எனது கார் வீட்டிலிருந்து கிளம்பும் சமயம் டி.பி.ஆர். ஜோசஃப் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. பார்வதி மினி ஹாலில் சந்திப்பு நடப்பதை உறுதி செய்து கொண்ட அவர் தானும் வரப்போவதாகக் கூறினார். எனது கார் பார்வதி ஹாலை அடைந்த போது மணி சரியாக 5.30. உள்ளே ஏற்கனவே ஜிங்காரோ ஜமீன் என்னும் தினேஷ், சோமன், பாலபாரதி, முரளி கண்ணன், வினையூக்கி, பைத்தியக்காரன், உண்மைத்தமிழன், ஆசிஃப் மீரான், நந்தா, சங்கரபாண்டி, லக்கிலுக், ஜே.கே., தமிழ்சசி மற்றும் இளா வந்திருந்தனர்.
எனக்கு பிறகு வந்து சேர்ந்தவர்கள் செல்வம், இகாரஸ் பிரகாஷ், லிவிங்க் ஸ்மைல் வித்யா, அதிஷா, ஆடுமாடு தன் நண்பர் மீரானுடன், மருத்துவர் ப்ரூனோ, பளபள யூல் ப்ரின்னர் மொட்டையுடன் இளவஞ்சி, ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி, டி.பி.ஆர். ஜோசஃப், பத்ரி, வழக்குரைஞர் சுந்தரராஜன், சுகுணாதிவாகர், ஆழியூரான் ஆகியோர்.
மைக் அரேஞ்ச் செய்யப்பட்டவுடன் பாலபாரதி எல்லோரையும் வரவேற்று சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டினார்.
தமிழ்மண நிர்வாகிகளை நோக்கி கேள்விகளை வினையூக்கி ஆரம்பித்து வைத்தார். பதிவர் விருது வழங்கும் திட்டம் எந்தளவில் நிற்கிறது என்பதைப் பற்றி கேட்டார். பதிலளித்தவர் சங்கரபாண்டி. அவர் கூறியதாவது: விருதுகள் வழங்கும் முறையை இன்னும் முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வரக்கூடும் என்றார்.
பதிவுகளை வகைப்படுத்தலை பற்றி கேள்வி கேட்டார் பைத்தியக்காரன். ஆன்மீகம் மற்றும் இலக்கியம் ஆகியவை ஒரே லேபலின் கீழ் வருவது பற்றி கேட்டார் அவர். மேலும் பலரும் இக்கேள்வியை வெவ்வேறு தருணச்த்தில் கேட்டனர். இதற்கு பதிலளித்த தமிழ்சசி அவர்கள் இந்த வகைபடுத்தலே மொத்தமாக நீக்கப்படும் தருவாயில் உள்ளது என்றார்.
பூங்கா பற்றி லக்கிலுக் கேட்டதற்கு, அது அதிகவேலை வாங்கும் விஷயம் என்றும், சீக்கிரமே ஒருங்கிணைக்கப்படும் என்றார் தமிழ்சசி.மேலும் அமெரிக்க விதிகளின்படி இன்னும் பல வேலைகள் செய்யவேண்டியதுள்ளன என்றும் கூறினார். பூங்கா பர்றி பாலபாரதி பேசுகையில் பூங்கா தேர்வுக்கென்றே சம்பந்தப்பட்ட பதிவுகளை தெரிவு செய்ய தனி பட்டனை தமிழ்மண கருவிப்பட்டையில் போட இயலுமா எனக்கேட்டார். அப்படி பூங்கா நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டால் அதில் வரவேண்டுமென்பதற்காகவே பலர் நல்ல பதிவுகளை எழுதுவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஐகாரஸ் பிரகாஷ் பேசுகையில் தமிழ்மணம் செர்வர் பழுதுபட்டால் அது பற்றி தெரிவிக்க சிலரை டெப்யூட் செய்யலாம் என ஆலோசனை கூறினார். அப்படி எம்மாதிரி தன்னார்வலரைச் சேர்த்தாலும் அவருக்கும் தமிழ்மணத்தில் அதிகார பூர்வ ஸ்தானம் தரவேண்டும் என்று சங்கரபாண்டி கூறினார். தமிழ்மணத்தில் சேர்க்காமல் இருக்கும் ஆப்ஷனில் டிக் செய்தாலும் அது சேர்க்கப்பட்டுவிடுவதாக பாலபாரதி கூறினார். பூங்காவில் நகைச்சுவை பதிவுகளை சேர்க்காதது பற்றி சாத்தான் குளத்தான் கேட்டார். தெரிவில் ஒட்டுமொத்தமாக இல்லாது வகைக்கு ஒவ்வொன்றாக தெரிவு செய்தால் இக்குறை இருக்காது என சங்கரபாண்டி கூறினார். பூங்கா வருவதற்கான டைஃப்ரேம் கேட்டார் சாத்தான்குளத்தான். இவ்வாண்டு முடிவில் என பதிலளித்தார் தமிழ்சசி.
இவ்வார நட்சத்திரம் ஜே.கே. அவர்கள் நிர்வாகக் குழு மற்றும் தொழில்நுட்பக்குழு என தனித்தனியே உள்ளனவா என கேட்க ஆம் என்ற பதில் வந்தது. தமிழ்மணத்தில் முன்னேற்றத்துஇக்கான யோசனை கூற வழிசெய்யுமாறு மருத்துவர் ப்ரூனோ கேட்டார். தமிழ்மண விவாஹ்டதளத்தைப் பற்றி வினையூக்கி கேட்க, அது எடுக்கப்பட்டுவிட்டது என பதில் வந்தது. நிர்வாகி பதிவு எழுதக்கூடாது என்று கட்டுப்பாடு உண்டா எனக்கேட்க, அப்படியெல்லாம் இல்லை என பதில் வந்தது. வழக்கறினர் சுந்தரராஜன் அவர்கள் தனது மக்கள் சட்டம் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை எனக் கூறியதற்கு அதை கவனிப்பதாக பதில் வந்தது.
பின்னூட்ட உயரெல்லை மீண்டும் வேண்டும் என லக்கிலுக் கூறினார். தற்காலிகமாகத்தான் அது நீக்கப்பட்டிருப்பதாக பதில் கூறப்பட்டது. ஏனெனில் 40 ப்ளஸ், 40 வரை என்றெல்லாம் வைப்பதால் தமிழ்மணப் பக்கம் திறக்க நேரமாகிறது என்று கூறப்பட்டது. இம்மாதிரி உயரெல்லையெல்லாம் காரியத்துக்காகாது என்று நான் கருத்து தெரிவித்தேன். மறுமொழியப்பட்ட பதிவுகள் இற்றைப்படுவது ஒரு ரெகுலரான செய்கையாக இல்லை என்றும், சில சமயம் எனது மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் சம்பந்தமேயின்றி சில நாட்களுக்கு பிறகு இற்றைப்படுவதை நானே கண்டதையும் கூறினேன். அதையும் கவனிப்பதாகக் கூறப்பட்டது.
ரொம்ப நாளைக்கு பிறகு சந்தித்த ஜோசஃப் அவர்களுடன் சிறிது நேரம் பேசினேன். அவர் தனது வங்கிவேலை பற்றி பேசினார். புது ஆட்களை எடுப்பது பல ஆண்டுகளாக இல்லாதது ரொம்ப பிரச்சினைகளை உண்டு பண்ணுவதாகக் கூறினார். அவரது "நாளை நமதே" மற்றும் :சூர்யா" கதைகள் திடீரென நட்டாற்றில் கைவிடப்பட்ட தோற்றம் தந்ததைக் குறிப்பிட்டு கேட்டேன். சில காரணங்கள் என சுருக்கமாகக் கூறினார். அதே போல அவரது 'திரும்பிப் பார்க்கிறேன்' தொடரும் பம்பாய் வந்ததும் நின்றது பற்றியும் பேசினோம்.
சற்று நேரத்தில் டீயும் பிஸ்கட்டும் வர எல்லோரும் அதை ஒருகை பார்த்தனர். மணி 7.30 ஆகிவிட்டது. என் நண்பன் மகன் கல்யாண ரிசப்ஷனுக்கு போக வேண்டியிருந்ததால் விடை பெற்று கொண்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
18 hours ago
14 comments:
'வீட்டிலிருந்து கார் கிழம்பிய பிறகு பெட்ரோல் போட போனேன். இல்லேன்னுட்டாங்க' அப்படிங்கறது விட்டுடேலே.
சார் சூப்பர் .......
என்ன பாஸ்ட்
இது குறித்த என் இடுகை இங்குள்ளது
http://payanangal.blogspot.com/2008/06/15-06-2008.html
//பின்னூட்ட உயரெல்லை மீண்டும் வேண்டும் என லக்கிலுக் கூறினார். தற்காலிகமாகத்தான் அது நீக்கப்பட்டிருப்பதாக பதில் கூறப்பட்டது. ஏனெனில் 40 ப்ளஸ், 40 வரை என்றெல்லாம் வைப்பதால் தமிழ்மணப் பக்கம் திறக்க நேரமாகிறது என்று கூறப்பட்டது. இம்மாதிரி உயரெல்லையெல்லாம் காரியத்துக்காகாது என்று நான் கருத்து தெரிவித்தேன்.//
அப்பாடா.. வந்ததுக்கு உருப்படியா ஒரு நல்ல காரியம் செஞ்சிருக்கீங்க ஸார்.. நன்றிகள்..
எனக்கும் இந்த வாதம் பிடிக்கவில்லை. சில நேரங்களில் சில பதிவுகளில் பதிவுகளைவிட பின்னூட்டங்களில்தான் நிறைய விஷயங்கள் தெரிய வருகின்றன. வாதங்கள் அதிகமாகி கொண்டிருக்கும்போது சில புதிய நல்ல தகவல்கள் கிடைக்கின்றன. அதை நாம் இழந்துவிடக்கூடாது..
உதாரணம் தமிழ்மணி என்ற பதிவர் எழுதிய பெட்ரோல் விலை உயர்வு பற்றிய கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்..
//எனது கார் வீட்டிலிருந்து கிளம்பும் சமயம்//
நாங்க ஒத்துக்றோம் சார்..நீங்க எப்பவுமே கார்ல தான் போவிங்க கார்ல தான் வருவிங்க...அதுகாக ஒவ்வொரு தமிழ்ப்பதிவர் சந்திப்பின் போதும் நீங்க கார்ல வரதை சொல்வது ரொம்ப அல்பமா (மண்ணிக்கவும்) இருக்கு.
Still இது உங்க பதிவு நீங்க என்ன வேனும்னாலு எழுதலாம்... சொல்ல்லனும்னு தோனிச்சு சொன்னேன் அவ்வளவு தான்
//இது உங்க பதிவு நீங்க என்ன வேணும்னாலும் எழுதலாம்...//
அது!!!
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார்,
அவரது "நாளை நமதே" மற்றும் :சூர்யா" கதைகள் திடீரென நட்டாற்றில் கைவிடப்பட்ட தோற்றம் தந்ததைக் குறிப்பிட்டு கேட்டேன். சில காரணங்கள் என சுருக்கமாகக் கூறினார். //
சூரியன், நாளை நமதே தொடர்கள் நிச்சயம் மீண்டும் தொடரும். நேரம் இல்லை என்பதால்தான் அவற்றை தாற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழல்.
நீண்ட நாட்களூக்குப் பிறகு வலைப்பதிவர்களுடைய கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. கூட்டத்தி கலந்துக்கொண்ட பல இளம் பதிவர்களுடைய பேச்சைக் கேட்டபோது சற்று பொறாமையாகவே இருந்தது. நன்கு எழுதத் தெரிந்திருப்பதுடன் பேசவும் தெரிகிறது. அதுவும் தூய தமிழில் சரளமாக பேசுவது இன்றைய பல இளைஞர்களுக்கு கைவந்த கலை.
1.நெல்லை மாவட்டதிலுள்ள பிரசித்திபெற்ற அருவிகளில் நீராடிய அனுபவம் உண்டா?
2.திருக்குற்றால அருவிகளின் தங்களை மெய்சிலிர்க்க வைத்த அருவி எது?
3.பிரமுகர்களுக்கான பழ்த்தோட்ட அருவி சென்றதுண்டா?
4.காரையார் அணைக்ககு மேலே உள்ள "பம்பாய்" திரைபட புகழ் ( சின்ன சின்ன ஆசை)பாணதீர்த்த அருவி பார்த்த்ருக்கிறிர்களா?
5.சென்னை வெயில் பழ்கி விட்டு, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் வீசும் மென்மையான தென்றல் காற்றின் அனுபவம் எப்படி?
