உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டீர்களானால் போகிறவன் வருகிறவன் எல்லோரும் உங்களை குதிரையேறத்தான் செய்வார்கள். இதை ஒரு போதும் மறக்கலாகாது. அதுவும் தொழில் முறையில் செயல்பட்டு பணம் ஈட்டுபவர்கள் அதை மறக்கவே கூடாது. இப்பதிவின் நோக்கம் என்ன என சிலர் கேட்க முற்படலாம். ஆகவே விளக்குகிறேன்.
சாரு நிவேதிதாவின் பல எழுத்துக்கள் அவர் ஏற்கனவேயே பல முறை சொன்னதாகத்தான் இருக்கும். தன்னை ஒண்ணுமே தெரியாத பாப்பா ரேஞ்சுக்கு வைத்துக் கொண்டு உதார் விடுவதும், மற்றவர்கள் அதை நம்புவார்கள் என நம்புவது போல காட்டிக் கொள்வதும் பல முறை நகைச்சுவையாகவே இருக்கும்.
உதாரணத்து அவரது இந்த லேட்டஸ்ட் பதிவையே எடுத்துக் கொள்வோம். அதில் தன்னை லயோலா கல்லூரிக்கு பேச அழைத்துவிட்டு வெறுமனே சாம்பார் சாதம் கொடுத்து அனுப்பி விட்டார்கள் என பிரலாபித்திருக்கிறார். அதிலிருந்து சில வரிகள்.
சமீபத்தில் நான் லொயோலா கல்லூரிக்கு சில தடவைகள் சென்று வந்த அனுபவத்தைச் சொல்ல வேண்டும். ஒரு தடவை கூட லொயோலா நிறுவனம் நான் அங்கே சென்று உரை நிகழ்த்துவதற்குப் பணம் கொடுத்ததில்லை. சென்ற வாரம் நான் அங்கே ஊடகத்துறை நண்பர்களால் அழைக்கப் பட்டிருந்தேன்.
அது ஒரு திரைக்கதைப் போட்டி. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி. கடைசிச் சுற்றுக்கு இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த, திருமாவளவன் மற்றும் நான் ஆகிய நால்வர் நீதிபதிகள். காலை ஒன்பது மணிக்கே கிளம்பி விட்டேன். அங்கே பத்து மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை சிறந்த திரைக்கதைக்கான போட்டி நடைபெற்றது. இரண்டரை மணிக்குக் கிளம்பும்போது கொஞ்சம் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார்கள்.
ஆக மொத்தம் எனக்கு ஆறு மணி நேரமும் நூறு ரூபாயும் செலவு. வீட்டிலிருந்து லொயோலாவுக்கு ஆட்டோ செலவு 100 ரூ.
லொயோலோ கல்லூரியில் அழைத்தால் அங்கே சென்று வருவது பாக்யராஜ் போன்ற ’முருங்கைக்காய்’ இயக்குனர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாமே தவிர எனக்கு அது பெருமை அல்ல. லொயோலா கல்லூரிக்குச் செல்வதால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை. என்னுடைய இலக்கும் நோக்கமும் வேறு. மேலும், 24 மணி நேரமும் நான் இலவசமாகவே பணி புரிய வேண்டுமென்றால் நான் எப்படி பூவா சாப்பிடுவது? லொயோலா கல்லூரியில் மாணவர்களுக்கு இலவசமாகவா கல்வி தரப் படுகிறது? கல்லூரிகள் என்றாலே அதன் கணக்கு வழக்குகள் கோடிகளில்தானே நடந்து கொண்டிருக்கின்றன? எத்தனையோ லட்சங்களை செலவு செய்தல்லவா ஒரு பட்டப்படிப்பை முடிக்க வேண்டியிருக்கிறது? அவ்வளவு ஏன், பல ஏக்கர்களில் பரந்து கிடக்கும் பிரம்மாண்டமான லொயோலா கல்லூரியைச் சுத்தப்படுத்துவதற்கும், பராமரிப்பதற்குமே மாதம் லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்குமே? அப்படியிருக்கும் போது என் போன்ற எழுத்தாளர்களை மட்டும் ஓசியில் வேலை வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?
எழுத்தாளன் என்றால் அவ்வளவு மலிவாகப் போய் விட்டதா? எல்லாவற்றுக்கும் லட்சங்களில் விலை; எழுத்தாளன் என்றால் மட்டும் ஓசி ஃபக்கிங்? ஒரு பிரபல சினிமா பாடலாசிரியர் ஒரு விழாவில் கலந்து கொள்ள வாங்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் ரூபாய். அதுவும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை. ஜவுளிக் கடை திறப்பு விழா போன்றவற்றுக்கு மூன்று லட்சம்.
என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார். அவர் ஒரு பிரசுரகர்த்தர். பத்திரிகையாளர். கவிஞர். இரவு முழுவதும் வேலை செய்து விட்டு, காலையில் இரண்டு மணி நேரமே தூங்கி விட்டு மீண்டும் எழுந்து வேலை செய்து மதியம் இரண்டு மணிக்கு முடித்திருக்கிறார். அப்போது பார்த்து ஒரு வாசகர் கவிஞரிடம் முன்கூட்டியே சொல்லக் கூட இல்லாமல் போய் உட்கார்ந்து கொண்டு மாலை நான்கரை மணி வரை பிளேடு போட்டிருக்கிறார். அதுவும் எப்படி? இந்த வாசகர் தன் வாழ்நாளிலேயே ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறார். அப்படிப்பட்டவர், கவிஞருக்கு முன்னால் சரிக்கு சரியாக உட்கார்ந்து கொண்டு கவிஞருக்கு சமூகவியல், உலக அரசியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றில் பாடம் எடுக்கிறார். அந்த இரண்டரை மணி நேரமும் கவிஞரைப் பேசவே விடவில்லை. குறுக்கே புகுந்து பேசினாலும் அதை அறுத்துக் கொண்டு பேசுகிறார். பேச்செல்லாம் பிளாட்ஃபாரங்களிலும் டீக்கடைக்களிலும் பேசப்படும் அரைவேக்காட்டுப் பேச்சு.
ஒரு மருத்துவ நிபுணரிடம் ஐந்து நிமிடம் பேசுவதற்கு மூன்று மணி நேரம் காத்திருந்து 500 ரூ. கன்ஸல்டேஷன் கட்டணம் கொடுத்துப் பார்க்கிறார்கள் அல்லவா? அப்படியிருக்கும் போது எழுத்தாளனை மட்டும் ஏன் இப்படி ஓசியிலேயே —— நினைக்கிறார்கள்?
நான் கவிஞரைத்தான் திட்டினேன், ஏன் இந்த மடையர்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்று. இந்த விஷயத்தில் எனக்கு தர்மு சிவராமுவை ரொம்பப் பிடிக்கும். ஒரு நிமிடம் கூடப் பொறுக்க மாட்டார். கடுமையாக அவமானப்படுத்தி அனுப்பி விடுவார். நான் அந்த அளவுக்குப் போவதில்லை. இப்படிப்பட்ட ஓசி ஓலுக்கு இடம் தர மாட்டேன்.
அதுவும் கடைசி வரிதான் டாப். இப்படிப்பட்ட ஓசி ஓலுக்கு எல்லாம் இடம் தரமாட்டாராம். பிறகு என்ன பிரச்சினை. ஒரு வேளை அதற்கு சற்றே குறைச்ச அளவில்தான் ஓசி ஓலுக்கு இடம் தருவாராக இருக்கும் என நினைக்கிறேன்.
இப்படித்தான் விஜய் டீவி நீயா நானா நிகழ்ச்சிக்கு அவர் போன கதையை எழுதி பிரலாபித்திருந்தார். அது பற்றி நான் போட்ட பதிவு வாடிக்கையாளரை அணுகும் முறை - 11 இதோ. அதிலிருந்து சில வரிகள்.
இதெல்லாம் ஏன் நடந்தன. என்ன ஏது என்பதை முதலில் பேசிக் கொள்ளாது நிகழ்ச்சிக்கு சென்றது சாருவின் தவறு.
//ஒருவேளை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் இலவச சேவையே செய்கிறார் போலிருக்கிறது என்று அதை விட்டுவிட்டேன்.//
கோபிநாத்தையும் சாரு தன்னை மாதிரி இளிச்சவாயராக நினைத்து கொண்டது முதல் தவறு. சரி, பிறகு ஏன் போனாராம்? டி.வி.யில் முகம் காட்டும் ஆசைதான் வேறென்ன? அப்ப்டியானால் அதுதான் உனக்கு கூலி என்று விஜய் டிவியினர் சொல்லாமல் சொல்லி செயலில் கட்டியுள்ளனர் என்பதே நிஜம். அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால் வேறு ஏதாவது படைப்புகள் செய்திருப்பாரா? இக்கேள்விக்கு சாருதான் பதில் சொல்ல வேண்டும். எனது ஊகம் முழுதும் சரியானதாக இருக்கலாம் என்றாலும் அதை நான் இங்கே கூறுவது முறையல்ல. :))
மீடியேட்டரை விடுங்கள். அவரை எல்லோருமே விட்டுக் கொடுத்து விட்டனர். அவரைக் கேட்டால் வேறு ஏதாவது கதை சொல்வாராக இருக்கும்.
தயாரிப்பாளர் ஆண்டனி கூறுவதை பார்ப்போம்.
முதலில் கூறுகிறார், பணம் தருவது இல்லை என்று. பிறகு கூறுகிறார் பணப்பட்டுவாடா சுந்தரராஜன் மூலம் நடப்பதாக. என்ன முரணான பேச்சு, ஒரே பாராவில். பிறகு கூறுகிறார் நளினி ஜமீலாவுக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்ததாக. ஐயோ உள்ளமே உருகி விட்டது, இந்த கேழ்வரகிலிருந்து நெய் வடியும் பேச்சைக் கேட்டு. சரி ஒரு வாதத்துக்கே வைத்து கொள்வோமே, மீடியேட்டர் ஏமாற்றினார் என்று. அவரை நியமித்து, பிறகு என்ன நடக்கிறது என்ற கண்ட்ரோல் இல்லாமல் இந்த மனிதர் இருந்திருக்கிறார். இவரெல்லாம் தயாரிப்பாளராம். யார் காதில் ஐயா பூ சுற்றுகிறார் இவர்?
ஆக, மேலே உள்ள விஷயத்தில் எல்லோருமே முழு உண்மையைக் கூறவில்லை. இப்போது சாருவுக்கு பணம் வருமா என்பது என் கவலையில்லை. அது அவர் பாடு, விஜய் டி.வி.யின் பாடு. இதெல்லாம் ஏன் நடந்தன என்பதை இப்போது பார்ப்போம்.
இந்த கூத்தேல்லாம் நடந்து முடிந்தபிறகு மீன் டும் சாரு விஜய் டீவியின் அதே நீயா நானா நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார். அது பர்றி நான் எனது மேலே சொன்ன பதிவிலியே இட்ட பிற்சேர்க்கை பின்னூட்டம்:
dondu(#11168674346665545885) said...
ஒரு அப்டேட்:
மீண்டும் நீயா நானா நிகழ்ச்சிக்கு சாரு செல்கிறார். பார்க்க: http://charuonline.com/Jan2010/arivippu.html
அவருக்கு நான் இட்ட மின்னஞ்சல் கீழே:
அன்புள்ள சாரு,
மகிழ்ச்சி. பேமெண்ட் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்ததா? அரியர்ஸ் கிடைத்ததா?
இது சம்பந்தமாக நான் இட்ட பதிவு இதோ:
January 17, 2010 8:29 AM
அந்த மின்னஞ்சலுக்கு பதில் இதுவரை இல்லை. சாருவின் அந்தப் பதிவும் இல்லை. அழிக்கப்பட்டு விட்டது போலிருக்கிறது.
இந்த லயோலா கல்லூரி விவகாரத்தையே எடுத்து கொள்ளுங்கள். ஊடகத்துறை நண்பர்கள் கூப்பிட்டதாக கூறுகிறார். அதற்கு லயோலா கல்லூரி நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்? இவ்வளவு கசப்பான அனுபவங்கள் பெற்றிருப்பவர் முதலில் அதைத்தானே ஊர்ஜிதம் செய்திருக்க வேண்டும். இவர் பணம் கேட்டிருந்தால் இவரை கூப்பிட்டிருக்கவே மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். அது அவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே போய் விடுவோம், பிறகு கேட்டுப் பார்ப்போம் என அவர் செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதான். ஒரு தொழில்காரன் ஒரு சமயத்திலும் செய்யக் கூடாதது. ஆனால் அதைத்தான் அவர் திரும்பத் திரும்பச் செய்கிறார்.
உப்பு புளி செலவுகளுக்கும் நண்பன் கையை எதிர்பார்க்கும் நிலையில் தன்னை வைத்திருப்பவரின் சுயமரியாதை பர்றி என்ன கூற இயலும். எனது கேள்விபதில் பதிவு ஒன்றில் வந்த ஒரு கேள்வியும் அதன் பதிலும் கீழே:
எம். கண்ணன்
9. ஜெயமோகன் ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, கனடா சென்றாலும் சரி, அமெரிக்கா சென்றாலும் சரி - நாடு முழுவதும் சுற்றிக் காட்ட, விருந்தோமல் செய்ய பல வாசகர்கள், நண்பர்கள் செய்கிறார்கள். ஆனால் பலமுறை கேட்டு, வேண்டுகோள் விடுத்தும் சாருவை யாரும் எங்கும் கூப்பிட்டு (வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழகத்துக்குள்ளேயே வசிப்பவர்கள் கூட) விருந்தோம்புவது இல்லையே? ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: மடிப்பாக்கத்தில் வசிக்கும் எனது எழுத்தாளர் நண்பர் வீட்டுக்கு அமெரிக்கவாழ் பதிவர் ஒருவருடன் சென்றிருந்தேன். அப்போது அவர் சாரு பற்றி பேசும்போது, அவருடன் ஒரு அளவுக்குள் பழக வேண்டும் என கூறினார். கடன் கேட்டுவிடுவார் என்றார்.
அவருடைய வலைத்தளத்திலேயே பார்க்கலாமே, தனது வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு அதற்கு பணம் அனுப்புமாறு கேட்டு கொள்கிறார். அப்படி பெறும் பணத்தை ரொம்ப காஸ்ட்லி பார்களில் குடிக்கத்தான் பயன்படுத்துகிறார் என்பதையும் அவ்வப்போது எழுதி வருகிறார். இந்த விஷயங்களெல்லாம் படிப்பவர் மனதில் ஓர் அவெர்ஷனை உருவாக்கிவிடுகிறது.
இவையெல்லாம் ஜெயமோகன் விஷயத்தில் மிஸ்ஸிங். தனது தினசரி தேவைகளுக்கு அவர் யாரிடமும் கையேந்துவதில்லை, அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவரது எழுத்துக்களில் சுய இரக்கம் கிடையாது. ஆகவேதான் அவரை அழைக்க ஆட்கள் அனேகம் உண்டு. நன்றாக வேறு அவர் எழுதுகிறார் என்பது கூடுதல் போனஸ்.
பை தி வே, இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை அவர் தருவதில்லை. ஓக்கே, அதுவே ஒரு முன்னேற்றம்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
6 hours ago
28 comments:
Respected sir, why this unnecessarily.
இங்கே சுய மரியாதை என்ற வார்த்தை எப்போதுமே தவறாகத் தான் பயன்படுத்த, புரிந்துகொள்ளப் படுகிறது!
அகிலன், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களை சுய மரியாதை என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொள்ள முடியும்!
அரசியல் ரீதியாக, இந்த வார்த்தைக்கு ஒருவனுடைய சுயமரியாதை என்பது இன்னொருவனை இழிவு படுத்துவதுதான் என்ற மாதிரியே தொடர்ந்து கற்பிக்கப் பட்டு, கடைப் பிடிக்கப்பட்டும் வருகிறது.
சாரு நிவேதிதாவை இரண்டிலும் சேர்க்க முடியாது! வெறும் காமெடிப் பீஸ்!
தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்டு, சலங்கையைக் கட்டிக் கொண்டு ஆடிக் காசு கேட்கிற ரகம்!
//இப்படிப்பட்ட ஓசி ஓலுக்கு இடம் தர மாட்டேன்.//
என்ன அர்த்தம் ? விபசார சொல்லாக தெரிகிறேதே?
தன்னை தனே தரம் தழ்த்தி கொள்ளும் செயல்
சார்,
தொந்தரவு செய்வதாக நினைக்க வேண்டாம். நான் பின்னூட்டமிடும் போது எனது பிளாகர் ஐடி எண்ணுடன் சேர்த்து எனது பெயர் தெரிய என்ன செய்ய வேண்டும்.தங்களின் உதவி தேவை.உங்களது பின்னூட்டங்களில் மட்டும்தான் பிளாகர் ஐடி பார்க்கிறேன்.எனவேதான், தங்களிடம் இந்த ஆலோசனை..
//பை தி வே, இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை அவர் தருவதில்லை. ஓக்கே, அதுவே ஒரு முன்னேற்றம்தான்.//
Charuonline.com is a not-for-profit site operated for and powered by Charu’s fans worldwide through donations. Giving you access to Charu’s writings 24/7 is what we strive for and we appreciate your donations to keep this site up and running. Thanks to all the patrons who have supported us in the past, looking forward to your support in the future too.
Donations can be made via
ICICI account No. 602601 505045
Name: K. ARIVAZHAGAN
T. Nagar Branch, Chennai
http://charuonline.com/blog/?page_id=184
@rk
Dashboard>Edit my profile>user name>change it to rk(#07450873524311473151) and save changes.
Preferably enable your photo or any image of your choice.
Good luck.
Regards,
N. Raghavan
டோண்டு அய்யா...
அவரின் வெந்த புண்ணில் நீர் வேறு வேல் பாய்ச்சாமல் இருமய்யா...
சாரு ஒரு பெரியாரிஸ்ட் தெரியாதா!?
@வால்பையன்
அது பெரியாருக்கு தெரியுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
என்ன அர்த்தம் ? விபசார சொல்லாக தெரிகிறேதே?
தன்னை தனே தரம் தழ்த்தி கொள்ளும் செயல்
//
நீங்க கஷ்டப்பட்டு வலைத்தளம் எல்லாம் நடத்திக்கொடுக்கும் சாரு தன் திருவாய்மலர்ந்தருளிய சொற்கள் தான் அவை.
அந்த வலைப்பக்கத்திலேயே நிறைய இடங்களில் ஓசி___, ஓசிஃபக்கிங்க், ஓசி ஓலு, போன்ற விபச்சாரச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அதை எடிட் செய்வதற்கு முன் பார்த்துக்கொள்ளுங்கள்.
நிற்க,
ஓசியில்_____செய்தால் அது விபச்சாரம் அல்ல. ___செய்துவிட்டு பணம் வாங்குவத் தான் விபச்சாரம்.
ரொம்ப நீளமான பதிவு. லயோலா கல்லூரி பற்றி எழுதியதைப் பற்றி மட்டுமே படித்தேன். அதையொட்டியே என் பின்னூட்டமும்.
வழக்கம்போல எதிர்கருத்துதான். கோபம் வரும். அனானி காமென்டு வழக்கம்போல போடுவார். பரவாயில்லை.
ஒரு சமயம், மதிப்புக்குரிய எழுத்தாளர் திருபுரசுந்தரி குமுதம் பேட்டியில் புஷ்பா தங்கதுரையிடம் (வேணுகோபாலன்) சொன்னார்:
‘எழுத்தாளர்கள் பலர் எழுத்தையே தொழிலாளகக்கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால் மற்றவர்கள் அனைவரும் அவர்களிடம் ஓசியிலெயே எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள். எத்தனை புத்தகங்களைத்தான் காம்பளிமென்ட் ஆக கொடுக்கிறது? என்வே, திருமணப்பரிசாக புத்தகங்கள் வழங்குவது நம்மிடையே பழக்கமாக வேண்டும்.”
அனைத்து எழுத்தாளர்களின் அங்கலாய்ப்பு இதுதான். ஒருவேளை, சில எழுத்தாளர்களின் மார்கெட்டிங்கை திறமைசாலிகள் பார்த்து, அவரை பொருளாதாரக்கவலை இல்லாதவராக்கும்போது, அவர் இப்படி அங்கலாய்ப்பதில்லை.
சாருவின் லயோலா கல்லூரி விமர்சனம் சாலப்பொருத்தம். ஒரு நடிகை லட்சங்கள் கொடுக்காமல், ஜவுளிக்கடைக்கு அழைக்கமுடியாது.
எழுத்தாளனுக்கு ஒன்றுமே இல்லை. எல்லாரும் ஓசியில் மேயப்பார்க்கிறார்கள்.
சாரு கொடுத்த விலாசல் லயோலாவுக்கு உரைத்தால் நல்லது.
டோண்டுவின் பார்வை விசித்திரமானது. அதற்கென்று ஒரு எல்லையிருக்கிறது. அதை எதிர்பார்த்துதான் நான் இங்கு வருகிறேன்.
எனினும், டோண்டு பாராட்டுக்குரியவர். சாரு போன்றோரைப்பற்றி எழுத மற்றவருக்கு தெரிகிறது எல்லாமே. He is indirectly helping people like me to know about Charu, the writer.
எழுத்தாளனுக்கு self pity இருக்க்கூடாதென ஆர் டோண்டுவுக்கு சொன்னது?
//
சாரு கொடுத்த விலாசல் லயோலாவுக்கு உரைத்தால் நல்லது.
//
சாரு வெலாசினாராக்கும்...ஓசியில ___வாங்கிட்டு வந்திருக்காரு...அவரப்பாத்து "ரொம்ப நல்லவருன்னு" சொல்லி இப்படி உசுப்பேத்திவுடுறதுக்குன்னே சில பேரு இருக்காய்ங்கப்பு.
இன்னுமாய்யா உங்களையெல்லாம் சாரு நம்பிகிட்டுருக்காரு ?
ஜெயமோகன் விஷயத்தில் மிஸ்ஸிங். தனது தினசரி தேவைகளுக்கு அவர் யாரிடமும் கையேந்துவதில்லை, அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவரது எழுத்துக்களில் சுய இரக்கம் கிடையாது. ஆகவேதான் அவரை அழைக்க ஆட்கள் அனேகம் உண்டு. நன்றாக வேறு அவர் எழுதுகிறார் என்பது கூடுதல் போனஸ்.
//
உண்மையான கருத்துக்கள் சார்...
//அவரப்பாத்து "ரொம்ப நல்லவருன்னு" //
எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்பதை ஆராய்வது என் நோக்கமல்ல.
எழுத்தாளன் என்பவனை என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்வான் என்ற மன நிலை பலருக்கு இருக்கிறது. எழுத்து என்பது தொழிலல்ல; அஃது ஒரு வெட்டித்தனம் என்பது பொதுவான கருத்தாக இருக்கின்ற்படியால், நன்கு படித்தவர்க்ளும் எழுத்தாளனை மதிப்ப்தில்லை. இங்கு கல்வி போதிக்க வேண்டிய ஒரு புக்ழ்பெற்ற நிறுவனமே இப்படித்தரக்குறைவான தவறான் செயலைச்செய்கிற்து.
இங்கு சாரு எழுதினார் என்பதை விட, லயோலா கல்லூர் இப்படிச்செய்ய்லமா என்பதே கேள்வி.
எழுத்தாளர்கள் எப்படி நடாத்தப்படுகிறார்கள் என்பதை வைத்து ஒரு மக்களின் கலாச்சாரத்தை எடைபோடலாம்.
அவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டால், அல்லது அவர்க்ள் சமூகத்தின் beasts of burden என நினைக்கப்பட்டால், அச்சமூகம் ஒரு philistine society.
Philistine society ஐ தமிழில் பெயர்க்கவேண்டுமே! இது டோண்டுவின் பதிவல்லவா?
Philistine society என்றால் அச்சமூகத்தில் மக்கள், பாரதியின் சொல்லில்,
’சோத்தால் அடித்த பிண்டங்கள்.’
இந்த பிண்டங்களை சொல்லால் அடிப்பது பாரதியாரின் பொழுதுபோக்குகளில் ஒன்று.
எதை எடுத்தாலும் அரசியலாக்கி திருப்திபட்டுக்கொள்பவர்களுக்கு நான் எழுதும் இக்கருத்துகள் எல்லாம் புரிவதில்லை.
(அனானி பின்னூட்டங்களை இன்னும் காணேமே? ஒருவேளை சரியாக எழுதித் தொலைத்து விட்டேனோ?)
Jo Amalan Rayen Fernando said...
//இங்கு சாரு எழுதினார் என்பதை விட, லயோலா கல்லூர் இப்படிச்செய்ய்லமா என்பதே கேள்வி.//
இதற்கு பெயர் தான்"திசை திருப்புதல்"
பிரச்னை என்னவென்றால் ...
உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டீர்களானால் போகிறவன் வருகிறவன் எல்லோரும் உங்களை குதிரையேறத்தான் செய்வார்கள்.
டோண்டு ஐயா,
பொதுவாக ஒரு முக்கியஸ்தர்களை அழைத்தால் Honorarium
அளிக்க வேண்டும். பிக் அப் மற்றும் ட்ராப் செய்ய வேண்டும்.
உதவிக்கு ஒருவரை அவருடன் இருக்குமாறு செய்ய வேண்டும். இது
பொதுவான நடைமுறை.
சாருவும் இதைத் தான் எதிர்பார்த்திருப்பார்.... அவரது
எதிர்பார்ப்பு நியாயமே. பொதுவாக Honorarium என்பது
விழா அமைப்பாளர்கள் அவசியம் தந்தே ஆக வேண்டும்.
முக்கியஸ்தர்கள் எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று
கேட்பது நாகரீகம் கருதி தவிர்ப்பார்கள்.
லோயோலோ கல்லூரியே இவ்வாறு ஓசியில் அழைக்கலாம்
என்றால் மற்றவர்களை என்ன செய்வது.
இதற்கும் நீங்கள் கூறும் வாடிக்கையாளர் அணுகும் முறையும்
சம்பந்தம் இல்லை.
//சாருவும் இதைத் தான் எதிர்பார்த்திருப்பார்.... //
அப்படி எதிர்பார்ப்பதற்கு அவர் ஒன்றும் முக்கியஸ்தர் இல்லை, காமெடி பீஸ்தான் என லயோலா கல்லூரி மற்றும் விஜய் டிவி போன்ற நிறுவனங்கள் நினைத்துள்ளன என்பது வெள்ளிடைமலை. மீண்டும் மீண்டும் அம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு போகிறார் சாரு. ஆகவே நான் சொன்ன, “உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டீர்களானால் போகிறவன் வருகிறவன் எல்லோரும் உங்களை குதிரையேறத்தான் செய்வார்கள்” என்னும் கருத்து அப்படியேதான் இருக்கிறது.
//முக்கியஸ்தர்கள் எனக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று
கேட்பது நாகரீகம் கருதி தவிர்ப்பார்கள்//
யார் சொன்னது? அப்படியே நாகரிகம் கருதி தவிர்த்தாலும் அடுத்தமுறை ஏமாறாமல் இருக்க முயற்சிப்பார்கள். இவர் அடுக்கடுக்கடுக்காக ஏமாறுவதால் அப்படியொன்றும் முக்கியமானவரல்ல என்றுதான் முடிவு கட்ட வேண்டியுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பக்கம் பக்கம் என்று 30 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார்.
//அப்படி எதிர்பார்ப்பதற்கு அவர் ஒன்றும் முக்கியஸ்தர் இல்லை, காமெடி பீஸ்தான் என லயோலா கல்லூரி மற்றும் விஜய் டிவி போன்ற நிறுவனங்கள் நினைத்துள்ளன என்பது வெள்ளிடைமலை. //
பாரம்பரியம் கொண்ட கல்லூரியில் இருந்து அழைக்கிறார்கள்....
மரியாதை கொடுப்பார்கள் என்று எண்ணியிருப்பார்.
//மீண்டும் மீண்டும் அம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு போகிறார் சாரு. ஆகவே நான் சொன்ன, “உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டீர்களானால் போகிறவன் வருகிறவன் எல்லோரும் உங்களை குதிரையேறத்தான் செய்வார்கள்” என்னும் கருத்து அப்படியேதான் இருக்கிறது.//
தன்னைச் சுற்றி ஒரு மாயை போன்ற வட்டத்தை ஏற்படுத்தி இருக்க
வேண்டும். இதைச் செய்ய அவரால் முடியாது. அவருடைய தவளை
வாய் எழுத்து மூலமாக கொட்டி விடும்.
பார்க்கலாம் அடுத்த முறை எவ்வாறு செயல்படுகிறார் என்று.
//(அனானி பின்னூட்டங்களை இன்னும் காணேமே? ஒருவேளை சரியாக எழுதித் தொலைத்து விட்டேனோ?)//
என்னய்யா இது உமக்கே என்ன எழுதுறாம்னு நம்பிக்கை இல்லாமதான் எழுதுவீரா ?
அடுத்தவன் சர்டிபிகேட் கொடுத்தாதான் உமக்கே தெரியுமா கஷ்டமடா சாமி!!!!
அன்பு ஜோ!! சார் நீங்க ஏன் சார் பதிவர் சந்திப்புக்கெல்லாம் வர மாடேங்கிறீங்க !! மீன்பாடி , ஆட்டோ, ஸ்கூட்டர், கார் எதுல வேனா வாங்க சார்.
நீங்க வந்தீஙக்ன்னா சந்திப்பே கலகல்ப்பா இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க ஒரு இண்ட்ரஸ்டிங் பர்சனாலிட்டி. உங்களுக்கே அது தெரியுமான்னு தெரியலை.
உங்களுக்காக இல்லைன்னாலும் எங்களுக்காக வந்து அடுத்த நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
ஆராவமுதன்
அய்யோ...ஆராவமுதன் என்ற பெயரா கிடைத்தது அனானிக்கு?
சாரு காமெடிபிசா. முக்கியஸ்தரா என்பது பின்னைய கேள்வி.
முதல் கேள்வி: ஆர் ஆரை அழைத்தார்கள்?
அழைத்தவன் host.
போனவன் guest.
அழைத்தவன் போனவனுக்குத்தான் தக்க மரியாதை செலுத்தவேண்டும்.
போனவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவன் அழையா விருந்தாளி அல்ல.
காமெடி பீஸூ என்று தெரிந்திருந்தால் ஏன் லயோலா காலேஜ் அழைத்தது?
அழைத்தது குற்றமென்றால், அழைத்துவிட்டு அவமானப்படுத்துவது பெருங்குற்றம்.
டோண்டுவின் சுயமரியாதை தியரி எடுபடாது.
பதிவர் சந்திப்புக்கு வர நான் சென்னையில் வசிக்கவில்லை.
/பை தி வே, இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை அவர் தருவதில்லை./
வால் நிமிர்ந்து விட்டது என்று யார் சொன்னார்கள்? வலது பக்கம் donate now என்று ஒரு இதயத்தின் படத்தில் உண்டியல் இருக்கிறதே! அங்கே போய்ப் பாருங்கள்! வழமை போலவே அக்கவுன்ட் நம்பர் இத்தியாதி இத்தியாதி!
http://charuonline.com/blog/?page_id=184
//இப்போது அவர் தளத்தில் தனது வங்கி என்ணை அவர் தருவதில்லை. ஓக்கே, அதுவே ஒரு முன்னேற்றம்தான்.//
Check this URL: http://charuonline.com/blog/?page_id=184
" ஒரு தொழில்காரன் ஒரு சமயத்திலும் செய்யக் கூடாதது. ஆனால் அதைத்தான் அவர் திரும்பத் திரும்பச் செய்கிறார். "
சார்,,, எல்லாம் தெரிந்த நீங்கள் , தவறாக விஷயத்தை பார்த்து இருக்கிறீர்கள்..
அவர் காசு கேட்டால், அங்கே அழைத்து இருக்கவே மாட்டார்கள்.... அவரை பிரபல நடிகர்களுடன், சிக்கு சமமாக உட்கார வைக்கும் நண்பர்கள் அங்கே அவரை கஷ்டப்பட்டு , நிர்வாகத்தை கெஞ்சி, அழைக்க வைத்தனர்... மற்றபடி இவர் வரவு அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை...
நிஇங்கள் பிரபல மொழி பெயர்ப்பாளர்... உங்கள் வாடிக்கலருடன் முன்பே டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பேசலாம்..
புதிதாக இதில் நுழைபவர், தன்னை அறிமுக படுத்தி கொள்வதற்காக, இலவசமாக கூட தன சேவையை கொடுக்கலாம்.... அந்த இலவசை சேவையை ஏற்க வைப்பதே பெரிய வேலையாக இருக்கும்...
ஆகா, சாருவுக்கு நிஇங்கள் கொடுத்த அறிவுரை பொருந்தாது...
பாக்ய ராஜ் போன்றவர்கள், கல்லூரிக்கு சென்றால், கல்லோர்ரிக்கு விளம்பரம் கிடைக்கும்.... அவர்கள் வருகையை, கல்லூரி விளம்பரம் செய்யும்...
அனால், சாரு போன்றவர்கள் , இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், அது சாருவுக்கு பெருமை..
அதனால்தான், அவரும் அவர் ரசிகர்களும், அவர் அதில் பெட்டி கொடுக்கிறார், இதில் கலந்து கொள்கிறார் என்றெலாம் விளம்பரம் செய்கிராரகுள்..
மொத்தத்தில், தன்கள் நேரத்தை வீணடித்து விட்டிர்கள்..
அனால், அதில் சொன்ன கருத்துக்கள், உண்மை...மற்றவர்களுக்கு பயன் படும்
//பதிவர் சந்திப்புக்கு வர நான் சென்னையில் வசிக்கவில்லை.
//
எந்த ஊரில் இருந்தா என்ன ஒரு தடவை நேரில் வாங்களேன்,
நீங்க எது பேசின்னாலும் நல்ல ஜாலியாய் கமெடியாய் இருக்கும் என்று தான் நினைக்கிறேன்.
நீங்க சீரியஸா பேசினா ரொம்ப கமெடியாய் தான் இருங்கும் அட வாங்க சார் , ஒரு வாட்டி.
ஆராவமுதன்
\\விஜய் டி.வி.யில் இன்று (18.4.2010) காலை பத்து மணியிலிருந்து பதினோரு மணி வரை ஒளிபரப்பாகும் வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சியில் அடியேன் கலந்து கொண்டு பேசுகிறேன். புஷ்பவனம் குப்புசாமி என்னைப் பற்றிப் பாடும் பாடல் சுவாரசியமாக இருந்தது. அதே போல் கண்ணன் பட்டாச்சார்யாரின் பேச்சும்.//
எம்புட்டு அடி பட்டாலும் திரும்பத் திரும்ப போறதால இவுரு ரொம்போ நல்லவருன்னு ஒரு முடிவுக்கு வந்துராதீங்க!
டோண்டு சார்,
சாரு - இன்னமும் திருந்தவில்லை போல!!!
இரண்டு நாள் கழித்து, மீண்டும் ஒரு புலம்பலை எதிர்பார்க்கலாம்!
Essex சிவா
Post a Comment