கருணாநிதி/ஜயலலிதா/பெரியார்/சோ/ராஜாஜி ஆகியோரைப் பற்றி பலர் பலவிதமான அபிப்பிராயம் வைத்திருக்கின்றனர். அவற்றை வெளிப்படையாகவும் கூறுகின்றனர். பிரச்சினை இல்லை. ஆனால் சில சமயங்களில் வரம்பு மீறுகின்றனர். உதாரணத்துக்கு கருணாநிதி அவர்களது பெயரை சிதைத்து எழுதி அசிங்கமான பொருள் வருவதுபோல எழுதுகின்றனர். அவரது நடத்தையை கொச்சையாக எழுதி விமரிசனம் செய்கின்றனர்.
ஆனால் அவ்வாறு செய்யும்போது பிளாக்கராக வராமல் (அப்படியே வந்தாலும் ப்ரொஃபைல் பகிர்ந்து கொள்ளாத பிளாக்கர்கர்களாக) வருகின்றனர். உதாரணத்துக்கு கலைஞர் அவர்களது சபையறிந்து பேசுதல் பற்றிய பதிவையே எடுத்து கொள்ளலாம். அனானி ஒருவர் அவரை எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருந்தார். ஐயா அனானி உமக்கு அவர் மேல் விமரிசனம் இருக்கலாம், ஆனால் அதற்காக இப்படியா? அதுவும் அனானியாக வந்து அசிங்கம் செய்கிறீர்? டோண்டு என்ன காதில் பூவைத்து கொண்டுள்ளானா? இந்த அழகில் அவரது பின்னூட்டத்தை சென்சார் செய்து விட்டேனாம். அதற்க்காக 'தார்மீக' கோபம் வேறு படுகிறார்.
அதே போல என நாடக மேடை அனுபவங்கள் பதிய ஒரு பதிவில் பதிவர் செந்தழல் ரவி கும்மியடிப்பதாக நினைத்து கிருஷ்ணர் பற்றி அவர் ஒரு நீக்ரோ என்று பின்னூட்டம்போட அதற்கு ஒரு எதிர்வினையாக ஏசு கிறிஸ்து பற்றி ஒரு அனானி எழுத அதை நான் நிராகரிக்க அவரும் மேலே சொன்ன அனானி போலவே 'தார்மீகக்' கோபம் கொள்ள அதற்காகவும் கிருஷ்ணரைப் பற்றிய பின்னூட்டங்கள் குறித்து ஒரு தனி பதிவு இட்டேன்.
இவ்வாறு மற்றவர் பதிவில் அனானியாக சிலரைப் பற்றி பின்னூட்டம் போடும் கோழைகளுக்கு ஒன்று கூற ஆசைப்படுகிறேன். அதெல்லாம் டோண்டு ராகவனிடம் நடக்காது. உங்களுக்கென்ன உங்கள் சொரிதலை முடித்து கொண்டு ஓடிவிடுவீர்கள். நான்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்படியே பதிவராக வந்தாலும் அவதூறு பின்னூட்டங்கள் எடிட் செய்யப்படும். சம்பந்தப்பட்ட பதிவர் தாராளமாக சென்சார் செய்யாது அதே பின்னூட்டத்தை தன் சொந்த வலைப்பூவில் இட்டு கொள்ளட்டும்.
இது ஒரு போர் பிரகடனம் (Declaration of war).
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
22 hours ago
28 comments:
////இது ஒரு போர் பிரகடனம் (Declaration of war).////
அமைதி, அமைதி, அமைதி கொள்ளுங்கள்
மிஸ்டர் டோண்டு சார். உங்கள் அனுபவத்திற்கும், வயதிற்கும் உரிய சாந்தத்தோடு இருங்கள்.
அனானிகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
In a war of words, silence is the best weapon!
சிம்பிள், அனானிகளைக் கண்டுகொள்ளாதீர்கள்!
அனானிகளாக வருபவர்கள் எல்லோரையுமே நான் குறை சொல்லவில்லை. அவர்கள் தங்கள் சொந்தப் பெயரில் கூறினால் வேறுவிதமாக திசை திருப்பல்கள் நடக்கலாம் என்று கூட அனானிகளாக வரும் வாய்ப்பு உண்டு.
ஆகவே பாயிண்ட் எதுவும் இல்லாத வசைப் பின்னூட்டத்தை மொத்தமாக நிராகரிப்பது, அதில் பாயிண்ட் ஏதேனும் இருந்தால் வசையை நீக்கி (எழுத்தே தொழிலான எனக்கு இது என்ன பிரும்மவித்தையா) கருத்தை மட்டும் வெளியிடுவது என முடிவு செய்துள்ளேன்.
அதை கூறுவதே இப்பதிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வணக்கம் டோண்டு சார்.
//அனானிகளாக வருபவர்கள் எல்லோரையுமே நான் குறை சொல்லவில்லை. அவர்கள் தங்கள் சொந்தப் பெயரில் கூறினால் வேறுவிதமாக திசை திருப்பல்கள் நடக்கலாம் என்று கூட அனானிகளாக வரும் வாய்ப்பு உண்டு //
நல்லா சொன்னீங்க சார். :-). உண்மையில் சொன்னால் நான் கூட பதிவு ஆரம்பித்தபின் உங்கள் பதிவில் பின்னூட்டம் போடுவேனா என்று தெரியவில்லை. போட்டா ஆபாசமா திட்டிலாம் மெயில் வருமாமே, நிசமா. ஆனால் நிச்சயமா உங்கள் பதிவுகளை படிப்பேன். எனக்கு தோன்றினால் பின்னூட்டமும் இடுவேன் ( நமக்கும் சண்டைன்னா ரொம்ப பிடிக்கும்ல.. ஆனால் சண்டை கருத்து ரீதியாய் அல்லது நக்கலாய் இருக்கனும் ..விரசமாய் அல்லது தனிமனித தாக்குதலாக இல்லாமல் )
உங்களால் சுலபமாய் இந்த மாதிரி பின்னூட்டங்களை எடிட் செய்துவிட முடியும் என்று கருதுகிறேன். அதற்கு முன் உங்கள் தரப்பை தெரியபடுத்தியது சரியே. என்ன இதை போர்(war) பிரகடனம் என்று சொல்லாமல் போர் (bore) பிரகடனமாக சொல்லியிருக்கலாம். பின்ன உங்க பதிவுலை அனல் பறக்க விவாதம் நடக்கலைன்னா அது 'போர்'(boredom) தானே. ;-)
நான்: ஏய் இங்க வா.. சோப்பு டப்பால எதுக்கு சின்ன சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா?
ஆபாச அனானி : தெரியலடா *^$+!#%
நான் : அப்படிலாம் பே(ஏ)சகூடாது.. தெரியலன்ன கேட்டு தெரிஞ்சுக்க புரியுதா.. சின்னபுள்ளதனமா இருக்ககூடாது சொல்றன் கேட்டுக்க, பெரிய ஓட்டை இருந்தா சோப் கீழ விழுந்துடும். டோண்டு சார் அதைதான் இங்க சொல்லவரார் புரிஞ்சுதா.. ஓடு ஓடு... எங்கவந்து யார்கிட்ட..பிச்சுபுடுவன் ஆமாம்
சரி இங்கு கும்மி அடிக்கலாமா?.. நாமக்கெல்லாம் யுத்தபூமில செத்த நேரமாச்சும் உலாவலன்னா .. கண்ணை மூடுனாலே கட்டதுரை கனவா வருது... அதனாலதான் கரெஸ்பான்டென்ஸ்ல கன் ஃபைட் கத்துகிட்டு வந்திருக்கன் யாரவது உடம்புல lead content கம்மியா இருக்கவங்க சீக்கிரம் வாங்க.
In war, we are all equal before death
சரவணன்
//உண்மையில் சொன்னால் நான் கூட பதிவு ஆரம்பித்தபின் உங்கள் பதிவில் பின்னூட்டம் போடுவேனா என்று தெரியவில்லை. போட்டா ஆபாசமா திட்டிலாம் மெயில் வருமாமே, நிசமா?//
அதுக்குத்தானே மெனக்கெட்டு மாடரேசன்னு பிளாக்கர் எல்லோருக்கும் கொடுத்திருக்கு. ஓசைப்படாமல் திட்டல்களை குப்பையில் போட்டு விட்டு கமுக்கமாக இருக்க வேண்டியதுதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/////In war, we are all equal before death
சரவணன்////
There is no priority or seniority or quota for(to) death:-))))
குருவி படம் பார்த்துக்கொண்டே இந்த பதிவை எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன் அதனால்தான் தலைப்புக்கும் Contentக்கும் சம்மந்தமில்லாமல் இருக்கிறது.
War என்ற வார்த்தை பலருக்கு(தாங்கள் உட்பட) Fancyயான ஒன்றாகிவிட்டது என்பது தான் இங்கே வருந்தத்தக்க விஷயம்!
கருப்பன் அவர்களே,
இது யுத்தமே. பல விஷயங்கள் திரும்ப திரும்ப வருகின்றன. இதனால் நாம் எச்சரிக்கை அடைகிறோம். ஆகவே ஒரு குறிப்பிட்ட விஷய்ம் திரும்ப வந்தால் தூரத்திலேயே அதை உணர முடிகிறது.
புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
இது யுத்தமே.
//
தங்கள் அகராதியில் "யுத்தம்" என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன என்று கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்!
//
புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது நிஜம்.
//
உங்கள் பதிவுகளை வாசிப்பவர்களுள் எத்தனை சதவிகிதம் பேர் இந்த so-called "புரிந்துகொள்ள வேண்டியவர்கள்" என்பது தங்களுக்கு தெரியுமா??
//
ஆகவே பாயிண்ட் எதுவும் இல்லாத வசைப் பின்னூட்டத்தை மொத்தமாக நிராகரிப்பது, அதில் பாயிண்ட் ஏதேனும் இருந்தால் வசையை நீக்கி (எழுத்தே தொழிலான எனக்கு இது என்ன பிரும்மவித்தையா) கருத்தை மட்டும் வெளியிடுவது என முடிவு செய்துள்ளேன்.
//
இது தான் தங்களது யுத்ததுக்கான விளக்கமா?? Exaggeration சில சமயங்களில் எரிச்சலூட்டுவாதாக அமைந்து விடுகிறது :-(
//உங்கள் பதிவுகளை வாசிப்பவர்களுள் எத்தனை சதவிகிதம் பேர் இந்த so-called "புரிந்துகொள்ள வேண்டியவர்கள்" என்பது தங்களுக்கு தெரியுமா??//
ஒரு மறைமுகத் திட்டத்துடன் மார்க்கமாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்கான செய்தி இப்பதிவு. அவர்கள் புரிந்து கொள்வார்கள் அது போதும்.
நீங்கள் அவர்களுள் ஒருவராக இல்லையென்றால் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Ragavan,Do let me know how to edit comments that are posted?
Is there a way to edit them before moderation and then publish?
post-edit' way doesn't work,though many people are suggesting that..
I too have thses kind of issues..
அறிவன் அவர்களே,
ஆட்சேபகரமான பின்னூட்டத்தை முதலில் வெளியிடக்கூடாது. உங்கள் ஜிமெயிலில் அது வந்ததும் அதை நகலெடுத்து புது பின்னூட்டப் பெட்டியில் ஒட்டவும். இப்போது எடிட் செய்யவும்.
பிறகு Name/URL ஆப்ஷனை செலக்ட் செய்து Name கட்டத்தில் சென்சார் செய்யப்பட்டது என எழுதவும் உரல் கட்டத்தை காலியாக வைக்கவும். பப்ளிஷ் செய்யவும். பிறகு முதலில் வந்த ஆட்சேபகரமான பின்னூட்டத்தை நிராகரிக்கவும்.
அன்புடன்
டோண்டு ராகவன்
// SP.VR. SUBBIAH said...
There is no priority or seniority or quota for(to) death:-)))) //
கரெக்டு சுப்பையா சார்,
After the game, the king and pawn go into the same box - :-)))
சரவணன்
Thanks for the immediate info/response.
But there is a hitch.
For some security reasons,I am not using my Gmail mail box to receive comments there,infact one of my friend,who is a tech guru,advised me to do so,to avoid any possible tampering of my blog related stuff.
For that reason,I have purposefully using yahoo account for communication as for as blog is concerned.
My G Mail account is used,just to log in to blogger.
This avoids others,from knowing our gamil account & which gives additional safety.
Now,in these circumstances,is there a work around,for comment alteration????
Sorry for english,since I am learning Tam99 key strokes,it takes some effort & time to type in tamil.
// யுத்தம் என்றால் என்ன //
வீட்டில் மனைவி அடிக்க கணவன் வாங்க, அப்புறம் கணவன் வாங்க மனைவி அடிக்க , பொண்டாட்டிங்க கிட்ட தோத்து தோத்து விளையாடரது யுத்தமா !!!
ஆஃபிஸில் ப்ராஜக்ட் லீடர் கொடுத்த மரணகோடு (டெட்லைன்) மறந்து ப்ளாக் படிச்சுட்டு கடைசி நாள் கம்பைல் ஆகாத கருமாந்திரம் புடிச்ச கோடோடு செத்து செத்து விளையாடரது யுத்தமா !!!
இல்லை நூலுவிட்ட ஃபிகர் எல்லாம் வேலைன்டைன் டேக்கு சொல்லி வச்சா மாதிரி கூண்டோடு காணாம போய்ட்டு ராக்கி டே அன்னைக்கு கைல கலர் கலரா நூல் கட்டுன இளைஞனுக்கு வாலிபமே யுத்தமா !!!
மாசக்கடைசியில் மாஞ்சா போன நூலு மாதிரி எங்க கடன் கிடைக்கும்னு அலையர மிடில் கிளாஸ் மக்களுக்கு தவணைமுறையில் யுத்தமா !!!
வாயை கட்டி அனுப்பிய காசு நீ வாங்கிய கடனின் வட்டிக்கு கூட பத்தாதே என்ற ஏழை தாயின் குரலை கேட்கும் என் வொர்க் பெர்மிட் சகோதரனுக்கு வாழ்க்கையே யுத்தமா !!!
சீக்கிரம் யாரச்சும் வந்து தெளிவு படுத்திடுங்க சொல்லிட்டன் ஆமாம்
சரவணன்
//For that reason,I have purposefully using yahoo account for communication as for as blog is concerned.//
அதனால் என்ன, யாஹூவும் தமிழை சப்போர்ட் பண்ணறதுதானே? நான் ஜி மெயில்னு எதார்த்தமா சொன்னேன். முக்கியமான விஷயம், சம்பந்தப்பட்ட மெயிலை காப்பி பேஸ்ட் பண்றதுதானே. அப்படி யாஹூல கிடைக்கலைன்னா இதுக்காக இன்னொரு ஜி மெயில் கணக்கு துவக்குங்க.
நான் யுத்த பிரகடனம்னு சொன்னது புரியல்லன்னு சில பேர் எழுதியிருக்காங்க. இருக்கட்டும்.
இப்ப ஒரு புதிர்.
ஒரு பிறந்த குழந்தையை கையில் வைத்தபடி ஒரு இளம்பெண் எடை பார்க்கும் இயந்திரத்துக்கு அருகில் நின்று அதில் குழந்தையின் எடையை எப்படி துல்லியமாக எடுப்பது என்று விழிக்க, ஒரு நர்ஸ் அவளிடம் முதலில் "குழந்தையின் தாய் தனியாக எடை மெஷினில் நின்று எடையை நோட் செய்ய வேண்டும். பிறகு அதில் மேல் நின்றவாறே தனது குழந்தையை கையில் வாங்கி இருவரது எடையையும் நோக்க வேண்டும், இரண்டுக்கும் உள்ள வித்தியாசமே குழந்தையின் எடை" என்று கூறி அப்பால் அகன்றாள். பிறகு சற்று நேரம் கழித்து திரும்ப வந்தால் அதே பெண் அதே குழந்தையுடன் அதே குழப்பத்துடன் நிற்பதை கண்டு என்ன விஷயம் எனக் கேட்க, தான் குழந்தையின் அத்தை, இப்போது என்ன செய்வது எனக் கேட்டாளாம்.
எனது கேள்வி: அந்தக் கதை இப்போது இங்கு ஏன் நினைவுக்கு வரவேண்டும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu Sir,
Why don't you disable annoy and other options (as it was some years ago) ? then all this nonsense will be impossible and you can get on with your life peacefully.
If it is not possible, then you should stingently block any comment which is irrelevant, slanderous and indecent. You can identify mischeif mongers and perverts immediately and simply block their comments. Period. no need for any further discussions.
IF you can follow this for a few months, all nonsense will stop automatically.
Anbudan
Athiyaman
பிரச்சினை ஒன்றும் இல்லை அதியமான் அவர்களே. அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களின் ஆபத்தை முழுக்க உணர்ந்தவன் நான். அவற்றை திறமையாகக் கையாள முடியும் என்று ஆன பிறகுதான் அவற்றை திறந்தேன்.
மற்றப்படி பிளாக்கர் கமெண்டிலும் தாறுமாறாக பின்னூட்டங்கள் வராதா என்ன?
நான் பார்த்து கொள்கிறேன். பிரச்சினை இல்லை. என்னுடைய பிரையாரிட்டிகளே வேறுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///////திரும்ப வந்தால் அதே பெண் அதே குழந்தையுடன் அதே குழப்பத்துடன் நிற்பதை கண்டு என்ன விஷயம் எனக் கேட்க, தான் குழந்தையின் அத்தை, இப்போது என்ன செய்வது எனக் கேட்டாளாம்./////////
I enjoyed your 'nakkal'. :)
But I think,you missed out a basic difference.
When you can give a different account than GMail,you have to give only in profile information.
But still,comments shall be directed to original gmail account,if 'comments to mail account' is enabled.Then,comments still will go to gmail account and any commneter can know the gmail account id as too..
I guess,you haven't noted the difference I had pointed out..
Anyway,I shall explore further..
யுத்தம்னா என்னன்ற என்னோட கேள்விக்கு யாரும் பதில் சொல்லமாட்டன்ராங்க, என்னா நான் அனானி :-( அதனால் மண்டபம் துணையில்லாம நானே யோசிச்சு எனக்கு நானே பதில் சொல்லிக்கிட்டன். பார்திபன் ஸ்டைலில் வசனத்தை வார்தைகளாய் மடக்கி எழுதி கடைசியில் அச்சரியகுறி போட்டு பார்த்தா கவுஜ. ஆணி புடுங்க உடலன்ன எப்படிலாம் யோசிக்க வேண்டியிருக்கு பாருங்க சார்,
யுத்தம்
--------
யுத்தபூமியில் எது
யுத்தம்
ரத்தம் சிந்துவதா.. இல்லை
சித்தம் கலங்குவதா
மொத்தம் அழிவதா இல்லை
நித்தம் இழப்பதா எது
யுத்தம் !
இங்கு மரணம் மட்டும்
யுத்தம் இல்லை
ஒரு பெண்ணாய் பிறக்கும்
மகவுக்கு இங்கு
ஜனனம் கூட யுத்தம்தான் !!!
மக்களே என் முதல் கவிதை ( முதல் கவிதையே யுத்தம் பத்தியா விளங்கிடும் :-) ) பற்றி கொஞ்சம் சொல்லுங்க. டோண்டு சார் பதிவுல முன்னாடி கவிதை வந்திருக்கா தெரியல. இல்லை ஏற்கனவே இருக்குனு ஏழெட்டு லின்க் கொடுக்கபோறீங்களா ;-).
இணைய கவிஞர்களே பதில் சொல்லுங்கள் என்ன பேரரசு அளவுக்கு நான் பெரிய கவிஞரா வருவேனா... அவரைப்போல எனக்கும் காலத்தை வெல்லும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கொஞ்மாச்சும் இருக்கா இல்லையா
சரவணன்
//But still,comments shall be directed to original gmail account,if 'comments to mail account' is enabled.//
It is not correct. I know what I am talking about. The gmail to which comments for moderation/moderated comments should go need not be the same as your blogger id gmail. My case is a clear example of this. My user name id is different from the account to which comments go. Please open the comments option page and see.
Regards,
Dondu N.Raghavan
//எனது கேள்வி: அந்தக் கதை இப்போது இங்கு ஏன் நினைவுக்கு வரவேண்டும்?//
எப்படி சார் இப்படி சீரியஸா காமெடி பண்ணி கலாய்க்கறீங்க :-)))))
சரவணன்
இது ஒரு போர் பிரகடனம்//
ஆகா வேலை வைச்சிடுவார்கள் போல இருக்கே -
//ஆகா வேலை வைச்சிடுவார்கள் போல இருக்கே//
As war correspondent?
Regards,
Dondu N.Raghavan
//இது ஒரு போர் பிரகடனம் (Declaration of war).//
டோண்டு அய்யா,
நாம இப்போ யார் மீது போர் தொடுத்து இருக்கிறோம்.சொல்லுங்கள் அய்யா.நான் என் படையோடு உங்கள் உதவிக்கு வருகிறேன்.
பாலா
yes. I ve already done a great job at your battle.
OK. இது கேள்வி நேரம்:
1. தசாவதாரத்தின் கதைக்களத்தில் ஒன்று "சைவ வைணவ அடிதடி" பற்றியது! சும்மா இருந்த சங்கை ஊதி கெடுக்கிறாரோ கமல்?
2. இந்த ஜார்ஜ் புஷ் குடாக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்லிட்டே/செஞ்சிட்டே இருக்கே, நம்மூரில் என்ன ரியாக்ஷன் அதுக்கு? What is your take on that?
3. இந்த சாருநிவேதிதா இப்படி டமால்னு "ஆத்திகன்"னு ஸ்டேட்மெண்ட் உட்டுட்டாரே! அதப்பத்தி??
//yes. I ve already done a great job at your battle.//
//நான் என் படையோடு உங்கள் உதவிக்கு வருகிறேன்.//
இந்த யுத்தம் எனது தனிப்பட்ட யுத்தாம். என்னளவிலேயே தீர்த்து கொள்ள முடியும். ஏற்கனவே பலன் கிட்ட ஆரம்பித்து விட்டது. இருப்பினும் உங்கள் இருவருக்கும் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்களை வெறுப்பேற்றிய commentஐ போட்டிருக்காலாமே.ஒரு சிலர் செய்யும் தவறுகள் Anonymous வர்கத்தையே முடக்கிவிடும்.பெரும்பாலானவர்கள் எங்கே தனது gmail a/c,password தெரிந்துவிடுமே என்றுதான் பெயரிலியாக வலம் வருகிறார்கள்.குறிப்பாக தொடர்ந்து பின்னூட்டம் எழுதிவரும் பெயரிலிகளை அவர்களின் பதிவையும்,கருத்தையும் பார்த்தால் புரிந்துவிடும்.வரம்பு மீறும் வம்பர்களை DELETE KEY கொண்டு அழித்துவிடுங்கள்.
உங்கள் பதிவுப் பட்டறையில் கருத்துச் சுதந்திரம் உங்கள் முழுச் சொத்து.அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.
அந்த குறும்பு பெயரிலி இனி திருந்துவார் என நம்புவோம்.
Post a Comment