டோண்டு பதில்கள்-30.12.2010 பதிவில் வழக்கம்போல வால்பையனும் நான் பதிலளித்த கேள்விகளுக்கு அவரும் பதிலளித்துள்ளார்.
அதில் ஒரு கேள்வி, அதற்கு எனது பதில், வால் பையனின் வெர்ஷன் ஆகியவற்றை கீழே தருகிறேன்.
வால்பையன் said...
// பிராமணர்கள் அனேகமாக அனைத்து துறைகளிலும் பணியில் இல்லையென்றே (இருந்தாலும் மிக குறைந்த எண்ணிக்கையே) இருக்கும் போது இன்னும் ஏன் இந்த பிராமண துவேசம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம்?
பதில்: தேவையற்ற அச்சம். சுய மரியாதை இல்லாதவர்கள்தான் இவ்வாறு தூற்றுபவர்கள்.//
வால்பையனின் பதில்: துறைகளின் மேலதிகாரியாக மட்டுமே இருக்க நினைப்பது தான் அதற்கு காரணம், துப்புரவு பணியாளர்கள் வேலையில் பாப்பானை சேரச்சொல்லுங்கள், யாருக்கு பயம் என்று அப்பொழுது விளங்கும்!
December 31, 2010 1:05 PM
துப்புரவு பணி என்ன, கக்கூஸ் க்ளீனிங்கிலும் பார்ப்பனர் உண்டு. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பெயர் பெற்ற சுலப் சவுச்சாலயாவை நிறுவி, வெற்றிகரமாக நடத்துபவர் டாக்டர் பாதக் (Dr. Pathak) என்னும் பார்ப்பனரே.
1943-ல் பீஹாரில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பாகேல் என்னும் கிராமத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்த அவர் காலேஜ் படிப்பையெல்லாம் முடித்த பின்னர் 1968-ஆம் ஆண்டு கக்கூஸ் கழுவுபவர்களின் விடுதலைக்கான இயக்கத்தில் சேர்ந்து பல அரிய தொண்டாற்றியிருக்கிறார். துப்புறவு பணியாளர்களுடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களின் பிரச்சினைகளை அண்மையில் இருந்து அவதானித்தவர் அவர். கக்கூஸ் கழுவுவதில் பி.எச்.டி செய்துள்ளார். துப்புறவு தொழிலாளிகளின் இழிவான வேலை சூழ்நிலையை மாற்ற அருமையான சிஸ்டத்தை உருவாக்கியவர் அவர்.
அதற்கு அகில உலக அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
உலகில் கக்கூஸ்கள் எவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்துள்ளன என்பது பற்றியெல்லாம் பாதக் சம்பந்தப்பட்ட இந்த இணைய தளத்தில் போய் தெரிந்து கொள்ளலாம்.
மனிதக் கழிவை நீக்கும் தொழிலாளர்களது மிக அவமானகரமான சமூக இழிநிலையை சாடிய அவர், வெறும் வாய் வார்த்தைகளிலெல்லாம் நிற்காது, இதன் தொழில் நுட்பத்தை எவ்வாறு வடிவமைப்பது என்பதிலும் கவனம் செலுத்தி, அதை வெற்றிகரமாக செய்து அதிகாரிகள், பொறியியல் நிபுணர்கள் ஆகியோருக்கும் நேரடியாக நிரூபித்தவர்.
இந்தியாவில் டாயிலட் பிரச்சினை என்ன என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் ஒரு காட்சியை தவறாமல் காண முடியும். அதிலும் அதிகாலையிலும், மாலை நேரங்களிலும் பயணம் செய்வோரின் கண்களுக்கு இந்தக் காட்சி தப்பவே தப்பாது.
அது - ரயில்வே டிராக்கின் ஓரங்களில் உள்ள செடிகளுக்கு இடையே புதைந்து காணப்படும் மனிதர்கள்தான். அவர்கள் தங்களது இயற்கை உபாதையை போக்க இப்படிப் புதர்களை நாடுவது சகஜமான காட்சியாகி விட்டது.
ரயில் வரும்போது எழுந்து நின்று கொள்வதும், ரயில் ேபான பின்னர் அமர்ந்து 'பாரத்தை' இறக்குவதும் சகஜமான காட்சியாகும்.
இந்தியக் கிராமங்களில் மலம் கழிக்க மக்கள் அதிகம் நாடுவது வயல் வெளிகளையும், ரயில்வே பாதைகளையும்தான். திறந்தவெளியில்தான் அவர்கள் தங்களது 'பாரத்தை' இறக்கி வைத்து விட்டுச் செல்கிறார்கள்.
இதில் பெண்களின் நிலைதான் ரொம்ப சோகமானது. இருள் பிரியாத அதிகாலை நேரங்களிலும், இருள் கவியும் மாலை நேரங்களிலும்தான் அவர்கள் இப்படி போக முடியும். இதனால் அவர்களுக்கு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வேறு சில பக்கவிளைவுப் பிரச்சினைகளுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இது இந்தியாவில் மட்டும் இல்லை. உலகம் முழுவதும் இந்த கழிப்பறைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன. இதுகுறித்து யோசித்த ஐ.நா. சபை, 2025ம் ஆண்டுக்குள் இதற்கு நிரந்தரத் தீர்வு காண தீர்மானித்தது.
வளரும் நாடுகளில் நவீன டாய்லெட் வசதிகளை ஏற்படுத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. செலவுகள் அதில் முக்கியமான ஒன்று. ஆனால் அதற்கு மாற்று வழி உள்ளது.
அதுகுறித்து விவாதிக்கத்தான் டெல்லியில் உலக கழிப்பறை மாநாடு நேற்று (31.10.2007) தொடங்கியுள்ளது. 4 நாள் நடக்கும் இந்த மாநாட்டில், 40க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு கழிப்பறைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு என்ன, செலவுகளைக் குறைக்க மாற்று வழி என்ன என்பது குறித்து விவாதிக்கின்றனர்.
ஐ.நா. மதிப்பீட்டின்படி, உலகம் முழுவதும் 20.6 கோடி மக்கள் முறையான, சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எண்ணிக்கையை 2015ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 70 லட்சம் பேர் முறையான கழிப்பறை வசதி இல்லாமல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதிநிதியான பிந்தேஸ்வர் பதக் கூறுகையில், மற்ற பிரச்சினைகளைப் போல இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினை.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் அடிப்படை சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. இதுகுறித்துத்தான் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப் போகிறோம் என்றார்.
இந்தியாவில் சுலப் இன்டர்நேஷனல் நிறுவனம் குறைந்த செலவிலான கழிப்பறைகளை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் துணைத் தலைவரான அனிதா ஜா கூறுகையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் கழிப்பறை முறைதான் மிகவும் சிறந்தது, செலவு குறைந்தது. இந்த வகை கழிப்பறைகளை உருவாக்க குறைந்தது 700 ரூபாயிலிருந்து, அதிகபட்சம் 3000 ரூபாய் வரை செலவாகும்.
இதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை என்பது முக்கியமான அம்சமாகும். தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இத்தகைய கழிப்பறைகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் தண்ணீரையும் கூட நாம் சேமிக்க முடியும் என்றார்.
தினமலரில் வந்த ஒரு செய்தி:
டைம் பத்திரிகை 2009ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் துறையில் சாதித்த ஹீரோக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுலப் சர்வதேச சமூக சேவை கழகத்தின் நிறுவனர் பிந்தேஸ்வர் பதக்கின் பெயர் இடம் பெற்றுள்ளது. மிக குறைந்த செலவில், சுகாதாரமான கழிப்பறைகளை அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் இவர்.
மேலும், போதிய சுகாதார வசதிகள் இல்லாத கிராமங்கள், குடிசைப் பகுதிகளிலும் இந்த கழிப்பறைகளை, தனது சுலப் அறக்கட்டளை அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொடுத்து வருகிறார். இவரது தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கழிப்பறைகளை நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் வசிக்கும் கழிப்பறை வசதி இல்லாத மக்கள் மற்றும் வீடுகள் இல்லாத மக்களின் வசதிக்காக முக்கிய நகரங்களில் 5,500 பொதுக் கழிப்பறை வளாகங்கள், இவர் உருவாக்கி கொடுத்த தொழில் நுட்பத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து மக்களும் சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாவதற்கு, இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட அனுபவமே காரணம்.
பதக் ஆறு வயது சிறுவனாக இருக்கும் போது, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தொழிலாளியை தொட்டு விட்டார். இதைக் கவனித்த அவரது பாட்டி, புனிதம் கெட்டு விட்டதாகக் கூறி, கங்கை நீரால் அவரை குளிப் பாட்டினார். பாட்டியின் இந்த செயல், பதக்கின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதனால், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என, உறுதி கொண்டார். இந்த உறுதி தான், பின்னால் செயல்வடிவம் எடுத்தது. சுகாதாரமற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களின் அவலங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதக், அந்த பகுதிகளில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், "சமூகத்தில் யாருக்காவது பாடுபட வேண்டும் என, நினைத்தால், அவர்கள் பிரச்னைகளை முதலில் அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டும்' என்றார்.
தற்போது, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும் கூட, 11 கோடி வீடுகளில் இன்னும் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை. அதேபோல், பயன்படுத்தப்படும் தண்ணீரில், 75 சதவீதம் சுகாதாரமற்றதாகவும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் குழந்தைகள் போதிய சுகாதார வசதிகள் இல்லாததால், நோய்கள் ஏற்பட்டு பரிதாபமாக மரணம் அடைகின்றன. கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது சட்ட விரோதம் என, கடந்த 1993ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் அந்த தொழிலை இன்னும் செய்து வருகின்றனர். இதுபோன்ற அவலங்களை தடுக்க வேண்டும் என்ற உறுதி கொண்டவர் பதக். இதுகுறித்து, அவர்,"இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அரசு நினைத்தால், ஒரே நாளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்'என கூறியுள்ளார்.
ஆனால் அரசு நினைக்குமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு மலிவு விலையில் சாராயம் அளித்து அவர்களை கீழான நிலையிலேயே வைக்க விரும்புவார்கள். வேறென்ன செய்வார்கள்?
டோண்டு ராகவனது இப்பதிவு பற்றி தானும் கருத்து சொல்ல வேண்டும் என படுத்துகிறான் முரளி மனோகர்.
அவன் கூறுகிறான், “டோண்டு பெரிசு 2010-ஆம் ஆண்டை வெஸ்டர்ன் டாயிலட் பற்றிய பதிவுடன் ஆரம்பித்து, இப்போது சுலப் கழிப்பறையுடன் முடிக்கிறது. என்ன தற்செயலான நிகழ்ச்சி!!!
மேலும், வால்பையன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாதாரணமாக பாப்பான் எங்கே சென்றாலும் தலைமையில்தான் இருக்க விரும்புவான். அதற்கான மனத்திடம், மேலாண்மை எல்லாமே அவனிடம் உண்டு. என்ன ஓக்கேவா?
வால் பையனின் சாதி என்னவென்று எனக்கு தெரியாது. துப்புரவு வேலைக்கு வர அவர் சாதியினர் மட்டும் விரும்புவார்களா என்பதை தங்கள் வீட்டினரை கலந்து கேட்டு அறியட்டும். அவருடன் சேர்ந்து கும்மியடிக்கும் மற்ற பதிவர்களும் தத்தம் மனதிடம் இக்கேள்வியை வைக்கட்டும். வெறுமனே பாரில் தண்ணியடித்து சிக்கன் லெக்பீஸை கடித்துக் கொண்டு முற்போக்கான கருத்துக்களை பேசினால் மட்டும் தீராது இப்பிரச்சினை”.
நன்னி முரளி மனோகர். இப்பதிவை போட தூண்டுதலாக இருந்ததற்கு நன்னி வால் பையன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
9 hours ago
61 comments:
வால்பையன் தான் ஹோட்டல் தொழிலுக்கு போய்விட்டாரே. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//வால்பையன் தான் ஹோட்டல் தொழிலுக்கு போய்விட்டாரே.//
அங்கும் சுலப் சவுச்சாலயாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டாய்லட் அமைத்தால் ஓஹோன்னு வருவார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு
இந்த பதிவு படித்து ஆதங்கம் தீரவில்லை என்றால் டெல்லி போன்ற பேரு நகரங்களில் துப்புரவு தொழில் செய்யும் பிராமணர்களை பற்றிய காணொளிகள் யூடுபில் காணலாம்.
அப்புறம் ராசா, மாயா மற்றும் அனைத்து சிறுபான்மை காவலர்களாக காட்டிக் கொள்ளும் அனைத்து தலைவர்களும் அவங்க வீட்டு கழிப்பறையை என்ன அவங்க அவங்க சாப்பாட்டுத் தட்டைக் கூட கழுவிக் கொள்ள மாட்டார்கள். இதை எல்லாம் கழிவித் தர ஆள் வேண்டும். அதில் எல்லாம் அவர்கள் சாதி பார்த்துக் கொண்டு இருந்தால் அவங்க வேலை நடக்குமா?
நம்ம பதிவர்கள் வீட்டு கழிப்பறை அடைத்துக் கொண்டால் அவங்க அவங்களே சுத்தம் பண்ணிக் கொள்வதாக இருந்தால் தயவு செய்து அதை பதிவாக போட்டு விளக்கம் கொடுத்தால் மற்றவர்களும் பின்பற்றலாம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் துப்புறவுப்பணிகளில் பிராமணர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்க தீர்மானிக்கச் சொல்லுங்கள். அதை எதிர்ப்பவர்கள் யாரென்று தெரியும்?
கக்கூஸ் கழுவுவதை மற்றவரும் செய்யமாட்டார்கள்.
ஆனால் அவர்களுக்கும் உங்களுக்கு உள்ள வேறுபாடு என்னவென்றால்
அவர்கள் உடல் உழைப்பை ஒதிக்கிக்கொண்டு, நிழலிலேயே வாழவில்லை. அனைத்து ஜாதி மக்களும் தலித்துகல் செய்யும் தொழிலைத்தவிர பிறதொழில்களை உடல் உழைப்பால் செய்தார்கள்.
நீங்கள் படிக்கமட்டும் செய்தீர்கள்.
பிறர் உழைப்பில் வந்தவை உங்கள் இக வாழ்க்கை. அரிசி, பருப்பு, காய்கறிகள் என்று எதுவுமே உங்கள் உடல் உழைப்பில் வந்தவை அல்ல. பிற ஜாதி மக்களாலேயே உங்களுக்கு வந்தவை என்பதை மறக்க வேண்டா.
ஆனால் அதற்குத் தோதாக ஜாதி அமைப்பை ஏற்படுத்தி, உங்களுக்கு படிப்பு மட்டுமெ என்று ஏற்படுத்திக்கொண்டீர்கள்.
பிறமாநில பிராமணர்களைச் சுட்டிக்காட்டி மறைக்காதீர்கள். அவர்கள் என்றோ மாறி விட்டார்கள்.
நீங்களும் அவர்களும் ஒன்றல்ல.
அடடா.... இப்படி போட்டு தாக்கிவிட்டீர்களே!
உங்களுக்கு சிக்கல் புரியவில்லை என்பதா? அல்லது வேண்டுமென்றே திசைதிருப்புகிறீர்கள் என்பதா?
டாக்டர் பாதக் அவர்களின் சுலப் அமைப்பு கழிப்பறைகளை நடத்துகிறது. அந்த அமைப்புக்கு டாக்டர் பாதக் தலைமையேற்கிறார். அவர் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வேலையில் இல்லை.
சுலப் அமைப்பிலேயே கூட கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வேலையை செய்பவர்கள் யார் என்று பாருங்கள். அந்தப்பணியில் எத்தனை பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்? என்று சொல்லுங்கள்.
முதலில் ஒரு தொழில் கீழ்த்தரமானது என்கிற கற்பிதத்தை உருவாக்கியவர்களே, பார்ப்பனர்கள்தான்.
அவரவர் சாதியினரின் மலத்தை அவரவர் அள்ளியிருந்தால் இந்த சிக்கல் எப்போதோ தீர்ந்திருக்கும். ஆனால், மலம் அல்லவும் துப்புரவு பணிக்கும் தனிசாதி என்கிற அமைப்பை கட்டமைத்ததும் அதனை காலம்காலமாக காத்ததும் பார்ப்பனர்களும் இந்து மதமும்தான்.
சும்மா சப்பைக்கட்டு கட்டாதீர்.
//துப்புறவு பணியாளர்களுடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களின் பிரச்சினைகளை அண்மையில் இருந்து அவதானித்தவர் அவர்.//
இதைக்கூட உங்க மருத்துவர் ஐயாவோ அம்புமணியோ செய்ய மாட்டாங்கய்யா. இங்கே வந்து உதார் விடாதீர்கள்.
நான் ஏற்கனவேயே சொன்ன மாதிரி பாதக் எல்லா பிரச்சினைகளையும் ஆய்ந்து சுலப் சவுசாலையை நிறுவியவர். அதில் வேலை செய்பவர்களது உடல் நலத்துக்கு தீங்கு வராது வடிவமைத்தவர். மற்றப்படி பார்ப்பனர்களே போய் பீ அள்ளினார்களா என்றால், பீ அள்ளீய வன்னியர்களை பட்டியலிடுங்கள். எதற்கெடுத்தாலும் பாப்பானை திட்டும் மற்றவர்களும் பட்டியலிடட்டும் அவ்வாறு செய்யும் தத்தம் சாதியினரை.
மகாத்மா காந்தியின் சீடரான ராஜாஜி திருச்செங்கோடு ஆசிரமத்தில் பீ அள்ளியிருக்கிறார்.
நீங்களும் உங்கள் சாதியிலிருந்து உதாரணம் கூறுங்கள்.
முதலில் நீங்கள் அள்ளுவீர்களா?
முதலில் பீ அள்ளும் தலித்துகளே நன்கு படித்து முடிந்ததும் வேறுவேலைகளுக்குத்தான் போவார்களேயன்றி பீ அள்ளுவதை தொடர மாட்டார்கள்.
டோண்டு ராகவன்
hayyram said...
// //தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் துப்புறவுப்பணிகளில் பிராமணர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்க தீர்மானிக்கச் சொல்லுங்கள். அதை எதிர்ப்பவர்கள் யாரென்று தெரியும்?// //
உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள்தானே கேட்க வேண்டும். அனைத்து நகராட்சி - மாநகராட்சிகளிலும் துப்புரவுப்பணிகளில் பார்ப்பனர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்க கேட்டு - BJP, RSS, சங்கரமடத்திலிருந்து வேண்டுகோள் வருமா?
50% அல்ல 100 % பார்ப்பனர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்கு சமூகநீதிக்கட்சிகள் நிச்சயம் உடன்படும்.
பல கோவில்களில் அர்ச்சகர் பணியில் 100% பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கும்போது, துப்புரவு பணியில் 100% பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு இருக்கக்கூடாதா? என்ன?
@ஜோ
//அவர்கள் உடல் உழைப்பை ஒதிக்கிக்கொண்டு, நிழலிலேயே வாழவில்லை. அனைத்து ஜாதி மக்களும் தலித்துகல் செய்யும் தொழிலைத்தவிர பிறதொழில்களை உடல் உழைப்பால் செய்தார்கள்.
நீங்கள் படிக்கமட்டும் செய்தீர்கள்.
பிறர் உழைப்பில் வந்தவை உங்கள் இக வாழ்க்கை. அரிசி, பருப்பு, காய்கறிகள் என்று எதுவுமே உங்கள் உடல் உழைப்பில் வந்தவை அல்ல. பிற ஜாதி மக்களாலேயே உங்களுக்கு வந்தவை என்பதை மறக்க வேண்டா.//
அப்படி என்றால் மற்றவர்களிடம் பணம் பெர்றுக் கொண்டு சிறுவர்களை ஓரினப் புணர்ச்சி செய்யும் கிறித்துவ பாதிரியார்களை போய் கேளுங்கள் தைரியம் இருந்தால்.
எங்கள் மதத்துக்குள் உங்களைப் போன்ற கிறித்துவ மதவெறி சக்திகள் வந்து சிண்டு முடிய வேண்டாம்.
பொத்திக் கொண்டு போங்கள்.
டோண்டு ராகவன்
""வால்பையனின் பதில்: துறைகளின் மேலதிகாரியாக மட்டுமே இருக்க நினைப்பது தான் அதற்கு காரணம், துப்புரவு பணியாளர்கள் வேலையில் பாப்பானை சேரச்சொல்லுங்கள், யாருக்கு பயம் என்று அப்பொழுது விளங்கும்!""
வால்பையன் நேரடியாக தனது கருத்தைக் கூறியுள்ளார். பாவம், உங்களால் அதற்கு நேரடியாக பதில்தர முடியவில்லை.
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
தரங்கெட்ட அரசியல்வாதியைப்போல் விளம்பரம் தேடி கொள்பவன் தான் நானும் கக்கூஸ் கழுவுறேன் பார் என்பான்! அதையும் ஒரு வேலையாக நினைப்பவன் அல்ல!
மேலும் நீங்கள் சொல்லும் நபர் நிச்சயமாக பார்பனீய புத்தியுடன் இருந்திருக்க மாட்டார், அவரையும் உங்களுடம் கூட்டு சேர்த்து அவர் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள்!
//பொத்திக் கொண்டு போங்கள். //
கட்டம் சரியில்ல போல!
:)
டோண்டு ராகவன் Said...
// //மகாத்மா காந்தியின் சீடரான ராஜாஜி திருச்செங்கோடு ஆசிரமத்தில் பீ அள்ளியிருக்கிறார்// //
""இந்து மதம் என்பது பெரிய புரட்டு. இந்து மதம் என்பதாக எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு எந்த முறையும் இல்லை எந்தத் திட்டமும் இல்லை.
பார்ப்பனர் சக்திக்கு ஏற்ப - பார்ப்பனரல்லாதவர்களின் முட்டாள் தன்மைக்கும், மானமற்ற தன்மைக்கும் ஏற்ப அவ்வப்போது உண்டாகும் - உண்டாக்கிக்கொள்ளும் திட்டங்களும், கருத்துக்களுமேயாகும்.
அதுவும் தேசத்திற்கு ஒருவிதம், நாட்டுக்கு ஒருவிதம், ஊருக்கு ஒருவிதம், சமயத்திற்கு ஒருவிதம், சந்தர்ப்பத்திற்கு ஒருவிதம், ஆளுக்கொருவிதம் என்றெல்லாம் சொல்லலாம்.
இராஜாஜி 'பஞ்சமர்' வீட்டில் சாப்பிடுவார்; சங்கராச்சாரி பஞ்சமனைக் கண்டதற்கு குளிப்பார்; சிலர் நிழல் பட்டதற்குக் குளிப்பர்; சிலர் தொட்டதற்குக் குளிப்பர்; சிலர் 'பஞ்சம' ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொண்டு பார்ப்பனராகவே இருப்பார்கள்.
'பலித்தவரை' என்பதுதான் பார்ப்பனீயமும், இந்து மதமுமாகும்.
...பார்ப்பன ஆச்சாரம் 1900இல் ஒருவிதம்; 1940இல் ஒருவிதம்; 1940க்குப் பின் ஒருவிதமாகத்தான் இருக்கிறது.
...இன்று பார்ப்பனர்களுக்கு எது எப்படிப்போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டமும், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும், எப்படியும் நடத்திக்கொள்ளலாம் என்பதை உயர் தர்மமாகக் கொண்டிருக்கிறார்கள்.""
-- தந்தை பெரியார், விடுதலை 4.3.1969
//..அதுவும் தேசத்திற்கு ஒருவிதம், நாட்டுக்கு ஒருவிதம், ஊருக்கு ஒருவிதம், சமயத்திற்கு ஒருவிதம், சந்தர்ப்பத்திற்கு ஒருவிதம், ஆளுக்கொருவிதம் என்றெல்லாம் சொல்லலாம்...//
like what Vanniyars do today under the leadership of "Pachondi Ramadoss". So your cause is not Social cause but to get recognised in the high strata of the society and treat the dalits as they are today.
//கட்டம் சரியில்ல போல//
அந்த பதில் ஜோவுக்கு. உங்களுக்கல்ல.
//மேலும் நீங்கள் சொல்லும் நபர் நிச்சயமாக பார்பனீய புத்தியுடன் இருந்திருக்க மாட்டார், அவரையும் உங்களுடம் கூட்டு சேர்த்து அவர் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள்!//
இந்த உதாரெல்லாம் வேண்டம். உதாரணம் நான் தந்து விட்டேன். தைரியமாக நீங்கள் பிறந்த சாதியைக் கூறி உங்கள் சாதியினர் அள்ளுவார்களா என்பதைக் கூறவும்.
டோண்டு ராகவன்
//வால்பையன் நேரடியாக தனது கருத்தைக் கூறியுள்ளார். பாவம், உங்களால் அதற்கு நேரடியாக பதில்தர முடியவில்லை.//
எதை எடுத்தாலும் கோணப்பார்வையுடன் பார்ப்பன வெறுப்பாக மாற்றும் நீங்கள், அதுவும் கோபால கிருஷ்ண நாயுடு செய்த கொலையை பூசி மெழுகிய பலீஜா நாயுடுவை கோட் செய்யும் நீங்கள்தான் நேரடியான பதிலைத் தரவியலவில்லை.
நீங்கள் அனுதாபத்துக்குக் கூட லாயக்கற்றவர்.
டோண்டு ராகவன்
அடடா, நீங்க இன்னும் 1969 க்கு மேலே வரவே இல்லையா? நல்லைக்கு விடிஞ்சா 2011 .
இப்போ இங்கே கழிப்பறை ஒட்டு போட்டுக் கொண்டு இருக்கும் எல்லோரும் அதை தான் அவங்க அவங்க தொழிலா வைத்து இருக்கீங்களா?
இன்று ஒவ்வொரு துறையிலும் அவரவர் மேலதிகாரியை வரத் தான் உழைப்பாங்க. சொந்தத் தொழில் செய்தா அதிலும் முன்னேறத் தான் முயற்சி செய்வாங்க. இப்போ சொந்த த தொழில் செய்பவங்க யாராவது உயர் பதவியாக அதிக சம்பளம் தரும் பதவியாக துப்புரவை வையுங்களேன். சும்மா ஏன் அடுத்தவன் பற்றி பேச்சு.
பார்பான் தான் ஒரு இனத்தை அப்படி ஒதுக்கி வைச்சுட்டான். அதனால நாங்களும் அதை அப்படியே கடை பிடிக்கறோம். ஏதாவது கேக்கணும்னா அவனைக் கேளுங்க.
நல்லா இருக்கு.
//தைரியமாக நீங்கள் பிறந்த சாதியைக் கூறி உங்கள் சாதியினர் அள்ளுவார்களா என்பதைக் கூறவும்.//
சாதியை வைத்து பயன் அடையவும், சாதியை பெருமையாக நினைப்பவர்களும் தான் அதை சொல்லிக்கொள்ள வேண்டும்!
நான் மனிதசாதி, அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது!, நான் எத்தொழிலையும் கேவலமாக நினைப்பவன் அல்ல!
//நான் எத்தொழிலையும் கேவலமாக நினைப்பவன் அல்ல!//
உங்கள் ஓட்டலில் கழிப்பறை அடைப்பு வந்தால் தாராளமாக சரி செய்து விட்டு கல்லாவில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்களேன். யார் தடுப்பது?
உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்.
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //எதை எடுத்தாலும் கோணப்பார்வையுடன் பார்ப்பன வெறுப்பாக மாற்றும் நீங்கள்// //
பார்ப்பன கொடுமைகளை சுட்டிக்காட்டுவதற்கு பெயர் கோணப்பார்வையா?
பார்ப்பனர் அல்லாதோருக்கு எந்த உரிமையும் கிடைத்துவிடக்கூடாது என்கிற அடாவடியான கோணபுத்தியுடன் - எல்லோரும் ஒரே மாதிரியாக - 99.99 % பார்ப்பனர்கள் இருப்பது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?
அத்தனை பார்ப்பானும் BC/MBC/SC/ST/சிறுபான்மை மக்கள் மீது அடங்காத வெறுப்புடன் அலைகின்றீர்கள். பழிவாங்க கிடைக்கும் ஒரு வாய்ப்பையும் நீங்கள் தவற விடுவதே இல்லை. அதனை எதிர்த்து ஏதோ ஒரு சிலர் பேசினால் - அது பார்ப்பன வெறுப்பா?
Dondu Sir, don't waste your time ...whereever..whatever...however...Brahmins are the best...very nice you said..sitting in bar, eating chicken and talking anti-brahmin is their time pass...they are good for nothing to do a social reform or anything productive for the society...other than spreading hatred...dont care about them....also for your qualification you should not level with...
டோண்டு ராகவன் Said...
// //உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்// //
"தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் துப்புறவுப்பணிகளில் பிராமணர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்க தீர்மானிக்கச் சொல்லுங்கள்" என்கிற hayyramஇன் ஆசைக்கு உங்கள் ஆதரவு உண்டா?
அத்தனை Vanniyanum BC/MBC/SC/ST/சிறுபான்மை மக்கள் மீது அடங்காத வெறுப்புடன் அலைகின்றீர்கள். பழிவாங்க கிடைக்கும் ஒரு வாய்ப்பையும் நீங்கள் தவற விடுவதே இல்லை.
//"தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் துப்புறவுப்பணிகளில் பிராமணர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்க தீர்மானிக்கச் சொல்லுங்கள்" என்கிற hayyramஇன் ஆசைக்கு உங்கள் ஆதரவு உண்டா?//
தாராளமா கொடுங்க. ஆளுங்க போதுமான அளவுக்கு வந்தா எடுத்துக்குங்க.
டோண்டு ராகவன்
@Saveena
இந்து மதம், அதன் மூடநம்பிக்கைகள், சாதீய ஏற்றத்தாழ்வு, சோதிடம், தீயைக்கொளுத்தி அதில் விலைமதிப்புள்ள பொருட்களை கொட்டுவது,
- திருமணம், குழந்தைக்கு காது குத்துதல், திதி என்று ஏதேதோ சொல்லி அப்பாவிகளிடம் பணம் பிடுங்குவது,
- கடலில் விழும் ராக்கெட்டை விட நல்ல நேரம் குறித்துக்கொடுப்பது,
- இளம் வயதில் கணவன் இறந்தால் பெண்ணை மொட்டையடித்து மூளியாக்கி பூட்டிவைப்பது..
-'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிவந்தது போல' மற்றவர் உழைப்பில் கட்டப்படும் கோவில்களில் உட்கார்ந்து கொள்ளையடிப்பது
- இசுலாமியர்களும் கிறித்துவர்களும் எதிரிகள் என்று கட்டுக்கதைக் கட்டி, மதக்கலவரங்களைத் தூண்டி இரத்தம் குடிப்பது
-தமிழ் இனத்தை, தமிழ் மொழியை அழிக்க கங்கணம் கட்டி காத்திருப்பது - இராசபட்சேவுடன் கூட்டு சேர்ந்து கூட்டுக்கொலை செய்வது
பார்ப்பனர்கள் செய்த பணிகளை ("social reform or anything productive for the society") பட்டியல் போடமுடியுமா?
//அத்தனை பார்ப்பானும் BC/MBC/SC/ST/சிறுபான்மை மக்கள் மீது அடங்காத வெறுப்புடன் அலைகின்றீர்கள்.//
வன்கொடுமை இன்னும் இருக்கையிலேயே வன்கொடுமை சட்டத்தை எடுக்கச் சொன்னவர்தானே உங்கய்யா.
டோண்டு ராகவன்
//உங்கள் ஓட்டலில் கழிப்பறை அடைப்பு வந்தால் தாராளமாக சரி செய்து விட்டு கல்லாவில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்களேன். யார் தடுப்பது?
உங்கள் ஆசையைக் கெடுப்பானேன்.//
முதன் முதலில் தாஜ்கோரமண்டலில் வேலைக்கு சேரும் பொழுது ஹவுஸ்கீப்பிங்கில் சேர்ந்தேன்!
அதில் அனைத்து வேலையும் தான் அடக்கம்!, மகிழ்ச்சியாக தான் செய்தேன், சம்பளத்துக்கு செய்வதற்கே அப்படி என்றால், இது என் உணவகம், எப்படி செவேன்!
//sitting in bar, eating chicken and talking anti-brahmin is their time pass//
ஹாஹாஹா!
//சம்பளத்துக்கு செய்வதற்கே அப்படி என்றால், இது என் உணவகம், எப்படி செவேன்!//
செய்வீர்களா மாட்டீர்களா? சொற்பிரயோகம் செய்ய மாட்டேன் என்பது போல வருகிறது. ஆனால் அதை நீங்கள் மீன் செய்யவில்லை என நினைக்கிறேன்.
மொழிக்கோளாறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சொற்பிரயோகம் செய்ய மாட்டேன் என்பது போல வருகிறது.//
எப்படி செய்வேன் என்பதை இன்னும் க்மகிழ்ச்சியுடனும், ஈடூபாட்டுடனும் செய்வேன் என்ற அர்த்தத்தில் சொன்னேன்!
எனக்கு அனைத்து துறைகளிலும் அனுபவம் உள்ளதால் சிறப்பாக நடத்த உதவியாக உள்ளது!
டோண்டு ராகவன் Said...
// //ஆனால் அதை நீங்கள் மீன் செய்யவில்லை என நினைக்கிறேன்.// //
அவர் கழிவறையை சுத்தம் செய்கிறாரா? இல்லையா? - என்பதா சிக்கல்.
தாங்கள் தீட்டு, தாழ்ந்தது என்று ஒதுக்கி வைத்து, வலுக்கட்டாயமாக குறிப்பிட்ட சாதியினரை அவற்றில் ஈடுபட வைத்த வேலைகளை - பார்ப்பனர்கள் இப்போது செய்கிறார்களா?
//தாங்கள் தீட்டு, தாழ்ந்தது என்று ஒதுக்கி வைத்து, வலுக்கட்டாயமாக குறிப்பிட்ட சாதியினரை அவற்றில் ஈடுபட வைத்த வேலைகளை - பார்ப்பனர்கள் இப்போது செய்கிறார்களா?//
அவ்வாறு கட்டாயமாக ஈடுபட வைத்தது, வைப்பது, சடங்குகளில் தப்பு அடிக்குமாறு கட்டாயப்படுத்துவது, தலித்து காலில் செருப்புடன் நடந்தால் அவர்களை வன்கொடுமை செய்வது எல்லோருமே பார்ப்பனர் தவிர்த்த மர்ற உயர்சாதியின, பிசிக்கள், ஓபிசிக்களே. அவர்களை பீ அள்லச் சொல்லுங்கள்.
டோண்டு ராகவன்
Here some people are asking how many brahmins are cleaning toilets.
If you had followed david frawley's writings in rediff you would have know how many brahmins work in those toilets.
Here is a samle
http://www.sulabhinternational.org/press_detail.php?news_id=1&flag=1
//எனக்கு அனைத்து துறைகளிலும் அனுபவம் உள்ளதால் சிறப்பாக நடத்த உதவியாக உள்ளது!//
மகிழ்ச்சி. நானும் அதைத்தான் நினைத்தேன். இருப்பினும் உங்கள் வார்த்தை பிரயோகம் தெளிவாக இல்லை. அதை ஒரு மொழியாளன் என்னும் முறையில் காட்டினேன். அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
http://www.free-press-release.com/news-poor-exploitated-brahmins-1278709679.html
//டாக்டர் பாதக் அவர்களின் சுலப் அமைப்பு கழிப்பறைகளை நடத்துகிறது. அந்த அமைப்புக்கு டாக்டர் பாதக் தலைமையேற்கிறார். அவர் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வேலையில் இல்லை.//
இல்லை, டாயிலட்டுகளிலும் பார்ப்பனர்கள் வேலை செய்கிறார்கள், பார்க்க: http://www.free-press-release.com/news-poor-exploitated-brahmins-1278709679.html
டோண்டு ராகவன்
சுட்டிக்கு நன்றி கிருஷ்ணகுமார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு விசயத்தை பாசிட்டிவாக அணுகுவது என்பதை சொல்லி இருக்கிறீர்கள். இதே போல் சிவகாமி அய்.ஏ.எஸ் அவர்களும் தன்னிறைவு பெற்ற சேரிகளை உருவாக்குவதைப் பற்றி பேசி வருகிறார்.
இழிவிலிருந்து நீக்குவதற்கான வழி வகைகளை ஆராய்வதை விட்டு மூல காரணம் அது இது என்று சிந்திப்பது நேர விரயம்
செந்திலான் said...
// //இழிவிலிருந்து நீக்குவதற்கான வழி வகைகளை ஆராய்வதை விட்டு மூல காரணம் அது இது என்று சிந்திப்பது நேர விரயம்// //
மிக்க சரி. சமூகநீதி, சமத்துவத்திற்கான முயற்சிகளை, சட்டங்களை குறுக்கே பாய்ந்து பார்ப்பனர்கள் தடுக்காமல், முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் - அதுதான் அவர்கள் செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான் மாபெரும் நற்பணி.
அப்படி என்றால் மற்றவர்களிடம் பணம் பெர்றுக் கொண்டு சிறுவர்களை ஓரினப் புணர்ச்சி செய்யும் கிறித்துவ பாதிரியார்களை போய் கேளுங்கள் தைரியம் இருந்தால்.
எங்கள் மதத்துக்குள் உங்களைப் போன்ற கிறித்துவ மதவெறி சக்திகள் வந்து சிண்டு முடிய வேண்டாம்.//
எங்கள் மதம் என்கிறீர்களே அது என்ன மதம்? இந்து மதமா? அதற்கு ஏதாவது ரைட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன ரேட்டு?
இந்துத்வா பேசி, முசுலீகளைக் கொல், அவர்கள் பெண்களை வன்புணர் என்பவனுக்கு வால்பிடிப்பவனேல்லாம் இந்து என்றால், கோயிலில் போய் கும்பிடுவன் ஆர்? அவன் என்ன இந்துத்வா பேசினான்? எந்த மசூதியை ஏறி உடைக்க முற்பட்டான்.
ஜோ என்ற பெயரை வைத்து நான் கிருத்துவப்பாதிரி என்று முடிவு கட்டும் ராகவன் பெயரை வைத்து நான் ராகவன் ஒரு வைணவன் என்று முடிவு கட்டுவேனா?
உங்களுக்கும் இந்து மத்ததுக்கும் காத தூரம். உங்களுக்கு இருப்பது மதமல்ல. மதமென்ற பெயரில் இருக்கும் மதம்.
எல்லாரும் இந்துவாக முடியாது. கண்டிப்பாக நீங்கள் இந்து அல்ல. ஒரு இந்துத்வா வாதி.
இந்துத்வா வாதிகள் அரசியல்வாதிகள். அவர்களுக்கு மதம் இல்லை.
உங்களுக்கு நான் கிருத்துவப்பாத்ரிகளைத் திட்ட வேண்டும். அவ்வளவுதானே? அதை உங்களைவிட அழகாகச்ச் செய்வேன். காதைப்பொத்திக்கொள்ளுங்கள்.
கிருத்துவப்பாதிரி தேவடியாப்பய்லுக மதம், மடம் என்று சொல்லிக்கொண்டு, ஓரினச்சேர்க்கை செய்து கொண்டிருக்கிறான்கள். இவன்களால் நாடு குட்டிச்சுவராகிப்போய்க்கொண்டு இருக்கிறது. இந்தத் தேவடியாப்பயலுக உள்ளே போட்டுத்தாக்க வேண்டும்.
இப்போது ராகவன் சொல்லலாம். பட்டப்ப்கலில் கோயிலுக்குள் வைத்து கூலிப்படைகொண்டு ஒருவனை கொலை செய்த இந்துச்சாமியாரைப்பற்றி;
கோயிலுக்குள் தேவடியாக்களைக்கூட்டி வந்து கும்மாளம்போட்ட தேவநாதன் என்ற பாப்பானைப்பற்றி.
எழுதுவாரா ராகவன்?
எனக்கு எல்லாமே ஒன்னு ராகவன். எனக்கு மதம் உண்டு. ஆனால் மதம் பிடித்தல்ல. ஜாதி கிடையாது. எனவே நான் எவனையும் போட்டுத்தாக்குவேன். பாரபட்சம் கிடையாது தவறென்றால்.
ராகவ்னால் முடியுமா?
மேக்ஸிமம் பொத்திக்கொண்டு போ என்று சொல்லித்தப்பிக்கலாம் இல்லையா?
@ஜோ
உம்முடைய வக்ர எழுத்துக்களுக்கு என் பதிவு தேவையில்லை. அவை இங்கு அனுமதிக்கப்பட மாட்டாது. கிளம்பவும்.
டோண்டு ராகவன்
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
சுலப் கழிவறைகளை பாடக் உருவாக்கியது பற்றி உங்கள் பதிவைக் கண்ட பின் வால் பையன் "சில புதிய உண்மைகள் தெரியப் படுத்தியமைக்கு நன்றி" என்று பதிவு போட்டு இருக்க வேண்டும். அப்படித்தான் எதிர் பார்த்தேன். உங்கள் பதிவுகளுக்கு எதாவது பின்னூட்டம் போட்டே ஆக வேண்டும், தாங்கள் சொல்வதை மறுத்தே ஆக வேண்டும் என்று சிலர் எழுதுவதை பல முறை கண்டவன் தான். திறந்த மனதுடன் ஒரு பிரச்னையை பார்ப்பது எல்லாராலும் இயலாது. உங்கள் பொறுமையை பாராட்டுகிறேன். .
டோண்டு சாரின் விமர்சனம்?
1.ஓயாமல் இசையமைத்தது போதும்… வரும் 2011-ம் ஆண்டில் முழு ரெஸ்ட் எடுப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.
2.செல்வராகவன், யுவன், தனுஷ் வெற்றிக்கூட்டணி மீண்டும் கைகோர்க்க இருக்கிறது. இவர்களின் முந்தைய படஙகள் எல்லாமே ஹிட் என்பதால் இதையும் வெற்றிப்படமாக எதிர்ப்பார்க்கலாம்.
3.தமிழ்த் திரையுலகில் கோலாகலங்களுக்கு இணையாக கலாட்டாக்களுக்கும் பஞ்சமிருக்காது. 2010ல் பல முக்கியத் திருமண வைபவங்களை தமிழ்த் திரையுலகம் சந்தித்தது. அதேபோல சில கலாட்டாக் கல்யாணங்களையும் கண்டது.
4.நீரில் ஓடும் கார் என்ற ரத்தன் டாடாவின் கனவு நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரபல விஞ்ஞானி சி என் ஆர் ராவ் தெரிவித்துள்ளார்.
5.இணையதள ஜாம்பவனான கூகுள் சர்ச் இஞ்ஜினை முந்தி முதன்முறையாக பேஸ்புக் சாதனை படைத்துள்ளது.
//உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள்தானே கேட்க வேண்டும். அனைத்து நகராட்சி - மாநகராட்சிகளிலும் துப்புரவுப்பணிகளில் பார்ப்பனர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்க கேட்டு - BJP, RSS, சங்கரமடத்திலிருந்து வேண்டுகோள் வருமா?// அருள், பிராமணர்களை கக்கூஸ் கழுவச்சொல்லும் நீங்கள் தான் அதற்கான வாய்ப்பையும் உண்டாக்க வேண்டும். உங்களுக்கு இனிக்கிற வேலைகளில் எல்லாம் நீங்கள் ஒதுக்கீட்டை நீங்களே தானே உருவாக்கிக் கொண்டீர்கள். சரி , கக்கூஸ் கழுவ வண்ணியர்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என குரல் கொடுங்களேன் பார்ப்போம். அப்போது மட்டும் தலித்துகள் கழுவுகிறார்கள் நாம் ஏன் இழுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அமைதி காப்பதேன். என் வீட்டு கக்கூஸை நான் தான் கழுவுகிறேன். மருத்துவர் ஐயா கக்கூஸை அவரே கழுவுகிறாரா? தலித்தை வேலைக்கு வைத்திருக்கிறாரா? உண்மையைச் சொல்லுங்கள்?
//எங்கள் மதம் என்கிறீர்களே அது என்ன மதம்? இந்து மதமா? அதற்கு ஏதாவது ரைட்டு வைத்திருக்கிறீர்களா? // ஜோ, கொஞ்சம் கொஞ்சமாக உமது பாதிரியார் புத்தியை கான்பிக்கிறீர் பார்த்தீரா? கொஞ்சம் விட்டால் இங்கேயே சுவிசேஷப் பிரசாரம் செய்வீர்கள் போலிருக்கிறதே! வரவர கிறிஸ்தவர்களிடம் நிம்மதியாக பழக முடியாது போலிருக்கிறது. கொஞ்ச நேரம் பேசினால் உடனே உன் மதம் சாத்தான் மதம் ஏசுவைக்கும்பிடு என்று ஆரம்பிக்க துவங்கிவிடுகிறார்கள்.
@வால்பையன்
//அதில் அனைத்து வேலையும் தான் அடக்கம்!, மகிழ்ச்சியாக தான் செய்தேன், சம்பளத்துக்கு செய்வதற்கே அப்படி என்றால், இது என் உணவகம், எப்படி செவேன்//
நல்லது.
உங்கள் புதிய தொழில் இந்தப் புத்தாண்டில் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.
நமது நேரத்தை உழைப்பை பிறரை வெறுக்க பழிக்க செலவிடாமல் ஆரோக்கியமான முறையில் செலவிடுதலின் அவசியத்தையும் உணர்ந்தே இருப்பீர்கள் இல்லையா.
மறுபடியும் வாழ்த்துக்கள்.
உங்கள் உணவகம் சென்னையிலா இருக்கிறது?
@டோண்டு
இந்த புத்தாண்டு முதல் முட்டாள்களுடன் விவாதம் செய்யாதீர்கள் என்ற உங்கள் பதிவில் கூடவே மூளைச் சலவை செய்யப்பட்டவர்களிடமும் விவாதம் செய்யாதீர்கள் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
எங்களுக்கும் அது நினைவில் நிற்க உதவும்
@Arul
//மிக்க சரி. சமூகநீதி, சமத்துவத்திற்கான முயற்சிகளை, சட்டங்களை குறுக்கே பாய்ந்து பார்ப்பனர்கள் தடுக்காமல், முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் - அதுதான் அவர்கள் செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான் மாபெரும் நற்பணி.//
அருள்
இதில் சமூக நீதிக்கான சட்டம் எங்கே வந்தது என்று புரியவில்லை. இதில் சட்டம் போட என்ன இருக்கிறது ?
மனித கழிவை மனிதனே கழுவுவதில் இருந்து மக்களை தடுக்க ஏற்கனவே சட்டம் இருக்கிறது.என்ன பயன் ?
//எங்கள் மதம் என்கிறீர்களே அது என்ன மதம்? இந்து மதமா? அதற்கு ஏதாவது ரைட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன ரேட்டு?//
நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தில் ரேட்டு போட்டு மதத்துக்கான ரைட்டு கொடுத்துதான் பழக்கமோ? இந்து மத ரைட்டுக்கு ரேட்டு கேட்கிறீர்களே!!!
செந்திலான் said...
// //அருள்
இதில் சமூக நீதிக்கான சட்டம் எங்கே வந்தது என்று புரியவில்லை. இதில் சட்டம் போட என்ன இருக்கிறது ? // //
""ஒரு விசயத்தை பாசிட்டிவாக அணுகுவது என்பதை சொல்லி இருக்கிறீர்கள். இதே போல் சிவகாமி அய்.ஏ.எஸ் அவர்களும் தன்னிறைவு பெற்ற சேரிகளை உருவாக்குவதைப் பற்றி பேசி வருகிறார்.
இழிவிலிருந்து நீக்குவதற்கான வழி வகைகளை ஆராய்வதை விட்டு மூல காரணம் அது இது என்று சிந்திப்பது நேர விரயம்""
- என்று நீங்கள்தான் கூறியுள்ளீர்கள்.
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கும் - சிவகாமி அய்.ஏ.எஸ் அவர்களும் தன்னிறைவு பெற்ற சேரிகளை உருவாக்குவதைப் பற்றி பேசி வருவதற்கும் என்ன தொடர்பு?
"இழிவிலிருந்து நீக்குவதற்கான வழி வகைககள்" என்றால் என்ன? குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அதிகளவில் துப்புரவு பணியில் இருப்பதற்கு காரணம் சாதிதான். சாதி சிக்கல் என்பது சமூகநீதி இல்லாமல் தீராது. சமூகநீதி சட்டத்தின் வழியாகவே வந்தாக வேண்டும் (பார்ப்பன - ஆதிக்கசாதி சிறுபான்மைக்கூட்டத்தின் கருணையினால் சமூகநீதி கிடைக்காது)
"குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அதிகளவில் துப்புரவு பணியில் இருப்பதற்கு காரணம் சாதிதான். சாதி சிக்கல் என்பது சமூகநீதி இல்லாமல் தீராது. சமூகநீதி சட்டத்தின் வழியாகவே வந்தாக வேண்டும் (பார்ப்பன - ஆதிக்கசாதி சிறுபான்மைக்கூட்டத்தின் கருணையினால் சமூகநீதி கிடைக்காது)
-Arul
மூலகாரணம் ஒரு குறிப்பிட்ட சாதியனரே இழிதொழில் செய்யவேண்டும் என பிராமணர் எழுதி வைத்ததே.
அதைப்பற்றி ஏன் பேசமறுக்கிறார்கள்?
இல்லை, டாயிலட்டுகளிலும் பார்ப்பனர்கள் வேலை செய்கிறார்கள்//
வடநாட்டுப்பார்ப்னர்கள் மக்களோடு இணைந்து வாழ்கிறார்கள்.
நீங்கள் வேறு. அவர்கள் வேறு
அவர்களைக்காட்டி நீங்கள் குளிர்காய்வது என்ன நியாயம்?
”வக்ர எழுத்துக்களுக்கு என் பதிவு தேவையில்லை. அவை இங்கு அனுமதிக்கப்பட மாட்டாது. கிளம்பவும்.
”
கிறுத்துவபாதிரியை விட்டுவிட்டு இந்துக்களைச்சொல்கிறாயே என்று கேட்டது இராகவன்.
எனக்கு எல்லாரும் ஒன்று.
ஆனால் ஏன் கொலைசெய்து, கும்மாளம்டிக்கும் ஏன் நீங்கள் விட்டுவிட்டீர்கள்?
கிளம்புங்கள் என்பது பதில் சொல்லப்பயப்படுதல் என்பதே.
உடனே, நானா பயந்தாகொள்ளியா என்று புறப்பட்டு விட வேண்டாம்.
You may show you are neutral like me.
I can tear to pieces any Christian rascal. Can you do it to any Hindu rascal ?
What is your comment on the caste system which assigns the dirty jobs to dalits?
@ஜோ அமலன் ராயன் ஃபெர்னாண்டோ
வினவின் இந்தப் பதிவுக்கு போய் பதில் கூறுங்கள்.
உங்களுடன் என் மதத்தை டிஸ்கஸ் செய்ய நான் ரெடியாக இல்லை. உங்களுக்கு loco standi இல்லை. எனக்கு உபயோகமான வேலைகள் பல உள்ளன.
//மூலகாரணம் ஒரு குறிப்பிட்ட சாதியனரே இழிதொழில் செய்யவேண்டும் என பிராமணர் எழுதி வைத்ததே.//
பிராமணர் எழுதி வைக்கவில்லை. வேண்டுமானால் மனுவைக் கூறலாம். அவர் பிராமணர் அல்ல. அதுவும் நடந்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு வந்து சம்மனில்லாமல் ஆஜராக உங்களுக்கு அனுமதியில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ஜோவினவின் பதிவின் சுட்டி:
https://www.blogger.com/comment.g?blogID=9067462&postID=6368645640587760771
டோண்டு ராகவன்
மனிதக்கழிவை மனிதனே சுமக்கும் அவலம் இந்திய நகரங்களில் நடக்க முக்கிய காரணம் dry latrine தான். dry latrine ஐ இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது யார் என்று யாராவது ஆராய்ச்சி செய்து சொல்லுங்கள்.
சிந்து சமவெளி நாகரீகத்தில் கக்கூஸ் எல்லாம் கட்டி வைத்திருந்தனர் என்று படித்திருக்கிறேன். அதுவும் தண்ணீரைக்கொண்டு ஃபிளஷ் செய்யக்கூடிய கக்கூஸ்கள்.
அதன் பின்னர் இந்தியாவில் என்ன ஆயிற்று ?
//You may show you are neutral like me.//
தனக்குத்தானே சான்றிதழ் வழங்கி மார்தட்டிக் கொள்ளும் இந்த வழக்கம் தான் தமிழக அரசின் நில ஒதுக்கீட்டு ஊழலின் முக்கிய அம்சம். இதை முதலில் விட்டுத் தொலைத்தாலே ஊர் உருப்படும்.
சொந்தச் சான்றிதழ் நடுவாங்கடை (Self certified neutral) ஜோ ஏன் pointed questionsக்கு விடையளிக்க மறுக்கிறார்?
Post a Comment