6/06/2008

டோண்டு பதில்கள் - 06.06.2008

அனானி (30.05.2008 காலை 07.45-க்கு கேட்டவர்):
1. ஒரே நாளில் பலர் பல நாள் கேட்ட கேள்விகளுக்கு பதில் எழுத (தட்டச்சு செய்ய)தங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகிறது? (சாதாரணமாக 10 கேள்விகளை தட்டச்சு செய்யவே 30-லிருந்து 45 மணித்துளிகள் ஆகிறதே. ஆங்கிலத் தட்டச்சு தெரிவதால் இது தங்களுக்கு சாத்தியமாகிறதா?) விளக்கவும்.
பதில்: பதில்களை நான் யோசித்து போடுவதால் அவற்றின் வாக்கியங்கள் எனது கட்டுப்பாட்டில் உள்ளன. I think at the typewriter என்று எனது தந்தை நரசிம்மன் அவர்கள் கூறுவார். அதாவது முதலில் எழுதி வைத்து கொண்டு அதை நகலெடுத்து தட்டச்சுவது இல்லை. ஆகவே எண்ண ஓட்டங்களுக்கேற்ப தட்டச்சு முன்னேறுகிறது. இம்மாதிரியான சிருஷ்டியில் ஈடுபடும்போது காலம் செல்வது மனதில் உறுத்தாது. உதாரணத்துக்கு உங்களது கேள்வியை மட்டுறுத்துவதற்கு முன்னரே நகலெடுத்து புதிய பதிவுப் பக்கத்தைத் திறந்து ஒட்டி விட்டேன். பதில் மனதுக்கு உடனே தோன்ற இப்போதே தட்டச்சும் செய்து விடுகிறேன். மற்ற கேள்விகளும் அம்மாதிரிதான் டீல் செய்யப்படுகின்றன. அவை வந்த உடனேயே இங்கு அதை நகலெடுத்து ஒட்டுவதால் கேள்விகளின் கேட்கப்படும் வரிசையில் அவற்றின் விடைகளும் வருகின்றன. சில கேள்விகளுக்கு பதிலளிக்க அவகாசம் தேவை என்றால் அவற்றை அப்போதைக்கு அப்படியே விடுகிறேன். அடுத்து 7 நாட்கள் இருக்கின்றனவே. எப்போது விடை தோன்றுகிறதோ, உடனேயே பதிப்பதில் என்ன பிரச்சினை? மற்றப்படி ஆங்கிலத் தட்டச்சு எனக்கு தெரியாது. மொழிபெயர்ப்புக்காக கணினி வாங்கிய கடந்த ஆறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான ஆங்கில, ஃப்பிரெஞ்சு, ஜெர்மன், தமிழ்ப் பக்கங்களை நிரப்பிய பயிற்சிதான் எனது வேகமான தட்டச்சுக்கு காரணம். தமிழில் ஃபோனெட்டிக் முறையிலேயே நான் மிக வேகமாக தட்டச்சு செய்ய முடிகிறது.

ஷிவாத்மா:
1. கீதையின் சாராம்சங்களை முன்னிறுத்தி ஒரு கேள்வி : கருமமே கண்ணானவன் பலன் எதிர்பாராமல் கடமையை செய்தல் இருக்க, தன் கடமை இதுதான், இன்னதுதான் என தெளிதல் எவ்வாறு? எப்படி? கர்மயோகியாக தீர்மானித்தவன் தன் கர்மம் பற்றின தெளிவு பெறுதல் எப்படி? உதாரணத்துக்கு: தந்தையாக இருந்தால்தானே, இருக்க தெளிந்தால்தானே தந்தையின் கடமை புலப்படும்?
பதில்: அதாவது கடமையை செய்கிறோம் என்ற உணர்வில் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா? ஆனால் அப்போது தேவையின்றி ஒரு கர்வம் உங்களுக்குள் புகும் வாய்ப்பு உண்டாகி விடுமே. உங்களை நீங்களே முதுகில் தட்டிக் கொள்ளும் பாவனை ஆகிவிடுமே. தந்தையானவன் தன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்பது பொதுவிதி. அதற்கேற்ப நீங்கள் செயல்படும்போது சில பிரச்சினைகள் வரலாம். அதனால் எல்லாம் மனம் தளராது கடமையாற்றினால் பிரச்சினைகள் தானே விலகும் அல்லது ஏதாவது ஒரு வழியில் உதவி கிடைக்கும், அதுவும் நீங்கள் எதிர்பாராதபோது. ஒரு கடமை முடிந்ததா, அத்துடன் எல்லாம் முடிந்தது என சோம்பியிருக்கலாகாது. வேறு கடமைகள், சவால்கள் உங்கள் முன்னே வரும், அல்லது அவற்றை தேடிப்போகவும். மலைக்காது செயல் புரியவும்.

கூடுதுறை:
1) எப்படியும் ஏமாற்றத்தான் போகிறார்கள் என்று தெரிந்தும் நமது மக்கள் மட்டுமே எப்படி மோசடி கம்பெனிகள், லோன் வாங்கிதருகிறேன் என்பவர்கள், டேட்டா என்ட்ரி வேலை மற்றும் வீட்டிலிருந்தே வேலை ஆகிய வகைகளில் ஏன் பணம் போடுகிறார்கள்???
பதில்: நிறைய பேர் தெரிந்தே இதில் செல்கிறார்கள். உதாரணமாக மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் முதல் இரண்டு தளங்களுள் வருபவர்களுக்கு பணம் கிடைக்கும். அதற்குள் தாங்கள் வந்துவிடலாம் என்ற அசட்டு எண்ணமே இதற்கு காரணம். கொடுத்த துட்டுக்கு ஏற்ற ரேங்கில் புது கம்பெனியில் வேலை கொடுக்கும்போதே தெரிந்து கொள்ளலாமே இது மன்னார் அண்ட் கம்பெனி என்று. கல்ஃபுக்கு அழைத்து செல்கிறேன், மலேசியாவுக்கு அழைத்து செல்கிறேன் என்று பலர் பல முறை ஏமாற்றியதை பற்றி படித்த போதும் போய் புதிதாக ஏமாறுபவர்களை பார்த்தால் கோபம்தான் வருகிறது.
2)யட்சன் கேட்ட கேள்விபதில்களை பூராவையும் ஒரு பதிவில் அளித்தால் நமது நாத்திக சிகாமணிகள் சிறிதாவது புரிந்து கொள்வார்களே?
பதில்: போட்டால் போயிற்று.
3) நமது பாரதத்தையும் அமெரிக்கா மாநிலங்களை கோடு போட்டது பிரித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் அல்லவா?
பதில்: சரிதான் சாதாரண சாலையே தலைவரது வீடு அல்லது நிலங்கள் குறுக்கே வந்தால் பணிவுடன் வளைந்து செல்கிறது. இந்த அழகில் மாநிலங்களின் எல்லையும் அமெரிக்கா மாதிரி அமைய இயலுமா. ஒன்று ஞாபகமிருக்கட்டும். அமெரிக்காவில் வெட்ட வெளிகள் அதிகம். ஆகவே நேர்க்கோடு எல்லாம் போட்டு கொள்ள முடியும். இங்கு அப்படியில்லை.
4)அனானி கேள்விகள் அதிகம் வருகிறேதே எப்படி??? கலைஞர் கேள்வி பதில்கள் பாணியா?
பதில்: கூடுதுறையே ஒரு அதர் ஆப்ஷனில் வருவதுதானே. இன்னொருவர் கூடுதுறை என்னும் பெயரில் அதர் ஆப்ஷனிலோ அல்லது அனானியாகவோ வந்தால் உங்களால் ஒன்றும் செய்ய இயலாதே. அதற்குத்தான் பிளாக்கராக வந்து போடுவதே நல்லது. உங்கள் ப்ரொஃபைலில் போட்டோ இருந்து, உங்கள் பிளாக்கர் டிஸ்ப்ளே பெயரில் என் விஷயத்தில் இருப்பதுபோல உங்கள் பிளாக்கர் எண்ணை அடைப்புக் குறிக்குள் போட்டால், உங்கள் அடையாளத்தை யாருமே திருட இயலாதே. மற்றப்படி கேள்விகள்தான் முக்கியம். வசைகள் இல்லாது கேள்விகள் வந்தால் அவை வந்த வரிசையில் ஏற்றப்படுகின்றன.

ஸ்ரீ:
1. How are you able to openly proclaim your caste, mock at Karunanidhi and support Modi openly? Have you ever faced any threats (other than the poli episode) or any attacks? How are you able to roam around freely after making strong remarks?
பதில்: நான் இருப்பது இந்தியாவில். இங்குள்ள ஜனநாயக உரிமை உலகில் வெகு சில மற்ற நாடுகளில்தான் உண்டு என்பதை மறக்கலாகாது. மேலும் நேருக்கு நேர் நின்று கருத்தை தைரியமாகக் கூறினால் ஒத்து கொள்வதில் மற்றவர்கள் தயக்கம் காட்டுவதில்லை.
2. What is the best advice you have ever got from anybody?
பதில்: சமீபத்தில் 1976-ல் நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் சி.ஆர்.பி.எஃப். வளாகத்தில் வேலை செய்தபோது ஒரு திருட்டு நடந்தது. அப்போது போலீஸ் நாய் வந்தது. எல்லோரும் அதைப் பார்க்க சென்றனர். நானும் போக முயன்றேன். என் நண்பர் காண்ட்ராக்டர் பால் பாக்கியசாமி அவர்கள் என்னை தடுத்தார். அவர் சிம்பிளாக ஒன்று சொன்னார். "ராகவன் வந்திருப்பது ஒரு நாய். உன்னிடம் ஏதேனும் உணவு வாசனை இருந்தாலும் உன் மேல் அது தாவும் வாய்ப்பு உண்டு. பிறகு உன்னை போலீசார் கவனிக்கும் கவனிப்பில், இந்திரா காந்தியை கொல்ல நடக்கப்போகும் முயற்சியில் உனக்கு பங்கு இருப்பதாக நீயே ஒப்பு கொண்டுவிடுவாய். ஆகவே அப்பக்கமே போகாதே. வந்திருப்பது ஆஃப்டர் ஆல் ஒரு நாய் என்பதை மறவாதே" என்றார். இதற்கு மேல் சிறந்த அட்வைஸ் இதுவரை யாரும் எனக்கு தரவில்லை.
3. Do you think intercaste marriages are workable in the long run? Do you think the current generation will be able to successfully use that as an antidote for casteism?
பதில்: கலப்பு திருமணத்தை எல்லோரும் ஆதரிக்கின்றனர் மற்றவர்கள் விஷயத்தில், ஆனால் தத்தம் திருமணத்துக்கு முறைப்பெண் மற்றும் முறைப்பையனையே நாடுகின்றனர். இதுதான் நான் பொதுவாக பார்த்த நிலைமை. கலப்பு திருமணம் பற்றி நான் போட்ட பதிவைப் பாருங்கள்.
4. what is your comment on the anbumani-venugpoal clash?
பதில்: அதுதான் முடிந்து விட்டதே. அன்புமணியும் மீசையில் மண் ஒட்டவிலை என்று கூறிவிட்டாரே.

அனானி: (30.05.2008 மாலை 09.46-க்கு கேள்வி கேட்டவர்):
1. சோ ராமசாமி அவர்களின் பேரில், சோ என்பதன் விரிவாக்கம் என்ன விளக்கவும்.(initial இல்லை என்பார்கள்)
பதில்: இது பற்றி சோ அவர்களே தனது "அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்" புத்தகத்தில் 50-ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார். பகீரதன் அவர்கள் எழுதிய 'தேன்மொழியாள்' என்னும் கதையை சோவின் ட்ரூப் நாடகமாக்கி போட்டபோது இவருக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. சோ எழுதுகிறார்: "தேன்மொழி நாடகத்தில் எனக்காக ஒரு சிறு பாத்திரம் சிருஷ்டி செய்யப்பட்டது. அதற்கான பெயரை என்னையே வைக்க சொன்னார்கள். வீட்டில் என்னை சிறுவயதிலிருந்தே 'சோ' என்றுதான் அழைப்பார்கள். வேறு பெயர் தோன்றாததால் அந்தப் பெயரையே வைத்து விடுமாறு சொன்னேன்". அவ்வளவுதான் விஷயம்.
2. இவரைப் போல் சொந்தப் பெயர் கடந்து ஒரெழுத்துப் பெயருடன் பத்திரிக்கை உலகில் பகழ் பெற்றவர் யாரேனும் உண்டா?
பதில்: யாராவது சீனாக்காரர் யீ, வூ, க்யூ என்று இருக்கலாம். யாருக்கு தெரியும்?
3. ஆங்கிலப் புலமை இருந்தும், வடஇந்திய அரசியல் விமர்சனத்தை தாங்கிய ஆங்கில நாளிதழ் தொடங்க ஏன் முயற்சி செய்யவில்லை? செய்து வெற்றி பெற வில்லையா? பிக்விக் என்னும் ஆங்கில பத்திரிகை நெருக்கடி காலக் கட்டத்தில் ஆரம்பித்தார். அது நிலைத்து நிற்கவில்லை. தனது ஆங்கில நடை மண்வாசனையுடன் இருக்காது, வெறுமனே தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தது போலிருக்கும் என்பதை உணர்ந்தவர் அவர்.
4. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து தைரியமாக (M.G.R ஆட்சி, ஜெயலலிதா அவர்களின் 10 ஆண்டுகால ஆட்சி, கலைஞரின் 10-15 கால ஆட்சி) விமரிசனம் செய்து வரும் சோ போல் வேறு யாரும் இருக்கிறார்களா?
பதில்:பயமில்லாமல் பணிபுரிபவர்கள் பலர் உள்ளனர். எனக்கு உடனே நினைவுக்கு வருபவர் நக்கீரன் கோபால்.
5. சில அரசியல் கட்சிகளை தீவிரமாக எதிர்த்து விமர்சித்ததால் ரசாயனம் கொண்டு அவர் தலை முடி வளரா வண்ணம் செய்தாக ஒரு வதந்தி பரவியது (சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால்) அதில் உண்மை உண்டா? கட்டுக் கதைதானா?
பதில்: வடிகட்டின பொய்.
6. திரைப் படத்துறையில் "நாகேஷ்" மேல் கோபம் கொண்டு MGR, சோ அவர்களுக்கு தன் படங்களில் முன்னுரிமை வழங்கியும் ,நடிப்புத் திறமை இருந்தும் (நகைச்சுவையில்) பெரிய வெற்றி கிட்டவில்லையே? (என் அண்ணன், தேடிவந்த மாப்பிள்ளை, அடிமைப்பெண்,....)
பதில்: அதற்கான மனோபாவம் சோவிடம் இல்லை. எம்ஜிஆர் அவர்களுக்கு நீங்கள்தான் இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அது சோவால் முடியாது. மற்றப்படி இருவரும் நண்பர்களே. தனிப்பட்ட முறையில் பல தலைவர்களுடன் நட்புடன் இருந்தாலும், அதை ஒரு முறைகூட தனது சொந்த லாபத்துக்காக உபயோகப்படுத்துபவ்ர் இல்லை சோ. அதுதான் அவர் பாட்டுக்கு தன் வேலையை கவனிக்கும் ஆற்றலை அவருக்கு தருகிறது.
7. முகமது பின் துக்ளக் வெற்றி பெற்றது போல் பின்னாளில் வெற்றி தொடராததற்கு" துக்ளக்" பத்திரிக்கையில் ஈடுபாடு காரணமா?
பதில்: என்ன கூறுகிறீர்கள்? இன்றுகூட சோ நாடகம் போட்டால் - போடமாட்டார் என்றுதான் நினைக்கிறேன் - அது ஹவுஸ்ஃபுல்லாகத்தான் இருக்கும். என்ன, அவரது விவேகா ஃபைன் ஆர்ட்ஸை சேர்ந்த எல்லோருக்குமே வயதாகி விட்டது என்பதால் நாடகம் போடுவது என்பது துர்லபமே.
8. துக்ளக் பத்திரிக்கையின் விற்பனைச் சரிவு "மாயவரத்தார்" கோபப்படுவது போல் உண்மையா?
பதில்: விற்பனை சரிவு ஒன்றும் என் கண்ணுக்கு புலப்படவில்லையே.
9. நக்கீரன், தராசு, நெற்றிக்கண் இவைகளின் செய்தி தரத்தைவிட துக்ளக் நன்றாக இருந்தும் இக்கால தலைமுறையினருக்கு பிடிக்கவில்லையா?
பதில்: துக்ளக்குக்கு எப்போதுமே இளைய தலைமுறை வாசகர்கள் உண்டு. இதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். துக்ளக் ஆண்டு விழா கூட்டங்களுக்கு வரும் இளைஞர்களை பார்த்தாலே புரியும்.
10. ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர் வாரத்துக்கு இரு முறை வந்து விற்பனையில் சக்கைப்போடு போடும் போது, துக்ளக்குக்கு என்ன ஆச்சு? கால மாற்றம் காரணமா?மக்கள் புது trend ஐ விரும்புவதாலா? (fast-faster-fastest)
பதில்: மேலே உள்ள கேள்வியின் பதில்தான் இதற்கும்.

அனானி (01.06.2008 காலை 05.06-க்கு கேட்டவர்):
1. கடைசியில் கர்நாடக அரசியலில் ஜாதியின் ஆதிக்கம்தான் (லிங்காயத் மற்றும் ஒக்கலிகர்)பா.ஜ.க.-வை ஆட்சிக் கட்டில் ஏற வழிவகை செய்துள்ளது.ஒக்கலிகர் வாக்குகளை காங்கிரசும்,ம.த.ஜ.தளமும் பிரிக்க மீண்டும் ஓட்டு சதவிதங்களின் வேடிக்கைதானே சார்?
பதில்: ஜாதி சமன்பாடுகளை பார்க்காத ஏதேனும் கட்சியை உங்களால் காட்ட இயலுமா?
2. தனது ஜாதித் தலைவர்கள் அரசியல் கொள்கை கொலைகளையும், கோமாளி வித்தைகளையும் செய்தாலும் ஓட்டுப் போடும் போது கண்ணை மூடும் போக்கு மாறினால்தான் நல்லது அல்லவா?
பதில்: அதில் என்ன சந்தேகம்?
3. குஜாரத்தில் இந்த ஜாதிப் பிரச்சனை,தாக்கம் சுத்தமாக இல்லையா? காந்தியின் பிறந்த மண்ணிற்காவது அந்தப் பெருமையுண்டா?
பதில்: யார் சொன்னது? குஜராத்திலும் ஜாதி சம்பந்தமான கணக்குகள் உண்டு. ஆனாலும் எல்லோரையும் அதை உபயோகித்தே மோடி அணைத்து சென்று நல்லாட்சியும் தருகிறார். அதாவது மோடி முதலில் வல்லவர் அத்துடனேயே நல்லவர். குஜராத்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
4. காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் போல் எடியூரப்பாவும் அண்டை மாநில தண்ணிர் பிரச்சனைகளை பேசி தீர்க்கலாம் என்பது பிரச்சனையின் தீவிரத்தை குறைத்து கடைசியில் நமக்கு உலகம் போற்றும் பொறுமைக்காரன் பட்டம் கொடுக்கவா?
பதில்: கர்நாடகாவில் யார் முதல்வராக வந்திருந்தாலும் தமிழகத்துக்கு பிரச்சினை தீராது. பெங்களூரு குடிநீர் திட்டமும் ஹொகனேக்கல் திட்டமும் ஒன்றாக பேசப்பட்டு இருபக்க ஒப்புதல்களுடன் தீட்டப்பட்டன. அப்போதே பெங்களூரு திட்டம் முடிந்து விட்டது. தமிழக அதிமுக, திமுக அரசுகள் முறைபோட்டு தூங்கின. இப்போது நாம் அனுபவிக்கிறோம் என்பதுதான் நிஜம்.
5. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை கட்டுப் படுத்தும் நோக்கோடு செயற்கையாக பெட்ரோல் விலையுர்வினை தனது வல்லமையை பயன்படுத்தி அமெரிக்கா செய்ய முயல்வதாக வல்லுனர்களின் கருத்தை ஜு.வி ல் பார்த்தீர்களா? அணுஆயுதத்தடை மற்றும் 123 ஒப்பந்தங்களில் இந்தியாவின் கையெழுத்து கிடைக்காது என்றா கோபமா?
பதில்: அமெரிக்காவுக்கு இத்தனை செல்வாக்கு கிடையாது.

தென்காசி விஸ்வநாதன்:
1. புதிய குடியிருப்புகளில் வாழும் சொந்தக்காரார்களால் உருவாக்கப்பட்டு நன்றாக பராமரித்து வரும் இந்து பிள்ளையார் கோவில்களை, வருமானம் கூடிவிட்டது எனக் காரணம் கூறி இந்து அறநிலயத்துறையின் கட்டுப்பாட்டில் எடுப்பதை நீதிமன்றம் மூலம் தடுக்கமுடியாதா?
பதில்: தடுக்கலாம், தடுக்க வேண்டும்.
2. அங்கு பூஜை, புனஸ்காரங்கள் முன்பு நடந்தது போல் இல்லை எனும் காரணத்தை நீதிமன்றம் ஏற்குமா? சட்டம் என்ன சொல்கிறது? சட்டத்தின் முன் அனைவரும் சமாம் என்பது இதில் என்னாயிற்று?
பதில்: அதுதான் இந்திய அரசின் போலி மதசார்பற்ற தன்மை.
3. அரசால் சர்ச், மசூதி இவைகள் மேல் கைவக்க முடியவில்லையே? மைனாரிட்டி
தரும் சட்ட பலமா?அவர்களின் ஓட்டு பல ஒற்றுமையா?

பதில்: மேலே உள்ள கேள்வியின் பதில்தான் இதற்கும்.
4. கடவுளை மற, கடவுள் கிடையாது எனும் பகுத்தறிவு கட்சிகளின் ஆட்கள் அறங்காவலராய் அமர்ந்து செய்யும் அநீதிகளை கூட தடுக்க முடியாத கையாலாகாத்தனம் எப்போது மாறும்?
பதில்: உங்கள் கோபங்களையெல்லாம் ஓட்டளிப்பில் காட்டுங்கள். அன்றைக்கு பார்த்து சிவாஜி ஸ்பெஷல் ஷோவுக்கெல்லாம் ஓடக்கூடாது.
5. இந்துக்களில் கடவுள் நம்பிக்கை யுள்ளவர்கள்,கடவுளை பூஷிப்பபவர்கள் இப்போது மிக அதிமாக கோவில்களில் தெரிகிறார்கள். தங்களைப் போன்ற பெரியவர்கள், ஆன்மிக வதிகள்,உண்மையான சாமியார்கள்,மத குருக்கள், துணை கொண்டு பக்தியில் பிரகாசிக்கும் பல இனப் பிரிவு ,குறிப்பாக தென் மாவட்டங்களில் நாடார் சமுதாயம்,மேற்கு மாவட்டங்களில் கவுண்டர்,நாயுடு இனம், ஆகியோரின் உண்மை பக்தியை அடிப்படையாக வைத்து வரும் தேர்தலில் எல்லாக் கழகங்களுக்கும் எதிர் வாக்குகள் மூலம் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால் ஒரு நல்ல மாற்றம் வருமா?
பதில்: என்னை பெரியவர்களில் பிரிவில் சேர்க்க எந்த பிரமேயமும் இல்லை. அதற்கான தகுதி எனக்கில்லை. ஒன்றுமில்லை இந்துக்கள் சேர்ந்து பகுத்தறிவு வாதி கட்சிகளை ஓரிரு தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தாலே போதும். அது கூட இல்லாமல் கருணாநிதி அவர்கள் ராம சேது லெவலுக்கு வந்து விட்டார்.

தென்காசி:
1. தமிழகத்தில் முதல் நிலை அந்தஸ்து பெற்ற கோவில்களில் பழனி,திருச்செந்தூர் ஆகியவற்றின் ஆண்டு வருமானம் பல லட்சங்கள் என்றபோது அங்குள்ள சீருடைப் பணியாளர்கள் பக்தர்களிடம் காசு கேட்டு கை யேந்துவது ஏன், நல்ல சம்பளம் கொடுக்கப்படவில்லையா? இல்லை எல்லோருக்கும் உள்ள் பற்றாக் குறையா? கையூட்டு கைங்கரியங்களும் விடுதிகளில், சிறப்பு வழிபாடு, பிரசாத ஸ்டால் ஆகியவற்றில் லஞ்சம் போற்றி போற்றி என வேறு அப்பகுதி ஊழியர்கள், திருந்தவே மாட்டார்களா?
பதில்: எனது இப்பதிவில் உள்ள பின்னூட்டங்களைப் பார்க்கவும்.
2. சரி பாவம் ஊழியர்கள் தமிழகத்தின் தாரக மந்திரமே கூடி கொள்ளையடி என்று ஆகிவிட பிறகு என்ன சொல்ல? ஆனால் வேதம் படித்த கடவுள் தண்டிப்பார் என்பதில் நம்பிக்கை உள்ள பரம்பரை முக்காணி ஐயர்களும் பக்தர்களை ஏமாற்றலாமா?
பதில்: மேலே உள்ள கேள்வியில் பதில் உள்ளது.
3. இவர்களையெல்லாம் கேரள கோவில்களுக்கு refresher training or in service training கொடுத்தால் நல்லது?
பதில்: அங்கும் சபரிமலை கோவிலில் பிரச்சினைகள் உண்டு போலிருக்கே.
4. நமது கோவில்களில் பணம் படைத்தவருக்கு தரப்படும் முன்னுரிமைகள் தேவையா?
பதில்: இது ஒரு தவிர்க்க முடியாத நிலையாகி விட்டது. திருப்பதி கோவிலில் இப்போதும் தர்ம தரிசனம் உண்டு, ஆனால் அதற்கு கிட்டத்தட்ட இரண்டு நாள் பிடிக்கும் என அறிகிறேன். ஆகவே ஸ்பெஷல் டிக்கெட்டுகள்.எல்லாமே ஒரு வியாபாரம் போல ஆகிவிட்டது. அதனாலேயே பெரிய கோவில்களுக்கு போக எனக்கு பிடிப்பதில்லை.
5. ஆந்திரா,கர்நாடக,கேரளா கோவில்களில் அனுசரிக்கப்படும் ஆசாரம், அனுஷ்டானம், அர்ச்சகர்களின் அர்ப்பணிப்பு, பக்தி பரவசத்தோடு செயல்படும் முழு அன்னதானங்கள் இங்கே வேறுமாதிரி இருப்பதற்கு பகுத்தறிவு அரசியல் கட்சிகளும் காரணமா? நமது அர்ச்சகர்களே அரசியல்வாதி போல் நடந்தால்?
பதில்: காலம் கலிகாலம் என்றுதான் கூற வேண்டும்.

அனானி (04.06.2008 காலை 05.33-க்கு கேட்டவர்):
1. டோண்டு ஐயாவும்,பெரியவர் மாயவரத்தாரும் பெருமைபட்ட தாமரையின் கர்நாடக வெற்றிக்கு 1000 கோடிக்கு மேல் செலவழித்த கர்நாடக"வைகுண்ட ராமன்கள்" கள் குவாரி அதிபர்கள் ரெட்டி சகோதரர்கள் பற்றி செய்தி பற்றி கருத்து என்ன?
பதில்: டப்பு இல்லாது தேர்தல்களில் எப்படி வெற்றிபெற இயலும் என நினைக்கிறீர்கள்?
2. ஹோகனேக்கல் கொண்டான் எடியூரப்பா அவர்கள் கர்நாட மாநில "கலைஞர்"(tamil nadu c.m) போல் மொழி,கலாச்சாரம்,தண்ணிர் உரிமை,வாழும் பகுதிகளின் உரிமை இவைகளுக்காக எந்த தியாகமும் செய்வேன் என பேச ஆரம்பித்துவிட்டார் பார்த்தீர்களா?
பதில்: அவருக்கு அண்டை மாநிலத்திலேயே நல்ல முன்னுதாரணம் இருக்கிறாரே.
3. இனி காவேரிப் பிரச்சனை விடாக்கண்டன் கொடாக்கொண்டன் கதைதானா?
பதில்: எப்போதும் போல நிலைமை தொடரும் என அஞ்சப்படுகிறது.
4. குஜராத் முதல்வர் மோடி அவர்களின் ஆட்சி, நிர்வாக,பொருளாதார முறைகளை அங்கு சென்று தெரிய முயலுவதாக செய்திகள். ஆனால் வாஜ்பாய் அவர்களின் வழி நடப்பேன் என்கிறாரே,அத்வானிஜிக்கு எதிரானவரா? (அத்வானிக்கும் -வாஜ்பாயுக்கும் சுமுகம் இல்லை என்பதாக செய்திகள் வந்தன)
பதில்: மோடி ஸ்டைலில் லஞ்சம் இல்லாத, விரைந்து செயல்படும் ஆட்சி நடத்த முடிந்தால் அது கர்நாடக மக்களின் அதிர்ஷ்டமே.
5. ஜாதகப்படி "எடியூரப்பா-எட்டியூரப்பா " மாறியதால் இந்த வெற்றி என்கிறார்கள். பரவாயில்லை (யாகங்கள் நடத்துவோருக்கு நல்ல நேரம்-ஸ்ரீதரின் "காதலிக்கநேரமில்லை" படத்தில் டி.எஸ்.பாலையா சொன்னது மாதிரி பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது). ஏற்கனவே நமது தமிழக அரசியல் (1967 க்குப் பின் வந்த திராவிட கழகங்களின் ஆட்சி, கட்சி இவைகளில் புதிய அணுகுமுறை(கூட்டணி வெற்றிகளை அட்சரசுத்தமாக கணிக்கும் ராஜதந்திரம், மொழிப்பற்று, பிற்பட்டடோர்நலம் பேணல், தண்ணிர் உரிமை காத்தல், இதில் அவர்(அண்ணன் எ(ட்)டியூரப்பா) நல்ல தேர்ச்சி பெற்றுள்ளவர் (பெரிய பிற்பட்ட லிங்காயத் இனத்தை சேர்ந்தவர்) என அவர் வாழ்க்கை வரலாறு சொல்லும் போது நம்மீது "எட்டி" காயாய் காய்ந்து விடக்கூடாது? ("எட்டிக்காய் கசக்கும்" என்பார்கள்)
பதில்: உங்கள் கேள்வி என்ன என்பதையே மறந்து விட்டேன். :))))

