3/17/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 50 & 51)

எபிசோட் - 50 (15.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென நீலகண்டன் வாதங்களை முன்வைக்கிறார். முதலில் மறுக்கும் நாதன் பிறகு பார்க்கலாமென்கிறார். வீட்டில் வசுமதியும் தன் தரப்பில் சஷ்டியப்த பூர்த்திக்கான வாதங்களை தொடர, அவரும் கடைசியில் ஒத்து கொள்கிறார்.

அசோக்கை போலீசில் புகார் கொடுத்து மாட்டிவிட்ட பெண்மணி தன் கணவனுடன் அசோக் பற்றி பேசுகிறாள். அவன் தங்களை மன்னிப்பான எனத் தெரியவில்லை என கலங்க அவள் கணவன் தான் நேரிலேயே போய் அச்சோகிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக கூறி அவன் பிட்சைக்கும் வருவான் என கூற, அப்பெண் அதை நம்பவில்லை.

இது என்ன சார் இப்பெண்தான் அசோக்கை இன்சல்ட் செய்கிறாள், பிறகு மன்னிப்பும் ஏன் எதிர்பார்க்கிறாள் என சோவின் நண்பர் கேட்க, சோவும் இந்த விஷயத்தில் இரண்டு நிலைப்பாட்டை கூறுகிறார். மகாபாரதத்திலேயே வீமனும் பாஞ்சாலியும் யுதிஷ்டிரரது அதீத மன்னிக்கும் பாவனையை சாட, அவரோ மன்னிப்பின் பெருமையை கூறுகிறார்.

ஆனால் அதே தருணத்தில் அசோக்கே பிட்சை கேட்டு வர, கணவன் மனைவி இருவருமே பச்சாத்தாப உணர்ச்சியில் தத்தளிக்கின்றனர்.

பாகவதர் வீட்டில் அவரது பேரன் தனது ஸ்கூட்டியை தொலைத்து விட்டு வருகிறான். போன இடத்தில் அதை நிறுக்த்திவிட்டு சென்றபோது அதை லாக் செய்யாமல் போனதையும் ஒத்து கொள்கிறான். அவனது தாய் தந்தையர் அவனைத் திட்ட, சித்தப்பா மணி அந்த ஸ்கூட்டி லாக் செய்யப்படாமல் இருந்ததை தான் கவனித்து, அதை வீட்டுக்கு எடுத்து வந்ததை கூறுகிறான். மேலே நடக்கும் பேச்சிலோ மணியே தான் வங்கி பாஸ்புக்கை தவற விட்டதை ஒத்துக் கொள்ள வேண்டியதாகிறது. இப்போது ராமசுப்பு பாஸ்புக்கை தான் வீதியில் கண்டெடுத்ததாக கூறி அதை எடுத்து தர, இப்போது சித்தப்பா மணியின் முறை அசடுவழிய. ரொம்பவுமே எதார்த்தமான குடும்பக் காட்சி.

நீலகண்டனின் மாப்பிள்ளை தினமும் ஆஃபீசில் வேலை இருப்பதாகக் கூறி வீட்டுக்கு லேட்டக இரவு 11 மணிக்கு வருகிறான். ஆனால் உண்மையில் அவன் ஆஃபீசை விட்டு மாலை 6 மணிக்கே கிளம்புவதை அறிந்த நீலகண்டன் குழம்புகிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 51 (16.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சிவன் கோவிலில் சாரியாரும் அசோக்கும் பேசிக் கொண்டே பிரதட்சணம் செய்கின்றனர். சைவ வைணவ ஒற்றுமையை ஓங்கச் செய்ய வேண்டிய அவசியம் பற்றி பேசுகின்றனர். மகாபெரியவாள் சிவன் கோவிலில் ஆண்டாள் கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்ததாக சாரியார் கூறுகிறார். அம்மாதிரியே தாங்களும் செய்யலாம் என ஆலோசனை தருகிறார்.

சோவோ அவ்வாறு ஒட்டு மொத்தமாகச் சொல்லவியலாது என அபிப்பிராயப்படுகிறார். மகாபெரியவா சம்பிரதாயங்களில் ஊறியவர் என்றும், ஆகம விதிப்படி நடத்தப்படும் கோவில்களில் பிரதம கடவுளை தவிர மற்ற சம்பிரதாய கடவுள்கள் சாதாரண தேவதையாகத்தான் கருதப்படுவர் என்றும், மகா பெரியவா பழைய சம்பிரதாயங்களை மீறுபவர் அல்ல என்றும் கூறுகிறார். இருப்பினும் தனிப்பட்ட முறையில் கட்டப்படும் கோவில்களில் இம்மாதிரி பரிசோதனைகள் செய்வது ஆட்சேபத்துக்குரியவை அல்ல என்றும் கூறுகிறார். இம்மாதிரியான செயல்பாட்டு சுதந்திரமே இந்து மதத்தின் சிறப்பு எனவும் அவர் எடுத்துரைக்கிறர்.

அசோக்கும் சாரியாரும் இரண்டு சம்பிரதாயத்தையும் சேர்ந்த பெரியவர்களை கொண்ட கமிட்டி அமைக்க முடிவு செய்கின்றனர். அசோக் இது சம்பந்தமாக தனது தந்தையுடன் பேசுவதாக கூறுகிறான்.

நாதனுக்கு சாப்பாடு எடுத்துவரும் சிங்காரம் அவரிடம் ஆறுதலாக பேசுவதாக நினைத்து தனது மகனும் தன்னைப் பிரிந்து இருப்பதை கூறி, அவரது மனநிலையை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என கூறுகிறான். பிறகு சஷ்டியப்த பூர்த்தி விஷயமாக அசோக்குடன் பேச வேண்டியிருப்பதால் அவனை அழைத்துவருமாறு கூறி சிங்காரத்தை அனுப்புகிறார். பிறகு அசோக் தன்னையும் சிங்காரத்தின் ரேஞ்சுக்கு கொண்டுவந்து விட்டதாகக் கூறி தனக்குள்ளேயே புலம்புகிறார்.

சிங்காரம் அசோக்கை பார்த்து கல்யாண விஷயமாக நாதன் அவனை பார்க்க விருபுவதாக கூற, அவனோ அவர் ஆண்டாள் கல்யாணம் விஷயமாக பேசுவதாக நினைத்து கொண்டு நாதனை பார்க்க விரைகிறான்.

நாதன் அலுவலகத்தில் ரமேஷுடன் அவன் தினமும் லேட்டாக வீட்டுக்கு போவது பற்றி கேட்க அவன் ஜெர்மன் கிளாஸ், ஜிம் என்றெல்லாம காரணங்களை அடுக்குகிறான். அவரோ அதெல்லாம் அவனது சொந்த விஷயம், ஆனால் அதற்காக ஆஃபீசை சாக்காக வீட்டில் கூறக்கூடாது என எச்சரிக்கிறார்.

அசோக்கும் நாதனும் பேசுகின்றனர். இவன் ஆண்டாள் கல்யாணத்தை நினைத்து பேச அவரோ சஷ்டியப்தபூர்த்தி கல்யாணம் பற்றி பேச முதலில் குழப்பம். பிறகு தெளிவு பிறக்கிறது. ஆண்டாள் கல்யாண விஷயத்தை நாதன் ஒத்துகொண்டு தனது முழு ஒத்துழைப்பையும் தருவதகக் கூறுகிறார். ஆனால் அசோக் சஷ்டியப்தபூர்த்தி விஷயத்தில் ஒரு பிரச்சினையை கிளப்புகிறான். அதாவது தந்தைக்கு சஷ்டியப்தபூர்த்தியை நடத்துவது பிரும்மச்சர்ய ஆஸ்ரமத்தை கடைபிடிக்கும் தன்னால் இயலாது, ஆகவே பத்திரிகையை தன் பெயரில் வெளியிட வேண்டாமென கேட்டு கொள்கிறான்.

இதென்ன என சோவின் நண்பர் கேட்க, அசோக் சொல்வதற்கு காரணம் சரியாக இல்லை என்கிறார். அவன் சன்னியாசி இல்லை, ஆகவே தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய எந்த தடையும் இல்லை என்கிறார். ஆனால் அசோக் இங்கு ஒரு பரிசோதனை முயற்சியில் இருப்பதாக மட்டும் புரிந்து கொள்ள வேண்டியது என்றும் கூறுகிறார். ஆனானப்பட்ட சன்னியாசிகளான பட்டினத்தாரும் ஆதி சங்கரருமே தாயின் ஈமச்சடங்குகளை செய்ததையும் எடுத்துரைக்கிறார்.

அசோக் தான் சஷ்டியப்தபூர்த்திக்கு நிச்சயம் வருவதாகவும், ஆசிகள் பெற்றுக் கொள்ளப்போவதாகவும் கூறிவிட்டு அப்பால் செல்கிறான். நாதன் மனம் குமைகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

dondu(#11168674346665545885) said...

2010/3/17 Tamilish Support


Hi Dondu,

Congrats!

Your story titled 'சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 50 & 51)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th March 2010 10:49:01 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/205349

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
Thanks Tamilish team.

Regards,
Dondu N. Raghavan

virutcham said...

இந்த சீரியாலையோ இது தொடர்பான உங்கள் பதிவுகளையோ முழுவதும் பார்த்ததில்லை என்றாலும் பார்த்த அளவில் என் மனதில் எழுந்த ஒரு கேள்வி
சோ அவர்கள் தொடர்ந்து கீதையில் இருந்தே அதிகம் உதாரணங்கள் எடுப்பது மாதிரி தெரிகிறது. அவர் நாயன்மார் ஆழ்வார் மற்றும் பிற தமிழ் சான்றோர்கள் பக்கம் செல்வது மாதிரி தெரியவில்லை. கீதையிலே எல்லாமும் அடக்கம் என்று பதில் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். என் ஆதங்கம் இங்கே சமஸ்க்ரிதம் தெரிந்தவர்கள் கொஞ்சமே. தமிழ் நூல்கள் மற்றும் தமிழ் சான்றோர்கள் பற்றியும் கருத்து சொல்லும் போது பலருக்கும் உதவியாக இருக்கும்.
அப்படி இல்லை எல்லாமும் தான் சொல்கிறார் என்றால் உங்களின் எந்த பதிவில் இது சொல்லப் பட்டிருக்கிறது என்று சொன்னால் நானும் பயன் பெறுவேன்.

virutcham

dondu(#11168674346665545885) said...

@விருட்சம்
நீங்களே பதில் தந்துவிட்டீர்கள். அத்தனை பதிவுகளையும் படியுங்கள். கிட்டத்தட்ட அத்தனை எபிசோடுகளுக்கும் வீடியோ லிங்க் உண்டு.

தேடுங்கள். இந்த சீரியலே எங்கே பிராமணன் என்பது குறித்து தேடல்தானே.

மனதாலேயே கோவில் கட்டிய சிவபக்தர் பூசலார், அக்கோவிலை பல்லவ அரசர் சிவன் ஆணை ஏற்று நிஜமாகவே கட்டிய விஷயம் (ஹிருதயாலேஸ்வரர் கோவில்), திருநீலக்ண்டர் கதை என பல விஷயங்கள் வருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது