6/11/2008

நான் தற்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியைத்தான் ஆதரிக்கிறேன்

உண்மையைக் கூறவேண்டுமானால் நான் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல்களில் எப்போதுமே ரிபப்ளிகன் கட்சியைத்தான் ஆதரிக்கிறேன் என்றுதான் தலைப்பை வைத்திருக்க வேண்டும்.

அது என்னவோ தெரியவில்லை, நான் பார்த்தவரை ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்களது ஆட்சியின் கீழ்தான் அமெரிக்கா நன்கு முன்னேறியிருக்கிறது. ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முக்கியக் காரணங்களுள் அவர் தனது நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதே. அப்படிப் பார்த்தால் அமெரிக்காவில் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள் கீழ்தான் அது அதிகம் நடந்துள்ளது.

டெமாக்ரடிக் குடியரசுத் தலைவர்கள் என்னைப் பொருத்தவரை விளக்கெண்ணெய்களே. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பார்த்து வருகிறேன். ஃப்ராங்ளின் ரூஸ்வெல்டைத் தவிர்த்து வேறு எந்த டெமாக்ரடிக் தலைவரும் தேறவில்லை. தனது முயற்சியால் உருவாக்கிய லீக் ஆஃப் நேஷன்ஸில் அமெரிக்காவை சேர்க்கக் கூட உட்ரோ வில்சனால் முடியவில்லை. ரூஸ்வெல்டும் ட்ரூமனுமாக ரஷ்யாவிடம் சரியாக பேரம் பேச இயலாது ஐரோப்பாவின் கணிசமான பகுதியை கம்யூனிஸ்டுகளிடம் கோட்டை விட்டனர். அமெரிக்காவின் ஜன்ம விரோதியான கம்யூனிசத்தை ரிபப்ளிக்கன்கள் எதிர்த்த அளவு டெமாக்ரேட்டுகள் செயல்படவில்லை. இந்தியர்கள் இவ்வளவு விதந்தோதும் ஜான் கென்னடி மாஃபியாவுடன் வைத்திருந்த தொடர்புகள், அவரது மன்மத லீலைகள் ஆகியவை அவர் காலமானதற்கு பின்னால் வெளிவந்தன.

சமீபத்தில் 1964-ல் ரிபப்ளிக்கன் வேட்பாளர் கோல்ட்வாட்டர் தேவையானால் வட வியட்னாம் மேல் குண்டுகளும் வீசலாம் என்றார். லிண்டன் ஜான்ஸனோ வியட்னாம் யுத்தத்தை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப் போவதாக எலெக்‌ஷன் மீட்டிங்குகளில் கூறி வந்தார். இப்போது இந்த ஒபாமா ஈராக் யுத்தத்தைப் பற்றிப் பேசுவதுபோல என வைத்து கொண்டால் தவறில்லை. ஜான்ஸன் வெற்றி பெற்றார். ஆனால் என்னாயிற்று? ஜான்ஸன் காலத்தில்தான் யுத்தமே கடுமை அடைந்து, 1968 துவக்கத்தில் டெட் தாக்குதல் நடந்து அமெரிக்காவின் மானமே கப்பலேறியது. அடுத்து வந்த நிக்ஸன்தான் வியட்னாமிய யுத்தத்தை முடித்து வைத்தார். நிக்ஸன் தவறே செய்யவில்லை எனக் கூற மாட்டேன். ஆனால் அவர் அமெரிக்காவின் நலன்கள் எனக் கருதுவதில் விட்டுக் கொடுக்காமல் இருந்தார். நிக்ஸனைப் பற்றி பல ஜோக்குகள் இருந்தாலும், வெளியுறவு விவகாரங்களில் ஒரு ஜோக்கும் அவரைப் பற்றி இல்லை என்பதை நிக்சனை மிகவும் எதிர்த்த பத்திரிகையாளர்களே கூறியுள்ளனர். வாட்டர்கேட் விவகாரம் கூட மற்றப் பல நாடுகளில் அக்காலக் கட்டங்களில் நடந்த அதிகார துஷ்பிரயோகங்களின் முன்னால் வெறும் சாதாரண மேட்டர்தான்.

டெமாக்ரடிக் குடியரசுத் தலைவர்கள் காலத்தில் அமெரிக்காவின் உதவிகளைப் பெற்றுக் கொண்டே அதை ஐ.நா. சபையில் எதிர்த்து ஓட்டளித்தன பல தேசங்கள். இந்தியாவும் அதில் ஒன்று. ரீகன் காலத்தில் அமெரிக்காவின் தூதுவராக ஐ.நா.வுக்கு வந்த ழான் கிர்க்பாட்ரிக் உதவி பெறும் நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் கடிதம் எழுதினார். அதில் அமெரிக்காவை இவ்வளவு எதிர்க்கும் அவர்களுக்கு அமெரிக்கா ஏன் உதவிகளை நிறுத்தக் கூடாது என்ற கேள்வி கேட்கப்பட்டது. பதறிப் போயினர் தலைவர்கள். பல சமாதானங்களை தத்தம் பதில்களில் கூறினர். ஆனால் சூடுபட்ட பூனைகளாக அமெரிக்க எதிர்ப்பை அடக்கி வாசித்தனர்.அதன் பிறகுதான் அமெரிக்கா தன் பலம் உணர்ந்து நடக்க ஆரம்பித்தது. ஈரானில் பயணக்கைதிகளை மீட்க வக்கில்லாது கார்ட்டர் நிர்வாகம் கையைப் பிசைந்தது. ரீகன் வந்து அம்மாதிரியான விளக்கெண்ணெய் வேலைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார்.

சோவியத் யூனியனை போண்டியாக்கி, அதன் பலத்தை குறைத்தவரும் ரீகனே. அதன் பலனாய் 1990-ல் கிழக்கு ஜெர்மனியும், 1991-ல் சோவியத் யூனியனும் உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஈராக்கை தனிமைப் படுத்தி சதாம் ஹுசைனின் பல்லைப் பிடுங்கியது ஜார்ஜ் புஷ்தான். பிறகு வந்த டெமாக்ரடிக் குடியரசுத் தலைவர் க்ளிண்டன் மிகக் கேவலமான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, இம்பீச் ஆகும் அளவுக்கு போனார். அழமாட்டாக் குறையாய் தன் மனைவியின் காலில் விழுந்து, பிழைத்துப் போ என்ற அளவில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இம்பீச்மெண்டால் பதவி போகாமல் தப்பினார். இது வரை இம்பீச் செய்யப்பட்ட இரண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர்களுமே டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். நிக்ஸன் இம்பீச்மெண்ட் ப்ராசஸ் ஆகும்போதே ராஜிநாமா செய்து, அடுத்து வந்த ஜனாதிபதியின் மன்னிப்பையும் பெற்றார் என்பது உண்மையானாலும், நான் ஏற்கனவே மேலே கூறியபடி வாட்டர்கேட் விவகாரம் க்ளிண்டன் செய்த குற்றத்தின் எதிரில் ஒன்றுமேயில்லை என்றுதான் கூற வேண்டும்.

இப்போது ஒபாமாவையே எடுத்து கொள்வோம். இரண்டே இரண்டு ஆண்டுகள்தான் அமெரிக்காவில் செனட்டராக இருந்திருக்கிறார். அவரது ரிகார்டுகள் அதிகம் இல்லை. ஆனால் அவரது ஆதரவாளர்கள் சர்ச்சைக்குரியவர்கள். அது தெரிந்து தற்சமயம் அவர்களைத் தவிர்த்து வருகிறார். தான் எலெக்ட் ஆனால் அவர்களைத் திரும்ப அழைத்து கொள்ள மாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இஸ்ரேல் விஷயத்தில் அவரது நிலைப்பாடு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. இந்த டோண்டு ராகவனைப் பொருதவரை அது ஒன்றே போதும் அவரை எதிர்ப்பதற்கு. கூடவே டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

62 comments:

Anonymous said...

//இந்த டோண்டு ராகவனைப் பொருதவரை அது ஒன்றே போதும் அவரை எதிர்ப்பதற்கு.//

:)) thank god they will not ask your opinion before electing -old friend

dondu(#11168674346665545885) said...

//:)) thank god they will not ask your opinion before electing -old friend//
நிச்சயமாக. அதே சமயம், அமெரிக்க தேர்தலைப் பற்றி எழுதப்போகும் எந்த இந்தியப் பதிவரையுமே அமெரிக்கர்கள் கண்டு கொண்டு கேட்க போவதில்லை என்பதும் உண்மைதானே. அதில் எனக்கும் சந்தோஷமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

>>>ரீகன் வந்து அம்மாதிரியான விளக்கெண்ணெய் வேலைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார்.>>

அவர் ஒன்றும் அதிரடியாக முற்றுப்புள்ளி வைக்கவில்லையே! Iran-Contra விவகாரம்தான் சந்தி சிரித்ததே!

ஒபாமா செனட்டர் ஆகி மூணரை வருஷம் ஆச்சு. இரண்டல்ல.

Ravi

bala said...

டோண்டு அய்யா,

ஆனாக்க, இந்தியாவுக்கு எதிரா பாகிஸ்தானையும் உசுப்பிவிட்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததும் ரிபப்ளிகன் கட்சி தான்.சோவியத் கம்யூமிஸ்ட்களை ஒழிக்கிறேன் என்று சொல்லி விட்டு சீன கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவா கை கொடுத்து சீனாவின் நிலையை உயர்த்தியதும்,இந்தியாவுக்கு எதிராக சீனா நடந்துகொள்வதை ஆதரித்ததையும் தீவிரமாக செய்தது இவங்க தான்.பாகிஸ்தான் மூலமாக ஒரு மாபெரும் ஜிகாதி ஃபாக்டரியையே உருவாக்கி சோவியத்யூனியனை அழித்ததும்,இந்தியாவுக்கு தீரா தலைவலியாக இந்த ஜிகாதி இன்ஃப்ராஸ்ரக்சரை அமைத்துக் கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டவர்களும் ரிபப்ளிகன் கும்பலே.இந்த கொள்கை இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.என்னைக் கேட்டால், ஒட்டு மொத்தமாக கம்யூனிஸம் ஒழிக்கப்பட வேண்டிய சமாசாரம் தான் என்றாலும்,சோவியத் கம்யூனிஸ வெறியர்களை விட, சீன கம்யூனிஸ்ட் கும்பல் இன்னும் கேவலமான வெறியர்கள்.இவர்களை ஆதரித்ததையும்,டாலிபானை ஆதரித்ததையும் கொள்கையாக வைத்திருந்தது ரிபப்ளிகன் கும்பல் செய்த அநியாயம் மட்டுமல்ல,அந்த கொள்கை அவர்களுக்கே ஆப்பு வைத்தது 9/11 மூலமாக.
ஆனாலும் தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு ஓரளவு சாதகமான வெளி உறவுக் கொள்கையை,டெமாக்ரட்ஸ் கட்சியை விட, ரிபப்ளிகன் கட்சி கடைப்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.டெமாக்ரட்ஸ் கொஞ்சம் சொதப்பல் பேர்வழிகள் தான்.நம்ப முடியாதவர்கள், நம்ம காங்கிரஸ் கும்பலைப் போல.

பாலா

dondu(#11168674346665545885) said...

//Iran-Contra விவகாரம்தான் சந்தி சிரித்ததே!//
இருக்கட்டுமே, சோவியத் யூனியன் என்னும் தீய சக்தியை வீழ்த்துவதற்கான மரண அடியைத் தந்தாரே.

//ஒபாமா செனட்டர் ஆகி மூணரை வருஷம் ஆச்சு. இரண்டல்ல//.
அதனால் என்ன, அதனால் அவர் கத்துக் குட்டி என்பது இல்லாமல் போகிறதா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//உண்மையைக் கூறவேண்டுமானால் நான் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல்களில் எப்போதுமே ரிபப்ளிகன் கட்சியைத்தான் ஆதரிக்கிறேன்//

அங்க கூட உங்களுக்கு ஓட்டுரிமை இருக்குதா

வால்பையன்

வால்பையன் said...

//நான் பார்த்தவரை ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்களது ஆட்சியின் கீழ்தான் அமெரிக்கா நன்கு முன்னேறியிருக்கிறது.//

அவங்கள கொண்டு வந்து இந்தியாவுல உட்ருவோமா

வால்பையன்

வால்பையன் said...

/அவர் தனது நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதே. அப்படிப் பார்த்தால் அமெரிக்காவில் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள் கீழ்தான் அது அதிகம் நடந்துள்ளது. //

இந்தியாவில விருது கொடுக்கரதுக்கும், விருந்துல கலந்துகரதுக்கும் தான் ஜனாதிபதின்னு சொன்னாங்க

வால்பையன்

வால்பையன் said...

//டெமாக்ரடிக் குடியரசுத் தலைவர்கள் என்னைப் பொருத்தவரை விளக்கெண்ணெய்களே. //

அது கூட விளக்கெரிக்க ஆவுமே, இங்கே அது கூட இல்லையே

வால்பையன்

வால்பையன் said...

//இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பார்த்து வருகிறேன்.//


ரொம்ப சமீபத்துலன்னு சொல்லுங்க

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

//சோவியத் கம்யூனிஸ வெறியர்களை விட, சீன கம்யூனிஸ்ட் கும்பல் இன்னும் கேவலமான வெறியர்கள்.//

சீனாவிலேயே கம்யூனிசத்துக்கு மரண அடி கிடைத்ததா இல்லையா? அங்கு இப்போது இருப்பது முதலாளித்துவம்தானே. கம்யூனிசம் திவாலா ஆனதற்கு இன்னொரு எடுத்து காட்டு சீனாவும்தானே.

நான் மறுபடியும் கூறுகிறேன். எனது இப்பதிவே ஒரு சராசரி அமெரிக்கனாக என்னை கற்பனை செய்து அவன் எவ்வாறு வோட் செய்வான் என்பதை ஊகிப்பதற்குத்தான்.

இந்தியா இங்கு பிக்சரிலேயே இல்லை.

அவ்வாறு செய்தால் பெட்டர் சாய்ஸ் ரிபப்ளிகன் கட்சிதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//இந்தியர்கள் இவ்வளவு விதந்தோதும் ஜான் கென்னடி மாஃபியாவுடன் வைத்திருந்த தொடர்புகள், அவரது மன்மத லீலைகள் ஆகியவை அவர் காலமானதற்கு பின்னால் வெளிவந்தன. //

அவர பத்தி தப்ப பேசாதிங்க அவரு தான் எங்களுக்கு குரு

வால்பையன்

வால்பையன் said...

//சமீபத்தில் 1964-ல் ரிபப்ளிக்கன் வேட்பாளர் கோல்ட்வாட்டர் தேவையானால் வட வியட்னாம் மேல் குண்டுகளும் வீசலாம் என்றார்.//

அவர கேட்ட மறந்து போச்சுன்னு சொல்லுவார்,

வால்பையன்

வால்பையன் said...

//லிண்டன் ஜான்ஸனோ வியட்னாம் யுத்தத்தை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப் போவதாக எலெக்‌ஷன் மீட்டிங்குகளில் கூறி வந்தார்.//

நம்ம காவேரி பிரச்சினை மாறின்னு சொல்லுங்க

வால்பையன்

Raveendran Chinnasamy said...

President Regan may be great but Current BUSH regime has done damage than other Dem Presidents .

Obama will provide sensible security to the world instead of waging war against IRAN and others .

Hope next 4 years your thoughts will change

வால்பையன் said...

// நிக்ஸனைப் பற்றி பல ஜோக்குகள் இருந்தாலும்,//

ஒன்னு ரெண்டு சொன்ன நாங்களும் சிரிப்போம்ல

வால்பையன்

வால்பையன் said...

//டெமாக்ரடிக் குடியரசுத் தலைவர்கள் காலத்தில் அமெரிக்காவின் உதவிகளைப் பெற்றுக் கொண்டே அதை ஐ.நா. சபையில் எதிர்த்து ஓட்டளித்தன பல தேசங்கள்.//

என்ன மாதிரி உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிட்டு அமெரிக்காவுக்கு பொட்டி தட்டுறது சரி தானே

வால்பையன்

bala said...

// //சோவியத் கம்யூனிஸ வெறியர்களை விட, சீன கம்யூனிஸ்ட் கும்பல் இன்னும் கேவலமான வெறியர்கள்.//

சீனாவிலேயே கம்யூனிசத்துக்கு மரண அடி கிடைத்ததா இல்லையா? அங்கு இப்போது இருப்பது முதலாளித்துவம்தானே. கம்யூனிசம் திவாலா ஆனதற்கு இன்னொரு எடுத்து காட்டு சீனாவும்தானே.//

டோண்டு அய்யா,

கம்யூனிசத்துக்கு மரண அடி காலத்தின் கட்டாயம்.மக்கள் கொஞ்சம் படித்து, ஓரளவுக்கு விவரம் புரிந்து கொண்டவர்களாக ஆகி விட்டால் கம்யூனிசம் ஒழிந்து விடும்.நம் நட்டிலும் மெஜாரிட்டி மக்கள் படித்து ஓரளவுக்கேனும் அறிவு படைத்தவர்களாக ஆகி விட்டால்,கம்யூனிஸ்ட்களின் ஆட்டமும்,திராவிட தீய சக்திகளின் ஆட்டமும் ஒடுங்கி விடும்.
ஆனாக்க சீனாவின் கம்யூனிஸ்ட் பார்ட்டி வெறியர்களுக்கு மரண அடியை விடுங்க,அரவணைத்து அசுரத்தனமா சீனா உருவாக காரணகர்த்தாவாக இருந்தது நம்ம நிக்சன் அய்யா தான்.இந்த கொள்கையும் அமெரிக்காவுக்கு பிற்காலத்தில் ஆப்பு வைக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

பாலா

வால்பையன் said...

//சோவியத் யூனியனை போண்டியாக்கி, அதன் பலத்தை குறைத்தவரும் ரீகனே. அதன் பலனாய் 1990-ல் கிழக்கு ஜெர்மனியும், 1991-ல் சோவியத் யூனியனும் உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன. //

ரஷ்யாவில் இன்னும் பல எண்ணெய் கிணறுகள் திறக்க படாமல் இருப்பதாகவும்,
உலகில் கட்சா எண்ணையின் தேவை அதிகரிக்கும் போது அமெரிக்காவை அடக்க அதை பயன்படுத்தும் என்று சொல்கிறார்களே உண்மையா?

வால்பையன்

Anonymous said...

1.அமெரிக்காவின் தற்போத்ய பொருளதார தேக்க நிலைக்கு வியட்நாம்,இராக் இவைகளின் மேல் தொடுக்கப் பட்ட தேவையில்லாத யுத்தம் தான் காரணமா?

2.தனியார்மயம்,தாரளமயம்,உலகமயம்
அமெரிக்காவில் தோல்விமுகம் காணுகிறதா?


3.வேலைஇல்லாத் திண்டாடம்,பாங்குகளில் தேக்க நிலை,வீட்டு வசதி களில் மதிப்பு கீழிரக்க நிலை தென்படுகிரதே?


4.வளர்ச்ச்சி விகிதமும் கண்ணாமூச்சி கடுகிறதே?( 3 % குறைவு)


5.உலக போலிஸ்காரரின் கைபிடி நழுவிகிறதா?

வால்பையன் said...

//தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஈராக்கை தனிமைப் படுத்தி சதாம் ஹுசைனின் பல்லைப் பிடுங்கியது ஜார்ஜ் புஷ்தான்.//

புஸ்சு பல்ல புடுங்க நம்ம டாக்டர் புருனோவை அனுப்பலாமா

வால்பையன்

வால்பையன் said...

//இஸ்ரேல் விஷயத்தில் அவரது நிலைப்பாடு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது.//

அங்க எதாவது சின்னவீடு வச்சுருக்காரா

வால்பையன்

Anonymous said...

நீங்க சொல்வது சரிதான் டோண்டு சார். டெமொக்ராட்டை விட ரிபப்ளிகன் உருப்படியானவர்களே. ஆனால் சமீப காலமாக ரிபளிகான் பார்ட்டி தனது அடிப்படை நிலைப்பாட்டை மறந்து தவறான திசையில் சென்றுகொண்டிருக்கிறது.
குறிப்பாக ஜார்ஜ் புஷின் ஆட்சியில் அரசு செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த ஜான் மெக்கெயின் ஒரு அந்தர் பெல்டி அடிக்கும் பார்ட்டி போல தெரிகிறார் இவர் ஒரு உண்மையான ரிபப்ளிகன் இல்லை, இவர் டெமொக்ராட்களுகடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும், தீவிர இடது சாரியான ஒபாமா (என்ன பெயர் இது) ஒப்பிட்டால் ஜான் மெக்கெயின் பரவாயில்லை போல தோனுகிறது. அங்கு இம்முறை இந்தியாவை போலதான், நாம் தீவிட்டி கொள்ளைகாரனுக்கு பதிலாக பிக்-பாகேட்டுகளுக்கு ஓட்டு போடுவதில்லயா அது போலதான்.

இருந்தாலும் 'ரான் பால்' பற்றி சொல்லியாக வேண்டும் இவர் மட்டும் தான் அமெரிக்காவில் இருக்கும் அரசியல்வாதிகளில் நேர்மையானவர். இவரும் ரிபப்ளிகன் கட்சியில் போட்டியிடுகிறார். என் ஆதரவு இவருக்குதான்.

வால்பையன் said...

//இந்த டோண்டு ராகவனைப் பொருதவரை அது ஒன்றே போதும் அவரை எதிர்ப்பதற்கு.//

நீங்க எதிர்க்கிற விஷயம் அமெரிக்கா காரங்களுக்கு தெரியாது போலருக்கு.
எதுக்கும் ஒரு மெயில் அனுபிச்சிருங்க அமெரிக்காவுக்கு

வால்பையன்

வால்பையன் said...

பதிவு போட மேட்டர் இல்லைனா
இப்படி பின்னூட்டம் போட்டு நம்ம உண்மை தமிழன் மாதிரி
கொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்

வால்பையன்

dondu(#11168674346665545885) said...

//Obama will provide sensible security to the world instead of waging war against IRAN and others .//

வெறுமனே ஒபாமா இப்போது தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஒப்புக்காக பேசிவருகிறார் என்பதுதான் இப்பதிவின் அடிநாதமே. லிண்டன் ஜான்சன் சமீபத்தில் 1964-ல் செய்ததுபோலத்தான் ஒபாமாவும் செய்து வருகிறார். ஆக, ஒரேயடியாக அவர் சொல்வதை நம்ப வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//இருந்தாலும் 'ரான் பால்' பற்றி சொல்லியாக வேண்டும் இவர் மட்டும் தான் அமெரிக்காவில் இருக்கும் அரசியல்வாதிகளில் நேர்மையானவர். இவரும் ரிபப்ளிகன் கட்சியில் போட்டியிடுகிறார். என் ஆதரவு இவருக்குதான்.//
இப்பதிவில் நான் எந்த ரிபப்ளிக்கனின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அமெரிக்காவின் தலைவர் முதலில் அமெரிக்க நலனுக்குத்தான் பாடுபட வேண்டும். ஆகவே என்னை நானே அமெரிக்கனாக கற்பனை (மட்டுமே) செய்து இப்பதிவை எழுதினேன்.

அப்படியே இந்தியாவின் நலன் என்று பார்த்தாலும், டெமாக்ரெட்டுகளை விட ரிபப்ளிகன்கள் பரவாயில்லை என்றுதான் கூறுவேன். ஆனால் அது இப்பதிவின் கன்சிடெரேஷனுக்கே வரவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//ஒன்னு ரெண்டு சொன்ன நாங்களும் சிரிப்போம்ல//
நிக்ஸனின் ஃபோட்டோவை போட்டு இம்மாதிரி வாசகம் எழுதினார்கள்: "உண்மையாக கூறுங்கள். இந்த மாதிரி மூஞ்சியுடைய ஆளை நம்பி ஒரு செகண்ட் ஹேண்ட் காரை வாங்குவீர்களா" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//பதிவு போட மேட்டர் இல்லைனா
இப்படி பின்னூட்டம் போட்டு நம்ம உண்மை தமிழன் மாதிரி
கொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்//

கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க. :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//இப்பதிவில் நான் எந்த ரிபப்ளிக்கனின் பெயரையும் குறிப்பிடவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.//

மன்னிக்கவும் டோண்டு சார் நான் அதை கவனிக்கவில்லை.

இருந்தாலும், போட்டியில் முதலிடத்தில் இருக்கும் ஜான் மெக்கெயின் ஒரு உண்மையான் ரிபப்ளிகன் இல்லை, மேலும் சமீப காலமாக ரிபப்ளிக்கன் பார்ட்டி தனது அடிப்படை நிலைப்பாட்டை மறந்து தவறான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. இதை வலியுருத்தான் நான் பின்னூடம் போட்டேன்.

எனது ஆதரவு ரான் பால் அவர்களுக்கே. மற்றபடி நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடே.

kapilavastu said...

As far as recent memory goes Clinton is the best president Americans ever had.

During Clinton's time the economy flourished, the jobless rate was down and there was more than a trillion dollar surplus. The american debt was reducing. Dollar was strong

but the "appa" bush and "magan" bush regime is worthless. Even during Regan's time the economy was sluggish and the jobless rate reached unmanagable propostion. The world grew more dangerous with his lunatic star wars idiocity.

Centrist and free trade supporting democrats like Bill,Hillary Clinton are much better than republicans for both america and the world in genreral and also to India.

But Obama who is more towards left than clinton and hence is dangerous for India as he will sing the old useless leftcentric demorcatic agenda of NPT and other garbages like curb on outsourcing etc.,

Nixon, regan goons supported Pakistan against India and the useless crapy nixon even proposed to send the 5th or 7th fleet during 1971 to the Indian ocean to intimidate India.

With the demise or the iminent demise of pakistan looming large over them the republicans are now seeing the efficacy of friendship with India and are now more aligned with India than with the almost dead pakistan.

But in the current candidates for president the republican McCain is a better candidate than Obama.

McCain is sensible unlike the nixons, regans, and the bushes.

It is better for India to have a free trade hawk like the repbulican McCain than the leftist obama.

If it had been the centrist ,free trade champion Hillary than the leftist obama India would have had better terms with America and she would have been much better than McCain for America ,India and the world in general.

For some reason or the other the American jews overwhelmly support only the democrats.

Anonymous said...

I am not able to activate my tamil fonts, so my comments in English:
There are 2 sides to every opinion.

Democratic Presidents might have been playboys in their privte lives, but they do not preach morality to the masses either. Their private lives do not and will not affect public governance.

Republicans ideals of morals are very close to Indian ideals of no pre-marital sex, practising abstinence, anti-obscenity etc. But they also are fundamentalist Christians who have no respect for any other religion. They see Democrats as pseudo-scularists and left wing loonies.

An analogy ( not a similarity) would be BJP as republicans and Congress as Democrats. But it stops there. BJP is not as fundamentalist as Republicans are and Democrats are not as psecs as Congress is.

Now coming to Senator Obama, he will and he should come to power in the vote of younger generation alone. The older people have done nothing beneficial to that generation. That includes Bush Sr, Jr and Bill Clinton. We have to see what a fresh face would offer. Obama is not Might is right kind of guy and he openly said that he will hunt the 9/11 terrorists in Pakistan if need be.

I believe that giving him a chance will not hurt India in anyway.

It is not Obama but it is Gobama.

Thanks
Anand

bala said...

//It is not Obama but it is Gobama.//

ஆனந்தன் அய்யா,

ஆ அப்படியா?அவர் கோ பாமாவா?கோ என்றால் மன்னன்.ஆக டெமாக்ரட்ஸ் தான் தூய திராவிட அமெரிக்கர்கள் என்று ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.ஏனையவர்கள் அட்லான்டிக் வழியா வந்தேறிய ஆரிய அமெரிக்கர்கள்.தமிழ்நாட்டில் சக்ஸஸ்ஃபுல்லான திராவிட-ஆரிய மாடலை டெமாக்ரட்ஸ் எடுத்து பயன் படுத்தி பயனடைய பரிந்துரை செய்கிறேன்.ஆப்ரகம் லிங்கன் அய்யாவுக்கு தாடி இருந்ததால் அவரை பெரியாராக்கி விடலாம்.இந்த மாடலை உபயோகப்படுத்தி டெமாக்ரட்ஸ் கெலித்தால் அவர்கள் மஞ்ச துண்டு அய்யாவுக்கு இன்னொரு மஞ்ச துண்டு போத்தி மரியாதை செய்து நன்றி சொல் விழா எடுக்கலாம்.

பாலா

dondu(#11168674346665545885) said...

பாலா அவர்களே, எல்லாவற்றிலும் தமிழக அரசியலை ஏன் புகுத்துகிறீர்கள்? பதிவின் விஷயத்தைப் பற்றி மட்டும் பேசுமாறு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெங்க்கி said...

//எல்லாவற்றிலும் தமிழக அரசியலை ஏன் புகுத்துகிறீர்கள்? //

:)) சம்பந்தம் இருக்கே... ஆதாயம் இல்லாம செட்டி ஆத்துல எறங்க மாட்டான்..பாலாவும் அப்படி தான்ன்னு தோனுது.... :))

டோண்டு சார் !! நீங்க தான் translator ஆச்சே !! கருணாநிதி யாரின் பெரும்பாலான குடும்பத்தினர் பெயர்களை ஆங்கில ஆக்கம் செய்து பாருங்கள்.. எல்லாம் செவ்விந்தியர் பெயர் போல இருக்கும்...எனவே, பாலா சொல்வதில் என்ன தவறு ??

கருணா நிதி = Mercy Fund
அழ்கிரி = Beautiful Hill
உதய நிதி = Rising Fund
கனி மொழி = Fruit Spell
மு.க.முத்து = Nose Pearl
அறிவு நிதி = Wisdom Fund
தயா நிதி = Kind Fund
கலா நிதி = Art Fund

எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்... மேலே இருந்தா யாராவது எழுதுங்க..(ஹீ..ஹீ...எப்படி நம்ம மொக்கை..)

சார் ! உங்களோட இந்த பதிவு..எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்ட மாதிரி இருக்கு... ஏன் இந்த முயற்ச்சி ?

Anonymous said...

//dondu(#11168674346665545885) said...
//பதிவு போட மேட்டர் இல்லைனா
இப்படி பின்னூட்டம் போட்டு நம்ம உண்மை தமிழன் மாதிரி
கொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்//

கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க. :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

well said.

dondu(#11168674346665545885) said...

//சார் ! உங்களோட இந்த பதிவு..எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்ட மாதிரி இருக்கு... ஏன் இந்த முயற்சி ?//
எது எட்டாக்கனி? நான் பதிவுபோட்டு அமெரிக்க தேர்தல் பாதித்துவிடுமா என்ன? யார் எதை எதிர்ப்பார்க்க முடியும்? அப்படிப் பார்க்கப் போனால் நம்மவரில் ஒருவருடைய பதிவுமே தேறாதே இந்த விஷயத்தில்.

பெயரை ஆங்கில மொழியாக்கம் பற்றி நீங்கள் எழுதியது என் பெயரைத் தமிழாக்கம் செய்ய நினைத்த என் முயற்சியை ஞாபகப்படுத்துகிறது. ராகவன் என்னும் பெயருக்கு தமிழில் என்னவென்று கூறலாம் என நான் எனது எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் பத்மனாப ஐய்யங்காரைக் கேட்க, அவர் என்னை 'அன்பழகன்' என்று பெயர் வைத்துக் கொள்ளுமாறு கூறினார். என் தந்தை ஒரே வார்த்தையில் எனது முயற்சியைத் தடுத்தார். "உதைப்பேன்" என்பதுதான் அந்த வார்த்தை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெங்க்கி said...

//ராகவன் என்னும் பெயருக்கு தமிழில் என்னவென்று கூறலாம் என நான் எனது எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் பத்மனாப ஐய்யங்காரைக் கேட்க, அவர் என்னை 'அன்பழகன்' என்று பெயர் வைத்துக் கொள்ளுமாறு கூறினார்.//

So, நீங்களும்.. செவ்விந்தியரா ? :))))))))))
அன்பழகன் = அன்பு + அழகன் = Love Beauty... ??

bala said...

//எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்... மேலே இருந்தா யாராவது எழுதுங்க..(ஹீ..ஹீ...எப்படி நம்ம மொக்கை..)//

கீ-வென் அய்யா,

நீங்க, இனமான தலைவரின் பரிவாரங்களின் பெயர்களை திராவிட செவ்விந்தியவாக்கம் செய்தது சூப்பர்.ஆனா,கனிமொழியைத் தவிர மத்த தாய்க்குலங்களை விட்டு விட்டீங்களே?

தயாளு = Kind Heart

ராசாத்தி = Kings Keep

பாலா

Anonymous said...

முட்டாள்தனமான பதிவு.
புஷ் செய்த போர் மற்றும் அறிவற்ற கொள்கைகளால் அமெரிக்காவுக்கு பெரும் செலவும் அழிவும்தான் மிச்சம்.
பொருளாதாரமும் சீர்கெட்டது.
மாறாக கிளிண்டன் காலத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது.
அவரின் இம்பீச்மெண்ட்டுக்கான காரணங்கள் அவரின் தனிமனிதக் குறைபாடுகள்;அவை அமெரிக்க நலன்களைப் பாதிக்க அவர் அனுமதிக்கவே இல்லை.

அதுபோல் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ரூஸ்வெல்ட் ஒரு ஹீரோவைப் போல பணியாற்றினார்.

வெங்க்கி said...

என்ன பாலா ! டோண்டு சார்ரோட இந்த பதிவை நாம மொக்கை ஆக்கிடுவோம் போல தெரியுதே... பேசாம என் பதிவுக்கு வாங்க... நெறையா இந்த மாதிரி சரக்கு இருக்கு..

ஆனாலும்..டோண்டு சாருக்கு தைரியம் அதிகம்.. அமெரிக்காவிலிருந்தோ அல்லது அமெரிக்கன் தூதரகதிலிருந்தோ ஆட்டோ வராதுன்னு.. எட்டியூரப்பாவை பத்தி எதாவது எழுதுங்களேன்..!!

வெங்க்கி said...

டோண்டு பதில்களுக்கு என்னோட கேள்வி.. கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்..

ஏன் தலைவர் மு.க குடும்பதினரோட பெயர்களில் பணத்தின் பாதிப்பு (எல்லா பெரும் நிதியிலேயே முடியறது) இருக்கு ? விசேட காரணங்கள் ஏதும் உங்களுக்கு படுகிறதா ?

bala said...

//விசேட காரணங்கள் ஏதும் உங்களுக்கு படுகிறதா ?//

கீ-வென் அய்யா,
அட அதானே?காத்திருப்போம் டோண்டு சார் எப்படி இந்த புரியாத புதிருக்கு விடை சொல்லப் போகிறார் என்று?ஒரே சஸ்பென்ஸா இருக்குப்பா.

பாலா

Anonymous said...

So you don't mind that McCain left his disabled wife for some rich girl? You support a pathetic person like him?

I also support the republicans, but when compared with a low life like McCain, Obama is 1000 times better.

dondu(#11168674346665545885) said...

Obama is very dangerous what with his now downplaying his association with dangerous institutuions. Democrats as a whole have been disaster for the USA except for a few cases in that the USA was subjected to more ridicule under them.

As for McCain, I never named the Republican candidate. To my liking Republicans have made better presidents for the USA. Period.

Don't worry, Americans will know. If McCain does not pass their approval, he will not be elected that's all.

Regards,
Dondu N. Raghavan

Anonymous said...

//(obama)he will and he should come to power in the vote of younger generation alone. The older people have done nothing beneficial to that generation.//

Few young people vote in the elections. Old people are those who really vote. Lets see what happens this time.

When you say that old people have done nothing to the new gen, where did the new gen come from.. came from the sky? or were they children to the old..

//புஷ் செய்த போர் மற்றும் அறிவற்ற கொள்கைகளால் அமெரிக்காவுக்கு பெரும் செலவும் அழிவும்தான் மிச்சம்.
பொருளாதாரமும் சீர்கெட்டது.
மாறாக கிளிண்டன் காலத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது.//

Bill Clinton is a war monger too, only he didn't have the reasons to got to war (9/11). Bill Clinton is not responsible for the long boom enjoyed the americans in the 1990s. It was partly fuelled by the easy money policy of Alan Greenspan, whose bad effects are being felt only now. The prosperity was mostly due to hard-working, innovative americans and dramatic improvements in productivity due to technological changes.

Anonymous said...

1.தமிழ்க அரசு r.t.o சேவைகளுக்கு சேவைவரி விதித்திருப்பதற்கு மக்கள் கருத்து கேட்டுக் கொண்டுருக்கும் போதே வசூல் வேட்டை தொடர்கிறதே,நியாமா?

2.ஓட்டுனர் உரிமம் புதிப்பதற்கு ரூபாய் 500 வரை ஆகிறது,முன்பு 30௫௫‍ ‍‍
‍‍‍to 50 ரூபாய் தான்.( sevai vari maddum 100)


3.புரோக்கர்கள் தயவில்லமல் அங்கு ஒன்றும் நடக்காது போல் உள்ளதே?


4.மக்கள் முனுமுனுத்துக் கொண்டெ பனத்தை கொட்டுகின்றனர்.அதிலும் ஏழை, வாடகை ஊர்தி ஓட்டுனர்கள் நிலை பரிதாபம் இல்லையா?

5.இவர்களை திருத்தி நேர்மையை நிலை நாட்டா எதிர்காலத்தில் வழி

பிறக்குமா?


----ரமாணாஸ்திரம்

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார்,

குடியரசு கட்சிக்கு தான் உங்க ஆதரவு என்பது தெரிஞ்சது தான் !!! என்னளவில், இந்த பாரக் ஒபாமா நிச்சயம் தேற மாட்டார், சரியான வழவழா கொழகொழா, அனுபவம் சுத்தமாக கிடையாது. சரக்கு எதுவும் கிடையாது. எது கேட்டாலும், "We want change" ன்னு உளறுவார்.

பால் க்ருக்மேன் என்ற பத்திரிகையாளர் ஒபாமா பற்றி நறுக்கென்று கூறியுள்ளார்: Barack Obama is a human featherball -- a slick, smiling, substance-free empty suit who excites gullible dimwits by repeating the words 'change', 'unity' and 'hope' over and over ;-)

வாசிக்க: http://townhall.com/Columnists/JohnHawkins/2008/02/15/barack_obama_a_human_hallmark_card_for_president

இந்த ஆள் கண்டிப்பா அமெரிக்க ஜனாதிபதியாக வரக் கூடாது. பயங்கரமா எல்லா விஷயங்களிலும் சொதப்புவார் என்பதில் சந்தேகமில்லை ! நான் ஆதரித்த,(என் வலைப்பக்கத்தின் வலப்பக்கம் பார்க்கவும்!) தகுதிக்குரிய பெண்மணியான ஹில்லாரி கிளிண்டன் ஜனநாயகக் கட்சியின் nominee-ஆக தேர்ந்தெடுக்கப்படாததில் எனக்கு மிகுந்த வருத்தமே :(

ஒரு பதிவு போடலாம் என்று எண்ணினேன். அலுவலகத்தில் "படுத்தல்" அதிகமாக உள்ளது !

எ.அ.பாலா

Anonymous said...

Anony A//Democratic Presidents might have been playboys in their privte lives, but they do not preach morality to the masses either. Their private lives do not and will not affect public governance.//

Anony B//So you don't mind that McCain left his disabled wife for some rich girl? You support a pathetic person like him?//

getting blow-jobs and banging interns in the white house are perfectly acceptable for Democratic Bill Clinton because it is a personal matter.

but for Republican McCain it is wrong that he has left his wife for another woman..

That is what is called as double standard.

dondu(#11168674346665545885) said...

//குடியரசு கட்சிக்குத்தான் உங்க ஆதரவு என்பது தெரிஞ்சதுதான் !!!//

நன்றி பாலா அவர்களே. உங்களைத் தவிர இங்கே என் காரக்டரை யாருமே புரிஞ்சுக்கல சார். :)))))

//இந்த ஆள் கண்டிப்பா அமெரிக்க ஜனாதிபதியாக வரக் கூடாது. பயங்கரமா எல்லா விஷயங்களிலும் சொதப்புவார் என்பதில் சந்தேகமில்லை!//
கூடவே டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொதிகைத் தென்றல் said...

தமிழ் எழுதிக்கு இணைப்பு கொடுக்க கீழே உள்ள நிரலியை உங்கள் தளத்தில் ஒட்டவும்.


உதவி


இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். உதாரணமாக ஆங்கிலத்தில் 'anbu' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அன்பு' என்று மாற்றித்தறும். பொதுவாக ஆங்கில தட்டச்சு முறை மட்டும் தெரிந்தவர்கள் 'தமிழ்-ஆங்கிலம்' முறையையும் 'தமிழ் தட்டச்சு' முறையையும் தெரிவு செய்து பயன்படுத்தவும்.
சில உதாரணங்கள்:

இடையில் ஆங்கில எழுத்துக்களை வரவழைக்க F12 -ஐ அழுத்தவும். மீண்டும் F12 - ஐ அழுத்தும் போது பழைய முறையப் பெறலாம்.
அன்பு - anbu, அப்பா - appaa, தமிழ் - thamiz, அழகு - azaku
ழ - za
ஞ - nja

ந - wa

ங் - ng
ஞ் - nj
ந் - w

யூ - yU
கூ - kU
கே - kE

கெ - ke
ண் - N
ன் - n


நன்றி: தகடூர் எழுதி




-------------------------------

டோன்டு ஐயா தங்கள் வலைப்புவில் தமிழில் பின்னூட்டம் இடும் வசதிக்காக தமிழ் எழுதி இணைக்க வேண்டுகிறேன்

என்றும் அன்புடன்
பொதிகைத் தென்ற‌ல்

Anonymous said...

As much as I am against pseudo-secularists (read Congress, DMK, Karan Thappar...) who shed tears only for the minorities, I am staunchly opposed to religious fundamentalists and war mongers.

If you look at the support base Republicans have: Trigger happy Gun lovers, Cowboy types who say nuke em all, Christian fundamentalists, Racist Southern state inhabitants and inerts who believe in Creationism and oppose evolution.

Regarding my comment about young-old generations, looks like I ruffled some feathers here. Experience does not always equal intelligence and vice versa. Generation gaps make rulers be out of touch with reality. For instance in US a person can join the military when 18 years old but needs to be 21 for drinking. It means he has the maturity to hold a gun but not hold his alcohol. It is plain ridiculous.

8 years of Republican rule has been nothing but a disaster. McCain might appear to be a moderate, but the people who fund his campaign are not and the hawks of Bush administration will be there in his cabinet too.

Obama is open to dialog and his task in curbing terrorism is to up the ante in Afghanistan than anything else and hunt them in Pakistan if needed. There is no reason for US presence in Iraq. Democrats are pals with Trade Unions and that does not mean they will curb outsourcing and promote protectionism. That would spell disastrous for the economy and they will not do that.

Anand

Anonymous said...

1. கோமணகிருஷ்னன் போன்ற சிலர் தொடர்ந்து இந்துமத எதிர்ப்பாய் கருத்துக்களை உதிர்த்த போதிலும் அக்கும்பலின் தலைவர் பிறந்த நாளில் அவருடைய இல்லத்துக்கு அருகேயுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் அவர் வீட்டு அம்மாள் உபயத்தில் சிறப்பு பூஜைகள் குறித்து உமது கருத்து என்ன?

2.பகுத்தறிவு பார்ப்பன/இந்துமத எதிர்ப்பு எனப் பக்கம் பக்கமாய் பதிவு போடும் பதிவர்கள் கூட வீட்டு விசேஷங்களூக்கு புரோகிதர்களை அழைப்பதும்,தமது பொண்டாட்டி பிள்ளை அல்லது அம்மவை கோவிலுக்கு கூட்டிப் போவதும் ஏன்? உபதேசம் ஊருக்கு மட்டும்தானா?இவர்கள் ஏன் கேள்வி கேட்டால் வீட்டுப் பெண்கள் முந்தானைக்குள் ஒழிந்து கொள்கின்றனர்.இவர்கள் வீட்டுப் பெண்கள் கொண்ட கருத்துரிமை மற்றவர்க்குகில்லையா?

3.இந்தியா போக்ரானில் அணுவெடிப்பு சோதனை நடத்திய போது அதை எதிர்த்த கம்யூனிஸ்ட் கும்பல் இப்போது அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் அணுவெடிப்பு சோதனை உரிமை போய்விடும் எனப் புலம்புவது ஏன்?

4. பெருந்தலைவர் மாதிரி மீண்டும் ஒரு தலைவர் தமிழகத்துக்கு கிடைப்பாரா? அப்படிகிடைத்தாலும் மக்கள் அவருக்கு ஓட்டுப் போடுவார்களா?

5.சீனாவில தோன்றிய நிலநடுக்கத்துக்கு காரணம் சைனா செய்யும் அட்டூழியம்,சைனாவின் 'கர்மா' எனச் சொன்ன ஸ்ரன் ஸ்டோன் கருத்து பற்றி...

Anonymous said...

Dont worry Raghavan.
McCain is going to beat Obama rather handily.It will be good for US,India and the world in general to have a moderate republican president.The talkshows are heating up here with the speculation that he may choose Bobby Jindal as his running mate.

dondu(#11168674346665545885) said...

மக்கள் குரல் அவர்களே. உங்கள் கேள்விகள் அடுத்த டோண்டு பதில்கள் பதிவின் வரைவில் முதல் ஐந்து கேள்விகளாக சேர்க்கப்பட்டு விட்டன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//Regarding my comment about young-old generations, looks like I ruffled some feathers here. Experience does not always equal intelligence and vice versa. Generation gaps make rulers be out of touch with reality.//

நீங்கள் கூறுவதும் நல்ல பாயிண்ட்தான். ஆனால் மனித இயற்கை என்று இருக்கிறதே, அது சாதாரணமாக அவ்வளவு சீக்கிரம் மாறுவதில்லை. உதாரணத்துக்கு ஒபாமா பேசுவதற்கும் மேலாகவே சமீபத்தில் 1964-ல் லிண்டன் ஜான்சன் பேசினார். ஆனால் என்ன ஆயிற்று என்பதை இப்பதிவிலேயே எழுதியுள்ளேன்.

எனது இப்பதிவு 1900 ஆண்டிலிருந்து வந்த அமெரிக்க ஜனாதிபதிகளின் ரிகார்டை பார்த்துத்தான். என்னை ஒரு சராசரி அமெரிக்கனாக கற்பனை செய்து போட்ட பதிவு இது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

HAVE YOU BEEN TO AMERICA OR ARE U A GREENCARD HOLDER

if you are not...
this blog is a waste.

your extend support from here is a waste

dondu(#11168674346665545885) said...

//this blog is a waste.//

Well, that is your opinion. Just because it comes from a person afraid to show his identity, I on my side will not say that this comment of yours is useless.

Regards,
Dondu N. Raghavan

Anonymous said...

//மக்கள் குரல் அவர்களே. உங்கள் கேள்விகள் அடுத்த டோண்டு பதில்கள் பதிவின் வரைவில் முதல் ஐந்து கேள்விகளாக சேர்க்கப்பட்டு விட்டன.//

மிகவும் நன்றி, டோண்டு சார்!

Anonymous said...

//Obama is open to dialog and his task in curbing terrorism is to up the ante in Afghanistan than anything else and hunt them in Pakistan if needed.//

You must be nuts if you believe anyone can talk terrorists out of terrorism..


//There is no reason for US presence in Iraq.//
They cannot runaway from Iraq, that means defeat to america.
Gradual withdrawal is prudent.

//Democrats are pals with Trade Unions and that does not mean they will curb outsourcing and promote protectionism. That would spell disastrous for the economy and they will not do that.//

How can you be sure about that?

Wouldn't the Unions want their fair share by the means of protectionis policy
or
Will Obama cheat on the promises made trade unions.

I think you are right. Obama is a power hungry outright liar/cheater.

Anonymous said...

//HAVE YOU BEEN TO AMERICA OR ARE U A GREENCARD HOLDER //

travelling to america nor having a green card entitles one for the right to vote.

பழமைபேசி said...

வணக்கம் ஐயா... இன்றைய தேதியில், அமெரிக்காவின் இருக்கும் கடன் தொல்லையைத் தீர்ப்பது எப்படி என்பதுதான் பிரச்சினை... குடியரசுக் கட்சியினர் அதைப் பற்றி யோசிப்பதாகவே இல்லை...

Tea Party, தேநீர் விருந்து இயக்கம் நடத்தி இடது சாரியினரின் ஆதரவைப் பெற்றதும், தன் கொள்கைகளில் இருந்து விலகி சமரசம் கொண்டதுமே சமீபத்திய வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

அவர்கள், உணர்வு ரீதியான கொள்கைகளில் இருந்து சற்றுக் கீழிறங்கி வந்து, இளைஞர்களுக்கு வழிவிடும் போது... மீண்டும் ஆட்சி அவர்கள் வசம் வரும்!!!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது