பகுதி 31 (16.03.2009): (நடுவில் ஒரு discontinuity வருகிறது)
ஜட்ஜ் தனது பரிபூரண சம்மதத்தைத் தெரிவிக்கிறார். சாம்புவுக்கு வேம்புவுக்கும் ஆனந்தம் கலந்த ஆச்சரியம். ஆனால் வீடு திரும்பும்போது சாம்புவுக்கு ஒரு சந்தேகம், ஒருவேளை ஜட்ஜாத்து மாமிக்கு சம்மதம் இல்லையோ என. அதற்கேற்றார் போல ஜட்ஜ் சம்மதம் தெரிவித்து மரியாதை செய்யும் இடத்தில் மாமி கூட இல்லை. எது எப்படியிருப்பினும் இந்த சந்தேகங்களை எல்லாம் வீட்டில் போய் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என வேம்பு சாம்புவுக்கு ஆலோசனை தருகிறார்.
அதேபோல சாம்புவும் தனது வீட்டில் ஜட்ஜ் அளித்த சம்மதம் பற்றி மட்டும் கூறுகிறார். ஜட்ஜின் மனைவியும் சம்மதம் தெரிவித்ததாக ஒரே போடு போட்டு விடுகிறார். கிருபாவின் சகோதரன் கூட இம்மாதிரி காதல் என்றால் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் இன்றி சப்பென முடிந்து விட்டது என செல்லமாக அலுத்துக் கொள்கிறான்.
அசோக் மூலம் வந்த போலீஸ் பிரச்சினையை சமாளிக்க வையாபுரி அசோக்குக்கு மனநிலை சரியில்லை என்னும் விஷயத்தைப் பரப்பி, அது சம்பந்தமாக அசோக்கின் தெருவிலுள்ளவர்களிடம் கையெழுத்து வாங்குகிறார். எரிச்சலுடன் நாதன் தன்னிடமும் கையெழுத்து கேட்பதுதானே எனக்கூறி கையெழுத்து போட்டுவிட்டு அகலுகிறார். வையாபுரி குழம்புகிறார். (ஒலிநாடாவில் நடுவில் ஒரு discontinuity வருவதால் இக்காட்சி இங்கே நினைவிலிருந்து கூறப்படுகிறது).
ஜட்ஜ் வீட்டில் போயும் போயும் வைதிகர் வீட்டு சம்பந்தம்தானா தன் மகளுக்கு என அவர் மனைவி ஆட்சேபம் தெரிவிக்க, அவரே குருக்களின் பெண்தான் என்பதை ஜட்ஜ் தன் மனைவிக்கு நினைவுபடுத்துகிறார். ஆனால் தான் இப்போது ஜட்ஜின் மனைவி என அவர் சமாளிக்க, பகவத்கிருபை இருந்தால் தன் மகளும் அதே மாதிரி பிரமோஷன் பெறுவாள் என ஜட்ஜ் முத்தாய்ப்பு வைக்கிறார். அப்போது அங்கு வந்த அவரது உறவினரும் அதே ஆட்சேபணையை வைக்கிறார்.
சோவும் அவர் நண்பரும் சீனில் வருகின்றனர். இது என்ன உறவுக்காரான்னா இப்படித்தான் உபத்திரவம் செய்வார்களா என நண்பர் கேட்க, அதுதான் உறவினரின் சுபாவம் என்பதை சோ தெளிவுபடுத்துகிறார். ஊரான் ஒருவனை எவ்வளவு புகழ்ந்தாலும் அவனது உறவினர்கள் அவனை மட்டம் தட்டுவது பலமுறை நடந்திருக்கிறது என சோ கூறிவிட்டு, ராமாயணத்தில், ராவணனும் வீடணன் தனக்கு அறிவுறை கூறும்போது இதையே கூறுகிறான் என்றார். போயும் போயும் ராவணனையா இங்கு மேற்கோள் காட்டுவது என நண்பர் அங்கலாய்க்க, ராவணனின் சிறப்புகளை பட்டியலிடுகிறார் சோ அவர்கள். அவனது பெண் சபலத்தைத் தவிர்த்துப் பார்த்தால் அவன் பெரிய அறிவாளி, பக்திமான் என்கிறார் சோ. அதே சமயம் ராமரும் இதே கருத்துக்களை வேறொரு தருணத்தில் கூறுகிறார் என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார். [இங்கு சோ கூறாமல் விட்டது என்னவென்றால் ராவணனும் சரி ராமரும் சரி, இருவருமே இங்கு உதாரணமாகக் காட்டுவது வீடணனைத்தான். ஒரே வித்தியாசம் என்னவென்றால், ராவணன் வீடணனை சாடவே அதை பயன்படுத்துகிறான், ராமரோ அதற்காக வீடணன் மேல் குற்றம் காட்டவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய் ராவணனே சரணம் என தன்னிடம் வந்திருந்தால் அவனுக்கும் அடைக்கலம் தந்திருப்பேன் என்று வேறு கூறுகிறார்].
ஜ்ட்ஜ் வீட்டில் அவர் தனது உறவினரின் ஆட்சேபணைகளை உறுதியான வாதங்களினால் மறுக்கிறார்.
நாதன் வீட்டில் அவர் அசோக்கிடம் அவனால் தனக்கு ஏற்படும் சங்கடங்களைப் பட்டியலிடுகிறார். அவன் புன்முறுவலுடன் அவர் பேசுவதைக் கேட்கிறான்.
பகுதி 32 (16.03.2009):
வையாபுரி செய்த காரியத்தால் சிங்காரம் விடுதலையாவான், அசோக் பைத்தியம் என்பது உறுதியாயிற்று என அவர் கூற, தான் பைத்தியமா இல்லையா என தனக்குத் தெரிந்தால் போதும் என அசோக் கூறுகிறான்.
சீனில் வரும் நண்பர் இது என்ன அசோக் குடாக்காக இருக்கிறான் என சோவிடம் கூறி வியக்கிறார். அசோக் ஒரு ஜீனியஸ் என்பதை விளக்குகிறார் சோ. ஞானிகள் மற்றவர்கள் நினைப்பதையெல்லாம் பற்றி பொருட்படுத்த மாட்டார்கள், பொருட்படுத்தவும் கூடாது எனக் கூறுகிறார். இதற்காக பட்டினத்தார் வாழ்க்கையில் நடந்த நிகழ்வையும் கூறுகிறார். வழியில் போகும் இரு பெண்கள் இவரைப் பற்றி வம்புபேசியவாறு செல்ல, அவரும் அதற்கேற்பச் செயல்பட்டு மேலும் அசடராகிறார். பிறகுதான் தான் ஞானப்பாதையில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருப்பதையும் உணர்கிறார். அவரை அவ்வாறு பரிகசித்தவர்கள் உமையும் சரஸ்வதியும் என்பது பின்னால் அக்கதையில் கூறப்படுகிறது, ஆனால் அது வேறு விஷயம். தன் பூதவுடலுடனேயே சொர்க்கம் செல்லமுடிந்த பட்டினத்தாருக்கே இந்தக் கதி.
மீண்டும் அசோக்கும் நாதனும் சீனில் வருகின்றனர். இப்போது வையாபுரியிடமிருந்து கிடைக்க வேண்டிய பலன்களும் கிடைக்காமல் போகப்போகிறது என நாதன் பொரும, அது அவருக்கு blessing in disguise என அசோக் கூற நாதன் அதை ஏற்க மறுக்கிறார். அவன் கூறுவது எல்லாம் படிக்க மட்டும் நன்றாக இருக்கும், ஆனால் பிராக்டிகலாகப் பலன் அற்றவை. மேலும் அசோக் ஒரு இடத்திலேயே அடைந்து கிடைக்காமல் உலகை பற்றி அறிய வெண்டும், மற்றவர்களாஈ புரிந்து கொள்ள முயல வேண்டும் என ஒரு பாசமுள்ள தந்தையின் ஆதங்கடோடு அவர் கூறுகிறார்.
ஜட்ஜ் வீட்டில் அவர் மனைவி பிரியாவுக்கு கல்யாணம் ஆனதும் அவளைத் தனிக்குடித்தனம் வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள, ஒரு நல்ல வைதிகக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு அங்குள்ள நல்ல பழக்கவழக்கங்களைத் தன் பெண் கற்றுக் கொள்ளவேண்டுமென தான் ஆசைப்பட்டதைக் கூறிய ஜட்ஜும் கடைசியில் இந்தக் கோரிக்கைக்கு அரை மனதுடன் சம்மதிக்கிறார்.
தான் நியமித்த ஆடிட்டர் முட்டாள்தனமான தவறுகளை செய்வதற்காக நாதன் அவரைச் சாட, அவரும் மனம் கலங்குகிறார். இனிமேலும் இவ்வாறு முட்டாள்தனமானத் தவறுகளை அவர் மீண்டும் செய்தால் அவர் வேலையிலிருந்து நீக்கப்படுவார் என்க் கூறி அப்பால் செல்கிறார். அவரால் முன்னால் கைவிடப்பட்ட நாதன் வீட்டு சமையற்கார மாமி அவரைத் தேற்றுகிறார். அவரது இரண்டாம் மனைவிக்கு பிறந்த பெண்ணின் திருமணம் நிச்சயமான தருணத்தில் பணமுடை.
போலீஸ் ஸ்டேஷனில் வையாபுரி தான் சேகரித்த ஸ்டேட்மெண்டுகளுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மந்திரியின் சிபாரிசை பெற்று, சிங்காரம் மேல் இருக்கும் கேஸை போலீஸ்காரை மனதில்லாமல் வாபஸ் வாங்க வைக்கிறார்.
வசுமதியும் பர்வதமும் அசோக்கிற்கு ஏற்பட்ட அவப்பெயரை பற்றி விவாதிக்கின்றனர். நாதன் தம்பதியினர் காலனி மக்களுடன் கலக்காமல் தம் பணப்பெருமையால் தனித்துப் போனதாலும், அச்சொக்குடன் வேறு பல பழைய மன வேறுபாடுகள் காரணமாகவும் ஒவ்வொருவரும் அவனுக்கு விரோதமாக சாட்சி சொன்னது பற்றி பர்வதம் எடுத்துரைக்கிறாள். [கூடவே அசோக் ரொம்ப புத்திசாலி என்று வேறு கூறுகிறாள். வசுமதியோ இந்த அளவுக்கு புத்திசாலியாக பிள்ளை தனக்கு வேண்டாமென்றும், பர்வதத்தின் பிள்ளை அளவுக்கு புத்திசாலியாக இருந்தால் போதும் எனக் கூறி பவுண்டரிக்கு பந்தை glance செய்து விட்டு போகிறாள். அனாயாசமாக அதை சமாளித்துக் கொண்டு, பணம் கையில் இருந்தால் இவ்வளவு கஷ்டமா என பர்வதம் வியக்க தாங்கள் பணத்தை வைத்திருக்கவில்லை என்றும் பணம்தான் தங்களை வைத்திருக்கிறது என்றும் வசுமதி கூறுகிறாள். ஆனால் இதுவும் டேப் முழுமையாக இல்லாததால் இச்சுட்டியில் பார்க்கக் கிடைக்காது, நினைவிலிருந்து இங்கு எழுதியுள்ளேன்].
பணம் என்றால் நிஜமாகவே கஷ்டமா என சோவின் நண்பர் வியக்க, சோவும் அதை ஆமோதிக்கிறார். தேவைக்கதிகமான அபரிதமான பணத்தினால் தொல்லைகள்தான் அதிகம் எனவும் கூறுகிறார். பணத்தின் பின்னால் ஓடுபவரை தேனீயுடன் ஒப்பிடுகிறார். தேனி அவ்வளவு சிரமப்பட்டு தேனை சேகரிக்க, வேடன் அதை அனாயாசமாக பறித்துச் செல்கிறான். ஆனால் இரை எங்கும் தேடாது தன்னிடம் வரும் இரையை தேவைக்கேற்ப மட்டும் விழுங்கும் மலைப்பாம்புக்கு இம்மாதிரி பிரச்சினை இல்லை. பணக்காரனுக்கு ஏற்படும் தொல்லைகள் பற்றி பிரகலாதனிடம் அவன் க்ருவும் விவரமாகக் கூறுகிறார். பணக்காரனுக்கு விரோதிகளில் அரசன், உறவினர் ஆகியோரும் நிச்சயம் அடங்குவர் எனக்கூறுகிறார்.
தான் பிட்சை கேட்கப்போன இடத்தில் திருடன் எனத் தவறாக எண்ணப்பட்டு உதை வாங்குகிறார் பட்டினத்தார். அதுவும் தனக்கு வேண்டிய தண்டனைதான், ஏனெனில் பிட்சை தேடிப்போனது தன் தவறுதான் எனத் தெளிகிறார் அவர். ஆகவே பிட்சை கூடத் தேடிப்போகாது இருக்குமிடத்தில் கிடைத்தால் அதை மட்டும் உண்பது என அவர் தீர்மானிக்கிறார்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர், கே.சச்சிதானந்தன்
-
மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் 2024 விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு
விருந்தினராகக் கலந்துகொள்கிறார். கே.சச்சிதானந்தன் – தமிழ் விக்கி
சச்சிதானந்தனை வாச...
23 hours ago
12 comments:
//தேவைக்கதிகமான அபரிதமான பணத்தினால் தொல்லைகள்தான் அதிகம் எனவும் கூறுகிறார். பணத்தின் பின்னால் ஓடுபவரை தேனீயுடன் ஒப்பிடுகிறார். தேனி அவ்வளவு சிரமப்பட்டு தேனை சேகரிக்க, வேடன் அதை அனாயாசமாக பறித்துச் செல்கிறான்.//
இந்த விசயம் அரசியல்வாதிகளுக்கு தெரியுமா?
இந்த மேட்டரை ஏன் சோ, ஜெயலலிதாகிட்ட சொல்லல
சொல்லவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?
வாதத்துக்கே வைத்துக் கொள்வோம், சொல்லவில்லை என. அதனால் என்ன? சோ என்ன உபதேசியா என்ன? அவருக்கு இதுதான் வேலையா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சொல்லவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?
வாதத்துக்கே வைத்துக் கொள்வோம், சொல்லவில்லை என. அதனால் என்ன? சோ என்ன உபதேசியா என்ன? அவருக்கு இதுதான் வேலையா?//
அவரு ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் உபதேசியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தொலைக்காட்சியில் அதை தானே செய்து கொண்டிருக்கிறார்.
நட்பின் அடிப்படையில் நண்பர்கள் அறிவுரை வழங்குவது போல் கூட சொல்லலாமே!
//நட்பின் அடிப்படையில் நண்பர்கள் அறிவுரை வழங்குவது போல் கூட சொல்லலாமே!//
கேட்டால்தான் அறிவுரைகள் தர வேண்டும். சம்மனில்லாமல் ஆஜரானால் உன் வேலையைப் பார்த்து கொண்டு போ என்னும் ரேஞ்சில்தான் ஜயலலிதா போன்றவர்கள் பேசுவார்கள். அவர், கலைஞர் போன்றவரிடம் குடிகொண்டிருக்கும் ஆரவாரப் பேய்கள் (நன்றி கண்ணதாசன்) ஆட்சி செலுத்தும் வரை அப்படித்தான் இருக்கும்.
அப்படியே தேவைப்படுகிறவர்களுக்குத்தான் இருக்கவே இருக்கிறது, எங்கே பிராமணன் சீரியல். ஒவ்வொரு எபிசோடும் ஒரு முத்து.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அப்படியே தேவைப்படுகிறவர்களுக்குத்தான் இருக்கவே இருக்கிறது, எங்கே பிராமணன் சீரியல். ஒவ்வொரு எபிசோடும் ஒரு முத்து.//
அளவுகதிகமா சொத்து சேர்க்கிறவன் எல்லா இடத்திலையும் தான் இருக்கிறான். இதில் பிராமனன் சீரியல் என்ன பண்ணுச்சு!
பிராமனன் என்ற சாதியையே நான் ஏற்று கொள்ளாத பட்சத்தில் அதன் மனுதர்மத்தை எப்படி ஏற்று கொள்வேன்.
எழுதி வைத்தையெல்லாம் நம்ப வேண்டுமென்றால் எனக்கு மூளை எதுக்கு! கம்பூயுட்டர் கூட சொன்னதெல்லாம் செய்யுது, அதுவும் நானும் ஒண்ணா?
//பிராமனன் என்ற சாதியையே நான் ஏற்று கொள்ளாத பட்சத்தில் அதன் மனுதர்மத்தை எப்படி ஏற்று கொள்வேன்.//
நீங்கள் நினைப்பதுபோல இது பிராமண சாதியை தூக்கிப் பிடிக்கும் தொடர் அல்ல. முடிந்தால் மூலப்புத்தகத்தைப் படிக்கவும். அதே சமயம் சீரியல் மூலத்தில் இல்லாததையும் கூறிச்செல்கிறது. இருப்பினும் இரண்டுமே ஒன்றையொன்று எதிர்க்காமலேயே உள்ளன.
முன்னபிப்பிராயம் ஏதும் இல்லாமல் சீரியலைப் பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//முன்னபிப்பிராயம் ஏதும் இல்லாமல் சீரியலைப் பாருங்கள். //
இங்கேயே படிச்சிகிறேன்.
நான் சீரியல் பார்த்தா வீட்டு வேலையெல்லாம் யாரு செய்வா?
சோறு சாப்பிடனுமா வேண்டாமா?
பத்த வச்சிருவிங்க போலருக்கே!
//இங்கேயே படிச்சிகிறேன்.//
தலைப்பிலேயெ வீடியோவுக்கான ஹைப்பர்லிங் இருக்கிறது. ஒழிந்த நேரத்தில் பார்க்கவும். நானே பதிவுபோடும்போது இன்னொரு முறை சீரியலை பார்த்து கொள்கிறேனாக்கும்.
இப்படி வைத்து கொள்ளுங்களேன், சீரியலை பார்த்து நான் ஏதேனும் இல்லாததை எழுதினேனா என்பதைப் பார்த்து சில பின்னூட்ட கும்மிகளுக்கும் வழி செய்து கொள்ளலாமே. எனக்கும் அது தேவையாகவே இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சீரியலை பார்த்து நான் ஏதேனும் இல்லாததை எழுதினேனா என்பதைப் பார்த்து சில பின்னூட்ட கும்மிகளுக்கும் வழி செய்து கொள்ளலாமே. //
உள்ளத எழுதவே தாவூ தீரும். இதுல இல்லாதத வேற எழுதனுமா?.
மக்கள குழப்ப சோவுக்கு தெரியாததா நீங்க சேர்க்க போறிங்க!
கேள்விகள்
1. கத்ரோச்சி புகழ்அன்னை சோனியா, டாஜ் காரிடார் புகழ் அன்னை மாயாவதி, மாட்டுத் தீவனம் புகழ் அன்னை ராப்ரி தேவி, சிங்குர் புகழ் மம்தா, நர்மதா புகழ் மேதா,
டான்சி புகழ் அம்மா, முன்னாள் மத்திய பிரதேச முதலமைச்சர் உமாபாரதி,சங்கமம்/ஸ்பெக்ட்ரம் புகழ்
கனிமொழி -- இவ்வளவு பேருக்கு மத்தியில் அன்னை இந்தியா நிற்க முடியுமா? சோவின் பரம சிஷ்யர்ரன
நீர் அவர் பாணியில் பதில் அளிக்கவும்!
2. பத்து கோடி இளைஞர்கள் ஓட்டளிக்கும் உரிமை
பெறுவார்கள் புதிதாக என்று தெரிகிறது - இது
நல்லதற்கா, அல்லது பழைய குருடி தானா?
3. வருண் காந்தியின் கன்னிப் பேச்சு எழுப்பியிருக்கிற
புயல் பற்றி உங்கள் கருத்து என்ன?
டோண்டு பதில்கள் பகுதிக்கு:
1) சோ வுக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
2) எங்கே பிராமணன் இன்னும் எவ்வளவு இருக்கிறது ? ஒரு 25% முடிந்திருக்குமா?
a)போலிஸ்-லாயர் மோதல் முதல் ரவுண்டு வெற்றி யாருக்கு?
b)போலிஸ்-அரசியல் வாதி சண்டை வந்தால் எப்படி இருக்கும்?
c)முகமுத்து ,அழகிரி பக்கம் சாய்கிறார?
d)பி.எஸ் .என்.எல் -கலைஞர் டீவி(தினமணிச் செய்தி)க்குகொடுக்க இருக்கும் ஒரு கோடி விளம்பரம்( உருப்படாத சீரியலுக்கு)-மத்திய அரசுத்துறையையும் கெடுத்தாச்சா?
e)ஆமை /அமீனா புகுந்த வீடு போல் கழகம் கைபற்றிய அரசுத்துறையின் எதிர்காலம்?
f)3 ஜி மொபைலை பிஎஸ் என் எல் தொடங்குவதில் ஏதும் சிக்கலா?
g)மாயாவதி,ஜெ,உமாபாரதி,மம்தா,சோனியா
யாரால் பிரதமர் பதவி அழகு பெறும்?
(பண்டிட் ஜவஹர்லால் காலம் போல்)
h)ஹோட்டல்கள் அரசு அறிவித்த விலைக் குறைப்புக்கு மூடு விழா நடத்தி விட்டதே?( ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்கும் பொற்கால ஆட்சியிலே தரமான ஒரு இட்லி ரூ5/=)
Post a Comment