கேள்வி கந்தசாமி:
1. தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று இடதுசாரிகளுக்கும் பிரதமர்/காங்கிரசுக்கும் இடையே பூசலை தீர்க்கும் அளவிற்கு - டெல்லியில் பெரிய தலைகள் யாரும் இல்லையா ? இல்லை காமராஜருக்குப் பிறகு, மூப்பனார் (காங்கிரசில் மட்டுமே) செய்து வந்த அரசியல் சாணக்கியத்தின் உச்ச கட்டமா? இது நிச்சயம் தமிழகத்திற்குப் பெருமைதானே?
பதில்: கண்டிப்பாக பெருமை கொள்ளலாம் - கலைஞரின் ஆதரவாளர்கள். தமிழகத் தலைவர் அந்த நிலையில் இருப்பது பெருமைதான்.
2. ஜப்பானுக்கு சென்று ஜி- 8 கூட்டத்தில் புஷ்ஷை பார்க்க பேச மன்மோகன்சிங்கிற்கு தயக்கம் ஏற்பட்டு அவர் ராஜினாமா செய்தால் அடுத்த இடைக்கால (தேர்தல் வரை) பிரதமராக செயல்பட யாருக்கு சான்ஸ் கிடைக்கும் ? பிரணாப் முகர்ஜி, கருணாநிதி, ஜோதி பாசு ? (கருணாநிதி பிரதமரானால் - அது சிலமாதங்களுக்கே ஆயினும் சோனியாவிற்கு இந்த விலைவாசி திண்டாட்டத்தில் அது ஒரு நல்ல பகடை ஆட்டம்தானே?)
பதில்: யார் கண்டது, டோண்டு ராகவனின் இந்த இடுகையில் இந்தக் கேள்வியைக் கண்டால் கருணாநிதி அவர்களுக்கே அந்த ஆசை வரலாம். :))
3. கருணாநிதி பிரதமரானால் காவிரி, ஓகனேக்கல், முல்லைபெரியாறு, பாலாறு போன்ற பிரச்னைகளில் முன்னேற்றம் காண வழிவகுப்பாரா ? (இந்த சந்தர்ப்பத்திலாவது ஸ்டாலின் முதல்வராக சான்ஸ் உண்டா?)
பதில்: தண்ணீர் விஷயத்தில் உள்ள யதார்த்த நிலையை மீறி யாரும் எதுவும் செய்ய இயலாது. ஸ்டாலின் முதல்வராக வருவார் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது போல உங்கள் கேள்வி மனதுக்கு படுகிறதே.
4. 85 வயதில் இத்தனை அலைச்சல், உழைப்பு, ஞாபகசக்தி, அரசியல் முடிவுகள், அரசு முடிவுகள் போன்றவை நிச்சயம் ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் தானே ? (ஜோதிபாசு, அச்சுதாநந்தன் கூடவே ஞாபகம் வருகிறது)
பதில்:கருணாநிதி அவர்களின் உழைப்பு பாராட்டுக்குரியதே. அவர் வயதில் நானும் அதே அளவுக்கு புத்தி கூர்மையுடனும் செயலுடனும் இருக்க என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.
5. நீங்களே ஏன் ஒரு மாருதி ஆம்னியை வாங்கி அதை ஒரு கால்டாக்ஸி கம்பெனிக்கு வாடகைக்கு விடக்கூடாது ? (போலீசார் ஆட்டோ வைத்திருப்பதைப்போல). உங்களுக்கும் உபயோகமாகும் - நீங்கள் உபயோகிக்காத தருணங்களில் உங்களுக்கு பணமும் வரும்?
பதில்: அதற்கான தேவையான மனப்பாங்கு என்னிடம் இல்லை. கார் வாங்கி கால் டாக்ஸி வைத்து கொள்வது பணத்தை பொருத்தவரை பிரச்சினையில்லை. ஆனால் மீதி எல்லா விஷயங்களுமே பிரச்சினைதான். டிரைவர்களை வைத்து வேலை வாங்கத் தெரியவேண்டும். கார் மெகானிசம் ஒன்றுமே தெரியாத நிலையில் என் தலையில் சுலபமாக மிளகாய் அரைக்கப்படும். அது தேவையா எனக்கு? ஒரு தலைவலியும் இன்றி நான் மட்டும் ஈடுபடும் மொழிபெயர்ப்பு வேலையிலேயே நல்ல பணம் வரும்போது எனக்கு என்ன குறை?
6. மானாட மயிலாட - யாரின் தமிழ் கொஞ்சுகிறது - நமீதா? ரம்பா?
பதில்: எந்த நிகழ்ச்சியை கூறினீர்கள், மானாட மார்பாட நிகழ்ச்சியா? பேசும்போது வாயை எல்லாம் யார் பார்க்கிறார்கள்? இங்கே என்ன இலக்கியப் பேச்சா நடக்கிறது?
7. நீங்கள் ஏன் ஒரு மடிக்கணினி (லாப்டாப்) வாங்கி வைத்துக்கொண்டு பதிவர் மீட்டிங்குகளுக்கும் பிற நிகழ்ச்சிகளுக்கும் ஏன் உங்கள் வாடிக்கையாளர் சந்திப்புகளுக்கும் பயன் படுத்துவதில்லை. ரு.25000-க்கே இப்பொதெல்லாம் நல்ல மடிக்கணினி கிடைக்கிறதே?
பதில்: போன மாதம் எனக்கு ஹைதராபாத்தில் சில நாட்களுக்கு போகும் வேலை வர இருந்தது. அப்போது யோசித்தேன், மடிக்கணினி இருந்தால் இரவு நேரங்களில் ஹோட்டல் அறையில் என் வேலையை கவனிக்கலாமே என்று. ஆனால் அந்த வேலை பலிதமாகவில்லை. இருப்பினும் தீவிரமாக யோசித்து வருகிறேன். மடிக்கணினி மட்டுமல்ல, மோடமும் வாங்க வேண்டும், அதுவும் வைர்லெஸ் வகை. மற்றப்படி பதிவர் மீட்டிங்கிற்கெல்லாம் அதை கொண்டு போகும் எண்ணம் இல்லை. நோட்புக், பேனாவே போதும்.
8. அலுவலக ஆபீசர் ஒருவர், 35-40 வயது, அலுவல் வேலையாக வெளியூருக்கு/வெளிநாட்டுக்கு செல்ல நேரிடுகிறது. கூடவே அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுமாரான பெண்ணும் செல்லவேண்டும். வெளியூரில்/வெளிநாட்டில் இருவருக்கும் நெருங்க சந்தர்ப்பங்கள் அதிகம். இருவருக்கும் குடும்பம் (மனைவி அல்லது கணவன், குழந்தைகள் இருக்கின்றனர் - ஊரில்). இருவருக்கும் அவ்வாறான எண்ணங்கள் இது வரை அலுவலகத்தில் ஏற்படவில்லை. ஆனால் இந்த வெளியூர்ப் பயணத்தில் சந்தர்ப்பவசத்தால் இருவருக்கும் நெருங்க சான்ஸ் கிடைக்கும் போது என்ன செய்யவேண்டும் என உங்கள் அறிவுரையாக இருக்கும் ?
அ) சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவரும் சந்தோஷப்பட வேண்டும் ஆனால் பிறகு இது தொடரக்கூடாது; ஆ) வீடு, குடும்பம், மனைவியைக் கருத்தில் கொண்டு இருவரும் தங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ளவேண்டும்; இ) இவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தையே தவிர்க்க முயலவேண்டும். எது உங்கள் பதில்? ஏன்? அப்படிப்பட்ட சந்தர்ப்பம் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா?
பதில்: இம்மாதிரி தமக்கும் கிடைக்காதா என வயிற்றெரிச்சல்படுபவர்கள் மற்றவர்களுக்காக கடைசி இரண்டு ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தங்களுக்கு என வரும்போது முதல் ஆப்ஷனைத்தான் தெரிவு செய்வார்கள். மொத்தத்தில் அறிவுரையெல்லாம் வேண்டாம், செயல்தான் என நான் கூறுவேன். வேண்டும் என தீர்மானிப்பதும் செயலே, வேண்டாம் என்பதும் அவ்வண்ணமே. அதெல்லாம் சம்பந்தப்பட்டவர்தான் செய்ய வேண்டும். எனக்கு தெரிந்து யாருக்கும் இம்மாதிரி சந்தர்ப்பம் கிட்டவில்லை.
அனானி (23.06.2008 மாலை 07.55-க்கு கேட்டவர்):
1. கடைசியில் பொருளாதர தாராளமயம் இந்தியாவை ஒருகை பார்த்துவிடும் போல் இருக்கிறதே?
பதில்: இச்சவாலையும் இந்தியா சமாளிக்க வேண்டியதுதான்.
2. என்ன திடீரென்று முலாயம் 3 வது அணியிலிருந்து காங்கிரஸ் பக்கம்?
பதில்: காலத்தின் கட்டாயம். மூன்றாம் அணி ஆரம்பத்திலிருந்தே நொண்டி அணிதான். அதிலிருந்து வெளியில் செல்ல சம்பந்தப்பட்டவர்கள் சமயம் பார்த்து காத்திருப்பார்கள். அதே போல இடது சாரிகள் மற்றும் மாயாவதியின் ஆதரவு இல்லாத நிலையில் காங்கிரசும் அகப்பட்ட இடங்களிலிருந்து ஆதரவு தேடுகிறது.
3. சோ அவர்கள் சொன்னது போல் இங்கே யாருக்கும் வெட்கம் இல்லையா?
பதில்: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா (நன்றி: கவுண்டமணி)
4. பங்குவணிகத் தரகர் போல் செயல்படும் சிவகங்கை சிமான் திடீரென்று கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் யூக வணிகம் கூடாது என்கிறாரே? பார்த்தீர்களா?
பதில்: யூக வணிகம் பற்றி எனது அறிவு வேறும் யூகங்களினால்தான் நிரம்பியுள்ளது. ஆகவே இக்கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை.
5. இந்த வருடமாவது இடது சாரி பாம்பு கீரி சண்டையை நடத்துவார்களா?
பதில்: தேர்தல் இந்த ஆண்டு திசம்பரில் வரும் என்ற ஹேஷ்யம் எழுந்துள்ளது. நம்பும்படியாகத்தான் உள்ளது.
அனானி (இரவு 8.06-க்கு கேட்டவர்):
1. What will happen to congress govt if left withdraws support?
பதில்: உடனடியாக தேர்தல் நடத்துவதில் பாஜக அக்கறை கொண்டுள்ளது. அதுவே மற்ற கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவை விலக்குவதை மேற்கொள்வதில் தயக்கம் காட்டச் செய்கிறது.
2. Will mulayam singh join with congress?
பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
3. Already farmers are agitated about the non supply of diesel (ord)? what is your opinion?
பதில்: நிலைமை ரொம்ப குழப்பத்தில் இருக்கிறது. சாதாரண டீசலை அரசு நிர்ணையித்த விலைக்கு விற்க கம்பெனிகளுக்கு என்ன ஆர்வம் இருக்கும்? அவர்களுக்கு சப்சிடி தந்தால் யோசிக்கலாம். ஆனால் அரசால் அது முழுமையாக ஏலுமா?
4. All are becoming robbers citing the pertrol price hike? is it good?
பதில்: நல்லதோ கெட்டதோ அதையும் தாங்கப் போவது பொது மக்களே. இதில் நோ சாய்ஸ்.
5. Will share market see another Harshat Mehta again?
பதில்: ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு பஞ்சமே இல்லை.
வஜ்ரா:
1. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை படு பயங்கரமாக உயர்த்திடும் மத்திய அரசு ஏன் இன்னும் அதன் மீதுள்ள அபரிமிதமான (கிட்டத்தட்ட 30% த்திற்கு மேல்) வரியை குறைக்கவில்லை?
பதில்: எப்படி குறைக்க இயலும்? அதை வைத்து பட்ஜெட் போட்டாகி விட்டது. இப்போது அதை குறைத்தால் பற்றாக்குறை பட்ஜெட்டில் வராதா? எனக்கு புரிந்தது அவ்வளவுதான். நிதி நிர்வாக நிபுணர்கள் மேலும் கூற இயலும்.
அனானி (24.06.2008 இரவு 07.39-க்கு கேட்டவர்):
1. உண்மையில் அணு ஒப்பந்தம் இந்தியாவுக்கு நன்மையா? தீமையா? எது அதிகம?
பதில்: சீனாவின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. இது போதாதா இடதுசாரிகளின் எதிர்ப்புக்கு?
2. வாக்கு கொடுத்துவிட்டு அதை காப்பாற்ற முயலுவதுபோல் உள்ளதே பிரதம அமைச்சரின் பரபரப்பு?
பதில்: மன்மோகன்சிங் பாராட்டுக்குரியவர் என இந்த வார துக்ளக் எழுதியிருப்பது எனக்கும் சம்மதமே.
3. சுப்பிரமணிய சாமி என்ன சொல்கிறார் இதைப் பற்றி?
பதில்: அவர் எப்போது என்ன சொல்லுவார் என்பது அவருக்கே தெரியாதபோது நீங்கள் என்னிடம் போய் அதை கேட்பது நியாயமா?
4. இடதுசாரிகள் பிடி இறுகுகிறாதா?
பதில்: காங்கிரஸ் பயப்படும்வரை அதுதான் நிலை.
5. ஆனால் அமெரிக்கா நம்மை விடாது போல் உள்ளதே?
பதில்: புஷ் தான் போவதற்குள் ஏதேனும் செய்ய நினைக்கிறார். அவருடைய கட்டாயங்கள் அவருக்கு.
6. ஒருவேளை பா.ஜ.க வெற்றி பெற்று வந்தால் இதை எவ்வாறு செய்வார்கள், ரத்து செய்ய முடியாதே?
பதில்: பா.ஜ.க. ஆட்சியில் இருந்திருந்தாலும் மன்மோகன் சிங் எடுத்த நிலையைத்தான் அவர்களும் எடுத்திருப்பார்கள். இதை அத்வானி ஒத்து கொண்டாலும் சரி, ஒத்து கொள்ளாவிட்டாலும் சரி.
7. லாலு அவர்கள் ஏதோ எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் இதை ஆதரிக்கிறாரே?
பதில்: அவருக்கு வாய்ப்பு சில ஆதாயங்களைப் பெற. இது அரசியல். அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி.
8. எல்லா கட்சிகளும் தங்கள் ஆதாயத்தைதான் பார்க்கிறார்கள்? இந்திய மக்கள் பாவம்தானே?
பதில்: கட்சிகளில் இருப்பவர்களும் இந்திய மக்களின் அங்கம்தானே. மற்றப்படி சொந்த நலனைப் பார்க்காதவர் யார்?
9. மீண்டும் கலைஞருக்கு யோகம் பார்த்தீர்களா? பெரியண்ணா அல்லவா?
பதில்: யோகம்தேன்.
10. பணவீக்கம் கூடும் போதெல்லாம் ஏன் பங்கு வர்த்தகம் சாமி ஆட்டம் ஆடுகிறது?
பதில்: பணவீக்கம் என்றால் என்ன? அளவுக்கு மீறிய பணப்புழக்கத்தின் விளைவுதானே? அதிகப் பணம் குறைந்த பொருட்களை துரத்தினால் அது வருகிறது. பொருட்கள் கிடைக்காதபோது பங்குகளை துரத்துகிறார்கள். வேறு வழியில்லை. வங்கிகளில் சேமித்தால் அதன் வட்டி பணவீக்கத்தின் சதவிகிதத்தை விட குறைவாக இருக்கும் நிலையில் பணத்தை சும்மாவும் வைத்திருக்க இயலவில்லையே.
கோமணகிருஷ்ணன்:
1) அய்.டி. போன்றவற்றினால் பெண்கள் அரைகுறை ஆடை அணிவது, ஆண்களுடன் குடித்து விட்டு கும்மாளம் போடுவது, பாய்பிரண்டு டேட்டிங் என அலைவது என தமிழ் கலாசாரம் சீரழிந்த்துவிட்டதே? உங்கள் பதில் என்ன? (பலமுறை கேட்டும் நீங்கள் பதில் சொல்லவில்லை!!)
பதில்: யானைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும் அல்லவா. முன்பு ஆண்கள் மட்டும் ஆட்டம் போட்டனர். பணத்துக்கு பெண்களை வரவழைத்தனர். இப்போது பெண்களுக்கும் "அத்தேவை" அதிகமாகியுள்ளது. பொருளாதார சுதந்திரம் வேறு. அதிக செலவில்லாமல் பார்ட்னர்கள் கிடைக்கும் நிலை. எல்லாம் சப்ளை அண்ட் டிமாண்ட்தான்.
2) ஏழைகள் சமத்துவம் பெறுவதை எதிர்க்கிறீர்கள். இன்னொரு பதிவில் ஏன் நான் எழைக்கு உதவ வேண்டும் என்றீர்கள். ஏழைகள் மேல் ஏனிந்த வெறுப்பு?
பதில்: அவர்கள் மேல் எனக்கு என்ன வெறுப்பு இருக்க முடியும்? பொதுவாகவே தத்தம் நிலையை தாங்களேதான் உயர்த்தி கொள்ளவேண்டும். அது செய்யாது மற்றவர்களை எதிர்ப்பார்த்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இளப்பத்திற்கு உரியவர்களே.
3) பார்ப்பனரின் தவறுகளை சுட்டிக்காட்டினால் குதிக்கிறீர்கள். நன்கு யோசித்து பார்க்கவும். பகுத்தறிவாளர்கள் ஏன் ஒரு சமூகத்தை மட்டும் குறிவைத்து விமர்சிக்க வேண்டும்? அவர்கள் என்ன பைத்தியமா? ஏதாவது காரணம் இருக்க வேண்டுமல்லவா??!! பார்ப்பனரிடம் பல தவறுகள் இருப்பதானால்தானே?!!!
பதில்: இரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்களை துன்புறுத்திய சரித்திரத்தில் வரும் கேள்விகள்தான் இவை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேல் வர்ஜாவர்ஜமின்றி தாக்குதல் நடத்துவது மற்றவரது தாழ்வு மனப்பான்மையையும் பொறாமையையும்தான் குறிக்கிறது. இட ஒதுக்கீட்டை கட்டுப்படுத்தி திறமைக்கு முன்னிடம் கொடுக்கச் சொன்னால் அதனால் பார்ப்பனர் மட்டும் பயன்பெறுகிறார்கள் எனக் கூறுவது மற்றவர்களது தாழ்வு மனப்பான்மையே.
4) மதவெறியர்கள் சோவுக்கும், மோடிக்கும் இவ்வளவு ஜால்ரா அடிப்பது ஏன்?
பதில்: அதைப் பற்றிய எனது பதிவுகள் "சோ" என்னும் லேபலின் கீழே காணக் கிடைக்கின்றன. படியுங்கள்.
அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
4 hours ago

38 comments:
////// ஏழைகள் சமத்துவம் பெறுவதை எதிர்க்கிறீர்கள். இன்னொரு பதிவில் ஏன் நான் எழைக்கு உதவ வேண்டும் என்றீர்கள். ஏழைகள் மேல் ஏனிந்த வெறுப்பு?
பதில்: அவர்கள் மேல் எனக்கு என்ன வெறுப்பு இருக்க முடியும்? பொதுவாகவே தத்தம் நிலையை தாங்களேதான் உயர்த்தி கொள்ளவேண்டும். அது செய்யாது மற்றவர்களை எதிர்ப்பார்த்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இளப்பத்திற்கு உரியவர்களே.////
உண்மை!அவனவன் பாட்டை அவனவன்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்
வாழ்க்கை என்ன பீடிக்கு நெருப்புக் கேட்கிற சமாச்சாரமா அல்லது செயலா?
////// ஏழைகள் சமத்துவம் பெறுவதை எதிர்க்கிறீர்கள். இன்னொரு பதிவில் ஏன் நான் எழைக்கு உதவ வேண்டும் என்றீர்கள். ஏழைகள் மேல் ஏனிந்த வெறுப்பு?
பதில்: அவர்கள் மேல் எனக்கு என்ன வெறுப்பு இருக்க முடியும்? பொதுவாகவே தத்தம் நிலையை தாங்களேதான் உயர்த்தி கொள்ளவேண்டும். அது செய்யாது மற்றவர்களை எதிர்ப்பார்த்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இளப்பத்திற்கு உரியவர்களே.////
உண்மை!அவனவன் பாட்டை அவனவன்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்
வாழ்க்கை என்ன பீடிக்கு நெருப்புக் கேட்கிற சமாச்சாரமா அல்லது செயலா?//
ஏழைகளை அவர்களின் நிலையையே அறிய விடாத, அறிந்தும் தங்களை உயர விடாத சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை ஆராயாமல் தான்தோன்றிதனமாக பதில் அளிப்பது எதில் சேத்தி?
வயதானாலே கழன்றுவிடுமா?
வணக்கம் டோண்டு சார், பதில்கள் 'நச்' என்று உள்ளன
சரவணன்
அடுத்த வாரத்துக்கான கேள்வி
http://surveysan.blogspot.com/2008/06/blog-post_26.html
சமுதாயத்தில் எந்த ஒரு ஜாதி பிரச்னை என்றாலும் பார்ப்பனர்கள் திட்டப்படுகிறார்கள்.
ஆனால் உண்மை அப்படி இல்லை.உத்தபுரத்தில் சுவர் கட்டி வைத்தது பார்ப்பனரா?
கேட்டால்...அது பார்ப்பனீயம் என்பார்கள்.சரி அது போகட்டும்.. இட ஒதுக்கிடு பிரச்னையில்
பார்ப்பனர்களா முட்டுக்கட்டைப் போட்டனர்? போராடிய மாணவர்களில் அனைத்து பிரிவினரும் இருந்தனர்.
இட ஒடுக்கீட்டில் முன்னுக்கு வந்துவிட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் (உள்நாட்டில்,வெளிநாட்டில்) பிரினருக்கு
இடஒடுக்கீடு கூடாது. கிரீமி லேயர் என்பதை ஏன் எதிர்க்கிறார்கள்?
சண்டியர் என்று பெயர் வைத்தால் படத்தின் பெயரை மாற்றவேண்டும் என் போராட்டம் நடத்தி வெற்றிபெற்றனர்.ஆனால் பாப்பாத்தி என்ற படம் வந்த போது ஒன்றும் செய்யமுடியவில்லையே?
பார்ப்பனன் என்பவன் இந்திய குடிமகனாக இருந்தாலும்..இரண்டாம் தர status தான் அவனுக்கு.நாட்டு மக்கள் தொகையில் 4 %தான் அவன் ..ஆனாலும் சிறுபான்மையினர் தகுதி அவனுக்கு இல்லை.
Am in a client's place. Can just release comments. Will answer in Tamil when I am back home in the evening. Till then only others' comments will be released.
Regards,
Dondu N. Raghavan
/////ரங்கன் said...
////// ஏழைகள் சமத்துவம் பெறுவதை எதிர்க்கிறீர்கள். இன்னொரு பதிவில் ஏன் நான் எழைக்கு உதவ
வேண்டும் என்றீர்கள். ஏழைகள் மேல் ஏனிந்த வெறுப்பு?
பதில்: அவர்கள் மேல் எனக்கு என்ன வெறுப்பு இருக்க முடியும்?
பொதுவாகவே தத்தம் நிலையை தாங்களேதான் உயர்த்தி கொள்ளவேண்டும்.
அது செய்யாது மற்றவர்களை எதிர்ப்பார்த்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும்
இளப்பத்திற்கு உரியவர்களே.////
உண்மை!அவனவன் பாட்டை அவனவன்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்
வாழ்க்கை என்ன பீடிக்கு நெருப்புக் கேட்கிற சமாச்சாரமா அல்லது செயலா?//
ஏழைகளை அவர்களின் நிலையையே அறிய விடாத, அறிந்தும் தங்களை உயர
விடாத சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை ஆராயாமல் தான்தோன்றிதனமாக
பதில் அளிப்பது எதில் சேத்தி?
வயதானாலே கழன்றுவிடுமா?/////
கழன்று போய் விடுவதற்கு வயதெல்லாம் கணக்கில்லை. எந்த வயதில் வேண்டுமென்றாலும்
கழன்று போய்விடும் நண்பரே!
”இளப்பதிற்கு உரியவர்களே!” என்று பதிவில் எழுதியுள்ள டோண்டூ சார், உங்கள் நக்கலில் உள்ள
தீவிரத்தைக் கவனிக்காமல் பின்னூட்டத்தைப் பதிவிற்கு அனுப்பி விட்டார் என்று நினைக்கிறேன்.
அவரும் வயதானவர்தான்:-))))
கோவையில் மட்டும் நாளொன்றுக்கு மூன்று கோடி ரூபாய்க்கு சரக்கு (டாஸ்மாக் சரக்கு) விற்கிறது.
ஸ்ரேயா படத்திற்கு ரிலீஸ் தேதியன்று டிக்கெட் 100 ரூபாய் என்றாலும் அடித்துப் பிடித்துப்
பார்ப்பதற்கு ஆசாமிகள் இருக்கிறார்கள். போய்ப் பாருங்கள் நண்பரே அந்தக் கூட்டத்தில்
எத்தனை பேர்கள் வயதானவர்கள் இருக்கிறார்கள் என்று!
பரவாயில்லை! கழன்று போய் இருப்பதிலும் பல நன்மைகள் உள்ளன!
