3/04/2010

நித்யானந்தரும் பெரியாரும்

எல்லா பதிவர்களும் நித்யானந்தரை பற்றி எழுதிவிட்ட இந்த நிலையில் நானும் எழுதாவிட்டால் என்னை நாடுகடத்தி விடுவார்கள் என்று நம்பத்தகாத வட்டங்கள் தெரிவித்ததால் நானும் ஜோதியில் ஐக்கியமாகிறேன்.

நேற்று காலை “எனது காரில்” ஒரு வாடிக்கையாளரின் அலுவலகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். டிரைவர் நித்யானந்தாவின் படுக்கையறை காட்சிகள் சன் டிவியில் ஒளிபரப்பபட்ட விஷயத்தை சொல்லி தான் ஜன்மசாபல்யம் அடைந்ததை கூறினார். ஐயோ வடை போச்சே, நான் பார்க்கவில்லையே என ஃபீலிங்ஸ் ஆன என்னிடம் அவர் “என்ன சார், நீங்கள்தான் இணையத்தில் மறுபடியும் பார்க்கலாமே” என நினைவுபடுத்தினார். ஆகவே வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமாக கணினியை ஆன்செய்து சம்பந்தப்பட்ட சன் செய்தியை வரவழைத்து பார்த்தேன். அதற்கு முந்தைய நாள் இரவில் காட்டிய காட்சிகள் இன்னும் விரிவானவை என்பதையும் அறிந்தேன்.

இப்போது நடந்ததை ஒரு பெர்ஸ்பெக்டிவில் பேசலாமா. பாலியல் காட்சிகள் மேஜர் ஆன ஒரு ஆணும் பென்ணும் இசைந்து செய்த சரசங்களே. அதை வீட்யோ எடுத்தவர் நல்ல நோக்கத்துக்காக செய்திருப்பார் என கூறவியலாது. ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கலாம். நித்தியானந்தர் சாதாரண மனிதனாக இருந்தால் சன் டிவி மீது வழக்கு கூட போடலாம், தனது பிரைவசியை பங்கப்படுத்தியதற்காக, ஆனால் அவர் ஊரறிந்த சாமியார், புலனடக்கம் பற்றி மணிக்கணக்கில் பேசியவர், அவரை பலர் பகவான் ரேஞ்சுக்கு உயர்த்தியவர்கள் என்பதெல்லாவற்றையும் பார்க்கும்போது மக்களது கோபத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என இருப்பவரை பார்ப்பது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல. ஒரு படத்தில் சாமியார் ஒருவர் எல்லோருக்கும் நல்லதையே செய்யும்படி அறிவுறை கூறுவார். பிறகு அவரே அப்படி நடந்து கொள்ளவில்லை என வரும்போது அவர் சொல்வார், “ஏம்பா என்னை பார்க்கறே, நான் சொன்னதைப் பார். நல்லவைன்னு ,மனசுக்கு பட்டா செஞ்சுட்டு போ. நான் அதை செய்கிறேன் அல்லது செய்யைல்லை என ஏன் பார்க்கிறாய்”? என்று கேட்பார். தர்க்க சாத்திரத்தின்படி அவர் சொன்னது சரிதான். ஆனாலும் அதை மனது கேட்பதில்லை.

சமீபத்தில் 1949-ல் பெரியார் மணியம்மையை திருமணம் செய்தபோது அமர்க்களம் நிகழ்ந்து திராவிட கழகமே இரண்டாக உடைந்தது. அது ஏன்? நான் இப்பதிவில் குறிப்பிட்டது போல அது அவரது தனிப்பட்ட விவகாரம். இருந்தாலும் எதிர்ப்புகளும் பலமாகவே இருந்தன. ஏன்?
பெரியாருக்கு வயது எழுபதுக்கும் மேல், மணியம்மையாரோ வயதில் அவரை விட மிகவும் இளையவர். அவருக்கு பணிவிடை செய்து வந்தவர். அவரை அப்பா எனவும் அழைத்தவர். மேலும் அதே காலகட்டத்தில் பொருந்தா திருமணங்களுக்கு எதிராக திராவிட கழகம் பெரியாரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அம்மாதிரி திருமணங்கள் நடக்கும் இடத்திலேயே போய் கலாட்டாக்களும் நடத்தப்பட்டன. அப்படிப்பட்ட பெரியார் தானே இம்மாதிரி செய்ததுதான் எல்லோரையும் திக்குமுக்காட செய்தது.

இந்தத் திருமணத்தைக் குறித்து ஆய்ந்த ம.வெங்கடேசன் எழுதுகிறார்:

சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்

ஈவேராவின் இரண்டாவது திருமணம் 9-7-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈவேராவின் வயது 72. மணியம்மைக்கு 26.

தன்னைவிட 46 ஆண்டுகள் இளைய பெண்ணை மணக்குமுன் திருமணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஈவேரா சொல்வது என்ன தெரியுமா?

''மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற நிர்ப்பந்த முறையில் நடப்பது சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்றே சொல்லலாம்.''
(குடியரசு 3-6-1928)

அது மட்டுமல்ல 1940-ல் ஈவேராவின் பத்திரிகையான விடுதலையில் அண்ணாதுரை எழுதிய ஒரு தலையங்கத்தில் ''தாத்தா கட்ட இருந்த தாலி'' என்ற தலைப்புக் கொடுத்து எங்கோ வடதேசத்தில் நடந்த ஒரு திருமணத்தைக் குறித்து சொல்வது:

"தொந்திசரிய மயிரே வெளிர நிறைதந்தமனைய உடலே படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர் துள்ளுமதவேட்கைக் கணையாலே தாக்கப்பட்டுக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். வயது 72. ஏற்கனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டி, பேரன் பேத்தியும் பெற்றவர் இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்த இந்தியாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆண்மகன் கல்யாணம் செய்து கொள்ளலாமே"

என்று தொடங்கி இந்தப் பொருந்தாத் திருமணத்தை நீண்டதொரு தலையங்கத்தில் பொதுவாய்ப் பார்ப்பனர்களைச் சாடக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாய் அண்ணா எழுதியதைப் பிரசுரித்து மகிழ்ந்த ஈவேரா அடுத்த ஆறு ஆண்டுகளிலேயே இப்படித் திருமணம் செய்து கொண்டதுதான் பெரிய
புரட்சி!

இந்தத் திருமணத்தை ஏற்காமல் அண்ணா வெளியேறியது மட்டுமல்ல. அப்போது ஈவேராவின் மிக நெருக்கமான இராம.அரங்கண்ணல் ஒரு காரியம் செய்தார். அதை அவரே சொல்லக் கேட்போம்.

"பழைய குடியரசு ஏடுகளில் இருந்து பெரியாரின் பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத் திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது 'ஒரு இளம்பெண்னை வயதானவர் கட்டிக் கொள்வது சரியல்ல' என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து 'தக்க வயதுப் பொருத்தமே திருமணத்தின் இலட்சியம் - பெரியாரின் பேருரை' என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டுக் கம்போசிங்குக்குக் கொடுத்தேன்.
அதுவும் உடன் வெளிவந்தது. பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காகச் சென்றபோது பெரியார் கடுங்கோபத்தில் இருந்தார். என்னைப் பார்த்து 'பெருமாள் வீட்டுச் சோத்தைத் தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க' என்று சொன்னார். நான் பதில் பேசாமல் வெளியேறினேன்.
(நூல்: இராம அரங்கண்ணலின் நினைவலைகள்)

இந்தத் திருமணத்தைக் கண்டித்துப் பல இடங்களில் பேசினார் அண்ணா. அவர் திராவிடநாடு பத்திரிகையில் எழுதிய நீண்டதொரு மடலின் கடைசியில் இப்படிச் சொல்கிறார்:

"அப்பா அப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர வாய் குளிர கேட்போர் காது குளிரக் கூறுவதும் அம்மா அம்மா என்று கேட்போர் பூரிப்பும் பெருமையும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும் இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புமகள் இந்த மணியம்மை எனப்
பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது. அந்த வளர்ப்புப்பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத் திருமணமாம்.

'கையிலே தடி மணமகனுக்கு, கருப்பு உடை மணமகளுக்கு' என்று ஊரார் பரிகாசம் செய்கிறார்களே. 'ஊருக்குத்தானய்யா உபதேசம்' என்று இடித்துரைக்கிறார்களே.

'எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒருகாலை வீட்டிலும், ஒரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை' என்றெல்லாம் பேசிய பெரியார் கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா என்று கடைவீதி
தோறும் பேசிக் கை கொட்டிச் சிரிக்கிறார்களே.

வெட்கப் படுகிறோம் அயலாரைக் காண, வேதனைப் படுகிறோம் தனிமையிலே!

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை எவ்வளவு காரசாரமாக, எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்திருக்கிறோம்!

இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும் கொள்கையையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைபிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டுமக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்து விட்டார்.

இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!

இந்த நிலையை யார்தான் எந்தக் காரணம் கொண்டுதான் சாதாரணமானதென்று சொல்ல முடியும்?

நூற்றுக் கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக 'இதோ தாத்தாவைப் பார், வணக்கம் சொல்லு!' என்று கூறுவர். கேட்டோம் களித்தோம்.

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மனியம்மையைக் காட்டி 'தாத்தா பெண்ணு' என்று கூறுவர்.
இன்று அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம். பனிவிடை செய்துவந்த பாவையுடன்.

சரியா முறையா என்று உலகம் கேட்கிறது.

அன்புள்ள
சி.என்.அண்ணாதுரை"

ஆனால் இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னால் இப்போதேல்லாம் பெரியார் செய்ததற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள்தான் அனேகம். மனிதன்மனம் விசித்திரமானது. நம்ப விரும்புவதை ஏதேனும் செய்தாவது, தலையை கொடுத்தாவது நம்பும். அதே போல நித்தியானந்தருக்கும் சப்பைகட்டு கட்ட வருவார்களாக இருக்கும். அவரைப் பொருத்தவரை இதுவும் கடந்துபோகுமாக இருக்கும்.

என்னைப் பொருத்தவரை மொத்தத்தில் சாமியார்கள் என்றாலே எனக்கு அலர்ஜிதான். நித்தியானந்தரும் அதற்கு விதிவிலக்கல்ல. நாமே நேரடியாக சாமி கும்பிடுவதை விடுத்து இது என்ன இம்மாதிரி புரோக்கர்களை தேடுவது?

அன்புடன்,
டோண்டு ராகவன

50 comments:

Anonymous said...

well said.. liked it.

Anonymous said...

எனக்கென்னமோ சாமியார்களை கிண்டல் பன்னும் நாத்திகவாதிகளை கடுப்படிக்கதான் இந்த கட்டுரை என தோனுகிறது

வால்பையன் said...

பெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என யாராவது சொன்னால், அவர்களும் மதவாதிகள் மாதிரியான பாஸிஸ்டுகளே!

பெரியாரிஸ்ட் என்ற மதம், பெரியார் அதன் கடவுள், பின் அடிபொடிகள்!

அது சரி, நீங்க சாரு பதிவை படிக்கிறதேயில்லையா!?

KANTHANAAR said...

நீங்கள் கொடுத்த தலைப்பைப் பார்த்தால் ஏதோ பெரியாரியலுக்கு வலு சேர்க்க எழுதப் போவதாக முதலில் தோன்றியது.. படித்துப் பார்த்ததும்தான் புரிய முடிகிறது.. உங்களுக்கு பெரியாரின் விடுதலைச் சிந்தனைகள், திருமணம், பெண் விடுதலை போன்ற எந்த விசயத்திலும் புரிதலே இல்லாமல் எழுதிக் கொண்டு வருகிறீர்கள். அதைப் பற்றிய ஒரு தர்க்க அறிவுகூட இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவது தர்க்க சாஸ்த்திரத்திற்கே விரோதமானது. நீங்கள் அவரை ஆழ்ந்து படிக்கவில்லை என்பதுதான் இதன் மூலம் புலனாகிறது. ஒருவேளை அது தேவையில்லை என்று நீங்கள் கருதியிருக்கலாம்.. கோபப்படலாம்...அது உங்கள் சுதந்திரம்தான்.. ஆனால் அவரை ஆழ்ந்து படிக்காமல் அவர் மீது எதையாவது குற்றம் குறை சொல்லவேண்டும் என்ற நோக்கு மட்டும் மேலோங்கியிருப்பது முற்றிலுமாக காழ்ப்புண்ர்ச்சிதான்... நித்யாவும் பெரியாரும் ஒன்றல்ல. முதலாமவர் சனாதன இந்து மதத்விழுமியங்களைத் தாங்கிப் பிடிப்பதாக பிலிம் காட்டிவிட்டு வேறு பிலிம் காட்டியது உங்களைப் போன்ற பல இந்து தாசர்கள் மனத்தை சுக்கு நுாறாகி உடைத்து விட்டுப் போனதை புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் என்ன செய்வது.. ஆழ்ந்த அனுதாபத்தை மட்டுமே தெரிவிக்க முடியும்..(உங்கள் தாத்தா ஜெயமோகன் அனுதாபங்களை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுிட்டார்)நீங்களும் அவரைப் போல நேர்மையாக ஏற்றுக் கொள்வதே சரி.. அதைவிட்டுவிட்டு மணியம்மை திருமணம் பற்றி போடுவது உங்களை பிறர் குயுத்தி என்று சாடாத்தான் பயன் படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.. அதுவும் அந்தத் திருமணம் எந்த நிலையில் ஏன் நடந்தது அதன் சட்டசிக்கல் என்ன என்பதைப் பற்றி உங்கள் நண்பர் ஞாநியுடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே.. (உங்களுக்குத்தான் அவர் வீடு தெரியுமே...)

கிருஷ்ண மூர்த்தி S said...

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் இவ்வளவு அழகாக வேறு யாராவது முடிச்சுப் போட்டுப் பார்த்திருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, டோண்டு சார்!

நித்தியானந்தா விவகாரத்தில் இரண்டு விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன.

ஒன்று, ஒரு குறிப்பிட்ட சானல் மட்டும், இதை ஊத்தி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருந்தது ஏன்?

அடுத்து, டைமிங்! இது வெளியிடப் பட்ட நேரம்! வேறொரு நிகழ்ச்சியில் இருந்து ஜனங்களை திசைதிருப்புவதற்காக செய்யப் பட்டதா?

இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை! அடுத்து இன்னுமொரு கேள்வி நிற்கிறது!

தொலைக் காட்சி ஒரு பொது ஊடகம். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கலாம் என்ற சின்ன அறிவிப்பு, முன்னெச்சரிக்கை கூட இல்லாமல், பிட்டுப் படம் ஓட்டுகிற மாதிரித் திரும்பத் திரும்ப இதையே காட்டிக் கொண்டிருந்தபோது, தொலைகாட்சி, இதர மீடியாக்களுக்கும் தணிக்கை விதிகள் கடுமையாக்கப் படவேண்டுமா இல்லையா?

அப்புறம், இந்த செய்தி தொடர்ந்து காட்டப் பட்டதன் பக்க விளைவு அல்லது நேரடி விளைவு எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், தமிழ் நாட்டிலும், கர்நாடகாவிலும் அங்கங்கே கலவரமும் வன்முறையும் நடக்கத் தூண்டுதலாக இருந்ததா இல்லையா?

அப்புறம் சாமியாரைக் காது செய் கைது செய் என்கிறார்களே, அந்தக் கேலிக்குரிய கோஷம் தான் இன்னமும் சிரிப்பாக இருக்கிறது.
வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது சட்டப்படி தவறு இல்லை என்கிறபோது, எதை வைத்து இப்படிக் கூச்சல் போடுகிறார்கள், படங்களை உடைக்கிறார்கள், தீ வைக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

கேட்பவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம்!

கேணையனாக இருப்பதில் இருந்து மாறுவது அல்லவா இப்போது அவசியம்!

Anonymous said...

What are you saying Dondu?Are you suggesting that a typical black shirt tamil sees nothing abnormal in the amnormally high libido levels of a bearded old man but gets angry about the normal libido levels in a young man?

Unknown said...

நித்தியானந்தன் செய்ததது தன்னை நம்பியவர்களுக்குப் பச்சைத் துரோகம், ஆனால் இதுக்கும் பெரியாருக்கும் முடிச்சுப் போடுவது சரியல்ல. நன்றி. முடிந்து போன கதைகள் இப்ப எதுக்கு?.
இப்படி பேசினால் தேவை இல்லாமல் ஹிந்து மதத்தை இழுத்துக் கேவலமான பகுத்தறிவுவாதிகளுக்கும், நமக்கும் வித்தியாசம் இல்லாமல் பேய்விடும்.

dondu(#11168674346665545885) said...

//உங்களுக்கு பெரியாரின் விடுதலைச் சிந்தனைகள், திருமணம், பெண் விடுதலை போன்ற எந்த விசயத்திலும் புரிதலே இல்லாமல் எழுதிக் கொண்டு வருகிறீர்கள். அதைப் பற்றிய ஒரு தர்க்க அறிவுகூட இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவது தர்க்க சாஸ்த்திரத்திற்கே விரோதமானது.//
என்ன புடலங்காய் சிந்தனைகள்? தனது போதனைகளை தானே மீறிய நிலையில் அதை எடுத்துக் காட்டிய அரங்கண்ணலை அவர் இகழ்ந்ததை என்னவென்று கூறுவீர்கள்?

நாகம்மை இறந்த தருணத்தில் தன்னை ஆணாதிக்கவாதியாக அவரே ஒப்புக் கொண்டதை அறிய மாட்டீர்களா?

மற்றப்படி நித்தியானந்தரும் சரி, இவரும் சரி தாங்கள் போதித்தபடி நடக்கவில்லை என்பதுதான் நிஜம்.

எழுபது வயது கிழவர் இளம் பெண்ணுக்கு என்ன சுகம் அளித்திருக்க முடியும் என நினைக்கிறீர்கள்? மணியம்மையே விரும்பி திருமணத்துக்கு ஒத்து கொண்டிருந்தாலும் இவருக்கு புத்தி எங்கே போச்சு?

கண்ணகியே விரும்பி கோவலனுக்காக செய்த விஷயங்களையே இவர் இழித்து கூறியவர் என்பதையும் மறந்தீர்கள்.

சுயமரியாதை திருமணத்தில் சட்ட சிக்கல்கள் இருந்தன, உண்மையே. ஆனால் அதை மற்றவர்கள் செய்து கொள்ள மட்டும் ஊக்குவித்ததது எந்த மட்டிலும் யோக்கியமான செயல் என்பீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

மைதீன் மட்டுமல்லாமல், 10-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களை இவன் ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்திய விஷயமும் தெரியவந்துள்ளது. இது முழு உண்மை என்று தெரிந்ததும்தான், அனைத்து ஊர் மக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை முற்றுகையிட்டோம். ஸ்டீபன் ராஜா தப்பி ஓடிட் டான். தாளாளர் அருளானந்து ரூமுக்குள்ளேயே அடைந்துவிட்டார். சற்று நேரத்தில் போலீஸார் வந்து பாதிரியார் அறையை உடைக்க... உள்ளே 'டிரிப்பிள் எக்ஸ்' ரக சி.டி-க்கள், போதை மாத்திரைகள், மயக்கம் வரவழைக்கும் ஸ்பிரே, கத்தை கத்தையாக செக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றியுள்ளனர். காவல் துறையி னர் ஸ்டீபனையும், அவனுக்கு உதவியவர்களையும் உடனே கைது செய்யவேண்டும். இல்லையென்றால், பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்!' என்றனர் கோபக் கொந்தளிப்புடன்.

பாதிரக்குடி கிராமவாசியான அந்தோணி, 'பாதிரியார் ஸ்டீபன் பண்ணின பாவம், உண்மை. இவர்மேல் ஏற்கெனவே 'பாலியல்' தொடர்பான குற்றச்சாட்டு வந்தபோது, இதே ஊர்க்காரங்கதான் 'பாதிரியாரை அவமானப்படுத்தக் கூடாது'ன்னு மூடி மறைச்சுட்டாங்க. இரவு மாணவிகளும் பள்ளியிலேயே தங்கியிருப்பாங்க. ஆனா, தூங்குறதுக்கு தாளாளர் அருளானந்து மேற்பார்வையிலுள்ள ஹாஸ்டலுக்கு வந்துடறதால, நல்ல வேளையா தப்பிச்சிருக்காங்க..!'' என்றார்.


திருப்புனவாசல் இன்ஸ்பெக்டர் விடுப்பில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்கும் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சுப்பையனிடம் பேசினோம். 'பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா மீது புகார் வந்ததும், உடனே பள்ளியில் ரெய்டு நடத்தி னோம். தலைமையாசிரியர் அப்படி நடந்துகொண்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. பாதிரியாரின் டிரைவர் பிரித்லினும் இதற்கு உதவியுள்ளான் என்பது தெரிந்தது. அவனையும் மேலும்சிலரையும் கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள பாதிரியாரை தேடிவருகிறோம்!' என்றார்.

Anonymous said...

ஜூ வி கட்டுரை
--------------------

டிரஸ்ஸைக் கழட்டு... மயக்கம் வந்தா ஒரு க்ளாஸ் குடி...''
----------------------------


கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய, தூய வெள்ளையுடை அணிந்த ஒருபாதிரியார், தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஹோமோ செக்ஸுக்கு கொடூரமாகத் துன்புறுத்தியதாக... அவரை தேடிக் கொண்டிருக் கிறது போலீஸ்!

தஞ்சை மாவட்டம் மீமிசல் அருகே பாதிரகுடி கிராமத்தில், புனித சந்தியாகப்பர் தேவாலயம், ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, ஆர்.சி. தொடக்கப்பள்ளி, புனித மரியன்னை மருத்துவமனை மற்றும் புனித அடைக்கல அன்னை கன்னியர் இல்லம் ஆகியவை உள்ளன. பேருந்து வசதியே இல்லாத இந்த கிராமத்திலிருக்கும் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்ட சுற்று வட்டார கிராம மாணவர்கள் 600 பேர் படிக்கின்றனர். சில வருடங்களாக 100 சதவிகிதத் தேர்ச்சியைக் கொடுத்து வரும் இந்தப் பள்ளியில், இரவிலும்கூட தங்கிப் படிப்பார்களாம் மாணவர்கள். அவர்களிடம்தான் தலைமையாசிரியரான பாதிரியார்

ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா வற்புறுத்தி ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார் என்று கொதிப்பு கிளம்பி, சுற்றுவட்டார கிராமத்தினர் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பாதிரியார்மீது 'செக்ஸ் டார்ச்சர்' புகார் தந்திருக்கும் 10-ம் வகுப்பு மாணவன் மைதீனை சந்தித்தோம். ஒருவிதப்பதற்றத்துடன் பேச ஆரம்பித்தான். 'பத்தாவது படிக்கறவங்க இரவுப் பள்ளிக் கூடத்திலேயே தங்கிப் படிக்கணும். ஒருநாள் நைட்டு தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி, 'நீ ஒழுங்கா பரீட்சை எழுதி பாஸ் பண்ணணும்னா என் ரூமுக்கு வாடா'ன்னு அழைத்துச் சென்றார். உள்ளே போனதும் கதவை சாத்திக்கிட்டு, டி.வி-யில செக்ஸ் படம் போட்டார். அப்புறம் அவர் உடம்புல சென்ட் அடிச்சுகிட்டு, என்னை மோந்து பார்க்கச் சொன்னார். எனக்கு தலைசுத்துச்சு. உடனே 'இதை குடி சரியாயிடும்'னு ஒரு கிளாஸ்ல ஏதோ ஊத்தி, வற்புறுத்திக் குடிக்க வெச்சார். நான் அரை மயக்க மானதும், என் உடம்புல இருந்த டிரஸ்ஸையெல்லாம் உருவி... (தயக்கமும் அருவருப்புமாக சொல்லி முடித்து...) மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப, என் உடம்புல அங்கங்கே பயங்கரமா வலிச்சுது. 'யார்கிட்டயாவது சொன்னா ஃபெயிலாக்கிடுவேன்!'னு மிரட்டியே, அப்புறம் வேறு சில நாட்களிலும் ஐந்து முறை இப்படி பண்ணினார். கடைசி முறை பண்ணினப்ப என்னால வலி தாங்க முடியல. 'இனி பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன்'னு வீட்ல அழுது, விஷயத்தைச் சொன்னேன்!' என்றான்.

மைதீனின் உறவுக்காரர் சாதிக் பாட்ஷா, 'பாதிரியாருக்கு சொந்த ஊர், தஞ்சாவூர் பக்கத்துல புனல்வாசல் கிராமம். இவனெல்லாம் எப்படி புனிதமான பாதிரியார் தகுதியை அடைஞ்சான்? பல பெண் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்திருக்கிறான். அவமானத்துக்குபயந்து வெளியே சொல்லலை. இவனோட இந்த ஹோமோசெக்ஸ் அராஜகம் அங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனால், வெளியே பரவினால் மதத்துக்கு அவமானம்னு நினைச்சு, அதை மறைத்து வந்துள்ளனர். ஸ்டீபனுக்கு தினமும் பையன்கள் வேண்டுமாம். இவன் அறையில் சரக்கு உட்பட எல்லாமே இருந்திருக்கிறது. ராஜ்யசபா எம்.பி-யான திருநாவுக் கரசர் ஒருகாலத்தில் படித்த இந்த பள்ளியின் பேர் இன்னிக்கு இப்படி நாறிக் கெடக்கு!' என்றார்.

மனித உரிமைக் கழக மாவட்டத் தலைவர் சண்முகம் மற்றும் தவ்ஹீத் ஜமா-அத்-தின் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் மஜீது ஆகியோர், 'ஒரு பாதிரியாரான ஸ்டீபன் ராஜா செய்தவை மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம். போன வருடமே இங்கு ஹெட்மாஸ்டராக வந்துவிட்டான். அவனுடைய மிரட்டலுக்கும் அவமானத்துக்கும் பயந்து புள்ளைங்க வெளியே சொல்லலை. சில மாதங்களுக்கு முன்பு ஒன்பதாவது படிக்கும் ஒரு மாணவி, அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலைன்னு இடுப்புல உதைச்சிருக்கான். அதே போன்று பாதிரக்குடியிலேயே ஒரு பெண்ணை இவன் நாடியபோது, அந்த ஊர் இளைஞர்கள் பாதிரி யாருக்கு எதிராகக் கிளம்ப... அப்போது பாதிரக்குடி கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உட்பட்ட 51 கிராமத்தினர், 'சாமியாரை தப்பா சொல்லக்கூடாது'ன்னு அந்த காமக் கொடூரனுக்கு தண்டனை தராமல், புகார் சொன்ன இளைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டனர். அன்றைக்கே அவனைத் தண்டித்திருந்தால், இன்று இப்படி நடந் திருக்காது!

தொடரும்.

KANTHANAAR said...

////என்ன புடலங்காய் சிந்தனைகள்?/////
என்ன புடலங்காய் என்பதை நீர் படித்து அறிந்து கொண்டு எழுத வாரும்... அந்தப் பிரசங்கம், எழுத்துக்கள் உங்களுடைய ஆத்திரம் சம்பந்தபட்டதல்ல... 90 வயதிலும் மூத்திரச் சட்டியை சுமந்து சென்று அவர் ஏன் பரப்புரை செய்தார் என்பதை கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு பார்க்க இயலாது.. அல்லது ஒன்று செய்யுங்கள் நீங்கள் அவர் புத்தகங்கள் சிந்தனைகளைப் படித்து இன்னது இன்ன தவறு அபத்தம் என்று எடுத்துக் காட்டி எழுதுங்கள்.. பிறகுதான் உங்களுக்குப் பதில் தர இயலும்....

karthi said...

sir,

thanks for the post. new visitor to ue blog.

people like me came to know the history ...

Raja said...

//“ஏம்பா என்னை பார்க்கறே, நான் சொன்னதைப் பார். நல்லவைன்னு ,மனசுக்கு பட்டா செஞ்சுட்டு போ. நான் அதை செய்கிறேன் அல்லது செய்யைல்லை என ஏன் பார்க்கிறாய்”?//

சார், இத மாதிரி அவன் சொல்லிட்டு செஞ்சிருந்தான்னா, பிரச்சனையே இல்ல.
அவன் இந்த மாதிரி சொல்லுவான்னு நினைக்கிறீங்களா? அல்லது இந்த மாதிரி சொல்லிட்டு கடைய தொறந்திருந்தான்னா, கல்லா இந்தளவு ரொம்பியிருக்குமா?

RV said...

நித்யானந்தா பற்றி பதிவு என்று ஆரம்பித்துவிட்டு அதிலும் முக்கால்வாசி பெரியார் மணியம்மை என்று எழுத உங்கள் ஒருவரால்தான் முடியும்!

Vijay said...

திரு.கிருஷ்ணமூர்த்தி சொன்னது மிகவும் கரெக்ட். ஏன் யாரும் இதைப் பற்றி வாய் கூட திறப்பதில்லை.
நானும் கொஞ்சம் சுயவிளம்பரம் தேடிக் கொள்கிறேன். நேற்று இது பற்றி சின்னதா எழுதியிருக்கேன் :)

http://vettivambu.blogspot.com/2010/03/blog-post.html

டோண்டுவால் சர்றே மாடிஃபை செய்யப்பட்டது said...

டோண்டு சார்

கிளப்பிட்டீங்க. கை கொடுங்க. அபாரம். ஈ வெ ரா தன் சீடர்களுக்கு எல்லாம் பொருந்தாத் திருமணம் தவறு என்று உபதேசித்து விட்டு தன் மகள் போன்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது எப்படி அவரது சீடர்களுக்கு அவர் செய்த நம்பிக்கைத் துரோகமோ அது போலவே நித்யானந்தரின் சீடர்களுக்கு அவர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தெரியலாம். இரண்டும் நம்பிக்கைத் துரோகம் என்னும் அடிப்படையில் ஒன்றே.

மேலும் இதே ஈ வெ ரா சுயமரியாதைத் திருமணம் என்ற பெயரில் ஒரு மணமகனுக்கு ரெண்டு பெண்களைக் கட்டி வைத்து சுய மரியாதை என்பதற்கே அர்த்தம் இல்லாமல் செய்திருக்கிறார். இவர் செய்து வைத்த முதல் ரெண்டு கல்யாணங்களுமே இரண்டு பொண்டாட்டி கேஸ்தான். ஒரு வேளை சுயமரியாதைத் திருமணம் என்றாலே ரெண்டுதான் போலிருக்கிறது. ஈ வெ ரா மட்டும் அல்ல அவனது தொண்டர்களான அன்பழகன் என்ற ராமையா (இவரது மகளுடன் வீட்டுக்கு படிக்க வந்த பெண்ணையே ரெண்டாவதாக கட்டிக் கொண்டார்), கருணாநிதி என்ற தட்சிணாமூர்த்தி, ஆற்காடு, வீரபாண்டி, கோசி மணி, எம் ஜியார் என்று பட்டியல் முடிக்க உங்கள் ப்ளாக் பத்தாது.

சில வாரங்களுக்கு முன்பாக ஜூ வி யில் வந்த ஒரு செய்தியை கீழே தந்துள்ளேன். நித்யானந்தாவாவது தன்னிடம் விரும்பி வந்த பெண்ணுடன் அவர் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொண்டார் (அது நிஜமான காமிரா பதிவாக இருக்கும் பட்சத்தில், அவர் இன்று கோர்ட்டுக்கு அது பொய் என்று போய் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அவர் நியாயப் படி உங்கள் மீது கூட கேஸ் போடலாம். அவர் மீது வெறிநாய் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் அனைத்து பதிவர்கள் மேலும் அவர் உண்மையானவராக இருக்கும் பட்சத்தில் வழக்குப் போட்டு உள்ளே தள்ள வேண்டும்).

ஆக நித்யா செய்தது உண்மை என்றால் அதிக பட்சம் ஈ வெ ரா செய்தது போலவே அவரை நம்பியவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறார். ஆனால் கீழ் கண்ட செய்தியில் வரும் பாதிரி செய்தது என்ன? படிக்க வந்த சிறு பையன்களை வன்புணர்வு செய்திருக்கிறார். இதைப் பற்றி நீங்களோ வேறு எந்த பதிவரோ எப்பொழுதாவது பேசியது உண்டா? ஆட்சேபம் தெரிவித்தது உண்டா? கண்டனம் தெரிவித்தது உண்டா? அவரது குறியை வெட்டி எறிய வேண்டும் என்று தர்மாவேசம் பிடித்து வெறி பிடித்துக் கத்தியது உண்டா? அப்படி எந்தப் பதிவரேனும் இந்தப் பாதிரியைக் கண்டித்திருந்தால் அவருக்கு மட்டுமே இப்பொழுது நித்யாவைக் கண்டிக்கும் தகுதி உண்டு

தொடரும்

poiththamizhan said...

You are exploiting the context of this sex saamiaar to introduce the abnormal comination of Periyar and Maniammai.

On Nithiya's sex scandal, your comments are:

I dont accept the context.

Even this comment you hve not put forth with necessary force. You hve diluted it by saying:

//என்னைப் பொருத்தவரை மொத்தத்தில் சாமியார்கள் என்றாலே எனக்கு அலர்ஜிதான். நித்தியானந்தரும் அதற்கு விதிவிலக்கல்ல. நாமே நேரடியாக சாமி கும்பிடுவதை விடுத்து இது என்ன இம்மாதிரி புரோக்கர்களை தேடுவது?
//

I agree with kartha and satish. The passion with which you attack atheists and anti-brahmins is missing when a saamiyaar gets caught readhanded, either in a murder, or prostitution racket, or sex-scandal as in Nithiyas's.

But all this is personal to you. I cant say what you should and should not, with your personal feelings.

So, I come to the general comments you ahve made:

//இம்மாதிரி புரோக்கர்களை தேடுவது?//

இது தவறு. எல்லாச்சாமியார்களும் அப்படியல்ல. எல்லாச்சமியார்களும் புரோக்கர்கள் அல்ல. நல்ல குருக்களாகவும், தன்னலம் பேணா பொதுநலம் பேணுபவர்களாகுவும் இருக்கிறார்கள்/இருந்து சென்றிருக்கிறார்கள்.

Whether consciously or unconsciously, here you are attacking Hindu religion along with Periyaar and his shishyaas.

வலைஞன் said...

1.பெரியார் செய்தது தகா திருமணம்
நித்தி செய்தது தகா உறவு

2.பெரியாரிடம் இருந்தது நேர்மை.
நித்தியிடம் இருப்பது கயமை

3.பெரியார் உண்மையான நாத்திகர்
நித்தி போலி ஆத்திகர்

Sorry Dondu! For differeing from your views!

Barari said...

dondu vidamirunthu sappai kattai thavira veru enna ethirpaarkka mudiyum.

Anonymous said...

Vengaya kuzhambu vaippathu eppadi ?

Anonymous said...

பலவருடங்களுக்கு முன்னால்
பெங்களுரில் ஒரு மத்துவசாரி துறவிக்கு திடீரென ஒரு பெண் பக்தை மேல் மையல் வந்தது.
அவர் என்ன செய்தார் தெரியுமா ....?

அந்த மேடையிலேயே தான் துறவு வாழ்க்கையைத் துறந்துவிட்டு இல்லற வாழ்க்கைக்கு செல்வதாக அறிவித்தார். மறு நாளே அந்த பெண் பக்தைஇடம் தன விருப்பத்தை தெரிவித்தார், அவரும் சம்மதிக்க திருமணம் செய்தார்.

அது மாதிரி இந்த ஆளும் செய்து விட்டு போயிருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் இந்த அளவுக்கு நாறி இருக்காது.

நடிகைகள் ஜலஜா வேலைகளுக்கு செல்கிறார்கள் என்று பத்திரிகைகளில் படித்ததுண்டு, ஆனால் இத்தனை கடுமையான உழைப்பு அதில் இருக்கிறது என்று இப்போ தான் புரியுது. நடிகைகள் பரிதாபத்திற்கு உரியவர்கள்

Anonymous said...

பலவருடங்களுக்கு முன்னால் = 2years back

poiththamizhan said...

//அது மாதிரி இந்த ஆளும் செய்து விட்டு போயிருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் இந்த அளவுக்கு நாறி இருக்காது.//

anony!

அந்த பெங்களூர் சாமியார் அந்தப்பெண்ணை உண்மையில் காதலித்திருக்கலாம். அப்பெண்ணும் அப்படியே செய்திருக்கலாம்.

அங்கே காதல் துறவறத்தை வென்றது எனக் கதையை முடிக்கலாம்.

ஆனால், இங்கே,

நித்தியாவும், ரஞ்ஜிதாவும் காதலர்களா? என்று எப்படி சொல்ல முடியும். வீடியோவைப் பார்த்தா?

வீடியோவில் கலவி கொள்ப்வர்கள் சிரித்தா, பேசினா காதலர்களா?

அது one-night-stand ஆக் இருக்க்லாம. அல்லது one-month-standஆக இருக்கலாம்.

அவருக்கு பலர் தொடர்புண்டு. அப்பெண்ணுக்கும் பலர் தொடர்புண்டு என்றுதான் செய்திகள்.

போகப்போகத் தெரியும்.

Anonymous said...

He that is without sin among you, let him first cast a stone at her.
John 8:1-11
===============================
1 “Do not judge so that you will not be judged.

2 “For in the way you judge, you will be judged; and by your standard

of measure, it will be measured to you.

Matthew 7:1-2
=================================
don't judge anybody whether it is periyar or nithyananda,every body have there own justification

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//என்னைப் பொருத்தவரை மொத்தத்தில் சாமியார்கள் என்றாலே எனக்கு அலர்ஜிதான். நித்தியானந்தரும் அதற்கு விதிவிலக்கல்ல. நாமே நேரடியாக சாமி கும்பிடுவதை விடுத்து இது என்ன இம்மாதிரி புரோக்கர்களை தேடுவது?//

அண்ணா!
அடியேன் கொள்கையும் இதே!

Anonymous said...

hypocrisy என்பதற்கு அர்த்தம் தேடுவோர் இங்கே kantha மேற்கூறியதை படித்தால் போதும்.

வேதங்கள் உபநிஷத்துகள் எதையும் படிக்காமல் புரிந்து கொள்ளாமல் இந்த லூசுகள் உளறுவது பகுத்தறிவாம்.

பெரியாரை மட்டும் புரிந்து கொண்டு தான் விமர்சிக்க வேண்டுமாம். பார்த்தாலே prima facie தெரிவதற்கு எதற்கு படித்து புரிந்து கொள்வது எல்லாம். (நல்லா tension ஆகட்டும், மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்று கொஞ்சம் யோசித்தால் சரி.)

தர்ஷன் said...

தென்னை மரத்தை பற்றிய கட்டுரைக்கு அதில் கட்டிய பசு மாட்டைப் பற்றி எழுதினானாம் ஒருவன். அதுதான் ஞாபகம் வருகிறது.

KANTHANAAR said...

///வேதங்கள் உபநிஷத்துகள் எதையும் படிக்காமல் புரிந்து கொள்ளாமல் இந்த லூசுகள் உளறுவது பகுத்தறிவாம்.///
அனானி... எனக்குத் தெரியாதுன்னு எதை வைத்து முடிவுக்கு வர்ற.. இப்படி முடிவுக்கு வந்தால் அதைவிட அரைவேக்காட்டுத்தனம் இருக்க முடியாது..யாருக்குய்யா டென்சன்.. உனக்குத்தான் அதான் நீ எளுதற போதே தெரியுதே... வேதங்கள் உபநிடதம் பத்தி உனக்கு எல்லாந் தெரியுமா... ஏன் இந்த பீலா... சாரி உங்கூட பேசினால் உம் பாசை வந்துடுது...
சரி விசயத்துக்கு வருவோம்... நான் சொன்னதை நீர் இன்னமும் புரிஞ்சுகல.. (dondu கூட புரிஞ்சுப்பார் போலருக்கு)... திருமணம் பெண் விடுதலை பற்றி பெரியார் சொன்னதெல்லாம் உம்ம என் பேரன் பேத்திகளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகள் காலத்தில் நடைபெறப் போகும் உண்மை... அந்தக் காலத்து சிந்தனையாக விளங்கக் கூடியது... பல காலத்தைத் தாண்டிய சிந்தனை அது என்பதுதான் நான் சொல்ல வருவது.. இதற்கு மேல் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை.. அந்த அளவு காலத்தைத் தாண்டிய சிந்தனை அது.. மனிதன் கற்காலத்தில் குகைகளி்ல் வாழ்ந்தான் என்பதை இப்போது நம்மால் நம்ப முடியவில்லை.. இன்று அப்படி நாம் வாழவு்ம் முடியாது.. அதைப் போல நமக்கு பின்னால் வரப்போகும் கால கட்டத்தில் என்னென்ன மாறுதல் வரும் குறிப்பாக சிந்தனை முறையில் ஆண் பெண் சமத்துவம் திருமணம் போன்ற விசயத்தில் என்ன சிந்தனை மாற்றம் வரும் என்பதை நமக்கு முன்பே சிந்தித்த ஒரு சிந்தானவாதிதான் பெரியார்... தற்போது அய்ரோப்பிய சிந்தனைகள் கூட அத்தனை forwardஆக இருக்காது.. தேவைப் பட்டால் மேலும் விளக்க முயல்கிறேன்.. இதற்கு மேல் எழுதினால் டொண்டு கோபித்துக் கொள்வார்...
கந்தசாமி

வால்பையன் said...

//வேதங்கள் உபநிஷத்துகள் எதையும் படிக்காமல் புரிந்து கொள்ளாமல் இந்த லூசுகள் உளறுவது பகுத்தறிவாம்.//

அய்யா ஹிந்து மதத்தின் முத்திரையே!
அடக்கி வாசிங்க, இல்லைனா எல்லா சாமிக்கும் காயடிச்சு விட்ருவேன்!

எம்.ஏ.சுசீலா said...

நானும் உங்களைப் போல சாமி கும்பிட புரோக்கர் தேடுவதை இழிவாக எண்ணும் கட்சிதான்.
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
என் பதிவை முடிந்தால் பார்க்க.
http://masusila.blogspot.com/2010/03/blog-post.html

வஜ்ரா said...

//
Anonymous வலைஞன் said...

1.பெரியார் செய்தது தகா திருமணம்
நித்தி செய்தது தகா உறவு
//

தகாத உறவு என்றால் சம்மதம் இல்லாத உறவு (வண்புணர்ச்சி), அடுத்தவன் பெண்டாட்டியுடன் கொள்வது, பாதிரிகள் செய்வது போல் குழந்தைகளுடன் கொள்வது இவை தான் தகாத உறவுகள்.

//
2.பெரியாரிடம் இருந்தது நேர்மை.
நித்தியிடம் இருப்பது கயமை
//

ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு தனக்கு என்று வரும் போது வேரொன்றைச் செய்வதன் பெயர் நேர்மையின்மை.

//

3.பெரியார் உண்மையான நாத்திகர்
நித்தி போலி ஆத்திகர்
//

எல்லா கடவுளையும் நிராகரிப்பவன் தான் உண்மையான நாத்திகன். அல்லா நல்ல கடவுள், என்று சொல்பவன் எல்லாம் போலி நாத்திகன் தான்.

ராஜரத்தினம் said...

இப்ப என்ன சொல்ல வர்றீங்க? நித்யா பணணது தப்பா? இல்லியா?

ராஜரத்தினம் said...

//எல்லா சாமிக்கும் காயடிச்சு விட்ருவேன்//
ஏய் அவனா? நீயி? சாமிக்கு எங்கனா இருக்கு காயி? உங்க கோஷ்டிங்க வேலையே இதானா?

செத்த பாம்பு said...

//அய்யா ஹிந்து மதத்தின் முத்திரையே!
அடக்கி வாசிங்க, இல்லைனா எல்லா சாமிக்கும் காயடிச்சு விட்ருவேன்!//

அதுதானே எல்லா பகுத்தறிவு கொழுந்துகளும் பண்ணுதுங்க? ஹிந்து கடவுள்களை (மட்டும்) ஆபாசமாக திட்டுறது. மற்ற மத கடவுளை திட்டினால், ஆப்பு வேச்சுடுவான்களே. ஹிந்துக்கள்தான் திருப்பி அடிக்க மாட்டாங்க என்ற, 'செத்த பாம்பை அடிக்கும்" தைரியம் தானே திராவிட பகுத்தறிவு?

வால்பையன் said...

//ஏய் அவனா? நீயி? சாமிக்கு எங்கனா இருக்கு காயி? உங்க கோஷ்டிங்க வேலையே இதானா? //

நீங்கள் யாரை சாமியா நினைத்து வணங்குகிறீர்களோ அவனை தான் சொல்கிறேன்!

என் கோஷ்டிக்கு இன்னும் பல வேலைகள் இருக்கிறது,

சொம்புதூக்கி, அல்லக்கை, அடிவருடி இவர்களுக்கும் காயடிச்சு விட வேண்டியதும் எங்கள் பொறுப்பு தான்!

வால்பையன் said...

//'செத்த பாம்பை அடிக்கும்" தைரியம் தானே திராவிட பகுத்தறிவு?//

அடடே, ஏற்கனவே காயடிச்சாச்சா!?

Suresh Ram said...

"lived together at least at the time of having sex by them."

Society set unreasonable expectation from high profile people. When such expectations are belied they blame hose in high positions!!

Nithya did no wrong according to Madras High Court!!

He was having Domestic reletionship with a consenting adult!!

M.Palani vs Meenakshi [2008 (65) AIC 686 Madras HC] where the
Hon'ble High Court had to give the judgement in favour of the woman who had sex with a person, both of them knowing fully well that they are not going to marry and it happened on the volition of both the parties.
It was held in that case,
in para 14 "The Act does not contemplate that the petitioner and the respondent should live or have lived together for a particular period or for few days. From the averments made by the petitioner in his plaint and his counter-affidavit, one can infer that both of them seem to have shared household and lived together at least at the time of having sex by them."

தமிழ் உதயன் said...

அது எப்படிங்க சாமி நீங்க மட்டும் மொட்டடித்தலைக்கும் மொழங்காலுக்கும் நல்லாவே முடிச்சு போடுறிங்க?? எனக்கு என்னமோ நீங்க நித்தியானந்தா பற்றி எழுத நினைத்தவுடன் பெரியார் குறுக்கே வந்துட்டார்னு தோனுது....

ஆமா, நீங்க சாருநிவேதா பக்கமா இல்லையா? ஏன் கேட்கிறேன் என்றால் இதுல இரண்டாவத பேசப்படுவது சாருநிவேதாவின் முந்தைய நித்யானந்தா ஆதரவு பற்றித்தான்...

தமிழ் உதயன்

Anonymous said...

//சொம்புதூக்கி, அல்லக்கை, அடிவருடி இவர்களுக்கும் காயடிச்சு விட வேண்டியதும் எங்கள் பொறுப்பு தான்//

----யடிப்பது வெறும் கையாலா? இல்லை வாயாலா?

Anonymous said...

இந்த ந்யூஸ் வந்ததிலிருந்து
சங்கரர் இயற்றிய அன்னபூரணி பாமாலையான " நித்யானந்தகரி வராபயகரி ..." ஸ்தோத்திரத்தைக்கூட கத்தி படிக்க முடியவில்லயே !!!

Anonymous said...

//'செத்த பாம்பை அடிக்கும்" தைரியம் தானே திராவிட பகுத்தறிவு?//
கவலை வேண்டாம். ஒரு ஈரோட்டுக்காரன் ஒழிஞ்சான். குவளை காரனும் ஒழிஞ்சிட்டான்னா? அப்ப நாம அடிக்கிற அடியில நாத்திகம் இல்ல? நாத்திகம்னு எழுதியிருந்தா கூட அங்க வரமாட்டானுங்க.

வால்பையன் said...

////சொம்புதூக்கி, அல்லக்கை, அடிவருடி இவர்களுக்கும் காயடிச்சு விட வேண்டியதும் எங்கள் பொறுப்பு தான்//

----யடிப்பது வெறும் கையாலா? இல்லை வாயாலா? //


உருட்டு கட்டையால்!
அதான் ஏற்கனவே அடிச்சு செத்த பாம்பாயச்சாம்ல! அப்புறம் எதுக்கு இன்னும் படம் காட்டிகிட்டு!

வால்பையன் said...

//கவலை வேண்டாம். ஒரு ஈரோட்டுக்காரன் ஒழிஞ்சான். குவளை காரனும் ஒழிஞ்சிட்டான்னா? அப்ப நாம அடிக்கிற அடியில நாத்திகம் இல்ல? நாத்திகம்னு எழுதியிருந்தா கூட அங்க வரமாட்டானுங்க. //

நாத்திகத்துக்கும், பெரியாருக்கும் என்ன சம்பந்தம்!?

வஜ்ரா said...

//
என்னைப் பொருத்தவரை மொத்தத்தில் சாமியார்கள் என்றாலே எனக்கு அலர்ஜிதான். நித்தியானந்தரும் அதற்கு விதிவிலக்கல்ல. நாமே நேரடியாக சாமி கும்பிடுவதை விடுத்து இது என்ன இம்மாதிரி புரோக்கர்களை தேடுவது?
//

என்னதான் பாஸ்போர்ட் ஆபீசில் புரோக்கர்களை நம்பாதீர்கள் என்று போர்டு எழுதிப்போட்டாலும் புரோக்கர்களிடம் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள் நம்மக்கள்.

வலைஞன் said...

வஜ்ரா...

நித்தி,ரஞ்சிதாவை திருமணம் செய்துகொண்டு அதை மற்றவர்கள் எதிர்த்திருந்தால் டோண்டோவின் ஒப்பீடு சரியாக இருந்திருக்கும்.இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்

வால்பையன் said...

பிராக்டிக்கலா சொல்லனும்னா, பல்லி இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான், வய்சான காலத்துல உங்களுக்கு எதுக்கு டோண்டு சார்ன்னு யாரும் தய்வுசெய்து பின்னுட்டம் போட்டுவிடாதீர்கள்!

வால்பையன் said...

அது பல்லி இல்லை பல்லு!

அ சொ said...

A Scumbag article...

வஜ்ரா said...

//
வஜ்ரா...

நித்தி,ரஞ்சிதாவை திருமணம் செய்துகொண்டு அதை மற்றவர்கள் எதிர்த்திருந்தால் டோண்டோவின் ஒப்பீடு சரியாக இருந்திருக்கும்.இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்
//

டோண்டு அவர்களின் அடுத்த பதிவைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
விளக்கமாக விளக்கியிருக்கிறார். ஏன் ஈ.வெ.ரா வும் நித்தியும் ஒப்பிடப்பட்டனர் என்று.

திருமண உறவில் இல்லாத வயதுக்கு வந்த ஆண்-பெண் மனமுவந்து உறவு வைத்துக்கொள்வது சட்டவிரோதமானது அல்ல. சமூகவிரோதமானதும் அல்ல.

Suresh Ram said...

wami Nityananda arrested in Himachal
TIMES NEWS NETWORK & AGENCIES, Apr 21, 2010, 02.54pm IST

Article
CommentsTags:sex scandal|Swami Nityananda

Sex scandal: Swami Nityananda arrested in Solan
SHMLA: Self-styled godman Swami Nityananda, who has been linked to a sex scandal after sleazy video footage showing him was aired, was on Wednesday arrested from a village 50 km from Shimla, police said.
http://timesofindia.indiatimes.com/india/Swami-Nityananda-arrested-in-Himachal-/articleshow/5839781.cms

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது