உலகெங்கிலுமுள்ள கிறித்துவ சகோதரர்கள் இன்றைய தினத்தை குழந்தை ஏசுவின் பிறந்த நாளாக கொண்டாடுகின்றனர். அவர்கள் எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
செசில் பி டிமில்லியின் “அரசர்களுக்கு அரசன்”, “பத்துக் கட்டளைகள்” ஆகிய படங்களை நான் சிறுவயதிலேயே பார்த்து அவற்றால் ஈர்க்கப்பட்டவன். அதிலும் பத்துக் கட்டளை படத்துக்கு என் தந்தையின் ஆன்லைன் மொழிபெயர்ப்பு வேறு அப்படத்தை நான் ரசிக்க உதவி செய்தது பற்றி ஏற்கனவேயே எழுதியுள்ளேன். அரசர்களுக்கு அரசன் மௌனப் படம். சப் டைட்டில்கள்தான் வரும். அவற்றையும் என் தந்தைதான் எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னார் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
மேலும், எனது அபிமான எழுத்தாளர் திருமதி டய்லர் கால்ட்வெல் அவர்களது பல நாவல்கள் மூலம் எனக்கு கிறித்துவ மதத்தின் மீது மிகுந்த அபிமானமே வந்தது.
ஆனால் பெரியவனானதும் வேறு பல புத்தகங்களைப் படித்ததில் எனது நம்பிக்கையில் சில மாறுதல்கள் வந்தன. அவர்றில் ஒன்று ஏசுவின் கன்னிப் பிறப்பு. அது பற்றி சில வரிகள் இங்கு.
மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ் காமில் ஒரு சிறு சலசலப்பு. ஒரு மன்ற இடுகை தவறான மொழிபெயர்ப்பினால் வந்த அனர்த்தங்கள் பற்றியது. அதற்கான உதாரணங்கள் கேட்கப்பட்டிருந்தன. என் பங்குக்கு பைபிள் பழைய ஏற்பாட்டில் வந்த பிழையான மொழிபெயர்ப்பு பற்றி எழுதினேன். விஷயம் இதுதான்.
ஒரு முறை இசாக் அசிமோவ் ஸ்பெயினில் ஒரு மியூசியத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு இருண்டகாலம் என ஐரோப்பிய சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் அச்சிடப்பட்ட பைபிள் இருந்தது. அதை அச்சிட்டு வெளியிட்டவர்கள் அந்த நாட்டில் உள்ள யூதர்கள். இசாக் அசிமோவ் அந்த பைபிளை புரட்டிப் பார்த்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் யூதர்களின் ரட்சகர் பற்றி ஒரு முன்னறிவிப்பு இருந்தது. “ஒரு அல்மாவுக்கு ரட்சகர் பிறப்பார்” என ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் ஹீப்ரூ மொழியாகும். இந்த வாக்கியத்தில் எல்லாமே ஸ்பானிய மொழியில் இருக்க அல்மா என்ற ஹீப்ரூ சொல் மட்டும் அப்படியே கையாளப்பட்டிருந்தது. அல்மா என்றால் கல்யாண பிராயத்தை ஆடைந்த இளம் பெண் என்று பொருள். ஆனால் சாதாரணமாக எல்லா மொழிகளீலும் இந்த இடத்தில் கன்னி என்றுதான் மொழிபெயர்ப்பார்கள். ஒரு நிமிடம் திகைத்த அசிமோவுக்கு திடீரென தெளிவு பிறந்தது. யாரோ ஒரு மொழிபெயர்ப்பாளர் கடந்த காலத்தில் இந்த ஹீப்ரூ சொல்லை கன்னி என மொழிபெயர்த்துள்ளார். பிறகு அதிலிருந்து மொழி பெயர்த்த பலர் அப்படியே கன்னி என குறிப்பிட்ட, கன்னி மேரி வழிப்பாடு எல்லாம் வந்து விட்டது. அதை ஒத்துக் கொள்ளாதவர்கள் கொலை முதலிய கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் குறிப்பிட்ட கன்னி(கழியாத பெண்ணை பெடூலா என ஹீப்ரூவில் குறிப்பிடுவார்கள்).
இந்த விஷயத்தை நான் ப்ரோஸின் அந்த இடுகையில் குறிப்பிட்டதுமே சீறிக் கொண்டு ஆக்ரோஷமான தாக்குதல்கள் என்னை நோக்கி வந்தன. “வெளியாட்கள் எல்லாம் எங்கள் கிறித்துவ வேதம் பற்றி பேசுவதா, அதுவும் இந்த இசாக் அசிமோவுக்கு என்ன தகுதி உண்டு என்றெல்லாம் பொருள்ப்ட வாசகங்கள் இருந்தன. நான் மட்டும் சும்மா இருந்தேனா, என்ன? பழைய ஏற்பாடு என்பது யூதர்களது புத்தகம். சொல்லப்போனால் கிறித்துவர்கள்தான் வெளி மனிதர்கள். இசாக் அசிமோவ் யூதர். மேலும் இரு பைபிள்களையும் ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். அவருக்கு தகுதி இல்லையென்றால் வேறு யாருக்கு தகுதி உண்டு என்றெல்லாம் நான் எழுத, ஒரே கலாட்டாதான் போங்கள். நேற்று அந்த இடுகையில் போய் பார்த்தால் எனது ஒரிஜினல் பதிவு, அதன் பதில்கள் ஆகியவை நீக்கப்பட்டிருந்தன. அது சம்பந்தமாக மேலும் பலர் எழுதி, எல்லாவற்றையும் எடுத்தது சரிதான், ஆனால் நரசிம்மனுடைய (டோண்டு ராகவன்) ஒரிஜினல் பதிவு கண்டிப்பாகவே ஏற்புடையதே என வாதாடினர். பிறகு என்ன நடந்தது? தலைவாசலின் அதிபர் ஹென்றியே வந்து அந்த திரியத்துக்கே ஒரு பெரிய பூட்டு போட்டுவிட்டு சென்றார். அவர் எழுதுகிறார்:
“ViktoriaG wrote this earlier in the thread, but even at that point, 16 posts (from 9 different posters) had already been removed for having strayed from the topic of translation. By now, a total of 28 posts from 13 posters has been removed. At least five moderators have been involved. A number of members, too, have tried to redirect discussion to the original topic. Thanks for your efforts, folks.
At this point, in the interest of keeping things orderly (so that our moderators can do their own work, too!), I am closing the thread”.
உண்மை என்னவென்றால் மொழிபெயர்ப்புடன் மிகவும் சம்பந்தம் உடையதுதான் நான் இட்ட இடுகை. இருப்பினும் பல மன அழுத்தங்களை அது உருவாக்கியதால் அதையும் அதன் எதிர்வினைகளையும் நீக்க வேண்டியிருந்தது என்பதே நிஜம். கடைசியில் சமாளிக்க முடியாமல், போகவே மொத்த டாபிக்கையே பூட்டு போட்டு விட்டனர்.
அதெல்ல்லாம் இருக்கட்டும், இப்பதிவுக்கே வருவோம். மித்ரா என்னும் பெயருடைய இன்னொரு தேவகுமாரனின் கதையின் காப்பிதான் நம்ம ஏசுவின் கதை என இங்கே கூறுகிறார்கள்.
Anyhow, merry Christmas!
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
9 hours ago
14 comments:
போட்டி போட்டு கொண்டு தலைவர் கலைஞர் அவர்களும்,புரட்சித்தலைவி ஜெ. யும் யேசு பிரானின் பிறந்த நாள் கொண்ட்டாங்களில் வெகு அக்கறையுடன் கலந்து வாக்குறுதிகளை அள்ளிவிசுவதை பார்த்தால் உங்களுக்கு என்ன சொல்லத் தோன்று கிறது?
(தேர்தல் ஓட்டுக்காக என சொல்லிவிடமால், விளக்கமாய் சொல்லவும்)
//போட்டி போட்டு கொண்டு தலைவர் கலைஞர் அவர்களும்,புரட்சித்தலைவி ஜெ. யும் யேசு பிரானின் பிறந்த நாள் கொண்ட்டாங்களில் வெகு அக்கறையுடன் கலந்து வாக்குறுதிகளை அள்ளிவிசுவதை பார்த்தால் உங்களுக்கு என்ன சொல்லத் தோன்று கிறது?
(தேர்தல் ஓட்டுக்காக என சொல்லிவிடமால், விளக்கமாய் சொல்லவும்)//
தி.மு.கழகத்துக்கும் தமிழக கிருத்துவர்களுக்கும் உள்ள உறவு வெறும் தேர்தல் ஓட்டுக் கணக்கை வைத்து என் சொல்வது சரியாகாது.
ஒட்டு மொத்த கிருத்துவ பெரியவர்கள், முதல்வர் அவர்களோடு விழாவில் பங்கெடுத்தனர் ஆனால் அருமணையில் அதிமுக தலைவி யுடன் ? சிறுபான்மை இனக் காவலர் ,ஏழை எளியோரின் நலன் பற்றிய எண்ணம் மட்டும் கொண்டு நல்லாட்சி செய்யும்,முதல்வரின் மாசு மருவற்ற தூய செயல்களுக்கு களங்கம் கற்பிப்பது மாபெரும் தவறாகும்.
//சிறுபான்மை இனக் காவலர் ,ஏழை எளியோரின் நலன் பற்றிய எண்ணம் மட்டும் கொண்டு நல்லாட்சி செய்யும்,முதல்வரின் மாசு மருவற்ற தூய செயல்களுக்கு களங்கம் கற்பிப்பது மாபெரும் தவறாகும்.//
100 ல் ஒரு வாசகம்
2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றிய விபரம்
நாடு முழுவதும் பரபரப்பாய் இருக்கும் சமயத்தில்..........
எழிலரசு பாராட்டுகிறாரா இல்லை.....
புகழ் வஞ்ச அணியா?
//முதல்வரின் மாசு மருவற்ற தூய செயல்களுக்கு களங்கம் கற்பிப்பது மாபெரும் தவறாகும்.//
Ezhil, I think his "Manasatchi" has already died (I remember he had told Maran is his "Manasatchi"). Hope you are not his new "Manasatchi". In What ever he does he never does it without seeing it in the political angle, so do not try to portray that he has only social thought in his actions which is nothing but day dreaming.
If he had even an iota of social thought, he would not use caste and religion on a selective basis whenever he is cornered.
Sridhar
@ ரமணா:புகழ் வஞ்ச அணி அல்ல, வஞ்சப் புகழ்ச்சி அணி. சற்றே விளக்கமாகப் பார்ப்போம். (லீவு நாளு தானே, நிறைய நேரமிருக்கு... ஒருத்தருக்கு தமிழ் இலக்கண விளக்கம் தருவோம்.)
//தி.மு.கழகத்துக்கும் தமிழக கிருத்துவர்களுக்கும் உள்ள உறவு வெறும் தேர்தல் ஓட்டுக் கணக்கை வைத்து என் சொல்வது சரியாகாது.//
திமுக போன்ற அரசியல் கட்சிகளுக்கும் மதங்களுக்கும் இடையே ஓட்டுக் கணக்கு இல்லாத உறவு சாத்தியமில்லை என்பது பொதுவான நம்பிக்கை. திமுக-கிறிஸ்தவர் விஷயத்தில் அப்படி இல்லை என்பது எழிலரசுவின் கருத்து.
பொதுவான விஷயங்களில் தன் கருத்தைச் சேர்த்துச் சொல்வது தற்குறிப்பேற்ற அணி என்று அறியப்படும்.
//சிறுபான்மை இனக் காவலர் ,ஏழை எளியோரின் நலன் பற்றிய எண்ணம் மட்டும் கொண்டு நல்லாட்சி செய்யும்,முதல்வரின் மாசு மருவற்ற தூய செயல்களுக்கு களங்கம் கற்பிப்பது மாபெரும் தவறாகும்.//
ஏழை மக்கள் காய்கறி (குறிப்பாக வெங்காயம்)விலை உயர்வால் அவதிப்படும் போது அதை வைத்து நையாண்டி பண்ணிச் சிரிப்பவர் ஏழையின் நலன் நாடுபவர் என்று சொல்கிறார்.
ஒருவரைப் புகழ்வது போலப் பேசி இடித்துரைக்கும் இம்முறை வஞ்சப் புகழ்ச்சி அணி என்று அறியப்படும்.
@ RS:
கருணாநிதியிடம் இருப்பது ஒன்றுக்கு மேற்பட்ட மனசாட்சிகள். அண்ணாவிடம் கடன் வாங்கியது ஒன்று. முரசொலி மாறன் மறைந்தபின் கனவில் வந்து கொடுத்தது ஒன்று. அவ்வப்போது பெரியாரிடம் வேறு மனசாட்சி லேவாதேவி செய்து கொள்கிறார். இன்னும் வெளியே தெரியாதது எத்தனையோ!!!
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
தம்பி ....
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று -
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று )-
வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
வீடுகெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
(தம்பி .... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று) -
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
1.பிராமணர்கள் அனேகமாக அனைத்து துறைகளிலும் பணியில் இல்லையென்றே ( இருந்தாலும் மிக குறந்த எண்ணிக்கயே) இருக்கும் போது இன்னும் ஏன் இந்த பிராமண துவேசம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம்?
2.கலப்புத் திருமணம் செய்யும் போது(குறிப்பாய் மென்பொருள் பொறியாளர்) பிராமண பெண்களையே தேர்ந்தெடுக்கும் இவர்கள் பிராமண குலத்தை ஏளனம் செய்வது ஏன்?
3.பொதுவாய் பிராமணர்கள்(தற்காலத்தில்) யாருக்கும் பிரச்ச்சனை பண்ணமால் இருக்கும் போது ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாய் சொல்லபடும் ஒரு சில செயல்களுக்கு இந்தத் தலைமுறயை வாய்க்கு வந்தபடி பேசுவதும்,எழுதுவதும் சரியா?
4.மருத்துவம் பார்க்க அனுபவமிக்க பிராமண மருத்துவர் வேண்டும்,வழக்குகளை திறமையுடன் வாதிட பிராமண வக்கீல் வேண்டும்,புகழ்பாடும் நிகழச்சிகளை தொகுத்தளிக்க பிராமண நிகழ்ச்சி தொகுப்பாளர் வேண்டும் ஆனால்?
5.ஊட்கம்,செய்தித்தாள்கள்,வானெலி,திரைப்படம் ( தமிழகத்தில்) ஆகியவற்றில் தனி ஆட்சி செய்த போதும் இன்னும் பிராமணரை துவேஷிப்பது நியாயமா?
//ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு//
1.ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி- பயன் பெற்றோர்
2.அனைவருக்கும்(குடுபத்திற்கு)இலவச டீவி-பயன் பெற்றோர்
3.இலவச கேஸ் வசதி -பயன் பெற்றோர்
4.இலவச இரண்டு ஏக்கர் நிலம் -பயன் பெற்றோர்
5.இலவச கான்ங்கீரிட் வீடுகள்-பயன் பெறப் போவோர்
6.மழை வெள்ளத்தால் பாதிக்க பட்டோருக்கு அளிக்கப்பட்ட அரசின் தாராள உதவி.
7. கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் அரசால் உருவாக்க பட்ட வேலை வாய்ப்புகள்
8. மேம்படுத்தப் பட்ட சாலை( 4 வழி/6 வழி) வசதிகள்
9. புதிய குடி நீர் திட்டங்கள்
10.அரசு பணியாளருக்கு கொடுக்க பட்ட ஊதிய உயர்வுகள்.
இந்த காரணங்களாலே(வரும் சட்ட சபை தேர்தல் )காங்கிரஸ் ,திமுகவின் நடபை முறிக்க தயாரில்லை என்று வரும் செய்திகளில் உண்மையில்லாமல் இல்லை
//இந்த காரணங்களாலே(வரும் சட்ட சபை தேர்தல் )காங்கிரஸ் ,திமுகவின் நடபை முறிக்க தயாரில்லை என்று வரும் செய்திகளில் உண்மையில்லாமல் இல்லை//
இப்படித்தான் நினைத்தார்கள் 1980 தமிழக சட்ட சபை தேர்தலில் ஆனால் என்ன நடந்தது?
அது மாதிரி மக்கள் மனதை யாரறிவார்?
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு
"மை ப்ளாக் லிஸ்ட்" முன்னர் போட்டிருந்தீர்கள், நடுவில் எடுத்து விட்டீர்கள் - இப்போது மீண்டும் போட்டிருக்கிறீர்கள். எதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?
@ஹேராம்
சிறப்பு காரணங்கள் ஒன்றுமில்லை. அவ்வப்போதைய மன நிலையைப் பொருத்தே செயல்பாடு.
எனது மின்னஞ்சல் முகவரி கேட்டிருந்தீர்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் ஒரு பின்னூட்டம் தாருங்கள். அதிலிருந்து உங்களைத் தொடர்பு கொள்கிறேன். உங்கள் மின்னஞ்சல் ஐடி உள்ள பின்னூட்டத்தை பிரசுரிக்க மாட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாம் ஆங்கிலம் கலந்து எழுதுவதுபோல , ஜெர்மன் பிரெஞ்ச் மொழிகளில் நடக்கிறதா ?
உங்கள் பார்வையில் , ஜெயமோகன் சாருநிவேதிதா . ஒப்பிடுக
நாம் ஆங்கிலம் கலந்து பேசுவது போல் ஹிந்தி காரன் கூட ஹிந்தியில் ஆங்கிலம் கலந்து பேசுவதில்லை.
காபிப்போடியில் புளியங்கொட்டைப் போடி போல் கலந்து காணாமல் போகும் ஒரே குடும்பத்து மொழிகள் ஆங்கிலமும் பிரஞ்சும், அதுக்கே அவர்கள் அரசுத் துறை ஒன்றை உருவாக்கி அமைச்சர்கள் எல்லாம் போட்டு ஆங்கிலத்தை பிரஞ்சாக மொழிக்கு மாற்றி பிரயோகிக்கிறார்கள் (எ. DNA= ADN, AIDS=SIDA) ஆனால் இங்கு இருக்கும் தமிழ் காவலர்களுக்கு வழக்கொழிந்த வடமொழி மீது தான் காண்டு.
இவர்கள் வடமொழி சொற்களை தமிழிலிருந்து எனிமா கொடுத்து எடுப்பதற்குள் ஆங்கிலத்தை ஸ்டைரட்டாக பைப்பு மூலம் தொண்டைக்கே இறக்கிக்கொண்டிருக்கிரார்கள். நடுவில் தமிழ் சிக்கிக்கொண்டு முன்னாடியும் எடுக்க முடியாமல் பின்னாடியும் போகமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.
Post a Comment