாக காட்டுகிறார். தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ள வடமொழிச் சொற்களை அவர் காலகட்டம் வாரியாக வரிசைப்படுத்திக் கூறுகிறார்.
அசோக்கும் கிட்டத்தட்ட அதே தொனியில் வையாபுரியின் சகோதரருக்கு தெரிவிக்கிறான். பிறகு அவர் கேட்ட ஆதரவை தன்னால் தன்னிச்சையாக தரவியலாதென்றும், கைலாசநகர்வாசிகளையும் கலந்து பேச வேண்டும் எனக்கூறி அவர்களுக்கு விடையளிக்கிறான்.
உமா வீட்டுக்கு போலீஸ் வந்து ரமேஷை கைது செய்து போகின்றனர். உமா அமைதியாக இருக்க, மற்றவர்கள் பதட்டமடைகின்றனர்.
(தேடுவோம்)
எபிசோடு - 63 (06.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வேம்புவின் தமக்கை மகாதேவ பாகவதரை எதேச்சையாக சந்திக்கிறாள். அவரிடம் வேம்புவுக்கு வீடு காலி செய்ய வேண்டிய பிரச்சினையை கூறிவிட்டு, வேம்பு தனது மனைவி சுப்புலட்சுமிக்காக ஒன்றுமே சேர்த்து வைக்கவில்லை என கூற, பாகவதருக்கு சுருக்கென படுகிறது. தானும் தனது மனைவி ஜானகிக்கு ஒன்றுமே சேர்த்து வைக்கவில்லை என வருந்துகிறார்.
நீலகண்டன் வீட்டில் அவரும் பர்வதமும் அசோக்கை காட்டிக் கொடுத்ததற்காக உமாவை சாடுகின்றனர். இதற்கெல்லாம் அசோக்கின் தூண்டுதலே காரணம் என பர்வதம் அபிப்பிராயப்படுகிறாள். கடைசி முடிவு தன்னுடையதே என உமா தெளிவுபடுத்துகிறாள். ரமேஷுக்கு அவமான என்பது உண்மையானாலும், அவன் மனைவி என்ற ஹோதாவில் தனக்கும் அதே அவமானம்தானே எனவும் அவள் கூறுகிறாள்.
பாகவதர் வீட்டில் அவர் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார். அவரது மருமகள் ராஜி விஷயம் அறிந்து கொண்டு மேலும் அவரை குத்திக் காட்டிப் பேசுகிறாள். அவர் தனிமையில் அமர்ந்திருக்க, மெதுவாக வீட்டில் எல்லா அறைகளிலும் விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக அணைகின்றன.
சிகாமணி முதலியாரின் பெண்கள் பார்வதியும் ஷோபனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஷோபனாவின் மாமனார் சாரியாரின் அறிவுரைப்படி பிரார்த்தனையில் ஈடுபட்டதில் தனது புற்றுநோய் குணமாகும் அறிகுறிகள் தென்படுகின்றன என அவள் குதூகலிக்கிறாள். பல ஆன்மீக புத்தகங்களை படித்ததில் இந்து மதத்தின் பெருமையை உணர்ந்ததாக அவள் கூறுகிறாள்.
அது என்ன சார் மத்த மதங்களில் இல்லாத பெருமை இந்து மதத்துக்கு என சோவின் நண்பர் கேட்க, மற்ற மதங்களை பற்றி இப்பெண் பேசவேயில்லை, இந்து மதம் பெருமை வாய்ந்தது என்று மட்டும் கூறுகிறாள் என சோ தெளிவுபடுத்துகிறார். பிறகு அவர் இந்து மதத்தின் பெருமைகள் பற்றி விளக்குகிறார்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
19 hours ago
44 comments:
சமஸ்கிருதம் வாழ்க!
தமிழ் நாசமத்து போக
சந்தோசமா!
உங்களுக்கு இருக்காது, நிச்சயமா சோவுக்கு சந்தோசமா இருக்கும், அடுத்த மீட்டிங்கில் பார்த்தால் சொல்லிவிடுங்கள்!
@வால்பையன்
இரண்டுக்கும் ஒரே பொருள்தான். அப்படியே ஆகுக.
அடுத்த மீட்டிங் வரை ஏன் காத்திருக்கணும்? இப்போதே உங்களிடம் இங்கேயே சொல்லிவிட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சமஸ்கிருதம் வாழ்க!
தமிழ் நாசமத்து போக
சந்தோசமா!
உங்களுக்கு இருக்காது, நிச்சயமா சோவுக்கு சந்தோசமா இருக்கும், அடுத்த மீட்டிங்கில் பார்த்தால் சொல்லிவிடுங்கள்!//
மகனே புலிகேசி !! அரியணையில் நீ அமர்ந்ததும் செய்கிற அலும்புதானடா தாங்க முடியவில்லை !!
நீ நீட்டி முழங்கியதில் பின்வருவன அனைத்தும் சமஸ்கிருதம் என்பதை தெரிந்து கொள்ளடா என் செல்லமே !!
௧) நாசம் ௨)சந்தோசம் #) நிச்சயம் $) மீட்டிங்கில்-இது ஆங்கிலம்.
சாதரணமா, சீக்கிரம், சாதம், சப்தம், இப்படி நெறைய வார்த்தைகள் (ஏன் வார்த்தைங்கிறதே சம்ஸ் தான்) , சமஸ்கிருதம் தான் கண்ணு !
சிம்மாசனத்தில் அமர்ந்ததும் துங்கபடாது சரியா
அதே பழைய நண்பன்
தமிழ் மற்றும் மலையாளத்தில் சமஸ்கிரத கலப்பு இருப்பது பலருக்கும் தெரியாது. மற்ற திராவிட மொழிகளிலும் இந்த நிலை தான் என்று நினைக்கிறேன்.
ஷா, ஹ மாதிரி வட மொழி எழுத்துக்கள் இல்லைனா அது தமிழ் தான்னு முடிவுக்கு பலரும் வந்து விடுவதுண்டு.
ஆனா பிரிக்கவே முடியாதபடி தமிழில் சமஸ்க்ரிதம் கலந்து தான் இருக்கு. மலையாளத்தில் இதை வெளிப்படையாக ஒத்துக் கொள்வார்கள், ஏற்றும் கொள்வார்கள்.
காகம் என்பது கூட சமஸ்க்ரிதம் தான்.
http://www.virutcham.com
@ பழைய நண்பன்
நான் சாப்பிடும் சாப்பாடு தமிழ்
அதில் சமஸ்கிருந்தம் எனும் மண்ணை நீ மண்ணை தான் திங்கிறாய் என்றால் நான் என்ன சொல்வது, பசிக்கு தின்னு தானே ஆக வேண்டியிருக்கு!
விரையில் தமிழில் மட்டுமே தட்டச்ச பழுகுகிறேன்!
தமிழ், ஆங்கிலம், சமஸ்க்ரிதம், ஹிந்தி என்று அணைத்து மொழிகளுமே கம்யுனிகேஷனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. அதற்குமேல் மொழிகளுக்கு தேவை இல்லாமல் முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல என்று நினைக்கிறேன். இதற்காக சண்டை எல்லாம் போடுவதை பார்த்தால் மக்களின் அறியாமையை நினைத்து வேதனையாக இருக்கிறது.
ஆக மொத்தம், பைத்தியக்கார வைத்தியர்களுக்கு கொண்டாட்டம்தான் - டோண்டு வலைப்பதிவின் மூலமே அவர்கள் தங்களின் வருங்கால வாடிக்கையாளர்களை குறி வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.
To defend Sanskrit is the sacred duty of brahmins. So, it is natural to find stout defence of the language in a TV series devoted to the glory of brahmins.
Sanskrit per se is a beautiful language with a solid literature of ancient past. But it has no literature being written now. A language w/o a flourishing or vibrant literature is almost dead. Such a language is not worthy to be called a language of civilised people.
When it was a language of the masses, it was popular: the so-called secular literture was written such as the works of Kalidasa, or Vatsyanan (Kamasutra)
Somehow or other, the language was hit by a misfortune of being the language of brahmins only. It became a deva basha and left people. Secular literature fell silent. Now, the language has only divine literature, that too, written in the past. It was the idiocy of brahmins to have made tit a Deva Bhasha. The brahmins ironically smothered the language, of course, unintentionally!
In UP and Bihar, the brahmins call Hindi their mother-tongue. In Tamilnadu, the Tamil brahmins call the local language Tamil, a far inferior language which has no sweetness of its own, their mother tongue. It is a pity.
When brahmins themselves let Sanskrit down, how will it flourish? No one cares!
Language and literature are never the first priorities of a people because they are not utilitarian. கலை கவைக்கு உதவாது.
Cho Ramasamy is correct in reminding the Tamil brahmins of the glory of Sanskrit. It is in the hands of Tamil brahmins to bring their mother tongue back to its ancient glory. A few places in India where the language flourishes is one, among the community of Tirupathi brahmins and the other, among Udupi Brahmins.
Tamil brahmins are very scary of owning up to the language. It is their mother-tongue but they are afraid to admit it. Ragavan knows it is due to politics. They dont even like to own up to the fact of being brahmins: witness their dropping of their brahminical surnames, whereas in Maharasta, even the bollywood actresses never drop their brahminical surnames: Maduri Dixit, Raveena Tandon et al.
Tamil brahmins, wake up!
தமிழ் நாட்டிலேயே ஆங்கிலம் இல்லாமல் பிழைக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் பேசுவதை தமிழை ஆங்கிலம் கலந்து பேசுவதை எழுதுவதை இங்கு யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்வதில்லை. இது தான் புரியும் மொழி, வட்டார வழக்கு (தமிழ்நாட்டுக்கே ) என்ற அளவில் சாதாரணமாக ஆகி விட்டது. பிற மாநில மொழியை தெரிந்து கொள்வதில் பெருமை. ஜேர்மன்/பிரெஞ்சு/japaneese என்று அயல் மொழிகள் தெரிந்தால் பெருமை. பணம் கொடுத்து படிக்க தயார். ஆனால் தமிழில் சமஸ்க்ரிதம் கலந்து இருப்பது மட்டும் தெரிந்தால் ஏற்க வருத்தமாக இருக்கிறது. அது மண் என்றாலும் இருத்தல் உண்மை. பிரிக்கும் முயற்சியில், பிற மொழி சொற்களையும் சேர்த்து பிரித்து விட்டால் அப்புறம் இது தமிழ்னு கூவி கூவி சொன்னாலும் தமிழர்களே முழிக்கும் நிலை தான்.
http://www.virutcham.com
அருனாலம்,
மொழிகள் விசயத்தில் நாம் ஆங்கிலேயர்கள் போல இருக்கணும் , அது தான் அந்த மொழி பேசறவங்களுக்கும் அந்த மொழிக்கும் நல்லது.
ஆனா அது புலிகேசி மாதிரி ஆளுகளுக்கு புடிக்காது என்ன செய்யமுடியும் ?
ஜோ..............பெர்னாண்டோ,
நீங்க என்ன தமிழ் ஓவியாவுக்கு ஏதாவது சொந்தமா எப்ப பார்த்தாலும் மண்டை மண்டையா எழுதுற , தமிழ் வழிப் பதிவில் தமிழில் எழுதி தொலைக்க வேண்டியது தானே !! இங்க்லிசும் ஓட்டை , இங்கலிஷ் கத்துக்கணும்னா பேசாம இங்க்லீஸ் பதிவுகளை தேடி போக வேண்டியது தானே ???
வாலின்-(பழைய)நண்பன்
//விரையில் தமிழில் மட்டுமே தட்டச்ச பழுகுகிறேன்!//
அஞ்சாநெஞ்சன் அன்பு ராஜ ராஜ புலிகேசி,
அப்படி முயற்சி பண்ணினே ! நல்ல தமாசா இருக்கும். பசுவை பசு ன்னு எழுத முடியாது "ஆ' அல்லது ஆநிறை-ன்னு எழுதணும் , அப்புறம் என்ன எழுதுனாய் -ன்னு கூடவே நல்ல தமிழில் (அதாம்பா வழக்கத்தில் உள்ள தமிழ்) ஒரு மொழி பெயர்ப்பு போடநும், இதெல்லாம் நடக்கிற காரியாமா ?
சூட்கேசுக்கு தமிழில் என்ன தெரியுமா - அடைப்பம் இப்படியே அண்ணிகிட்ட கேட்டே -ன்னு வை அப்புறம் "அ" வுக்கு பதில்லா "து" வந்துடும்.
விபரீத முயற்சி வேணாம், விருட்சம் சொன்ன மாதிரி சம்ஸ் & பிற மொழி சொல்லை உருவிட்டா ஒன்னுமே மிஞ்ச்சாதப்பா !!
அதே பழைய நண்பன்
அமாம் பா நாமத்த தப்பா போட்ரங்கனு நானும் போலம்புனேன் .. ஒடனே மன்னிபு கேட்டாறு நம்ம தலிவரு.. அதான் மனிச்சிடேன்
வாலின் பழைய நண்பா!
இதோ தமிழில் பதில்.
பிராமணாகள் சம்ஸ்கிருதம் தங்கள் தாய்மொழி என்பதை தைரியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திராவிடத்தறுதலைகள் என்ன சொல்லும் என நினைக்காமல், நாங்கள் பிராமணர்கள் என்று சொல்லி, எல்லாரும் ஐய்ர், ஐய்ங்கார் என்று பிராம்ண் குலத்தைத் தைரியமாக் சொல்லவேண்டும்.
தங்கள் இனத்துக்குள்ளேயே திருமண சம்பந்தங்கள வைத்துக்கொள்ளவேண்டும்.
சமஸ்கிருதத்திலேயே தங்கள் குழந்தைகளிடம் பேசவேண்டும். பள்ளியில் அம்மொழியைப் படிக்க வாய்ப்பில்லாதவர்க்ளுக்கு சம்ஸ்கிருதப்பயிற்சியை தனியாக ஒரு ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளவேண்டும். தாம்பிராஸ் செய்து வருகிறதல்லவா?
ஒவ்வொரு பிராமணரும் தங்கள் குழந்தைகளை வேதபாட்சாலைக்கு அனுப்பமுடியாவிட்டாலும், அதற்கென தனியாக ஒரு ஆச்சாரியனுட்னோ அல்லது ஆசிர்யருடனோ சேர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
சமஸ்கிருதம் தமிழகத்தில் தழைக்கப்பாடுபட வேண்டும். தமிழைக் கற்றுக்கொள்ளுவதில் தவறில்லை. அது பிற மக்களிடம் பேச பழக உதவும். அவ்வளவுதான். அதற்காக தமிழுக்கும் முதலிடம் தரக்கூடாது.
கோயில்களில் யாக, பூஜை களில் தமிழே இருக்கக்கூடாது. சமஸ்கிருதமே ஓதப்படவேண்டும்.
பிராமணர்கள் இவற்றைச்செய்தால்தான் சம்ஸ்கிருதம் நிலைக்கும். இல்லாவிட்டால் காணாமல் போகும்.
பிராமணருக்கு சமஸ்கிருத்தைப் பேணி வளர்ப்பது ஒரு தெய்வக்கடமையாகும்.
இந்தக்கருத்தைத்தான் ஓட்டை ஆங்கிலத்தில் எழுதித்தள்ளி விட்டேன் வால் பழைய நண்பா! மன்னித்துக்கொள்.
Dondu raagavan, Hereafter if i sent my ottai english replies, please do not uploaded them.
//பிராமணருக்கு சமஸ்கிருத்தைப் பேணி வளர்ப்பது ஒரு தெய்வக்கடமையாகும்.//
:)
ஏன் தெய்வத்தால் காப்பாத்தமுடியாதாமா!?
சமஸ்க்ரிதத்தை காப்பாற்றுவது பற்றி அந்த episode ல் சோ பேசவில்லை. தமிழில் சங்க காலம், சமண இலக்கியம், ஏன் madras பாஷை என்று நாம் சொல்லும் தமிழில் கூட சமஸ்க்ரிதம் கலந்து இருப்பதைத் தான் சொன்னார்.
சமஸ்க்ரிதத்தை காப்பாற்றுவது கடவுள் செய்யட்டும் என்று விட்டுவிடுவது இருக்கட்டும். தமிழை காப்பாற்றுவது பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்இல்லையா?
தமிழ் என் தாய் மொழி என்று சொல்லுவதில் கண்டிப்பாக ஒரு ஆத்மார்த்தமான உணர்வு இருக்கிறது. அதனாலேயே இன்றைய குழந்தைகள் தமிழை எப்படி எதிர் கொள்ளுகிறார்கள் என்பது குறித்த
என் ஆதங்கத்தையும் இங்கு பதிவு செய்துஇருக்கிறேன் http://www.virutcham.com/?p=470
ஒரு மொழியைக்காப்பாற்ற வேண்டியது மக்களே. எத்தனை பேர் பேசுகிறார்களோ, அல்லது அதில் எழுதுகிறார்களோ, அதை வைத்துத்தான் அம்மொழி வளரும்; அல்லது தொடரும்.
சமீபத்தில், ஒரு தொல்மொழி யொன்று அழிந்தது அந்தமானின். அதை ஒரே ஒருபெண் தான் பேசி வந்தார். அவர் போனமாதம் இறந்த்டு விட்டார். அவருடன் அம்மொழி அழிந்தது.
இந்திய அரசின் கவனக்குறைவையும் அலட்சியத்தையும் மொழிவியலாளர்கள் திட்டித்தீர்த்தார்கள்.
நாய்க்கமார், நாயுடுக்கள் தங்கள் வீடுகளின் தமது தாய்மொழியான தெலுங்கில்தான் பேசுகிறார்கள். செராட்டியர்கள் செ ளராட்டிய மொழிய்ல்தான் வீடுகளின் பேசுகிறார்கள். முசுலீம்களில் பலர் உருத்வைத்தான் பேசுகிறார்கள்.
நான் என் வீட்டில் தமிழில் பேசுவதில்லை. எங்கள் தாய் மொழியில்தான் பேசுகிறேன்.
நாங்கள் திராவிடத்தறுதலைகளைகள் என்ன சொல்வார்களோ என்றா நினைக்கிறேம்?
அதைப்போல்வே தமிழ்பிராமணர்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக்க்கொடுத்தார்கள்/
//பிராமணருக்கு சமஸ்கிருத்தைப் பேணி வளர்ப்பது ஒரு தெய்வக்கடமையாகும்.//
நீங்கள் யார் அதைச் சொல்ல? உங்க பேச்சுக்களை தலித்துகளுக்கு கிறித்துவத்தில் மரியாதை வாங்கிக் கொடுப்பதில் செலவிடவும். அல்லது சிறுமிகளை புணரத் துடிக்கும்கிறித்துவப் பாதிரிகளை திருத்துவதில் செலவிடவும். எங்கள் இந்து மதத்துக்குள் நீங்கள் வந்து உபதேசம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை.
//அதைப்போல்வே தமிழ்பிராமணர்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக் கொடுத்தார்கள்//
ஆகா கண்டுபிடித்தாரையா கொலம்பஸ். உங்க மிசுநரி வேலையெல்லாம் இங்கு வேண்டாம். எங்கள் தாய்மொழி தமிழ். யாரும் அதை விட்டுக் கொடுக்கவில்லை. பார்ப்பனர்களின் தமிழ் பாசத்துக்கு உங்கள் சான்றிதழ் தேவையில்லை, உங்க தாய்மொழி ஆங்கிலம்னா முதல்ல அதை பிழையில்லாம எழுதப் பாருங்க.
டோண்டு ராகவன்
இந்து மதத்துல வந்து குளிர் காய எல்லாம் விடமாட்டோம்.
டோண்டு ராகவன்
ஏன் இப்படி திடீர்னு கோபம். அவர் தப்பா எதுவும் சொல்லலையே. பதிவுக்கு நேரடியான தொடர்பு இல்லைன்னு வேணா சொல்லலாம். 'தமிழ் ' பிராமணர்கள்னு அவரே சொல்லிட்டு தாய் மொழி சமஸ்க்ரிதம்னு ஒரு முரண்பாடை சொல்லுகிறார். அது அவரின் முரண்பாடு மட்டும் இல்லை பலரும் அப்படி தான் நினைக்கிறாங்க. அதனால தன சோ இந்த விளக்கத்தையே கொடுத்திருக்கார்னு நினைக்கிறேன். உங்களுக்கு தெரியாததில்லை.
//அது என்ன சார் மத்த மதங்களில் இல்லாத பெருமை இந்து மதத்துக்கு என சோவின் நண்பர் கேட்க, மற்ற மதங்களை பற்றி இப்பெண் பேசவேயில்லை, இந்து மதம் பெருமை வாய்ந்தது என்று மட்டும் கூறுகிறாள் என சோ தெளிவுபடுத்துகிறார். பிறகு அவர் இந்து மதத்தின் பெருமைகள் பற்றி விளக்குகிறார்.//
இந்து மதத்தின் uniqueness அப்படீன்னு கர்ம பலன் மற்றும் "எந்த மதத்தை பின்பற்றினாலும் என்னையே அடைகிறாய்" என்பது பற்றி குறிப்பிட்டார். இது ரொம்ப முக்கியமான விஷயம். இதை பத்தி நீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஒரு பதிவா கூட நீங்க போட்டா நல்லா இருக்கும்.
http://www.virutcham.com
//இதை பத்தி நீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஒரு பதிவா கூட நீங்க போட்டா நல்லா இருக்கும்.//
நீங்கள் சொன்னது 64 & 65-ஆம் எபிசோடுகளில் வருகிறது. அங்கு குறிப்பிட்டுள்ளேன்.
வெர்பாட்டிமாக போடாததன் காரணமாகத்தான் வீடியோவுக்கான சுட்டியும் தருகிறேன். அதையும் எல்லோரும் பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் யார் அதைச் சொல்ல?//
ஒரு இந்து சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?
//அல்லது சிறுமிகளை புணரத் துடிக்கும்கிறித்துவப் பாதிரிகளை திருத்துவதில் செலவிடவும்//
அவர்கள் சிறுவ்ர்களையும் பண்ணவிழைகிறார்கள் என்பதை மறந்து விட்டீர்களே!
//பாதிரிகளை திருத்துவதில் செலவிடவும். //
எந்த மதமாயினும் சரி, அதை போர்த்திக்கொண்டு தீயசெயல்கள் செய்து வாழும் சாமியார்களையும், பாதிர்களையும் ஆராலும் மாற்ற முடியாது இராகவன்.
அவர்களை மக்கள் புறக்கணித்தால் போதுமானது.
சரியா?
விருட்சம்!
நானும் அப்படித்தான் நினைத்தேன். தமிழ்பிராமணரென்று சொன்னால் முரண்பாடு.
தமிழ்நாட்டு பிராமணரென்று சொல்லியிருக்க வேண்டும். திருத்தி வாசித்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டுப் பிராமணர்களின் தாய் மொழி தமிழ்.
சரியென்றால் அவர்களுக்கும் திராவிடத்தறுதலைகளுக்கும் ஏன் பிரச்னை வருகிறது?
இஃது உபதேசமல்ல. ஒரு கேள்விதான்.
விளக்கினால் நல்லது.
தமிழ்நாட்டுப்பிராமணர்களுக்கும் சமஸ்கிருத்த்திற்கும் தொடர்பு என்ன? வெறும் கோயில் பூஜைகளில் மட்டும்தானா?
அதற்கு மேல அம்மொழியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவைல்லையா?
விருச்சம் அல்லது இராகவன் விளக்கினால் நன்றி.
//வால்பையன் said...
நான் சாப்பிடும் சாப்பாடு தமிழ்
விரையில் தமிழில் மட்டுமே தட்டச்ச பழுகுகிறேன்!//
அப்ப இவ்வளவு நாளா மண்ணை தின்றேர்களா பாவம்
//ஒரு இந்து சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா//
தமிழ் நாட்டு பிராமணர்களுக்கு தாய் மொழி தமிழ்தான். அதில் எந்த முரண்பாடும் இல்லை.
வடமொழி மொத்த இந்தியாவுக்கும் உரித்த மொழி. அதன் செல்வங்கள் எண்ணற்றவை. அதையும் கற்பது நல்லதே. அது அவரவர் வசதிக்கேற்ப நடக்கும். எனக்கு கூடத்தான் தமிழைத் தவிர மேலும் ஐந்து பாஷைகள் தெரியும். அதுக்கென்ன இப்போ?
ஜோ அமல்ன் உங்களது நைசாக சிண்டு முடியும் வேலைகளை இந்துக்களிடம் வைத்துக் கொள்ள முயற்சிப்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். வேறு எங்காவது சென்று தூண்டில் போடவும்
டோண்டு ராகவன்
//நான் என் வீட்டில் தமிழில் பேசுவதில்லை. எங்கள் தாய் மொழியில்தான் பேசுகிறேன்.//
தாராளமாக உங்கள் தாய்மொழியில் பேசுங்கள் Jo Amalan Rayen Fernando. அதனால் இங்கு யாருக்கு என்ன நஷ்டம்?
//In Tamilnadu, the Tamil brahmins call the local language Tamil, a far inferior language which has no sweetness of its own, their mother tongue. It is a pity.//
உங்கள் தாய்மொழி அல்லாத தமிழைப்பற்றி இப்படி ஒரு கருத்தைச் சொல்ல நீங்கள் யார்?
நீங்கள் என்ன தமிழில் கரை கண்டவரா?
இதற்குப் பெயர் என்ன? இதுதான் கிறிஸ்துவக் குறும்பா? இல்லை என்றால் கிறிஸ்தவத் திமிரா?
டோண்டு ராகவன் சொல்வதுபோல் `நைசாக சிண்டு முடியும் வேலை' செய்கிறீர்கள்; உங்களைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்களா?
@Jo
ஒரு காலத்தில் இந்தியாவில் அனைத்து தரப்பினரும் கற்கும் மொழியாக சமஸ்க்ரிதம் இருந்தது. காந்தியின் சுய சரிதையில் கூட இந்த பாட வகுப்பை பற்றியும் தான் முதலில் அதை புறக்கணித்தது பற்றியும் பின்னால் வருந்தியது பற்றியும் குறிப்பிட்டிருப்பார்.
இன்று தெய்வ மற்றும் பித்ரு காரியங்களுக்கு என்ற அளவிலேயே உபயோகத்தில் இருக்கிறது. இது உங்களுக்கும் புரிந்தே இருக்கும்.
சமஸ்க்ரிதம் என்ற மொழியை தாய் மொழி எதுவாகிலும் விரும்பி ஏற்பவர்கள் அந்த மொழியின் மகத்துவம் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒலி அலை யின் மிகப் பெரிய உபயோகம்(விஞ்ஞானம்) அதில் இருப்பதாலே இன்னும் தெய்வ பித்ரு காரியங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.
அந்தமான் மலைவாழ் மொழி அழிவு பற்றியும் திராவிட அரசியல் பற்றியும் நீங்களே தெளிவாக சொல்லிய பின் உங்கள் கேள்வியின் அவசியமின்மை உங்களுக்கு புரிய வேண்டும்.
தமிழ் நாடு தவிர பிற தென்னிந்திய மாநிலங்களில் இந்த மொழியை எல்லா தரப்பினரும் ( குறைந்த பட்சம் இந்துக்கள்) எந்த தயக்கமும் இல்லாமல் மேற்கூறிய தெய்வ பித்ரு காரியங்களுக்கு உபயோகத்தில் வைத்திருப்பதை நான் சாதாரணமாக கண்டு வியந்து இருக்கிறேன். தமிழ் நாட்டில் தமிழ் தமிழ் என்று கூறி தமிழையும் அழித்து தமிழர்களை பிற மொழிகள் கற்க விடாமல் செய்யும் வேடிக்கை வருந்தத் தக்கது.
நீங்கள் தமிழ் கொடி பிடிப்பவர்கள் பதிவுகளில் உள்ள தமிழை கொஞ்சம் கவனியுங்கள்.
மொழியை மொழியாக பாவித்து அதன் அழகு அதன் கரு குறையாமல் உபயோகிப்பவர்கள் எத்தனை பேர்? சும்மா வெறும் வாயால் என் மொழி என்பதில் என்ன பயன் ?
இங்கே இன்னொரு பதிவில் டோண்டு விவிலியம் குறிப்பு கொடுத்து இருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னால் சென்னை தமிழ் ஜுனூன் தமிழ் ஏன் கொச்சையாக யாராவது பேசும் தமிழ் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த விவிலியம் தமிழ்? இது எதிர் சேர்த்தி ?
இன்று தமிழ் தமிழாக இருப்பதில் நீங்கள் எல்லோரும் திட்டி தீர்க்கும் பிராமணர்கள் பங்கு என்ன என்பது உங்களுக்கு கண்டிப்பாக தெரியும். மொழியை மொழியின் அழகை புரிந்து அதுக்கு வலு சேர்ப்பது யார் என்று நிதானித்து பார்த்தால் புரியும்.
http://www.virutcham.com
//ஒலி அலை யின் மிகப் பெரிய உபயோகம்(விஞ்ஞானம்) அதில் இருப்பதாலே இன்னும் தெய்வ பித்ரு காரியங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.//
அடிச்சிக்க ஆளே கிடையாது!
மற்றதெல்லாம் மொழி, ஆனால் சமஸ்கிருதம் மட்டும் விஞ்ஞானம்!
அப்பா ஞானம், சீதாவை காணோம்!
//அடிச்சிக்க ஆளே கிடையாது!
மற்றதெல்லாம் மொழி, ஆனால் சமஸ்கிருதம் மட்டும் விஞ்ஞானம்!//
வால் அண்ணே,
ஒரு விஷயத்தை மறுப்பது ரொம்ப ஈஸி. ஆனால் புருஞ்சுக்கத்தான் அறிவு வேண்டும்
//வால் அண்ணே,
ஒரு விஷயத்தை மறுப்பது ரொம்ப ஈஸி. ஆனால் புருஞ்சுக்கத்தான் அறிவு வேண்டும்//
உங்க அளவுக்கு எனக்கு அறிவு இல்ல ஸ்மார்ட்! எதையும் விளக்கமா சொன்னால் தான் புரியும்!, சொல்லுங்க புரிஞ்சிகிறேன்! ஆனா தயவுசெய்து நாத்திகவாதின்னு உங்க ப்ளாக்குல இருக்குறதை மட்டும் எடுத்துருங்க! அந்த பேருக்கே கேவலமா இருக்கு!
@வால்பையன்
அப்படி புரிந்து கொள்ள அவ்வளவு ஆவல் இருந்தால், எங்கே பிராமணன் பார்ட் - 2 எபிடோட் - 6-ஐ பார்க்கவும். வேத மந்திரங்களுக்கு ஒலி எவ்வளவு முக்கியம் என்பது காட்டப்பட்டிருக்கும். இது பற்றிய எனது பதிவு இங்கே: http://dondu.blogspot.com/2009/12/2-5-6.html
அப்பதிவிலேயே சுட்டி - 2 -ஐ க்ளிக்கினால் விளம்பரங்கள் நீக்கப்பட்ட அந்த எபிசோடின் வீடியோ கிடைக்கும்.
ஆனால் ஒன்று, இந்தப் புரிதல்களை பெறுவதற்கும் ஒரு காலம் வரவேண்டும். அதுவரை மற்றவர்கள் என்ன சொன்னாலும் புரியாது. கேலி பேசத்தான் தோன்றும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@வால்பையன்
சிறு உதாரணம் தர முடியும்.
சீவன் , ஜீவன் - இதை சொல்லிப் பாருங்கள்.
ஜீவன் என்று சொல்லும் போது ஏற்படும் ஒலி அதிர்வு அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை மட்டும் அல்ல உயிர் இருத்தலையும் சொல்லி விடும் . ஒரு வெளி நாட்டவருக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் போது சீவன் என்பதன் அர்த்தத்தை ஆங்கிலத்தில் சொல்லுவதோடு கூடவே முகத்திலும் கையிலும் அபிநயம் எல்லாம் பிடித்து காட்ட வேண்டி வரும். ஆனால் ஜீவன் என்று அதன் உச்சரிப்பை ஒலியின் அதிர்வோடு சொல்லும் போது வேறு விளக்கம் தேவை படாது.
உங்கள் கவலை தமிழ் அழிவது இல்லை. தமிழில் எந்த மொழி கலந்து தமிழ் அழிந்தாலும் கவலை இல்லை. சமஸ்க்ரிதம் கலந்து வாழ்ந்து தமிழ் விடுதல் மட்டும் ஏற்க முடியாது என்ற உங்கள் எண்ணம் தான் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.
தமிழின் சிறப்பு எழுத்து 'ழ' சரியாக உச்சரிக்க கூடிய தமிழர்கள் தமிழ் பற்றி கவலைப் படலாம் . வாயில் நுழைய வில்லை என்று இருக்கும் எழுத்துக்களையும் சீர் திருத்தம் என்ற பெயரில் மாற்றிக் மாற்றிக் கடைசியில் இது தமிழ்னு எதை தான் சொல்லுவது.
எங்களுக்கு சமஸ்க்ரிதம் இல்லாத எல்லாமும் சரி என்று ஒரு புது மொழியை உருவாக்கி தமிழ்னு பேர் வச்சுட்டு தமிழ் தலைகள் பரம்பரை வேறு மொழி கற்றுக் கொண்டு பிழைப்பை பார்க்க போய்க் கொண்டு இருக்கட்டும். நாமும் சொல்லுவது நமது தமிழ்(??) தலைகள் என்பதால் தலை ஆட்டி ஏற்றுக் கொள்வோம்.
வாழ்க 'தமில்'
http://www.virutcham.com
//உங்க தாய்மொழி ஆங்கிலம்னா முதல்ல அதை பிழையில்லாம எழுதப் பாருங்க.
//
உங்க தாய்மொழியில் பிழையில்லாமலும், ஆங்கிலம் கலக்காமலும் எழுத முடியுமா உங்களால்?
டீபால்டுக்கு தமிழ் இல்லையா? என்று கேட்ட என் பின்னூட்டம் எங்கே?
எங்கே உங்கள் பதில்?
தாய்மொழியை தமிழ் என்று சொல்பவர்களெலாம், தமிழைப் பிழையில்லாமலா எழுதுகிறார்கள்?
கேட்டால்,
”வந்துட்டாப்பா ...இவர் பெரிய தமிழ்ப்புலவர் இவரு?”
என்று அனானி காமெண்ட் வரும்.
//தமிழ் நாட்டு பிராமணர்களுக்கு தாய் மொழி தமிழ்தான். அதில் எந்த முரண்பாடும் இல்லை.
வடமொழி மொத்த இந்தியாவுக்கும் உரித்த மொழி. அதன் செல்வங்கள் எண்ணற்றவை. அதையும் கற்பது நல்லதே. அது அவரவர் வசதிக்கேற்ப நடக்கும். எனக்கு கூடத்தான் தமிழைத் தவிர மேலும் ஐந்து பாஷைகள் தெரியும். அதுக்கென்ன இப்போ?
//
இந்த பதிலை நான் இரசித்து ஏற்றுக்கொள்கிறேன். நல்லது.
உங்களுக்கு எத்தனை மொழி தெரியும் என்று ஆராவ்து கேட்டார்களா? தமிழ் நாட்டுப் பிராமண்ருக்கு எது தாய்மொழி என்றுதான் கேட்கப்பட்டது.
ஒரு மொழியைக்கற்பது எதற்காக என்று சொல்லுங்கள் advanced thanks.
(இனி உங்கள் பதிவில் என் ஓட்டை இங்கிலிசுதான்)
//என்னற்ற் செல்வங்கள்//
சமஸ்கிருதம் தெரியுமா இராகவனுக்கு?
என்னற்ற் செல்வங்களை பட்டியல் போட்டு சொன்னால் advanced thnankus.
//உங்களுக்கு எத்தனை மொழி தெரியும் என்று ஆராவ்து கேட்டார்களா?//
மற்ற மொழிகளையும் கற்பது நல்லதே என்பதைக் கூறவே அவ்வாறு சொன்னேன்.
மற்றப்படி இது தமிழ்பதிவு, அகவே தமிழிலேயே பின்னூட்டம் இருக்கட்டும். எனக்கு பிரச்சினை இல்லை ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும். பதில் அளிக்கும் நிலையில் இருப்பவர்கள் கூட உங்களது எதிர்வினைக்கு எதிட்ர்வினை தராது இருப்பர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்கள் தாய்மொழி அல்லாத தமிழைப்பற்றி இப்படி ஒரு கருத்தைச் சொல்ல நீங்கள் யார்?
//
என் தாய்மொழியைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடமாட்டேன் எனத் திராவிடத்தறுதலைகள் சொல்வது நினைவுக்கு வருகிறது.
எனினும், உங்கள் தாய்மொழியைப் பற்றி அப்படிப்பேசியதற்கு apoloogiees.
//இந்த விவிலியம் தமிழ்? இது எதிர் சேர்த்தி ?//
கிருத்துவத்தைப்பரப்ப வந்த பாதிர்மார்கள் (மிசுனோரிகள்) அந்தந்த நாட்டின் மொழியைக்கற்று அந்த்ந்த நாட்டு மக்களுடன் கலந்து கிருத்துவ ஊழியம் செய்தால்தான் அவ்வூழியம் வெற்றிபெரும் என்று கண்டார்கள்.
அப்படி செய்யும்காலை, சிலர் அம்மொழியின் மீது காதல் கொண்டார்கள். எ.டு. போப்.
வீரமாமுனிவரும் அப்படியே. தமிழுக்கு இலக்கண நிகண்டு எழுதிய்வர். தேம்பாவணி எழுதியவர்.
இராபர்ட்டு கால்டுவெல், தமிழைப் பிற தென்னிந்திய மொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார்.
இவர்கள் தங்கள் மிசுனோரி ஊழியத்துக்கும் அப்பால் சென்று தமிழில் இறங்கினார்கள்.
மற்றவர்கள் அப்படியே தமிழை தங்கள் ஊழியத்துக்கு மட்டும் பயன்படுத்தினாரக்ள்.
நீங்கள் போய் இராஜஸ்தானின் வேலை பார்க்கிறிர்கள். அவர்கள் மொழியை அம்மொழியின் மீது பாசம் கொண்டா படிக்கிறீர்கள்? உங்கள் தொழிலுக்கும் பொது வாழ்க்கைக்கும்தான் அதை பயன்படுத்திக்கொள்வீர்கள்.
உங்களூக்கு ஒரு சட்டம், மிசுனோரிகளுக்கு ஒரு சட்டமா?
நிற்க.
விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தவா ஆறுமுக நாவலர். இவர் இந்துவாகவிருந்து கிருத்துவராக மாறிய இலங்கைத்தமிழர். பெரும்புலவர்.
மதம் தனக்குத்தான் ஒரு மொழியைப்பயன்ப்டுத்திக் கொள்ளுமே தவற, மொழிக்காக மதம் இல்லை.
(இடையில் இராகவனிடம் ஒரு கேள்வி: ஆழ்வார்கள் தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டு செய்ய பாசுரங்கள் எழுதினார்களா, இல்லை வைணவம் (அதாவது திருமால பெருமையப்பேச) வளர்க்க எழுதினார்களா?)
எனவே, கிருத்துவர்கள் தமிழ்பற்றோடு இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை.
இதைப்போல்வே மற்ற மத்த்தாரும்.
ம்தத்தையும் மொழியையும் சேர்த்துப்பார்கக முடியாது விருச்சம்.
//உங்களைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்களா?//
எதுவரை தெரியும்?
உங்களுக்குத் தெரிந்து ஆருக்கு என்ன இலாபம்?
வந்தோமா, படித்தோமா, மறுத்தோமா அல்லது விவாதித்தோமா என்றிருந்தாலே போதும்.
வலைபதிவுகளில் இந்து ஒரு எடிக்வட்டு.
//தமிழில் ஒன்னுமே மிஞ்சாதப்பா.
அதே பழைய நண்பன்
//
அப்படி போடு பழைய நண்பா.
கணேசனுக்குத் தெரிந்தால் போதும்.
//எங்கள் இந்து மதத்துக்குள் நீங்கள் வந்து உபதேசம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை//
எங்கள் இந்து மதம்?
அபபடி ஆருக்கும் உரிமை கொடுக்கப்பட வில்லை.
பேசாமல் கோயிலுக்குப்போனாமா. ம்ந்திரம் ஓதினோமா என்று இருபபதுதான் இந்துவின் வேலை.
நீ ஆர், உன் தலையை வாங்கிவிடுவேன் எஙகள் மத்ததைப்பற்றிப்பேசினால் என்றால் தலிபான்களிடம் சேர்ந்து ஆப்கானித்தானில் துப்பாக்கிக்கடை வைக்க்லாம்.
//என் தாய்மொழியைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடமாட்டேன் எனத் திராவிடத்தறுதலைகள் சொல்வது நினைவுக்கு வருகிறது.//
தம் தாய்மொழியான தமிழைப் பழிப்பவர்கள் குறித்துத் தமிழரான பாரதிதாசன் சொன்னதைப்பற்றி ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட ஆங்கிலோ இந்தியத் தறுதலையான உங்களுக்கு என்ன வந்தது?
//எனினும், உங்கள் தாய்மொழியைப் பற்றி அப்படிப்பேசியதற்கு apoloogiees.//
இந்த `apoloogiees' உண்மை என்றால் வாயை மூடிக்கொண்டு போகவேண்டியதுதானே? மேலும் ஏன் தமிழைப்பற்றி வாய் கிழிகிறது?
//அப்படி செய்யும்காலை, சிலர் அம்மொழியின் மீது காதல் கொண்டார்கள்.//
ஆடுகளின் `மொழி'யின்மீது ஓநாய்களுக்குக் காதல்? எங்காவது சர்ச்சில் கூடி இருக்கும் கிறிஸ்துவக் கேனன்களிடம் இதைச் சொல்லுங்கள்; நம்புவார்கள்.
//விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தவா ஆறுமுக நாவலர்.//
விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் ஆறுமுக நாவலர் என்பது தவறு; யாழ்ப்பாணம் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியில் வேலை செய்தபோது விவிலியத்தை மொழிபெயர்க்கப் பாதிரிகளுக்கு உதவினார்; அவ்வளவுதான்.
//இவர் இந்துவாகவிருந்து கிருத்துவராக மாறிய இலங்கைத்தமிழர்.//
இது கிறிஸ்துவக் கொழுப்பு. திருவள்ளுவரையே `மதம் மாற்றிய' கிறிஸ்துவக் கொழுப்பு Jo Amalan Rayen Fernando மூலம் இன்னும் தொடர்கிறது.
//எதுவரை தெரியும்?
உங்களுக்குத் தெரிந்து ஆருக்கு என்ன இலாபம்?
வந்தோமா, படித்தோமா, மறுத்தோமா அல்லது விவாதித்தோமா என்றிருந்தாலே போதும்.
வலைபதிவுகளில் இந்து ஒரு எடிக்வட்டு.//
ஏன், கிறிஸ்துவப் பூனைக்குட்டி வெளியே வருகிறதே என்று கலக்கமா?
//அப்படி போடு பழைய நண்பா.
கணேசனுக்குத் தெரிந்தால் போதும். //
தேவையே இல்லாமல் ஏன் இன்னொரு கருத்துக்குள் என்னை இழுக்கிறீர்கள்?
சிண்டு முடிகிறீர்களா?
@Jo
The answers are there given already. As your mother tongue is english let me make a try in english.
The serial/this space is not to promote sanskrit or even brahmins.
This particular episode was to answer why Brahmins mix a lot of sanskrit when they speak tamil.
Ans - Bcoz ancestors where good at the language and the descendants intentionally/unintentionally use it. And it is not only Brahmins who mix sanskrit even sangam lit, samanam lit to the local madras tamil is mixed with sanskrit bcoz other than brahmins all were conversant with sanskrit once.
TN brahmin's native lang is Tamil.
Any language flourish by its lit as well us by its usage. In TN there is a deliberate attempt to destroy the language and as there are no one other than brahmins now to understand its richness and the science behind it they try to protect it so that it don't vanish the way Andaman tribal lang wiped out.
The lit to promote hinduism or samanam in TN have not made any compromise on the lang in their attempt to promote religion. Moreover the lang is now in the classical status bcoz of these lit.
You have accepted missionaries have used tamil as merely their tool to promote relegion so you also accept the
compromise on the classical tamil in bible or any such missionaries books. This way the whole lot of people who follow the religion who religiously follow these books are by knowingly/unknowlingly compromised tamil.@Jo
The answers are there given already. As your mother tongue is english let me make a try in this.
The serial/this space is not to promote sanskrit or even brahmins.
This particular episode was to answer why Brahmins mix a lot of sanskrit when they speak tamil.
Ans - Bcoz ancestors where good at the language and the descendants intentionally/unintentionally use it. And it is not only Brahmins who mix sanskrit even sangam lit, samanam lit to the local madras tamil is mixed with sanskrit bcoz other than brahmins all were conversant with sanskrit once.
TN brahmin's native lang is Tamil.
Any language flourish by its lit as well us by its usage. In TN there is a delibrate attempt to destroy the language and as there are no one other than brahmins now to understand its richness and the science behind it they try to protect it so that it don't vanish the way Andaman tribal lang wiped out.
The lit to promote hinduism or samanam in TN have not made any compromise on the lang in their attempt to promote religion. Moreover the lang is now in the classical status bcoz of these lit.
You have acceppted missionaries have used tamil as merely their tool to promote relegion so you also accept the
compromise on the classical tamil in bible or any such missionaries book. This way the whole lot of people who follow the relegion who religiously follow these books are by knowingly/unknowlingly compromised tamil.
தமிழ் வளர்க்கும் திராவிட கும்பலிடம் முக்கியமாகக் கேட்கப்படவேண்டிய கேள்வி ஒன்று உள்ளது.
பல ஆயிரம் வருடங்களாக சமஸ்கிருதம் தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. ஆனால் கடந்த 300 சொச்சம் ஆண்டுகளாகவே இருக்கும் ஆங்கிலத்தால் பாருங்கள், பேண்டு, சட்டைப் போட்டுக்கொண்டு "டுடே லஞ்ச் இஸ் டூ ஹெவியா" என்று சிணுங்குகிறார்கள். காதலைக்கூட ஐ லவ் யூ என்று தான் சொல்கிறார்கள்.
தமிழ் சமஸ்கிருதத்தால் அழிகிறது என்பதெல்லாம் தமிழை அழித்து ஆங்கிலம் வளர்க்கவே பயன்படுகிறது...ஏன் ?
Post a Comment