அனானி (05.06.2008 காலை 04.28-க்கு கேட்டவர்):
1. 85 வது பிறந்த நாள் கொண்டாட்ட கலைஞரின் ஏற்புரையில் மத சார்ர்பற்ற அரசு-மதநல்லிணக்க அரசு என்று கூறி உள்ளதை பார்க்கும் போது சூரியத்தாமரை மீண்டும் அரசியல் வானில்?
பதில்: இப்போதைக்கு பாஜக திமுக கூட்டு வரும் எனத் தோன்றவில்லை.
2. சேது பாலத்திற்கு கூட "சேது ராம்" என பேர் சூட்ட தயாரய் விட்டார் பார்த்தீர்களா? அனுபவத்தின் கனிவின் உச்சமா?
பதில்: எத்தைத் தின்னா பித்தம் தெளியும்!!!!!
3. துக்ளக், இல கணேசன் போன்ற தாமரை நலவிரும்பிகள் சூரியனின் அருகாமையின் சொந்தங்களை நெருங்குவதாக வரும் பத்திரிக்கை செய்திகள் பற்றி கருத்து யாது, வரவேற்கிறீர்களா?
பதில்: இதில் நிறைய wishful thinking மட்டுமே உள்ளது என நினைக்கிறேன்.
4.அரசியலில் எதுவும் நடக்கலாம்.அப்படி நிலை உருவாகி தேர்தலில் வந்தால் (NDF ல் கலைஞர்) தங்களின் நிலை யாது? வரவேற்பீர்களா? அவரது மீது விமர்சனத்தை தொடர்வீர்களா?
பதில்: வரட்டும், பார்க்கலாம்.
5. விபரீத காலம் விபரீத புத்தி எனச் சொல்லி நடுநிலை வைப்பீர்களா?
(கலைஞரின் அரசியல்,பொது வாழ்வு, நாத்திகம், ஆட்சிமுறை, இட ஒதுக்கீட்டுக் கொள்கை, சிறுபான்மை நலம் பேணுதல், ஆதிக்க சக்திகள் பற்றிய கலைஞரின் பேச்சு ஆகியவற்றில் மீது தங்கள் விமர்சனங்கள் அனல் கக்குகின்றன)

பதில்: கலைஞர் தமிழறிஞர் என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதற்குமேல் கருத்து கூற எதுவும் இல்லை.

அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

27 comments:

P B said...

கீதையின் சாராம்சங்களை முன்னிறுத்தி ஒரு கேள்வி : கருமமே கண்ணானவன் பலன் எதிர்பாராமல் கடமையை செய்தல் இருக்க, தன் கடமை இதுதான், இன்னதுதான் என தெளிதல் எவ்வாறு? எப்படி? கர்மயோகியாக தீர்மானித்தவன் தன் கர்மம் பற்றின தெளிவு பெறுதல் எப்படி? உதாரணத்துக்கு: தந்தையாக இருந்தால்தானே, இருக்க தெளிந்தால்தானே தந்தையின் கடமை புலப்படும்?

-Indha kelvi ku padhil, "shasthrame pramanam". Oruvanin kadamai edhu endru solvadharku sasthra arivu thevai. Aanal adhu kidapadhu miga kadinam. Agaiyal sadharanargaluku munnorgal periyorgal sellum padhai dhan aadharam. Thaanum adhanaalaye kadamai seivadhai krishnar githaiyil koori irukirar. Indha oru karanathukagave maha gnanigalum achara anushtangalai vidadhu irukirargal.

Anonymous said...

எம்.கண்ணன், பாங்காக்

கேள்விகள்

அ) அழகிரி முதல்வராகக்கூடிய சான்ஸ் உண்டா ? அப்படி நடந்தால் தமிழ்நாடு எப்படி இருக்கும் ?

ஆ) சமீபத்தில் (போன வாரம் தான் சார் !) அர்ஜுன் சிங் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினாரே. பிறந்த நாள் வாழ்த்து சொல்ல என காரணம் சொன்னாலும் அவரும் முதல்வரும் சுமார் 1/2 மணிநேரம் தனியே பேசியுள்ளனரே. அப்போது என்ன மொழியில் பேசிக்கொள்வார்கள் அல்லது முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன் உடன் இருந்திருப்பாரா ? முதல்வருக்கு ஆங்கிலம் தெரியும் என்றாலும் தடையற்று பேச உதவி தேவைப்பட்டிருக்கும் அல்லவா ? இதுமாதிரி துபாஷி பொறுப்பு செய்திருக்கிறீர்களா ?

இ) த்ரிஷா கிழவி மாதிரி இருக்கிறார். அவரிடம் என்ன இருக்கிறது என விஜய், விக்ரம் போன்ற நடிகர்கள் ஜோடி சேர சிபாரிசு செய்கின்றனர ?

ஈ) சமீபத்தில் 2004 ஆம் ஆண்டு பெட்ரோல், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை என்னவாக இருந்தது. தற்போதைய விலை என்ன என ஒரு பட்டியல் போடுவீர்களா ? இதற்கு என கன்ஸ்யூமர் இதழ் ஏதேனும் உள்ளதா ?

உ) சுப்பிரமணியன் சாமி யாரை நம்பி அரசியல் நடத்துகிறார் ? அவருக்கு ஏன் யாராவது சப்போர்ட் செய்கிறார்கள். அவருக்கு அமெரிக்காவிலிருந்து சப்போர்ட் கிடைக்கிறதா ?

ஊ) ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேட்டி எடுக்க சந்தர்ப்பம் கிட்டுமானால் என்னென்ன கேள்வி கேட்பீர்கள் ? (கரன் தாபர் பேட்டியை நியாபகம் வைத்து பதில் சொல்லவும்)

எ) நீங்கள் ஒரு நாள் முதல்வராக ஆனால் அந்த ஒரு நாளில் என்னென்ன முடிவுகளை அமல் படுத்துவீர்கள் ? ஏன் ?