ஐயா,
என்னுடைய வலைப்பூவை பார்த்து அதை மேன்மைபடுத்த ஆலோசனை வழங்குகள்...விஜய்-கோவை
http://pugaippezhai.blogspot.com
விஜய் அவர்களே,
உங்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம்:
ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமமே. ஒத்து கொள்கிறேன். ஆனாலும் அனியாயத்துக்கு சொற்களே இல்லையென்றால் எப்படி?
உதாரணத்துக்கு இந்த அளவு சாப்பாடு பதிவானது அரசு ஆணையால் வரும் அளவு சாப்பாட்டைப் போலவே வயிற்றுக்கு காணாது உள்ளது. இந்த ஆணையை ஒத்து கொள்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்பதையெல்லாம் எழுதினால்தானே பின்னூட்டங்களுக்கு தோதுப்படும்?
அம்பானிக்கு தண்ணி காட்டிய பூமி சரிதான். ஆனால் அதன் பின்னணி என்ன என்பதையும் எழுத வேண்டும்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமமே. ஒத்து கொள்கிறேன். ஆனாலும் அனியாயத்துக்கு சொற்களே இல்லையென்றால் எப்படி? //
டோண்டு சாரின் அறிவுரைக்கும் அன்புக்கும் நன்றி.
தங்களின் அலோசனைப்படி எனது முதல் பதிவை இன்று மாலைக்குள் பதிய விழைகிறேன்.
சிறு முன் குறிப்பு:
பண்பாடு மற்றும் கலாச்சார தலைநகராம்
கொங்கு மண்டல கோவையில் நடத்துனாராய் பணியாற்றும் இயற்கை சுற்று சுழல் போராளி பற்றிய பதிவு.
என்றும்
விஜய்
கோவை.
1.1952 லிருந்து 2008 வரை இருந்த/இருக்கும் தமிழக முதல்வர்களில் முதன்மையானவர் யார்? காரணம்?
2.அவர்களை திறமை,நிதி நிர்வாகம்,மக்கள் நலம்,நேர்மை இவகளின் அடிப்படையில் தர வரிசைபடுத்தவும்.
3.யாருடை காலத்தில் மக்கள் ஒரளுவுக்கு சுபிட்சமாக இருந்தார்கள்?
4.அரசின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யாமல் ஆண்ட/ஆளும் பிற சக அமைச்சர்களில்( 1952 டூ 2008) முதல்,இரண்டாம்,மூன்றாம் பரிசு யாருக்கு?
5.கட்சி வேறு ஆட்சி வேறு மக்கள் நலமே என் பணி என 100/100 மார்க் யாருக்கு?( முதல் வர்களில் முதல்வர் யார்?-பாரபட்சமற்ற போக்குடன்)
6.பதவியில் இருந்தாலும் சாதி இரண்டொழிய வேறில்லை என்று அனைவரையும் சமமாக பாவித்தவர்களில் சத்யவான் யார்?
7.முதல்வராய் கோலோச்சி பின் மறைந்தும் மறையாமல் வாழ்பவர் யார்?
8.தமிழ்கம் யாருடைய காலத்தில் உண்மையான பொருளாதார வளர்ச்சியில் திளைத்தது?
9.பத்திரிக்கை சுதந்திரம் இருக்கிறது ஆனால் இல்லை. இந்த புண்ணியத்தை முதலில் தொடங்கி வைத்தது யார்?
10.அரசியல் கட்சிகளில் ஜாதி ஆதிக்கம் இருந்த போதும் முதல்வர்கள் தேர்வில் அது இருப்பதில்லயே?எப்படி?
-பாண்டிய நக்கீரன்
டோண்டு ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
அடுத்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதிகிறேன்.
என்றும் பணிவன்புடன்,
விஜய்
கோவை
என்ன ?? திரும்பி பார்க்கிறேன் டி.பி.ஆர் சோசப் சார் வந்தாரா ?
ரொம்ப நாளா திரும்பியே பார்க்காதவராச்செ :)))
உங்கள் நினைவலைகளில் இருந்து அற்புதமாக எடுத்து சொல்லியிருக்கிறீர்கள்...
இவ்வளது தூரம் கேள்விகளை கூட நினைவில் வைத்து சொல்லும் உங்கள் நியாபக சக்தி வியக்க வைக்கிறது !!!!
Post a Comment