எபிசோட் 69 (19.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சாரியாரின் மகன் பட்டாபியிடம் அவன் மனைவி ஷோபனா அவனும் எலெக்சனில் நிற்க வேண்டும் என்கிறாள். அவனோ அது தன்னால் ஆகாது என மறுக்கிறான். அசோக் சரியான வழியில்தான் போகிறான் என கருத்து தெரிவிக்கிறான். அசோக் சப்போர்ட் செய்யும் நல்லத்தம்பியே வரட்டும் என்கிறான்.
வேதபாடசாலையில் நல்லத்தம்பி அசோக்கை சந்தித்து பேசுகிறான். தான் சுயேச்சையாக நிற்கவில்லை என்றும், ஒரு பலத்த கட்சியின் சார்பில் நிற்பதால் கோவில்களின் திருப்பணி விஷயத்தில் சட்டென தன்னால் வாக்கு தரவியலாது என்றும் நல்லத்தம்பி கூறுகிறான்.
பிறகு தனக்கு ஏற்பட்டுள்ள சில சந்தேகங்களை நல்லத்தம்பி வெளியிடுகிறான். அசோக்கும் அவனைப் போன்றவர்களும் (இந்த இடத்தில் அவன் குறிப்பிடுவது பிராம்மணர்களைத்தான் என எனக்குப் படுகிறது) ஏன் ஒரு வேலையும் செய்யாமல் மற்றவர்களையே சார்ந்து வாழ் வேண்டும் என கேட்கிறான். சமூக சேவை ஏதும் செய்யாமல் ஏன் தேவையின்றி மற்றவர்களிடமிருந்து கெட்ட பெயர் சம்பாதிக்க வேண்டும் எனவும் கேட்கிறான். இதெல்லாம் தனது சந்தேகங்களே, தவறாக நினைக்கலாகாது எனவும் டிஸ்கி தந்து விடுகிறான்.
அசோக் கூறுகிறான்: நல்லத்தம்பி அரசியல்வாதி. அவர் அரசியலில் சேர்ந்து நன்றாகவே சம்பாதிக்கிறார். ஆனால் அத்தனையும் அவருக்காகவேவா செல்கிறது. கூட இருப்பவர்களுக்குத்தான் அதிகம் போகிறது. பிறகு சேர்க்கும் ஆஸ்திகளும் அவருக்கு பிறகு எவரெவருக்கோத்தான் போகப் போகிறது. யாருமே அவர் தந்ததை வைத்துக் கொண்டு திருப்திப்படப் போவதில்லை. இன்னும் தந்திருக்கலாம் என்றுதான் கருத்து சொல்வார்கள்.
ஆனால் தனதும் தன்னைப் போன்ற மற்ற சன்னியாசிகளின் நிலையோ வேறு. தங்களுக்கு பணம் பொருள், புகழ் எதிலுமே நாட்டம் இல்லை. எதையும் போய் தேடுவதில்லை. உடல் தேவைக்கு மிக குறைந்த அளவு உணவு கிடைப்பதை வைத்து உண்ண வேண்டியது. அதே சமயம் கிடைக்காவிட்டாலும் அதையும் உபவாசமாக மாற்றிக் கொள்வது என்றுதான் இருக்கிறோம் என்கிறான்.
ஒண்ணும் புரியல்ல என நல்லத் தம்பி கூற சோவின் நண்பரும் அதை ஆமோதிக்கிறார். அசோக் இன்னும் பரிசோதனை நிலையில்தான் இருக்கிறான். இன்னும் ஞானத்தை அடையும் பாதையை நிர்ணயிப்பதிலும் அதற்கான முயற்சி நிலையிலேயே இருக்கிறான். ஆகவே அவன் சொல்வது அதனையையும் அப்படியே ஏற்க வேண்டியது இல்லை. அவனது பரிசோதனை நிலையை மனதில் நிறுத்துவது தேவை என்கிறார்.
அப்போ அசோக் என்ன சொல்றான் சும்மா இரு என்கிறானா? அதே போல கீதையிலும் என்னைச் சரணடை வேறு ஏதும் செய்ய வேண்டியதில்லை என கிருஷ்ணர் கூறுகிறாரே என நண்பர் கேட்க, சோ முதலில் அசோக் சொன்னதுக்கு வருகிறார். அசோக் கூறியது போல வால்மீகியும் இந்த நிலையை சந்தித்திருக்கிறார். அவர் பல பாவ காரியங்களை வேடனாக இருந்து செய்ய நேர்ந்ததை தனது குடும்பத்துக்காக செய்வதாக புரிந்து கொண்டிருக்க, அவர் குடும்பத்தினரோ அவரது செயல்களின் பலன் மட்டுமே தங்களது, பாவம் வால்மீகிக்கே என இருந்ததையும் கண்டறிந்து ஞானம் பெறுகிறார்.
கீதையிலோ கண்ணன் சும்மா இரு என எங்குமே கூறவில்லை. கடமையைப் பற்றின்றி செய் என்று மட்டும் கூறப்படுகிறதே தவிர செய்யவே செய்யாதெ எனக்கூறவே இல்லை எனக் கூறுகிறார். கீதையை உபதேசித்தவனும் சன்னியாசி இல்லை, உபதேசம் பெற்றவனும் சன்னியாசி இல்லை, உபதேசம் நடந்த இடமும் சன்னியாச மடம் இல்லை என சோ தெளிவுபடுத்துகிறார்.
சமூக சேவை பற்றி நல்லத்தம்பி கூறுகிறாரே அது பற்றி சாத்திரம் ஒன்றும் சொல்லவில்லையா என நண்பர் கேட்க, அவர் பல உதாரணங்களிலிருந்து சாத்திரம் சமூக சேவை பற்றிக் கூறியதை பட்டியலிடுகிறார். சமூக சேவை என்பது ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக வற்புறத்தப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
அசோக் கடசியாக நல்லத்தம்பியிடம் ஆண்டவனிடம் பிரார்த்திக்குமாறு கூறிவிட்டு விடை பெறுகிறான்.
(தேடுவோம்)
எபிசோட் 70 (20.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
பாகவதரின் ஷேர் மார்க்கெட் நண்பர் ஜீனி வந்து பாகவதர் சமீபத்தில் வாங்கிய ஷேர்களின் விலைகள் சரிவால் அவை காலணாவுக்கு பிரயோசனமில்லாமல் போயின என குண்டை தூக்கி போடுகிறார். இத்தனை ஆண்டுகள் பார்க்காம இருந்த அந்த நண்பனை எந்த வேளையில் தாம் பார்த்தோமோ என பாகவத்ர் நொந்து கொள்கிறார். (நான் பயந்தது நடந்து விட்டது).
உன்னைப் பார்த்த வேளை என பாகவதர் கூறுகிறாரே, அவரது பேராசையால்தானே இந்த நஷ்டம் என சோவின் நண்பர் கேட்க, அவரும் அதை புன்முறுவலுடன் ஆமோதிக்கிறார். திருப்தியடையாத பிராமணனும், திருப்தி சுலபத்தில் அடைந்து விடும் அரசனும் சீக்கிரமே அழிவார்கள் எனவும் அவர் கூறுகிறார்.
ஜீனி தன்னை டிஃபண்ட் செய்து கொள்கிறார். தான் நல்லது நினைத்தே செய்ததாகவும் அது இவ்வாறு முடியும் என நினைக்கவும் இல்லை எனவும் அவர் கூறுகிறார். ஆனால் பணம் போனது போனதுதான்.
அசோக், சாரியார் மற்றும் ஜட்ஜ் நல்லத்தம்பிக்கு கைலாஷ்நகர் வாசிகள் ஆதரவு கொடுப்பது பற்றி பேசுகிறார்கள். அசோக்கும் சாரியாரும் நல்லத்தம்பிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என அபிப்பிராயப்பட, ஜட்ஜ் தயங்குகிறார். ஒரு முடிவும் எடுக்காமலேயே மீட்டிங் கலைகிறது.
பாகவதரின் மகனும் மருமகளும் சேலையூரில் ஃப்ளாட் வாங்க எண்ணூகின்றனர். விஷயம் தெரியாமல் ஜானகி முதல் பேமெண்டுக்கு காஞ்சீபுரம் வீட்டை விற்கலாம் என ஐடியாவை முன்வைக்க பாகவதர் திகைக்கிறார்.
உமாவின் கணவன் ரமேஷின் வழக்கை எடுக்க வக்கீல் அனந்தராமன் முடிவெடுக்க, பிரியா அதை எதிர்க்கிறாள். ரமேஷ் செய்தது அதர்மம் என அவள் கூற அவ்வாறெல்லாம் பார்த்தால் கேஸ் கிடைக்காது என அனந்தராமன் கூறுகிறார். அவளிடம் சர்றே கடுமையாகவும் பேசுகிறார்.
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்
-
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கே.சச்சிதானந்தன் – தமிழ் விக்கி
சச்சிதானந்தனை வாச...
23 hours ago
6 comments:
சோ பேசுவதை தனியாக கொடுக்கலாமே ?
இது போன்ற பதிவுகளை போடுங்கள். எதையாவது, நாட்டுப்பற்று என்கிற பெயரில் எழுதி, மனித மனங்களை புண் படுத்துவதை நிறுத்துங்கள். அப்பதிவுகள் உங்கள் மன அழுக்குகளையும், வக்கிரங்களையும் வெளிப்படுத்தி விடுகின்றன. உங்களுக்கு பிடித்த, இந்த இடுகையின் தலைப்போடு வார்த்தை தொடர்புடைய விசயம் "இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் ஆராய்ச்சி படிப்பில், எங்கே பிராமணன்?" ஓரு பதிவிடுங்கள்.
-கிருஷ்ணமூர்த்தி
கெடப்பது கெடக்கட்டும், கெழவிய தூக்கி மனையில வை
நான் எப்படி பதிவுகள் போட வேண்டும் என யாரையும் ஆலோசனை கேட்டதாக நினைவில்லை.
செந்தழல் ரவி, இதில் உங்கள் பிரச்சினை என்ன?
டோண்டு ராகவன்
Senthazil Ravi has achieved what he wanted to. He wanted to tease you and you got offended.
There is a famous saying "No body can hurt you without your concent". By responding to Senthazil Ravi, i think you have given the concent.
தேவர் மகன் படத்தில், தேவர் சமுதாயத்தை பார்த்து கமல் ஒரு வசனம் பேசுவார், "போய் உங்க பிள்ளைகளை படிக்க வைங்கடா". இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து இதே வசனத்தை பிராமணர்களை பார்த்து பேசக்கூடிய நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன. இதற்கான காரணத்தை உங்களை போன்ற முதிர்ந்த அறிவு பெற்றவர்கள் கண்டறிந்து சொன்னால், உங்க சமுதாயத்துக்கு நல்லது. நீங்கள் நினைப்பது போல், நாட்டுப்பற்று உள்ள பிராமணர்கள் நல்லா இருந்தால் தானே நம்ம நாட்டுக்கும் நல்லது! - கிருஷ்ணமூர்த்தி
Post a Comment