எனது என்னைத் தொடர்ந்த கனவு ஒன்று பதிவில் குறிப்பிட்டதை இங்கு விரிவுபடுத்தி கூற இன்றுதான் வேளை வந்தது.
2001-ல் நாங்கள் சென்னைக்கு நிரந்தரமாக திரும்பிய அதே சமயத்தில் ராஜ்கிரண் நடித்த 'பாண்டவர் பூமி' படமும் திரைக்கு வந்தது. அப்படத்தின் கதை என் கதை போலவே இருந்தது. அதாவது சொந்த ஊருக்கே, பழைய வீட்டுக்கு குடிவருவது என்ற கதையின் கான்சப்டை மட்டும் கூறுகிறேன். அப்படத்தின் 'அவரவர் வாழ்க்கையில்' என்று தொடங்கும் பாட்டை எதேச்சையாக இன்று ரேடியோவில் கேட்டேன். சட்டென்று எனது ஞாபகம் 2001-க்கு சென்றது. ஆகவே இப்பதிவு. அதற்கு முன்னால் அதை வீடியோவாக பார்க்க: கீழே.
2001-ஆம் ஆண்டு மே மாதம் வரை சென்னைக்கு திரும்பும் எண்ணமே வரவில்லை. எனது மொழிபெயர்ப்பு வேலை அமோகமாக தில்லியில் நடந்து கொண்டிருந்தது. சென்னைக்கு சென்றால் அதெல்லாம் கிடைக்காதே என்ற எண்ணத்தில்தான் சென்னைக்கு திரும்புவதைப் பற்றி நினைக்கவே இல்லை. அந்த மாதத்தின் இரண்டாம் ஞாயிற்று கிழமை வீட்டு சொந்தக்காரர் வீட்டை சீக்கிரம் காலி செய்ய சொன்னார். அவருக்கு வீடு தேவை எனவும் கூறினார். தில்லி வாழ்க்கையில் இதுதான் ஒரு சிரமம். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோமா அதிலேயே இருந்தோமா என்று இருக்க இயலாது. ஒரு வீட்டில் சேர்ந்தாப்போல கடைசியாக நான் குடியிருந்த அந்த வீட்டில்தான் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அதுவே ஒரு ரிகார்ட் என்னைப் பொருத்தவரை. தில்லியில் இருந்த 20 ஆண்டுகளில் மொத்தம் ஏழு வீடுகள் மாறியிருக்கிறேன். திடீரென வீடு மாற்றவேண்டியிருக்கிறதே என்று ஆயாசமாக இருந்தது. அப்போதுதான் என் வீட்டம்மா கூறினார், பேசாமல் சென்னைக்கே திரும்பலாம் என. நான் தயங்கினேன், மொழிபெயர்ப்பு வேலைகள் என்னாகும் என்று. அதற்கும் அவர் பதில் வைத்திருந்தார். வீட்டு வாடகை தர வேண்டியிராது, ஆகவே மாதம் 5000 ரூபாய் இருந்தால் போதும் என்று உறுதியாகக் கூறினார். நானும் கணக்கு பார்த்தேன். தில்லியில் சேமித்த தொகைகளை அவ்வப்போது யூ.டி.ஐ. மாதவட்டி திட்டத்தில் போட்டு சுமார் 6000 ரூபாய் மாதவருமானம் வரும் நிலையிருந்தது. அப்போதைக்கு அது போதும் என அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மேலும் என்னால் சும்மா இருக்க முடியாது என்றும், ஏதாவது செய்து மொழிபெயர்ப்பு வேலையை சென்னையிலும் வெற்றிகரமாக முடிப்பேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். என்னை சமீபத்தில் 1953-லிருந்து பார்த்து வருபவர் என்பதால் என்னைப் பற்றி நான் அறிந்ததைவிட அவர் அதிகமாகவே அறிந்திருந்தார் என்பதை நான் ஏற்கனவே அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் சொல்லைக் கேட்டு வி.ஆர்.எஸ். வாங்கி வெற்றிகரமாக செயல்பட்டதன் மூலமும் அதற்கு முன்னால் பலமுறையும் அறிந்திருந்தேன்.
உடனே சென்னை நங்கநல்லூரில் எனது வீட்டை வாடகைக்கு விட்டு என் சார்பில் வசூல் செய்து வங்கியில் செலுத்தும் எங்கள் குடும்ப நண்பரின் மகளை டெலிஃபோனில் தொடர்பு கொண்டு இது பற்றி பேசினேன். அவர் குடித்தனக்காரர் இரு மாத வாடகை பாக்கி எனக் கூறினார். நல்லதாய்ப் போயிற்று, அம்மாத இறுதியில் வீட்டை காலி செய்யச் சொல்லி விட்டேன். அவரும் செய்து விட்டார். தில்லி வீட்டுக்காரரிடம் ஜூலை வரை நேரம் வாங்கிக் கொண்டு உடனே சென்னை விரைந்தோம். நாங்கள் சென்னைக்கு சென்ற அன்றுதான் குடித்தனக்காரரும் காலி செய்து போயிருக்கிறார். வீட்டை எங்கள் வசம் எடுத்து கொண்டோம். அடுத்த நாளைக்கு காண்ட்ராக்டர் ஒருவரை வரச்செய்து செய்ய வேண்டிய ரிப்பேர்கள் எல்லாவற்றையும் முடிவு செய்தோம். வீட்டில் இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றியிருந்தது. போர்வெல் போட ஏற்பாடு செய்தோம்.
இதில் ஒரு அதிசய விஷயம் என்னவென்றால், சென்னைக்கு திரும்பும் முடிவை மட்டும் நான் எடுத்தேன். உடனே காரியங்கள் நூல்பிடி கணக்காக நடந்தன. எல்லாமே முன்னோக்கிய படிகள்தான். செட்பேக் என்று ஒரு நொடியும் இல்லை. அதிலும் எங்கள் வீட்டில் இருந்த கடைசி குடித்தனக்காரன் ஒரு ஃபிராடு என்பது பிறகுதான் தெரிந்தது. அவன் வீட்டை காலி செய்து போனதையே பலர் அதிசயமாகப் பார்த்தனர். அந்த நேரம் பார்த்து அவன் பிள்ளை போலீஸ் கேசில் மாட்டிக் கொள்ள, அதிலிருந்து தப்பிக்கவே அவர்கள் அவசர அவசரமாக காலி செய்து சென்றனர் என்பது பின்னால் தெரிய வந்தது. எது எப்படியானால் என்ன, எங்கள் வீடு திரும்பக் கிடைத்தது எங்களுக்கு.
போர்வெல் போட கம்பெனி ஆட்கள் வந்தபோது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் காலையிலிருந்து நான்கு வீடுகளில் முயற்சித்துள்ளனர். எல்லா இடங்களிலும் 100 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. எங்கள் வீட்டிலோ 35 அடியிலேயே தண்ணீர் பீறிட்டு வந்தது. என் காலம் சென்ற தந்தை ஒரு புண்ணியாத்மா, அவரால்தான் அது நடந்தது. போர்வெல்லுக்காக இயந்திரம் சப்தத்துடன் குழாயை இறக்கும் பணியில் இருக்க, நான் பாட்டுக்கு வீட்டுக்கு முன்பக்கத்தில் மாடிப்படிக்கட்டில் அமர்ந்து தில்லி வாடிக்கையாளர் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய மொழிபெயர்ப்புக்கான ஆவணத்தின் ப்ரிண்ட் அவுட்டை வைத்து வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது கணினியோ இணைய இணைப்போ இல்லை. கையால்தான் மொழிபெயர்ப்பை காகிதத்தில் எழுதி தட்டச்சு செய்வித்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் வைத்திருந்த அகராதிதான் துணை. சென்னைக்கு வந்து இரண்டே நாளில் வேலையும் பின்னாலேயே வந்தது அன்றைக்குத்தான். திடீரென போஸ்ட்மேன் ஒரு கவரை கொடுத்து விட்டு சென்றான். அதில் பொறியியல் கல்லூரி பழைய மாணவ சங்கத்திலிருந்து ஒரு அறிவிப்பு இருந்தது. சமீபத்தில் 1969-ல் கடைசி ஆண்டு மாணவர்கள் பெயர், புகைப்படம் மற்றும் முகவரி அடங்கிய கையேட்டிலிருந்து எனது முகவரியை எடுத்து அனுப்பியிருந்தனர். அந்த 32 வருட பழைய முகவரி மறுபடி 2001-ல் லேட்டஸ்ட் முகவரியானது எனக்கு நல்ல சகுனமாகவே பட்டது. தண்ணீரும் 35 அடியிலேயே கிடைத்தது. வேலையும் கைமேல் கிடைத்தது. ஆக, 'அது ஒரு நிலாக்காலம்' என்று நினைத்து ஏங்கிய 1969-ஆம் ஆண்டு 2001-ல் திரும்ப வந்ததுதான் எல்லாவற்றையும் விட மகிழ்ச்சி அளித்தது.
ஜூன் மாதம் முழுக்க வீட்டு வேலைதான். தில்லி வாடிக்கையாளரும் என்னை விடுவதாக இல்லை. மொழிபெயர்ப்பு வேலை பாட்டுக்கு தனியே நடந்து கொண்டிருந்தது. நான் சந்தோஷமாக மச்ச மச்சினியே பாட்டை கேட்டவண்ணம் வேலை செய்து வந்தேன். அந்த மாதம் நங்கநல்லூரில் இருந்த இந்தியன் வங்கி மற்றும் எங்கள் வீடுக்கு மிக அருகாமையில் இருந்த சிண்டிகேட் வங்கி ஆகியவற்றில் கணக்கு துவக்கி வைத்தேன்.
ஜூலை 4-ஆம் தேதி தில்லிக்கு திரும்பினேன், அங்குள்ள வீட்டை காலி செய்ய. ஓக்லாவில் இருந்த கண்டைனர் டிப்போவுக்கு சென்று புக் செய்தேன். அங்கிருந்த ஒரு லோடிங் ஒப்பந்தக்காரரை வீட்டுக்கு வரவழைத்து சாமான்களை கட்ட ஏற்பாடு செய்தேன். எரிவாயு சிலிண்டரை ரிடர்ண் செய்து, யூ.டி.ஐ. அலுவலகத்துக்கு போய் அங்கிருந்த அத்தனை மாத வட்டி திட்டங்களிலும் முகவரி மற்றும் வங்கி விவர மாறுதல்களையும் முறைப்படி தெரிவித்து கையொப்பமும் பெற்று கொண்டேன். இதற்கிடையில் தில்லி வாடிக்கையாளர் நான் அங்கு கடைசியாக தங்கியிருந்த அந்த சில தினங்களில் ஒரு பெரிய வேலை வேறு என்னை வைத்து செய்து கொண்டார். கண்டைனர் 12-ஆம் தேதி வந்து சாமான்களை ஏற்றி சென்றது. அன்றே வீட்டுக்காரர் வந்து விட்டார். அவரிடம் வீட்டை ஒப்படைத்து கீழே நண்பர் வீட்டில் தங்க வேண்டியிருந்தது. அடுத்த நாள் என் மனைவியின் அத்தை வீட்டுக்கு சென்று, 15-ஆம் தேதி ரயில் ஏறி 17 சென்னை திரும்ப வந்துதான் மூச்சு விட முடிந்தது. அதற்குள் கண்டைனரும் வந்து சேர்ந்து விட்டிருந்தது. 18-ஆம் தேதி அதை சென்னை வீட்டில் இறக்கினேன். உடனேயே வீட்டம்மா புது கேஸ் இணைப்பை பெற்று சிலிண்டர்களையும் ஆட்டோவில் ஏற்றி வந்து விட்டார். கேபிள் டி.வி. கனெக்ஷன் வேறு தனி சேனலில் நடந்தது. சாதாரணமாக சோம்பேறியான எனக்கு உட்காரக் கூட நேரமின்றி சுற்ற வேண்டியிருந்தது. ஜூலை 25 தில்லி வாடிக்கையாளர் கிட்டத்தட்ட 12 Access கோப்புகளை அனுப்பினார் ஜெர்மனிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புக்கு. அது ஒரு பெரிய ப்ராஜக்ட். திசம்பர் வரை தொடர்ந்தது.
இத்தனை விஷயங்களும் நூல் பிடித்தது போல ஒரே நேர்க்கோட்டில் முன்னேற்ற திசையிலேயே நடந்ததுதான் இப்போதும் அதிசயமாக இருக்கிறது. ஒரு தடங்கலும் இல்லை. உதாரணத்துக்கு 12-ஆம் தேதி கண்டைனரில் சாமான்களை ஏற்றி அனுப்பி, அது ரயில்வே யார்டுக்கும் சென்ற பிறகு தில்லியில் அடுத்த இரண்டு நாளைக்கு பேய் மழை. காலையில் பெய்திருந்தால், நினைக்கவே நடுங்குகிறது மனது. அதே போல இங்கே 18-ஆம் தேதி எங்கள் வீட்டில் சாமான் இறக்கி விட்டு கண்டைனர் லாரி திரும்பச் சென்ற போது எம்.ஜி.ஆர். சாலையில் ஓவர்ஹெட் எலக்ட்ரிக் இணைக்கும் கேபிள் கண்டைனரால் அறுபட்டு, பெரிய சண்டை வந்து 19-ஆம் தேதி மாலை வரை அங்கேயே நின்றது. சாமானை இறக்கும் முன்னால் அது ஆகியிருந்தால் எங்கள் கதை கந்தல்தான். கண்டைனர் டிரைவர் திரும்ப வீட்டுக்கு ஓடி வந்து உதவுமாறு கேட்க, எலெக்ட்ரிகல் ஆட்களிடம் பேசி அவர்களுக்கு கொஞ்சம் ரூபாய் கையில் அழுத்தி டிரைவரை காப்பாற்றினேன்.
சென்னையில் மொழிபெயர்ப்பு வேலை சரியாக வருமா என நான் பயந்தது முழுக்கவே பொய்யானது என் தந்தையின் ஆசியால்தான். பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அக்கனவும் பிறகு வரவில்லை. 2002 பிப்ரவரியில் கணினி வாங்கி டெலிஃபோன் இணைய இணைப்பைப் பெற்றேன். அதே ஆண்டு 2002-ல் பிராட் பேண்ட் இணைப்பு. 2004 வரை தில்லி வாடிக்கையாளர்தான் அதிக வேலைகள் தந்தார். ஆகவே என்னால் சென்னையில் உள்ளவர்களுடன் தன்னம்பிக்கையுடன் பேரம் பேசி நல்ல விலைக்கு எனது சேவைகளை விற்க முடிந்தது. அந்த தில்லி வாடிக்கையாளரும் எனக்கு 2000 ஆண்டுதான் அறிமுகம். எனது மொழிபெயர்ப்பு வேகம் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. ஆகவே நான் சென்னைக்கு சென்றாலும் என்னை அவர் விட்டுத் தரவே இல்லை. அவருக்கு எனது நன்றி எப்போதுமே உரியது. ஆக, 2001-க்கு முன்னால் சென்னைக்கு கிளம்பியிருந்தால் இத்தனை வெற்றி கிடைத்திருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
சரியான நேரத்தில் திரும்பி சென்னைக்கு வந்ததில் வாழ்க்கை அற்புதமயமானது எனப் புரிந்தது. நான் பயந்ததற்கு மாறாக என் மொழிபெயர்ப்பு வேலைகள் மிக வேகமாக அதிகமாயின. தில்லியில் இருபது வருட மொழிபெயர்ப்புத் தொழிலில் சம்பாதித்ததை சென்னைக்கு வந்த பிறகு முதல் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே மிஞ்ச முடிந்தது. இங்கு வந்ததில் கணினி அறிவு பெற்று, தமிழ்மணத்தில் வந்து, தமிழ் மொழிபெயர்ப்பிலும் முன்னேற்றம் பெற்று, இணையத்தில் இணையற்ற நண்பர்களை பெற முடிந்தது. இப்போது வயது அறுபத்திரண்டானாலும் மனதுக்கு என்னவோ 25வயதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
11 hours ago
21 comments:
நல்ல அனுபவமாக இருக்கு டோண்டு சார்.
நீங்கள் சோம்பேறியா? நம்ப முடியவில்லை.
Dondu sir,
I really like all your posts. You have not only the blessings of your father but GOD also helping. All the best.
shiva
Why do you insist on providing so many links to your old blog posts in each of your new posts?
And almost every such link leads in turn to more links.
Karunakaran
ஒரு குழப்பத்தில் இருந்த எனக்கு, இந்தப் பதிவு ஒரு 'நல்ல சகுனமாக'
இருக்கு.
ஆரூடம் பார்க்கிறேனா? :--))))
நன்றி டோண்டு.
//ஒரு குழப்பத்தில் இருந்த எனக்கு, இந்தப் பதிவு ஒரு 'நல்ல சகுனமாக'
இருக்கு.//
வாழ்க்கையில் பல விஷயங்கள் இம்முறையிலும் தீர்மானிக்கப்படுகின்றன. தமிழகத்துக்கு திரும்பும் எண்ணம் ஏதேனும் உள்ளதா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
போதும் இந்தக் குளிர்ப்பிரதேசத்து வாழ்க்கைன்னு இருக்கு.
வயசாகுதில்லையா?
அதான் கிருஷ்ணா ராமான்னு இருக்கலாமுன்னு ஆசை.
ஆனால் தாயகம் வந்தால் வீடெல்லாம் இல்லை. எல்லாத்தையும் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்.
பார்க்கலாம்..... பெருமாள் வழி வச்சுருப்பார்.
முதலில் நினைக்க வேண்டும். அதுதான் முக்கியமான ஸ்டெப். அது வந்து, கடவுள் அருளும் இருந்தால் மீதி எல்லாம் தானே நடக்கும்.
நல்ல அபார்ட்மெண்ட் கிடைப்பதில் கஷ்டம் இருக்கக் கூடாது. முக்கியமாக, இங்கு வந்து பிழைப்புக்கு என்ன செய்வது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அந்த விஷயத்தில் ஒவ்வொருவரது நிலையும் தனி தீவுதான்.
உதாரணத்துக்கு கோபால் சார் பலவெளி தேசங்களுக்கு அடிக்கடி பிசினஸ் டூர் போவதாக சொல்லியிருக்கிறீர்கள். அதே பிசினசை தமிழகத்திலிருந்தும் செய்யலாமே. என்னதான் இருந்தாலும் நம்மூர் போல ஆகுமா? இப்போது இருக்கும் இணையவலைகளால் உலகமே கிராமமாகி அல்லவா போனது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Niraaivaga irunthathu
//ஆனால் தாயகம் வந்தால் வீடெல்லாம் இல்லை. எல்லாத்தையும் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்.//
துளசியக்கா! கீழ்க்கட்டளை அடுத்த (நங்கநல்லூருக்கும், மடிப்பாக்கத்துக்கும் பக்கம்தான்) நன்மங்கலத்தில் பிளாட்டுகள் கொஞ்சம் சீப் ஆக கிடைக்கிறது. இப்போது எனக்கு பைனான்ஸ் கொஞ்சம் டைட் என்பதால் வாங்கி போட முடியவில்லை. ரேடியல் சாலைக்கு பக்கம் என்பதால் கூடியவிரைவில் சூப்பர்ஹிட் ஆக இருக்கும் ஏரியா இது. சீக்கிரமாக வீடு வாங்கி தாயகத்தில் குடியேற வாழ்த்துக்கள்!!
அன்புடன்
லக்கிலுக்
தங்களின் அனுபவம் அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி மற்றும் படிப்பினை என்று சொன்னால் அது மிகையாகாது.வாழ்க்கையில் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கவே மக்கள் பயப்படுகிறார்கள்.செக்குமாடு போல் சுற்றும் மனித எண்ணங்களுக்கு உங்கள் இநத பதிவு ஒரு கலங்கரை விளக்கம் போல் உள்ளது.
பொதுவாக பெரியவர்கள் சொல்வது உண்மையன்றோ
இந்த உலகில் அவனன்றி ஒர் அணுவும் அசையாது.
எல்லா இயக்கங்களுக்கும் அவனே கர்த்தா
நல்லவர்களை அவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்.
எது நடக்கணுகமோ அது நடந்தே தீரும்
எது கிடைக்கணுமோ அது கிடைத்தே தீரும்
எது நம்மை விட்டு போகணுமோ அது போயே தீரும்.
நடப்பதெல்லாம் எல்லம் நன்மைக்கே
இக் கொள்கையினை மனதில் வரித்து
வாழும் மனிதருக்கு எல்லாம் இன்பமே.
ராகவன் சார்,
வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. உங்கள் அனுபவம் இங்கு பலருக்கு நல்ல பாடமாக அமையும் என்பது என் நம்பிக்கை.
ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்கள். "சமீபத்தில்" செப்டம்பர் 2004-இல், எனது சிறுவயது சிந்தனைகள் - Iபதிவுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் தானே உங்களை தமிழ் வலையுலகுக்கு இழுத்து வந்தது, தெரிந்தோ தெரியாமலோ தங்களின் Entry-க்கு நான் காரணமாகி விட்டேன் அல்லவா :))))
என்றென்றும் அன்புடன்
பாலா
உங்கள் பங்களிப்பு பற்றி பல முறை கூறியுள்ளேனே. உங்கள் வலைப்பூ, அதிலும் முக்கியமாக திருவல்லிக்கேணி நினைவுகள்தானே தமிழில் நான் வலைபதிய காரணமாக இருந்தன.
உங்களுக்காகவே நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/02/blog-post_20.html
அதில் நான் கடைசி பாராவில் எழுதியதற்கு உங்கள் பின்னூட்டமும் அதற்கு என் பதிலும் இதோ:
enRenRum-anbudan.BALA said...
உங்களைப் பற்றி ஏதோ விளையாட்டாக சமீபத்தில் (உங்கள் சமீபத்தில் அல்ல:)) ஒரு பதிவு எழுதினேன் என்பதற்காக, இப்படி திட்டம் தீட்டி பழி தீர்ப்பிர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை ;-)
//இவ்வளவு நல்லபடியாக எழுதி விட்டு ஏதாவது குறை கண்டுபிடிக்கலாம் என நினைத்தால் ஒன்றும் கண்டு பிடிக்க இயலவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.
//
இது "டோண்டு" லெவலுக்கே டூ மச் என்பது என் தாழ்மையான கருத்து !!!
ஆமாம், எதற்கு இந்த "திடீர்" பாராட்டு விழா ???? ஏதாவது காரியம் ஆக வேண்டுமா :)))
எ.அ.பாலா
February 20, 2007 9:58 PM
dondu(#11168674346665545885) said...
இரண்டு காரணங்கள். ஒன்று உங்களது 299-ஆம் பதிவு. அடுத்தது 300 தானே, ஏதோ நம்மால் ஆனது. அதை வரவேற்கலாமே என்று.
ஆனால் இன்னொரு காரணம் சீரியஸ். இந்த டோண்டு ராகவன் தமிழ்மணத்துக்கு வந்தது ஏன் என்று அவரவர் கொலை வெறியுடன் அலைகிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா?// :))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆனால் இன்னொரு காரணம் சீரியஸ். இந்த டோண்டு ராகவன் தமிழ்மணத்துக்கு வந்தது ஏன் என்று அவரவர் கொலை வெறியுடன் அலைகிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டாமா?// :))))))//
dondu saar puriyavillaiyE.kelikku solkirIrkaLaa?
allathu uNmaiyaa.
allathu ithuvum anti brahmin feelingaa!
thaangkaathu sami.
//dondu saar puriyavillaiyE//
புரிய வேண்டியவர்களுக்கு உடனே புரியும். அது போதும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////dondu saar puriyavillaiyE//
புரிய வேண்டியவர்களுக்கு உடனே புரியும். அது போதும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
thank you sir.
wishing you all the best.
may the almighty give mental, physical courage and moral support to manage the persons having ill thoughts .
Mr Dhondu!
This Narasimhan Raghavan must be the only person who returned to Chennai and is now praising the city of dravidian politicians.
Because, Tamilians, especially the Tambras, who live in Delhi, never like to return.
Many, who were given lucrative employments or transfers in/to Chennai, turned them down for a Delhi life.
I know many elders advising the young people not to go back. Delhi is the best-administered city in India. The civic life is far more better than in Chennai. Chennai is the hell-hole most suitable for dons or underworld gangs and the low class people and the politicians who exploit them.
Chennai is the worst place when compared to Delhi. Perhaps, it was good long ago. Now, the dravidian politicians have turned the city into a kakkoos.
Your personal experiences are all topsy-turvy.
If your fate is thus, who can help you?
I am sorry for you!
//the city of dravidian politicians..//
சென்னைக்கு ஈடு சென்னைதான். அதில் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்?
இங்கு எனது கடந்த மற்றும் இப்போதைய அனுபவங்கள் அருமையானவை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு விஷயம் சொல்லட்டும்மா! என்னத்தான் நீங்க உங்களை ஒரு பிராமணன் இல்லை ஆரியனுன்னு சொல்லிக்கிட்டாலும் உங்க குணம் ஒரு திராவிடனுக்குரியது.அது அது தான் இதுக்கெல்லாம் காரணம்.அது என்ன திராவிட குணமா ..அதுதாங்க சகிப்புதன்மை
இப்படிக்கு
ஒரு மனிதன்
///ஆனால் தாயகம் வந்தால் வீடெல்லாம் இல்லை. எல்லாத்தையும் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்////
டீச்சர், சென்னையை விட பெங்களூர் பெட்டர்...இப்போ ட்ராபிக் பிரச்சினை கூட ரெண்டு இடத்துலயும் சமமாத்தான் இருக்கு...
சொல்லப்போனா பெங்களூர் ட்ராபிக் குறைஞ்சுட்டது இப்போ...
யோசியுங்க !!!!
நான் சென்னையில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் ஒருமுறை வலுபெறுகிறது
நன்றி
டோண்டு ஸார்,
உங்கள் தந்தையின் ஆசி உங்களுக்குப் பரிபூர்ணமாக உள்ளது. அதில் சந்தேகமே இல்லை.
உங்கள் வயது உண்மையிலேயே 62 தானா ? அல்லது 26ஆ ?
எங்களை வைத்து காமெடி கீமடி எதுவும் பண்ணலியே :-)
Post a Comment