ஏ) 'எங்கே பிராமணன்' கதையில் சோ சொல்லவருவது என்ன ? முடிவு சரியாக அமையவில்லை என தோன்றுகிறது. சோ அவர்கள் அந்த நாவலில் அசோக் மூலமாக சொல்லியுள்ள படி நீங்கள் தற்போதைய உங்கள் பழக்கவழக்கங்களை வைத்து பிராமணர் என சொல்லிக்கொள்ள முடியுமா ?

ஐ) யாகாவாராயினும் நா காக்க - காவாக்கால் சோ காப்பர் - சொல்லிழுக்குப் பட்டு. இந்த குறளில் உள்ள 'சோ' வுக்கு அர்த்தம் என்ன ?

ஒ) உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது ? ஏன் ? (போண்டா என சொல்லவேண்டாம்)

ஓ) உங்கள் வீட்டில் காலையில் டிபனா ? அல்லது 10- 11 மணி நேராக சாப்பாடா ? டிபன் என்றால் தினமும் வெவ்வேறு வகையா இல்லை இட்லி, தோசை, உப்புமாதானா ?

ஔ) சன் டிவி திருவிளையாடலில் ஔவையார் வேஷத்திற்கு மனோரமா பொருந்தவில்லையே ? இந்தக் கால நடிகைகளில் யார் அந்த வேஷத்திற்கு பொருந்துவர் ?

dondu(#11168674346665545885) said...

அடுத்தவாரப் பதிவுக்கு முதல் 12 கேள்விகளை கேட்ட பாங்காக் கண்ணனுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி P B அவர்களே. நான் பகவத் கீதையை ஆழ்ந்து படித்தவன் இல்லை. ராஜாஜி அவர்கள் எழுதிய அதன் சாரத்தைத்தான் படித்துள்ளேன். உங்கள் பின்னூட்டத்தின்படி இதே கேள்வி அருச்சுனனால் எழுப்பட்டு கிருஷ்ணரால் பதிலளிக்கப்பட்டது அறிகிறேன். இது சரியான புரிதலா.

நல்ல வேளையாக எனக்கு இப்பதில் முன்னமேயே தெரியாது போயிற்று. நான் அளித்தது எனது புரிதலில் வந்த பதில். காரியம் நடக்குமா நடக்காதா என்று ரொம்ப நேரம் குழம்பாது, அதன் தேவை உணர்ந்து உடனேயே செயலைத் துவக்குவது நல்லது. பிறகு தானே விடைகள் வெவ்வேறு ரூபங்களில், தருணங்களில் வருகின்றன. இது நான் வாழ்க்கையில் நேரில் கண்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Respected dondu sir,

1.Kindly give details about the petrol pricing in india ,like basic price,different state/centarl taxes.

2.As all the polical parties know that petrol price raise is a must, even then agitations/hartal ..etc ? are they not ashamed?

3. Who is stopping left parties to withdraw support to central government?

4. your BJP is also doing the same polical game. is it good ?

5. What about modi's gujarat state taxes on petrol?( less or more)

இத்துப்போன ரீல் said...

தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை தமிழ் கூறும் நல்லுலகத்திற்க்காக!கனிமொழி அதிபன் போஸ் ஆக இருந்தவர் கனிமொழி அரவிந்தன் ஆனது ஏன்? கனிமொழி அரவிந்தன் தற்போது கனிமொழி கருணாநிதி ஆனது ஏன்?

இத்துப்போன ரீல் said...

பாமரன் சூத்திரன் கீழோன் கடைசாதி என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி முன்பு ஆட்சிக்கு வ்ந்த காலத்தில் இருந்தே ஒரு அரசனும் இப்படி இருக்க முடியுமா? என்ற அளவிற்க்கு ஆடம்பர விழாக்களும்,பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்க காரணம் என்ன?
1.மக்கள் இழிச்சவாயர்கள் என்பதாலா?
2.அதிகார போதையாலா?
3.இப்படி வாயும் சொல்லும் வேறு,வேறு என்று புரியாத முட்டாள்கள்தான் தாம் தன்னால் ஆளப் படப்போகிறவர்கள் என்பது தெரிந்ததாலா?.

இத்துப்போன ரீல் said...

இணையத்தில் மிக அதிகமாக பிராமண எதிர்ப்பு இருக்கக் காரணம்
1.மற்ற சாதியினர் தாமும் வளர்ந்து விட்டோம் என்பதைவெளிக்காட்டவா? அல்லது
2.நிஜமாகவே திக,திமுக வினர் அதிகமா?அல்லது
3.நிஜமாகவே பிராமணர்களால் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாலா?

இத்துப்போன ரீல் said...

இப்போது இணையத்தில் திரு சோ வைத் தாக்க பல கும்பல்கள் கிளம்பியுள்ளதைப் பற்றி?...

இத்துப்போன ரீல் said...

அரசியல் போதும் என்று கருணாநிதி வெறுக்க வாய்ப்புள்ளதா?

இத்துப்போன ரீல் said...

திரு ரஜினி அவர்களைப் பற்றி?
அரசியலாகட்டும்.அல்லது அவரது தொழில் ரீதியிலாகட்டும்.

இத்துப்போன ரீல் said...

காங்கிரஸ் ஆட்சி போன பிறகு கருணாநிதி ஆட்சி கவிழும் வாய்ப்பு உண்டா?

இத்துப்போன ரீல் said...

இதுவரை கேட்ட மொக்கை கேள்விகளில் கடைசி...
கலைஞர் டிவியின் தகவல் படி தமிழுக்கு 85 வயதுதான் ஆகிறது.இதனால் தமிழுக்கு செம்மொழி ஆகும் வாய்ப்பு பறிபோகுமா?...

இத்துப்போன ரீல் said...

//இது சரியான புரிதலா.//
//எனது புரிதலில் //
டோண்டு சார் பால்குமாரன் பாணியில் எழுதாதீர்கள்.உடம்பு ஒரு மாதிரியாயிடுது! :)

P B said...

உங்கள் பின்னூட்டத்தின்படி இதே கேள்வி அருச்சுனனால் எழுப்பட்டு கிருஷ்ணரால் பதிலளிக்கப்பட்டது அறிகிறேன். இது சரியான புரிதலா.

- Enaku therindha varai arjunan en kadamaiyai seiya vendum endru ketkiran, naan enna seiya vendum endrellam ketkran, ivar sonnadhai pola epdi en kadamai edhu enbadhai arivadhu endru ketkavillai. Arjunan sirandha yogi (Gudaakesha - thookathai vendravan), adhanal avan adhai ketkavillai endru ninaikiren. Aaanal krishnar avanai thirumba thirumba kshathriya dharmathil nirka solgirar, svadharmathil oruvan nirka vendiyadhin avasiyathai koorigirar. Athilirundhu svadharmame karma thuku adipadai enbadhum, athai shathrame kaati kudukiradhu endru periyavargal solgirargal. Dharmam migavum sookshamamanadhu, athai arivadharku periyavargal vazhkaiyai parthu padika vendum endru mukkoor narasimmachariyar arpudhamaga kurai ondrum illaiyil vilaki irupar.

Anonymous said...

//இத்துப்போன ரீல் said...
தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை தமிழ் கூறும் நல்லுலகத்திற்க்காக!கனிமொழி அதிபன் போஸ் ஆக இருந்தவர் கனிமொழி அரவிந்தன் ஆனது ஏன்? கனிமொழி அரவிந்தன் தற்போது கனிமொழி கருணாநிதி ஆனது ஏன்//

ஏ தமிழ்ச் சுமுதாயமே ஆதிக்க சக்திகளின் மதவாத தந்திரங்கள் அங்கொன்று இங்கென்று வெற்றி பெற்றவுடன் அதேபாணியில் தமிழகத்திலும் அந்த நச்சு ப் பாம்புகள் படம் எடுக்க சிலர் மகுடி வாசிக்க முயலு வதை முளையிலே கிள்ளி எறிய
வேண்டும்.
இந்த சுயநல சக்திகள் தான் தமிழர்களின் வாழ்வை வளம் கொழிக்கச் செய்யும் சேது சமுதிரத் திடத்துக்கு இடையுறு செய்து மகிழும் தமிழினத் துரோகிகள்
-துக்ளக் ஒண்ணரைப்பக்க நாளேடு சாயலில்.

Anonymous said...

ஒரு கற்பனை-ஒப்பிட்டு பார்த்தல்-
" இளையா பிள்ளை என்றால் எடுப்பார் கை பிள்ளையா?'-ஸ்டாலின் குமுறல்( நன்றி-J.V dated 8-06-2008.)

திருவிளையாடல் -2008

கலைஞர்- உலக நாயகன் பரமசிவன்

தயாளு அம்மையார்- சக்தியின் அம்சம் அன்னை பார்வதி

ராஜாத்தி அம்மையார்- கங்கா மாதா

அஞ்சநெஞ்சன் அழகிரி- சர்வ வல்லமை

படைத்த விநாயகப் பெருமான்

தளபதி ஸ்டாலின் - தமிழ்க் கடவுள் முருகப் பெருமான்

நாரதர் சுவாமிகள்- ஆர்க்காட்டார்

ஞானப் பழம்- ஆட்சி/கட்சி அதிகாரம்

வேலவனின் மயில் வாகனம்-ஸ்டாலின் 35 ஆண்டு கடுமையான உழைப்ப்பு

பழனி மலை வாசம் -தூரதேசத்துக்கு போய்விட முயற்சி

திருவிளையாடல் புரானத்தில் அப்பாவை சுற்றிவந்து ஞான்ப் பழத்தை பரிசாகத் தட்டிசென்ற வகையில்

ஸ்டாலினைவிட கட்சியில் ஆதிக்கம் அதிகம் இல்லையென்றாலும்
இங்கும் அண்ணன் அவ்ர்கள் தான் கலைஞரின் வாரிசாய் வெற்றி மகுடம் சூட்டுவார் .காலம் கனியட்டும்.

Anonymous said...

1.கலைஞரின் மருமான் பிள்ளைகள் கலாநிதி,தயாநிதி இவர்களின் அன்னை தஞ்சாவுர் அந்தணர்குலத்தை சேர்ந்தவர்
எனச் சொல்கிறார்களே? உண்மையா, பொய்ச் செய்திகளின் புருட வா?

2.தயாநிதியின் மனைவி இந்து ராம் குடும்பத்தை சேர்ந்தவர் எனவே தான், இந்து பத்திரிக்கை ஜெயாலிதாவின் எதிர்ப்பில் திமுகாவிற்கு கண்முடித்தனமான ஆதரவு கொடுக்கிறது ?உன்மையா?( மதுரை தினகரன் பிரச்சனையை முதலில் கையில் எடுத்தது ஹிந்து ராம் அவர்கள் தான்)

3.தயாநிதி,கலாநிதி வியாபார சானக்கியத்தனங்கள் கலப்பு மணத்தின் கருணையா?

4.அழகிரியின் வலிமையான பாதுகாப்பு கோட்டைகளை உடைத்து தாத்தா பேரன் சந்திப்பு மலருமா?

5.தயாநிதி விவகாரம்- சம்பத் ,m.g.r,வை.கோ மாதிரிதானா
இல்லை உண்மையில் கட்சியை வளைக்கப் பார்த்தாரா?

6.ஒருவேளை தயாநிதியின் கையில் திமுகா போய்விட்டால் பெரியார் எதற்க்காக திராவிடர் கட்சி ஆரம்பித்தாரோ அது?

அ.தி.மு.கா - தலமை ஐயங்கார் சமுகம்

தி.மு.கா -???????????????

7. ஜெயா டி.வி இப்போது உள்ள் பரபரப்பில் " வாரிசு யுத்தம்" ," யாருக்காக' மாதிரி ஒன்ரையும் கானேமே பார்த்தீர்களா?

8.பா.மா.கா ஒரு எதிர் முடிவு எடுத்த பிறகும் கூட்டணி தொடரும்,தொடர வேண்டும் என எப்படி சொல்ல முடிகிரது?

9.விஜயகாந்த் கட்சி வன்னிய்ர் மற்றும் திருமால் வளவன் கட்சி யின் வாக்கு வங்கியை " சுவாகா" செய்து விட்டதால் தான் கலைஞர் பா.மா.க வை பற்றிய மோசமான விமர்சனத்தை பேச வைத்து அதை வெளிவிட்டுவிடுகிறாறோ?

10.உங்கள் பா.ஜா.க பாசத்தை மறந்து நடுநிலையோடு சொல்லுங்கள் சேது சுமுதிரத்திட்டம் உலகயமயமாக்கல் யுகத்தில் தமிழ்க பொருளாதார முன்னேற்றத்துக்கு நல்லதா ? இல்லையா?
விளக்கவும்.

kapilavastu said...

Hope the useless craps who blabber as if Gujarat is a heaven will stop their uneducated blabberings. They dont read any news paper and these craps live as a frog in a well and hear and read what they only want to hear and believe without understanding and appreciating truth.

Filthy Caste based unethical practice by Gujarat's BJP to steal and garner votes by fradulent means

Thanks India today:

Politicians, as usual, were guided by vote-bank politics. Prabodhkant Pandya, former Janata Dal and BJP MLA from Santrampur issued hundreds of certificates certifying OBC Kshatriyas as tribals.

But as the spectre of Santrampur turning into a ST reserved seat loomed large, Pandya, a Brahmin, wrote to the state government seeking disqualification of the tribal status of the Kshatriyas.

The reason—once Santrampur becomes an ST reserved seat, Pandya won’t be able to contest from there. Former Congress MLA of Santrampur, Man Singh Bhamat, a tribal, chose to abandon the cause of his own tribe by recommending ST status to non-STs.

If the Santrampur seat turns into an ST seat, he would be the one to gain the most as he is a genuine tribal and won’t have any competitors from the upper castes. India Today is in possession of certificates signed by Pandya as well as Bhamat to non-tribals certifying them as tribals.

Non-tribals started getting ST certificates at a steady pace in the early ’90s when a minister in the then Congress government, who was a nontribal-turned-tribal, got the state government to issue an order that on proving a direct blood relation with a tribal, a non-tribal could get an ST certificate.

This clause was withdrawn by the BJP government in 1995 and it simultaneously issued directives to district officials not to issue ST certificates to anyone who had entered himself as a tribal under the Land Revenue Code after 1965.

But Padaria alleges that revenue and welfare officials issued ST certificates to Kshatriyas even as late as the assembly elections in 2007. Forest and Tribal Welfare Minister Mangubhai Patel says: “We know a lot of wrong has happened on his score. We are trying to correct it whenever we get complaints”.

bala said...

//கலைஞர் டிவியின் தகவல் படி தமிழுக்கு 85 வயதுதான் ஆகிறது.இதனால் தமிழுக்கு செம்மொழி ஆகும் வாய்ப்பு பறிபோகுமா//

இத்துப்போன ரீல் அய்யா,

உங்க அச்சமும்,ஆதங்கமும் நியாயமானது தான்;எனக்குக் கூட ஒரு பயம் உண்டு.
யாரவது நம்மப் பாத்து" ஏண்டா சொண்டிகளா,மூச்சுக்கு நூறு தடவை தமிழ்த் தாய்,தமிழ்த் தாய்னு சொல்றீங்களே,உங்க தாய்க்கு மீசை முளைத்தது மட்டுமல்லாமல்,சொட்டைத்
தலையாக வேறு இருக்காங்களேடா.குத்தாட்ட ரசிகையாக வேற கேவலாமா இருக்காங்களேடா"ன்னு கேட்டாக்க நாம கூனிக் குறுகி நிற்பதை விட வேறு என்ன செய்ய முடியும்?என்ன செய்வது?கருப்பு சட்டை ஜல்லி அடிக்கும் கும்பல், தமிழுக்கும்,தமிழர்களுக்கு எவ்வளவு இழுக்கைத் தேடித் தருகிறோம் என்று கிஞ்சித்தும் உணராத கும்பல்.

பாலா

bala said...

//ஒரு கற்பனை-ஒப்பிட்டு பார்த்தல்-
" இளையா பிள்ளை என்றால் எடுப்பார் கை பிள்ளையா?'-ஸ்டாலின் குமுறல்( நன்றி-J.V dated 8-06-2008//

அனானி அய்யா,
உங்க கற்பனைத் திருவிளையாடல் சூப்பர்.ஆனாக்க ஒரு விஷயம் தான் இடிக்குது.புராணங்கள்படி சிவபெருமானுக்கு இரண்டு குழந்தைகள்.ஆனா நம்ம மஞ்ச துண்டு பெருமானுக்கு இரண்டு டஜன்.பராவில்லை,நம்ம கலியுக சிவன் புரிந்த திருவிளையாடல்கள் தான் இன்னும் சூப்பர் என்று கருப்பு/சிவப்பு சட்டை கும்பல் ஜல்லி அடிக்கலாம்.

பாலா

நல்லதந்தி said...

//யாரவது நம்மப் பாத்து" ஏண்டா சொண்டிகளா,மூச்சுக்கு நூறு தடவை தமிழ்த் தாய்,தமிழ்த் தாய்னு சொல்றீங்களே,உங்க தாய்க்கு மீசை முளைத்தது மட்டுமல்லாமல்,சொட்டைத்
தலையாக வேறு இருக்காங்களேடா.//

ய்ப்பா! முடியலெ!

Anonymous said...

Dondu sir,

Please read this blog :
யார் இந்த சோ ராமஸ்வாமி?
http://madippakkam.blogspot.com/2008/06/blog-post_05.html

About CHO'mary …cheeeeee CHO, please let us have your 'candid' he...he ...he…..
Honest comments please.

Sathappan

Subramanian said...

1)சிங்கப்பூருக்குள் நுழையக்கூடாது என்று
அந்நாட்டு அரசு கருணாநிதிக்குத் தடை விதித்திருக்கிறதாமே!இங்கு வந்து இங்குள்ள தமிழர்களையும் போராடுமாறு தூண்டிவிட்டுக் கெடுத்து விடுவார் என்ற காரணத்தினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாமே.உண்மையா?

2)மதுரையில் நேற்று(9/6/2008)ராயல் கேபிள் விசன் என்ற பெயரில் அழகிரி ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார்.அதன் எதிரொலியாக அவரது அடியாட்கள் மதுரையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் இயங்கும் அறுநூறுக்கும் மேற்பட்ட தனியார் கேபிள் அலுவலகங்களில் புகுந்து சன் குழுமத்திலிருந்து வரும் எந்தத் தொலைக்காட்சியையும் ஒளிபரப்பக்கூடாது என்று மிரட்டிவிட்டு அழகிரியின் நிறுவனம் மூலமாகப் புது இணைப்பைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்களாம்."கலைஞர் டி.வி.யைப் பாருங்களேன்.எதுக்கு எங்க எதிரியோட டிவியைப் பார்க்கவிட்றிங்க"என்று சொன்னார்களாம்!மதுரைப் பகுதியில் இனிமேல் சன் டி.வி.,சன் நியூஸ்,கே.டி.வி.எதுவுமே இனிமேல் ஒளிபரப்பாகாதாமே.இவிங்க அராஜகத்துக்கு எல்லையே இல்லையா?போலிசில் புகார் கொடுத்தால் வாங்க மறுப்பதோடு அல்லாமல்,ஏண்டா வீண்வம்பை விலைக்கு வாங்கறீங்க?என்று விரட்டிவிட்டார்களாம்.பத்திரிக்கைகளுக்குத் தகவல் தெரிவித்தால் பேச்சு மூச்சையே காணோம்.

G said...

சற்று தொலைநோக்குடன் சிந்தித்தால் கலப்பு திருமணங்களில் உள்ள குறைகள் களைய வாய்ப்புகள் உண்டு என்றே தோன்றுகிறது.
படித்தவர்களே இன்னும் கலப்பு திருமணத்துக்கு பயந்து கொண்டு இருந்தால் சாதி எப்படி ஒழியும் ?குணத்தை மட்டும் பார்த்து மணந்தால் போதுமே? பிறப்பு தேவையா ?

Anonymous said...

Dont know why TN government is so anti-Tamil. The TN OBC list is already filled with 5 to 10 Hindi speaking castes. Now road construction jobs in Tamil Nadu is also being reserved for Hindi speaking Biharis. In a decade, these Hindi speaking Biharis will also be included as Tamils in the TN OBC list. DMK, PMK parties very well know the growing Hindi population and job displacement but spend energies to prove that Brahmins and other forward caste Tamils are anti-Tamils or non-Tamils. This at the same time there is illtreatment of Dalit Tamils in southern TN and also mistreatment of Sri Lankan Tamils. The DMKs goverment's greatest achievement is introduction of 'pleasant' Hindi music in Tamilnadu's FM stations while SFM continues to boycott Tamil music in neighbouring Karnataka and prefers Hindi. Airport jobs in Tamilnadu are also reserved for Hindi speakers and not Tamils. This only shows that the TN goverment is anti Tamil and Tamil political parties' hidden agenda is to displace Tamils with Hindi speakers to gain mileage in the centre. It is no surprise why Raamaar paalam is also being planned to be destroyed.

Anonymous said...

In Tamilnadu, reservation is on basis of caste and not language. That is why the state ‘Tamil’ Nadu is not really Thamizh naadu. It is only Tamil in name.

The reserved list contains several Hindi-speaking caste apart from Telugu and Kannada caste.

Forward Community caste excluded from reserved are mostly Tamils but OBC, BC, MBC caste contain significant number of Hindi, Telugu and Kannada caste.

In Tamilnadu, the politicians prefer non-Tamilians compared Tamilians.

THis is from ‘Tamil’ Nadu government website:

http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

The interesting thing is that Chief Minister of Tamilnadu is a Telugu who understandably has a hatred towards Tamil and so are the opposition polticians.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது