"கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா" என்று எந்த சிவ பெருமானும் என்னைக் கேட்கவுமில்லை நான் தருமியுமில்லை. இருந்தாலும் சில கேள்விகள்.
1. டாக்டர் ரங்கமணி ஐயங்கார் ஒரு பெரிய மூளை அறுவை சிகிச்சை நிபுணர். அவருடைய ஒரே பையன் பிரேம். பிரேம் அவர் பையன் தான் ஆனால் டாக்டர் ரங்கமணி ஐயங்கார் அவன் தந்தை இல்லை. இது எப்படி சாத்தியம்?
2. ஒரு வகுப்பில் 6 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் ஆசிரியர் ஒரு கூடையில் அவர்களுக்காக ஆறு ஆப்பிள்கள் கொண்டு வந்தார். ஒவ்வொரு மாணவனாக வந்து ஆளுக்கு ஒரு ஆப்பிளை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதே போல ஆறு மாணவர்களுக்கும் ஒவ்வொரு ஆப்பிள் கிடைத்தது. இருந்தாலும் கடைசியில் பார்த்தால் கூடையில் ஒரு ஆப்பிள் இன்னும் இருந்தது. எப்படி?
3. நிஜமாக நடந்தது இப்போது கூறப்போவது. இங்கிலாந்தில் நிலங்களை ஏரியல் சர்வே செய்தனர். நிறைய அரசாங்கப் பணம் செலவாயிற்று. இருப்பினும் இதனால் அரசுக்கு நிகர லாபமே ஏற்பட்டது. எப்படி?
4. ஒரு லெவல் க்ராஸிங். அதிலிருந்து ஒரு ரயில் வண்டியும் ஒரு காரும் சரியாக 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றன. இரண்டும் ஒரே வேகத்தில் லெவல் க்ராஸிங்கை நோக்கி வருகின்றன. ஒரே நேரத்தில் அதைக் கடந்து செல்கின்றன. இருப்பினும் ஒரு விபத்தும் நடக்கவில்லை. எப்படி?
விடைகள் அடுத்தப் பதிவில் போடத் தேவையிருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில் சகப் பதிவாளர்கள் இதை விடப் பெரியவற்றை ஏற்கனவெ பார்த்திருப்பார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
19 hours ago
10 comments:
Mr Raghavan:
I happened to read your comments on child labour. If there is one state in India that really thrives on cheap labour through child labour - it is Tamil Nadu.
The reasons for the campaign against Nestle outlet is argued in that blog:
http://studentsolidarity.blogspot.com/2005/02/comment-to-mcmedia.html
The battle is not against Nestle. The real battle is against corporate cancer.
Since you sound like a mature person, (not to discount your 58 years of experience of living), kindly enlighten me -- what have you wise grey-heads contributed to this country?
Or even, what have you done to abolish child labour in Tamil Nadu?
Do you fight only battles that you are bound to win?
If all men were like good wine, maturing with age, there would have been no need for dos and donts, dondu.
I look forward to a response in the Student Solidarity blog -after you read
http://studentsolidarity.blogspot.com/2005/02/comment-to-mcmedia.html
Dear HawkEyes,
I suppose you are referring to my comments vide http://studentsolidarity.blogspot.com/2005/01/support-fight-against-corporatisation.html
I respect your sentiment. But it is not correct to post your comments in an entirely unconnected topic. You could have emailed me or you could have answered me at the concerned blog itself. Curiously my comment there remains unanswered.
Let us forget that for the moment. I read the blog cited in your comments. But still my points remain. Your first duty is to study. Don't fritter away your energy. My 58 years have taught me a lot. One of them is to remain calm and not to lose sight of the single goal of a student, namely completing the studies. You don't gain anything by asking about my credentials. What are your answers to my questions about the child labor employed in your dhabas?
Anyhow, I will give comments in the blog cited by you. Having come to my Tamil blog, try to answer the mind twisters posed by me in this topic. I presume you can read Tamil?
Regards,
Dondu Raghavan
1. டாக்டர். ரங்கமனி ஐயங்கார் பிரேமின் தாய்.
2. //கூடையில் அவர்களுக்காக ஆறு ஆப்பிள்கள் கொண்டு வந்தார்.//
ஆசிரியர் மாணவர்களுக்காக 6 ஆப்பிள்கள்தான் கொண்டு வந்தார். ஆனால் மொத்தம் கொண்டு வந்தது 7 ஆப்பிள்கள்.
3,4 இரண்டுக்கும் விடை தெரியவில்லை.
கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் 4வது கேள்விக்கு நாளை பதிலளிக்க முயல்கிறேன்.
ரங்கமணி ஐயங்கார் தாய். அது மட்டும் சரி ஆப்பிள் கணக்கு தவறு. ஆசிரியர் கொண்டு வந்தது மொத்தம் 6 ஆப்பிள்கள்தான்.
ஜெயஸ்ரீ, லெவல் கிராஸிங் என்றாலே ஒரே மட்டத்தில்தான் தெருவும் ரயில் பாதையும் இருக்கும் என்பது தங்களுக்குத் தெரியாதா? 3-ஆம் கேள்வி நிஜமாகவே கடினம்தான். என் பதிலை நாளை வரை ஒத்திப் போடுகிறேன்.
ரங்கமணி விஷயத்துக்கு வருவோம். இது சம்பந்தமாக நான் தில்லியில் இருந்த போது ஒரு தமாஷ் நடந்தது. அங்கு நான் டாக்டர் மல்ஹோத்ரா என்றப் பெயரை உபயோகித்தேன். நாங்கள் தங்கியிருந்தக் காலனி குழந்தைகள் எல்லாம் என்னுடைய இம்மாதிரி விடுகதைகளை விரும்பிக் கேட்பார்கள். என் நேரம், எங்கள் காலனியில் நிஜமாகவே அப்பெயரில் ஒரு டாக்டர் இருந்திருக்கிறார். அவர் பையன் பெயரும் ப்ரேம்தான். (கஷ்டம்). ஒரு குழந்தை மெனக்கெட்டு இதை அவர்கள் வீட்டில் வத்தி வைக்க, டாக்டர் மல்ஹோத்ரா என்னைப் பார்க்க வந்தார். நல்ல வேளை நான் அவருக்கு விடையைக் கூறியதும் சிரித்து விட்டுச் சென்றார்.
இங்கு யாராவது ரங்கமணி இருந்தால் என்னை மன்னித்து விடவும்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாலாவது கேள்வியில்: இரண்டும் ஒரே நேரத்தில் என்பது ஒரே மணி நேரமா? வேறு வேறு நாள்களில் என்றால் சாத்தியம்.
தவறு காசிலிங்கம் அவர்களே. காரும் ரயில் வண்டியும் ஒரே நேரத்தில் ஒரே நாளிலேயே லெவல் க்ராஸிங்கைக் கடந்தன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கார் ரயில்வண்டியில் மேலேயே லக்கேஜாக இருந்தது?
100% சரி. வாழ்த்துக்கள் காசிலிங்கம் அவர்களே. கார் லக்கேஜாக இருந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Congrats. Vasikar. The last student took the basket along with thalast apple.
Regards,
Dondu Raghavan
Post a Comment