அது புரிய வேண்டிய நேரத்தில் கழறாமல் இருக்கும் அன்பர்களுக்குப் புரியும்!
சரி விஷயத்திற்கு வருகிறேன்.
நாட்டில் 20% மக்களே பணக்காரர்கள். மீதி உள்ளவர்கள் எல்லாம் ஏழைகள் அல்ல!
நடுத்தர மக்களும் உள்ளார்கள்!
அவர்களும்தான் பாதிக்கப் படுகிறார்கள். அவர்களுக்கு ஆராய்ந்து உதவி செய்ய
யார் இருக்கிறார்கள்? இல்லை அவர்களை யாரிடம் போய்க் கை ஏந்தச் சொல்கிறீர்கள்?
55 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த சமையல் எண்ணெய் இன்று 80 ரூபாய் விற்கிறது
18 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த அரிசியின் விலை இன்று 25 ரூபாய்
285 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த கேஸ் சிலிண்டரின் விலை இன்று 335 ரூபாய்
இது போல அடுக்கிக் கொண்டே போகலாம்.
சமூக, அரசியல், பொருளாதார நிலைகள் எல்லாம் அந்த 80% மக்களுக்கும் பொதுவானதுதான்
அரசியல்வாதிகளும், ஆட்சியில் இருப்பவர்களும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்/ அவர்களால்
ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை (உதாரணம்: பெட்ரோல், டீசல்) என்பது அனைவருக்கும்
தெரிந்ததே!
கடும் மழை அடிக்கிறது, புயல் வீசுகிறது என்றால் அது அனைவருக்கும் பொதுவானதுதான்!
இப்போது அடிக்கும் பொருளாதரப் புயலில் யார் யாருக்குக்கு Shelter
கொடுக்க முடியும் சொல்லுங்கள் நண்பரே?
//ஸ்ரேயா படத்திற்கு ரிலீஸ் தேதியன்று டிக்கெட் 100 ரூபாய் என்றாலும் அடித்துப் பிடித்துப்
பார்ப்பதற்கு ஆசாமிகள் இருக்கிறார்கள்.//
என்ன கொடுமை இது தலைவி ஷ்ரேயா படம் வெறும் நூறு ரூபாய்க்குதான் டிக்கெட் போகுதா, எங்கே போகுது என் இளைஞர் சமுதாயம் அய்யகோ... அடுத்த படத்துலியாவது 200 ரூபாய்க்கு ஏத்துங்கப்பா பாவம் நீங்க கொடுக்கற இத்துனூன்டு காசுல அந்த பொண்ணு பாவம் இத்துனூன்டு டிரெஸ் வாங்கி போட்டுகிட்டு இருக்கு.
:-)
சரவணன்
இன்னும் வந்து சிந்தையை தூண்டும் காமெடி கேள்விகள் கேட்காத நண்பர் கோப கிருஷ்ணனை வன்மையாக கண்டிக்கிறேன்.
சரவணன்
//உத்தபுரத்தில் சுவர் கட்டி வைத்தது பார்ப்பனரா?//
உத்தரபுரத்தில் சுவர் கட்டியது வேண்டுமானால் பார்பனராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதன் பின் இருந்தது பார்பனீயம்தான். பம்பாய் குண்டு வெடிப்புக்கு பின்னால் இருந்தது பார்பனீயம்தான். கர்னாடகாவிலிருந்து காவிரி தண்ணீர் வராததற்கு காரணம் பார்பனீயம்தான். நேத்து எங்க வீட்டு முருங்கை மரம் காத்தடிச்சு கீழ விழுந்ததுல இருந்து இன்று காலை எனது வீட்டில் 3 முறை பவ்ர் கட் ஆனது காலயில் அந்த எழவெடுத்த பஸ் ஸ்டாப்பில் நிக்காமல் போனது வரை காரணம் பார்பனீயம்தான் அது உமக்கு புரியவில்லை என்றால் ஒன்று நீர் ஆரியர் அல்லது ஆரிய அடிவருடி அல்லது தலித் துரோகி. :-)
கோபகிருஷ்ணரே பாருங்க உங்களுக்கு நான் பேஸ்மன்ட்லாம் போட்டுவச்சுருக்கன், சீக்கிரம் வாங்க .. என்ன அஜித் கணக்கா பேஸ்மாட்ட்ன் அப்படின்னு அடம் பிடிக்கறீங்க
:-)
சரவணன்
போட்ட கமென்டுலாம் வராம லைட்டா விரலெல்லாம் உதறுது. சீக்கிடம் ரிலீஸ் பண்ணுங்க சார் என்னமோ தசாவதாரம் படம் மாதிரி ரொம்ப டிலே பண்றீங்களே ;-)
சரவணன்
//அவனவன் பாட்டை அவனவன்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்//
உங்களை போன்று இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் ஜால்ரா போட்டு அன்னிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து எல்லோருமா பிழைக்க முடியும்?
தினக்கூலி அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடி அரைவயிற்று கஞ்சிக்கு கூட வக்கில்லாதவன் எப்படி தன் பாட்டை தானே பார்த்துகொள்ள முடியும்? இவன் இப்படி அல்லாட மற்றவர்களுக்கு (அய்.டி) மட்டும் 50000, 60000 என்று அள்ளிக்கொடுத்தால்?... அதனால் இருப்பவன் தானே இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்?
கோமணகிருஷ்ணன்
//தினக்கூலி அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடி அரைவயிற்று கஞ்சிக்கு கூட வக்கில்லாதவன் எப்படி தன் பாட்டை தானே பார்த்துகொள்ள முடியும்? இவன் இப்படி அல்லாட மற்றவர்களுக்கு (அய்.டி) மட்டும் 50000, 60000 என்று அள்ளிக்கொடுத்தால்?... அதனால் இருப்பவன் தானே இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்?//
என்ன சரவணாரே, கோப கிருஷ்ணனின் இந்த காமெடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
SVR ஐயா, என் ஆவேச பின்னூட்டம் உங்களை காயப்படுத்தியிருந்தால் வருந்தம் தெரிவித்துக்கொள்கிறேன். வயதானால் தான் பொறுமை வருமோ என்னவோ ;-)
நீங்கள் முதலில் கீழ்வருவதை 'உண்மை' என ஆமோதித்து் இருந்தீர்கள்.
//பதில்: அவர்கள் மேல் எனக்கு என்ன வெறுப்பு இருக்க முடியும்? பொதுவாகவே தத்தம் நிலையை தாங்களேதான் உயர்த்தி கொள்ளவேண்டும். அது செய்யாது மற்றவர்களை எதிர்ப்பார்த்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இளப்பத்திற்கு உரியவர்களே.////
உங்கள் இரண்டாவது பின்னூட்டத்தில் வேறுகோணம் வருகிறது. இன்றைய நிலவரத்தை சொல்லி இருக்கிறீர்கள்.
என் கேள்வி இதுதான்.
இந்தியாவில் 60 கோடிபேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் (மாதவருமானம் ரூ.1600 கீழ்) இருக்கிறார்கள். ஏன்?
இவர்கள் 'எப்படி' தத்தம் நிலையை தாங்களே உயர்த்தி கொள்வது? வழிமுறைகள் என்னன்ன?
பதிவரோ, நீங்களோ ஆக்கப்பூர்வமாக பதில் சொல்லுங்களேன்.
//இவர்கள் 'எப்படி' தத்தம் நிலையை தாங்களே உயர்த்தி கொள்வது? வழிமுறைகள் என்னன்ன?
பதிவரோ, நீங்களோ ஆக்கப்பூர்வமாக பதில் சொல்லுங்களேன்.//
கூறினால் போயிற்று. இதைத்தானே நான் எனது பல பதிவுகளிலும் கூறி வந்திருக்கிறேன். அப்பதிவுகள் "தவிர்க்க வேண்டிய நபர்கள்", "தன்னம்பிக்கை", "வாடிக்கையாளர்களை அணுகும் முறை" ஆகிய லேபல்களின் கீழ் வருகின்றன. போய் பார்த்து கொள்ளுங்கள்.
உதாரணமாக உங்கள் நிலை எதுவானதாக இருந்தாலும் அதன் சாதக பாதகங்கள் உண்டு. அவற்றை கண்டுணர்ந்து பாதகத்தைத் தவிர்த்து, சாதகமான விஷயங்களை உபயோகப்படுத்துவதே புத்திசாலித்தனம்.
எங்களை இவ்வளவு கேள்வி கேட்கும் நீங்கள் இந்த விஷயம் பற்றி செய்து வருவது என்ன என்பதையும் எழுதிவிட்டு போங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடடா நேத்தே பார்க மிஸ் பண்ணிட்டனே.
//இவன் இப்படி அல்லாட மற்றவர்களுக்கு (அய்.டி) மட்டும் 50000, 60000 என்று அள்ளிக்கொடுத்தால்?... அதனால் இருப்பவன் தானே இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்?//
என்ன சரவணாரே, கோப கிருஷ்ணனின் இந்த காமெடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?//
என்ன சார் அவர்கிட்ட நான் இன்னும் அதிகம் எதிர்பர்கிறேன் அவரும் நம்மை ஏமாத்த மாட்டார். இப்ப வழக்கம் போல சஃப்ட்வேர்காரன் சம்பளம் காமெடி எடுத்துப்பொம்.
ஒரு வாட்டிதான் சொல்லுவான் திரும்ப திரும்ப காமெடி பண்ணகூடது ஒகேவா. இப்ப நான் இஞ்சினீரிங் அதுவும் மாஸ்டர்ஸ் பண்ணிட்டு சென்னைல 60 ஆயிரம் சம்பாதிக்கிறேன். உங்கள் கருத்து படி எனக்கு அடுத்த மாசம் முதல் 10 ஆயிரம் சம்பளம் ஒகே. எங்க பக்கத்து வீட்டுல ஒரு பையன் அவன் 10 வது வரை என்கூட படித்தான் 10 வது ஃபெயில் அதனால் அண்ணன் ஒரு 5 வருடம் ஏரியா பெண்களுக்கு செக்யூரிடியா வேலை பார்தார் (அதான் பத்திரமா ஸ்கூலுக்கு காலேஜுக்கு பின் தொடர்ந்து செல்வது) அப்புறம் அங்க இங்க ஆயிரத்துக்கு ஐனூருக்கும் வேலை பார்த்தார்.
இது தேறாதுன்னு அவரை சிங்கப்பூருக்கு(நல்ல நோட் பண்ணிகோங்க ஜெர்மனிக்கு இல்லை) அனுப்பி வச்சுட்டாங்க இப்ப அவர் மாதம் 25 ஆயிரம் வீட்டுக்கு அனுப்பரார். இப்ப இங்க 10 ஆயிரம் வாங்கர நான் திறமைசாலிய இல்லை அவரா. இல்லை பொருளாதர எற்றதாழ்வு வருதுன்னு எல்ல பயலுங்களயும் சிஙபூர் மலேசியா துபாய்ல இருந்து கூட்டி வந்துடுவமா. கண்டிப்பா எல்லாருக்கும் இங்க வேலை கொடுக்க முடியாது அதனால் மீட்டிங்க, மாநாடு அதுல கலந்துக்க ஆள் நிறைய கிடைக்கும் உங்கள் அரசியல்வாதிகளுக்கு. அவர்களும் ஏழ்மையை எப்படி ஒழிப்பது என்று உணர்சிபூர்வமா பேசிட்டு மெடைக்கு பின்னால இருக்கர ஃபாரின் கார்ல ஏறி அவங்க பங்களாக்கு பொயிடுவாங்க
நீங்க சொல்ற ஏழைகள் முன்னேறனும், ஏற்றதாழ்வுகள் குறையனும் எல்லாம் ஓகெ. இதையெல்லாம் உங்களை விட சென்டிமென்டா உணர்ச்சிபூர்வமா என்னால் எழுத முடியும் அய்யா (எத்தனை அரசியல் மீட்டிங்க் பார்திருப்பன்). நீங்கள் சொல்லும் தீர்வுகளுக்கு சொல்லும் வழிமுறையான சாஃப்ட்வேர்காரன் சம்பளம் எல்லாம், கேக்கறதுக்கு நல்லா இருக்கும் நடைமுறைக்கு ஒத்துவராது. ஏற்றதாழ்வு குறைய எல்லாரையும் ஏழை ஆக்குவது முட்டாள்தனம்.
//அன்னிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து எல்லோருமா பிழைக்க முடியும்?//
உனக்கு தெரியாத தொழிலை வேறு யாரும் செய்யகூடாது என்பது சர்வாதிகாரம் அது ஜனநாயக நாட்டில் நடக்காது, நன்றி
//..அதனால் இருப்பவன் தானே இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்?//
அட அடா என்ன தத்துவம் புல்லரிக்குது போங்க, போன வார குமுதத்துல போட்டுருக்கான் ஒரு பழைய அரசியல்வாதி இப்ப பல கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார் சென்னைல, அவர் சொத்து மதிப்பு 12 ஆயிரம் கோடி அவர் நினைச்சா அப்ப 12 ஆயிரம் பேரை கோடிஸ்வரர் ஆக்கலாம் அவர்கிட்ட போய் இந்த தத்துவம் சொல்லி கொஞ்சம் காசு வாங்கிட்டு வாங்க. இந்த இளிச்சவாய சாஃவ்ட்வேர் ஆளுங்களை விட்டுடுங்க
சரி சும்மாகாட்டிக்கும் சொன்னன், நீங்க பாட்டுக்கு அவர்கிட்ட போய் காசுகீசு கேட்டுட போறீங்க, அப்புறம் இங்க காமெடி கேள்வி கேட்க ஆள் இல்லாம போயிடுவீங்க.
Socialism is like a dream. Sooner or later you wake up to reality.
சரவணன்
//என் கேள்வி இதுதான்.
இந்தியாவில் 60 கோடிபேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் (மாதவருமானம் ரூ.1600 கீழ்) இருக்கிறார்கள். ஏன்?
இவர்கள் 'எப்படி' தத்தம் நிலையை தாங்களே உயர்த்தி கொள்வது? வழிமுறைகள் என்னன்ன?//
இந்த வாத்தியார் பாட்டுலாம் கேளுங்க..
தைரியமாக சொல் நீ மனிதன் தானா..
நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்
தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.
இந்த பாட்டுலாம் கேட்டுபாருங்க.. எதாவது தோணுதான்னு பாருங்க..அந்த பாட்டுக்குலாம் அர்த்தம் புரிஞ்சவங்களுக்கு நாம் எப்படி முன்னேறனும்னு சொல்லி தரதேவையில்லை.
ஒண்ணும் தோணலைன்னா உங்களுக்குள்ள அந்த சோசியலிசமேனியான்ற நோய் குணப்படுத்த முடியாத அளவு முத்திடுச்சுன்னு அர்த்தம்.
அப்ப இனிமேல் என்ன பண்றீங்கன்ன இந்த மாதிரி வலை பதிவுகள் படிப்பதை குறைத்துவிடுங்கள் இல்லாட்டி ரொம்ப பிபி ஏறும். பேசாம டாஸ்மாக் போய் ஒரு கட்டிங்க் சாப்ட்டுட்டு அரசியல் மீட்டிங்க்லாம் பார்கலாம். பாரில் பொழுது போக மூணு தலைப்புல விவாதம் பண்ணலாம்.
1.தமிழன் தரம் தாழ்த்தும் தசாவதாரம் தேவையா
2.சாஃப்ட்வேர்காரன் சாப்பாட்டுல மண் அள்ளி போடுவது எப்படி
3.தினகரன் இன்னும் திராவிட பத்திரிகையா
சரவணன்
ஆக்கப்பூர்வமான(!) பதில்களுக்கு நன்றி!
//எங்களை இவ்வளவு கேள்வி கேட்கும் நீங்கள்//
கேள்விகள் கேட்கச்சொல்லிவிட்டு நீங்கள் இப்படி சங்கடப்படலாகுமா?
//இந்த விஷயம் பற்றி செய்து வருவது என்ன என்பதையும் எழுதிவிட்டு போங்கள்//
அந்த அறுபது கோடி இந்தியர்களுக்கும் அவர்களின் நிலை எதுவானதாக இருந்தாலும் அதன் சாதக பாதகங்கள் கண்டுணர்ந்து பாதகத்தைத் தவிர்த்து, சாதகமான விஷயங்களை உபயோகப்படுத்தும் புத்திசாலித்தனம் இல்லை என ஒரே போடாக போடாமலிருப்பது ;-)
//கேள்விகள் கேட்கச்சொல்லிவிட்டு நீங்கள் இப்படி சங்கடப்படலாகுமா?//
அவை எந்த கேள்விகள் என்பது முக்கியம். பதில்கள் பதிவில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறு, இப்போது நீங்கள் கேட்டது வேறு. மேலும் அதனால் எல்லாம் இங்கு யாரும் சங்கடமெல்லாம் படவில்லை. நல்ல காமெடியாகவே இருந்தன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அந்த அறுபது கோடி இந்தியர்களுக்கும் அவர்களின் நிலை எதுவானதாக இருந்தாலும் அதன் சாதக பாதகங்கள் கண்டுணர்ந்து பாதகத்தைத் தவிர்த்து, சாதகமான விஷயங்களை உபயோகப்படுத்தும் புத்திசாலித்தனம் இல்லை என ஒரே போடாக போடாமலிருப்பது ;-)
//
உண்மையைச் சொல்லாமலிருப்பது என்று ரெண்டு வார்த்தையாக இதை சுருக்கலாம்.
எல்லா சோசியலிஸ்டு நியூசென்ஸ்கள் செய்வது அதைத் தான்.
//இப்போது நீங்கள் கேட்டது வேறு. மேலும் அதனால் எல்லாம் இங்கு யாரும் சங்கடமெல்லாம் படவில்லை. நல்ல காமெடியாகவே இருந்தன.
அன்புடன்,
டோண்டு ராகவன//
சார் மீண்டும் நச்சுன்னு சொல்லிட்டீங்க.. இன்னும் மாயையில வாழ்பவர்களுக்காக ஒரு வாத்தியார் பாட்டு..
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே..
சரவணன்
1.ஒருவேளை மாறன் சகோதரர்கள் செல்வி ஜெயலலிதா விடம் சரணாகதி அடைந்தால்?
2.கலைஞர் என்ன அறிக்கை விடுவார்?
(குறிப்பு:ஜெயலலிதாவும்,மாறன் மகன்களும்-பெரியாரின் பரம வைரிகளான இரு பிரிவுகளை சேர்ந்தவர்கள்)
3.தினகரன் பத்திரிக்கை ,அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு தினமலர்,துக்ளக் பட்ட அவஸ்தையை அனுபவிக்கும் போல் உள்ளதே?
4.அண்ணா அவர்கள் சொன்னது போல் திமுகாவை அவரது தம்பிகளே ......?
5.மத்திய அரசில் அத்வானி பிரதமர் ஆனாலும் இதே கொள்கைகளைத்தான் கடைபிடிக்கபோகிறார்கள்?
6.புதிய மொந்தை பழைய கள் கதை தானே?மீண்டும்?
7.பா.ம.கவை வெளியேற்றிவிட்டு விஜயகாந்த்தை காங்கிரஸ் துணையுடன் இழுக்க திமுக முயலுவதுபோல் உள்ளதே?
8.வை,கோ வின் எதிர்காலம் அவ்வளவுதானா?
9.ஒருவேளை கலைஞருக்கு பின்னால் ஆட்சி அதிகாரம் மதுரை அழகிரியின் கைக்கு சென்றால்?
10.இலவு காத்த கிளி யாக மாறும் ஸ்டாலின் என்ன செய்வார்?
பாண்டிய நக்கீரன்
அடுத்த பதிவில் முதல் பத்து கேள்விகள் உங்களுடையதுதான் பாண்டிய நக்கீரன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.பணவீக்க விகிதம் மொத்த குறியீடு எண்ணின் அடிப்படையில் அதுவும் 1994 ம் ஆண்டு உருவாக்கப் பட்ட பொருள்களின் அடிப்படையில் தவறாக்கக் கணக்கிடப் படுவதாக சொல்வது பற்றி தங்கள் கருத்து?
2.இந்தியாவின் இப்போதயை பனவீக்கம் ( உண்மையாக 25% என்கிறது ஒரு தகவல்)நிலைமைக்கு காரணமான இரு மேதைகளும் வேறு ஒரு pay roll ல் உள்ளதாக வரும் தகவலில் உண்மை இருக்குமா?
3.நிதி அமைச்சரை மட்டும் குறை
கூறுவது உங்களுக்கு ஏற்புடையதா?
4.பொதுவாக பங்கு வணிகம் சரிந்தால் முட்டுக்கொடுக்க கொள்கைபரப்புச் செயலாளர் வரும் நிதிஅமைச்சர் மெளனம் சாதிப்பதுஏன்?
5.அரசின் தவறான (நியாம்,நேர்மை,தர்மம் இவையெல்லாம் பழங்கதையாய் ஆய்விட்ட நம் பாரத தேசத்தில்)பொருளாதரக் கொள்கையினால் விலைவாசிகள் வெகுவாக ஏறி,உணவுக்காக உள் நாட்டு சண்டை ,கலவரம்,கொள்ளைகள் முதலிய நடந்தால் அதற்கு யார் காரணம்?( இது கற்பனையல்ல நடக்கப் போகும் நிதர்சனம்)
7.கடைசியில் நமது கடலில் மீன் பிடிக்கும் உரிமையும் பன்நாட்டுக்கு பகாசுரக் கப்பெனிகளுக்கு தாரை வார்க்க அரசு முயலுகிறதே?
8.அரசுக காண்டிரக்ட்களில் 30 % கட்சிகாரங்களுக்கு,20 % ஒப்பந்தக் காரருக்கு மீதம் உள்ள 50 % ல் பணிகள் இவ்வளவு நடக்கும் போது கமிஷன் அற்ற ராம ராஜ்யம் இருந்தால் எப்படி இருக்கும்?
9.திமுக அமைச்சர்களில் இந்த தடவை நல்ல அறுவடை யாருக்கு?
10.கனிமொழியின் பதவிஏற்பு (அமைச்சராக)தாமதம் என்ன காரணம் ( அழகிரின் சுப்போர்ட் வேறு இருக்கே)?
8.
நான் சொல்வதெல்லாம் உங்களை போன்றோர்க்கு கேலிப்பொருளாகத்தான் தோன்றும். ஏழை, பணக்காரன் வித்தியாசம் நீங்கி அனைவரும் சமத்துவம் பெறுவதுதான் நான் விரும்புவது. அதைத்தான் எமது மக்கள் கலை இயக்கமும் கூறுகிறது. அது தவறு என்பது போல எல்லோரும் பேசுகிறீர்கள். அந்த் சமத்துவம் பெற என்ன வழி என்பதை விட்டு கேலி பேசுகிறீர்கள். உலக மயமாக்கலே வேண்டாமென சொல்லவில்லை. ஏழை, பணக்காரர் சமத்துவத்திற்கு ஒத்து போகிறபடியான உலக மயமாக்கலே தேவை. இந்தியாவில் படித்துவிட்டு வெளினாடுகளுக்கு ஓடுவதை தடுக்க வேண்டும். படிப்பதற்கு மட்டும் வெளினாடு செல்வதை அனுமதிக்கலாம். ஆனால் இந்தியாவில்தான் வேலை பார்க்க வேண்டும். இன்னின்ன துறைக்கு இவ்வளவு தான் சம்பளம் தரப்படவேண்டும் என்று நிர்ணயிக்க வேண்டும். பன்னாட்டு முதலாளிகள் இங்கு கடை விரிக்கலாம். ஆனால் உள்ளுர்க்காரன் தான் நிர்வகிக்க வேண்டும். இப்படி பல பல வழிகள் உண்டு. முதலில் மனம் உண்டா?
கோமணகிருஷ்ணன்
வணக்கம் கோபகிருஷ்ணரே,
என்னடா இவ்வளவு நேரம் ஆளை காணோம்னு பயந்துட்டன், உண்மையிலேயே சமநிலை வேணும்னு அந்த 12 ஆயிரம் கோடி பார்டி கிட்ட காசு கேட்க போயிட்டீங்களோன்னு பயந்து போயிட்டன். ஒரு முறை நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் காணாமல் போவது இல்லை அடுத்த நாள் வந்து பழைய விஷயத்தை மறந்து விட்டு புது காமெடி கேள்வி கேட்பது என்று உள்ளீர்களே இது நியாயமா.
//இந்தியாவில் படித்துவிட்டு வெளினாடுகளுக்கு ஓடுவதை தடுக்க வேண்டும்.படிப்பதற்கு மட்டும் வெளினாடு செல்வதை அனுமதிக்கலாம்.//
அதெப்படிங்க உங்களால் தொடர்ந்து காமெடி கொடுக்க முடிகிறது. வெளிநாட்டு படிப்பிற்கு எத்தனை லட்சம் செலவாகும் என்று தெரியுமா இந்தியாவிலிருந்து பணம் அந்த நாட்டுக்கு போகும் அதே ஒரு வெளிநாட்டில் ஒருவன் வேலை செய்தால் அங்கிருந்து பணம் இங்கு வரும். அரசாங்கம் ஒரு பொறியாளரை உருவாக்க ரொம்ப செலவு செய்யுது காமெடி கொடுக்காதீர்கள் இப்போது சுயநிதி பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர்கள்தான் 90% என்னை மாதிரி அரசு கல்லூரி ஆட்கள் ரொம்ப கம்மி.
//ஏழை, பணக்காரன் வித்தியாசம் நீங்கி அனைவரும் சமத்துவம் பெறுவதுதான் நான் விரும்புவது.//
நீங்கள் சொல்லு ஏழை பணக்காரன் இல்லாத சமநிலை எந்த இயக்கத்தாலும், எந்த புரட்சியாலும் கொண்டு வரவே முடியாது எனும் உண்மையை எப்போது புரிந்துகொள்வீர்கள்(இதை சொன்னால் ஆரியன், ஆரிய அடிவருடி, தலித் துரோகி, பார்பனீயம் அப்படின்னு ரெடிமேடி முத்திரை குத்துவார்கள்). ஏழை பணக்காரன் ஏற்றதாழ்வு பெருமளவில் இல்லாமல் இருக்க வேண்டும் என சொல்லுங்கள். ஒவ்வொரு இயக்கமும் கருத்தியலும் அதற்கு வலு சேர்க அது உண்மையாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அதை ஆதரிக்க நிறைய பேர் வேண்டும் அவ்வளவே.
அந்த கருத்தியலை வலுவாக்க நிறைய பேரை அதன் பின் சேர்க வேண்டும் அதற்கு உணர்ச்சி பூர்வமாக பேசுவார்கள் வார்த்தை ஜாலத்தில் உங்களுக்கு சொர்கத்தை கொண்டு வரப்போவதாக சொல்வார்கள். நம்புவது உங்கள் உரிமை. யாரும் சீட்டு கம்பெனியில் பணம் போடுவது குற்றம் என்று சொல்லமுடியாது. எங்களையும் மல்டி லெவல் மார்கெட்டிங்கல இழுத்து விட பார்கறீங்களே நியாயமா?.
அல்லாவை கும்பிடுங்கள்.. உங்கள் ஒட்டகத்தை கட்டிபோடுங்கள்.
ஏழை இல்லா நாடு கொண்டுவருவதாக சொன்ன கம்யூனிஸ காமெடி ரஷ்யாவை போண்டியாக்கியது
சஹாராவில் கம்யூனிஸம் கொண்டுவந்தால் என்ன நடக்கும்?
ஒரு வருடத்தில் அவர்கள் மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டி வரும்.
மீண்டும் காணமல் போய் நாளை புது காமெடி கேள்விகளோடு வர வாழ்த்துக்கள்.
சரவணன்
//மீண்டும் காணமல் போய் நாளை புது காமெடி கேள்விகளோடு வர வாழ்த்துக்கள்.
சரவணன்
ஏது ஏது கோமணகிருஷ்ணணை கோமாளி கிருஷ்ணாவாக ஆக்கமால் ஓயமாட்டிர்கள் போலுள்ளதே?
கொள்கை கோமகன்,ஏழைப்பங்காளன்,சமதர்ம சிற்பி, 2011ல் தமிழக முதல்வர் அண்ணன் கோ.கி பாசறை
//கோமணகிருஷ்ணன்:
1) அய்.டி. போன்றவற்றினால் பெண்கள் அரைகுறை ஆடை அணிவது, ஆண்களுடன் குடித்து விட்டு கும்மாளம் போடுவது, பாய்பிரண்டு டேட்டிங் என அலைவது என தமிழ் கலாசாரம் சீரழிந்த்துவிட்டதே? உங்கள் பதில் என்ன? (பலமுறை கேட்டும் நீங்கள் பதில் சொல்லவில்லை!!)
பதில்: யானைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும் அல்லவா. முன்பு ஆண்கள் மட்டும் ஆட்டம் போட்டனர். பணத்துக்கு பெண்களை வரவழைத்தனர். இப்போது பெண்களுக்கும் "அத்தேவை" அதிகமாகியுள்ளது. பொருளாதார சுதந்திரம் வேறு. அதிக செலவில்லாமல் பார்ட்னர்கள் கிடைக்கும் நிலை. எல்லாம் சப்ளை அண்ட் டிமாண்ட்தான்.
முன்பெல்லாம் ஒரு ஆண் தவறு செய்தால்,அதாவது பரத்தையர் தொடர்பு ,அது ஒரு நிகழ்ச்சி என்றும்,ஒரு பெண் வேலிதாண்டிய வெள்ளாடானால் அது ஒரு சரித்திரம் என்பர்.இன்று குழுக்களை மாற்றும் ஜாலவித்தைகள் சர்வ சதாரணம். இதைக் கண்டிக்கமால் தங்களைப் போன்ற பெரியவர்கள் நியாயப் படுத்துவது சரிதானா?
//கேள்விகள் கேட்கச்சொல்லிவிட்டு நீங்கள் இப்படி சங்கடப்படலாகுமா?//
அவை எந்த கேள்விகள் என்பது முக்கியம். பதில்கள் பதிவில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறு, இப்போது நீங்கள் கேட்டது வேறு. //
என்னத்தையோ 'நச்'சுனு சொல்லிவிட்டீர்கள் என்றுமட்டும் புரிகிறது ;)
[தசாவதாரத்தில் விஞ்ஞானி-கமல் பயோஆயுதம் பற்றி விளக்க பாட்டி-கமல் ஒரு expression கொடுப்பாரே ! படம்பார்த்தால் அவதானிக்கவும் :]
//மேலும் அதனால் எல்லாம் இங்கு யாரும் சங்கடமெல்லாம் படவில்லை. நல்ல காமெடியாகவே இருந்தன.//
மிக்க மகிழ்ச்சி (பலருக்கு B.P. எகிறுதே ;-)
மீண்டும் ஒரு காமடி கேள்வி!
மானுடம், மனிதநேயம், மனிதாபிமானம் போன்ற சொற்களைப்பற்றிய தங்கள் புரிதல்/வரையரை என்ன?
இந்த வாரத்திற்கான கேள்வி:
பல மதத்தவர்களும் ஒன்றாக வாழும் ஈவேரா பிறந்த மண் தமிழ்நாடு. ஆனால், இங்கே மதச்சார்பின்மையை பின்பற்ற மறுத்து, இந்து மதத்தின் உயர்வைப் பற்றிய தகவல்களை மட்டுமே வெளியிட்டு, மதவெறியைப் பரப்புகிற இணையதளம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
//முன்பெல்லாம் ஒரு ஆண் தவறு செய்தால், அதாவது பரத்தையர் தொடர்பு, அது ஒரு நிகழ்ச்சி என்றும், ஒரு பெண் வேலிதாண்டிய வெள்ளாடானால் அது ஒரு சரித்திரம் என்பர். இன்று குழுக்களை மாற்றும் ஜாலவித்தைகள் சர்வ சாதாரணம். இதைக் கண்டிக்காமால் தங்களைப் போன்ற பெரியவர்கள் நியாயப் படுத்துவது சரிதானா?//
இதையெல்லாம் கண்டிப்பதற்கோ நியாயப்படுத்துவதற்கோ நான் யார்?
அந்த பரத்தையும் பெண்தானே? அதே போல வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டால் அவள் கணவனும் பாவம்தானே. அதற்காகவே அம்மாதிரி அலைபவனின் மனைவியும் ஏதேனும் அவ்வண்ணம் செய்தால் அவன் மேல் கண்டிப்பாக அனுதாபம் என் தரப்பிலிருந்து வராது. போய் அனுபவிடா தாழிமோனே என்பேன் நான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
இந்த வாரத்திற்கான கேள்வி:
பல மதத்தவர்களும் ஒன்றாக வாழும் ஈவேரா பிறந்த மண் தமிழ்நாடு. ஆனால், இங்கே மதச்சார்பின்மையை பின்பற்ற மறுத்து, இந்து மதத்தின் உயர்வைப் பற்றிய தகவல்களை மட்டுமே வெளியிட்டு, மதவெறியைப் பரப்புகிற இணையதளம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
//
இந்து மதத்தை உயர்வாகப் பேசினாலே மதவெறி தூண்டப்படுகிறதா ?
இஸ்லாமியர்கள், இந்துக்களை கொல்லவேண்டும் என்றும் கிருத்தவர்கள் இந்துக்களை மதம் மாற்ற வேண்டும் என்று உறக்கச் சொல்லும் வலைப்பூ, வலைத்தளம், டீ.வி. சேனல்கள் எல்லாம் மத நல்லிணக்கத்தைப் பரப்புகின்றனவா ?
மத நல்லிணக்கம் என்றால் என்ன ?
இந்து மதத்தவர் மட்டும் மற்ற மதத்தினருக்கு இணங்கிப் போவதா நல்லிணக்கம் ? ஆம், என்றாம் அத்தகய நல்லிணக்கம் தேவையா ?
Vajra said...
//இந்து மதத்தை உயர்வாகப் பேசினாலே மதவெறி தூண்டப்படுகிறதா ?
இஸ்லாமியர்கள், இந்துக்களை கொல்லவேண்டும் என்றும் கிருத்தவர்கள் இந்துக்களை மதம் மாற்ற வேண்டும் என்று உறக்கச் சொல்லும் வலைப்பூ, வலைத்தளம், டீ.வி. சேனல்கள் எல்லாம் மத நல்லிணக்கத்தைப் பரப்புகின்றனவா ?
மத நல்லிணக்கம் என்றால் என்ன ?
இந்து மதத்தவர் மட்டும் மற்ற மதத்தினருக்கு இணங்கிப் போவதா நல்லிணக்கம் ? ஆம், என்றாம் அத்தகய நல்லிணக்கம் தேவையா ?//
என்ன சார் நீங்க சொல்றது.
பொருளாதார தத்துவங்களை கரைத்து குடித்து கலாச்சாரப் புரட்சியின் கண்மணிகளாம் இடதுகள் கூட " அணு ஒப்பந்தந்தை ஆதாரித்தல் முலாயம் அவர்களும் அவரது கட்சியும் இஸ்லாமியர்களின் எதிரியாகும் என்று சொன்னதால் தான் " இப்போ ஆட்சியே அம்பேலாகும் போல் உள்ளது.
மனதில் கை வைத்து சொல்லுங்கள் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியாவது ( பாஜாக உட்பட )
வெளிப்படையாக சிறுபான்மியினரை பற்றி ஒரு சிறு எதிர்ப்பை காட்ட முயலுவார்களா?
ஒரு தேர்தலில் கொஞ்சம் எல்லா ஜாதி,கருத்து பேதங்களை மறந்து, நாத்தீக முகமூடி மட்டும் போட்டு வெற்றி உலாவரும் புத்திசிகாமணி கட்சிகளுக்கு எதிராக (கோவில்களில்,மடங்களில்,யோக வகுப்புகலில்,ஜாதி சங்களிலில், சர்ச்,மசூதிகள்ல் நடைபெறுவது போல்-ஒரு வலிமையான கூட்டடு முடிவெடுத்து)
எதிர் வாக்குகளை அளித்து பாருங்கள் அப்புறம் இந்து என்றால் மகோன்னதன்,அதிசய்ப் பிறவி என்று தினம் போற்றி போற்றி என்று நாளும் பக்தி பஜனை செய்து வலம் வருவர் .
எல்லாக் கோவிலும் அர்ச்சனை செய்த பின்னே கட்சிக் கூட்டங்களை நடத்துவர்
ஜோதிடர்களுக்கெனெ தனியா "ஜோதிட அணி மாநாடே நடத்தி பெருமிதம் கொள்வர்'
சுவாமிகளின் பேரில் அறக்கட்டளைகள் ஏற்படுத்தி புண்ணியம் செய்வர் பாருங்கள்
ஆனால் என்ன ,இதில் ஒன்று கூட நடக்காது என்று நம்மைவிட அரசியல் கண்மணிகளுக்கு தெரியும், எனவே இப்ப்டி கற்பனை பண்ணி ஆனந்தப் பட்டுங்கள்.
ராமகிருஷ்ணஹரி
1.சன் டீவி,கலைஞர் டீவி கோழிச் சண்டை எப்படியுள்ளது?
2.அரசு டீவிக்கு மதுரையில் இடமில்லை பார்த்தீர்களா?
3.நெல்லையில் சிறப்பு கவனிப்புஅரசு டீவிக்கு,கரன் டீவியை ஒழித்துகட்டவா?
4.சன் டீவியில் காட்டவில்லை( வை.கோ,வி.காந்த்,ச.கு) எனக் குற்றம் சாட்டிய அத்துணை பேரும் இப்போ சன் டீவிக்கு வக்காலாத்து ? இது எப்படி இருக்கு
5.நிகழ்ழ்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தால் க.டீவி, ச.டீவிக்கு பின்னால் தான் இல்லையா?
6.சன் டீவியின் டிடிஎச் சேவை வெற்றியா?
7.டாடா அதிபரை இதற்காகதானே மிரட்டியதாக செய்தி வந்தது?
8.மற்ற டீவிக்களுக்கு முற்பகல் செய்த்தது( தீமைகள்,இடையுறுகள்)இவர்களுக்கு
இப்போ இவர்களுக்கு காலதேவன் அழகிரி வடிவில் கொடுக்கிறானா?
9.இந்தியாவில் மூன்றாம் அணி கோவிந்தாவானாலும் இங்கே அது நடந்து விடும் போலுள்ளதே?(மருமகன் மாறன் பிள்ளகளின் பணபலம்)
10.தொலைதொடர்பு மெஹா டெண்டரில் ஏதோ நட்ந்ததாக அரசல் புரசலாய் புயல் கிழம்பியதே, அது மீண்டும் தூசு தட்டப்படுமா?
டோன்டு சார்
முதல் 5 கேள்விகள்(sun t.v,arasu t.v) அப்லோட் ஆகாது மாதிரி இருந்ததால் மீண்டும் அனுப்பினேண்.தேவையில்லாதவற்றை நீக்கிவிடவும்.
நன்றியுடன்
ரமணா
ரமணா சார்,
மதுரையில் சன் டீவி காட்டக்கூடாது என்று மதுரையை ஆளும் சுந்தரபாண்டியன் (அழகிரி) அறிவிப்பு விடுத்துள்ளார்.
ஆகயால், கேபிள் ஆப்புரேட்டர்கள் பலர் திவாலாகி வருகின்றனர்.
போதாத குறைக்கு ரிலையன்ஸ் வேறு களத்தில் குதித்து டி.டி.எச் சேவையை வழங்கவிருக்கிறது. பிக் டீ.வி என்று பெயர். மாதம் 100 ரூபாய்க்கு அனைத்தும் வரும் என்றால் 200 ரூபாய் கொடுத்து டிஷ் டீ.வி சேவையை திருட்டுத்தனமாக வாங்கி ஒளிபரப்பும் மதுரை கேபிள் ஆப்புரேட்டரிடம் யாராவது போவார்களா ?
//திருமலை நாயக்கன் said...
ரமணா சார்,
மதுரையில் சன் டீவி காட்டக்கூடாது என்று மதுரையை ஆளும் சுந்தரபாண்டியன் (அழகிரி) அறிவிப்பு விடுத்துள்ளார்.
ஆகயால், கேபிள் ஆப்புரேட்டர்கள் பலர் திவாலாகி வருகின்றனர்.
போதாத குறைக்கு ரிலையன்ஸ் வேறு களத்தில் குதித்து டி.டி.எச் சேவையை வழங்கவிருக்கிறது. பிக் டீ.வி என்று பெயர். மாதம் 100 ரூபாய்க்கு அனைத்தும் வரும் என்றால் 200 ரூபாய் கொடுத்து டிஷ் டீ.வி சேவையை திருட்டுத்தனமாக வாங்கி ஒளிபரப்பும் மதுரை கேபிள் ஆப்புரேட்டரிடம் யாராவது போவார்களா
இதற்கே இப்படி உணர்ச்சிவச்ப் படுகிறீர்கள்.இனிமேதான் முழுக்கதையிருக்கு.
அண்ணணின் விஸ்வரூபம் கண்டு
ஆட்சி செய்ய வேண்டியர்
இலவு காத்த கிளியாய்..
இறக்கை ஒடிந்த பறவையாய்..
வாலிழந்த நரியாய்..
வனபில்லாச் சோலையாய்
வலம் வருவதை நாடே வேடிக்கை பார்க்கிறதே
ஆனால் ஆயிரம் சொல்லுங்கள் கலைஞரின் அரசியல் வாரிசு அஞ்சாநெஞ்சன் தான்.
வரும் காலங்களில் ஆட்சி அதிகாரம் அவ்ர் கையில்.
காலம் பதில் சொல்லும்.
மதுரைத் தலமை கோட்டையில் கோலோச்சும் நாள் மிக மிக சமீபத்தில்-
இது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு-(பத்திரிக்கைகளின் கட்டுரைகள்)
பொறுந்திருந்து வேடிக்கை பார்ப்போம்.
(வாத்யார் சுப்பையா சாரிடம் இரண்டு ஜாதகங்களையும் கொடுத்தால் எதிர்காலம் தெரிய வரும். அவரவ்ர் கிரக,தசா புத்திகள் செல்லும் போக்கு தெரியவில்லையே)
அது சரி நம்ம டோண்டு சார் என்ன பதில் சொல்கிறார் பார்ப்போம்.
Post a Comment