சமீபத்தில் 1981-ல் வெளியான மெல் ப்ரூக்ஸின் திரைப்படம் History of the World Part I.
மெல் ப்ரூக்ஸ் சொல்கிறார், கடவுள் மோசஸுக்கு பதினைந்து கட்டளைகள் கொடுத்தார் என்று. ஆனால் மோசஸோ பத்துக் கட்டளைகள்தான் கொண்டு வந்தார். மீதி ஐந்து கட்டளைகள் என்னவாயின? கீழே பார்க்கவும்.
உலக முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் வாய் விட்டுச் சிரித்த காட்சி அது.
அதே போல கற்காலத்தில் நெருப்பைக் கண்டுபிடித்தல், சித்திரம் வரையும் கலை, கலை விமரிசகர், மரண சடங்குகள், காமெடி ஷோ, முதல் ஆயுதப் பரிசோதனை, இசையின் பிறப்பு, கோரஸ் இசை ஆகியவற்றையும் அவர் காட்டுகிறார்.
மெல் ப்ரூக்சுக்கு பயங்கர கற்பனை. உலகச் சரித்திரம் பகுதி -1-ன் ஐந்து க்ளிப்பிங்ஸில் முதலாவது க்ளிப்பிங் கீழே. அடுத்ததற்கான சுட்டி இதை ப்ளே செய்யும்போது வரும். அங்கிருந்து பார்த்துக் கொள்ளவும்.
ஆங்கில சொல்விளையாட்டுகள் இந்தப் படத்தில் அதிகம். யூதரான மெல்ப்ரூக்ஸ் தனது மதத்தவரையே கிண்டல் செய்வார். நீங்களே பார்க்கலாமே. ரோமின் வாழ்க்கை முறை தற்கால அமெரிக்காவை நினைவுபடுத்துவது எதேச்சை அல்ல. பல எழுத்தாளர்கள் இந்த ஒற்றுமையை தத்தம் நாவல்களில் காட்டியுள்ளனர். எனது அபிமான ஆசிரியையான Taylor Caldwell அதை வெளிப்படையாகவே சொல்லியுள்ளார் முக்கியமாக தனது A pillar of iron என்னும் நாவலில்.
அந்த வகை புத்தகங்கள் படித்தே எனக்கு ரோம வரலாறு சற்றே குன்சாகத் தெரிய வந்தது என்றால் மிகையாகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
9 hours ago
3 comments:
இந்த திரைப்படம் சென்னை தேவியில், எண்பதுகளில் வெளிவந்து, ஓடிக்கொண்டிருந்ததே !
பல முறை பார்த்து சிரிப்பாய் சிரித்ததுண்டு.
ஆனால் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளதா? அப்படியெனில் இணைப்பையும் தரலாமே !
இல்லை வரவில்லை. அதை வெளியிடுவதற்கான உத்தேசம் எப்போதுமே மெல்லுக்கு இருந்ததில்லை என்று இப்போது பலர் கூறி வருகின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment