நக்கீரன் பாண்டியன்
கேள்வி-1. அன்பின் ஆழத்தை கவிதையாய் சொல்லும் “நந்தலாலா” படம் பற்றிய தங்கள் விமர்சனம்?(http://www.tamizh.ws/2010/11/nandalala-2010-mysskin-snightha-akolk.html)
பதில்: அப்படத்தை நான் பார்க்கவில்லை. பார்ப்பேன் என்றும் கூற முடியாது. நான் கேள்விப்பட்டவரை அது ரொம்பவும் ஆழ் உணர்ச்சிகளை உள்ளடக்கிய படம், அதைப் பார்ப்பவர்கள் பல நாட்களுக்கு மனக்கஷ்டம் அடைவார்கள். அம்மாதிரி படங்களை நான் பார்க்காமல் தவிர்த்து விடுவேன். உதாரணம் சுப்பிரமணியபுரம் (நான் பார்த்த க்ளிப்பிங்கில் கத்தியால் குத்தி விட்டு அந்தக் காயத்தின் மேல் வேண்டுமென மண்ணை வீசிவிட்டுப் போன வக்கிரம் காட்டப்பட்டது), விருமாண்டி, பருத்திவீரன் ஆகியவை அடங்கும். பாபா, குசேலன், எந்திரன் ஆகிய படங்களை விளம்பர அலம்பல்கள் தந்த எரிச்சலால் பார்க்கவில்லை.
மற்றப்படி நந்தலாலா படம் ஒரு ஜப்பானிய படத்தின் காப்பி என்பது என்னைப் பொருத்தவரை முக்கியமில்லாத விஷயம், ஏனெனில் நான் ஜப்பானிய படத்தையும் பார்க்கவில்லை.
கேள்வி-2. வெறும் விளம்பர தந்திரத்தால் சன் டீவியின் எந்திரன் படம் வெற்றி பெற்றது எனும் கருத்து பற்றி?
பதில்: அப்படியானால் பாபாவும், குசேலனும் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே. பெண் சிங்கம் மட்டும் லேசுப்பட்டதா என்ன? பை தி வே எந்திரனும் பார்க்கவில்லை, பார்க்கும் ஆசையும் இல்லை. மேலே சொன்ன எரிச்சலே காரணம்.
கேள்வி-3. தமிழ் நாட்டில் திரைப்படத்துறை ஒரு சில குழுக்களின் கையில் எனும் உலவும் கருத்தின் அடிப்படையில், இது எங்கே கொண்டு போய் விடும்?
பதில்: இந்த நிலை வேறு அதிகம் பலம் வாய்ந்த பல குழுக்கள் வரும் வரை நீடிக்கும். பிறகு அவற்றின் ஆதிக்கம் வரும். அப்போதும் இதே கேள்வி மீண்டும் கேட்கப்படலாம்.
அதாவது இம்மாதிரி குழுக்களின் ஆதிக்கம் ஒன்றும் புதிதல்லவே. உலக சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது?
கேள்வி-4. இந்த 85 வயதிலும் கலைஞரின் ஞாபக சகதியின் ஆளுமை பற்றி?
பதில்: நல்ல நினைவாற்றல், பாராட்டுக்குரியது. ஆனால் அதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தவிர்த்து தமிழகத்துக்கு என்ன பலன்?
கேள்வி-5. தமிழக முதல்வரின் பிள்ளைகளில் அவரது அரசியல் வாரிசாக யார் வரவேண்டும் என்பது உங்கள் கருத்து,விளக்கத்துடன்?
பதில்: தமிழகத்தில் மன்னராட்சிதான் என முடிவே செய்து விட்டீர்களா? தமிழகத்தை யாருமே காப்பாற்ற முடியாது போலிருக்கே.
நீச்சல்காரன்
கேள்வி-6 இணையத்தில் அதிகமான செய்தி வலை தளங்கள் புழக்கத்தில் உள்ளன. இன்னும் அதிகரிக்க கூடும். அதிகமான செய்தி ஊடகங்கள் பெருகுவது நல்லதா கேட்டதா?
பதில்: பெருகினால் வரக்கூடிய ஆரோக்கியமான போட்டி நல்லதுதானே. பலருக்கு வேலை வாய்ப்பு. பலமுள்ளவை நிலைக்கும், இல்லாதவை மறையும்.
பத்மநாபன்
கேள்வி-7. அரசியல்வாதிகளால் சுருட்டி ஸ்விஸ் வங்கியில் போட்ட இந்திய பணத்தை மீட்க வழியே இல்லையா?
பதில்: அரசுக்கு மனம் இருந்தால் முடியும்தான். ஆனால் அங்கும் அரசியல்வாதிகள்தானே இருப்பார்கள்? எப்படி ஐயா மனம் வரும்?
virutcham
கேள்வி-8. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் ஒட்டிய தெருக்களில் ஒரே தொன்னை குப்பைகள் போட்டு வைத்திருப்பது பற்றிய உங்கள் கருத்து என்ன? யாராவது இதை தவிர்க்க நடவடிக்கை எடுத்தது உண்டா? நான் கோவில் நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி பதில் இல்லை. அது சம்பந்தமான எனது பதிவு இதோ
பதில்: நான் கடைசியாக போனபோது குப்பைத் தொட்டிகள் வைத்திருந்தார்களே. இப்போது இல்லையா?
hayyram
கேள்வி-9. நிதீஷ் குமாரின் அபார வெற்றிக்கு காரணங்களை வரிசை படுத்தவும்! எனக்குத் தெரியாத விஷயங்கள் ஏதேனும் இருந்தால் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.
பதில்: நீங்கள்தான் கிட்டத்தட்ட எல்லா காரணங்களையும் கூறிவிட்டீர்களே. இருப்பினும் ஒன்று மிஸ்ஸிங். அதாகப்பட்டது, நிதிஷின் கட்சியின் கூட்டணி இன்னொரு நல்ல கட்சியுடன் அமைந்தது.
அக்கட்சியைச் சார்ந்த அமைச்சர்களும் திறமையாகவே செயல் பட்டனர். ஆனால் நிதிஷின் வெற்றியை ஒத்துக் கொல்ளும் மீடியா பிஜேபியின் பங்கைக் குறைத்து மதிப்பிடுகிறது வேண்டுமென்றே. தான் போட்டியிட்ட 102 இடங்களில் அக்கட்சி 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது 90% வெற்றி (நிதிஷின் கட்சி 141-ல் 115 இடங்களைத்தான் பெற்றுள்ளது, அதாவது 81 சதவிகிதம்).
மோதியை நிதிஷ் பிரசாரத்துக்கு வரவிடாததை பெரிதாகக் கூறுகின்றன பத்திரிகைகள். முஸ்லிம்களைக் கொன்றால் ஓட்டில்லை எனக் கொள்ள வேண்டும் என்கிறார் ஒரு பத்திரிகையாளர். ஆனால் பாஜகவுக்கும் இந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் ஓட்டு போட்டுள்ளனர்.
சோ அவர்கள் இன்னும் ஒரு படி மேலே போகிறார். பலர் மோதியை நிதிஷ் நடத்திய விதத்தை விரும்பவில்லை. மோதியை மட்டும் வரவிட்டிருந்தால் வெற்றி இன்னும் அபாரமாக நிதிஷின் கட்சிக்கு கிடைத்திருக்கும் என்கிறார் அவர் (08.12.2010 தேதியிட்ட துக்ளக் பத்திரிகையின் தலையங்கம்). அவர் அம்மாதிரி நடந்ததால்தான் நிதிஷின் கட்சியின் வெற்றி சதவிகிதம் பாஜகாவின் வெர்றி சதவிகிதத்தை விடக் குறைந்ததே என்கிறார். இதுவும் யோசிக்கத் தக்கதே.
பார்வையாளன்
கேள்வி-10. அமெரிக்க பாணி ஜனாதிபதி நேரடி தேர்வு நம் நாட்டுக்கு உதவுமா? பிளஸ் மைனஸ் என்ன?
பதில்: கண்டிப்பாக அது இந்தியாவுக்கு ஒத்து வராது. நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதியிடமே அதிக அதிகாரங்கள் குவியும். இந்தியாவுக்கு அது லாயக்கில்லை. நம் மக்கள் மன்னர் ஆட்சிக்கு ஒத்துப்போகும் மனப்பான்மை உடையவர்கள். ஆகவே அமெரிக்காவில் நிலவும் checks and balances இங்கு சரிவர செயல்படுவது துர்லபமே.
பிளஸ் என்று பார்த்தால், சிங்கப்பூரின் லீ வான் க்யூ அல்லது குஜராத்தின் மோதி போன்ற நல்லவர் மற்றும் வல்லவர் குடியரசுத் தலைவர் ஆனால் நாட்டுக்கு நல்லது. ஆனால் மைனஸோ அதிகமாயிற்றே. கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி ஆகியோர் வந்தால் நாட்டுக்கு கேடுதான். ஒரு இந்திரா காந்தி இருந்து படுத்தியது போதாதா?
கேள்வி-11. ஒரு விஷயம் ஆதாயம் தருகிறது என்றால் அதை செய்ய பிராமணர்கள் தயங்கமாட்டார்கள் என்பது பெரியார் கருத்து. என் கருத்து அல்ல. பிராமண எதிர்ப்பு என்பது ஆதாயம் தரும் விஷயம் என்பதால் பிராமணர்கள் சிலரே இதில் இறங்கிவிட்டனர் என்ற கருத்து பற்றி ? உதாரணம் பாலசந்தர் , கமல் . சுஜாதா ஞானி சின்னகுத்தூசி
பதில்: ஐந்தாம் வகுப்பு கூட தாண்டாது, கண்டபடி உளறி வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரெல்லாம் பார்ப்பனர்களை பற்றி பேச வந்து விடுவது தமிழக அரசியலின் சாபக்கேடு.
தனக்கு மட்டும் ஆதாயம் தரும் விஷயமாக செய்து வந்தது நாயக்கரே. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை உயர்த்துவதாகக் கூறிக் கொண்டு, தலித்துகளை எரித்து கொலை செய்த கோபால கிருஷ்ண நாயுடுவைக் காப்பாற்ற அந்தாள் செய்ததை பூசி மெழுகிய இந்த பலீஜார் நாயுடுவை விடவா இந்த சுயநலம் சார்ந்த விஷயத்தில் வேறு யாரையாவது குறிப்பிட முடியும்? தன்னை ஆதரித்த அண்ணாவின் ஆட்சி நிலவுவதே அவருக்கு அப்போது ஆதாயம் என்பதுதானே நிஜம்.
திமுக ஏன் உருவானது என்னும் புத்தகத்தில் மலர் மன்னன் எழுதிய சில சுவாரசியமான வரிகள் கீழே.
ஈ.வே.ராவின் சிக்கனம் உலகம் அறிந்ததே. சிக்கனமாக இருப்பது என்பது வேறு. அதில் அவரது சிக்கனம் ஒரு தனி ரகம். அது பணம் வீணாகச் செலவாவதைத் தடுக்கும் சிக்கனம் அல்ல. பணத்தின் மீது கொண்ட அதீத பற்றுதலில் விளைந்த சிக்கனம் அது. இரண்டாவது தன்னிடம் வந்து சேர்ந்தவர்களை மதிக்காத போக்கு. இது அண்ணாவுக்கு வெகு ஆரம்பத்திலேயே தெரியவந்த ஒன்று. அடிக்கடி ஈரோடிலிருந்து திருச்சிக்குப் பயணம் செய்யும் ஈ.வே.ரா திருச்சிக்கு டிக்கட் எடுக்க மாட்டார். கரூர் வரை ஒரு டிக்கட். பின்னர் கரூரில் இறங்கு கரூரிலிருந்து திருச்சிக்கு டிக்கட். இப்படி இரண்டு முறை குறைந்த தூரத்துக்கான டிக்கட் எடுத்தால் அதில் கொஞ்சம் காசு மிச்சமாகும். இப்படி ஒரு முறை அண்ணாவையும் கூட அழைத்துச் சென்றவர், அண்ணாவைத் தான் கரூரில் இறங்கி திருச்சிக்கு டிக்கட் வாங்க அனுப்பி, அண்ணா டிக்கட் வாங்கி வர தாமதமாகவே, ஆத்திரமடைந்த பெரியார், "சோம்பேறி, வக்கில்லாதவன், ரயில் டிக்கட் வாங்கக் கூட முடியாதவனால் ஒரு கட்சியை எப்படி நடத்தமுடியும்," என்றெல்லாம் விழுந்த அத்தனை வசைகளையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டவர் அண்ணா.
இதுதான் தந்தை பெரியார், தனக்கு தளபதியாக, தன் பெட்டிச் சாவியைத் தந்துவிட்டதாக பட்டம் சூட்டிய அண்ணாவை, தன் கழகத்திற்கு பெரிய ஜனத்திரளையே தேடித்தந்த அண்ணாவை, கழகத்தில் தனக்கு அடுத்த படியாகவிருந்த தலைவரை, தனக்கு முப்பது நாற்பது வயது இளையவரை நடத்திய முறை. கழகத்தில் அண்ணா தன் இனிய சுபாவத்தினாலும், பேச்சாற்றலாலும், கழகத்தின் கொள்கைகளுக்குத் தேடித்தந்த கௌரவத்தாலும், மக்களிடையே பெற்ற புகழாலும், கழகத்தில் அவருக்கு தானே வந்தடைந்த இரண்டாம் இடத்தை, தந்தை பெரியாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். அவர் மட்டுமில்லை. வயதிலும் கழகத்திலும் அண்ணாவுக்கு மூத்தவர்களாக இருந்தோருக்கும், குத்தூசி குருசாமி, டி.பி.வேதாசலம் போன்றோருக்கும் அண்ணாவுக்கு கழகத்தினுள்ளும் வெளியே மக்களிடமும் இருந்த செல்வாக்கைக் கண்டு பொறுக்கமுடியாதுதான் இருந்தது. அன்ணாவின் இளைய தலைமுறை திராவிட கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அண்ணாவிடமே நெருக்கமாக உணர்ந்தனர்.
அதோடு கழகத்தை தன் விருப்பு வெறுப்புக்களையே கொள்கைகளாகவும் நடைமுறையாகவும் ஆக்கியிருந்த தந்தை பெரியார், எவ்வளவுதான் தனக்கு கட்டுப்பட்டிருந்தாலும், தனக்கென ஒரு பார்வையும் கொள்கைகளும் கொண்டிருந்த அண்ணாவை உள்ளூர வெறுக்கத் தொடங்கியிருந்தார் என்றும் சொல்லவேண்டும். மற்றவர்களையும் தூண்டி அண்ணாவை கேலியும் வசையும் பேசத் தூண்டவும் செய்திருக்கிறார் பெரியாரும் திராவிடத் தந்தையுமான ஈ.வே.ரா. குறிப்பாக பாரதிதாசன், அழகரிசாமி போன்றோர். அப்படி வசை பாடிய அழகிரிசாமி உடல்நிலை கெட்டு மரணப் படுக்கையில் இருந்த அழகிரிசாமிக்கு நிதி திரட்டித் தந்தவர் அண்ணா. பாரதிதாசனுக்கும்தான். நிதி திரட்டித் தராமல், "பாட்டுப் பாடறவனுக்கெல்லாம்" திரட்டித் தரானே என்று ஆத்திரப்பட்டவர் தந்தை பெரியார். அழகிரிசாமியும் பின்னர் தன் செய்கைகளுக்கெல்லாம் வருந்தவும் செய்தார்.
அண்ணாவுக்கு கருப்புச் சட்டை அணிவது என்றாலே பிடிக்காது. கறுப்புச் சட்டைப் படை என்று ஒரு வாலண்டியர் அணி உருவாக்குவது என்ற தீர்மானத்தில் பிறந்த வழக்கம்தான் திராவிட கழகத்தவர் கருப்புச்சட்டைக்காரன் என்றாக வழி வகுத்தது. இதை தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மேடையிலேயே குறிப்பிடும் போது என்ன சொல்கிறார்? "வெள்ளைச் சட்டை அணியும் குள்ள நரிகள் என்று அவர்களைச் சொல்வேன்" அண்ணா குள்ள உருவினர் என்பது எல்லோரும் அறிந்தது. தனக்கு அடுத்த தலைவரை 'குள்ள நரி" என்று மேடையில் தந்தை சொல்வாரானால், இவருக்குமிடையேயான உறவு எத்தகையது?
நீதிக் கட்சியைச் சேர்ந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தன் அறுபதாம் ஆண்டு நிறைவை சம்பிரதாய சடங்குகள், புரோகிதருக்கு பசு, பொற்காசு போன்ற தானங்கள், வேள்வி என ஏராளமான செலவில் நடத்தவே, ஈ.வே.ரா வுக்கு கோபம். தன்னைக் கண்டு கொள்ளாமல், பார்ப்பனருக்கு தானம், பூஜை என்று செலவழிக்கிறாரே என்று. அண்ணாமலைச் செட்டியாரின் இச்செய்கையைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதும்படி தந்தை பெரியார் அண்ணாவிடம் பணிக்க, அண்ணாவுக்கும் இதில் ஒப்புதல் இருந்ததால் அவரும் எழுத, இடையில் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து ஆயிரம் ரூபாயோ என்னவோ அன்பளிப்பாக வரவே, செட்டியார் பணம் அனுப்பியிருக்கிறார், ஆதலால் ஏதும் அவரைக் கண்டித்து எழுதியதை நிறுத்தச் சொல்கிறார் பெரியார். ஆனால், அன்ணாவோ, "நான் எழுதியது எழுதியதுதான். இனி அதை மாற்ற இயலாது" என்று சொல்ல, பெரியார் நன்கொடைக்கு நன்றி சொல்லி ஒரு குறிப்பு எழுதினார் என்பது நடந்த கதை.
இது போலத்தான் சேலம் மகாநாட்டில் திராவிடர் கழகம் என்ற புதிய நாமகரணமும், நீதிக்கட்சிப் பெருந்தலைகள் தம் பட்டம் பதவிகளைத் துறக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியது அண்ணாவின் வலியுறுத்தல் காரணமாகத்தான். பெரியாருக்கு நீதிக்கட்சியினர் தரும் ஆதரவையும் பண உதவியையும் இழக்க வேண்டி வருமே என்ற கவலையும் அரித்துக்கொண்டிருந்தது. மிகுந்த ஊசலாட்டத்துக்குப்பின் தான் அண்ணாவுக்கு இளைய தலைமுறையினரிடம் வளர்ந்து வரும் கவர்ச்சியையும், கழகத்தின் பிராபல்யம் கருதியும் அண்ணாவின் தீர்மானத்துக்கு இயைந்தார். அண்ணாவின் இத்தகைய பார்வையின் தொடர்ச்சிதான் இந்திய சுதந்திர தினத்தை பெரியார் சொன்னது போல் துக்க தினமாக அல்ல, சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பகிரங்கமாக அண்ணா எழுதியது. நிலமை கட்டுக்கு மீறிப் போகிறது என்று பெரியாருக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது. முதலில் பெரியார் கருத்தை ஒட்டி எழுதி பின்னர் சில மாதங்களுக்குள் அண்ணா தன் கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டது,
இருப்பினும் அவருக்கு அண்ணா வருங்காலத்தில் கழகத்திலும் மக்களிடையேயும் ஒரு சக்தியாக வளர்ந்து வருவது உவப்பாக இருக்கவில்லை. தனக்கும் வயதாகிக்கொண்டிருக்க, தன் பாரம்பரிய குடும்ப சொத்தும், கழகத்தின் பேரில் பைசா பைசாவாக சேர்த்து வைத்திருக்கும் சொத்தும், கழகமும் அண்ணாவிடம் போய்ச் சேராதிருக்கவேண்டுமே என்ற கவலை அவரை பீடிக்கத் தொடங்கியது. தனக்கோ மகன் இல்லை. மனைவியும் இல்லை. குடும்ப சொத்து ஈ.வி.கே. சம்பத்துக்குப் போய்விடும். கழகச் சொத்தோ, தனக்குப் பின் வரும் தலைமையிடம் போய்விடும். இதைத் தடுப்பதற்கு உடனடியாக ஒரு வழி தேடியாக வேண்டுமே. தன்னிடம் சில வருஷங்களாக உதவியாக இருக்கும் பெண்ணை மணந்து கொண்டால் தான் கவலைப்படும் இரண்டு விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தவர் தந்தை பெரியார். தன் சொத்துக் கவலைகளுக்குத் தீர்வாக, ஒரு சிறு வயதுப் பெண்ணின் வாழ்க்கையை பலியாக்குவதில் அவருக்கு தயக்கம் இருக்கவில்லை. சமூக சீர்திருத்தம் என்றும் பெண்ணின் விடுதலை என்றும் வாழ்நாள் முழுதும் பேசி வந்த எழுபது வயது புரட்சிக்காரருக்கு வந்த கவலைகளும் அதற்கான தீர்வுகளும் இப்படியாகிப் போனது பரிதாபம் தான்.
ஆக, கொள்கைகள் அல்ல, சொத்து பற்றிய கவலைகள், தன் விருப்பு வெறுப்புகளுக்கும் தன்னிச்சையான சுய தீர்மான போக்குகளும் தான் என்றும் தெரிந்ததென்றாலும் அதன் பட்டவர்த்தன மான வெளிப்பாடாக நிகழ்ந்த பெரியார் மணியம்மை திருமணம், அதுவும் பார்ப்பனராகிய எந்த ஆச்சாரியார் தன் சாதிக்கு சாதகமாகத்தானே சிந்திப்பார் என்று காலமெல்லாம் சொல்லி நிந்தித்து வந்தாரோ அந்த ஆச்சாரியாரிடமே, தன் கழகம், சொத்து, நம்பிக்கையான வாரிசு போன்ற கவலைகளுக்கு ஆலோசனை கேட்டது, அதுவும் ரகசியமாகச் சந்தித்துக் கேட்டது, பின் இதெல்லாம் 'என் சொந்த விஷயம், உங்களுக்கு சம்பந்தமில்லை' என்று உதாசீனமாகப் பேசியது எல்லாம் கழகத்தவர்க்கு பெரும் அடியாக விழுந்தது. பெரியாருக்கும் சரி, கழகத்தவர்க்கும் சரி இதுதான் ஒட்டகத்தின் முதுகு தாங்காத சுமையாகச் செய்த கடைசி வைக்கோற் புல். இரு தரப்பாருக்கும் பெரியார்-மணியம்மை திருமணம் ஒரு சௌகரியமான சாக்காகிப் போனது. அந்த சாக்குதான் வெளிச் சொல்லப்பட்டது, திரையின் பின்னிருந்த நீண்ட காலப் புகைச்சல் பற்றி எல்லோருமே மௌனம் சாதிக்கத் தான் செய்கின்றனர்.
கடந்த காலப் புகைச்சல் மட்டுமல்ல. பின் எழுந்த புகைச்சல்களும் கூடத்தான். அண்ணா 'கண்ணீர்த் துளிகள்' தலையங்கம் திராவிட நாடு பத்திரிகையில் எழுதியதும், 'கண்ணீர்த் துளிகள்' என்று புதிய கட்சியினரை பெரியார் கிண்டலும் வசையுமாக தொடர்ந்து இருபது வருட காலம் பேசித் தீர்த்ததும் தெரிந்தது தான். ஆனால், பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று சொன்னார். பெரியாரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும், கட்சி சொத்துக்களுக்காக வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் கட்சியில் எழுந்த கொந்தளிப்பை அடக்கி, பழைய கட்சி என்ன, புதிய திமுகவின் தலைமை நாற்காலி கூட பெரியாருக்காகவே காலியாகவே வைக்கப்பட்டுக் கிடக்கும் என்று கட்சியனரின் கோபத்தை அடக்கிய அண்ணாவின் பெருந்தன்மையையோ, அதற்கு எதிராக, பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று கழகத் தந்தை பெரியாரின் பழிச் சாட்டல் வசை பிரசாரம் எதையும் இன்று எந்த கழகத்தவரும் பேச விரும்பமாட்டார்கள்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியாக தந்தை பெரியார் விடுத்த பிரம்மாஸ்திரம் தான், 1949 ஜூலை 13-ம் தேதி விடுதலை பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கை. அதில் தான் திருமணம் செய்துகொண்டதற்கான ஒரு புதிய காரணத்தைச் சொல்கிறார். அறிக்கையின் தலைப்பு:"திருமண எண்ணத் தோற்றத்துக்கு காரணமும், அவசர முடிவும்." அதில் யாரோ (மறைமுகமாக அண்ணாவைக் குறித்து) தன்னைக் கொலை செய்ய சதி செய்து வருவதாகவும் அதற்கு சம்பத் உதவி வருவதாகவும்" ஒரு குற்றச் சாட்டு. உடனே அண்ணா, தந்தை பெரியார் தன்னைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக, அவதூறு வழக்கு தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஆஜரான பெரியார், தான் அண்ணாவைக் குறிக்கவில்லை என்று சொல்கிறார். அவ்வாறு வாக்குமூலம் அளித்தால், தான் வழக்கை வாபஸ் வாங்குவதாகச் சொல்லவே, வழக்கு தள்ளுபடியாகிறது. சம்பத்தும், ஈ.வே.ரா மணியம்மை இருவர் மீதும் அவதூறு வழக்குத் தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஈ.வே.ரா, மணியம்மை இருவருமே வருத்தம் தெரிவிக்கவே, வழக்கு வாபஸ் ஆகிறது.
ஆக, கடைசியில் இதனால் பெறப்படும் நீதி என்னவென்றால், இது சொத்து பற்றிய கவலைகள். கட்சியில் தனக்கு இளையவரின் புகழ் மீது கொண்ட பொறாமை உணர்வுகள். இதற்கெல்லாம் கொள்கைப் பூச்சு முலாம் பூசப்பட்டு பளபளக்கச் செய்கிறார்கள். மேலிருக்கும் முலாமை யாரும் கீறி விடாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே இந்த பழைய கதைகளை எந்த திராவிட குடும்பத்தினரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வசமே இருக்கும் பத்திரிகைகளை அணுகுவதும் கஷ்டம். பெரியார் திடல் போய் ஒரு பழைய விடுதலை இதழைப் பார்க்க முயன்றவர்களுக்கு தெரியும். "எதுக்கு? யார் நீங்க? என்ன வேணுமோ எழுதிக்கொடுத்துப் போங்க. தேடிப்பார்த்து வைக்கிறோம்." என்று பதில்கள் வரும்.
மீண்டும் டோண்டு ராகவன். பெரியார் திடலில் டோண்டு ராகவன் கண்டது பற்றித்தான் நானே பதிவும் போட்டுள்ளேனே.
அதே போல தனக்கு ஆதாயமாக காங்கிரஸ் இருந்தபோது 1965 ஹிந்தி போராட்டத்தையே தூற்றியவர் இதே மகானுபாவர்தான். 1967 வரை அண்ணாவையும் திமுகவினரையும் கன்ணீர்த்துளிகள் என இகழ்ந்து வந்தவர், அவ்வாண்டு தேர்தலில் வெற்றி பெற்றதும் அண்ணா அவருக்கு பெருந்தன்மையாக வழங்கிய தலைவர் பதவியை கூச்ச நாச்சமின்றி பக்கித்தனமாக ஏற்றுக் கொண்டவர் இந்தப் பெருந்தகை.
மற்றப்படி, நீங்கள் சொன்ன பார்ப்பனர்களில் சுஜாதா எப்படி வந்தார்? மற்றவர்கள் தொடை நடுங்கி பார்ப்பனர்கள். தாங்களும் சேர்ந்து பார்ப்பனர்களைத் திட்டினால் தாம் மட்டும் தூஷிக்கப்பட மாட்டோம் என மனப்பால் குடித்தவர்கள். அவர்களையெல்லாம் இங்கே ஞாபகப்படுத்தாதீர்கள். நான் அவர்கள் மேல் பரிதாபப்படுகிறேன்.
கேள்வி-12. தேர்தலை பொறுததவரை, இந்த விவகாரத்தால் அதிகம் பாதிப்பு காங்கிரசுக்கா, திமுகவுக்கா?
பதில்: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி இல்லையென்றால் மக்களுக்கு நல்லது நடக்கும். திமுகவின் அராஜக ஆட்சி முடிவுக்கு வரும். காங்கிரசுக்கு கொஞ்சமாவது நல்ல பெயர் மிஞ்சும்.
ஆனால் கூட்டணி தொடர்ந்தால், திமுகவுக்கு நல்லது, காங்கிரசுக்கு சில ரொட்டித் துண்டுகள் கிடைக்கலாம், ஆனால் மக்களுக்கு கெடுதல்தான் நடக்கும்.
1996 நிலைதான் இப்போதும். இரு தருணங்களிலும் சம்பந்தப்பட்ட ஆளும் கட்சி அசுர பலத்துடன் இருந்தது. என்ன, 1996-ல் அதிமுக, இப்போது திமுக. மற்றப்படி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.
1996-ல் நரசிம்ம ராவ் தலைமையில் உள்ள காங்கிரஸ் அதிமுகாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பெரிய தவற்றைச் செயதது. இப்போதும் திமுகவுடன் கூட்டணி என்றால் அதே தவற்றை அது திரும்பச் செய்கிறது என கொள்ளலாம். அப்போதாவது த்மக இருந்தது. ஆனால் இப்போது?
கேள்வி-13. சம்ச்சீர் கல்வி முறை குறித்து? இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறதே!
பதில்: பல முன்னுக்குப்பின் முரண் ரிப்போர்டுகள் உள்ளன. சத்தியமாகவே எனக்கு புரியவில்லை. ஆகவே என்னால் இக்கேள்வியிக்கு கருத்து சொல்லவியலாது.
M Arunachalam
கேள்வி-14. What is your take on these lyrics written and also sung by a pervert in Tamil cinema?
பதில்: கூல், கூல். அவ்வரிகளை படத்தில் காண்டக்ஸுடன் பார்ப்பதற்கு முன்னால் நான் ஏதும் கூற விரும்பவிலை.
ஜயதேவரின் அஷ்டபதி பதிகங்களில் இருப்பதை விடவா சிருங்கார ரசம் வந்துவிடப் போகிறது? தமிழர்கள் கலவிக்கலையை அற்புதமாக பாவித்தவர்கள். நடுவில் வந்த கிறித்துவ மிஷனரிகள் அவற்றைப் பாவம் என எடுத்துரைத்து எல்லாவற்றையும் வக்ரமாக பார்த்தனர்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் அடுத்தமுறை சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
9 hours ago
12 comments:
1.நடிகர் விஜய்யின் திடீர் அம்மா(ஜெ) பாசம் யாருக்கு லாபம்?யாருக்கு நட்டம்?
2.ஸ்பெக்ட்ரம் விவாகரத்தின் அடுத்த வால் வைமேக்ஸ் விவகாரம் எனும் வரும் தகவல்களை பார்த்தால்?
3.காலம் கடந்து நடத்தப் படும் சோதனைகள் கண் துடைப்பு அல்ல என சொல்வதை பார்த்தால்?
4.இலவச டீவி வேண்டாம் என்று சொன்ன புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம்திரு விஜயகுமார் பற்றி?
5.சுப்பிரமணிய சுவாமி தரும் அதிர்ச்சி தகவல்கள் பற்றி?
//August 03, 2009 1:04 PM
எனது ஞாபக சக்தி தெளிவாகவே உள்ளது. அதே காலகட்டத்தில் பெரியார் அவர்கள் விகடன் பத்திரிகைக்கும் பேட்டி தந்துள்ளார். முடிந்தால் அதையும் தேடி பார்க்கிறேன்.//
விடுதலை பழைய இதழ்களை பார்க்க வீரமணி மறுத்து விட்டார். வேறு எந்த நூலகத்திலும்அது கிடைக்காதா? அது சம்பந்தமாக வேறு ஏதாவது பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளதா?.
நீங்களே விகடனில் வந்தது என்று கூறியிருக்கிறீர்கள். அந்த விகடனையாவது தேடி பிடித்து இருப்பீர்கள் என்றால் அதனை ஒரு பதிவாகவே வெளியிடலாம்.
பதில்கள் நச் நச் ...
பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இவ்வளவு போராட்டம் நடந்திருக்கிறதா...
ஸ்விஸ் கள்ளப்பணத்தை ஓட்டி தேர்தல் சமயத்தில் பேசுகிறார்கள் ..அப்புறம் விட்டு விடுகிறார்கள்..
``எந்திரன்`` எனக்கும் நிங்கள் சொன்ன விளம்பரஎரிச்சல் இருந்தது ..ஆனால் படம் பார்க்கும் பொழுது என்னவோ போர் அடிக்கவில்லை .
சார், போலி நாத்திகர் கமல் அவரது புதிய படம் மன்மதன் அம்பு படத்திற்கு எழுதி இருக்கும் பாடலில் கண்ணனை கிண்டல் அடிக்கும் வகையில் வரிகள் உள்ளன. அதை குறித்தும் , கமலின் போலி நாத்திக வாதத்தை குறித்தும் உங்கள் கருத்து ???
வீட்டு வசதி வாரிய ஊழல் பற்றி ?
வாணியும் சரிகாவும் செய்த வரலஷ்மி நோன்பு
http://www.virutcham.com/2010/12/கமலஹாசனும்-வரலக்ஷ்மி-நோன/
குப்பை தொட்டிகள் என் கண்ணில் படவில்லை. அப்படியே ஓன்று இரண்டு இருந்தாலும் மக்கள் நடந்து கொண்டே தின்று விட்டு வீசி விட்டு சென்று விடுகின்றனர் என்று நினைக்கிறேன். கூட்டங்கள் வரும் இடங்களில் இந்தக் குப்பை பிரச்னை பெரும் பிரச்னை.
கோவில்கள் மற்ற பொது இடங்கள் என்ற வித்தியாசங்களே இருப்பதில்லை. அருவிகளுக்கு சென்றால் அங்கே ஷாம்பூ சாஷேக்கள் நிறைந்து கிடைப்பதை காண சகிக்காது. படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று வித்யாசம் இல்லாமல் குப்பை sense is common என்று தான் இருக்கிறது
விருட்சம் கமலஹாசனின் அதிகப்பிரசங்கித்தன பேச்சைப் பற்றி இங்கேயும் பார்க்கலாம்
http://hayyram.blogspot.com/2009/03/blog-post_27.html
ராம்
கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான முக்கியத்துவம் தான் அவரது வெற்றி. இது அவரது அறிவு ஜீவி பிம்பத்துக்கு கிடைக்கும் சுலபமான விளம்பரம். அவரது பேச்சு ஏற்புடையதாய் இல்லை என்றால் அதை தவிர்த்து விட்டாலே போதும். அதற்கு எதிர் விமர்சனம் வருவதால் ஊடகங்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக விஜையில் வந்த தீபாவளி நிகழ்ச்சி. அவரது நாத்திகப் பேச்சை திரும்பத் திரும்ப விளம்பரப் படுத்திக் கொண்டே இருந்தார்கள். அன்றைய நாள் தீபாவளி என்பதும் அது இந்துக்களின் மிகப் பெரிய பண்டிகை என்பதும் விஜய் தொ.கா. க்கு தெரியாதா என்ன. அதற்கு முந்தைய வாரங்களில் தனி தீபாவளி நிகழ்சிகள் நடத்தியவர்கள் அவர்கள். வியாபாரிகள் விற்பதைத் தான் வியாபாரம் செய்வார்கள். அதனால் எதை வாங்க வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நமக்குத் தேவையில்லாத பொருளை தெரிந்தே வாங்கி விட்டு திட்டி என்ன பயன் ?
விருட்சம் //கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான முக்கியத்துவம் தான் அவரது வெற்றி//அதற்கு காரணம் கமல் என்கிற மனிதர் ஏறக்குறைய 35 வருடமாக மிகவும் பிரபலமான அநேக மக்களால் விரும்பப்படுபவர் என்பதால் தானே ஒழிய அவர் பேச்சு விமர்சனத்திற்குள்ளாகிறது என்பதாலேயே அதற்கு விளம்பரம் கிடைப்பதில்லை. ஆனால் இப்படி இந்து எதிப்பாக பேசுவதும் அதிபுத்திசாலிபோல உளருவதும் அவரது சிறுபிள்ளைத்தனத்தை காண்பிக்கிறது. அதை அவர் பிடிவாதமாகவே செய்கிறார் என்பதும் தெரிகிறது. அவர் மதி மயங்கி வளர்ந்த பாசறை அப்படி. //தேவையில்லாத பொருளை தெரிந்தே வாங்கி விட்டு திட்டி என்ன பயன் ?// ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். மதமாற்றுப் பேர்வழிகளின் மோசடிகளை அம்பலப்படுத்தி அதன் மீது விழிப்புணர்வு உண்டாக அதைப்பற்றி எழுதுகிறோமென்றால் அதை நாம் வாங்கிவிட்டோம் என்று அர்த்தம் இல்லையே. அடுத்த முறை அது நடக்கும் போது மக்கள் அதன் மீதான சூழ்ச்சிகளை புரிந்து கொள்வார்கள் என்பதால் தான். அது போல தான் கமல் பற்றிய விஷயங்களை விமர்சித்து எழுதுவதும். கிருஷ்ணசாமி சொன்னால் தான் கமல் கேட்பார் போலிருக்கிறது. நாமென்ன செய்ய.. இப்படி எழுதிக்கொண்டிருப்பதை தவிற?
Ram
நீங்க கொஞ்சம் கூர்ந்து கவனிச்சீங்கன்னா அவர் விளம்பர உத்தியா பயன்படுத்துவது தெரியும். அவர் படங்கள் வெளி வரும் முன் இப்படிப் பேசி ஒரு பரபரப்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். மன்மத அம்பு படப் பாடல் வெளியீட்டிற்கு முன் விஜய் தொ.கா யில் பேசியது அதற்க்கு நேர் எதிராக அவர் எழுதி இருக்கும் கவிதைக்கு கிடைக்கும் விமர்சனம் என்ற விளம்பரம். இது மாதிரி அவர் அதிகம் பேச ஆரம்பித்து இருப்பது கடந்த ஐந்து ஆண்டு காலமாக. இந்தப் பரபரப்பு அவருக்கு பல மேடைகளை கொடுத்து உதவும். பலர் வழக்கு போடுவார்கள். ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு இரு தரப்புகளின் கருத்துக்களை வெளியிடும். இந்தக் கவிதையை காட்சிக்கு ஏற்றார் போல் படத்தில் சரியாக பொருத்தி இருப்பார். படம் பார்த்து விட்டு பலரும் கருத்து சொல்லுவார்கள். இந்த sensation அவருக்கு சாதகமாகவே அமையும்.
உண்மையில் திருஞான சம்பந்தர் ஆன்மிகத்தின் உயர் நிலையில் இருந்து பாடியதை கொச்சையாக் மாற்றி தன் சொந்தக் கருத்து போல் அவர் விஜய்யில் சொன்ன போதே இது புரிந்து கொள்ள முடிந்தது
//நீங்க கொஞ்சம் கூர்ந்து கவனிச்சீங்கன்னா அவர் விளம்பர உத்தியா பயன்படுத்துவது தெரியும். அவர் படங்கள் வெளி வரும் முன் இப்படிப் பேசி ஒரு பரபரப்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்.// நீங்கள் சொல்வதும் சரிதான்
1. யுவராஜ் சிங், ஜஸ்வந்த் சிங் போன்றோர் சீக்கியர் தானே? பின் ஏன் அவர்கள் டர்பன் அணிவதில்லை?
2. டர்பன் என்பதற்கு சரியான தமிழ் பதம் என்ன? தலைபாகை சரியாக இருக்காது என்பது என் எண்ணம்?
3. அம்மாவும் விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி இவர்கள் பக்கம் தானே?
4. நீங்கள் எந்த கம்பெனி செல் போன் கனெக்சென் வைத்து இருக்கிறீர்கள்?
Post a Comment