11/09/2007

சேமிப்பது சரியா, தவறா?

நான் போன ஆண்டு துவக்கத்தில் இட்ட இந்தப் பதிவைப் பார்க்கவும்.

சில நாட்களுக்கு முன்னால் நண்பர் அதியமான அவர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஜப்பானியரின் சேமிக்கும் வழக்கத்தையும், அமெரிக்கரின் செலவு செய்யும் வழக்கத்தையும் குறித்து ஒரு பேராசிரியர் எழுதியதை மேற்கோள் காட்டியிருந்தார். அதை நான் கூகளில் தேட, கிடைத்த பல சுட்டிகளில் ஒன்றில் அதைப் பற்றி மேலே அறியலாம்.

14.11.2007 குமுதம் இதழின் இணைப்பில் சுஜாதா அவர்கள் பணத்துடன் தனது அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சிலவரிகள். "என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன். எப்போதும் தேவைக்கு சற்றே குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக எதிர்ப்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டி விடலாம்". கடைசி வரி தமாஷ் எஃபக்டுக்காகக் கூறியதாகவே கொள்கிறேன். ஏனெனில் பேங்க் பாஸ் புத்தகத்தை திறந்து காட்டுவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவதாகும். மற்றப்படி சுஜாதா கூறுவதில் விஷயம் உள்ளது.

தாம்தூம் என்று செலவழிப்பவர்கள் சேமிக்கும் வழக்கம் உள்ளவரிடம்தான் கடனுக்கு என்று வந்து நிற்பார்கள். அவர்களை எப்படி எதிர்க் கொள்வது? நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்தபோது ஒரு பம்ப் ஆப்பரேட்டர் எல்லோரிடமும் கடன் வாங்குவதையே தொழிலாக வைத்திருந்தார். எல்லோரும் அவர் வந்து கடன் கேட்கும்போதே தங்கள் குறைகளைச் சொல்லி மூக்கால் அழுவார்கள். ஆனால் நான் மட்டும் சற்றே வித்தியாசமாக ரியேக்ட் செய்தேன். என்னிடம் கடன் கேட்டபோது சாதாரணக் குரலில் இல்லை எனக் கூற, அவர் "ஏன் சார் உங்களுக்கும் பணக்கஷ்டமா"? எனக் கேட்க, "நான் அதெல்லாம் இல்லை, ஆனால் உனக்குக் கடன் தர விருப்பமே இல்லை" என்று முகத்திலடித்தது போல கூறினேன். அதுவும் எல்லார் முன்னிலையிலும். அதிலிருந்து அவர் என்னிடம் மட்டும் கடன் கேட்பதில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் உதவுவது வேறு, இம்மாதிரி கடன் கொடுத்து ஏமாளியாவது வேறு.

சரி, பதிவுக்கு வருவோம். சேமிப்பது நல்லதா கெட்டதா? மேலே உள்ள உதாரணங்களில் அது கெட்டது போன்ற தோற்றம் அளிக்கலாம். மற்றவர் கடன் கேட்கும் பிரச்சினை நிச்சயம் உண்டுதான். அதற்காக நாமும் தாம் தூம் என்று செலவு செய்து விடலாமா? நமக்குத்தானே அது கெடுதல்? கடன் கேட்டால் அதை சமாளிக்க ஆயிரம் வழிகள் உள்ளன. சேமித்து நல்லபடியாக முதலீடு செய்தால் அதன் மூலம் அதிக வருமானம் வருமல்லவா? விலைவாசிகள் என்னவோ குறையப்போவதில்லை. செலவுக்கு மேலேயே வருமானம் இருக்குமாறு பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கான முறைகளில் ஒன்றுதான் சேமிப்பின் மூலம் நமது பணமே நமக்காக மேலும் பணம் ஈட்டுவதாகும். இன்னொரு வழி செலவுக்கு மேலே வருமானம் ஈட்ட வேண்டியதுதான் என்பதையும் கூறவேண்டுமோ?

அதற்காக ஒரேயடியாக சேமித்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அவை எந்த அளவில் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை உள்விவகாரம். ஓரளவுக்குமேல் அதில் மற்றவர் தலையீடு இருக்க அனுமதிக்கலாகாது.

எனக்கு 12 வயதாயிருந்த போது, காங்கிரஸ் பொருட்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடவே என் அத்தை பிள்ளையும் (என் மனைவியின் அண்ணன்) வந்தான். எனக்கு என் அம்மா 70 பைசா தந்தார். அவனுக்கு என் அத்தை இரண்டு ரூபாய் தந்தார். அப்போதே டட்ச் ட்ரீட் முறைதான். உள்ளே செல்ல டிக்கட் 12 பைசா. பிறகு இரண்டு சித்திரக் கதை புத்தகம் ஒன்று 12 பைசா வீதம் வாங்கினேன். ஆக 36 பைசாக்கள் செலவு. வெறுமனே பொருட்காட்சியை சுற்றி வந்தேன். கூட வந்த அத்தை பிள்ளையோ அத்தனைப் பணத்தையும் செலவழித்தான். சில சமயம் எனக்கும் சில பொருட்கள் வாங்கித் தர முன்வந்தான். (அவனுக்கு எப்போதுமே தாராள மனசு). ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினோம். போகவர நடை மட்டுமே. என் அம்மாவிடம் பெருமையாக நான் மீதம் பிடித்ததைக் காட்ட அவர் அதை எடுத்து வேறு செலவுக்கு உபயோகித்தார். அதற்காக அவரைக் குற்றம் சொல்ல இயலாது. வீட்டு நிலவரம் அப்படி. ஆனால் அதே சமயம் நான் 70 பைசாவையுமே செலவழித்திருந்தாலும் அவர் ஒன்றும் கூறியிருந்திருக்க மாட்டார்தான்.

இங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. மீதம் செய்தால் இம்மாதிரி கைமீறிப் போவதையும் எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

லேபிளில் தவறாக பொருளாதாரம், விவாத மேடை என்று இருக்கிறது. சரியான லேபிள் : மொக்கை..}}

ரவிஷா said...

சுஜாதா சொல்வதில் எனக்கு உடன்பாடு இருக்கு இல்லை என்பதை விட, அவர் சொல்வது பீலா என்று தான் தோன்றுகிறது!! சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு அவருக்கு ரீனல் ஃபெய்லியர் வந்து தேறினார். மற்றும் பலப்பல உபாதைகள் (ரெடினா, பைபாஸ் இத்யாதி) வந்து மருத்துவம் பார்த்துக்கொண்டார்.. அதற்க்கெல்லாம் ஏது "டப்பு"? அவர் சொல்வதைப் போல இருந்த்திருந்தால் இப்போது அவர் ஒரு "history"...

I think you have a better view point on savings than Sujatha...

dondu(#11168674346665545885) said...

ரவீஷா அவர்களே,

ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் மறக்கிறீர்கள். தனது தேவைகளுக்கு சற்றே குறைவாகத்தான் சேமிப்பு இருக்கும் என்றாரே தவிர, சேமிப்பே இல்லை எனக் கூறிவிடமுடியுமா?

மேலும் அவருக்கு ராமலட்சுமணர் போல இரு பிள்ளைகள். அவர்கள் விட்டுவிடுவார்களா? இவரே மத்திய அரசு கம்பெனியிலிருந்து ரிட்டயர் ஆனவர். அந்த சேமிப்புகள் எல்லாம் இருக்குமல்லவா?

மேலும் இன்னும் பிசியாகத்தானே இருந்து எழுதுகிறார்? அந்த வருமானமும் உண்டல்லவா? அவர் என்ன கஞ்சித்தொட்டி கேஸ் என நினைத்தீர்களா.

அவருடைய ஆப்பரேஷன்கள் எல்லாமே அவருடைய தேவைகள்தான். மெடிகல் இன்ஷூரன்ஸ் வேறு எடுக்காமலா இருந்திருப்பார்?

வாழ்க்கையின் இத்தருணத்தில் பீலா விட்டு சுஜாதாவுக்கு என்ன ஆகப்போகிறது? அவரது வாழ்க்கையில் நடந்த பலவிஷயங்கள் தத்தம் அளவிலேயே பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜ்யோவ்ராம் அவர்களே.

நான் இம்மாதிரித்தான் சில பதிவுகளை ரொம்பவுமே அடக்கி வாசிப்பேன். அவற்றுக்கு வரும் பின்னூட்டங்கள் பல வெற்றிடங்களை நிறைவு செய்யும். இங்கும் அதே காரணம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Mr Dondu, why dont you post an article on various saving methods? It will be useful for everybody, right?

Selvan

dondu(#11168674346665545885) said...

Thanks Selvan.

But as for various types of savings, my methods are very limited in number.

Minds far brighter and sharper than mine in this connection are already active in Thamizmanam running blogs just for that purpose.

See for example:

http://nanayam2007.blogspot.com/2007/11/blog-post.html

http://panguvaniham.wordpress.com/2007/11/11/பங்கு-வணிகம்-1/

Regards,
Dondu N.Raghavan

வழிப்போக்கன் said...

சொப்பன வாழ்வில் மகிழ்ந்தவர்கள், மகிழ்பவர்கள் உண்டு.
ஆனால், நான் சிக்கன வாழ்வில் மகிழ்ச்சி உற்றேன். இன்றும் மகிழ்ச்சி உறுகிறேன்.
உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்பது வாழ்க்கை முழுவதற்கும் வழிகாட்டி என்பது என் அனுபவம்.
முகில்வண்ணன்

வேல்பாண்டி said...

//அவர் என்ன கஞ்சித்தொட்டி கேஸ் என நினைத்தீர்களா. //


கஞ்சித்தொட்டி கேஸ்: இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன சார்?

தஞ்சையில் போன ஆட்சி காலத்தில் விவசாயிகள் பட்ட பாட்டை குறிக்கிறீர்களா?
சுஜாதாவுக்கும் ஏழை விவசாயிக்கு என்ன லிங்க்?
சுஜாதாவுக்காக விவசாயிகளை மட்டம் தட்டி உங்கள் மனத்தழகை காட்டியுள்ளீர்கள். கண்டிக்கிறேன்

- வேல் -

Anonymous said...

லிங்க் இல்லாததுதான் பிரச்சினையே!! சுஜாதா பார்ப்பனர். ஏழை விவசாயி தமிழனாயிற்றே?. டோண்டு அய்யங்கார் அவர்கள் பார்ப்பனரை உயர்த்தி ஏழை தமிழனை மட்டம் தட்டுவதுதானே வழக்கம்?. மற்றும் ஏழை விவசாயி தமிழனுக்காக விவசாய கடன் ரத்து, இலவச மின்சாரம் போன்ற பல நன்மைகள் செய்யும் கலைஞர் அவர்களை மட்டம் தட்டுவதுதானே டோண்டு சாருக்கு அல்வா சாப்பிடுவது போன்றது?!

லக்கிலுக்

dondu(#11168674346665545885) said...

//கஞ்சித்தொட்டி கேஸ்: இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன சார்?

தஞ்சையில் போன ஆட்சி காலத்தில் விவசாயிகள் பட்ட பாட்டை குறிக்கிறீர்களா?
சுஜாதாவுக்கும் ஏழை விவசாயிக்கு என்ன லிங்க்?
சுஜாதாவுக்காக விவசாயிகளை மட்டம் தட்டி உங்கள் மனத்தழகை காட்டியுள்ளீர்கள். கண்டிக்கிறேன்//
பதிவு சேமிப்பதைப் பற்றியது. நீங்கள் எதிர்வினை தந்த பின்னூட்டம் சுஜாதாவை வம்புக்கு இழுத்தவருக்கு பதிலாகக் கொடுக்கப்பட்டது.

மற்றப்படி நீங்களாகவே ஏன் கற்பனை செய்து கொள்கிறீர்கள் வெற்றிவேல் வீரவேல்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

லக்கிலுக்கின் பெயரில் வந்த அனானியே,

கலைஞர் அது மட்டுமா செய்தார்? மக்கள் வரிப்பணத்தில் டிவி செட்டுகள் கொடுத்தார். விவசாயிகள் கடன்களையும் வர்ஜா வர்ஜாமில்லாமல் பணக்கார விவசாயிக்கும் கூட ரத்து செய்தார். மதுரையில் மூன்றுபேர் கொல்லப்பட்ட துக்கம் ஒரு புறம் இருக்க தனது இன்னும் ஐம்பதாண்டுகள் ஆகாத சாதனை குறித்து விருதுகள் பெற்றார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

திரு. டோண்டு ராகவன் சார்!

அனானியாக லக்கிலுக் என்ற பெயரில் பின்னூட்டம் போடுவதோ நீங்களோ அல்லது உங்களுடைய அல்லக்கைகளில் யாராவதாகவோ இருக்கலாம். நான் பின்னூட்டம் போடுவதாக இருந்தால் என்னுடைய சொந்தப் பெயரிலேயே போடுவேன். என் பின்னூட்டம் ஒரிஜினலா என்பதை எலிக்குட்டி, புகைப்பட சோதனை மூலம் நீங்கள் அறியலாம்.

அதைவிடுத்து இதுபோல மலிவான பின்னூட்டங்களை என் பெயரில் உங்களுக்கு நீங்களோ அல்லது உங்கள் அல்லக்கைகளை போட அனுமதிப்பதின் மூலமோ உங்கள் தரத்தை நீங்களே ரொம்பவும் குறைத்துக் கொள்கிறீர்கள். ஏற்கனவே உங்கள் தரம் என் அனுமானத்தின் மைனஸில் தான் இருக்கிறது.

நன்றி!

dondu(#11168674346665545885) said...

லக்கிலுக்,

நானே குறிப்பிட்டாகி விட்டது அது நீங்கள் இல்லை என்று. மற்றப்படி லக்கிலுக் பெயர் ஒன்றும் உங்கள் காப்பிரைட் இல்லை.

ஆகவே அவரது பின்னூட்டம் ஆன் மெரிட்டில் டீல் செய்யப்பட்டு அதற்கு பதில் போடப்பட்டது.

மற்றப்படி நீங்கள் போலி டோண்டுவின் அள்ளக்கை என்பதை தமிழ்மணமே அறியும். ஆகவே உங்கள் மதிப்பீட்டில் நான் தாழ்ந்துதான் இருப்பேன், ஏனெனில் அதுதான் உங்கள் எஜமானர் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார் என்பதும் தெரியும்.

நீங்கள் என்னைத் திட்டி வரும் வசவுகளை உங்கள் பதிவில் அனுமதித்துள்ளீர்கள். அதற்கு என்ன செய்யலாம்?

டோண்டு ராகவன்

Anonymous said...

//இங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. //

நூற்றில் ஒரு வார்த்தை! அனுபவம் மட்டுமே இதை புரியவைக்கும்! அது புரியும் போது பல பேருக்கு காலம் கடந்திருக்கும், என்ன செய்வது?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது