3/05/2010

நித்யானந்தர் விவகாரம் - மேலும் சில எண்ணங்கள்

இப்பதிவு முதலில் போடும்போது நிரம்ப ஆத்திரமான பின்னூட்டங்கள் வரும் என அஞ்சினேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்பதில் சிறு ஆறுதல். வலைப்பதிவில் சிறிது மெச்சூரிடி வந்து விட்டது எனத் தோன்றுகிறது.

வந்த எதிர்வினைகளை பார்த்ததில் ஜெயமோகனின் கட்டுரைகள நிதானமாக வாதங்களை முன்வைக்கின்றன. அவர் கூறியது போல:

நித்யானந்தர் ஊடகங்கள் முன் அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப் பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை.

முதலில் அந்தச் செய்தி ஓர் எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது. ஒட்டுமொத்த இந்து ஞானமரபை, இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாக அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது. திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான் என்று.

ஆனால், ஓர் இந்துவாக உண்மையாக இருக்கும்பட்சத்தில் சத்தியம் தர்மம் என்ற இரு அம்சங்கள்மீது மட்டுமே ஒருவன் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். அமைப்புகள், தனிமனிதர்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் எதன்மீதும் அல்ல. அந்நிலையில் இந்த விஷயத்தில் எது உண்மையோ அது வெளிவரட்டும், எது தர்மமோ அது நிலைநாட்டப்படட்டும் என்று மட்டுமே அவன் எண்ண வேண்டும். அந்த நினைப்பு என் சஞ்சலத்தைப் போக்கியது.


உண்மைதமிழன் கூறிய ஒன்று என்னையும் பாதித்தது. அதாவது ரஞ்சிதாவின் பெயரை இத்தனை நாறடித்திருக்க வேண்டுமா என்பது. ஆனால் இப்போது வரும் செய்திகள் அவருக்கும் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதற்கும் சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆகவே அவசரப்பட்டு இப்போது எந்த முடிவுக்கும் போக இஷ்டப்படவில்லை.

சாரு சொல்வது போல அவரது யோக வகுப்புகளால் நிஜமாகவே பலன் அடைந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். எது எப்படியானாலும் அவரும் ரஞ்சிதாவும் அந்தரங்கமாக இருவருமே மனம் ஒப்பி இருந்திருக்கின்றனர். அதை சட்டப்படி என்ன குற்றம் எனக் கூறுவது? ஆகவே அவர் மேல் முதல் தகவல் அறிக்கை என்பதே ஓவராகத்தான் எனக்கு படுகிறது. இதுவும் காலப்போக்கில் அதன் பெர்ஸ்பெக்டிவில் வரும் என விட்டு விட வேண்டியதுதான். (சாருவின் சுட்டி தரலாமென்றால், மனிதர் க்ஷணச்சித்தம், க்ஷணப்பித்தம் என பதிவுகளை போடுவதும் நீக்குவதுமாக இருக்கிறார். நான் அந்த ஆட்டத்துக்கெல்லாம் தயாராக இல்லை).

பதிவர்கள் கிருஷ்ணமூர்த்தியும் ஆர்வியும் மேலும் சிலரும் பெரியாரை இங்கு ஏன் இழுக்கவேண்டும் என கேட்டிருக்கிறார்கள். ஊராருக்கு ஒரு உபதேசம், தனக்கு மட்டும் வேறு நியாயம் என்ற வகையில்தான் ரெலெவன்சி வருகிறது. அதுவும் பெரியாரின் திருமணத்தால் வந்த எதிர்வினைகள் மிகவும் அதிகமே. அதற்கே சப்பைகட்டு கட்டினர்/இன்னும் கட்டுகின்றனர், அதே போல நித்யானந்தரின் விஷயமும் ஆகலாம் என்ற எனது யூகத்தைத்தான் எழுதினேன். இதில் எந்த தவற்றையும் நான் காணவில்லை.

இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். மற்றவர்களது அந்தரங்க விவகாரங்களில் அளவுக்கு மீறி நுழைகிற விஷயம்தான் மனத்தை உறுத்துகிறது. காதலர் தினத்தன்று சிவசேனா/பஜ்ரங்தள் செய்த அத்துமீறல்கள், சினிமாவுக்கு பெண்கள் போகவே கூடாது என ஒரு கிராமத்தில் ஃபத்வா கொடுத்த ஒரு ஜமாத்து (பல் ஆண்டுகளுக்கு முன்னால் படித்ததால் சுட்டி தரவியலவில்லை, ஆனாலும் இன்னமும் சவுதி அரேபியாவில் ஒரு பெண் உறவினர் அல்லாதவருடன் வெளியே தனியே வருவதை கண்ணில் விளக்கென்ணெய் விட்டு கண்காணிக்கின்றனர், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கசையடியும் தருகின்றனர்) ஆகியவையும் கண்டிக்கப்படவேண்டியவையே.

கம்யூனிஸ்டுகள் மட்டும் லேசுப்பட்டவர்களா? ராஜ்மோகன் உண்ணித்தான் ஜெயலட்சுமி விவகாரத்தை பார்க்கலாமே.

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் தலைவரான ராஜ்மோகன் உண்ணித்தான் என்பவர் ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் கேரளத்தில் மலைப்புறம் மாவட்டத்தில் மஞ்சேரி என்ற இடத்திற்கு தன்னுடைய கட்சிக்கொடியுள்ள காரில் மாலை ஏழரை மணிக்கு வந்தார். அங்கே அவர் அஷ்ர·ப் என்ற தொழிலதிபரின் ஊருக்கு வெளியே உள்ள வாடகை வீட்டுக்குச் சென்றார். அங்கே அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் தொண்டர்களும் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான பி.டி.பி யின் ஊழியர்களும் [இரு கட்சிகளும் கேரளத்தில் கூட்டணியாகச் செயல்படுகின்றன] அந்த வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள்.

உண்ணித்தானும் ஜெயலட்சுமியும் வெளியே இழுத்து போடப்பட்டு தாக்கப்பட்டார்கள். தொலைக்காட்சி ஊடகங்கள் வந்து கும்பல் அவர்களை இழுத்து அலைக்கழிப்பதையும் அடிப்பதையும் ஜெயலட்சுமி அழுவதையும் நேரடி ஒளிபரப்பினார்கள். போலீஸ் வந்து இருவரையும் கைதுசெய்தது. ஆரம்பத்தில் இதில் சட்டவிரோதமாக எதுவுமே தென்படவில்லை என்று போலிஸ் சொன்னாலும்கூட மார்க்ஸிஸ்ட் கட்சியின் கட்டாயத்தால் ‘ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி உண்ணித்தான் மற்றும் ஜெயலட்சுமி மீது வழக்கு போட்டது. மறுநாள் போலீஸ் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜராக்கியது. நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தது.

ராஜ்மோகன் உண்ணித்தான் சட்டப்படி எந்த தவறும் செய்யவில்லை என்று பரவலாகச் சொல்கிறார்கள் ஒருவர் தனக்குப்பிடித்த ஒரு பெண்ணுடன் தனியாக இருந்தால், அந்த இருவரும் வயதுவந்தவர்களாக இருந்து பரஸ்பர சம்மதத்துடன் அந்த உறவு நடந்திருந்தால், அதில் சட்டபூர்வமாகத் தவறேதும் இல்லை. அந்த உறவை கண்டிக்க வேண்டியவர், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியவர் அவரது மனைவிமட்டுமே. அது ஒரு குடும்பகுற்றமே ஒழிய சமூகக் குற்றமல்ல. அந்தரங்க உறவுகளில் தலையிட்டு ஆள்கூட்டம் நடுவே ஒரு பெண்ணை இழுத்தடித்து அவமானப்படுத்த யாருக்கு உரிமை இருக்கிறது என்று கேட்கிறார்கள்.

இந்நிலையில் உண்ணித்தானின் மனைவியின் கருத்து முக்கியமானதாக ஆகியது. அவர் எதிர்வினையாற்றவேண்டும் என்று கம்யூனிஸ்டுக் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் அவரது மனைவி தன்னுடைய குடும்பவிவகாரத்தில் எவரும் தலையிடவேண்டியதில்லை, இது ஒரு எதிர்கட்சிச் சதி என தனக்குத்தெரியும் என்று சொல்லிவிட்டார். கம்யூனிஸ்டுக் கட்சியையும் பி.டிபியையும் கடுமையாகத் தாக்கிவந்தவர் உண்ணித்தான். அதற்காகவே அவர் பழிவாங்கப்பட்டார் என்றார்.

ஆத்திரமடைந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் உண்ணித்தானின் வீட்டுக்குள் நுழைந்து அவர் மனைவியை தாக்கினார்கள். தாக்கப்பட்ட உண்ணித்தானின் மனைவி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு போலீசுக்குச் செல்வதற்குள் கம்யூனிஸ்டுக் கட்சியினர் போலீஸில் உண்ணித்தானின் மனைவி அவரிடம் பேசப்போன தங்களை தாக்கியதாக புகார்கொடுக்கவே போலீஸ் புகார்கொடுக்க வந்த உண்ணித்தானின் மனைவியையே கைது செய்து உட்கார வைத்து வழக்குபதிவுசெய்தார்கள்.

மலையாள எழுத்தாளர் சகரியா இதுபற்றி பேசும்போது ‘ஓர் ஆணும் பெண்ணும் விரும்பி உடலுறவு கொண்டால் அது கிரிமினல் குற்றமா என்ன?’ என்று கேட்டார். ”ஒழுக்கம் நிபந்தனையாக இருந்தால் அதை வெளிப்படையாகப் பேசுங்கள். அது அத்தனைபேரையும் கட்டுப்படுத்தட்டும். ஆனால் ஒரு தனிநபரின் வீட்டை சட்டவிரோதமாகச் சூழ்ந்து கொண்டு அவரையும் அவர் தோழியையும் வெளியே இழுத்துப்போட்டு அடிப்பதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் அளித்தது? கும்பல்களா ஒழுக்கத்தைக் கண்காணிப்பது?”
என்று கேட்டார்”. அதற்காக அவர் தாக்கவும்பட்டார்.

இம்மாதிரியான மாரல் போலிசிங்கால்தான் கம்யூனிஸ்டு தலைவர் வரதராஜனும் உயிரை விட்டார். நித்தியானந்தருக்காக நான் வக்காலத்து வாங்கவில்லை. மற்றவர்களது எதிர்பார்ப்பையெல்லாம் வளர்த்தால் இப்படித்தான் முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

31 comments:

Anonymous said...

நீங்கள் கூறியது அனைத்தையும் ஆமோதிக்கிறேன். எனக்கு சரியாகத் தெரியாதது ஒன்று உள்ளது. இந்த நித்யா தனது போதனைகளில் ஆண்/பெண் உடலுறவு பாவம் என்று போதித்திருக்கிறாரா? அல்லது தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் அதனால் தான் போற்றப்படத் தக்கவன் அறிவித்திருக்கிறாரா? - என்றால் இவருடைய இந்த உறவு தவறுதான். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் இல்லை. அடுத்தது யார் இந்த video-வை எடுத்தது? சம்பந்தப்பட்ட இருவருமே இல்லை என்றால், ஒருவரின் படுக்கையறைக்குள் சென்று அவரின் அந்தரங்கங்களைப் படமெடுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமில்லையா? மேலும் நமது புராணங்களிலேயே துறவறம் பூண்ட முனிவர்கள் சபலத்தில் தடுமாறி பெண் போகம் கொண்ட சம்பவங்கள் பல சொல்லப்பட்டிருக்கிறதே? பிரபல உதாரணம் விசுவாமித்திரர் (சம்பவத்திற்குப் பின்னும் அவர் முனிவராகவே பார்க்கப்பட்டார்). இவ்வாறு வரலாறு/புராணம் கூட இருக்கும்போது இந்துக்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் இந்து அமைப்புகள் எதற்காக இந்த (போலி?) ச்ந்நியாசியின் ஆசிரமங்களைத் தாக்க வேண்டும்?

வால்பையன் said...

//சாரு சொல்வது போல அவரது யோக வகுப்புகளால் நிஜமாகவே பலன் அடைந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். //

அவ்வ்வ்வ்வ்வ்வ்

இதுக்கு போன பதிவே தேவல!

snkm said...

இந்த விஷயத்தை பற்றிய நல்ல பதிவு! அவரை மாட்டிவிட்டவர்கள் என்ன காரணத்துக்காக இதை செய்தார்களோ!

வால்பையன் said...

//அவரை மாட்டிவிட்டவர்கள் என்ன காரணத்துக்காக இதை செய்தார்களோ! //

கொள்ளையில் பங்கு தரலையாம்!

Freethinker said...

/* பெரியாரின் திருமணத்தால் வந்த எதிர்வினைகள் மிகவும் அதிகமே. அதற்கே சப்பைகட்டு கட்டினர்/இன்னும் கட்டுகின்றனர், அதே போல நித்யானந்தரின் விஷயமும் ஆகலாம் என்ற எனது யூகத்தைத்தான் எழுதினேன். இதில் எந்த தவற்றையும் நான் காணவில்லை.
*/


விபசரியுடம் கொள்ளும் உறவும் மனைவியுடன் கொள்ளும் உறவும் ஒன்றா டோண்டு பார்ப்பான் அவர்களே. யாருடன் யாரை ஒப்பிடுவது என்ற விவஸ்தையே இல்லையா உங்களுக்கு. சும்மா ஏதோ ஒப்பிடு. ஆமா அந்தந்டையும் உங்க வேதம் கருமாதி பூரா அப்படிதானே இருக்கு. அதனால் இப்படி ஒப்பிடுவதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை பார்பனர்களை பொறுத்த அளவில்.

dondu(#11168674346665545885) said...

from Tamilish Support
reply-to support@tamilish.com
to raghtransint@gmail.com
date Fri, Mar 5, 2010 at 8:37 PM
subject Made Popular : நித்யானந்தர் விவகாரம் - மேலும் சில எண்ணங்கள்
mailed-by u15347499.onlinehome-server.com

hide details 8:37 PM (5 minutes ago)

Hi Dondu,

Congrats!

Your story titled 'நித்யானந்தர் விவகாரம் - மேலும் சில எண்ணங்கள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 5th March 2010 03:07:01 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/197646

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

மிக்க நன்றி தமிலிஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஐயா மட்டர்ற சிந்தனையாளரே,

நீங்கள் என்னதான் அழுதுபுரண்டாலும் ஈவேரா அவ்ரகள் அப்பொருந்தா திருமணத்துக்கு மற்றவர் தந்த எதிர்வினைகளை ஒரு கௌரவமான முறையில் எதிர்கொள்ளவில்லை. அவரது பகுத்தறிவு விடுப்பு எடுத்து சென்றது போலும்.

ஒரு பெண்ணுக்கு தாம்பத்திய சுகம் தர வக்கில்லாத நிலையில் கல்யாணம் செய்தது அப்பென்ணூக்கு செய்த தீங்கில்லையா? அதனால்தானே அம்மாதிரியான திருமணங்களை திக அவரது தலைமையில் அக்காலத்தில் எதிர்த்து வந்தது?

ஏன் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளவில்லை? மற்றவருக்கு செய்து வைத்தாரே? அவர்கள் சட்டப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தால் பரவாயில்லையாமா? நல்ல கொள்கை. வெளங்கிடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராம்ஜி_யாஹூ said...

ஒரு வேளை இந்த வீடியோ பொய்யாகவோ கிராபிக்ஸ் வேலையாகவோ அல்லது பணத்திற்காக (bangaloru நிலப் பிரச்னைக்காக) தான் இது நடந்தது என்று தெரிய வந்தால்,
சாருவின் கட்டுரை எவ்வாறு அமையும்.

Freethinker said...

சோ கூடத்தில் இருக்கும் உங்களை போன்றவர்கள் மிகவும் பெரியாரல் பாதிக்கப்பட்டு ஏதோ ஒரு எதிர்வினை பேச வேண்டும் தன் இனத்துக்கு ஆதரவ அவளவு என்னதிலத்தான் பேசுறிங்க திரு. டோண்டு பார்பான் அவர்களே. உண்மையை பேசுபவர்கள் ஏன் அழுது புரள வேண்டும் தோழரே. மகா (அயோக்கியன்) பெரியவா சங்கரச்சாரி விசயத்தில் நீங்கள் என்ன பதிவு போட்டீர்கள். லலிதாவில் ஆரம்பித்த அவர் அனுராதா ரமணன் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. பதத்துக்கு ரியல் எஸ்டேட் பண்ணி கொலை. இவளவுக்கும் தாங்கள் சொல்லும் பதில் என்ன. எங்கே பிராமணன் எங்கே பிராமணன் என்று தேடிக்கொண்டு இருக்கும் கூட்டம் தானே. அவர்கள் அனைவரும் காஞ்சிபுரத்தில் தான் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியாதா என்ன. இருந்தாலும் நீங்கள் ஒப்பீடு செய்ததை போன்று சிந்தநேய இல்லாமல் ஏதோ தன் இனத்துக்கு ஆதரவ எதாவது சேயனும். அவள்வே உங்கள் நோக்கம் ....விளங்கிடும்....

Anonymous said...

La affairs Nithyanantha has two perspectives:-

1. Religious
2. Legal

You are taking no. 2 as it becomes handy to defend aginst the critics of Nithy, sorry, NithayanthaR. Even Jeyamohan has not done that.

None quarrels with you for taking no.2. It is crystal clear that none has a right to interfere with the personal life of another.

But here, you see, the larger principle of 'Greatest good of the greates number' prevails.

By exposing Nithya, more than 10000followers, worldwide, and their families have now been saved from destroying their lives. You are concerned with the dignity of a single woman and her lover Nithyananda, sorry, NithyananthaR.

Now, no.2 you dont want to touch.

Does your religion allow the guru to have sex with his disciple? Or to exploit their disciples, espcially the females ? So many gurus have done/are doing that? In Delhi, a samiyar has been arrested last year for running a sex rackers involving hundreds of women.

If NithyanandaR is correct to have sex with his disciple, then every one who cheates the gullible in the name of God, is also correct and ought to be defended against the critics. After all, it is the Religion, not the people, which matters.

Jeyamohan's blogpost on Nithynanad is concerned about the consequent adverse effects of this affair on Hindu religion. He is doing that as a service to hindutva forces who live in fear of other religious people waiting for an opportunity to tarnish Hindu religion. Whenever such scandal hits the town involving a Hindu saamiyar, they look to Je to defend the maligned saamiyaar, or, if not possihle, to say it does not affect the religion, because he has word power. He is a spokesman for them. Je does not want to go deep into Nithyas affairs. He only writes about the effects, which, according to him, do not exist.

You are neither nor there.

வஜ்ரா said...

ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்

Anonymous said...

why you Folks blame nithyananda
he got the chance and opportunity
and use it
because
"Virginity is not a matter of dignity but a lack of opportunity"
why you Folks have envy on him
leave him and find your chance and opportunity to be like him

dondu(#11168674346665545885) said...

@Jo Amalan Rayen Fernando
//La affairs Nithyanantha has two perspectives:-

1. Religious
2. Legal

You are taking no. 2 as it becomes handy to defend aginst the critics of Nithy, sorry, NithayanthaR. Even Jeyamohan has not done that//.
ஜெயமோகன் செய்யாவிட்டால் என்ன? டோண்டு செய்யக்கூடாட்ர்தா?

//Does your religion allow the guru to have sex with his disciple? Or to exploit their disciples, espcially the females ? So many gurus have done/are doing that? In Delhi, a samiyar has been arrested last year for running a sex rackers involving hundreds of women//.
அதே போல தலைவர் தன் மகள் என ஒரு பெண்ணை குறிப்பிட்டு, அவளும் அவரை அப்பா அழைத்து வந்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதையும் சம்பந்தப்பட்டவருடைய சிஷ்யகோடிகளால் ஜீரணிக்க முடியாது கட்சியே உடைந்தது. அதற்கு உங்கள் எதிர்வினை? அதென்ன, பெரியாரை அப்படியே நைசாக கத்தரித்து விட்டு இன்னொருவர் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள்? நான் இருவரையும்தானே கம்பேர் செய்தேன்.

மற்றப்படி ஜெயமோகனுக்கு அவர் வழி, என் வழி எனக்கு.

பை தி வே, La affairs Nithyanantha என்றெல்லாம் எழுதி ஃபிரெஞ்சை கொலை செய்யாதீர்கள். வேண்டுமானால் L'affaire Nithyanantha என்று வேண்டுமானால் எழுதவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

உறவு எங்கே கொச்சைபடுத்தப் படுகிறது.
1. தகாத உறவு
2. கள்ள உறவு
3. உறவு கொள்பவர் எந்த பதவியில் உள்ளார் என்பதை பொறுத்து.

உதாரணம்:
வெளிப்படையான பாலின உறவு அனுமதிக்கப்பட்ட அமெரிக்க நாட்டின்
கிளிண்டன் - மோனிகா உறவு.

நித்யானந்தர் விவகாரத்தில் இதுதான் நடந்தது. அவர் வெளிப்படையாக அறிவித்துவிட்டு அந்த பெண்ணை திருமணம் செய்தால் யார் கேள்வி கேட்க போகிறார்கள், சிலரை தவிர.

வஜ்ரா said...

//
Does your religion allow the guru to have sex with his disciple? Or to exploit their disciples, espcially the females ? So many gurus have done/are doing that? In Delhi, a samiyar has been arrested last year for running a sex rackers involving hundreds of women
//

Gurus from hindu faith have had families with wife and children. They were not celibate.

Buddhist and Jain monks were insisting celibacy. Its that effect that has been retained into todays hindu faith.

Exploitation ? having consensual sex is not exploitation. Whereas having sex with minors by pastors is.

So many pastors have been arrested for exploiting minor boys for sex. And some of them even ran child trafficking rackets in our very own kanyakumari district. So, what do you mean by Gurus doing it ?

Anonymous said...

//
பை தி வே, La affairs Nithyanantha என்றெல்லாம் எழுதி ஃபிரெஞ்சை கொலை செய்யாதீர்கள். வேண்டுமானால் L'affaire Nithyanantha என்று வேண்டுமானால் எழுதவும்.
//

அவர் ஃபிரெஞ்சை மட்டுமா கொலை செய்கிறார்! அவரது ஆங்கிலமே கஷ்டப்பட்டுத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது...!

Anonymous said...

//பை தி வே, La affairs Nithyanantha என்றெல்லாம் எழுதி ஃபிரெஞ்சை கொலை செய்யாதீர்கள். வேண்டுமானால் L'affaire Nithyanantha என்று வேண்டுமானால் எழுதவும்.
//

That is a nice correction. But the word, கொலை செய்யாதீர்கள் is inappropriate. Why do you overreact ? You could have simply pointed out the error and corrected it, couldnt u?

Did I claim to have known French? The French I used is often found in English writing.

Anonymous said...

Dondu Ragavan@

You compared periyaar's inappropriate marriage with a women decades his junior. Not only myself, but others too have pointed out that the comparision will dilute the seriousness of the crime committed by Nithya.

It is the stand we take. If you dont agree, we agree to disagree with you.

What is the problem?

For your information, I am not a periyaarist.

Anonymous said...

VAJRA!

I am aware of that: gurus, or, the munivars of the yore, did have families; and some of them, continued to be grahasthaas as well; but most, when the call came, disoriented themselves from all worldly shackles, including their families, and devoted themselves to be alone with the Alone.

That is exactly why the Hindu religion venerates them and today, look upto them for inspiration.

Here, Nithya had had sex, not with wedded wife, but his unwed disciples who came to seek his guidance and teachings.

He is not a grahasthan. He claimed to be a brahmachaarya. He accordingly led a life in an ashram. He made his devotees believe that he abstains from alcohol and sex, and also other vices.

To compare N with the saints or munis who the religion venerates, dear Vajra, is to take a daggar and deeply push it into the body of your religion.

Anonymous said...

Vajra,

Of the L'affaire christian priests, an important point need to be told.

The chirstian community, or the chirstian blogger or intellectuals are not defending him anywhere.

They simply either keep mum or may disown him saying he is not a true christian.

On the other hand, your people search nook and corner for a cause to defend Nithya. They bring up periyaar (Mr Ragahvan, it is not referreing to your post, but just an eg.), feeling the need to say it has no adverse effects on the religion as Je has done.

Why dont you all condemn unanimously this sex saamiyaar? Why dont you say he is not a Hindu; but one who abuses the reliion to earn money and get illicit sex?

There lies the difference.

Anonymous said...

//அவர் ஃபிரெஞ்சை மட்டுமா கொலை செய்கிறார்! அவரது ஆங்கிலமே கஷ்டப்பட்டுத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது...!//

Anonymous!

You are correct.

I have learnt English quite late in life; and am still in the process of learning it. I dont know whether the process will be ever over or continue till my last day.

If there are errors in my English, please be gracious enough to point them out so that I can benefit from your help.

Anonymous said...

//You compared periyaar's inappropriate marriage with a women decades his junior. Not only myself, but others too have pointed out that the comparision will dilute the seriousness of the crime committed by Nithya//

What is the crime committed by Nithya?Why are you a judge in this matter, that too pronouncing that the crime he committed is a serious one?Is it more serious than the several such crimes commited by EVR and his followers like yellow towel etc?That is the question.Why are you ducking the question?

வன்பாக்கம் விஜயராகவன் said...

"seriousness of the crime committed by Nithya."

What a joke !!

Has N had sex with a minor? no

Has N forced any women to have sex with him? No. On the contrary, he was seduced by the lady in question. That lady is in her 20s or 30s


Has as been advising people against having sex? No, to my knowledge

Has he broken any kind of oath or promise to a public body not to have sex? No


Only rank hypocracy calls N's actions 'crime'.

If anything his privacy was grossly violated,so he deserves some sympathy.

One unintended consequence of this prurient interest by SUN TV is that the sexually frustrated male youth may be tempted to become 'thuravis' in the hope that actresses will fall into their bed, even without asking or trying. In other words, SUN TV has given a sex appeal to swamis and thuravis.

Anonymous said...

Anonymous and Vanbaakkam

It is your opinion that a sammiyaar can have sex with a woman disciple, while his other disciples are believing that the saamiyar abstains from sex and other vices.

According to me, it is a vice to have sex with disciples, no matter whether it is consensual or compelled.

I consider a sammiayar when he wants to devote his life to religion out and out, should give up his worldly attachments, and of all the attachements, the one with your family relations is the most difficult to sever.

Hindu religion is awash with such exemplary saints who, once taken a decision, to enter into religion i all earnestness, will never look back on any attachments.

A supreme example is Ramananujar and also, his Chief disciple, Kuureesar.

Both gave up; and fully devoted themselves to the cause of their order. Thus, their order shone, and, I should believe, till today.

A samiaar who indulges in sex, even after taking to religion unlike us, is a disgrace.

These are my views.

I wont accept your views. You have a right to them.

Every saamiyaar who is caught redhanded f***g his disciple, or haing gay sex with his male ones, will be happy to read you and anony and also vajra, that after all, they do the vice which is acceptable by many folks like you.

I wrote about one saamiyaar who was caught last year. But the correction is 'last week'

He is defending himself: He did not f>>> forcing anyone. Everyone came and offered herself on her own.

Well said.

I wont like to be a party even remotely supporting these scums of earth.

Sorry. No further arguments with me.

I am writing next week in Thinnais about the 'supporters' of 'vices' (according to me) of saamiyaars of all religions.

That is a sort of reply to the two articles which a sort of defence to N. given link by Vajra and appearing today.

Wait till then, pl

வன்பாக்கம் விஜயராகவன் said...

You cannot expect all samiyars to be of the same calibre. Only 5% may pass the test. The fate of Nithayananda's oder - if there is one - is his problem, not anyone elses. Till few days back, I have not even heard about him. If his disciples are disappointed with him, that is their problem. It is better to remember the old adage while buying second hand goods 'caveat emptor' - Let the buyer beware.

On the other hand, you are justifying a TV station's blatant intrusion of privacy, probably with a view to gain an upperhand in property disputes.

Anonymous said...

Vanbaakam

I have nothing to say about other matters like:

What is the motive of Sun?
Whether any others are behind it?
Whether his case is similar to Periyaar?
Whether HRs involved in showing a woman in private sex act? etc.

Dondu Raagavan has blogged combining many.
Jeyamohan is concerned about the adverse effects on the religion, and concludes it wont have any ripple at all.
Vajra compares the backroom sexcapades of Christian priests.

So many others write on many other things, according to their whims and fancies.

I take only one thing that concerns wholly the impugned Saamiyaar Nithya.

Whether it is a vice to have sex with a woman disciple in ashram or anywhere, no matter consensual or compelled?

It is the big question for me.

If someone says YES, and that someone happens to be a Hindu like you or Vajra, that sends shivers down my spine.

Whatever happened to the saintly principles that came from saints of your religion? They walked barefoot, ate spartan food, lived in abject poverty, rejecting all material and bodily comforts, and searched for their God and told about their experiences to their followers? And to be within their very ambience transports the disciples to heavenly bliss, so much so, that a disciple of your religion vouched:

தேவுமற்றறியேன்.

Here, to my utter horror, Nithya is put at par with those saints, Ayyooo!

Betrayal of the trust of his disciples, not one, but in thousands, not in India, but worldwide.

We cant say it is their problem. If we say it is, then we have no right to discuss any public scandal if it impacts on a few people or a group.

Nithya's example may impact only a few people; but it touches the religion itself in a broad sense.

I am not concerned with your relgion. I am concerned with the nonchallance of you folks on this matter, that surprises me.

His is a brazen mockery of the principles upheld by the seers and saints of the yore in your religion.

Your seers and saints lived lives worthy of emulation. Not worthy of spitting.

Call a spade a spade, not a shovel!

Anonymous said...

//A supreme example is Ramananujar and also, his Chief disciple, Kuureesar.

2. Both gave up; and fully devoted themselves to the cause of their order. Thus, their order shone, and, I should believe, till today.//

Please add these sentence at the beginning of the second para thus>


2. Ramanujar married thanjammaal and lived happily till such time when the call came - in his case it came under bitter circumstances involving the humilation meted out to his maanaseega guru T.N on caste basis.

Kurressare was a prince who was annointed to rule the kingdom of Kuresam, after his father. His father married him to a beautiful woman, with whom Kuresar had a worthy son.

After the above two subparas, you read the main para 2. You will get an exhilarating effect, no matter which religion you came from.

Saints are above religion. Ha...ha...ha

வஜ்ரா said...

Amalan,

Nobody here is defending Nithyananda. I hope i am very clear about it.

dondu(#11168674346665545885) said...

//I have nothing to say about other matters like:

What is the motive of Sun?
Whether any others are behind it?
Whether his case is similar to Periyaar?
Whether HRs involved in showing a woman in private sex act? etc.//
அப்புறம் என்னத்துக்கு பின்னூட்டம் தருகிறீர்கள்? எந்த விஷயத்திலும் பல பார்வை கோணங்கள் உண்டு. அவை எல்லாவற்றையும் முடிந்தவரை ஒரு சேர பார்ப்பதுதான் நல்ல விவாதமாக இருக்க முடியும்.
//I take only one thing that concerns wholly the impugned Saamiyaar Nithya.

Whether it is a vice to have sex with a woman disciple in ashram or anywhere, no matter consensual or compelled?//
நித்யானந்தரும் ரஞ்சிதாவும் இருவருமே சுய தேவைகளை நன்கு அறிந்த மேஜர்கள். அவர்களது செயல் சட்ட விரோதம் அல்ல.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நித்யானந்தர் விவகாரத்தையும் பெரியார் விவகாரத்தையும் கம்பேர் செய்தததே இப்பதிவின் அடிநாதம். அதற்கான காரணங்களையே அது விளக்கியது. அது பற்றி உங்கள் கருத்து எதுவும் இல்லை போலிருக்கிறது. அப்போ ஆளை விடுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் குரல் said...

டோண்டு சார்... உங்களிடம் எனது எண்ணத்தை பதிவு செய்கிறேன்...

இன்று நித்யானந்தரின் இடத்தில் ஒரு பெண்மணி இருந்திருந்தால்… எவ்வளவு இழிவாக அழைக்கப்பட்டிருப்பார்… அதே போல் இவனையும் ஆண் விபசாரி என அழைப்பதே சரியாக இருக்கும்…

நித்யானந்தர் செய்த வேலைகள் குற்றமோ… தண்டனைகுரியதோ இல்லை… அவனுடைய பாலியல் தேவைகள் பணம் கொடுத்தோ… வேறு ஏதோ வழிகளிலோ தீர்த்து கொண்டான்…

அவனை குருவாக, அதற்கும் மேலாக ஏற்று கொண்ட… அறிவிழிகள் எப்போது திருந்துவார்கள்? கொஞ்ச நாளில் வேறு ஒரு பொறுக்கி சாமியார் கிளம்புவான்… அப்போதும்… இன்னொரு கோரு… அந்த பொறுக்கியையும் கடவுள் என எழுதுவார்… மக்களும் மடையர்களாய்… பொறுக்கிகளான சாமியார் பின் செல்வார்கள்…

பொறுப்பில்லாத… குறுக்கு வழியில் முன்னேற வேண்டும் என செல்லும்… தார்மீக அடிப்படைகளை இழந்த சமுதாயத்தில் நித்யானந்தர் போன்ற பொறுக்கிகள் சாமியாராக வலம் வந்து கொண்டே இருப்பார்கள்…

இன்னொன்றையும் குறித்து கொள்ளுங்கள்… சங்கராச்சாரிகள் கொலை குற்றம்… பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்தது போன்ற செய்திகள் வந்த போது இந்து மக்கள் கட்சி என்ன செய்து கொண்டிருந்தது திரும்பி பாருங்கள்?

இப்போது சங்கராச்சாரிகளை விட குறைவான குற்றம் செய்த நித்யானந்தரை கைது செய்ய சொல்லும் அர்ஜுன் சம்பத்… சங்கராச்சாரிகளை கைது செய்ய சொல்வாரா?

மனு தர்மம்… நன்றாகவே உள்ளது… பார்ப்பனர் குற்றம் செய்தால்… மயிரை உதிர்த்து கொண்டால் போது… மற்றவன் குற்றம் செய்தால் தலையை வெட்ட வேண்டும்…

Unknown said...

Nithayananda seithathal ithu oru thani manithanin viruppam. but samuthayathil ulla oru thani manithan seithal athan peyar kalla uravu. aduthavan manaiviyai puarum kalla purusan, kalla manaivi. Ippoluthu nithyananda seithullathan peyar enna ventru villaka mudiyuma thani manithar suthanthirathai patri pesum pathivarkalum pathirikaikalum...

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது