இன்று மூச்சடைக்கும் அளவுக்கு ஒரு பதிவைப் பார்த்தேன். அதாகப்பட்டது, சமீபத்தில் 1962-ஆம் ஆண்டுவாக்கில் வங்கிகளில் கணினியைப் புகுத்தினார்களாம். வங்கிப் பணிகள் விரைவாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் புகுத்தினார்களாம். அப்பொழுது நம்முடைய பொதுவுடைமைத் தோழர்கள், முற்போக்குச் சிந்தனைவாதிகள் இவர்களெல்லாம் முதலில் கடுமையாக அதை எதிர்த்தார்களாம்.
கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்பைப் பறிக்காதே என்று சொல்லி எதிர்த்தார்களாம். எப்படி காந்தியார் தொழிற் சாலைகளுக்கு எந்திரம் கூடாதென்றாரோ, அதுபோலவே முற்போக்குச் சிந்தனையாளர்களும் கணினியைக் கடுமையாக எதிர்த்தார்களாம். எங்கே பார்த்தாலும் வேலை நிறுத்தம். தந்தை பெரியார் வீரமணி அவர்களைக் கூப்பிட்டு எதற்காக வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று கேட்டாராம்.
கணினியைப் புகுத்துவதை எதிர்த்து என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார். இனி வீரமணி அவர்களின் வார்த்தைகளில்: (எவ்வளவு நேரம்தான் ராம் ராம் என்று எழுதுவதாம்)?
"என்ன இது பைத்தியக்காரத்தனம்? நாம் காட்டுமிராண்டிக் காலத்திலிருந்து நாகரிகமுள்ள ஒரு நாட்டைப் போல் முன்னேற விரும்புகிறோம். வெளி நாட்டைப் போல வளர விரும்புகிறோம். எனவே, கணினியை வரவேற்பதுதானே முறை. ஆகவே கணினியை ஆதரித்து எழுதும்படி அய்யா என்னிடம் சொன்னார்.
1962 இல் வெளியான விடுதலைத் தொகுப்பை பார்த்தீர்களேயானால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதில் நான் ஒரு தலையங்கம் எழுதினேன். கணினி பரவினால் வேலை வாய்ப்பு குறையாது. மாறாக வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்று எழுதினேன்.
நான் எழுதியதை அன்றைக்கு ஏற்றுக் கொள்வதற்குக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் கணினி அறிவுபற்றித்தான் பேச்சு. தெருவுக்குத் தெரு கணினி மையம், கணினிப் பயிற்சியகம் என்று வந்து விட்டது. இன்று யாராவது இவைகளை எதிர்த்துச் சொல்கிறார்களா?
மேலும் புதுப்புது வேலை வாய்ப்புகள்தான் அதில் வர வாய்ப்புள்ளது. இன்று கணினி அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது".
(திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பெரியாரியல் நூல் 2 ஆம் பாகத்திலிருந்து ... ) தகவல்: இரா.கலைச்செல்வன், திருச்சி.
உண்மைதான் வீரமணி அவர்களே. எண்பதுகளில் (அதாவது பெரியார் அவர்கள் இறந்து பத்தாண்டுகள் கழித்து வங்கிகளில் கணினிகள் நிஜமாகவே புகுத்தப்பட்டபோது எதிர்ப்புகள் இருந்தது வாஸ்தவமே. ஆனால் 1962-ல்? இது கொஞ்சம் ஓவர் இல்லையா சார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
18 hours ago
41 comments:
டோண்டு சார்,
இதெல்லாம் ஓவர் தான். ஆனால் ஆகாய விமானம் தயாரிக்கும் டெக்னாலஜி எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது... புஷ்பக விமானம் தான் ஆகயவிமானத்திற்கே முன்னோடி என்கிற புரூடாக்களைவிடவும் ஓவரா ?
டோண்டு சார் பகுத்தறிவோடு சிந்தித்திருக்கிறார் :-)
நன்றி லக்கிலுக் மற்றும் கோவி கண்ணன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய வங்கிகளில் கணிணி எந்த வருடம் நிறுவப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால் LIC நிறுவனத்தில் சமீபத்தில், 60களிலேயே கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டன. இதற்கான ஆதாரம் இங்கே. www.licindia.com/it_lic.htm.
2002 ல் பெண்டாசாப்ட் நிறுவனத்தின் இன்ஸ்யூரன்ஸ் மென்பொருட்களை மதிப்பீடு செய்யச் சென்றபோது சுப்பிரமணியன் என்ற 60 வயதுக்கும் மேற்பட்ட இன்ஸ்யூரன்ஸ் வல்லுநர் ஒருவருடன் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. (The Hindu நாளிதழில் LEO’s column என்ற ஒரு பொருளாதார வல்லுநர் கட்டுரைகள் எழுதி வருவாரே. அவரது மாப்பிள்ளைதான் இந்த சுப்பிரமணியன்). அப்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தான் 60களிலேயே கம்ப்யூட்டர் படித்ததாகவும் LIC நிறுவநத்தில் முதன் முதலில் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தியபோது, காம்ரேடுகள் அறைக்கதவைப் பூட்டி வைத்து ‘கேரோ’ செய்ததையும் நினைவு கூர்ந்தார்.
-சிமுலேஷன்
குரு ஷேத்தர போர்லயே அணு ஆயுதத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். பார்க்கப்போனால் அணு தொழில் நுட்ப்பத்துக்கே அர்ஜுனனும் கிருஷ்னனும்தான் காப்புரிமை வாங்கி இருக்கனும். அப்படி அப்பவே காப்புரிமை வாங்கி இருந்தால் இன்னைக்கு நாம் எல்லா நாட்டையும் கூப்பிட்டு அணுசக்த்தி ஒப்பந்தம் போட சொல்லி நாமமட்டும் தினமும் அணுவெடி சோதனை செய்திருக்கலாம். அப்பவே அவங்களுக்கு யாரும் சொல்லாமல் போய்ட்டாங்க
டோண்டு சார் இதுக்கு பேருதான்
வேலில போற ஓணான தூக்கி லங்கோடுல போட்டுக்கிறதுன்னு எங்கூர்ல சொல்லுவாங்க....
அண்ணா கலி முத்திடுத்து.....
இந்தியாவின் முதல் கணினி பற்றிய செய்தி:
http://timesofindia.indiatimes.com/articleshow/1473117.cms
May be Veeru is correct. Computerization of insurance sector started in 60's. Could be a debate on it happened in banking sector too.
http://www.unu.edu/unupress/unupbooks/uu37we/uu37we0i.htm
பெரியார் கம்யூனிஸ்டுகளுக்கு அடித்த ஆப்பு பற்றிய மனதுக்கு நிறைவான செய்தியை பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்.
-
1.சைவக் கோவில்களைவிட வைணவக் கோயில் களில் கடவுளை வணங்கும் போது ஒரு பரவசம் வருவதன் காரனம்?
2.தென்கலை,வடகலை இடும் திருநாமம் தவிர வழிபாடுகளில் உள்ள வேறுபாடுகளை சொல்லவும்?
3.சிவனை வழிபடுவர் பெருமாளை வணங்கும் போது வைணவர்கள் மாறி செயல் படுவது ஏன்?
4.ராமனுஜ சுவாமிகள் பிற ஜாதியினரையும் வைணவராக மாற்றினர் என்பது உண்மையா?
5.பொதுவாகவே வைணவர்கள் முற்போக்கு கொள்கையுடன் இருக்கிறார்களே?இது பற்றி தங்கள் கருத்து?
ஐயா, ரிசர்வ் வங்கியில் 1960களிலேயே கணினி வந்து விட்டது
1980களில் பிற வங்கிகளில் வந்தது
புரிகிறதா.
Aiyyooo....Aiyoooo..........
/ஆனால் ஆகாய விமானம் தயாரிக்கும் டெக்னாலஜி எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது... புஷ்பக விமானம் தான் ஆகயவிமானத்திற்கே முன்னோடி என்கிற புரூடாக்களைவிடவும் ஓவரா ?/
வேதத்தில் முகமது நபி வரும்போது,ஆகாய விமானம் வருவதில் என்ன அதிசயம் கோவி சாரே?
குரானில் கூட நவீன விஞ்ஞான உண்மைகள், அணு விஞ்ஞானம், நவீன விஞ்ஞானிகளுக்கு மட்டுமே தெரிந்த கருவளர்ச்சி விவரம் ஆகியவை சொல்லப்பட்டிருப்பதாக பூரித்து, புளங்காகிதமடைந்து நமது இஸ்லாமிய வலைப்பதிவர்கள் பதிவெழுதுகிறார்களே? அதெல்லாம் பொய் என்கிறீர்களா?
டோண்டு சாருக்கு கேள்வி
1) மதம் மாறினால் மரணதண்டனை என்று பதிவெழுதும் இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்ற சட்டத்தை எதிர்த்தது எந்த அடிப்படையில் என்று ஒன்றுமே புரியவில்லை. இந்த குழப்பத்தை போக்குவீர்களா?
2) கட்டாய மதமாற்ற சட்டத்தை எதிர்த்து சாமியாடிய நமது அறிவுஜீவிகள் யாருமே "மதம் மாறினால் மரணதண்டனை" என்பதை பற்றி முணுமுணுக்க கூட செய்யவில்லை. இது பகுத்தறிவின்பாற்பட்ட கொள்கையா, அல்லது இன்டெலெக்சுவல் தொடை நடுங்கித்தனமா என்பதையும் விளக்கிடுங்கள் டோண்டு சாரே.
தமிழ்நாட்டில் வரும் பத்திரிக்கைகளில் ஆதாரத்துடன் எழுதும் பத்திரிக்கை விடுதலை மட்டுந்தான்.எதைச் சொன்னாலும் ஆதாரத்தை,தேதியைச் சொல்லி அப்படி இல்லாவிடில் அதையும் யார் சொன்னார்கள் என்றாவது சொல்லித்தான் எழுதுவார்கள்.
அவ்ரே 1962 வாக்கில் என்று எழுதியுள்ளார்.பெரியார் கேள்வி கேட்டார் என்றும் எழுதியுள்ளார்.
அதற்கு மேலும் நீங்கள் கஷ்டப் பட்டுக் கஷ்டத்தை வீணாக வாங்கிக் கட்டிக் கொள்வதற்குப் பரிதாபப் படுகிறேன்.
அனுதாபங்கள்.
//அவரே 1962 வாக்கில் என்று எழுதியுள்ளார்.//
//1962 இல் வெளியான விடுதலைத் தொகுப்பை பார்த்தீர்களேயானால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்//.
ஜெ ஜெ யிடம் 5 இலகரங்களை வாங்கிக் கொண்ட காலகட்டத்தில் வெளியான விடுதலை நாளிதழ் அதன் தொகுப்புகளில் இல்லையே? ஏன்? அந்த காலகட்டங்களில் விடுதலையும் அதன் இனமானத் தலைவரும் எப்படியெல்லாம் ஜால்ரா அடித்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.
// Anonymous said...
ஜெ ஜெ யிடம் 5 இலகரங்களை வாங்கிக் கொண்ட காலகட்டத்தில் வெளியான விடுதலை நாளிதழ் அதன் தொகுப்புகளில் இல்லையே? ஏன்? அந்த காலகட்டங்களில் விடுதலையும் அதன் இனமானத் தலைவரும் எப்படியெல்லாம் ஜால்ரா அடித்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.
பாவம் வீரமணியை விட்டு விடுங்கள். அவரது திரண்ட சொத்தையும்,கல்வி அறக் கட்டடளையும் அச் சமயத்தில் காக்கவே அவ்ர் அம்மையார் பக்கம் இருந்தார். இனி அடுத்த தேர்தலில் விஜய்காந்த் பக்கம் இருப்பார்.இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா?
காரியக்காரர் புத்திசாலி
பிழைத்து கொள்ளட்டும் விடுங்க சார்.
ராமகிருஷ்ணஹரி
Your Alma Mater, College of Engineering acquired the first computer in South India in 1963. It was mainframe IBM 1620. People at IIT M relied on CEG's computer until they got their own IBM 370 mainframe computer 10 years later. By the way, did you CEG's computer when you were a student?
ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் கையில் அரியர்ஸ் ஏதும் இல்லாதிருந்தால் கணினி வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். நான் கடைசி வருடம் கல்வியாண்டு 1968-69-ல் படித்த போது நான்காம் ஆண்டுக்கான இரண்டு பேப்பர்கள் கையில் அரியர்ஸாக இருந்ததால் கணினியைக் காணக்கூட கொடுத்து வைக்கவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பெரியார் கம்யூனிஸ்டுகளுக்கு அடித்த ஆப்பு பற்றிய மனதுக்கு நிறைவான செய்தியை பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்.//
கம்முநிஸ்டுகளுக்கு ஆப்பு என்றால் நல்லதுதான், பொய் பேசுபவர்களுக்கு நல்ல பெருசா ஆப்பு வெக்கணும்.
ஆனால், தி.க அய்யா இதை 46 வருடம் கழித்து சொல்வதற்கு என்ன காரணம் ?
வங்கி யூனியன் கணினிமயமாக்கத்தை எதிர்க்கும் பொது இதை சொல்ல மறந்தது ஏன் ?
அமெரிக்காவிலேயே கண்ணினி பயன்பாடு பெரிதளவு ஏற்பட்டது 1970 களிலே. அப்போது தான் ATM போன்றவை வந்தது.
1960 களில் கணினி பயன்படுத்தியிருந்தால். ஏன் இந்த அரசு வங்கிகள் 40 வருடங்கள் பிறகு ATM திறக்க வேண்டும். ஒரு 30 வருடம் முன்பே 1980 களில் செய்திருக்கலாமே.
//டோண்டு சார் பகுத்தறிவோடு சிந்தித்திருக்கிறார் :-)//
எல்லா விசயத்திலும் பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும், வெறும் கடவுள் நம்பிக்கையில் மட்டும் பகுத்தறிவு பேசினால் சரியாகாது.
//ஆனால், தி.க அய்யா இதை 46 வருடம் கழித்து சொல்வதற்கு என்ன காரணம்?//
அறுபதுகளின் இறுதியில் விடுதலையில் ஒரு செய்தி வந்தது. அதாவது ஒரு ஜோசியர் விடுதலைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அக்கடிதம் கிடைத்த அடுத்த அமாவாசையன்று (அப்போது அமாவாசை வருவதற்கு இன்னும் பத்து தினங்கள் இருந்தன) பெரியார் அவர்கள் ஜாதகப்படி அவர்களுக்கு மாரடைப்பால் மரணம் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இக்கடிதத்தை விடுதலை பிரசுரித்து, ஜோசியரை கேலி செய்தது. என்ன, இக்கடிதத்தை அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துத்தான் விடுதலையில் பிரசுரித்தார்கள். காரணம் என்னவாக இருக்கும் என உங்களால் கணிக்க இயலுமா DFC ? :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//காரணம் என்னவாக இருக்கும் என உங்களால் கணிக்க இயலுமா DFC ? :)))//
தி.க காரர்களுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை உண்டு. ஜோசியர் வாக்கு பலிக்குதா இல்லையா என்று பார்த்துவிட்டு.... ;))
பதில்: Confirmation bias
டோண்டு சார் பதில் சரியா தவறா ?
சரி என்பதை தெரிந்து கொள்ள கேள்வி அவசியமே இல்லை. சரி என்பது வெள்ளிடைமலை.
என்னதான் பகுத்தறிவு பேசினாலும் தி.க. வினர் ஜோஸ்யத்தை நம்புபவர்களே. எதற்கு வம்பு என்றுதான் முதலிலேயே அச்செய்தியை போடவில்லை.
அவர்களது மனைவியர் கோவிலுக்கு செல்வதையும் இதே மாதிரி காரணத்தால் கண்டு கொள்ளாது விட்டு விடுவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அறுபதுகளின் இறுதியில் விடுதலையில் ஒரு செய்தி வந்தது. அதாவது ஒரு ஜோசியர் விடுதலைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அக்கடிதம் கிடைத்த அடுத்த அமாவாசையன்று (அப்போது அமாவாசை வருவதற்கு இன்னும் பத்து தினங்கள் இருந்தன) பெரியார் அவர்கள் ஜாதகப்படி அவர்களுக்கு மாரடைப்பால் மரணம் என குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இக்கடிதத்தை விடுதலை பிரசுரித்து, ஜோசியரை கேலி செய்தது. என்ன, இக்கடிதத்தை அமாவாசைக்கு இரு தினங்கள் கழித்துத்தான் விடுதலையில் பிரசுரித்தார்கள். //
சிமுலேசன் போல சுட்டி கொடுத்து ஆதாரம் கொடுக்க முடியுமா..? வழக்கம் போல.. எங்கோ (நூல், பத்திரிக்கை பெயர் வேண்டும் முழு விபரத்துடன்) படித்தது என்று சொல்ல வேண்டாம். இல்லை எனில்.. நீங்கள் பொய்யர் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
உண்மைத் தமிழன் பெயரில் வந்திருக்கும் அனானிக்கு,
நீங்கள் முதலில் உண்மைப் பெயருடன் வாருங்கள். பிறகு என்னை குறை கூறலாம்.
அறுபதுகளில் இச்செய்தியை படித்த போது 2008-ல் இது பற்றி பதிவு போடப்போவது எனக்கு தெரியாது. நினைவிலிருந்துதான் எழுத முடியும். நான் படித்தேன் அவ்வளவுதான். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவனின் அறியாமையை நினைத்து வருத்தம்தான் பட முடியும்.
பெரியாரின் தொண்டர்கள் ஆதாரத்துடன்தான் எதையும் பேசுவார்கள். ஊரில் பேசிக்கொள்கிறார்கள் என்று எதையும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார்கள். இதை பெரியாரே பலமுறை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என்பதை "டோண்டு" கள் புரிந்து கொள்ளட்டும்.
அரைகுறையாக தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்ததுபோல் நடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
வீரமணி அவர்கள் சொற்பொழிவு ஆற்ற மேடைக்கு செல்லும்போது ஆதாரம் கட்டுவதற்கு பெரிய புத்தக மூட்டையுடன்தான் செல்லுவார். இன்றுவரை அதைக் கடைபிடிக்கும் தலைவர் வீரமணி அவர்கள் மட்டும்தான். இது மிகையில்லை. உண்மை. வேண்டுமானால் வீரமணி அவர்கள் கூட்டத்து டோண்டு சென்று பார்த்துவிட்டு பதில் எழுதலாம்.
//டோண்டு ராகவனின் அறியாமையை நினைத்து வருத்தம்தான் பட முடியும்.//
அதெல்லாம் இருக்கட்டும். ஜோசியத்தில் நம்பிக்கை உண்டா இல்லயா? அதை சொல்லுங்க முதலில்
சிக்கி முக்கி கல்லு அவர்களே
இன்னும் சிக்கி முக்கி கல்லு காலத்திலேயே இருக்காதீர்கள்.
ஜோசியத்தில் எந்தப் பெரியார்தொண்டர்களுக்கும் நம்பிக்கை இல்லை.
பெரியாரின் "ஜோதிடப்புரட்டு" நூல், "உண்மை", "விடுதலை" "விடுதலை ஞாயிறுமலர்" ஆகிய இதழ்களில் தொடர்ந்து ஜோசியம் பற்றிய கட்டுரைகள் வந்து கொண்டிருக்கிறது. படியுங்கள். தெளிவு பெறுங்கள்.
நன்றி.
இவர்கள் பின்ன்னூட்டத்தையெல்லாம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்களே?
இவர்கள் பதிவுக்கு சம்பந்தமாக இருந்தாலும் நியாயமான கேள்வி எழுந்தால், பார்ப்பனன், அது இதுவென்று டகால்ஜி காட்டி ஓடி விடுவார்கள்.
இங்கே கேள்வி 62-ல் அப்படி 'உண்மை'யிலேயே எழுதப்பட்டாதா என்பது தான். ஆம் எனில் ஆதாரத்துடன் விளக்க வேண்டியது தானே? அதை விட்டு விட்டு வேதம் அது இது என்று எதற்கு திசை திருப்ப வேண்டும்?!
ஹிஹி.. ராமசாமி குண்டர்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை எல்லாம் கிடையாது. துண்ட போட்டுகிட்டு கோவிலுக்கு போறது, பொண்டாட்டி, புள்ளங்களை பினாமியா (?!) கோவிலுக்கு அனுப்பி வெக்கிறது, சாமியார வீட்டுக்கு வரவழச்சு காலில விழுந்து கும்பிடுறது எல்லாம் தான் தெரியும்.
//அரைகுறையாக தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்ததுபோல் நடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
//
என்ன இருந்தாலும் தமிழோவியா ஸேம் சைடு கோல் அடிச்சிருக்க கூடாது.
பெரியாருக்கு ஜோசியம் ஜாதகத்தில் நம்பிக்கை இருக்காது என்று அவரது ஜாதகத்தைப் பார்த்து ஒரு ஜோசியர் சொன்னாராம். ஆகவே பெரியார்வழி வருபவர்கள் பெரியாரைப்போலவே நம்பிக்கை இல்லை என்று வெளியில் காட்டிக்கொண்டு உள்ளே மாபெரும் நம்பிக்கையாளராக இருக்கிறார்கள்.
துவக்க காலத்தில் அரசு ஊழியர்கள் கூட கணினி உபயோகத்தை விரும்பவில்லை.இப்பொழுது போய் சொல்லிப்பாருங்கள் வரவு செலவுகளை புத்தகங்களில் கையால் எழுதவேண்டுமென்று:)
ஆனாலும் இதுவரை காகிதமில்லா அலுவலகம் என்ற கனவு எங்கும் நிறைவேறவில்லை.காரணம் இன்னும் கணினி ஓட்டைகளும்,ஹேக்கர் மகான்களும்.
என்னை பொருத்தவரை காகிதமில்லா செயல்பாடு ஆறு ஆண்டுகளுக்கு முன்னமேயே வந்து விட்டது. மொழிபெயர்ப்பு செய்யப்பட சவேண்டிய கோப்புகள் மின்னஞ்சல் இணைப்பாக வர, அவற்றைத் தரவிறக்கி, வந்தகட்டில் சேமித்து, பிறகு அதை திரைக்கு கொண்டு வருவேன். அதை "இப்பாடி சேமி" ஆணை மூலம் கோப்பின் பெயரை மாற்றி நகலெடுத்து புது கோப்பை உருவாக்குவேன். பிறகு இடண்டு கொப்புகளையும் திரையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க வேண்டியது. கீழேயும் மேலேயும் முதலி இரண்டு கொப்புகளும் ஒன்றாகவே இருக்கும். பிறகு மேலுள்ள கோப்பின் வரிகளை தேவையான மொழிக்கு மாற்ற வேண்டியதுதான். கடைசியில் பார்த்தால் ஒரு மூல பிரதி, அதன் மொழிபெயர்ப்பு என இரு கோப்புகள் கிடைக்கும். அவ்வளவுதான் விஷயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
வீரமணிய வுடுங்க. அவர் எப்ப என்ன சொன்னாருன்னு அவருக்கே நியாபகம் இருக்காது. அம்மா ஆட்சில இருந்தப்ப ஏதொ ஒரு பட்டம் குடுத்தாரு, இப்ப அய்யா ஆட்சில இருக்கிறப்ப அந்த அம்மாவ இல்ல அந்த பட்டத்த பத்தி எதுனா சொல்றாரா? அவருக்கே பல விஷ்யம் நியாபகம் இருக்குறதுல்ல.
யாவரத்துல இதெல்லாம் சகஜம் சார். அவனவனுக்கு பள்ளிக்கொடம், பாலிடெக்னிக், யுனிவர்சிடின்னு பல யாவாரம். அதுல அவருக்கு பகுத்தறிவுன்னு கூடுதல் யாவாரம். அம்புட்டுதேன்!
வீரமணி கிளி ஜோசியம் பாத்தாரான்னு எனக்கு தெரியாது. ஆனா, நாளைக்கு ஒரு கிளி ஜோசியர் சி.எம். ஆனா, இவரு அவருக்கு "பொர்ச்சி ஜோசியர்"னு பட்டம் குடுத்துருவாரு.
இவரு தான் இப்படி பெரியார் பேர கெடுத்துக்கிட்டு இருக்காரு. ஆனா, பெரியார் இருந்த வரை கடவுள் நம்பிக்கை இல்லாம தான் இருந்தாரு. பதவிக்காக யார்கிட்டயும் சோரம் போகலை. அதனால, வீரமணிய வச்சி பெரியார எட போடாதீங்க.
(நானும் பெரியார் கட்சி தான். ஆனா, எனக்கு வீரமணிய பிடிக்காது.)
//குரானில் கூட நவீன விஞ்ஞான உண்மைகள், அணு விஞ்ஞானம், நவீன விஞ்ஞானிகளுக்கு மட்டுமே தெரிந்த கருவளர்ச்சி விவரம் ஆகியவை சொல்லப்பட்டிருப்பதாக பூரித்து, புளங்காகிதமடைந்து நமது இஸ்லாமிய வலைப்பதிவர்கள் பதிவெழுதுகிறார்களே?//
மெய்யாலுமா! :-(
நான் 1983ம் ஆண்டு மண்டல பொறியியல் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்று வெளி வந்தவன்.
அப்பொது எங்களுக்கு கம்ப்யூட்டர் புரொகிராமிங் என்று ஒரு பாடம் உண்டு.
அதில் எஙளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது Programming in FORTRAN IV. இதில்
அதிசயம் என்ன வென்றால் கல்லூரியில் கம்ப்யூட்டரும் கிடையாது. எங்கள் புரபசர்
சில கம்ப்யூட்டர் பஞ்ச் கார்ட் களை வைத்துக் கொண்டு இதில் தான் புரோகிராமிங்
செய்வார்கள் என்று சொல்லிக் கொடுத்தார். நாங்களும் 'ஆ' வென்று வாயைப்
பிளந்து கொண்டு கேட்டோம். ஏனென்றால் அவர் அமெரிக் காவில் மேல் படிப்பு
படித்து விட்டு வந்தவர்.
1960 களில் கணிணிகள் இருந்ததற்குக் காரணம், அக்காலத்தில் IBM இந்தியாவில்
வியாபாரம் செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தது தான். பிறகு, மொரார்ஜி தேசாய்
காலத்தில் IBM, Cocoa-Coala போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்
பட்டமையால், கணிணி பயன் பாட்டில் தேக்கம் ஏற்பட்டது அல்லது அறவே
நீக்கப் பட்டது என்றும் சொல்லலாம்.
கணிணிகளின் உபயோகம் / மற்றும் பரவலான அறிவு இந்தியாவில் தொடங்கியது
1990 களில் Y2K பிரச்சினையின் போதுதான்.
அது சரி. விடுதலை அலுவலகத்தில் எப்போது கணிணி வாங்கினார்களாம்?
என்னால் இது பற்றி நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் 77-இல் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மொரார்ஜி மந்திரி சபையில் தொழில் மந்திரி ஆனார். அவர் கோகோ கோலாவையும், ஐபிஎம்மையும் நாட்டை விட்டு வெளியேற்றினார். கோகோ கோலாவின் இடத்தை லிம்கா, தம்ஸ் அப் ஆகியவை பிடித்தன. சிஎம்சி, ஹெச்சிஎல், ஆகியவை ஐபிஎம் விட்டுப் போனவற்றை தொடர்ந்தன. அவர் அப்படி செய்திராவிட்டால் நம்மூர் தொழில் நிறுவனங்கள் வர சான்ஸே இருந்திருக்காது.
ஐபிஎம் என்ன செய்தது, எப்போது இந்தியாவுக்குள் நுழைந்தது என்று தெரியாது. ஆனால் 62-இல் ஸ்டேட் பாங்கில் ஐபிஎம் கம்ப்யூட்டர்கள் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதே?
@RV
அப்படியானால் 1962 செய்தியை எடுத்து ஆதாரத்துடன் போடுவதுதானே? இங்கு இரு விஷயங்கள் இருக்கின்றன.
1. 1962-ல் கணினி இருந்தது, அதுவும் இந்தியாவில் ஸ்டேட் பேங்கில்
2. பெரியார் அவர்கள் வீரமணியிடம் சொன்னபடி விடுதலையில் கட்டுரை எழுதினார்.
நடந்து முடிந்த விஷயங்களுக்கு இவ்வளவு ஆனபிறகும் வாய்ப்பு என பேசுவது எங்ஙனம்? இருக்கிறதா இல்லையா என பார்க்க எவ்வளவு நேரம் ஆகிவிடுமாம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment