3/01/2010

யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக டோண்டு ராகவன்

ஞாயிறு காலை (28.02.2010) 11.30 மணியளவில் திடீரென வந்த மின்னஞ்சலை முதலில் பாருங்கள்.

அன்பின் திரு.டோண்டு ராகவன்,
உங்களை யாழ்தேவியின் நட்சத்திரப்பதிவராக நாளைமுதல் அறிவிக்க விரும்புகிறோம்.உங்களால் பங்காற்ற முடியுமா?
ஒரு அனுபவம் உள்ள இந்தியத்தமிழனின் பார்வையில் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் அவர்களின் நிலை அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரையான தமிழகத்தின் ஈழம்சாரந்த அரசியல் செல்வாக்கு வேறுபல இலங்கை தொடர்பான உங்களின் அனுபவங்கள் பார்வைகள் இலக்கிய வட்டங்கள் இலங்கை இந்திய சாதீய ஒப்பீடுகள் போன்ற விறுவிறுப்பான சார்புகளின் உங்களின் கருத்துக்களை கட்டுரைகள் ஊhடக பகிர்ந்துகொள்ள முடியுமா?

உங்கள் அனுபத்தையும் அறிவையும் நாங்கள் மதிக்கிறோம்.யாழ்தேவி இலங்கைப்பதிவர்கள் இந்தியப்பதிவர்கள் என வேறுபடுத்துவதில்லை.ஆனால் இலங்கை சார்ந்த பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.யாழ்தேவியில் நட்சத்திரமாக இடம்பெறப்போகும் முதலாவது இந்தியப்பதிவர் நீங்கள்தான்.உங்களால் சிறப்பாக பங்காற்றமுடியும் என்று நம்புகிறோம்.தயவுசெய்து அன்பான அழைப்பாக இதை ஏற்றுக்கொள்ளவும்.(பதிவர்களை இந்தத்தலைப்புகளில் எழுதச்சொல்வது தூண்டுவது நல்லதல்ல.ஆனால் உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம்)

என்றும் அன்புடன்
யாழ்தேவி நண்பர்கள்


அவர்களுக்கு உடனேயே நான் அனுப்பிய பதில்:
அன்புள்ள தளமேலாளருக்கு,

உங்கள் மின்னஞ்சலுக்கு மிக நன்றி. நிச்சயமாகவே இது எனக்கு கௌரவம் அளிக்கும் விஷயம்தான். ஏற்று கொள்கிறேன்.

ஆனால், ஈழம்சார்ந்த அரசியல் பற்றி எனது கருத்துக்கள் அங்குள்ள பலருக்கு பிடிக்காமல் போகலாம். மேலும் எல்லா பதிவுகளுமே ஈழசம்பந்தமாக இருக்காது. நான் சோவின் எங்கே பிராமணன் சீரியலுக்கான மதிப்பீடுகளை எல்லா எபிசோடுகளுக்கும் செய்து வருகிறேன். அவையும் பதிவுகளாக வரும். அவற்றுடன் ஜெஸ்டஸ் என்னும் ஆங்கில நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பும் வரும்.

கூடவே இருக்கவே இருக்கின்றன, எனது மொழி பெயர்ப்பு சம்பந்தமான பதிவுகள். அவற்றில் பல ஏற்கனவே இடப்பட்டவை ஆனால் அவை மறுபதிப்புகளாக வரும். ஏனெனில் இவை எதுவுமே யாழ்தேவியால் முன்னால் திரட்டப்படவில்லை. மற்றப்படி, மொக்கைகள் இல்லாமல் டோண்டு ராகவனா? அவையும் வரும்? இஸ்ரேல்? நிச்சயமாக.

ஆக, எல்லாம் கலந்து வரும். ஆனால் ஈழ சம்பந்தப்பட்ட எனது புரிதல் பதிவுகளும் நிச்சயம் அவற்றுடன் சேர்ந்து வரும்.

புரிதலுக்கு மிக்க நன்றி.


இதுதான் நடந்தது. எனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு எனது நட்சத்திர வாரம் இன்றிலிருந்து துவங்கியுள்ளது. இது வரும் என்னும் நம்பிக்கையில் இந்த முதல் பதிவை நேற்றே இட்டு இன்று காலை 10 மணிக்கு மேல் வருமாறு அமைவை வைத்தேன். இப்போது இப்பதிவு.

யாழ்தேவி நிர்வாகிகளுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

Anonymous said...

என்ன கொடுமை ராகவன் சார்

Anonymous said...

is yarl devi is anti ltte website> they have called dondu ragahavan.

கிருஷ்ண மூர்த்தி S said...

நல்ல செய்தி!

தங்களுக்குப் பிடிக்காத, அல்லது கசப்பாக இருக்கும் செய்தியையும் ஏற்றுக் கொள்கிற பக்குவம் எந்த ஒரு பிரச்சினையையும் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும்.

பிரச்சினையின் தன்மை என்ன, பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றா பலவா, எது நீடித்த நன்மைதரக்கூடியது இதையெல்லாம் மாறுபட்ட கருத்துக்களை நாம் எவ்விதம் அணுகுகிறோம் என்பதை வைத்து மட்டுமே தீர்மானிக்க முடியும்.

நட்சத்திரப் பதிவராக மட்டுமல்ல, மனம் திறந்து தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறவராகவும் இருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!

Anonymous said...

these guys are really good

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் ஐயா

தங்க முகுந்தன் said...

தாராளமாக எழுதுங்கள்!
ஆவலோடு காத்திருக்கிறோம்!
நட்சத்திரப் பதிவாளராக எம்மவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு
இரட்டிப்பு வாழ்த்துக்கள்!

Barari said...

isrel nitchayamaaka//

inapatru irukkathaa pinne.

Anonymous said...

வாழ்த்துக்கள்.

ஒரு காசு said...

வாழ்த்துக்கள்.
யாழ் தேவிக்கு சுட்டி குடுக்க முடியுமா ? - நன்றி.

dondu(#11168674346665545885) said...

@ஒரு காசு
http://yaaldevi.com/

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது