நான் இந்தப் பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.
“நீதி மன்றங்களால் தேடப்படும் போலீஸ் குற்றவாளிகள் என்னும் தலைப்பில் பதிவர் வினவு இட்ட இடுகையை பார்த்து யோசனையில் மூழ்கினேன்.
அது எப்படி செலக்டிவாக எழுத மனம் வருகிறது? பிரச்சினைக்கு மூல நிகழ்ச்சியான சுப்பிரமணியம் சாமி மேல் தாக்குதலை பற்றி எழுதும் இதே பதிவர் என்ன எகத்தாளமான தொனியில் வக்கீல்களின் அராஜகத்தை ஆதரித்து எழுதினார்? ஆனால் நீதி மன்றங்களால் தேடப்படும் வழக்கறிஞர் குற்றவாளிகள் பற்றி பேச்சு மூச்சு இல்லை. அவருக்கு பின்னூட்டம் இட்ட விசிலடிச்சான் குஞ்சுகள் தத்தம் வெறுப்பை வெளியில் கொட்டினர்.
சட்டக்கல்லூரியில் போலீசார் நின்று வேடிக்கை பார்த்தது இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு தாக்கப்பட்ட மாணவன் முதலில் கத்தியை எடுத்து கொண்டு வந்து தாக்க முற்பட்ட ரௌடி. அவனைப் போட்ட அடி அவனுக்கு தேவைதான். அடுத்த முறை வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டால் போலீசார் மரம் போல நின்று பார்த்தால், வக்கீல்கள் மேல் ஒருவரும் அனுதாபப்பட மாட்டார்கள்”.
நான் எந்த வேளையில் அவ்வாறு எழுதினேனோ, அது இப்போது உண்மையாகவே நடந்து விட்டது. அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க முதல்வர் வந்த போது, அவர் அதை செய்யக்கூடாது என சில வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்ட, அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நன்கு உதைக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் 10 நிமிடத்துக்கும் மேல் நடக்க, முதல்வர் பாட்டுக்கு கருமமே கண்ணாக தன் பேச்சை தொடர்ந்திருக்கிறார். போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.
அடி வாங்கி காயம் அடைந்தவர்கள் “மனித உரிமை பாதுகாப்பு மைய” வழக்கறிஞர்கள். ஆனால் அவர்களை அடித்தவர்கள் போலீசார்கள் அல்ல, அவர்கள் வெறுமனே கைகட்டிக் கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் என ஜூவியில் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இதெல்லாமே முதல்வர் முன்னிலையில் நடந்தது என்றால் நாம் அதுபற்றி என்ன நினைப்பது?
வழக்கறிஞர்களில் பலர் தங்களை சட்டத்திற்கும் மேற்பட்டவர்களாகவே கருதி வந்துள்ளனர் என்பது அனைவருக்கும் இன்னேரம் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிபதி சந்துரு முன்னிலையிலேயே சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக முட்டை வீசிய வழக்கறிஞர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பார்களே. அவ்வாறு ஏதும் நடக்கவில்லை அல்லவா?
அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பல பதிவர்களால் மகிழ்ச்சியோடு பதிக்கப்பட்ட ஒரு முக்கியக் காரணமே தாக்கப்பட்ட சுப்பிரமணியம் சுவாமி ஒரு பார்ப்பனர் என்பதே. ஆனால் அந்தோ, கலைஞர் பார்ப்பனர் இல்லை என்பதை மறந்தார்களே? அவர்களுக்கு உதை கிடைத்ததில் என்ன ஆச்சரியம்? இனிமேல் யாரை தாக்க நினைக்கிறோமோ அவர் பார்ப்பனரா என்பதைப் பார்த்து சூதனமாக நடந்துகொள்ளணும்னு சொல்லணுமோ?
மீடியாக்காரர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு முறையும் நடந்துள்ளது. அவர்களும் ஒன்று செய்யலாம், சற்றே தூரத்தில் நின்று ஜூம் கேமராவை பயன்படுத்தலாம். ரொம்ப கிட்டே போய் குளோசப் காட்சிக்கெல்லாம் ஆசைபடக்கூடாது என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
19 hours ago
30 comments:
போச்சு...
ஏற்கனவே உங்களுக்கு இந்த தமிழ் பதிவு உலகில் ரொம்ப ரொம்ப நல்ல பேரு...இதுல இப்படி இரு பதிவா ?
இனி உங்கள் வடகலை ஐயங்கார் சமூகத்தை எப்படியெல்லாம் திட்டமுடியும் என்று உங்கள் மூளையில் மூணு கோடு நியூரான்களைப் பற்ற வைத்து யோசித்தாலும் கிடைக்காத அறிய பல சொற்களால் வசைகள் கிடைக்கப்போவது உறுதி.
என்ன செய்வது, உண்மை பலருக்கு கசக்கிறது. இவ்வாறு திட்டுபவர்கள் தங்களது வன்ம முகத்தையே எக்ஸ்போஸ் செய்கின்றனர். செய்யட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
sir innum pona pathivuku ungalai titti mudikkala.. ipap ithu veraya , may masam muluka tittuvanga
இதுக்கு பேரு தான் "முள்ளை முள்ளால் எடுப்பது" என்பதோ?
A CRIMINAL offence is committed in the presence of CM, DyCM, Ministers, CJI, CJ HC, all HC Judges, DGP, COP, Union Law Minister right in the premises of Highest seat of JUSTICE during a Govt Function!
We are just insensitive!!!
It is all about Politics and money and NEO VARNAASHRAM!!
The Police are Neo Khsktriya.
The Judges are Neo bramins
The Corporates are Neo Vysyas
All others like us are Suthras!!
Those who are condemned by the above are thrown to Jails just by accusing of some offence and they make the Fith Varnam!!- CRIMINALS
NEO VARNASHRAM is now established!
By any standards we are being ruled by a group of men who have in normal standards "Failed to Make it"
Most of School drop outs who are ineffectual takes to the profession of constables and become Inspectors or SPs.
Most of those guys who reach graduation and ineffectual takes the law degree and they become Hon'ble Judges
Some ineffectual become Govt officials
Most of those ineffectual guys who don't make any become MPs and MLAs and become law makers.
Clever among the rest of ineffectuals become traders and businessmen.
The Law makers are CRIME Hungry
They criminalize most of "civil wrong"and prescribe jail.
eg. NI 138- Cheque bouncing is jailable.
Non filing of IT returns is jailable.
Non return of debt is jailable.
Demanding Dowry is jailable.
Any conduct likely to cause danger to mental health (I repeat) "likely to cause danger to mental health" of wife is jailable.
Delayed payment of statutory dues is jailable. and the list is endless better read IPC.
The police is Arrest Hungry
They first arrest you and then start investigating allegations of offence.
They have discretionary powers to arrest just by filing an FIR.
The Judges are Jail Hungry.
For them freedom has no meaning. The mete out punishment on allegations by refusing bail.
They think giving bail to an accused is great favor. They happily adjourn bail matters for days and months and either enjoy pleasure or extort favour or money
Only the businessman or trader enjoy the fruits of the system. They treat their employees as slaves make huge money and they have perfected the art of Bribing and manipulating the society!!
Intellectuals, common man, critics etc who undergo the torture are silent spectators.
It is the poor man who has nothing more to loose take up law into hands and he either become a Goonda or a Maoist!!
In Afghan there is a statutory Govt. and Talibans are illegal outfits.
In India we have legal elected Taliban Governance!
WE CALL IT DEMOCRACY!!!
So encounters, Custodial killings and police or Govt induced murders are simply social service.
In TN out of 1542 murders in 2009 543 murders reletes to adultery by women!!
When the Courts take 15 years to grant Divorce what else a Normal Husband is expected to do?
THIS IS CALLED KALI DHARMA
வந்துட்டாங்கயா!! வந்துட்டாங்கயா!!!
டோண்டுவின் அடுத்த இரட்டை சதம் ஆரம்பம்..
வாழ்க!
சங்கர மாணிக்கம் சார்!
பதிவுகள் தனது மனதில் சரியெனப் படுவதைப் பதிவு செய்வதற்காகவே! எவரிடமும் நல்லபேர் அல்லது கெட்டபேர் வாங்குவதற்காக இல்லை.
திட்டி எழுதினாலும் சரி, ஆதரித்து எழுதினாலும் சரி, அவரவர் தத்தம் மனநிலை, தரத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்! அவ்வளவு தான்!
இதைப் புரிந்துகொள்ள சைக்கியாட்ரி படித்துப் பட்டம் பெற்றவராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை!
@sureshram
Pl.check your spelling..
ours is DEMOCRAZY and NOT DEMOCRACY
இன்றைக்கு காலையில் விண் டிவியில் செய்தி விமரிசனத்தில் ஒரு சுவாரசியமான விஷயத்தைச் சொன்னார்கள்!
திமுக ஆதரவு வக்கீல்களும், எதிர்ப்பு வக்கீல்களும் தனித்தனியாக இந்த சம்பவத்தை ஆதரித்து/எதிர்த்து ஊர்வலமாகப் பாரிமுனைக்குப் போய்ப் போக்குவரத்தை ஒரு மணி நேரத்துக்கு ஸ்தம்பிக்க வைத்தார்களாம்!
கடைசியில் வழக்கறிஞர்கள் ஒற்றுமை ஓங்குக என்று இருதரப்பினரும் கோஷமிட்டு முடித்தது நகைமுரணாக இருந்தது என்று விமரிசனம் செய்தவர் சொன்னார்!
ஆதரவோ எதிர்ப்போ இங்கே சீன் காட்டுவது மட்டும் தான் என்றாகிப் போன நிலையில், இதைப் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது!?
DEMOCRACY is all about a govt
for the people,
of the people
and
by the people
DEMOCRAZY is all about a govt
FAR the people,
OFF the people
to
BUY the people
and
பிழைதிருத்தும் வலைஞர்!
அப்படிச் சொன்னதும் ஒரு விதத்தில் சரியாகத் தான் இருக்கிறது!
DEMOnsrating CRAZIness! democracy!
சுப்புரமணியசாமிக்கு ஜெயலலிதா குடுத்த(அதிமுக மகளிர் அணி) வரவேற்பு மாதிரி இருந்த உங்க மனசு சமாதானம் அடையுமா
//
சைக்கியாட்ரி படித்துப் பட்டம் பெற்றவராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை!
//
பார்ப்பான ஜீன்கள் என்றெல்லாம் eugenics பேசியது சைக்கியாட்ரி/சைக்காலஜி படித்து பட்டம் பெற்ற சைக்கோ தான் என்பதை மறவாதீர்.
அரசியல்ல இதல்லாம் சாதரணமப்பா ..............
சங்கர மாணிக்கம் சார்!
ஜீன்களில் பார்ப்பன/அபார்ப்பன ஜீன் என்று எதுவும் எனக்குத் தெரிந்து இல்லை! ஜெனோடைப் என்பதும் ஒரு வகைப் பாகு பாடே! சில தனித்தன்மையை வைத்து மட்டும் சொல்லப் படுவது.
இந்த விவாதத்திற்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், இங்கே விவாதத்தில் பங்கு கொள்ளாத ஒருவரை வீணாக ஏன் சீண்ட வேண்டும்?
கசப்போ, கரிப்போ ஒரு விஷயம் பிடிக்கவில்லை, ஒத்து வரவில்லை என்றால், அதை விட்டு விலகி இருப்பதே நல்லது. முடிந்துபோன ஒன்றை மீண்டும் மீண்டும் இழுத்துக் கொண்டேபோவது சரியில்லை!
அந்த வினவு பதிவுகளை படித்தேன். இல்லாத எதிரிய இருக்குறதா நினைசிகிட்டு உணர்ச்சி பொங்க தங்களோட சக்திய விரயம் பண்ணிக்கிட்டுருக்குறாங்க. அப்பதிவை எழுதியவர் மற்றும் comments போட்டவங்கள நினைக்கிறப்போ ரெம்ப பாவமா இருக்கு. மனமும், சிந்தனைகளும் ஊனப்பட்ட இப்படியும் ஒரு மக்கள் கூட்டம் இந்த தேசத்துல இருக்குறத நினைச்சு அழுகுறதா, ஆத்திரபடுறதா, வேதனைபடுறாதான்னே தெரியலை. எத்தனை நாளைக்குத்தான் இருட்டறையில இல்லாத பூனைய தேடி கம்ப வீசபோராங்களோ
இக்கமெண்டின் நிறைவா இங்கு தீமையை நாடும்(vinavu.com) அணைத்து சக்திகளும் சாந்தியை தழுவட்டும். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
@வஜ்ரா
கிருஷ்ணமூர்த்தி சார் சொல்வது சரியே. விவாதத்தில் இல்லாதவர்கள் பற்றி பேச வேண்டாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
சாந்தியை தழுவட்டும். சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
//
சாந்தி என்றொரு பார்ப்பானத்தியைத் தழுவட்டும் என்று சொல்லிப்பாருங்கள்..
உடனே லைன் கட்டி நிற்பார்கள். செக்ஸ் வெறி பிடித்த வினவுப் பன்றிக்கூட்டம்...
சரி.
தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலுமே வழக்கறிஞர்கள் என்னமோ சட்டமே தாங்களால் தான் காப்பாற்றப்படுகிறது என்று யோசித்துக்கொண்டு திரிகின்றனர்.
சட்டக்கல்லூரி வழாகத்தில் போய்ப் பார்த்தாலே தெரியும். சட்டக்கல்லூரி என்றாலே அரசியலில் மாணவர் அணியில் சேரும் ரௌடிகள் தான் படிக்கிறார்கள். தமிழ்கத்தின் எல்லா கட்சிகளும் சட்டக்கல்லூரியில் ஒரு அணி வைத்திருக்கிறது. இது அப்படியே பார் கவுன்சிலில் இருக்கும். பின்னர் ஜட்ஜ் அப்பாயிண்மென்ட்களிலும் இது பிரதிபலிக்கும்...இவர்கள் தான் நமது கேஸ்களை வாதாடுகிறார்கள்.
நல்ல அரசியல் சார்பு இல்லாத வக்கீல்கள் எல்லாம் அன்னியன் அம்பிகள் மாதிரி ரூல்ஸ் ராமானுஜன்களாக இருந்து தோற்கிறார்கள்.
இன்றிருக்கும் தேதியில் அரசியல் செல்வாக்கு இல்லாத எந்த ஒரு வக்கீலும் தொழில் நடத்தவே முடியாது.
//Most of School drop outs who are ineffectual takes to the profession of constables and become Inspectors or SPs.
//
For the post of constable, minimum edu.qu. is plus two qualifed; for SI, graduation.
No school drop out can enter police force today.
//மனமும், சிந்தனைகளும் ஊனப்பட்ட இப்படியும் ஒரு மக்கள் கூட்டம் இந்த தேசத்துல இருக்குறத நினைச்சு அழுகுறதா, ஆத்திரபடுறதா, வேதனைபடுறாதான்னே தெரியலை. எத்தனை நாளைக்குத்தான் இருட்டறையில இல்லாத பூனைய தேடி கம்ப வீசபோராங்களோ
//
இதற்கு பதில் காமெண்டு இது:
courtesy Krishnmoorthy:
//பதிவுகள் தனது மனதில் சரியெனப் படுவதைப் பதிவு செய்வதற்காகவே! எவரிடமும் நல்லபேர் அல்லது கெட்டபேர் வாங்குவதற்காக இல்லை.
திட்டி எழுதினாலும் சரி, ஆதரித்து எழுதினாலும் சரி, அவரவர் தத்தம் மனநிலை, தரத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள்! அவ்வளவு தான்!
இதைப் புரிந்துகொள்ள சைக்கியாட்ரி படித்துப் பட்டம் பெற்றவராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை!//
வஜ்ராவின் கருத்து ஓரளவுக்குத்தான் சரி. ஆனால் இது சரியல்ல:
//இன்றிருக்கும் தேதியில் அரசியல் செல்வாக்கு இல்லாத எந்த ஒரு வக்கீலும் தொழில் நடத்தவே முடியாது.//
Only criminal cases and civil cases of properties involving big corporate and politically involved corporate houses, are difficult to handle without antogonsing politicos.
But all other cases of torts or civil, and criminal cases involving murders etc. where common people involved, can be handled.
Such cases are in lakhs.
If you are a good lawyer, your life can be busy and you need not bother about politicos.
All professions have two sides: positive and negative.
Since negative attracts attention, we are here talking about it.
How many lawyers of Madras High Court are involved in the episode descibed by Dondu? Every one? No. Only those affliated to some political party, or functioning the name of Human Rights.
Apart from them, there are thousands and thousands of lawyers who are apolitical and who mind their business and still, prosper as lawyers.
'சொட்டை விழுந்துப்போன கூட்டம்' என்று.. என் தலை மாதிரி, அந்த பெரிய கூட்டத்தில் வழுக்கை விழுந்து போச்சாம்.
வழுக்கை இருந்தால் அந்த கூட்டத்தில் அடர்த்தி இருக்காது அல்லவா?
அதை சொட்டை விழுந்து போச்சுன்னு சொல்வார்கள்.
.....
நான் இன்று நேற்றல்ல- 14 வயது முதல் இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
நான் பேசுகின்ற இடத்திலே
பாம்பு விடப்பட்டாலும்,
செருப்பு வீசப்பட்டாலும்,
கல் எறியப்பட்டாலும்
பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
பேசிக்கொண்டே இருப்பேன்.
என்னுடைய கடைசி மூச்சு அடங்குகின்ற வரையிலே-
இதயத்திலே கடைசித் துடிப்பு இருக்கின்ற வரையிலே
பேசிக்கொண்டே இருப்பேன்
‘தேட் இஸ் கருணாநிதி’,
அதாவது, அதுதான் கருணாநிதி
http://www.sivajitv.com/news/karunanidhs-explanation-for-high-court-incidents.htm
CONSTABLE EDUCATION 10th Standard
http://www.tnpolice.gov.in/recruitment.html
On promotion they can become Inspectors and SPs.
//How many lawyers of Madras High Court are involved in the episode descibed by Dondu? Every one? No. Only those affliated to some political party, or functioning the name of Human Rights.//
Every one? Yes .
All those who are silent in not condemning the hooliganism being committed by their colleagues.
//Apart from them, there are thousands and thousands of lawyers who are apolitical and who mind their business and still, prosper as lawyers.//
To me they are more culprits!!
We litigant believe adv are talking up our cause.They strike against litigants!!!
Not even a single day the advocates strike for the delay in disposal of cases!!
In fact they justify the actions stating every institution has degraded and judiciary is no exception.
I wish you are litigant to understand how the litigants are exploited by the advocates.
//
All professions have two sides: positive and negative.
Since negative attracts attention, we are here talking about it.
How many lawyers of Madras High Court are involved in the episode descibed by Dondu? Every one? No. Only those affliated to some political party, or functioning the name of Human Rights.
Apart from them, there are thousands and thousands of lawyers who are apolitical and who mind their business and still, prosper as lawyers.
//
You are talking about the silent majority. The biggest problem everywhere in India is precisely this silence of the majority.
// நீதிபதி சந்துரு முன்னிலையிலேயே சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக முட்டை வீசிய வழக்கறிஞர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பார்களே. அவ்வாறு ஏதும் நடக்கவில்லை அல்லவா?//
சு. சாமியும் மறக்க வேண்டும் . டோண்டுவும் மறக்க வேண்டும் !!
மக்கள் நாசமாக போகட்டும்
-------
....நிகழ்ச்சியை
நானும் மறந்து விடுகிறேன்,
நீங்களும் மறந்து விடுங்கள். வழக்கறிஞர்களும் மறந்து விட்டு
நல்ல வழியை மக்களுக்கு காட்டுங்கள்
என்றார் கருணாநிதி.
http://www.sivajitv.com/news/karunanidhs-explanation-for-high-court-incidents.htm
டோண்டு ஐயா...உங்களுக்கு ரொம்பதான் தைரியம்....
மனதில் பட்டதை சொல்லும் நேர்மை பாராட்டப்படவேண்டியது :)
>>போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.
வேடிக்கை பார்ப்பதற்க்கும் தீவிரவாதிகளையும் ரவுடிகளையும் முட்டிக்கு கீழே சுடுவதார்க்கு கலக்டர்/கமிஷன் அனுமதி வாங்குவதர்க்காக க்யூவில் நிற்பதர்க்ககதன் நமது வரிப்பணம் அவர்களுக்கு சம்பளம்/கிம்பளம் வடிவத்தில் செல்கிறது.
>>இச்சம்பவங்கள் 10 நிமிடத்துக்கும் மேல் நடக்க, முதல்வர் பாட்டுக்கு கருமமே கண்ணாக தன் பேச்சை தொடர்ந்திருக்கிறார்.
ஒரு வாரத்திற்கு பிறகு கழகத்தில் பேசி 'அறிக்கை' ஒன்று விடுவார். தில்லிக்கு புறாத் தூது அனுப்புவார். மிஞ்சிப் போனால் தந்தியோ அல்லது அஞ்சு பைசா தபால் கார்டு அனுப்புவார்.
இந்த செய்தி பற்றி தமிழ்த்தென்றல் இடுகை.
>>>>தங்களது வன்ம முகத்தையே எக்ஸ்போஸ் செய்கின்றனர். செய்யட்டுமே.
இதைப் பற்றிய ஒரு இடுகையையும் சென்னைக் காவல் துறையில் பணிபுரியும் ஒருவர் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்களையும் கீழே உள்ள பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளேன்:
உங்களைப் பற்றியும் அந்த நாதாரி அதில் பிதற்றியிருந்தது.
இணையத்தில் கடுமை காட்டுவோருக்கும்/வலைப் பதிவு பின்னூட்டம் வழியாக பதிவரை/பதிவை கருத்தைத் தாக்கும் மாந்தர்களுக்கு நெருங்குகிறது சுருக்கு
Post a Comment