விளையாட்டாக கூறப்பட்டது ஒரு துணுக்கு. அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் ஒரு நாள் பேப்பர் ஒன்றில் கீழ்க்கண்ட விளம்பரம் வந்ததாம். "இன்றுதான் கடைசி நாள் உங்களது ஒரு டாலரை செலுத்த. மாலை 5.30 க்கு மேல் கண்டிப்பாக பெற்று கொள்ளப்பட மாட்டாது. அதற்குள் ஒரு டாலரை செலுத்தி ரசீது பெற்று கொள்ளவும். கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்". அன்று மாலை வரை அந்த முகவரியில் ஒரே கூட்டமாம், தள்ளுமுள்ளாம். ஆறு மணி வரை திறந்து வைக்குமாறு கெஞ்சப்பட்டதாம். ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகி கரெக்டாக கல்லாவை மூடி விட்டு லட்சக் கணக்கான டாலர்களுடன் பஸ் ஏறி சென்றாராம். அடுத்த நாள்தான் எல்லோரும் யோசித்தார்களாம், எதற்கு இந்த ஒரு டாலர் என்று. யாருக்கும் விடை தெரியவில்லையாம். சரி ரொம்ப ஏமாறவில்லை என ஒவ்வொருவரும் ஆறுதல் கூறி கொண்டனராம்.
கலிஃபோர்னியா என்ன ஜுஜூபி? நம்ம ஊரிலே இதுக்கு மேலே ஏமாறுவாங்க தெரியுமா? காந்தப் படுக்கை விவகாரமா, சரி, குவெஸ்ட் நெட் தங்க நாணய விவகாரமா, ஓக்கே, என்றெல்லாம் சிரித்த முகத்துடன் சேருகின்றனர். திட்டங்களை துவக்கியவர்கள் அந்த சிரிப்பை கவர்ந்து கொண்டு பணம் போட்டவர்களுக்கு அல்வா தந்து விட்டு எஸ்கேப்.
"எடுத்தவன் மறைத்துக் கொண்டான், கொடுத்தவன் தெருவில் நின்றான்" என்று பாடிய கவியரசு கண்ணதாசனின் வார்த்தைகள் திரும்ப திரும்ப நிரூபணம் ஆகின்றனவே. ஆனால் அடுத்த இரண்டு வரிகளான "எடுத்தவன் கொடுக்க வைப்போம், கொடுத்தவன் எடுக்க வைப்போம்" ஒவ்வொரு முறையும் கனவாகவே போகின்றனவே.
இன்று விற்பனைக்கு வந்த ஜூனியர் விகடனில் (மே 11, 2008) வந்த "தங்க வேட்டையில் இலங்கை மர்மங்கள்" என்ற செய்திக் கட்டுரையைப் பார்த்தால் வயிறெரிகிறது. அடாடா, எதனை பேர் ஏமாந்துள்ளனர்? படித்தவர், படிக்காதவர் என்று வர்ஜாவர்ஜமில்லாமல் ஏமாந்தவர்கள் பட்டியல் நீளுகிறதே.
மல்டி லெவல் மார்க்கெட்டிங் பற்றி செல்வன் அவர்கள் 6.கோடிகளை குவிப்பது எப்படி? என்ற தலைப்பில் பதிவு போட்டிருக்கிறார். அதில் இத்திட்டத்தின் கணக்கு மோசடி தெளிவாக கணித முறையில் கூறப்பட்டுள்ளது. கீழே பார்க்கவும்:
அதாவது 5000 ரூ கட்டி உறுப்பினராக வேண்டும்.அதன்பின் நமக்கு கீழே 4 பேரை சேர்க்க வேண்டும்.உடனே நமக்கு அவர்கள் கட்டிய 20000ல் இருந்து ஒரு தொகை கிடைக்கும்.அதன்பின் அந்த 4 பேரும் தலைக்கு 4 பேரை பிடிக்க வேண்டும்.அந்த தொகையில் நமக்கும் ஒரு பங்கு வரும்.நாம் நியமித்தவர்களுக்கு கீழ் எத்தனை பேர் சேர்கிறார்களோ அத்தனை லாபம் நமக்கு கிடைக்கும்.இந்த முறையின் பெயர் MLM (Multi level marketing)என்பதாகும்.
ஒரு சின்ன கணக்கு போட்டதும் இது போகாத ஊருக்கு வழி என அப்போதே தெரிந்துவிட்டது.எப்படி சொல்கிறேன் என பாருங்கள்.
நான் (1)
எனக்கு கீழே நாலு பேர் (4)
அவர்களுக்கு கீழே 4 (16)
அவர்களுக்கு கீழே 4 (64)
இப்படி போகும் பிரமிட் எங்கே போகிறதென்று பாருங்கள்
1
4
16
64
256
1000
4000
16000
64000 (9வது ரவுண்டில் ஒரு நகரமே இந்த சங்கிலியில் இணையவேண்டும்)
240,000
10 லட்சம்
40 லட்சம்
1.6 கோடி
4 கோடி
16 கோடி
64 கோடி
240 கோடி
1000 கோடி
தியரிட்டகலாக பார்த்தால் 1 ரவுண்டில் ஒரு நபரோடு துவங்கிய ஆட்டம் 17வது ரவுண்டில் முழு உலகத்தில் வந்து நிற்கிறது.இத்தனை நபர்களை உறுப்பினராக சேர்ப்பது காரிய சாத்தியமே இல்லை.இந்த சங்கிலி 12 அல்லது 13வது ரவுண்டை தாண்டி வளராது.
இதெல்லாம் மக்களுக்கு தெரியாமல் இல்லை. என்ன, முதல் இரண்டு வரிசைக்குள் தாங்கள் வந்து விடலாம் என ஒவ்வொருவரும் மனப்பால் குடிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் புதிதாக வந்து ஒன்றும் தெரியாது ஏமாந்து போகும் அப்பாவிகள் தனி.
அது எப்படி தைரியமாக இந்த திட்டத்தை மறுபடி மறுபடி வேள்ளோட்டம் விடுகிறார்கள் என்று பார்த்தால், இதில் பல பெரிய புள்ளிகளின் தொடர்பு வெளியே தெரிய வருகிறது. இந்த குவெஸ்ட் நெட் தங்கக்காசு விவகாரத்தில் இந்தத் திட்டம் சட்ட விரோதமானது இல்லை என்று பிரபல் வழக்கறிஞர் நளினி சிதம்பரமே சான்றிதழ் கொடுத்துள்ளதாக செய்தி வருகிறது. அது உண்மையாக இருந்தால் நிலைமை ரொம்ப சீரியஸ்தான். விசாரணை செய்ய வேண்டும். ஆனால் சிதம்பரம் அவர்கள் நிதி மந்திரியாக நீடிக்கும் வரை இது சரியாக வருமா?
சோனாலி சமரசிங்கே என்பவர் 2006-ஆம் ஆண்டிலேயே லங்காலைப்ரரி.காம் வலைத்தளத்தில் இந்த நிறுவனத்தை பற்றி எழுதுகையில் இந்த விவகாரத்தை பொருளாதார சுனாமி என வர்ணித்துள்ளார். அதிலும் ஸ்ரீலங்காவின் பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் டோண்டு ராகவன் கூறுகிறேன். யாராவது உங்கள் நண்பர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் பற்றி ஆசை காட்டினால் அவர்களுக்கு காப்பி கூட கொடுக்காது விரட்டி அடித்து விடுங்கள். அதனால் அந்த நட்பே போனாலும் உங்களுக்கு லாபமே.
ரொம்ப சீரியசான இந்தப் பதிவை ஒரு லைட்டான மேட்டருடன் முடிக்கிறேன். மேலே குறிப்பிட்ட அதே செல்வன் பதிவில் வந்த பின்னூட்டத்தை இங்கே இடுகிறேன்.
சமீபத்தில் 1956ல் என் அன்னையின் தோழி ஒருவர் இம்மாதிரி ஒரு திட்டத்தில் தான் சேர்ந்து கொண்டு அவரையும் சேருமாறு படுத்தினார். என் தந்தை அதெல்லாம் நடக்காத காரியம் என்று விரட்டி விட்டார். பிறகு ஒரு நாள் என்னுடன் இது பற்றிப் பேசுகையில் தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை விளக்கினார்.
ஆனால் நீங்கள் சொல்வது போல கணக்கெல்லாம் போட்டு அல்ல. அவர் சிந்தனை தெளிவாக இருந்தது. இம்மாதிரி திட்டங்கள் பலவற்றை அவர் தன் சிறுவயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறார். அதில் வெகு சிலரே லாபம் அடைந்தனர் பலர் நஷ்டப்பட்டனர். அவருக்கு இரண்டில் எந்தக் குழுவிலும் இருக்க விருப்பமில்லை அவ்வளவே.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு மிகவும் பரிச்சயமான, ஆனால் நான் இதுவரை நேரில் சந்திக்காத ஒருவர் இந்தத் திட்டத்தில் ஒரு பணமும் போடாமல் ஆறே மணி நேரத்தில் 3600 ரூபாய் சம்பாதித்தார். எப்படி?
ஒரு பெரிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனிக்கு அமெரிக்கர் ஒருவர் ப்ரசெண்டேஷனுக்கு வந்த போது நான் குறிப்பிட்ட நபர் தேவைப்பட்டார். அவர்தான் மொழிபெயர்ப்பாளர் டோண்டு ராகவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
8 hours ago
14 comments:
Raghavan Sir,
You are right. Such schemes which are typically advertised as Once in a lifetime offers keep hitting markets every now and then. However there are few set of individuals who always make a good sum of profit through this leaving the rest who followed or who joined the scheme based on their advice or pressure. I have personally worked(for salary, for a short period of time)for one such MLM and was surprised to see one of the oldies in the who broke away from the chain and started his own MLM firm. The person who did is still rich but the rest have gone worst. This is a hightech fraud and no action has been taken on the owners so far (for that matter no action against anyone on financial irregularities). Great post!
PS: One request. Please translate the same to tamil if required. Sorry for typing in english.
Krishna
//மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு மிகவும் பரிச்சயமான, ஆனால் நான் இதுவரை நேரில் சந்திக்காத ஒருவர் இந்தத் திட்டத்தில் ஒரு பணமும் போடாமல் ஆறே மணி நேரத்தில் 3600 ரூபாய் சம்பாதித்தார். எப்படி? //
When there is a Gold rush. Sell spades.
This pyramid schemes are called Ponzi schemes after an infamous crook called Ponzi who developed pyramid schemes and cheated thousands.
//நான் டோண்டு ராகவன் கூறுகிறேன். யாராவது உங்கள் நண்பர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் பற்றி ஆசை காட்டினால் அவர்களுக்கு காப்பி கூட கொடுக்காது விரட்டி அடித்து விடுங்கள். அதனால் அந்த நட்பே போனாலும் உங்களுக்கு லாபமே//
எங்கள் அலுவலகத்தில் ஒரு மேலாளர் ஒருவர் இந்த கோல்ட் க்வெஸ்ட் திட்டத்தில் சேருமாறு தனக்கு கீழே பணியாற்றுபவர்களை தொடர்ந்து நிர்பந்தம் செய்து வந்தார்...
கடைசியில் அவருக்கு கிடைத்தது தங்க காசுகள் அல்ல...பணிநீக்க உத்தரவு...
அன்புடன்
அரவிந்தன்
ராகவன் சார்
சரியாக சொன்னீர்கள்.
அமரிக்காவிலும் ஆம்வே என்ற MLM scam இருக்கிறது இதில் ஈடுபடும் பெறும்பானோர்கள் யார் தெரியுமா ?
இந்தியர்கள்...
These so called MLM people have regular meeting at some hotel and brainwash people promising them with riches beyond imagination. They target the 'greed' in a person. Nowadays I am scared and skeptical at desis smiling at me in desi store or on road.
Thanks to these scam companies.
வணக்கம் சார், நல்ல தரமான பதிவு.
ஒரு 10 மாதங்களுக்கு முன்னாடி சென்னையில் இருந்தப்ப சில நண்பர்கள் தூரத்தில் வருவது தெரிந்தாலே நாங்கல்லாம் தெறிச்சு ஓடுவோம். கையில் எதோ பேப்பர் வச்சுகிட்டு கதை விடுவானுங்க.. நான் உடனே " நிறுத்து இந்த ஸ்கீம்கு எவ்வளவு காசு அதை சொல்லுன்னுவன், மச்சான் என்கிட்ட இப்ப காசு இல்லை அதனாலே நீயே போட்டு என்னை உன் கீழ சேர்துக்க எப்படியும் நீ சொல்றத பார்த்தா நான் 2 மாசத்துல பெரிய லட்சாதிபதியா ஆயிடுவன் அப்ப அந்த பத்தாயிரத்தை வாங்கிக்க அப்ப்டின்னுவன் " அப்புறம் நம்மகிட்ட இந்த கதைய எடுத்துகிட்டு வருவானுங்கன்றீங்க.
எதுக்கு இதை சொல்ரன்ன இதில் நம்மை சேர்கவரும் மக்கள் பாவம் எதோ ப்ரெஷர்ல ( நண்பன், சொந்தகாரன் அல்லது அலுவலக அதிகாரி ) இதுக்குள்ள தலைய கொடுத்துருப்பானுங்க, நிறைய சமயங்களில் தங்கமணிங்களால் மாட்டியிருப்பானுங்க (நாட்டுல அவன் அவன் எப்படி பொழைக்கறான் பாருங்க எனக்குன்னு வந்து வாச்சுருக்க ஒண்ணுத்துக்கும் உதவாதது (காசு தொலைஞ்ச பிறகும் உங்களுக்கு இதே வாயால வேற மாதிரி அர்ச்சனை உண்டு )).
தமிழனின் ஸ்பெஷல் பண்பான (பாசகார பயலுக நம்மளை விட்டுட்டு சாவமாட்டனுங்க) அடுத்தவனையும் மாட்டிவிடும் குணத்தாலதான் வெறியோடு அலையரானுங்க. அதனால அவங்களை மன்னிச்சு விட்டுடலாம் டோன்டு சார். அவர்களை தனிமை படுத்தவேண்டாமே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அந்த ஸ்கீமுக்கு ஆமென் போடும் வரை அவர்களுக்கே தெரியாத மனிதர்கள்தானே இவர்கள்.
இந்த மாதிரி அலுவலகத்தில் வேலை பார்பவர்களை கேட்டு பாருங்கள் பல கதைகள் வரும். முக்கியமாக உள்ளூர் பெரும்தலைகளின் ஆதரவு இல்லாமல் இதை 1 வாரம்கூட நடத்தமுடியாது.
இன்னும் அந்த கோல்ட் க்வெஸ்ட் சென்னையில இருக்கானா இல்லை கடையை இங்க மூடிட்டு வேற எங்கனா திறக்க போயிட்டானா. டோண்டு சார் இந்த திட்டத்துல ஒண்ணு கவனிச்சீங்கனா ஒரு டைம்ல இவங்க கைது செய்யபடுவார்கள் பத்திரிகைகளில் செய்தி வரும் ஆனால் ஒருவரும் தண்டிக்கபட மாட்டார்கள் அது எப்ப நமக்கு தெரியும்னா அதே பய வேற ஊர்ல (சில சமயங்களில் வேறு நாட்டில்) மீண்டும் ஆரம்பிப்பான் பாருங்க அட இது அவன் இல்லை அப்படின்னு நமக்கு தெரியும்.
Wisdom yields better fruit than money
சரவணன்
அகில உலகத்துல, இந்தியன விட (முக்கியமா தமிழன) பறக்கா வட்டி இருக்கவே முடியாது... சும்மா கொடுத்தா பீ திங்குற ஜாதி...அதுவும் இப்படி ஒருத்தன் மாட்டினான்னா MLM மாதிரி ஆட்கள்.. ஓட்ட உறிஞ்சி எடுத்துடுவானுங்க.. ஏற்கனவே அதிக வட்டிக்கு ஆசை பட்டு சிட்-பண்ட நிறுவனங்கள் கிட்ட ஏமாந்த கதை தெரிஞ்சும், ஜனங்க திருந்தவே இல்லையே !!!
நல்ல விழிப்புணர்வு ப்ளோக்.. பாராட்டுகள் டோண்டு சார்..
ஆஸ்திரேலியாவிலிருந்து அன்புடன் வெங்கி..
// மெட்ராஸ்காரன் said...
However there are few set of individuals who always make a good sum of profit through this //
அண்ணா மெட்ராஸ்கார அண்ணா வணக்கம் நானும் மெட்ராஸ்காரந்தான்.
ஃபர்ஸ்ட் நக்கல்..:-) நீங்க இங்கிலிபீசுல சொன்னா மாரி நானும் இங்கிலிபீசுலியே சொல்ரன்.
are you telling that early bird gets the warms, first understand onething here the general public are always the loosers not winners. so i could reply you that
"its the early warms that get caught by birds". :-)
அடுத்து நெசம் என்னன்னா..இத இத சொல்லித்தானய்யா மாலிஷ் பண்ராங்க.. நாம் அசரும்போது அன்னியன் படம் மாதிரி சிக்கன் மசாலா உடம்பெல்லாம் தடவி ப்ரை பண்ரானுங்க. டோண்டு சார் இதுல உள்ளூர் மட்டும் இல்லாம இணையம் வழியா வெளிநாட்டுல இருந்தெல்லம் நடக்குது இதற்கு மெயின் பலி சாப்ட்வேர் மக்கள் அவனுங்க அன்டர்வேர் கழட்டுனதும் வெளிய சொல்லமுடியாம சைலன்டா இருப்பானுங்க. (just 40,000 bugs doesnt make much change)
ஒரு முறை எங்க டீம் லீட் ( அது ஒரு பெண் ஆணியவாதிகள் ஃபிகர் என்று படிக்கலாம் ) ஒரு அரை மணி நேரம் ஒரு வெளிநாட்டு ஸ்கீம் ( அய்யா ரூ 40,000 கேக்கறாங்க சாமியோவ் ) ஒரு மலையாளத்தான்கிட்ட விளக்கி தள்ளினா 'யூ டோன்ட் ஹேவ் டு வொர்ரி யூ வில் கெட் வாட்ச் வொர்த் ஆஃப் 25 தவுசன்ட்' (இந்த பொண்ணுங்களுக்கு ஒரு நெனப்பு இங்க்லீஷ்ல பேசுனா கவுத்துடலாம்னு) . நம்ம ஆளு இந்த வாட்ச் உண்மையில அவ்வளவு விலையா வேணும்னா என்னோடதை நீங்க பத்தாயிரத்துக்கு எடுத்துகங்கனு முழு கை சட்டையை மடிச்சு அந்த வாட்ச்ச காமிச்சான்.
அப்புறம் நோட் பண்ணி பார்தா நெறய பேரு 25,000 ரூபா வாட்ச் கட்டி இருக்கானுங்க நம்ம ஆஃபிசுல அப்புறம் பார்கும்போதெல்லாம் ROTFL :-)))))
சரவணன்
டோண்டு சார் காலை வணக்கம் நான் ரெண்டு கமெண்ட் போட்டுர்க்கன் சார் இன்னும் வரவில்லை சீக்கிரம் துயில் நீக்கி துயர் துடைக்க வாருங்கள்
சரவணன்
டோண்டு சார்
இந்த கருமத்தை போய் படிங்க, குறிப்பா பின்னூட்டம் பாருங்க
http://www.dailynews365.com/national-news/goldquestquestnet-faces-more-fraud-complaints-in-chennai/
அதில முதல் ரெண்டு கமெண்டும் சார்பா போட்டு இருக்காங்க. அதில ஒரு கமெண்ட் இங்க ஒட்டியிருக்கன் பாருங்க
//
#2
Never do MLM in india, INDIA is unfit for MLM.
My kind advice never do MLM in India.
People never know how to do MLm, they tell chain marketing and people catching business.
Juss close all operations in India and leave to malaysia best place to do MLM.
people only spend to eat , buy land and sleep well i na house, and earn working in a firm.
If u want to earn more do MLM but NOT IN INDIA.
//
ஆடு சார்பாவே பேசிட்டு இருந்தா எப்படி ஒரு ஓணாய் எப்படி அழுகுதுன்னு பாருங்க. இவர்களை என்ன செய்யலாம்னு சொல்லுங்க.
சரவணன்
நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு.
அதிலும் சரவணணின் பின்னூட்டங்கள் படிச்சுச் சிரிக்க ஆரம்பிச்சவ இன்னும் நிறுத்தலை:-)))))
தூள் சரவணன்:-)))
சும்மாவே நான் குரங்காட்டம் ஆடுவேன் இது மாதிரி ஏத்தி விட்டீங்கினா கள்ளுண்ட மந்திதான் போங்க, எனிவே ரொம்ப தேங்க்ஸ் மேடம்.
சரவணன்
//எத்தனை முறைதான் ஏமாந்து கொண்டே இருப்பீர்கள் மக்களே?"//
mlm வகையில் முதலில் "modi care" UththikkoNdathu.பிறகு காந்தப் படுக்கை,இப்போ கோல்ட் காயின்.இவர்கள் திருந்த எத்தனை பதிவு போட்டாலும் தாங்காது சார்.
கவர்ச்சிகரமான வட்டி ஆசையில் தங்கள் சேமிப்பை தொலைத்தவர்கள் தான் இந்த அதி மேதாவிகள்.எத்தனை ஹர்சத் மேத்தாக்கள் வந்தாலும் வழிவார்காள் இந்த பேராசைக் காரர்கள்.
1 ரூபாய் கட்டினால் 15 நாளில் 3 ரூபாய் பொருள் கொடுப்பதாக அறிவித்தால் தாலியை கூட அடகு வைத்து பனம் கட்டும் அப்பாவிகள் (ஏமாளிகள்)உங்களின் பதிவு பார்த்தாவது திருந்தினால் நல்லது.
ஐயா, தற்பொழுது ஹ்ஹ் . என்றொரு விஷயம் வந்துள்ளது, ஏதோ உடல் எடை குறைக்கும் பொடியாம்.. ஒன்று விற்றால் (ரூ.1360.). 25% லாபமாம்.. சென்னையில் நன்றாக வேரூன்றி விட்டது, ஏதோ சன்பிளவர் மெத்தட் என்கிறார்கள், இது இப்பொழுது கோவையில் வேகமாக பரவி வருகிறது. இதைப்ப்ற்றி மேலும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் எனது நண்பர்களின் தொல்லை தாங்க வில்லை..
Post a Comment