ஜெயமோகன் சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா பற்றி எழுதியுள்ள பதிவிலிருந்து சில வரிகளை முதலில் பார்ப்போம்.
“மலையாள சினிமாவின் பரப்பு மிகவும் குறைவு. அதன் முதல்திரையிடலே 60 பிரதிகள்தான். மலைப்பகுதிகளில் இரண்டாம் ஆட்டத்துக்கு கூட்டம் இருக்காது. மழைக்காலத்தில் இரவுக்காட்சிகளே கூட்டம் சேராமல் ஓடும். கேரளத்தில் பெரும் பகுதி மழை ஓயாது பெய்யும் மலைக்கிராமங்கள். மேலும் கேரளத்தில் வளைகுடா பணத்தால் நடுத்தர வற்கம் பெருகியபடியே வருகிறது. இவர்கள் பொதுவாக திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பதில்லை. வீட்டில் ஹோம் தியேட்டர் இருக்கும். ஆகவே படத்தின் ஒட்டு மொத்த வசூல் சாத்தியக்கூறு மிகமிக குறைவானதே.ஆகவே மிகக் குறைவான பட்ஜெட்டில்தான் மலையாளத்தில் படம் எடுத்தாக வேண்டும்.
மலையாள சினிமாவின் வலிமையே இந்த சிறிய அளவுதான் என்று சொல்ல வேண்டும்.ஆர்ப்பாட்டமான காட்சியமைப்புகள் மலையாள சினிமாவுக்குக் கட்டுப்படி ஆகாது. திரைக்கதை, நடிப்பு ஆகிய இரண்டை மட்டுமே நம்பி மலையாள சினிமா இயங்கியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இதனால்தான். ஆகவேதான் மலையாளத்தில் தொடர்ச்சியாக ஏராளமான நல்ல திரைக்கதைகள் எழுதப்பட்டன. நுட்பமான பல நடிகர்கள் உருவாகி வந்தார்கள். மலையாள சினிமாவின் சாதனைகள் இந்த தளத்திலேயே. இந்திய சினிமாவில் மலையாள சினிமாவின் முக்கிய இடம் இவ்வாறு உருவாகி வந்ததேயாகும்.
அதாவது பட்ஜெட் காரணமாகவே மலையாள சினிமா யதார்த்ததில் நின்றது என்று சொல்ல வேண்டும். கடுமையான தணிக்கை உள்ள நாடுகளில் வணிக சினிமா இல்லாமல் போய் அதன் விளைவாக நல்ல சினிமா வளர்வதுபோல என்று இதைச் சொல்லலாம்”.
பிறகு வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜெயமோகன், ஆனால் இப்பதிவு மலையாள சினிமா பற்றியல்ல.
பணக்காரர்கள் எல்லாம் படாடோபமானவர்கள் (ஆகவே கெட்டவர்கள்) ஏழைகளெல்லாம் எளிமையானவர்கள் (ஆகவே நல்லவர்கள்) என்ற பொது புத்தியுடன் ஜெமினி வாசன் பல படங்கள் எடுத்துள்ளார். அந்தக் கருத்துக்கும் ஒரு மெல்லிய அடிப்படை உண்டு. நான் என்ன கூறவருகிறேன் என்றால் அடுத்த வேளை சோற்றுக்கே போராடும் நிலையில் இருந்தால் படாடோபமாக இருப்பதற்கு எங்கிருந்து பணம் வருமாம்? இப்போது வரும் பல சீரியல்களில் கதாநாயக நாயகியர் படும் சங்கடங்கள் பலவற்றைக் காணும்போது, அவை எல்லாம் உண்டு கொழுத்தவருக்கே வரும் நிலை என்றுதான் தோன்றுகிறது.
உலகமயமாக்கம் வரும்வரை கிராமப்புறங்கள் எளிமையாக இருந்தன. நகரத்தில் வாழ்பவர்கள் மன அமைதிக்கு அங்கு சில நாட்கள் சென்று வந்தனர். இப்போது அப்படிப்பட்ட இடங்களைப் பார்ப்பது அபூர்வமாகி வருகிறது என அவர்கள் புலம்புகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட கிராம மக்களைக் கேட்டால் அவர்களில் பலர் இவ்வளவு ஆண்டுகள் எளிமையாக வாழ்ந்ததன் முக்கியக் காரணமே தங்களது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணமின்றி வாழ்ந்ததே என்று கூறுவார்கள். இப்போது கிராமங்களும் மெல்ல மெல்ல நகர அடையாளங்களைப் பெற்று வருகின்றன. என்ன, அது நல்லதற்கில்லை எனக் கூறுபவர்கள் நகரத்தில் உள்ளவர்களே. கிராமத்தில் உள்ளவருக்கு இதில் பிரச்சினை இருக்காது. பஸ் வசதி இல்லாது மைல் கணக்கில் நடக்க வேண்டியிருந்த கிராமங்கள் பலவற்றில் ஆட்டோ என்ன, பஸ்கள் என்ன என விறுவிறுவென போக்குவரத்து நடக்கிறது. அரை கிலோமீட்டர் தூரம் என்றாலும் அரை மணிக்கு குறையாது பஸ்ஸுக்காக காத்திருப்பவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
ஆகவே “இப்போ நீ என்ன சொல்ல வரே” என்று கேட்கும் முரளி மனோகருக்கு நான் வைக்கும் கேள்வி “பணம் இருந்தால் தொந்திரவுதானா”? என்பதே.
என் தந்தை கூறுவார், உணவு உண்ணும்போது தன்னை ஏழையாக பாவித்து கொள்ள வேண்டும், அதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதாவது தாராளமாக நெய் விட்டுக் கொள்ளக் கூடாது. கட்டித் தயிர் கூடவே கூடாது, கடைந்தெடுத்த மோர்தான் தாராளமாக நீர் சேர்த்து பாவிக்க வேண்டும். ஆனால் என் நாக்கு கேட்கிறதா? இரண்டையும் விரும்பித்தான் சேர்த்து கொள்கிறேன். அவற்றை ஈடு செய்ய ஓரிரு கிலோமீட்டர்கள் அதிகமாக நடந்தால் போயிற்று என மனதுடன் சமரசம் செய்து கொள்கிறேன். வேறென்ன செய்வது?
சரி, பிரச்சினை தெரிந்து விட்டது, அதாவது இல்லாமையால் பல துன்பங்கள் இருந்தாலும் எளிமையான, மனச்சஞ்சலங்களுக்கு இடம் தராத வாழ்க்கை முறை இருந்தது. அந்த நல்ல விஷயம் அருகி வருகிறது. தனிப்பட்ட முறையில் அதை கடைபிடிக்க இயலுமா? அதைத்தான் நான் இப்போது செய்ய முயன்று வருகிறேன்.
என் குடும்பத்தினருடன் வெளியில் செல்லும்போது “எனது” காரில்தான் செல்கிறேன். எனது மனநிலைக்காக அவர்களை தொந்திரவு செய்யக் கூடாது. கடவுள் அருளால் நல்ல சம்பாத்தியம் இருப்பதால் அது ஒரு பாரமாகத் தோன்றவில்லை. ஆனால் தனியே செல்லும்போது? முடிந்தவரை பஸ் அல்லது நடைதான். “பதிவர் சந்திப்புகளுக்கு வரும்போது தனியாகத்தானே வருகிறாய், அப்போது மட்டும் “உன்” காரில் ஏன் வருகிறாய்” எனக் கேட்கும் முரளி மனோகர் நியாயமான கேள்விதான் கேட்கிறான். அச்சமயங்களில் பல நேரங்களில் என் குடும்பத்தினர் அதே காரை எடுத்து கொண்டு வேறு இடங்களூக்கு சென்று, என்னை சந்திப்பு நடக்கும் இடத்தில் டிராப் செய்து பிறகு பிக் அப் செய்கின்றனர். மேலும் பல தருணங்களில் கைவசம் வேலை இருக்கும். ஆகவே போகவரும் நேரம் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்.
மேலே சொன்னதைத் தவிர மற்ற தருணங்களில் பஸ் அல்லது நடைதான். அத்தருணங்களில் நான் மனரீதியாக முப்பது ஆண்டுகள் பின்னே செல்கிறேன். மனதுக்கு இந்த எளிமை பிடித்திருக்கிறது. எனது சென்னையின் சூழ்நிலையை முழுவதும் அனுபவிக்க இயலுகிறது.
முதல்வன் அல்லது ஜெண்டில்மேன் படத்தை எளிமையான பட்ஜெட்டில் மலையாளத்தில் எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
12 comments:
/என் குடும்பத்தினருடன் வெளியில் செல்லும்போது “எனது” காரில்தான் செல்கிறேன். எனது மனநிலைக்காக அவர்களை தொந்திரவு செய்யக் கூடாது. கடவுள் அருளால் நல்ல சம்பாத்தியம் இருப்பதால் அது ஒரு பாரமாகத் தோன்றவில்லை. ஆனால் தனியே செல்லும்போது? முடிந்தவரை பஸ் அல்லது நடைதான். “பதிவர் சந்திப்புகளுக்கு வரும்போது தனியாகத்தானே வருகிறாய், அப்போது மட்டும் “உன்” காரில் ஏன் வருகிறாய்” எனக் கேட்கும் முரளி மனோகர் நியாயமான கேள்விதான் கேட்கிறான். அச்சமயங்களில் பல நேரங்களில் என் குடும்பத்தினர் அதே காரை எடுத்து கொண்டு வேறு இடங்களூக்கு சென்று, என்னை சந்திப்பு நடக்கும் இடத்தில் டிராப் செய்து பிறகு பிக் அப் செய்கின்றனர். மேலும் பல தருணங்களில் கைவசம் வேலை இருக்கும். ஆகவே போகவரும் நேரம் குறிந்தபட்சமாக இருக்க வேண்டும்.//
கார் வாங்கி விட்டீர்களா?
என்ன கார்?
என்ன விலை?
என்ன மைலேஜ்?
Please see latest nanayam vikatan
i give link http://www.vikatan.com/Nanayam/2009/mar/31032009/nv0509.asp
Thanks
V.Ramachandran
singapore (65) 82336251
ஜெயமோகன் அவர்களிடமிருந்து இப்பதிவு சம்பந்தமாக வந்த மின்னஞ்சல், அவருக்கு நான் அனுப்பிய எனது மின்னஞ்சலுடன்:
On 3/20/09, Narasimhan Raghavan wrote:
அன்புள்ள ஜெயமோகன்,
மேலே உள்ள தலைப்பில் நீங்கள் எழுதிய பதிவு எனது இப்பதிவுக்கு அடிகோலியது. பார்க்க: ”இல்லாமை என்னும் கட்டாயத்தால் வந்த எளிமை”
http://dondu.blogspot.com/2009/03/blog-post_20.html
Ya... read it. it was a good article...poverty is a virtue when man trained his mind to it . i saw it in many gurukulams. it was our ancient tradition. of rishis.
even emperors went for vaanaprastham
j
மனிதனிடம் பணம் அளவாக இருக்கும் வரை தான் அவனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை பக்தி எல்லாம் வருகிறது. பணம் அதிகரிக்க அதிகரிக்க அப்பணத்தை கொண்டு என்ன வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம் என்ற என்னம் தான் உருவாகிறது. இப்பொழுது ஏற்ப்படும் பல கலாச்சார சீரழிவுகளுக்கும் மூல காரணம் அதிக பண புழக்கம், அதனால் யாருக்கும் பனியாத நிலை. அதிக பணம் நம்மவர்களுக்கு நிம்மதி அளிக்கவில்லை மாறாக லைஃப்ஸ்டைல் நோய்கள் போன்றவற்றை தான் அளித்துக் கொண்டிருக்கின்றன, ஒரு காலத்தில் மது அருந்துவது வெட்கக்கேடாக பார்க்கப்பட்டு வந்தது, இன்ற பணம் கொடுக்கிற திமிரில் மதுவை மங்கைகளே வெளிப்படையாக சுவைக்கத் துவங்கிவிட்டனர்
முன்பு சிறிய சம்பளத்திலும் வாழ்க்கை நிம்மதியாக இருந்தது, முதலில் ஒரு வேலை வாங்குவது தான் கஷ்டமாக இருந்தது. பிறகு அவ்வேலையை வைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் ஒட்டலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்தையும் அனுபவிக்க முடிந்தது. ஆனால் இன்றைய நிலைமையோ பணம் கொட்டிக் கிடைத்தாலும் வேலை இருக்குமோ இல்லையோ எப்போது வேலை போகுமோ என்ற தினமும் பயந்து சாகவேண்டியிருக்கிறது. முடிந்த மட்டும் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ள தான் அறிவுறுத்தப்படுகிறது.
பஸ் ஆட்டோ கிராமங்களில் நீங்கள் வசதி என்கிறீர்கள், ஆனால் அவை அடிப்படை வசதி, இத்தனை நாள் பணம் இல்லாததால் மக்கள் பஸ்சில் செல்லவில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. பஸ் இல்லாததால் மக்கள் பஸ்சில் செல்லவில்லை என்பதே உண்மை. என்னைப் பொருத்தவரை நகரங்களில் வாழ்பவர்களுக்கு கார் என்பது ஒரு ஆடம்பர பொருள் தானே தவிர தேவையான வசதி இல்லை. நம் மக்களில் பவிசு, பந்தா முதலிய குணங்கள் ஊறிப்போயுள்ளன, பல பேர் கார் வாங்குவது வெட்டி பந்தா மற்றும் தன் வசதியை பறைசாற்றிக் கொள்வதற்காகவே
"என் தந்தை கூறுவார், உணவு உண்ணும்போது தன்னை ஏழையாக பாவித்து கொள்ள வேண்டும், அதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது." Golden words indeed.
Anonymous said...
Did you know what happened to the Software Engineer who earned 60000 Per Month..He did not want kid as his wife is also earning 60000 (he has to repay his home loan and car loan) irrespective of his protest his wife gave birth to a kid but he killed his own child by throwing it in Kenaru.....Ellam Panam Paduthum Padu.Anonymous said...
Did you know what happened to the Software Engineer who earned 60000 Per Month..He did not want kid as his wife is also earning 60000 (he has to repay his home loan and car loan) irrespective of his protest his wife gave birth to a kid but he killed his own child by throwing it in Kenaru.....Ellam Panam Paduthum Padu.//
இந்தக் கதை தொடரும்!
//தாராளமாக நெய் விட்டுக் கொள்ளக் கூடாது. கட்டித் தயிர் கூடவே கூடாது, கடைந்தெடுத்த மோர்தான் தாராளமாக நீர் சேர்த்து பாவிக்க வேண்டும். ஆனால் என் நாக்கு கேட்கிறதா? இரண்டையும் விரும்பித்தான் சேர்த்து கொள்கிறேன். அவற்றை ஈடு செய்ய ஓரிரு கிலோமீட்டர்கள் அதிகமாக நடந்தால் போயிற்று என மனதுடன் சமரசம் செய்து கொள்கிறேன். வேறென்ன செய்வது? //
இது உங்களுக்கு மட்டுமல்ல. பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரச்னை இருக்கிறது. நீங்கள் நடப்பீர்களோ என்னவோ தெரியவில்லை.
நானெல்லாம் நடக்க நினைப்பதோடு சரி. மற்றபடி ஆட்டோவிற்கு வெய்ட் பண்ணுவது தான் அதிகம்.
@மெனக்கெட்டு
அது என்ன நான் நடப்பேனா என கேட்டு விட்டீர்கள்? பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/5.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
@கமலக்கண்ணன்
என்ன? டோண்டுவின் “கார்” பற்றி கேள்விப்பட்டதேயில்லையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கார் வாங்கி விட்டீர்களா?
என்ன கார்?
என்ன விலை?
என்ன மைலேஜ்?
//
Haiyo... haiyo...!!!
// Anonymous said...
//கார் வாங்கி விட்டீர்களா?
என்ன கார்?
என்ன விலை?
என்ன மைலேஜ்?
//
Haiyo... haiyo...!!!//
well quoted
I usually do not leave a comment, but you really impress me, also I have a few questions like to ask, what's your contact details?
-Johnson
Post a Comment